Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இந்திய ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிராக நாளை 3-வது ஒரு நாள் போட்டி: இந்தியா தொடரை வெல்லுமா?

 

இலங்கை அணிக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள 3-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை வெல்லும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

 
இலங்கைக்கு எதிராக நாளை 3-வது ஒரு நாள் போட்டி: இந்தியா தொடரை வெல்லுமா?
 

பல்லேகலே:

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 டெஸ்டிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி பல்லேகலேவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்தப்போட்டியிலும் வெற்றியை பெற்று இந்திய அணி தொடரை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த ஆட்டத்தில் இந்திய தோல்வியில் இருந்து தப்பி டோனி-புவனேஷ்வர் குமாரின் அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ரோகித்சர்மா, தவான் ஆகியோர் சிறப்பாக ஆடியும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கோட்டைவிட்டனர். 8-வது விக்கெட் ஜோடி சிறப்பாக ஆடி தோல்வியில் இருந்து அணியை காப்பாற்றினார். இதனால் நாளைய ஆட்டத்தில் வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டியது அவசியமான தாகும்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி வெற்றியை நீட்டிக்கும் ஆர்வத்துடன் உள்ளது.

இலங்கை அணிக்கு நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரையும் இழக்காமல் இருக்க வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கடந்த ஆட்டத்தில் தோல்வியை தழுவியது அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததை கோட்டைவிட்டது. 7 விக்கெட்டை எளிதில் கைப்பற்றிய அந்த அணி வீரர்களால் எஞ்சிய 3 விக்கெட்டை எடுக்க முடியாமல் போனது ஏமாற்றமே.

தடை காரணமாக இலங்கை கேப்டன் தரங்கா மற்றும் குணதிலகா ஆகியோர் ஆடவில்லை. அவர்களுக்கு பதிலாக சன்டிமால், திரிமானே அழைக்கப்பட்டுள்ளனர். கபுகேத்தரா கேப்டனாக செயல்படுவார்.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, ராகுல், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, டோனி, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், ரகானே, பும்ரா, யதவேந்திர சஹல், மனிஷ்பாண்டே, ஷாகல் தாகூர்.

இலங்கை: கபுகேத்தரா (கேப்டன்), சன்டிமால், திரிமானே, மேத்யூஸ், டிக்வெல்லா, குஷால் மென்டீஸ், மிலின்டா ஸ்ரீவர்த்தனா, புஷ்பக்குமாரா, தனஞ்செயா, சமீரா, ஹசரன்கா, விஷ்வா பெர்னாண்டோ, மலிங்கா, திசரா பெரேரா, சன்டகன்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/26131304/1104511/Srilanka-against-tomorrow-3th-one-day-match-India.vpf

  • தொடங்கியவர்

தொடரை நிர்ணயிக்கும் போட்டி ; முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கும் இலங்கை

 

இலங்கை மற்றும் இந்­திய அணிகள் மோதும் தீர்­மா­ன­மிக்க மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்துள்ளது. 


Local_News_copy.jpg

கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் நடை­பெ­றுகின்ற இப்போட்டியில் இலங்கை அணியினை சாமர கப்­பு­கெ­தர அணி தலைவராக செயற்படவுள்ளார்.

ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரு ஒருநாள் போட்டிகளில் வென்று இந்திய அணி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/23661

  • தொடங்கியவர்

3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றிக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை

பல்லேகலேயில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் போட்டியில் பும்ப்ராவின் அபார பந்து வீச்சால் இந்தியாவின் வெற்றிக்கு 218 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி.

