Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் துப்பாக்கிச் சூடு; எது உண்மை?

Featured Replies

நல்லூர் துப்பாக்கிச் சூடு; எது உண்மை?
 

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தென்மேற்கு மூலையில், கடந்த சனிக்கிழமை மாலை 5.10 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  

இலங்கைத் தமிழர்கள் வாழுகின்ற பல்வேறு நாடுகளிலும் கூட, இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.  

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் முன்பாக இந்தச் சம்பவம் நடந்தமை;  
அவரது மெய்க்காவலர்களில் ஒருவர் சூடுபட்டு இறந்தமை, மற்றொருவர் காயமடைந்தமை;  

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின் பின்னணி;  

இதுபோன்ற பல்வேறு காரணங்களால், இந்தச் சம்பவம், மக்கள் மத்தியில் கூடுதலான பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  

துப்பாக்கிச் சூடு நடந்ததும், நீதிபதி இளஞ்செழியன் அளித்திருந்த பேட்டியில், “நன்றாகத் துப்பாக்கியைக் கையாளக் கூடிய ஒருவர்தான் இதைச் செய்திருந்தார்” என்றும், “அவர் என்னை நோக்கிச் சுட முனைந்த போது, எனது பாதுகாவலர் காருக்குள் தள்ளி விட்டுக் காப்பாற்றியிருந்தார்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

ஆனால், சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞன் ஒருவரிடம் தகவல்களைப் பெற்ற யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், “இது, நீதிபதியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல” என்று உறுதியாகக் கூறியிருந்தார். அத்துடன், பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகரவும் “இது திட்டமிட்டத்தோடு தாக்குதல் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.  

நீதிபதி இளஞ்செழியன் வடக்கில், பல்வேறு குற்றச்செயல்களைத் தனது இறுக்கமான உத்தரவுகளின் மூலம், தடுப்பது அல்லது குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருபவர். அவரது தீர்ப்புகள் பலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.  

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு உள்ளிட்ட, பல முக்கியமான வழக்குகளை அவர் விசாரித்து வருகிறார்.  

இந்தப் பின்னணியில், அவரைக் குறிவைத்தே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது, ஒரு தரப்பினரது வாதம். நீதிபதி இளஞ்செழியனின் முதற்கணிப்பும் அவ்வாறாகவே இருந்தது என்பதை, அவரது பேட்டி உணர்த்தியிருந்தது.  

இது, நீதிபதியை இலக்கு வைத்த சதித்திட்டம் என்றும், இதன் பின்னணியைக் கண்டறிய வேண்டும் என்றும் அரசியல் பிரமுகர்கள், கட்சிகள் தரப்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன; கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்காக போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன.  

இவையெல்லாம் நீதிபதி இளஞ்செழியனை நோக்கி, மக்களின் அபிமானத்தையும் அனுதாபத்தையும் ஒன்று குவிக்க உதவியிருக்கின்றன.   

இன்னொரு பக்கத்தில், பொலிஸ் தரப்போ, இது தற்செயலான சம்பவம்தான், திட்டமிட்ட ஒன்று அல்ல என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. அந்தக் கோணத்திலேயே விசாரணைகளையும் முன்னெடுத்து வருகிறது.  

முன்னரெல்லாம், வடக்கில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து விட்டால், அதைப் பூதாகாரப்படுத்தி, புலிகள் வந்து விட்டார்கள் என்பது போல பிரசாரங்களைச் செய்து, இராணுவத்தையும் அதிரடிப்படையையும் களமிறக்கி, மக்களை மிரட்டும் வழக்கம் ஒன்று இருந்தது.  

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், புலிகள் இயக்கத்தில் சில ஆண்டுகள் இணைந்திருந்த ஒருவரே, துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் என்று கூறப்படுகின்ற நிலையிலும் கூட, பொலிஸார் இதைத் திட்டமிட்ட ஒரு சம்பவம் என்று கூற முன்வரவில்லை.  

ஆனால், அமைச்சர் மனோ கணேசன்தான், வடக்கில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அவரைப்போல, அரசாங்கத்தில் உள்ள வேறெந்த அமைச்சரும் கூறவில்லை.   

மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம், வழக்கம் போலவே, தனக்குப் புலிகளின் ஆரம்ப காலகட்டத்தைத்தான் இந்தச் சம்பவம் நினைவுபடுத்துகிறது; இதை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியிருந்தார்.  

