Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20-யில் டிவைன் ஸ்மித் 7000 ரன்கள்; பொலார்ட், டேரன் சமி காட்டடி தர்பார்: கரீபியன் பிரிமியர் லீக் துளிகள்

Featured Replies

டி20-யில் டிவைன் ஸ்மித் 7000 ரன்கள்; பொலார்ட், டேரன் சமி காட்டடி தர்பார்: கரீபியன் பிரிமியர் லீக் துளிகள்

 

 
pollard

35 பந்துகளில் 83 ரன்கள் விளாசிய கெய்ரன் பொலார்ட்.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி வீரர் டிவைன் ஸ்மித் டி20 கிரிக்கெட்டில் 7,000 ரன்களைக் கடந்தார், பொலார்ட் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாச எதிரணியினரான செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி தோல்வி கண்டது.

முதலில் பேட் செய்த பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுக்க, செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி 15.2 ஓவர்களில் 129/6 ரன்களையே எடுக்க முடிந்தது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பார்படாஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

லூசியா ஸ்டார்ஸ் அணி ஜெசி ரைடரை இழந்த போது 8.5 ஓவர்களில் 64/6 என்று இருந்தது, ஆனால் கேப்டன் டேரன் சமி கன்னாபின்னாவென்று அடித்து நொறுக்கி 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 60 ரன்களையும் மேயர்ஸ் 8 ரன்களையும் எடுக்க ஸ்கோர் மேலும் விக்கெட் இழக்காமல் 129/6 என்று வந்தது. ஒருவேளை ஆட்டம் 20 ஓவர்கள் நடைபெற்றிருந்தால் டேரன் சமி இலக்கை எட்ட முயற்சி செய்திருந்தாலும் செய்திருப்பார்.

முன்னதாக, கெய்ரன் பொலார்ட், 32 பந்துகளில் 63 ரன்கள் விளாசிய ஜமைக்கா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு அடுத்த இந்த ஆட்டத்தில் 35 பந்துகளில் 83 ரன்கள் என்று அடித்து நொறுக்கினார். இதில் 5 பவுண்டரிகள் 6 மிகப்பெரிய சிக்சர்கள் அடங்கும்.

ஸ்மித் 7,000 ரன்கள்:

டிவைன் ஸ்மித் டி20 கிரிக்கெட்டில் 7,000 ரன்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளார், பார்படாஸுக்காக அவர் தொடக்கத்தில் நேற்று கேன் வில்லியம்சுடன் இறங்கினார். இருவரும் இணைந்து பவர் பிளேயில் 42 ரன்களையும் 9 ஓவர்களில் 72 ரன்களையும் சேர்த்தனர், கைல் மேயர்ஸை நேர் சிக்ஸ் அடித்த ஸ்மித், பாயிண்டில் மேலும் ஒரு பவுண்டரி விளாசினார். இந்நிலையில் புல்ஷாட் சிக்ஸ் மற்றும் கட் ஷாட் பவுண்டரிகளில் 7,000 ரன்களைக் கடந்தார். டி20-யில் 7,000 ரன் மைல்கல்லை எட்டிய 7-வது வீரர் ஆவார் டிவைன் ஸ்மித். கிறிஸ் கெய்ல், மெக்கல்லம், வார்னர், ஹாட்ஜ், பொலார்ட் ஆகியோர் உள்ளனர். வில்லியம்சன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், ஸ்மித் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்களில் வீழ்ந்தார்.

பொலார்ட் அதிரடி:

மேயர்ஸ் ஹேட்ரிக் பந்தை எதிர்கொள்ள களமிறங்கிய பொலார்ட் ஹூக் ஷாட்டுடன் தொடங்கினார், அதன் பிறகு அடிதான். ஆஃப் ஸ்பின்னர் ஷேன் ஷில்லிங்போர்டை 3 சிக்சர்கள் விளாசினார். வேகப்பந்து வீச்சிலும் அசத்தினார் பொலார்ட், குறிப்பாக ஜெரோம் டெய்லரின் 8 பந்துகளில் 36 ரன்களை அடித்து நொறுக்கினார் பொலார்ட். இதனையடுத்து 14 ஓவர்களில் 96/3 என்ற நிலையிலிருந்து கடைசி 6 ஓவர்களில் பாரபடாஸ் 100 ரன்களை விளாசி 196 என்று அதிகபட்ச ஸ்கோரை எட்டியது. கடைசி ஓவரில் 28 ரன்கள் விளாசப்பட சிபிஎல் கிரிக்கெட்டில் பார்படாஸ் அணி அதிகபட்ச ஸ்கோரை எட்டியது.

ஸ்டார்ஸ் அணியில் டேரன் சமி 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 60 நாட் அவுட். பார்படாஸ் அணியில் தென் ஆப்பிரிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளை 28 ரன்களுக்குக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக கெய்ரன் பொலார்ட் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article19474386.ece

  • தொடங்கியவர்

கரீபியன் டி20 லீக், கவுண்டி போட்டியில் விளையாடும் வீரர்களை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்

 

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமீயர் லீக் மற்றும் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டிகளில் விளையாடும் வீரர்களை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.

 
கரீபியன் டி20 லீக், கவுண்டி போட்டியில் விளையாடும் வீரர்களை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்
 
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் மத்திய ஒப்பந்தம் செய்துள்ள வீரர்கள் மற்றும் ஒப்பந்தம் செய்யப்படாத வீரர்கள் என மொத்தம் 13 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியோடு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் கரீபியன் டி20 கிரிக்கெட் தொடரிலும், இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி போட்டியிலும் விளையாடி வருகிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி முதல் செப்டம்பர் 9-ந்தேதி வரை கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் ஒப்பந்தத்தில் உள்ள 7 வீரர்களும், ஒப்பந்தம் செய்யப்படாத கம்ரான் அக்மல், சோகைல் தன்வீர் மற்றும் மொகமது ஷமி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

201708122003117369_1_4-amir-s._L_styvpf.

