Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியின் பின்னணி குறித்த சந்தேகங்கள்

Featured Replies

நீதிபதி மீதான தாக்குதல் முயற்சியின் பின்னணி குறித்த சந்தேகங்கள்

 

கடந்த 22ஆம் திகதி நல்லூரில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால், யாழ்.குடாநாடு மட்டுமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளும் அதிர்ச்சியில் உறைந்தன.

குறித்த தினத்­தன்று மாலை 5 மணி­ய­ள­வில் நீதி­மன்­றில் கட­மையை முடித்­துக் கொண்டு புறப்­பட்ட நீதி­ப­திக்­குப் பாது­காப்­புக்­காக ஒரு பொலிஸ் உத்­தி­யோத்­தர் நீதி­ப­தி­யின் காருக்­குள்­ளும், வீதி ஒழுங்­குப் பாது­காப்­புக்­காக மற்­று­மோர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் மோட்­டார் சைக்­கி­ளில் நீதி­பதி பய­ணித்த வாக­னத்­தின் முன்­னா­லும் பய­ணித்­துள்­ள­னர்.

நல்­லூர் கோவில்­வீ­தி­யும் பருத்­தித்­துறை வீதி­யும் இணை­யும் சந்­தி­யில் நீதி­ப­தி­யின் வாக­னம் பய­ணிக்­கும்­போதே குறித்த தாக்­கு­தல் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்தச் சந்­தியை நீதி­ப­தி­யின் வாக­னம் அண்­மித்­த­வே­ளை­யில் அப்­ப­கு­தி­யில் சிலர் மது­போ­தை­யில் கல­கம் விளை­வித்து வீதிப் போக்­கு­வ­ரத்­திற்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­திய வண்­ணம் இருந்­துள்­ள­னர்.

இதனை அவ­தா­னித்த நீதி­ப­தி­யின் பாது­காப்பு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் தான்­ப­ய­ணித்த மோட்­டார் சைக்­கிளை வீதி­யோ­ரம் நிறுத்­தி­ விட்டு போக்­கு­வ­ரத்தை ஒழுங்­கு­ப­டுத்த முனைந் துள்­ளார். இதன்­போதே கல­கத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­ப­டு­ப­வ­ரில் ஒரு­வர், குறித்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ருக்கு அரு­கில் சென்று அவ­ரைக் கட்­டிப் பிடிக்க முனைந்­துள்­ளார். அத்­தோடு அந்­தப் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரது கைத் துப்­பாக்­கி­யை­யும் அவ­தா­னித்­துள்­ளார்.

பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய தாக்­கு­தல்

உத்­தி­யோ­கத்­தர் எதிர்­பா­ராத சம­யம் அந்த நபர் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரது இடுப்­பில் இருந்த துப்­பாக்­கி­யைத் திடீ­ரென உரு­வி­யுள்­ளார். இத­னால் நிலை தடு­மா­றிய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் அதனை மீட்­ப­தற்­காக போரா­டி­யுள்­ளார்.

காருக்­குள் அமர்ந்­தி­ருந்த நீதி­பதி இத­னைக் கண்­ட­தும் உட­ன­டி­யா­கத் தமது வாக­னத்தை நிறுத்­து­மாறு பணித்­துள்­ளார். சாரதி வாக­னத்தை நிறுத்­தி­ய­தும் நீதி­பதி, வாக­னத்­தில் இருந்து இறங்கி சம்­பவ இடத்­திற்கு செல்ல அவ­ரின்­அ­ருகே இரண்­டா­வது பாது­காப்பு பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரும் சென்­றுள்­ளார்.

தமது துப்­பாக்­கி­யைக் கைப்­பற்­றிய அந்த நப­ரி­ட­மி­ருந்து துப்­பாக்­கியை மீட்க பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் முயன்றவேளை இழு­பறி நிலை­யில் அந்­தப் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் மீது அந்த நபர் துப்­பாக்­கிப் பிர­யோ­கம் மேற்­கொண்­டுள்­ளார்.

இந்த நிலை­யில் குறித்த அந்த நபர் , நீதி­பதி மீது இலக்கு வைப்­ப­தனை உணர்ந்த இரண்­டா­வது பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் தனது கைத்­துப்­பாக்­கியை எடுத்து அந்த நபர் மீது துப்­பாக்­கிப் பிர­யோ­கம் மேற்­கொண்­ட­வாறு நீதி­ப­தியை துப்­பாக்­கிச் சூட்­டில் இருந்து பாது­காப்­ப­தற்­காக அவ­ரைக் காருக்­குள் தள்­ளி­யுள்­ளார்.

