Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணல் கொள்ளையும் துப்பாக்கி கலாசாரமும்

Featured Replies

மணல் கொள்ளையும் துப்பாக்கி கலாசாரமும்

 

இளைஞன் பலி­யான சம்­பவம் கார­ண­மாக கிரா­மமே கிளர்ந்­தெ­ழுந்து பெரும்  ஆர்ப்­பாட்­டத்தில்  ஈடு­பட்­டதன்  கார­ண­மாக கிராம  மக்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் இடையில்  வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­துடன் கைக­லப்பும்  ஏற்­பட்ட நிலையில்  கர­டி­ய­னாறுப் பகு­தியில் கடும் பதற்ற  நிலை­யொன்று  உரு­வா­கி­யது. 

 

சூழ­லையும் இயற்­கை­யையும் கொள்­ளை­ய­டிப்போர், சிதைப்போர், கேடு­ வி­ளை­விப்போர் தண்­டிக்­கப்­பட வேண்டும். சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். ஆனால் ஒரு கிரா­மமே ஆத்­தி­ரப்­ப­டு­ம­ள­வுக்கு தண்­டனை வழங்­கு­வது குற்றம் செய்­த­வர்கள் என மூர்க்­கத்­த­ன­மாக நடந்து கொள்­வ­து தான் இந்­நாட்டில் இனங்­க­ளுக்கு இடை­யி­லான முறு­க­லுக்கும் படைத் தரப்­பி­ன­ருக்கு எதி­ராக ஆயுதம் தூக்க வைப்­ப­தற்கும் கார­ணங்­க­ளா­கி­யி­ருக்­கின்­றன.

மட்­டக்­க­ளப்பு கர­டி­ய­னாறு முந்தன் குமார வெளி ஆற்றுப் பகு­தியில் கடந்த திங்­கட்­கி­ழமை (24.07.2017) விசேட அதி­ர­டிப் ­ப­டை­யினர் நடத்­திய துப்­பாக்கி பிர­யோ­கத்­தினால் இளைஞன் ஒருவன் மர­ணித்­தது இதன் எதிர்­ தாக்­க­மாக அப்­ப­கு­தியில் பதற்றம் நில­விய சம்­பவம் கிழக்கு மாகா­ணத்­தையே பீதி கொள்ள வைத்­துள்­ளது.

இளைஞன் பலி­யான சம்­பவம் கார­ண­மாக கிரா­மமே கிளர்ந்­தெ­ழுந்து பெரும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டதன் கார­ண­மாக கிராம மக்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் இடையில் வாக்­கு­வாதம் ஏற்­பட்­ட­துடன் கைக­லப்பும் ஏற்­பட்ட நிலையில் கர­டி­ய­னாறுப் பகு­தியில் கடும் பதற்ற நிலை­யொன்று உரு­வா­கி­யது என கூறப்­ப­டு­கி­றது.

இச் சம்­ப­வத்தின் பின்­னணி இவ்­வாறு விளக்­கப்­ப­டு­கி­றது. மட்­டக்­க­ளப்பு முந்தன் குமா­ர­ வெளி ஆற்­றி­லி­ருந்து உழவு இயந்­தி­ரத்தில் ஆற்று மணலை ஏற்றிக் கொண்­டி­ருந்­த­வேளை அப்­ப­கு­திக்கு வருகை தந்­தி­ருந்த விசேட அதி­ர­டிப் ­ப­டை­யினர் மணல் ஏற்­றி­ய­வர்­களை விரட்­டு­வ­தற்­காக வானத்தை நோக்கி துப்­பாக்கி பிர­யோகம் செய்­துள்­ளனர். இத் துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் கதி­க­லங்கிப் போன மணல் வியா­பா­ரிகள் மற்றும் அள்ளும் தொழி­லா­ளிகள் சிதறி ஓடி­யுள்­ளனர். இந்­த­கைய சூழ்­நி­லையில் ஆற்று மணலை ஏற்றிக் கொண்­டி­ருந்த சகோ­தரர் இருவர் ஆற்றில் குதித்து தப்­பி­யோட முயற்­சித்­த ­வேளை ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து நிலையில் இரு­வரும் காப்­பாற்­றப்­பட்டு மூச்சு திண­றிய நிலையில் செங்­க­லடி வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளனர்.

இச் சம்­ப­வத்தில் பாதிக்­கப்­பட்ட இரு­வரும் சகோ­த­ரர்கள் மாத்­தி­ர­மின்றி 18 வய­துக்கு குறைந்­த­வர்கள். வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு வரும் வழி­யி­லேயே தம்­பி­யான மதுஷன் (வயது 17) உயிர் இழந்­துள்ளார். அண்ணன் கிரு­ஷாந்தன் (வயது 18) காய­ம­டைந்த நிலையில் காப்­பாற்­றப்­பட்டே வைத்­தி­ய­சா­லையில் சேர்க்­கப்­பட்­டுள்ளார்.