 
3-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றிக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இலங்கை
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் தொடங்கியது. மெதுவாக பந்து வீசியதன் காரணமாக இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தரங்காவிற்குப் பதிலாக கபுகேதரா இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். குணதிலகாவிற்குப் பதிலாக சண்டிமல் இடம்பிடித்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இலங்கை அணி கேப்டன் கபுகேதரா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் டிக்வெல்லா, சண்டிமல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டிக்வெல்லா 13 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆகி வெளியேறினார். அடுத்து வந்த குசால் மெண்டிசை 1 ரன்னில் வெளியேற்றினார் பும்ப்ரா.
201708271851107816_1_crickettwo._L_styvp
3-வது விக்கெட்டுக்கு சண்டிமல் உடன் திரிமன்னே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. சண்டிமல் 36 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இலங்கை 25.4 ஓவரில் 100 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த மேத்யூஸ் 11 ரன்னில் அவுட்டாக, மறுமுனையில் விளையாடிய திரிமன்னே சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய திரிமன்னே 80 ரன்கள் எடுத்த நிலையில் பும்ப்ரா பந்தில் ஆட்டம் இழந்தார். கேப்டன் கபுகேதரா 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.
201708271851107816_2_cricketone._L_styvp
ஸ்ரீவர்தனா (29), தனஞ்ஜெயா (2) ஆகியோரை போல்ட் மூலம் வெளியேற்றினார் பும்ப்ரா. அத்துடன் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றி அசத்தினார். பும்ப்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச இலங்கை அணியால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி. இந்திய அணி சார்பில் பும்ப்ரா 10 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/08/27185109/1104737/INDvSL-3rd-ODI-Sri-Lanka-218-target-to-India-won-Bumrah.vpf

63/4 (15.6/50 ov, target 218)
 
 
  • தொடங்கியவர்

இலங்கை வெல்லுமா ? , இந்தியா வெல்லுமா ? ; வெற்றியிலக்கு 218

 

இலங்கை மற்றும் இந்­திய அணிகள் மோதும் தீர்­மா­ன­மிக்க மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 218 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

267458.jpg

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இரு விக்கெட்டுக்களை 28 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து தடுமாறியது.

267454.jpg

ஆரம்ப வீரராக களமிறங்கிய டிக்வெல்ல 13 ஓட்டங்களுடனும், அதன்பின்னர் களமிறங்கிய குசால் மென்டீஸ் ஒரு ஓட்டத்துடன் களத்தினை விட்டு வெளியேறி இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

267457.jpg

மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த சந்திமால் மற்றும் லஹிரு திரிமான ஜோடி நிதமனாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர்.இந்திய அணி வீரரான பாண்டியா வீசிய 26 ஆவது ஓவரில் 36 ஓட்டங்கள் பெற்றிருந்த சந்திமால் பும்ராவிடம் பிடிகொடுத்து ஆடுக்களத்தினை விட்டு வெளியேறினார்.

267448.jpg

அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் பெரிதாக தனது ஆட்டத்தினை வெளிப்படுத்தாமையால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 217 ஓட்டங்களை பெற்றனர். இலங்கை அணி சார்பாக நிதானமாக துடுப்பெடுத்தாடிய லஹிரு திரிமான 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

267445.jpg

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 
267443.jpg

 

 
158/4 (34.2/50 ov, target 218)
 
 

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

இலங்கை ­- இந்தியா தீர்மானமிக்க போட்டி ; ரசிகர்கள் கொந்தளிப்பு ; மைதானத்தில் பரபரப்பு

 

 

இலங்கை மற்றும் இந்­திய அணிகள் மோதும் தீர்­மா­ன­மிக்க மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியுறும் தருவாயில் இருப்பதால் அதை தாங்கிக்கொள்ள இயலாத இலங்கை ரசிகர்கள் மைதானத்திற்கு போத்தல்களை எறிந்து தங்களின் எதிர்ப்பினை காட்டி வருகின்றனர்.

இதனால் குறித்த போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் குறித்த போட்டி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெல்லுவதற்கு இன்னும் 8 ஓட்டங்களே மீதமுள்ள நிலையில் ரசிகர்களின் செயலால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/23673

 

 

இலங்கையை துரத்தும் துரதிஷ்ட்டம்

 

உபாதை காரணமாக தினேஸ் சந்திமாலுக்கு இந்தியாவுக்கு எதிராக இடம்பெறவுள்ள அடுத்த இரு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற போட்டியின் போது விரலில் பந்து தாக்கியதன் காரணமாக இந்த உபாதை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/23672

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா

 

Daily_News_2017_2994304895402.jpg

பல்லேகேலே: ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியது இந்தியா. இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கண்டியில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். பும்ராவின் வேகத்தில் இலங்கை அணி தினறியது. இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது.