நல்லூரில் நடந்த துப்பாக்கிச் சூடு, உண்மையில் நீதிபதியை இலக்கு வைத்த ஒன்றா அல்லது, தற்செயலான ஒன்று தானா என்ற சந்தேகமும் கேள்விகளும், இப்போதைக்குத் தீரப் போவதில்லை. ஏனென்றால், எல்லோருமே தமக்குள் ஒரு முடிவை எடுத்துக் கொண்டுதான், இந்த விடயத்தை அணுகுவதாகத் தெரிகிறது.  

ஒருவேளை, இது தற்செயலான சம்பவமாகவே இருந்தால் கூட, அவ்வாறில்லை, சதித்திட்டமே என்று முடிவெடுக்கப்பட வேண்டும் என்பதில், ஒரு தரப்பு உறுதியாக இருக்கிறது.  

இந்தச் சம்பவம் தொடர்பாகப் புலன் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார், ‘இது திட்டமிட்ட ஒன்று அல்ல’ என்ற முடிவுக்கு வந்தால் கூட, பெரும்பாலான மக்கள் அதை நம்பப் போவதில்லை. ஏனென்றால், அவர்கள், இதற்குப் பின்னால் ஏதோ ஒரு சதி இருக்கிறது என்று வலுவாக நம்புகிறார்கள்.  

அத்தகைய நிலைப்பாட்டில் உள்ளவர்கள், பொலிஸார் உண்மையைக் கண்டு பிடித்துக் கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.  நாய்க்கு எங்கே கல்லால் அடித்தாலும் அது, காலில் அடிபட்டது போல, காலைத் தூக்கிக் கொண்டே ஓடும். அது போலத்தான், இங்கேயும், எதற்கெடுத்தாலும் புலிகளுடன் முடிச்சுப் போட்டு, பயங்கரவாதம் தலையெடுக்கிறது என்பதும், இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சதியே என்று புலம்புகின்றதும் ஒரு வழக்கமாகவே இருக்கிறது.  

இந்தக் கணிப்பு நிலை, பல வேளைகளில் உண்மைகளை ஏற்றுக் கொள்ள முடியாத, ஜீரணித்துக் கொள்ளும் பக்குவத்தை இரண்டு தரப்பினருக்குமே அளிப்பதில்லை.  
நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையும் இந்த விடயங்களின் ஊடாகவும் பார்க்க வேண்டியுள்ளது.  

தமிழ் அமைச்சரான மனோ கணேசன், வடக்கில் நிலைமைகள் மோசமடைந்து விட்டன என்கிறார். வடக்கிலுள்ள பெரும்பாலான மக்களோ, நீதிபதியை இலக்கு வைக்கும் அளவுக்கு, இதற்குப் பின்னால் ஏதோ சதித்திட்டம் இருக்கிறது என்று வலுவாக நம்புகிறார்கள்.  

இது ஆபத்தான ஒரு நிலையாகவே தோன்றுகிறது. அதாவது, வடக்கின் இயல்புநிலையைத் தமிழர்களே நிராகரிக்கின்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.   

வடக்கில் உள்ளவர்களிடம், வன்முறை மனோபாவம் மேலோங்கியுள்ளது என்று ஒத்துக்கொள்கின்ற நிலை இதனால் உருவாகும். இந்த நிலையானது, வடக்கில் இன்னும் இராணுவ நெருக்குவாரங்கள் அதிகரிக்கவே வழிகோலும்.  

சதித்திட்டம் தீட்டி, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதா என்ற சந்தேகங்கள் இருக்கின்றதைப் போலவே, தற்செயலானதே என்பதிலும் சந்தேகங்கள் இருக்கின்றன.  

இந்தச் சந்தேகங்களை விசாரணை வளையத்துக்கு அப்பால் கொண்டு சென்று, முடிவுகளை எடுக்கின்ற நிலைக்குக் கொண்டு செல்வதும், தாம் எடுத்த முடிவை நோக்கியே விசாரணைகள் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தான் சிக்கலானது.  

போருக்குப் பின்னர் நீண்டகாலம் அமைதியாக இருக்கும் வடக்கில், அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழும் சில சம்பவங்களை, பூதாகாரப்படுத்தி தமிழர்களை நிரந்தரமாக இராணுவ சூழலுக்குள் வைத்திருப்பதற்கான எத்தனங்கள், திரைமறைவில் நடந்து கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.  