இச் சம்­ப­வத்தின் கொதி­ நி­லை­யான கிராம மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு துப்­பாக்கிப் பிர­யோகம் செய்த விசேட அதி­ரடிப் பொலிஸை தமக்கு அடை­யா­ளப்­ப­டுத்­து­மாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். இதனால் கடும் வாக்­கு­வா­தமும் கைக­லப்பும் பொலி­ஸா­ருக்கும் பொது மக்­க­ளுக்கும் இடையில் ஏற்­பட்­டது மாத்­தி­ர­மின்றி கடு­மை­யான பதற்ற நிலை­யொன்றும் ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இப்­ப­தற்ற நிலை கார­ண­மாக பொலிஸார் மற்றும் விசேட அதி­ர­டிப் ­ப­டை­யினர் குவிக்­கப்­பட்டு திரண்­டி­ருந்த பொது மக்கள் விரட்டி அடிக்­கப்­பட்­டனர். மக்­களை விரட்­டி­ய­டிப்­ப­தற்­காக மிக மோச­மான நிலையில் துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொண்­டுள்­ளனர்.

இச் சம்­ப­வ­மா­னது பல பக்க தாக்­கங்­களை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது. நீரில் மூழ்கிப் போன இளை­ஞர்­களை அங்கு நின்ற பொது­மக்கள் காப்­பாற்ற முயன்­ற­போது விசேட அதி­ர­டிப் ­ப­டை­யினர் மூர்க்­கத்­த­ன­மாக தடுத்­துள்­ளனர். இன்­னொ­ரு ­புறம் சம்­பவம் இடம்­பெற்ற இடத்தில் பெரும் எண்­ணிக்­கை­யான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இன்­னு­மொரு பக்கம் பார்ப்பின் பொது மக்கள் உணர்ச்சி மயப்­பட்ட வகையில் ஆத்­தி­ர­ம­டைந்­த­துடன் பொலிஸார் சட்ட நட­வ­டிக்கை எடுக்க முயற்­சித்­த­போது அதை தடுத்­துள்­ளனர். பொலிஸார் மரண விசா­ரணை செய்ய அனு­ம­தியோம், அவர்கள் மீது எமக்கு நம்­பிக்­கை­யில்லை, மரண விசா­ரணை நீதி­பதி முன்­னி­லை­யில்தான் நடை­பெற வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன்­வைத்து மட்­டக்­க­ளப்பு, திரு­மலை மற்றும் மட்­டக்­க­ளப்பு, பதுளை, நெடுஞ்­சா­லை­களை மறித்து ஆர்ப்­பாட்டம் செய்­துள்­ளனர்.

இவ்­வா­றா­ன­தொரு சம்­பவம் அண்­மை யில் யாழ். மாவட்­டத்­தி­லுள்ள வட­ம­ராட்­சியில் இடம்­பெற்­றதை கவ­னத்தில் எடுத் துக் கொள்ள வேண்டும். கடந்த (21.07.2017) ஜூலை மாதம் 21 ஆம் திகதி மணல் கடத்­தலில் ஈடு­பட்­ட­வர்­களை வழி­ம­றித்த கடற்­ப­டை­யினர் மீது மணல் கடத்­தல்­காரர் தாக்­குதல் நடத்­தி­யதில் படை­யினர் இருவர் படு­காயம் அடைந்­ததை அடுத்து கடற்­ப­டை­யினர் வானத்தை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோகம் செய்த நிலையில் இளைஞர் ஒருவர் பலி­யா­கி­யதன் கார­ண­மாக பெரும் பதற்றம் ஏற்பட்டது. வல்­லி­பு­ரக்­கோவில் மாவடிச் சந்­தியில் இடம்­பெற்ற சம்­பவம் வட­ம­ராட்சிப் பகு­தி­யையே கதி­க­லங்க வைத்­துள்­ளது.

இச் சம்­பவம் தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ரவீந்­திர விஜேய குண­வர்­தன சம்­பவம் நடை­பெற்ற இடத்­துக்கு விரைந்து சம்­பவம் தொடர்பில் நேரில் சென்று கேட்­ட­றிந்து விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளனர்.