இலங்கை அணியில் அதிகப்பட்சமாக லஹிரு திரிமன்னெ 80 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக ரோஹித் சர்மா 124 ரன்களும், தோனி 67 ரன்களும் எடுத்துள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=330634

  • தொடங்கியவர்

தொடரை தன்வசமாக்கிய இந்தியா

 

 

இந்தியா-இலங்கை இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரினை கைப்பற்றியது.

DIQJQ_XVAAA0EOE.jpg

கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று பகலிரவு போட்டியாக இடம்பெற்றது.

DIQGdIXW0AAPeAZ.jpg

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக திரிமான 80 ஓட்டங்களையும், இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.

DIQO1FzVoAACVhs.jpg

இதையடுத்து 218 என்ற வெற்றியிலக்கிகை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 218 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

DIQNMgiV4AEtWxg.jpg

இதில், தொடக்க வீரார் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி 124 ஓட்டங்களை பெற்றார். போட்டியின் ஆட்டநாயகனாக பும்ரா தெரிவு செய்யப்பட்டார்.

267473.jpg

குறித்த போட்டியில் இலங்கை அணி தோல்வியடைய போவதை அறிந்த இலங்கை அணி ரசிகர்கள் தண்ணீர் போத்தல்களை கொண்டு மைதானத்திற்கு தூக்கியெறிந்தமையால் போட்டி சற்று நேரம் தடைப்பட்டிருந்தது.

267471.jpg

மைதானத்திற்கு கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பின்னர் ரசிகர்கள் மைதானத்தினை விட்டு வெளியேற்றிய பின் போட்டி திரும்பி நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

DIQSeJoXYAQMAeM.jpg

DIQSGhGXkAUCwHM.jpg

267485.jpg

267483.jpg

 

http://www.virakesari.lk/article/23674

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் அணியை துரத்தும் சாபம் :  4 ஆவது போட்டிக்கு யார் தலைவர் ?

 

இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் உபாதை காரணமாக அணித் தலைவராக கடமையாற்றும் சாமர கப்புகெதர விளையாடமாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

kapugadara.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றது.

இதில் முதல் 3 போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை 3-0 என கைப்பற்றியுள்ள நிலையில் எதிர்வரும் 31 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த போட்டிக்கு அணித்தலைவராக செயற்படவிருந்த சாமர கப்புகெதர உபாதை காரணமாக விளையாட மாட்டரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த அணித்தலைவர் யாரென்பதில் பலத்த சிக்கல் நிலவியுள்ளது.

இந்திய அணிக்கெதிரான தொடரில் ஹேரத், சந்திமல், தரங்க, கப்புகெதர ஆகியோர் இலங்கை அணியை வழிநடத்தியுள்ள நிலையில் அடுத்த அணித் தலைவர் யார் ? என்பதை பார்ப்போம்.....

http://www.virakesari.lk/article/23730

  • தொடங்கியவர்

தலைவராக லசித் மாலிங்க நியமனம்

 

 

இலங்கை கிரிக்கெட் அணியின்  தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இந்திய அணிக்கெதிராக இடம்பெறவுள்ள 4 ஆவது ஒருநாள் போட்டிக்கே லசித் மாலிங்க அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று  3-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23740

  • தொடங்கியவர்

இந்திய அணியை தோற்கடிக்க இளம் சிங்கங்களுடன் வியூகம் அமைக்கும் மாலிங்கவின் நோக்கம் 

 

 

அழுத்தம் என்பது பெரிய விடயமல்ல. இளம் வீரர்களின் மனநிலையை சீர்செய்து அடுத்த இருபோட்களிலும் வெல்வதே எனது நோக்கம் என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் லசித் மாலிங்க தெரிவித்தார்.

malinga.jpg

இந்திய அணிக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் தொடர் நாளை கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே மாலிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஐ.பி.எல். போட்டிகளில் 3-5 வருடம் விளையாடியுள்ளேன். எனவே இந்திய வீரர்கள் எனது பந்துவீச்சு நுட்பங்களை சரியான முறையில் கற்றுள்ளனர். இருந்தாலும் நான் எதிர்காலத்தில் பந்துவீச்சு நுட்பங்களை மாற்றியமைந்து விளையாட நினைத்துள்ளேன்.

