Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்காவிற்கு இந்தியா போர்க்கப்பலை வழங்கக்கூடாது': த.தே.கூ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சிறிலங்காவிற்கு இந்தியா போர்க்கப்பலை வழங்கக்கூடாது': த.தே.கூ.

"சிறிலங்காவிற்கு உயிராபத்துக்களை விளைவிக்கும் ஆயுதங்களை இந்திய அரசு வழங்கக்கூடாது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருக்கின்றது.

சிறிலங்காவின் கடற்படைக்கு இந்திய அரசு பாரிய போர்க்கப்பல் ஒன்றை வழங்கவோ அல்லது வாடகைக்கு வழங்கவோ முன்வந்துள்ளதாக வெளியாகிய செய்திகளைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

அந்த அறிக்கையின் முழுமையான விவரம்:

"சிறிலங்காவின் கடற்படைக்கு இந்திய அரசு பாரிய போர்க்கப்பல் ஒன்றை வழங்கவோ அல்லது வாடகைக்கு வழங்கவோ முன்வந்துள்ளதாக ஊடகங்கள் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிந்திருக்கின்றது.

சிறிலங்கா அரசிற்கு 2000 ஆம் ஆண்டு இந்திய அரசினால் வழங்கப்பட்ட இதே வகையான கப்பலானது தற்போது புனரமைப்பு வேலைகளுக்காக இந்தியாவில் தரித்து நிற்கிறது. இந்த கப்பலுக்கான திருத்த மற்றும் புனரமைப்பு வேலைகளை இந்திய அரசு இலவசமாக வழங்கியிருக்கின்றது.

புனரமைப்பு வேலைக்காக இந்தியா கொண்டு செல்லப்பட்ட கப்பலுக்கு பதிலாக தற்போது அதே வகையான கப்பலை சிறிலங்காவிற்கு இந்தியா வழங்கியிருக்கின்றது. 'விக்ரம்' வகையான இந்த கப்பல் முன்னர் இந்திய கரையோரக் காவல் படையினரால் பயன்படுத்தப்பட்டது. அது தற்போது சிறிலங்கா கடற்படையில் சேவையில் இருக்கின்றது.

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவின் ஆயுதப்படைகளுக்கு வழங்குவதில்லை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்தியத் தலைவர்களினால் தொடர்ந்து எமக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் கைவிடப்பட்டுள்ளதாகவே இந்த ஊடகச் செய்திகள் மூலம் கொள்ள முடிகின்றது.

இனப்பிரச்சனைக்கு இராணுவ வழிகளில் அல்லாது அரசியல் வழிகளிலேயே தீர்வுகளை காண வேண்டும் என்று இந்திய அரசு சிறிலங்கா அரசிற்கு தெரிவித்துள்ள வேளையில் இந்த செய்தி ஊடகங்கள் மூலம் வெளிவந்திருக்கின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என கூறிக்கொண்டு சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் மீது வெளிப்படையாக இனப்போரை தொடுத்துள்ள வேளையில் ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றன.

அப்பாவித் தமிழ் மக்களின் மீது சிறிலங்கா கடற்படையினர் தரையிலும் கடலிலும் தொடர்ந்து பெரும் வன்முறைகளில் ஈடுபட்டு வருவது ஒரு நீண்டகால வரலாறு. ஆரம்பகால போரியல் வரலாற்றில் சிறிலங்கா கடற்படையின் எறிகணை வீச்சுக்களால் பல கரையோர கிராமங்கள் அழிக்கப்பட்டதுடன், பொதுமக்களின் படகுகளிலும் பெருமளவான படுகொலைகளை கடற்படையினர் நிகழ்த்தியிருந்தனர். தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் வன்முறைகளை கடற்படையினர் பெருமளவில் மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகளுடன் போரிடுகின்றோம் என்ற போர்வையில் சிறிலங்கா கடற்படையினர் தினமும் தமிழ் மக்களின் மீன்பிடிப் படகுகளை தாக்கி அழித்து வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பாக்கு நீரிணையின் இருபுறமும் பெருமளவான தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.

எனவே இந்தியாவும் ஏனைய வெளிநாட்டு அரசுகளும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்கா அரசிற்கு வழங்குவதை நிறுத்தும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது. சிறிலங்கா அரசு இந்த ஆயுதங்களின் மூலம் அப்பாவி தமிழ் பொதுமக்களின் மீதான தாக்குதல்களை அதிகரிக்கும் என்பது உண்மை."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.