Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானப் படைத்தளத்தில் விமானம் வீழ்ந்து நொருங்கியது

Featured Replies

சற்று நேரத்திற்கு முன் அனுராதபுரம் விமானப்படையினரின் தளத்துள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. இருவர் மரணித்துள்ளதாக இராணுவ பேச்சாளன் அறிவித்துள்ளார்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்டுகின்றது.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Good news -- Source please!!!

  • தொடங்கியவர்

பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானமே வீழ்ந்து நொருங்கியுள்ளது. இராணுவ விமான ஓட்டிப் பயிற்றுவிப்பாளனும் விமானமோட்டியுமே மரணமடைந்துள்ளார்கள்.

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று நேரத்திற்கு முன் அனுராதபுரம் விமானப்படையினரின் தளத்துள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. இருவர் மரணித்துள்ளதாக இராணுவ பேச்சாளன் அறிவித்துள்ளார்.

மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்டுகின்றது.

ஈழத்திலிருந்து

ஜானா

Air force training aircraft crashes in northern Sri Lankan, killing 2, military says

The Associated PressPublished: March 1, 2007

COLOMBO, Sri Lanka: An air force training aircraft crashed in northern Sri Lanka Thursday, killing the instructor and trainee pilot, the military said.

The two-seater plane crashed in northern Anuradhapura district, said Lt. Col. Upali Rajapakse, a senior official at the defense ministry.

He said the cause of the crash was not immediately known.

"It could be due to an engine failure," he said.

http://www.iht.com/articles/ap/2007/03/01/...Plane-Crash.php

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது விழுந்துநொருங்கியதோ அல்லது எங்கயாவதுஅடிவாங்கியதோஎதுஎப

[வியாழக்கிழமை, 1 மார்ச் 2007, 14:30 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்கா விமானப் படையின் PT-06 ரக பயிற்சி விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதன் பயிற்சியாளரும் பயிற்சி பெற்ற விமானியும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

அனுராதபுர விமானப் படைத்தளத்தில் இன்று வியாழக்கிழமை மதியம் 12.10 மணியளவில் வீழ்ந்து நொருங்கியதிலேயே இவ்விருவரும் கொல்லப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா விமானப்படையினர் PT-06, செஸ்னா மற்றும் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட K-08 ஆகிய பயிற்சி விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- from Puthinam.com

அப்பாவி பொதுமக்களை கொன்றோமென்ற அவமானத்தில்

வானிலிருந்து வீழ்ந்து தெற்கொலை செய்துகொண்ட

அந்த விமானத்துக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் :rolleyes::rolleyes::unsure:

விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று அநுராதபுரம் விமானப் படைத் தளத்தில் வீழ்ந்து நொருங்கியது.

அநுராத புரம் விமான படைத்தளத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த PT-6 ரக விமானமொன்று இன்று வியாழன் மதியம் 12.15 மணியளவில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.

இவ் விமானத்தில் பயிற்சியினை மேற்கொண்டிருந்த விமானப்படை வீரரும் அவரின் பயிற்றுவிப்பாளரும் விபத்தில் பலியாகியுள்ளனர் .

இவ் விபத்து இயந்திரக் கோளாறு காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக விமானப்படையினர் உறுதி செய்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற் கொள்ளப்படுவதாக இராணுவப் பேச்சாளர் எமது செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார்.

-Virakesari-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளுடன் போரிட முடியாது - சிங்கள விமானி விமானத்துடன் விழுந்து தற்கொலை.

வியாழக்கிழமை 1 மார்ச் 2007 லக்ஸ்மன்

அநுராதபுரம் (அஞ்சாதபுரம்) சிங்கள விமான படைத்தளத்தில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பரி-6 ரக விமானமொன்று இன்று வியாழன் மதியம் 12.15 மணியளவில் விமானியின் தற்கொலை முயற்சியால் வீழ்ந்து நொருங்கியுள்ளது. இவ் விமானத்தில் பயிற்சியினை மேற்கொண்டிருந்த விமானப்படை சிங்கள வீரரும் அவரின் பயிற்றுவிப்பாளரும் பலியாகியுள்ளனர். விடுதலைப் புலிகளுடன் போரிட அஞ்சிய விமானி தனது சகாவுடன் தற்கொலை செய்துள்ளதாக விமானப்படையினர் உறுதி செய்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது .இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற் கொள்ளப்படுவதாக இராணுவப் பேச்சாளர் எமது செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார்.

post-2709-1172746505_thumb.jpg

SLAF PT6 training aircraft

நன்றி : நிதர்சனம்

Edited by Janarthanan

* இருவர் பலி; பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை சம்பவம்

விமானப் படையினரின் பயிற்சி விமானமொன்று நேற்று வியாழக்கிழமை நண்பகல் அநுராதபுரம் விமானப் படைத் தளத்தில் வீழ்ந்து நொருங்கியதில் அதிலிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

விமானப் படை விமானிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பி.ரி.-6 ரக பயிற்சி விமானமே நண்பகல் 12.10 மணியளவில் விமானப் படைத் தளத்தில் வீழ்ந்து நொருங்கியுள்ளது.

இரட்டை ஆசனத்தைக் கொண்ட இந்த பயிற்சி விமானத்தில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானியும் அவரது பயிற்சியாளருமே கொல்லப்பட்டவர்களாவர்.

இந்த விமானம் வீழ்ந்து நொருங்கியதற்கான காரணமென்ன என்பது குறித்து உடனடியாகத் தெரிய வராத போதும் இயந்திரக் கோளாறு காரணமாகவே விமானம் வீழ்ந்து நொருங்கியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த லெப்.கேணல் உபாலி ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேநேரம் இந்த விபத்துக்கு இயந்திரக் கோளாறா அல்லது விமானியின் தவறா காரணமெனத் தெரியவில்லையென விமானப்படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அஜந்த சில்வா தெரிவித்தார்.

உயிரிழந்த இருவரதும் சடலங்கள் பின்னர் மீட்கப்பட்டு அநுராதபுரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.thinakkural.com/news/2007/3/2/i...s_page22488.htm

இதைப்பார்த்தால் சீனா இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது பயன்படுத்திய விமானம் போல இருக்கிறதே? மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த விமானம் சிறீ லங்கா அரசுக்கு இனாமாகக் கொடுக்கப்பட்டுள்ளது போல் இருக்கிறது. மகிந்து இப்போது சீனாவில் நிற்கிது. விரைவில் சீனா இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தி பாவிக்காது எஞ்சியுள்ள மிகுதி ஆயதங்களை சிறீ லங்காவுக்கு நல்லெண்ண அடிபடையில் சங்சொங் போர்க்கப்பலில் அனுப்பிவைக்கும் என எதிர்பார்க்கலாம்! :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.