இப் போட்டி எனக்கு சவாலாக இருக்கும். எமது அணியில் திறமையான மற்றும் அனுபவமுள்ள இளம் வீரர்கள் உள்ளனர். தேசிய அணிக்காக நான் கடந்த 14 வருடங்களாக விளையாடி வருகின்றேன். இம்முறை இளம் வீரர்களை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். கடந்த போட்டிகளில் நாம் தோல்வியடைந்துள்ளோம். 

 

கடந்த 19 மாதங்களாக முழங்களால் உபாதை காரணமாக போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. தற்போது நான் பூரண குணமடைந்துள்ளேன். என்னால் இப்போது 10 ஓவர்கள் எவ்வித தடையுமில்லாது பந்துவீச முடிகின்றது. 

அந்தவகையில் நாம் அடுத்த இரு போட்டிகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். நான் தற்போது 299 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளேன். அது குறித்து நான் பெருமையடைகின்றேன். எனது நாட்டுக்காக எதையாவது சாதிக்கத் துடிக்கின்றேன்.

தெரிவுக்குழுவில் சனத் இருக்கும் போது கடந்த 2014 ஆம் ஆண்டு எனக்கு தலைமைப்பொறுப்பு கொடுக்கப்பட்டது நான் அதனை சரியாக செய்து அணியை வெற்றிபெறச் செய்தேன்.

அந்தவகையில் தற்போதும் தெரிவுக்குழுவில் சனத் இருக்கும் போது எனக்கு தலைமைப்பொறுப்பு கிடைத்துள்ளது. எனது தலைமையில் இளம் இலங்கை அணியை வழிநடத்தி அடுத்த இரு போட்டிகளையும் வெற்றிபெறச்செய்வேன்.

கடந்த காலத்தில் எமது அணியில் பல அனுபவ வீரர்கள் இருந்தனர். இப்போது நல்ல திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் இலங்கையின் எதிர்கால வீரர்கள்.

சந்திமல் மற்றும் கப்புகெதர ஆகியோர் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாத நிலையேற்பட்டுள்ளது. கப்புகெதரவுக்கு பதிலாக டில்சசான் முனவீர அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். நாளைய களநிலைமைகளின் அடிப்படையில் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.

கடந்த போட்டிகளில் யார் தலைமைப் பொறுப்பையேற்று வழிநடத்தினார்கள் என்பது பற்றி ஆராய்ந்து பார்க்கள் நான் விரும்பவில்லை. அது நிறைவடைந்துவிட்டது. எனக்கு கொடுத்துள்ள பொறுப்பு அடுத்த இருபோட்டியிலும் இலங்கை அணியை வழிநடத்தும் படி. நான் இளம் வீரர்களுக்கு எனது அனுபவத்தை பகிர்ந்து அவர்களுடன் பேசி மனநிலையை சீர்செய்து கிரிக்கெட் விளையாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்லவே நான் எதிர்பார்த்துள்ளேன்.

வீரர்களின் மனநிலையை புரிந்து அதை முதலில் சீர்செய்துகெள்ள எதிர்பார்க்கின்றேன். அது சரியாகும் பட்சத்தில் நல்ல பெறுபேறுகளை பெறமுடியும் என எண்ணுகின்றேன்.

அழுத்தும் என்பது எனக்கு பெரிய விடயமாக கருதவில்லை. இதைவிட மிகவும் மோசமான அழுத்தங்களின் போது போட்டிகளில் விளையாடி பந்து வீசியுள்ளேன். 

எனது அணி வீரர்களுடன் பேசி அவர்களது மனநிலையை திடமாக்கி அழுத்தங்களை இல்லாமல் செய்வதே எனது தலைமைப்பொறுப்பின் முக்கிய நோக்கம். அழுத்தத்தை மறந்து நாம் பதினொருவரும் விளையாடும் போது நல்ல பிரதிபலனை அடையமுடியும்.