இந்த விடயத்தில் கூட அத்தகைய எண்ணப்பாடுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.  இப்படியான சூழலில், நடக்கின்ற சம்பவங்களை வடக்கில் வன்முறைகள் தலைவிரித்தாடுகின்றன என்பது போன்ற பிரமைகளை ஏற்படுத்தாத வகையில், கையாளுவது முக்கியம்.  

இந்த விடயத்தில் அரசியல்வாதிகள், அமைப்புகள், பொலிஸார் ஊடகங்களின் பொறுப்புணர்வு முக்கியமானது. அற்பமான பரபரப்புக்காகவும் அரசியல் ஆதாயத்துக்காகவும் இதுபோன்ற விடயங்களைப் பயன்படுத்திக் கொள்ள முனைவது ஆபத்தானது.  

இந்த விடயத்தில் சறுக்கல்கள் ஏற்படுமானால், அதன் விளைவுகளை, வடக்கில் உள்ள தமிழ் மக்களே அனுபவிக்கின்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நல்லூர்-துப்பாக்கிச்-சூடு-எது-உண்மை/91-201476

  • தொடங்கியவர்

நல்லூர் தாக்குதல் ; பொலிஸார் செயற்பட்ட விதம் ஏற்ப்படுத்தும் தாக்கங்கள்

 

சுட முடி­யுமா? என்று கேட்­டான்; சுட்­டேன் என்­ப­தனை நம்­ப­லாமா ?  மது போதை­யில் நின்­ற­வன், ஒரு ­வரை தள்ளி விட்டு அவ­ரின் இடுப்­புப் பட்­டி­யில் இருக்­கும் துப்­பாக்­கியைப் பறித்து அதனை முழு­வ­து­மாகத் தன் கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு வர முடி­யுமா ?

அவ்­வாறு கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தா­லும் , அதனை இயக்கி (லோட் செய்து) சுடும் வரை­யில் துப்­பாக்கியைப் பறி கொடுத்­த­ வர் என்ன செய்­தார்?

நிச்­ச­ய­மாக அவர் வேடிக்கை பார்த்­த­படி நின்றிருக்­க­மாட் டார். ஆக, பலத்த போராட்­டத்­தின் மத்­தி­யில்தான் துப்­பாக் கியைப் பறித்­த­வர் அதனைத் தனது கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டுவந்து சுட்டிருக்க வேண்­டும். அவ்­வாறு மது­போ­தை­யில் நின்ற ஒரு­வ­ரால் போராட முடி­யுமா ?

மது போதை­யில் நின்­றா­லும், தம்மை விடப் பல­சா­லி­க­ளு­டன் (ஆயு­த­தா­ரி­க­ளு­டன்) மோத முனைவார்­களா? அப்­ப­டியே சென்­றா­லும், துப்­பாக்­கி­ யைப் பறிக்­கும் அள­வுக்குத் துணி­வார்களா ?

இலக்­குக்கு உரி­ய­வர் எட்­டடி தூரத்­தில் நிற்­கும்­போது இலக்கை நோக்­கிச் சரி­யா­கச் சுடத் தெரி­யா­த­வனா இலக்­கைத் தீர்­மா­னித்து களத்­தில் இறங்கி இருப்­பான்?

துப்­பாக்­கி­யைக் கையாளத் தெரிந்த ஒரு­வ­னுக்கு எட்­டடி தூரத்­தில் நின்ற இலக்கைத் தாக்க முடி­யாதா ? கையில் சிறு ஆயு­தம் கூட இல்­லா­மல், இலக்­கைத் தாக்கத் தீர்­மா­னித்து எவ­னா­வது களத்­தில் இறங்­கு­வானா ?

பாது­காப்­புப் படை­யி­னர், பொலி­ஸார் தமது ஆயு­தங்­களை இழக்க நேர்ந்­தால் அதற்­குத் தண்­டனை உண்டு

பொலிஸ், முப்­ப­டை­களைச் சேர்ந்­த­வர்­கள் தமது ஆயு­தங்­களைப் பறி கொடுத்­தாலோ , தொலைத்­தாலோ அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான விசா­ர­ணை­கள், தண்­ட­னை­கள் உண்டு. அந்த நிலை­யில் எவ­ரா­வது நிரா­யு­த­பா­ணி­யி­டம் தமது ஆயு­தங்­களை அவ்­வ­ளவு இல­கு­வில் பறி கொடுத்து விடு­வார்­களா ?