நீதி­ப­தியை காருக்­குள் ஏற்­றும் முயற்­சி­யின்­போது துப்­பாக்­கி­தா­ரி­யின் தாக்­கு­த­லில் இரண்­டா­வது பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரும் தோள்ப் பட்­டை­யில் காய­ம­டை­கின்­றார். இந்த நிலை­யில் தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வ­ரின் கைத்­துப்­பாக்­கி­யி­ருந்த ரவை­கள் தீர்ந்த நிலை­யில் அவர் அங்­கி­ருந்து தப்­பிக்­கும் முக­மாக கெந்­தி­ய­ப­டியே சம்­பவ இடத்தை விட்டு அகன்று செல்­கின்­றார்.

அவ்­வாறு அகன்று சென்­ற­வர், தான் அங்­கி­ருந்து விரை­வா­கத் தப்­பித்­துச் செல்­லும் நோக்­கில் , வீதி­யில் எதிரே வந்­த­வரை மிரட்டி அவ­ரது மோட்­டார் சைக்­கி­ளைப் பறித்­துக் கொள்­கி­றார். தப்­பிச் செல்­லும் சம­யம் கைத்­துப்­பாக்­கி­யைத் தவ­ற­விட்டு விடு­கி­றார்.

இந்த நிலை­யி­ல் சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த இரு பொலி­சா­ரை­யும் தனது வாக­னத்­தைச் செலுத்தி வந்த சார­தி­யின் உத­வி­யு­டன் மீட்­டெ­டுத்த நீதி­பதி, படுகாய மடைந்தவரை தனது மடி­யில் படுக்க வைத்த நிலை­யில் மருத்துவமனைக்கு எடுத்­துச் செல்­கின்­றார்.

செல்­லும் வழி­யி­லேயே நீதி­ப­தியே பொலி­சா­ருக்கு சம்­ப­வம் குறித்த தக­வலை வழங்­கு­கின்­றார். அதன் பின்­னரே சம்­பவ இடத்­தைப் பொலி ­சார் முற்­று­கை­யி­டு ­கின்­ற­னர். அவ்­வாறு உள்­நு­ழைந்த பொலி­சா­ரி­டம் தாக்­கு­தல்­தாரி விட்­டுச் சென்ற ஒர் கைத்­துப்­பாக்­கியை பொது­ம­கன் ஒரு­வரே மீட்டு கைய­ளிக்­கின்­றார். அங்கே சம்­பவ இடத்­தில் 10 வெற்­றுத் தோட்­டாக்­கள் வீதி­யில் சித­றிக் கிடந்­துள்­ளன.

பொலி­ஸார் சம்­ப­வம் குறித்து அக்­கறை காட்­டத் தவ­றி­னரா?

சம்­பவ இடத்­துக்­குச் சென்ற தட­ய­வி­யல் பொலி­சார் குறித்த பிர­தே­சத்­தைப் போக்­கு­வ­ரத்­துக்­குத் தடை­செய்து அத்­தனை தட­யப் பொருள்­க­ளுக்­கும் இலக்­க­மிட்டு அறிக்­கை­யிட்­ட­தன் பின்­னர், இரவு சுமார் 8 மணி­ய­ள­வில் அவை அனைத்தும் அங்­கி­ருந்து பொலி­ஸா­ரால் அகற்­றப்­பட்­டன.

மருத்துவமனையில் அனு­ம­திக்­கப்­பட்ட இரு பொலி­சா­ரில் நீதி­ப­தி­யின் மெய்ப்­பா­து­கா­வ­ல­ரும் துப்­பாக் கியை பறி­கொ­டுத்த பொலி­ஸ் உத்தியோகத்தரு மான ஹேமச்­சந்­திர (வயது 51 ), என்­ப­வ­ரின் வலது பக்க வயிற்­றுப் பக்­கத்­தில் பாய்ந்­தி­ருந்த தோட்டா, இடது பக்­கத்­தால் வெளி­யே­றி­யி­ருந்­தது. உட­ன­டி­யாக அவ­ருக்கு அறுவைச் சிகிச்சை மேற்­கொண்ட மருத்துவர்கள் அவரை உயிர் ஆபத்­தி­லி­ருந்து காப்­பாற்ற முழு­வீச்­சில் செயற்பட்­ட­னர்.