கடந்த போட்டிகளில் என்னால் விக்கெட்டுகளை பெறமுடியாது போனது. எனக்கு 300 விக்கெட்டுகளை கைப்பற்றுவது என்பது குறிக்கோள் அல்ல. நல்லமுறையில் பந்துவீசி அணியை வெற்றிப்பாதைக்கு  வழிநடத்துவதே தற்போதைய குறிக்கோள். பந்தை நன்றாக வீசும் போது விக்கெட்டை கைப்பற்ற முடியுமென நினைக்கின்றேன். 

தற்போது பல பிரச்சினைகள்  வெளிக்கிழம்பியுள்ளன. வீரர்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையில் எவ்வித பிளவுகளுமில்லை. நாம் முகாமைத்துவத்துடன் நல்ல மனநிலையில் உள்ளோம். எதிர்வரும் போட்டிகளில் திறமையாக செயல்பட்டு வெற்றிபெறுவதே எமது இலக்கு என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

http://www.virakesari.lk/article/23776

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

 

 

இலங்கை அணிக்கெதிரான  4 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

cricket-srilanka.jpg

http://www.virakesari.lk/article/23818

11/1

  • தொடங்கியவர்

டோனிக்கு விசேட போட்டி ; மாலிங்கவுக்கு 300 விக்கெட் மைல்கல்

 

 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி இலங்கை அணி வீரர் மாலிங்கவுக்கு 300 விக்கெட் என்ற மைல்கல்லை கடக்கும் போட்டியாகவும்  இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனியில் 300 ஆவது போட்டியாகவும் அமைந்துள்ளது.

lasith-malinga.jpg

இலங்கை அணிக்கெதிரான  4  ஆவது ஒருநாள் போட்டி, கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

DIi3vMXV4AAr9vd.jpg

இலங்கை அணியில் டில்சான் முனவீரவும் மிலிந்த புஷ்பகுமாரவும் தமது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர். அத்துடன் வனிது ஹசரங்கவும் இந்திய அணிக்கெதிரான போட்டியில் விளையாடுகின்றனர்.

DIi4KgyVoAAwp6Z.jpg

இந்திய அணி சார்பாக புதுமுக வீரர் சார்துல் தாகூர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

DIi7pP5WsAACDdv.jpg

இன்றைய போட்டி லசித் மாலிங்கவுக்கு முக்கியமானதொரு போட்டியாக அமைந்துள்ளது. அவர்  ஒருநாள் போட்டிகளில் 299 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவர் இப் போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தும் பட்சத்தில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

DIi7pQBXUAEm0e0.jpg

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றார்.

DIi7pQDXkAAche2.jpg

1000 பொலிஸார் பாதுகாப்பு கடடைமயிலீடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சி.சி.ரி. கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்குடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் கடும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/23821

  • தொடங்கியவர்

76 பந்துகளில் சதமடித்தார் கோலி: இலங்கைப் பந்து வீச்சுக் கிழிப்பு

 

 
dhawan
kohlijpg

கொழும்புவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் தவண் விக்கெட்டுக்குப் பிறகு இலங்கைப் பந்து வீச்சு கோலி, ரோஹித் சர்மா இருவரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது.

டாஸ் வென்று பேட் செய்ய முடிவெடுத்த விராட் கோலி, தவன் விக்கெட்டுக்குப் பிறகு இறங்கியது முதல் அனாயசமான பவுண்டரிகளை துச்சமாக அடித்து விளாசி 76 பந்துகளில் 13 பவுண்டரிகள் 1 சிக்சருடன் சதம் கண்டார், தற்போது 80 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 109 ரன்கள் என்று ஆடி வருகிறார். கோலி அடிக்கும் 29-வது ஒருநாள் சதமாகும் இது.