அதிதி­க­ளின் பாது­காப்­புக்கு போகின்­ற­வர்­கள் பாது­காப்பு வழங்­கும் வேலையை விட்­டு­விட்டு வேறு வேலை ஏதா­வ­தில் ஈடு­பட முடி­யுமா ? உதா­ர­ண­மாக, அதிதி ஒரு­வ­ரின் வாக­னத்­திற்கு ஒரு­வன் கல்­லெ­றிந்து விட்டு ஓடி­னால், அவனை மெய்ப்­பா­து­கா­வ­லர் துரத்தி செல்ல முடி­யுமா?.

மெய்ப்­பா­து­கா­வ­லர் உட­ன­டி­யாகக் குறித்த அதி­தி­யின் அரு­கில் சென்று அவ­ரின் பாது­காப்பைத் தானே உறு­திப் படுத்த வேண்­டும். அதிதி­யைத் தனியே விட்டுவிட்டு, கல்­லால் எறிந்­த­வ­னைத் துரத்­திச் சென்­றால், அவன் கல்­லெ­றிந்து விட்டு ஓட, மெய் பாது­கா­வ­லர் அவ­னைத் துரத்­திச் செல்ல, பின்­னால் ஒரு­வன் வந்து குறித்த அதி­திக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்தி விட்டு இல­கு­வாகத் தப்­பி­விட முடி­யும் அல்­லவா ?

அதி­தி­க­ளுக்­குப் பாது­காப்பு வழங்­க­வென நிய­மிக்­கப்­ப­டும் மெய்­பா­து­கா­வ­லர்­கள் உரிய பயிற்­சி­கள் இல்­லா­மலா நிய­மிக்­கப்­ப­டு­கின்­ற­னர். ஏனெ­னில் ஒரு­வர் தனது துப்­பாக் கியைப் பறி­கொ­டுக்­கின்­றார். மற்­ற­வர் எட்­டடி தூரத்­தில் நின்று சுட்­ட­வனைத் திருப்பிச் சுட முடி­யாத ஒரு­வ­ராக இருக்க முடி­யுமா ?

சம்­ப­வம் தொடர்­பில் நீதி­பதி, பிரதி ப் பொலிஸ் மா அதி­ப­ருக்­கும், தலை­மை­யக பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்­கும் உட­ன­டி­யாக அறி­வித்து இருக்­கின்­றார். அந்த நிலை­யில் அத­னைப் பொலி­ஸார் அச­மந்­த­மாக விட்­டுள்­ளார்­களா ? சம்­பவ இடத்துக்கு 20க்கும் குறை­வான பொலிஸார் தானே வந்து இருந்­தார்­கள். பெரிய அள­வில் அந்த இடத்­தில் விசா­ரணை செய் யப் பட்டது என்று தெரி­ய­வில்­லையே?

குற்­றச் சம்­ப­வத்தின் பின்னர் பொலி­ஸார் அந்த இடத்தை உடனடியாகத் தமது பாது­காப்­புக்­குள் கொண்டு வந்­தாக
வேண்­டும்

தட­ய­வி­யல் பொலி­ஸார் வரும்­வ­ரை­யில், குற்­றப் பிர­தே­ சத்தை அங்கு முத­லில் செல்­லும் பொலி­ஸார் தானே தமது பாது­காப்­புக்­குள் கொண்டு வர வேண்­டும். ஆனால் பொலி­ஸார் அத­னைச் செய்­தனர் என்று தெரி­ய­வில்­லையே? ஏனெ­னில் பல வெற்­றுச் சன்னக் கூடு­கள் வாக­னங்­கள் மேலால் சென்­ற­தா­லும், அப்­ப­கு­தி­யில் நட­மா­டி­ய­வர்­கள் கால்களால் மிதித்­த­தா­லும் சேத­ம­டைந்து இருந்­தன.

குற்­றச் சம்­ப­வம் நடந்த இடத்­தில் பல­ரும் சாதா­ர­ண­மாக நட­மா­டித் திரிந்­த­னர். அத­னால் தட­யங்­கள் அழியக் கூடிய சந்­தர்ப்­பங்­கள் எழு­வ­துண்டு. அதனை ஏன் பொலி­ஸார் வேடிக்கை பார்த்­துக் கொண்டு இருந்­த­னர் ?