மணல் கடத்­திய கன்டர் ரக வாக­னத்தை வழி­ம­றித்­த­ போது அவ்­வா­கனம் நிறுத்­தாது சென்ற அதே­வேளை அந்த வாக­னத்­தி­லி­ருந்தோர் வீதி ரோந்தில் ஈடு­பட்­டி­ருந்த கடற்­ப­டை­யினர் மீது கற்­களை வீசி தாக்­கி­யதில் கடற்­ப­டை­யினர் இருவர் படு­காயம் அடைந்­துள்­ளனர். இதை­ய­டுத்து கடற்­ப­டை­யினர் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­துள்­ளனர். இச் சம்­பவம் அப்­ப­கு­தியில் பதற்ற நிலையை உரு­வாக்­கி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இச் சம்­பவம் கூட படை­யினர் மற்றும் பொது மக்கள் தொடர்­பான நடத்தை கோலங்கள் பற்றி பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைத்­துள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக வட­கி­ழக்கு பகு­தியில் பல்­வேறு சமூ­க ­வி­ரோதச் செயல்கள் அதி­க­ரித்துக் கொண்­டே­யி­ருப்­பதை நாளாந் தம் கேள்­விப்­பட்டுக் கொண்­டே­யி­ருக்­கிறோம். அதிலும் யுத்த மௌனிப்­பதற்குப் பிறகு சமூக விரோத குழுக்­களின் அட்­ட­காசம், போதைப் பொருள் கடத்தல், பாலி யல் வன்­மைகள், சட்டம் நீதிக்­கெ­தி­ரான அடா­வ­டித்­த­னங்கள், இயற்­கை­யான வளங்­க­ளையும் மூலப் பொருட்­களை கொள்­ளை­ய­டித்தல், கடத்தல் என்­பன ஏரா­ள­மா­கவே நடந்­தேறிக் கொண்­டி­ருப்­பதை கண்­டு­கொண்­டி­ருக்­கிறோம்.

இவ் ­வ­கை­யான விளை­வு­களில் ஒன்­றா கத்தான் இயற்கை செல்­வ­மாக காணப்­படும் மணல் அகழ்தல், கடத்தல், விற்­ பனை செய்தல் என்­பன. தாறு­மா­றாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இந்த மணல் வியா­பாரம் யாழ். மாவட்­டத்தில் பர­வ­லா­கவே இடம்­பெற்று வரு­கின்­றது.

வட­ம­ராட்சி பகு­தி­யி­லுள்ள வல்­லி­புர ஆழ்வார் கோவி­லுக்கும் கடல் பிர­தே­சத்­துக்கும் இடை­யே­யுள்ள மணல் குன்­று­க­ளி­லி­ருந்து மணல் அள்ளிக் கொண்டு போகும் வியா­பா­ர­ முறை மிக நீண்­ட­ கா­ல­மாக இருந்து வந்­தாலும் அண்­மைக்­கா­ல­மாக அது தீவிரம் அடைந்து காணப்­ப­டு­கி­றது. மணல், வியா­பா­ரிகள், தர­கர்கள், ஒப்­பந்­தக்­கா­ரர்கள் என்ற வகையில் பெருந்­தொ­கை­யானோர் இந்த மண் அகழ்­த­லையும் வியா­பா­ரத்­தையும் பெருந் தொழி­லா­கவே செய்து வரு­கின்­றார்கள். இதன் கார­ண­மாக இயற்­கையின் இருப்­பிடம் சிதைந்து போகின்­றது. வள­ மான, அழ­கான மணல் குன்­றுகள் நிர்­மூலம் ஆக்­கப்­ப­டு­கின்­றன.

வல்­லி­புர ஆழ்வார் கோயில் மணற் குன்­று­க­ளி­லி­ருந்து மண் அகழ்ந்து விற்கும் வியா­பார முறையை மிக நீண்­ட­கா­ல­மாக தடுக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. முன்­னைய அர­சாங்­க­கா­லத்தில் அர­சியல் செல்­வாக்­கா­ளர்கள் மண் வியா­பாரம் செய்­வது தொடர்பில் நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்ட சம்­பவங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

உல­கத்தில் எங்­குமே காண முடி­யாத இயற்கை அழகும் வளமும் கொண்ட பகு­தி­யாக இருந்­து ­வரும் வல்­லி­புர ஆழ்வார் பிர­தேச மணல் குன்­றுகள், மண் அகழ்தல் கார­ண­மாக அழிந்து போவதும் நிர்­மூ­ல­மா­வதும் தடுக்­கப்­பட வேண்­டு­மென்­பது நிய­தியே. ஆனால் இவற்­றுக்கு அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கு­ப­வர்கள் யார், இவர்கள் என்ன விதி­மு­றையில் மண் அகழ்­த­லுக்கும் அள்­ளு­த­லுக்கும் அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கு­கி­றார்கள் என்­பது தொடர்பில் உரிய அதி­கா­ரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