இவருடன் ரோஹித்சர்மா 67 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 78 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். இந்திய அணி 26-வது ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் கோலி, ரோஹித் சர்மா கூட்டணி 24.2 ஓவர்களில் 2-வது விக்கெட்டுக்காக 194 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

இடது கை வேகப்பந்து வீச்சாளர் பெர்ணாண்டோவை முதலில் ஒரு ராஜகவர் டிரைவ் பிறகு சக்தி வாய்ந்த மிட் ஆஃப் டிரைவ், அதன் பிறகு நகர்ந்து கொண்டு லெக் திசையில் சக்தி வாய்ந்த பிளிக் என்று 3 பவுண்டரிகளுடன் தொடங்கினார் கோலி. பிறகு பெர்ணாண்டோவை அடுத்த ஓவரிலும் மிட் ஆஃபில் புல்லட் ஷாட் ஒன்றை பவுண்டரிக்கு விரட்டி மீண்டும் ஆஃப் திசையில் நகர்ந்து கொண்டு லெக் திசையில் மணிக்கட்டு பிளிக் ஒன்றை பவுண்டரிக்கு விரட்டினார்.

புஷ்பகுமாரா பந்து வீச வந்தவுடன் நடுவர் உடல் தப்பிய நேர் பவுண்டரி ஒன்றையும், பிறகு குசால் மெண்டிஸ் மிஸ் பீல்ட் செய்ய பந்து கவர் பவுண்டரிக்கும் பறந்தது. மலிங்கா ஆப் கட்டராக வீசியவர் திடீரென ஒரு பவுன்சரை வீச அதனை முறையாக பவுண்டரிக்கு அனுப்பினார் கோலி. 11வது ஓவரில் கோலி 38 பந்துகளில் அரைசதம் கண்டார், இதே 38 பந்துகளில் இன்னொரு 50 ரன்களை எடுத்து 76 பந்துகளில் சதம் கண்டார் விராட் கோலி.

முன்னதாக... டாஸ் , அணி விவரம்:

கொழும்புவில் நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது.

ரோஹித் சர்மா 3 ரன்களுடனும், கோலி 15 ரன்னுடனும் ஆடுகின்றனர். 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது.

தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் களம் கண்டுள்ளார், இன்னும் ஒரு ஸ்டம்பிங் செய்தால் 100 ஸ்டம்பிங்குகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.

ஒரு பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவண், பெர்னாண்டோ வீசிய பந்து சற்றே லேட் ஸ்விங் ஆக தவண் அதனை பாயிண்டில் ஒரு சுழற்று சுழற்றினார், ஆனால் பந்து டீப் தேர்ட்மேனுக்கு வேகமாகப் பறந்து சென்றது, அங்கு புஷ்பகுமாரா அருமையான கேட்ச் எடுத்தார்.

இந்திய அணி வருமாறு:

ரோஹித் சர்மா, ஷிகர் தவண், விராட் கோலி, ராகுல், மணீஷ் பாண்டே, தோனி, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷர்துல் தாக்குர்.

இலங்கை அணி:

மலிங்கா (கேப்டன்), பெர்னாண்டோ, டிக்வெல்லா, முனவீரா, மெண்டிஸ், திரிமானே, மேத்யூஸ், சிறிவதனா, டிசில்வா, தனஞ்ஜயா, புஷ்பகுமாரா

http://tamil.thehindu.com/sports/article19593443.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

4-வது ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்திய அணி 375 ரன்கள் குவித்தது.

 
 
4-வது ஒருநாள் போட்டி: இலங்கைக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி
 
கொழும்பு:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் நீக்கப்பட்டு மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஷர்துல் தாகூருக்கு இதுதான் முதல் சர்வதேச போட்டியாகும்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் களமிறங்கினர். இலங்கை வீரர் வீசிய இரண்டாவது ஓவரிலேயே தவான் 6 ரன்னில் ஆட்டமிழக்க ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

201708311931441856_1_VKRSH._L_styvpf.jpg

அடுத்து களமிறங்கிய விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். முதலில் அதிரடியாக ஆடிய விராட் கோலி 96 பந்துகளில் 2 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகள் அடித்து 131 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ரோகித் சர்மா 88 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடித்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து 219 ரன்கள் குவித்தனர்.