பொது­வா­கவே பொலிஸ் தரப்­பின் விசா­ர­ணை­கள் தொடர்­பில் விமர்­ச­னங்­கள் எழு­வ­துண்டு. அவ் வா­றான நிலை­யில் சம்­பவ இடத்­தில் சட்­டத்­த­ர­ணி­கள் அல்­லது நீதித்­துறை சார்ந்­த­வர்­கள் நின்று இருந்­தால், பொலி­ஸார் உரிய முறை­யில் சில விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து இருந்து இருக்­க­லாம் என்­றொரு கருத்து சிலர் மத்­தி­யில் உண்டு.

சம்­ப­வம் மாலை 5.10 மணி­ய­ள­வில் நடை­பெற்­றது. நள்­ளி­ரவு 12.30 மணிக்கே சம்­பவ இடத்துக்கு பதில் நீதி­வான் சென்று சம்­பவ இடத்­தைப் பார்­வை­யிட்டு விசா­ர­ணை­களை மேற்­கொண்டு இருந்­தார். தட­ய­வி­யல் பொலி­ஸார் இரவு 8 மணி­ய­ள­வில் சம்­பவ இடத்­தில் இருந்த தட­யப் பொருள்­களை எடுத்து சென்­று­விட்ட பின்­னர், சம்­பவ இடத்தை நீதி­வான் பார்­வை­யிட வரு­கின்­றார் என்ற செய்தி வழங்­கப்­பட்ட பின்­னர், இரவு 11 மணி­ய­ள­வில் தட­ய­வி­யல் பொலி­ஸார் சம்­பவ இடத்துக்கு சென்று தட­யப் பொருள்­கள் மீட்­கப்­பட்ட இடங்­க­ளில் மீள அடை­யா­ளப்­ப­டுத்தி நீதி­வா­னின் வரு­கைக்­கா­கக் காத்­தி­ருந்­த­னர்.

சம்­ப­வம் நடை­பெற்று ஒன்­றரை மணித்­தி­யா­லத்துக்குள் சம்­ப­வம் தொடர்­பான பூரண விசா­ர­ணை­களை நடத்­தி­ முடித்த பின்னரா எஸ்.எஸ்.பி. சூட்­டுச் சம்­ப­வத்­தில் நீதி­பதி இலக்­கில்லை என்று கூறி­னார்? அல்­லது தான் சம்­ப­வத்தை நேரில் பார்த்­தேன் எனக் கூறிய பொதுநபரொரு வரது பேச்­சைக் கேட்டா நீதி­பதி இலக்கு இல்லை என கூறி­னார்?

சாதா­ர­ண­மாக, திருட்டு வழக்கு, விபத்­துக்­கள் குறித்­துக் கேட்­டாலே, தாம் பதில் சொல்ல முடி­யாது. ஊட­கப் பேச்­சா­ள­ரா­லேயே பதில் கூற முடி­யும் என்று கூறும் பொலிஸ் தரப்பு, அன்­றைய தினம் சம்­ப­வம் நடை­பெற்று ஒன்­றரை மணித்­தி­யா­லத்துக்குள் நீதி­பதி இலக்கு இல்லை என்று எதனை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு கூறி­யது ?

பல்­க­லைக்­க­ழக மாண­வர் படு­கொலை தொடர்­பி­லும்
பொலிஸ் தரப்பு

கொக்­கு­வில் குளப்­பிட்­டிச் சந்­திக்கு அரு­கில் கடந்த ஒக்­டோ­பர் மாதம் 20ஆம் திகதி யாழ்.பல்­க­லை­க­ழக மாண­வர்­கள் இரு­வர் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­துக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­த­னர்.

அந்தச் சம்­ப­வம் தொடர்­பில் காலை­யில் இருந்தே ஊர­வர்­க­ளும், பல்­க­லை­க­ழக மாண­வர்­க­ளும் பொலி­ஸார் துப்­பாக்கி பிர­யோ­கம் மேற்­கொண்­ட­னர் என கூறி­னார்­கள். ஆனால் பொலிஸ் தரப்­பு துப்­பாக்­கிப் பிர­யோ­கம் மேற்­கொண்­ட­த­னை­ ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

சம்­ப­வத்தை விபத்­தா­கக் கூறவே முனைந்­த­னர். மாலை உயி­ரி­ழந்த மாண­வர்­க­ளின் பிரேத பரி­சோ­தனை அறிக்­கை­யி­லையே துப்­பாக்­கிச் சூட்­டுக் காயங்­கள் இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்ட பின்­னரே, பொலிஸ் தரப்பு துப்­பாக்கி பிர­யோ­கம் மேற்­கொண்­ட­தனை ஏற்­றுக்­கொண்­டது.