இதே­போன்றே முல்­லைத்­தீவு மாவட் டம் மன்னார் மாவட்­டத்­தி­லுள்ள இடங்­களில் சட்ட முறை­யற்ற மண் அகழ்தல், விற்றல் வியா­பாரம் அளவு கணக்­கற்ற முறையில் இடம்­பெ­று­வ­தாக அப்­பி­ர­தேச மக்கள் குற்றம் சாட்டி வரு­கின்­றார்கள். மண் அகழ்தல் மாத்­தி­ர­மின்றி வள­முள்ள மரங்கள் தறிக்­கப்­பட்டு கடத்­தப்­ப­டு­கின்­றன என்றும் குற்றம் சாட்­டப்­ப­டு­கி­றது.

இதே ­போ­லவே திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் இடம்­பெற்று வரும் மண் அகழ்தல், விற்­பனை, வியா­பாரம் என்­பன கன­க­ரக அள­வி­லேயே மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மகா­வலி கங்கை நதி கொட்­டி­யாரக் கடலில் வந்து விழும். இயற்கை வளம் கொண்ட பிர­தேசம் மூதூர் பிர­தே­ச­மாகும். இப்­ பி­ர­தே­சத்தில் கங்கை பாய்ந்­தோடும் பிர­தே­சங்­க­ளான, படு­காடு, இறால்­குழி, வெருகல், கந்­தளாய், வானாறு, சூரங்கல் எனும் மகா­வலி கங்கை வளைந்­தோடும் வள­மான கிரா­மங்கள் முழு­வதும் மண் அகழ்­தலும் ஏற்­றலும் அள­வில்­லா­மலே நடை­பெற்று கொண்­டி­ருக்­கின்­றன.

இதில் அதிர்ச்­சி­ய­டைய வேண்­டிய விடயம் என்­ன­வெனில் மகா­வலி கங்கை ஓடி ­வரும் கிரா­மங்கள் தமிழ் மக்கள் செறிந்து வாழும் கிரா­மங்கள் மட்­டு­மன்றி அவர்­களின் ஜீவ­னோ­பா­யத்தை தாங்கி நிற்­பது இந்த கங்கை நதி­யாகும்.

வெள்­ளாமை, தோட்டம், துரவு, இறால், நண்டு பிடிப்பு என பெருந்­தொ­கை­யான மக்­களின் ஜீவ­னோ­பா­யத்தை தாங்கி நிற்கும். இக்­கி­ரா­மங்­களில் வெளியூர் மணல் வியா­பா­ரிகள் உள்ளூர் மணல் தர­கர்கள், மணல் அகழ்­வ­தனால் இயற்கை அனர்த்­தங்கள் ஏற்­பட்டு வெள்ள எடுப்பு கார­ண­மாக பயிர்கள் அழிந்து போகின்­றன. வீடு வாசல்கள் வெள்­ளத்தால் அள்ளிக் கொண்டு போகப்­ப­டு­கின்­றன. காடுகள் வள­மி­ழந்து போகின்­றன.

மேற்­கு­றிப்­பிட்ட இடங்­க­ளி­லி­ருந்து வெளி­யூ­ருக்கு ஆயி­ரக்­க­ணக்­கான ரிப்பர் வாக­னங்­க­ளிலும் லொறி­க­ளிலும் ஏற்றிச் செல்லும் கொள்­ளையைக் காண முடியும். பொலிஸார் பாது­காப்புப் படை­யினர் சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களின் உடன்­பாட்­டு­டனும் ஒத்­து­ழைப்­பு­டனும் இந்த கொள்ளை நடப்­ப­தாக அக்­கி­ராம வாசிகள் தெரி­விக்­கின்­றார்கள். இந்த மண் கொள்ளை தொடர்பில் பல போராட்­டங்­களை நடத்­தி­யுள்ளோம். முறைப்­பா­டு­களை செய்­துள்ளோம். எது­வுமே பய­ன­ளிக்­க­வில்லை. இரண்டு உழவு இயந்­திர மண்­ணேற்­ற­லுக்கு அதி­கா­ரி­களால் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டி­ருக்கும் அப்­பத்­தி­ரத்தை வைத்துக் கொண்டு இரு­ப­துக்கு மேற்­பட்ட தட­வைகள் மண் ஏற்­றப்­ப­டு­கின்­றன. இந்த கொள்­ளையை பொலிஸார் பார்த்தும் பாரா­மலும் தெரிந்தும் தெரி­யா­மலும் நடந்து கொள்­கி­றார்கள் என அக்­கி­ராம மக்கள் கவலை தெரி­விக்­கின்­றார்கள்.