அதன்பின்னர் களமிறங்கிய பாண்டியா, ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் டோனி 49, மணீஷ் பாண்டே 50 ரன்கள் எடுக்க முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்தது.

இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 2 விக்கெட்டும், மலிங்கா, பெர்னான்டோ, தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் எடுத்தனர். இதை தொடர்ந்து, இலங்கை அணியினர் 376 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வருகின்றனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/31193138/1105554/4th-ODI-srilanka-needs-376-runs-to-win.vpf

104/4 (22.6/50 ov, target 376)
  • தொடங்கியவர்

இலங்கை மண்ணில் இந்தியா அபார வெற்றி

 

 

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினை 168 ஓட்டங்களால் இந்தியா அணி வீழ்த்தி அபார வெற்றியை பெற்று கொண்டது.

267651.jpg

பகலிரவு போட்டியாக கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற குறித்த போட்டியின் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

267652.jpg

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 375 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

267653.jpg

இந்தியா அணி சார்பாக அதிரடியாக விளையாடிய அணித்தலைவர் கோலி 131 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா 104 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.டோனி 49 ஓட்டங்களையும், பாண்டி 50 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

267656.jpg

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக அஞ்சலோ மெத்தியூஸ் இரண்டு விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டார்.லசித் மாலிங்க , விஷ்வ பிரனாந்து மற்றும் தனஞ்சய ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக்கொண்டனர்.

267678.jpg

இந்நிலையில்,  376 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 42.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

267677.jpg

இலங்கை அணி சார்பாக அதிக பட்ச ஓட்டங்களாக அஞ்சலோ மெத்தியூஸ் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.சிறிவர்தன 39 ஓட்டங்களையும்,வனிந்து ஹசரங்க 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

267674.jpg

இந்திய அணிச்சார்பில் பந்து வீச்சில் பும்ரா ,பாண்டியா மற்றும் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.இதன்படி , ஏற்கனவே இப்போட்டித் தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

267675.jpg

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவுச்செய்யபட்டார்.

http://www.virakesari.lk/article/23838

  • தொடங்கியவர்

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை மற்றும் இந்­திய கிரிக்கெட் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5 ஆவதும் இறு­தி­யு­மான சர்­வ­தேச ஒருநாள் போட்டித் தொடர் இன்று பிற்­பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஆர். பி­ரே­ம­தாச மைதா­னத்தில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

சொந்­த மண்ணில் நடை­பெற்ற இப்­போட்டித் தொடரின் நான்கு போட்­டி­க­ளி­லுமே இலங்கை தோல்வியடைந்ததுடன் இந்­திய அணி நான்கு போட்­டி­க­ளி­லுமே வெற்றி பெற்று 4 க்கு 0 என்ற கணக்கில் முன்­னி­லையில் உள்­ளது.

ஆகவே தொடரின் கடைசிப் போட்­டி­யான இன்றைய ­போட்­டியில் ஆறுதல் வெற்­றியை பெற்றுக்கொள்ள இலங்கை முயற்சிக்கும்.

http://www.virakesari.lk/article/23939

  • தொடங்கியவர்

வைற்வொஷ்ஷா ? ஆறுதல் வெற்றியா ? காலநிலையின் தலையீடா ? : இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது

Published by Priyatharshan on 2017-09-03 14:47:40

 
 

இந்திய அணிக்கெதிரான 5 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 

இரு அணிகளுக்குமிடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப்போட்டியாக இடம்பெறவுள்ளது.

 

 

இந்நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் உபுல் தரங்க இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்துள்ளார்.

 

இரு அணிகளுக்குமிடையிலான  5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி முதல் 4 போட்டிகளில் வெற்றிபெற்று 4-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது.

 

இப்போட்டியில் வெற்றிபெற்றால் இலங்கையை அதன் சொந்த மண்ணில் வைற்வோஷ் செய்துவிடலாம் என்ற முனைப்பில் இந்திய அணி கங்கணம் கட்டிக்கொண்டுள்ளது.