சம்­ப­வம் நடந்து சுமார் 18 மணித்­தி­யா­லங்­க­ளுக்­குப் பின்­னரே துப்­பாக்கி சூடு நடந்­தது என்­ப­தைப் பொலி­ஸார் ஏற்­றுக்­கொண்­டார்­கள். ஆனால் நல்­லூர் சம்­ப­வத்­தில் ஒன்­றரை மணித்­தி­யா­லத்­தில் பொலி­ஸார் நீதி­பதி இலக்கு இல்லை என்று எதன் அடிப்­ப­டை­யில் கூறி­னார்­கள் ?

பளை­யில் அண்­மை­யில் பொலிஸ் ரோந்துக் கார் மீது மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிப் பிர­யோ­கத்தை அடுத்து பெரு­ம­ள­வான இரா­ணு­வத்­தி­னர் பொலி­ஸார், பொலிஸ் விசேட அதி­ரடி ப்படை என்­பவை குவிக்­கப்­பட்டு விசா­ர­ணை­களை துரித கெதி­யில் மேற்­கொண்டு தேடு­தல்­கள் நடத்­தப்­பட்­ட­ன. ஆனால் நல்­லூ­ரில் ஏன் அப்­படி நடக்­க­வில்லை?

சாதா­ர­ண­மாக பொலி­ஸார் ஒரு­வர் மீது கைக­ளால் தாக்­கு­தல் நடத்­தி­னாலே பொலிஸ் குழுக்­கள் தீவி­ர­மாக களத்­தில் இறங்கி வேலை செய்து தாக்­கு­த­லா­ளி­க­ளைக் கைது செய்­வார்­கள். இங்கே ஏன் அப்­படி அவர்­கள் நடந்­து­கொள்­ள­வில்லை?

கடந்த வரு­டம் சுன்­னா­கத்­தில் சிவில் உடை­யில் நின்ற பொலி­ஸார் மீது வாள் வெட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து பல பொலிஸ் குழுக்­கள் களம் இறக்கப்பட் டன. ஆனால் இங்கே அப்படி எதுவும் நடக்க வில்லை.

கடந்த மாதம் 26ஆம் திகதி (புதன்கிழமை) வர­ணிப் பகு­தி­யில் கொடி­கா­மம் பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்­றும் உப பொலிஸ் பரி­சோ­த­கரை இனம் தெரி­யாத நபர்­கள் தாக்கி இருந்­தார்­கள். மறு­நாள் வியா­ழக்­கி­ழமை துன்­னா­லைப் பகு­தி­யில் விசேட தேடு­தல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு, குறித்த தாக்­கு­த­லு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என இரு­வ­ரைப் பொலி­ஸார் கைது செய்­தார்­கள்.

ஆனால் நல்­லூர் சூட்டுச் சம்­ப­வம் தொடர்­பில் மூன்று நாள்களை கடந்­தும் முதன்மைச் சந்­தே­க­ந­ப­ரைக் கைதுசெய்­ய­மு­டி­ய­வில்லை. மூன்­றா­வது நாள் சந்­தேக நபரே பொலிஸ் நிலை­யம் சென்று தாமாகச் சர­ண­டைந்­தார்.

ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் , அது­வும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யின் மெய்ப்­பா­து­ கா­வ­லர், கடமை நேரத்­தில் சுட்டுப் படு­கொலை செய்­யப்­பட்டு உள்­ளார். ஆனால் பொலிஸா­ரின் விசா­ர­ணை­கள் திருப்தி இல்­லா­மல் உள்­ள­தாக பல மட்­டங்­க­ளி­லும் விமர்­ச­னங்­கள் எழுந்­தன.

ஏன் இந்த சம்­ப­வம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை குற்­ற­பு­ல­னாய்வு துறை­யி­ன­ரி­டம் கைய­ளிக்­கக் கோரி பெரி­ய­ள­வில் கோரிக்­கை­கள் எவை­யும் இது­வரை முன் வைக்­கப்­ப­ட­வில்லை. ?