இவர்கள் அனைவரும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான நேஷனல் டி20 கோப்பை-க்கு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இவர்கள் ராவல் பிண்டி, பைசாலாபாத் மற்றும் லாகூர் ஒயிட் ஆகிய அணிகளில் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து கவுண்டி அணியில் மொகமது ஆமிர், சர்பிராஸ் அகமது, பகர் சமான் ஆகியோர் விளையாடுகிறார்கள். இவர்களையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்ப அழைத்துள்ளது.

பாகிஸ்தான் அணி உலக லெவன் அணிக்கெதிராக டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காகத்தான் வீரர்கள் உள்ளூர் தொடரில் விளையாடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/12200311/1102065/PCB-recalls-13-players-from-CPL-and-English-county.vpf

  • தொடங்கியவர்

கரீபியன் பிரிமியர் லீக்.. கெய்லாக மாறி கதறவிட்ட சுனில் நரைன்: முதலிடத்தில் டிரின்பாகோ

மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சுனில் நரைனின் அதிரடி ஆட்டத்தால், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று மேற்கிந்திய தீவில் கரீபியன் பிரிமியர் லீக் தொடர் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

அதே போன்று இந்தாண்டிற்கான தொடர் கடந்த 4-ஆம் திகதி துவங்கியது.

இத்தொடரின் 11-வது போட்டியில் Trinbago Knight Riders அணியும் Barbados Tridents அணியும் மோதின.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

முதலில் துடுப்பெடுத்தாடிய Barbados Tridents அணிக்கு சோயிப் மாலிக் மற்றும் வில்லியம்சன் தவிர மற்ற வீரர்கள் சொதப்ப, அந்தணி நிர்ணயிக்கப்பட்ட 20-ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்தது.

Barbados Tridents அணி சார்பில் அதிகபட்சமாக சோயிப் மாலிக் அரைசதம் கடந்து 51 ஓட்டங்களும், கானே வில்லியம்சன் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.

Trinbago Knight Riders அணி சார்பில் டேவைன் பிராவோ மற்றும் பீட்டன் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

இதையடுத்து 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய Trinbago Knight Riders அணிக்கு துவக்க வீரர்களாக சுனில் நரைன்-பிராண்டன் மேக்குல்லம் களமிறங்கினர்.

எப்போது அதிரடியை காட்டும் மேக்குல்லம் 4 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்தடுத்து வந்த வீரர்களான முன்ரோ, ராம்தின், சதாப் கான் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

இருப்பினும் ஒன் மேன் ஆர் மி போல் துவக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் வானவேடிக்கை நிகழ்த்தினார். இதனால் அணியின் எண்ணிக்கையும் சீரான விகிதத்தில் எகிறியது.

எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவரின் ஆட்டம் பார்ப்பதற்கு கெய்லின் அதிரடி போல் இருந்தது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

Trinbago Knight Riders அணி தோற்று விடும் என்று எதிர்பார்த்த போது, தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் சுனில் நரைன் வெற்றி பெற வைத்தார். இவர் 45 பந்துகள் சந்தித்து 79 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரிகள் 5 சிக்ஸ்ர் அடங்கும்.

இந்த வெற்றியின் மூலம் Trinbago Knight Riders அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த படியாக St Kitts and Nevis Patriots அணியும், மூன்றாவது இடத்தில் Barbados Tridents அணியும் உள்ளன.

http://news.lankasri.com/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சென் லூசிய ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களைப் பெற்று (45 பந்துகள் - 34_20e3.png4⃣274c.png39_20e3.png9⃣ &36_20e3.png6⃣274c.png33_20e3.png3⃣) ஜமெய்க்கா தல்லாவாஸ் அணியை வெற்றி பெறச் செய்த சங்காவுக்கு #வாழ்த்துக்கள்
புகைப்பட மூலம் - cplt20

21015794_1114657235331687_74785683423439

 

  • தொடங்கியவர்

CPL17 Highlights M22: St. Kitts and Nevis Patriots v Trinbago Knight Riders

 

 

CPL17 Highlights M24: Jamaica Tallawahs v Trinbago Knight Riders

 

 

 

  • தொடங்கியவர்

 

 

Hero CPL 2017 Match Highlights - Match 25 - Barbados Tridents vs Guyana Amazon Warriors

  • தொடங்கியவர்

CPL 2017 Highlights - Match 27 - Barbados Tridents vs St Lucia Stars | Caribbean Premier League 2017

  • தொடங்கியவர்

 

Hero CPL 2017 Match Highlights - Match 28 - Jamaica Tallawahs vs Guyana Amazon Warriors

  • தொடங்கியவர்

 

CPL 2017 Highlights - Match 29 - Barbados Tridents vs Trinbago Knight Riders | Hero CPL T20 2017

  • தொடங்கியவர்

 

CPL 2017 Highlights (HD) Match 30 || Barbados Tridents vs St Kitts and Nevis Patriots

 

CPL Live 2017 Qualifier 1 || Trinbago Knight Riders vs St Kitts and Nevis Patriots, Match 31

  • தொடங்கியவர்

 

CPL Live 2017 Eliminator || Jamaica Tallawahs vs Guyana Amazon Warriors (HD), Match 32

  • தொடங்கியவர்

 

Hero CPL 2017 SemiFinal Full Match HD Highlights - Trinbago Knight Riders vs Guyana Amazon Warriors

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.