Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் பொறுமையுடன் செயற்படுமாறு ஜானாதிபதியின் செயலாளர் சம்பந்தனிடம் கோரிக்கை

Featured Replies

கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் பொறுமையுடன் செயற்படுமாறு ஜானாதிபதியின் செயலாளர் சம்பந்தனிடம் கோரிக்கை

austin-fernando.jpg

கேப்பாபிலவு காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த புதன்கிழமை மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஜனாதிபதியின் செயலாளருடன்; கலந்துரையாடியதன் பின்னர் இந்த விடயம் தொடர்பில் ஜானாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ,   எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தனுக்கு   பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்  முல்லைத்தீவு, கேப்பாபிலவுக் காணி விடயம் தொடர்பாக தான் பாதுகாப்புச் செயலாளருடனும், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரியுடனும் பொதுவாகக் கலந்துரையாடியுள்ளதாகவும்     குறித்த கோரிக்கை தொடர்பாக அவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளபோதும், காலவரையறையைப் பொறுத்தமட்டில் சில மட்டுப்படுத்தல்களை அவர்கள் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது  எனவும்  தெரிவித்துள்ளார்.

எனினும்  உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த நிலங்களுக்குத் திரும்பி வரவேண்டிய தேவையையும், நல்லிணக்கச் செயற்பாடுகளின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு காலவரையறை தொடர்பில் விட்டுக்கொடுத்து ஒத்துழைக்கும்படி தான் அவர்களைக் கோரியுள்ளதாக   தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக, முடிந்தவரை விரைவாக இக்காணிகளை முறைப்படி விடுவிக்கும்பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான   ஒப்புதல்களை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தலைமைக் கட்டளை அதிகாரிக்கும் தங்கள் கோரிக்கையை முன்னளிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ள ஒஸ்டின் பெர்னாண்டோ  குறித்த  கோரிக்கை தொடர்பாக   சனாதிபதிக்கும் வாய்மொழி மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவுவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும்  இடம்பெயர்ந்தோர் விடயத்தில் உதவுவதற்குத்   அக்கறையோடு செயற்படுவதாகத்  தெரிவித்தார் எனவும் எதிர்காலத்தில் இதுவிடயமாக தாங்கள் மேற்கொள்ளவுள்ள இணக்கச் செயல்முறைகள் பற்றி தான் தங்களுக்கு அறியத்தரும் வரை தன்னுடன் பொறுமையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனவும் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/35062

  • தொடங்கியவர்

மூன்று மாதத்திற்குள் கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க முடியும்: மீள்குடியேற்ற அமைச்சு நம்பிக்கை

 

 

மூன்று மாதத்திற்குள் கேப்பாப்பிலவு காணிகளை விடுவிக்க முடியும்: மீள்குடியேற்ற அமைச்சு நம்பிக்கை
 

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தலைமை கட்டளை அதிகாரியுடன் தாம் கலந்துரையாடியுள்ளதாக ஜனாபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை தமது சொந்த நிலங்களில் மீள்குடியமர்த்தி, நல்லிணக்க செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கியே ஜனாதிபதி செயற்பட்டு வருவதாக ஜனாதிபதியின் செயலாளர் கூறியுள்ளார்.

கேப்பாப்பிலவில் காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதில் வழங்கும் வகையில், இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டதைப் போன்று காலவரையறைகளை சரியாக நிர்ணயிக்க முடியாது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தோர் விடயத்தில் ஜனாதிபதி கூடிய அக்கறையுடன் செயற்படுவதாக கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முடிந்தவரை விரைவாகக் காணிகளை விடுவிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும், ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கேப்பாப்பிலவில் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

படையினரிடம் இருந்து காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

இதனடிப்படையில், மூன்று மாதத்திற்குள் கேப்பாப்பிலவில் மக்களின் காணிகளை விடுவிக்க முடியும் என நம்புவதாக மீள்குடியேற்ற அமைச்சு நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தது.

 

http://newsfirst.lk/tamil/2017/08/மூன்று-மாதத்திற்குள்-கேப/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.