நல்­லூர் சம்­ப­வத்­தில் சர­ண­டைந்த நப­ரைப் பொலிஸ் காவ­லில் வைத்து விசா­ரிக்­கா­த­தேன்?

காலை 8.15 மணி­ய­ள­வில் சர­ண­டைந்த நப­ரி­டம் வாக்கு மூலம் பெற்று முதல் அறிக்கை தயார் செய்து மாலை 6 மணிக்கு (10 மணித்­தி­யா­லத்­திற்­குள் ) நீதி­வான் முன்­னி­லை­யில் பொலி­ஸார் முற்­ப­டுத்தி விட்­டார்­கள். பொலி­ஸாரொ­ரு­வரை, கடமை நேரத்­தில் அவ­ரது துப்­பாக்­கி­யைப் பறித்தே அவரை சுட்­டுக் கொன்று இருக்­கி­றார்.

அவ­ரிடம் பொலிஸ் தரப்பு 10 மணித்­தி­யா­லத்­துக்­குள் வாக்கு மூலம் பெற்று விட்­டார்­கள். அவ­ரைப் பொலிஸ் தடுப்பு காவ­லில் வைத்து விசா­ரணை செய்­யக் கூடப் பொலிஸ் தரப்பு அனு­மதி கோர­வில்லை.

இவ்­வா­றான சம்­ப­வங்­கள் நடை­பெற்­றால் பொலிஸ் தரப்பு மாத்­தி­ரம் அல்ல இலங்­கை­யில் உள்ள அனைத் துத் தரப்பு புல­னாய்வு துறையை சேர்ந்­த­வர்­க­ளும் வாக்கு மூலங்­களை பதிவு செய்து இருப்­பார்­கள். ஆனால் இந்தச் சம்­ப­வத்­தில் அத்­த­கைய நடை­முறை பின்­பற்­றப்ப­ட­வில்லை.

மெய்­பா­து­கா­வ­லர் மீதும் (துப்­பாக்­கியை பறி­கொ­டுத்­தமை) சில குற்­ற­சாட்­டுக்­கள் உள்ள நிலை­யில், அது தொடர்­பி­லான விசா­ர­ணை­கள் எது­வும் முன்னெ டுக்­கப்­ப­டாத நிலை­யில், எதற்­காக உட­ன­டி­யாக பதவி உயர்வு வழங்­கப்­பட்­டது? அத்­து­டன் பொலிஸ் சேவை­யில் இருந்து ஓய்வு பெற்ற அவ­ரு­டைய மனை­விக்கு எதற்­காக அவ­சர அவ­ச­ர­மாக பதவி உயர்வு வழங்­கப்­பட்டு அவரை மீண்­டும் பொலிஸ் சேவை­யில் இணைத்துக்­கொண்­டார்­கள்? இறந்­த­வ­ரின் குடும்ப பொரு­ளா­தார நிலையை கருத்­தில் கொண்டு அவ­ரு­டைய மனைவி பொலிஸ் சேவை­யில் உள்­வாங்­கப்­பட வேண் டிய தேவை இல்லை என­க­ரு­து­கி­றேன்.

ஏனெ­னில் அவர் பொலிஸ் சேவை­யில் இருந்து ஓய்வு பெற்­ற­மை­யி­னால், அவ­ருக்கு ஓய்­வூ­தி­யம் கிடைக்­கும். மற்­றும் உயி­ரி­ழந்த மெய்ப் பாது­கா­வ­லர், கடமை நேரத்­தில் உயி­ரி­ழந்து இருந்­த­மை­யி­னால் அவ­ருக்­கான (உப பொலிஸ் பரி­சோ­த­க­ருக்­கான) சம்­ப­ள­மும் வழங்­கப்­ப­டும்.

உயி­ரி­ழந்த மெய்ப் பாது­கா­வ­ல­ருக்கு பதவி உயர்வு வழங்கப்­பட்டுள்­ளது. காய­ம­டைந்த மெய்ப் பாது­கா­வ­ல­ருக்கு ஏன் பத­வி­உ­யர்வு வழங்­கப்­ப­ட­வில்லை? காய­ம­டைந்த மெய்ப் பாது­கா­வ­லர் தான் தன்னை துப்­பாக்கி சூட்­டில் இருந்து பாது காக்க காரி­னுள் தள்ளி ஏற்­றி­விட்டு , தானும் சூடு வாங்­கி­கொண்டு துப்­பாக்­கி ­தாரி மீது தாக்­கு­தல் நடத்­தி­னார் என்று நீதி­பதி கூறி­ யுள்­ளார். அவ்­வா­றெ­னில் காய­ம­டைந்த மெய்­பா­து­கா­வ­லர்தானே நீதி­ப­தி­யின் உயி­ரைக் காப்­பாற்றி உள்­ளார். எனவே ஏன் அவ­ருக்­குப் பதவி உயர்வு வழங்­கப்­ப­ட­வில்லை?