வட­கி­ழக்கில் இப்­பொ­ழுது ஏகப்­பட்ட சமூகப் பிரச்­ச­ினை­களும் கெடு­தி­களும் நாளுக்­குநாள் நடை­பெற்றுக் கொண்­டே­யி­ருக்­கின்­றன. இதில் இயற்கை வள கொள்ளை அழிப்பு என்­பன சர்வ சாதா­ர­ண­மா­கவே நடை­பெ­று­கின்ற சம்­ப­வங்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன.

அண்­மையில் குடி­யேற்றம்; மீள் குடி­யேற்றம் என்று பொய்­யு­ரைத்து பெருந்­தொ­கை­யான வள­முள்ள காடுகள் மன்னார் பிர­தே­சத்தில் அளிக்­கப்­பட்­டதன் கார­ண­மாக அது சமூகப் பிரச்­சி­னை­யாக மாறும் சூழ்­நிலை உரு­வாகும் அபாயம் காணப்­பட்­டது. இது தவிர குழு மோதல், கோஷ்டி மோதல், கடத்தல், கொள்ளை என ஏகப்­பட்ட சமூக விரோதச் செயல்கள் நடந்த வண்­ண­மே­யி­ருக்­கின்­றன.

அண்­மையில் யாழ். மல்­லா­கத்தில் வைத்து பாட­சாலை மாண­வி­யொ­ருத்தி கடத்­தப்­பட்ட சம்­பவம் யாழ். குடா நாட்டைப் பர­ப­ரப்­புக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. வேனில் வந்த கும்­ப­லொன்று பாட­சா­லைக்குச் சென்று கொண்­டி­ருந்த மாண­வி­யொ­ருத்­தியை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்த முயற்சி செய்­ததும் குறித்த மாணவி மிகத் தந்­தி­ர­மா­கவும் சாது­ரி­ய­மா­கவும் நடந்து கொண்­ட­தனால் கடத்­தல்­கா­ரர்கள் கொடி­காமம் வரணிப் பகு­தியில் இறக்­கி­விட்டு தப்­பித்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இவை­யொ­ரு­பு­ற­மி­ருக்க, போதைப் பொருள் வியா­பாரம், கடத்தல் என்­பன மலிந்து விட்ட மாவட்­டங்­க­ளாக வட­கி­ழக்கு மாகா­ணங்கள் ஆகி­வ­ரு­வது ஆபத்­தான குறி­காட்­டி­க­ளாக இருக்­கின்­றன. இந்த சமூக கெடுமதிகளின் பின்னணியில் யார் இருக்கிறார்கள். இதன் சூத்திரதாரிகள் எங்கிருந்து உருவாக்கப்படுகிறார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும். அண் மையில் 320 கோடி ரூபா பெறும தியான கொக்கையின் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு எல்லாம் சமூக விரோதச் செயல்கள் மலிந்து நாட்டை சூறை யாடிக் கொண்டிருக்கின்றபோது பிழை ப்புக்காக மண்ணள்ளும் சின்னச் சின்ன பொது மக்களை பந்தாடுவது பொருத் தமற்றது. திமிலங்கள் நாட்டுக்குள் நட மாடிக் கொண்டிருக்க, நெத்தலி மீன் களை வேட்டையாட நினைப்பது மனிதாபி மானமற்ற செயல்.

கரடியனாறுப் பிரதேசத்தில் வறுமை நிலையில் வாடும் சிறுவர்கள் தங்கள் பிழைப்புக்காக அன்றாட உலை வைப் புக்காக தொழில் செய்யச் சென்ற இடத்தில் துப்பாக்கி மரணத்துக்கு ஆளாக்கப்பட்டது. பாவத்தைத் தரும் செயலாகும். அதற் காக குற்றம், சமூக விரோதச் செயல் களில் ஈடுபடுவோர் தண்டனைக்கு உள்ளாக் கப்படக் கூடாது என்பது கருத்தல்ல. மாகாண சபை உறுப்பினர் ஒருவர் குறிப் பிட்டது போல் சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுகிறதென்றால் அங்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியமில்லை. அவர்கள் கைது செய்யப் பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறான நிகழ்வுகள் நாட்டில் துப்பாக்கிக் கலாசாரமொன்று மீண்டும் உருவாகுவதற்கு முன்னைய காலத்தைப் போல் படைப் பிரிவினர் இருந்து விடக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையும் ஆகும்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-07-29#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.