இடம்­பெற்ற சம்­ப­வம் குறித்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரிவித்த நீதி, குறித்த தாக்குதல் தம்மை இலக்காகக் கொண்டதெனத் தெரிவித்திருந்தார். ஆனா­லும் பொலி­சாரோ குறித்த சம்­ப­வ­மா­னது, மது­போ­தை­யில் வந்த ஒரு­வ­ரி­னால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு எதேச்­சை­யான சம்­ப­வம், அது திட்­ட­மி­டப்­பட்­ட ­தொரு தாக்­கு­தல் சம்­ப­வம் அல்ல என­வும் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

பொலிசாரின் தடுமாற்றத்துக்கு காரணமென்ன?

அத்­தோடு சம்­ப­வம் இடம்­பெற்ற இடத்­தில் இருந்த தட­யப் பொருட்­கள் அனைத்­தை­யும் மீட்­டெ­டுத்து அங்கே 5 பொலி­சாரை மட்­டும் காவ­லுக்கு நிறுத்தி வைத்­த­னர்.

இத­னை­ய­டுத்து சம்பவ இடத்­துக்கு நீதிவான் பார்­வை­யிட வரு­கின்­றார் என்ற தக­வல் பொலி­சா­ருக்கு கிடைக்­கின்­றது. உட­ன­டி­யாக மீண்­டும் வேக­மா­கச் செயல்­பட்ட பொலி­சார், நல்­லூ­ர­டிக்கு ஓடி வரு­கின்­ற­னர்.

தட­ய­ வி­யல் பொலி­சா­ரும் மீண்­டும் அந்த இடத்­திற்கு வந்து மீண்­டும் அதே­மா­தி­ரி­யான புறத் தோற்­றச் சூழல் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது குற்­றம் இடம்­பெற்ற பிர­தே­சத்­துக்கான அறி­வித்­தல் பட்டி மீண்­டும் கட்­டப்­பட்டு, மீட்­கப்­பட்ட தட­யப் பொருள்­கள் இருந்து எடுக்­கப்­பட்ட இடங்­கள் மீண்­டும் வெண்­கட்­டி­யால் அடை­யா­ள­மி­டப்­பட்டு அதே­போன்று பொருள்­க­ளும் அடுக்­கப்­பட்­டன.

இந்த நிலை­யில் கைப்­பற்­றப்­பட்ட கைத்­துப்­பாக்­கி­யின் ரவைக்­கூட்டைக் ( மக­சீன்) காண­வில்லை என்ற செய்­தி­யும் வேக­மாக பர­வு­கின்­றது.

இத­னால் மீண்­டும் மாதிரி உரு­வத்­தைத் தயா­ரிக்க வந்­தி­ருந்த தட­ய­வி­யல் பொலி­சார் செய்­தி­யா­ளர்­கள் முன்­னி­லை­யில் தேடு­த­லில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

அதன்­போது ஓர் சந்­தர்ப்­பத்­தில் தாக்­கு­த­லுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் கைத்­துப்­பாக்­கி­யின் ரவைக்­கூடு வீதி­யோ­ரம் இருந்த கழிவு வாய்க்­கா­லுக்­குள் இருந்து மீட்­கப்­பட்­டது.

அறுவை சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் நள்­ளி­ர­வைத் தாண்­டும் நேரம் உயி­ரி­ழந்­தார். அதில் ஓர் அங்­க­மாக மறு­நாள் காலை­யில் அரி­யா­லைப்­ப­கு­தி­யில் இருந்து தாக்­கு­தல்­தாரி தப்­பி­யோ­டிய மோட்­டார் சைக்­கிள் மீட்­கப்­பட்­டது.

குறித்த தாக்­கு­த­லைத் தாமே மேற்­கொண்­ட­தா­கத் தெரி­வித்­துப் பொலி­ஸா­ரி­டம் சர­ண­டைந்த நபர், புங்­கு­டு­தீவு 4ஆம் வட்­டா­ரத்­தைச் சேர்ந்­த­வர் என­வும் தெரிய வந்­துள்­ளது.

இதே­நே­ரம் சம்­ப­வத்­தில் இலக்கு வைக்­கப்­பட்ட நீதி­ப­தி­யும் தீவ­கத்தை தமது பிறப்­பி­ற­மா­கக் கொண்­ட­வர். அதே­போன்று தற்­போது குடா­நாட்­டில் இடம்­மெ­றும் முக்­கிய வழக்­கான வித்­தியா கொலை­வ­ழக்­கும் புங்­கு­டு­தீ­வு­டன் தொடர்பு பட்ட வழக்கு என்­ப­த­னால் இந்­தத் தாக்­கு­தல் சம்­ப­வம் குறித்த சந்­தே­கங்­கள் மேலும் வலுப்­பெ­று­வ­தா­கவே அமை­கின்­றன.

http://uthayandaily.com/story/14492.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.