பொது­வில் கொலைக் குற்­றங்­கள் தொடர்­பில் ஆரம்ப விசா­ர­ணை­களை பொலி­ஸாரே முன்­னெ­டுத்து நீதி­வான் நீதி­மன்­றில் சாட்­சி­கள், சான்றுப் பொருள்­களை முற்­ப­டுத்தி சந்­தேக நபர்­க­ளை­யும் முற்­ப­டுத்­து­ வார்­கள். அங்கு பொலிஸ் தரப்­பால் முன்­வைக்­கப்­ப­டும் சாட்­சி­கள் , ஆதா­ரங்­கள், சான்­று­களை அடிப்­ப­டை­யாக வைத்தே நீதி­வான் நீதி­மன்­றில் சுருக்­க ­மு­றை­யற்ற விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு குற்­றப்­ப­கிர்­வுப் பத்­தி­ரம் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் பாரப்­ப­டுத்­தப்­பட்டு , சட்­டமா அதி­பர் சந்­தேக நப­ருக்கு எதி­ராக குற்­றச் சாட்­டுக்­களை முன் வைத்து அவரை குறித்த வழக்­கில் எதி­ரி­யா­கக் கண்டு மேல் நீதி­மன்­றுக்கு குற்­றப்­ப­கிர்­வுப் பத்­தி­ரம் பாரப்­ப­டுத்­தப்­ப­டும். அதன் பின்­னர் மேல் நீதி­மன்­றில் எதிரி மீது சுமத்­தப்­பட்ட குற்­றங்­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, சந்­தே­கத்­துக்கு இட­மின்றி எதிரி மீதான குற்றச் சாட்­டுக்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் எதி­ரி­யைக் குற்­ற­வா­ளி­யாக நீதி­மன்று கண்டு தண்­டனை வழங்­கப்­ப­டும்.

நல்­லூர் சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் பொலிஸ் தரப்பு ஆரம்­பத்­தில் இருந்து நீதி­பதி இலக்கு இல்லை என கூறி வரு­கிறது. ஆனால் நீதி­பதி , நீதித்­து­றையை சார்ந்த பெரும்­பா­லா­ன­வர்­கள் மற்­றும் பெரும்­பா­லான பொது­மக்­கள் நீதி­ப­தியே இலக்கு என கூறு­கின்­றார்­கள்.

அவ்­வா­றான நிலை­யில், இந்­தச் சம்­ப­வம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை முன்­னே­டுக்­கப்­போ­கும் பொலிஸ் தரப்பு நீதி­பதி இலக்­கில்லை எனும் கோணத்­தி­லையே விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கப்­போ­கின்­றது.

அவர்­கள் அந்­தக் கோணத்­தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து , அந்­தக் கோணத்­தி­லையே சாட்­சி­கள் , ஆதா­ரங்­கள் சான்­றுக்­களை நீதி­மன்­றில் பாரப்­ப­டுத்த போகின்­றார்­கள். அவ்­வா­றெ­னில் நீதி­பதிதான் இலக்கு எனும் விட­யம் நீர்ந்து போய்­வி­டும்.

நல்­லூர் சம்­ப­வம் தொடர்­பில் பல தரப்­பட்ட கோணங்­க­ளில் விசா­ர­ணை­கள் முன்­னெ­டுக்­க­ப்பட்டு பல்­வேறு வகை­யான சந்­தே­கங்­கள் கேள்­வி­க­ளுக்கு பொலிஸ் தரப்பு முற்­று­புள்ளி வைக்­குமா ? அல்­லது பொலிஸ் தரப்பு ஆரம்­பத்­தில் இருந்து கூறு­வது போன்று “ நீதி­பதி இலக்­கில்லை “ எனும் ஒற்றை வார்த்­தையை தான் தொடர்ந்து கூற போகின்­றதா ? என்­ப­த­னைப் பொறுத்­தி­ருந்து பார்ப்­போம்.

http://uthayandaily.com/story/15572.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.