இதேவேளை, தனது சொந்த மண்ணில் இலங்கை அணி சிம்பாப்வே, இந்தியா போன்ற அணிகளிடம் தொடர் தோல்விகளை சந்தித்து, இனியும் அடிவேண்ட முடியாத நிலையில் இன்றைய 5 ஆவது வெற்றியில் ஒரு ஆறுதல் வெற்றியையாவது பெற முடியுமா என்ற கேள்வியுடன் களமிறங்கவுள்ளது.

 

இதேவேளை, தோல்விகளால் நொந்துபோய் உள்ள இலங்கை அணியின் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புக்கும் மத்தியில் இலங்கை அணி இந்த இறுதிப் போட்டியிலாவது வெற்றிபெறாத என்ற ஏக்கத்துடன் உள்ளனர்.

 

இருப்பினும் இரு அணிகளுடைய எதிர்பார்ப்புக்களையும் தவிடுபொடியாக்கும் நிலையில் காலநிலையானது தனது எச்சரிக்கையை விடுத்து வருகின்றது.

எனவே இன்றைய போட்டியில் இந்தியாவா? இலங்கையா? அல்லது காலநிலையா ? தனது அதிக்கத்தை செலுத்தப்போகின்றதென பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.virakesari.lk/article/23945

  • தொடங்கியவர்

இந்தியா வெற்றி பெற 239 ரன்கள் இலக்கு; தோனி புதிய உலக சாதனை !

 

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இன்று கொழும்புவில் நடைபெற்று வரும் ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இந்திய வெற்றி பெற 239 ரன்களை இலங்கை நிர்ணயித்துள்ளது.

ind_18051.jpg

ஏற்கனவே ஒருநாள் தொடரை வென்று விட்ட நிலையில் இன்று இந்தியா தனது ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இலங்கையை கொழும்புவில் சந்தித்தது. டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தது இலங்கை அணி. கேப்டன் தரங்கா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். புதிய வேக பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். எனினும் புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருந்தது. பும்ரா பந்தில் தரங்கா 48 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் மேத்யூஸ் மற்றும் திரிமன்னே ஆகியோர் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் ஆட்டமிழந்த பின்னர் அந்த அணி வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. 

 

அதிகபட்சமாக திரிமன்னே 67 ரன்களும், மேத்யூஸ் 55 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். பும்ரா 2 விக்கெட்டுகளும், சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளும் எடுத்தனர். 
இலங்கையின் தனஞ்செயாவை ஸ்டம்பிங் முறையில் தோனி ஆட்டமிழக்க செய்த போது, அது அவருக்கு 100-வது ஸ்டம்பிங் ஆனது. இது புதிய உலக சாதனை ஆகும். இதற்கு முன்னர் இலங்கையின் சங்ககாரா அதிகபட்சமாக 99 ஸ்டம்பிங் செய்தததே சாதனையாக இருந்தது. இதன் மூலம் முதன் முறையாக 100 ஸ்டம்பிங் செய்த சாதனையை படைத்தார் தோனி.

http://www.vikatan.com/news/sports/101225-target-for-india-is-239-and-dhoni-created-new-record-in-stumping.html

  • தொடங்கியவர்

சொந்த மண்ணில் முதல் முறையாக இலங்கையை வெள்ளையடிப்பு செய்து சாதனை வெற்றி படைத்தது இந்தியா

 

 
 

இலங்கைக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என வெற்றிபெற்று தொடரை வெள்ளையடிப்புச் வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது.

 

முன்னதாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடிப்புச்செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடிப்புச் செய்து இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரேயொரு இருபதுக்கு-20 போட்டியிலும் விளையாடி வருகின்றது.

டெஸ்ட் தொடரை 3-0 என வெள்ளையடிப்புச் செய்த இந்திய அணி, ஒருநாள் தொடரையும் தற்போது வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெற்ற இன்றைய 5 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் திரிமன்னே 67 ஓட்டங்களையும் மெத்தியூஸ் 55 ஓட்டங்களையும் உபுல் தரங்க 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் 42 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 239 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் ஆட்டங்கண்ட போதிலும் அணித் தலைவர் கோலி உறுதியுடன் துடுப்பெடுத்தாடி 110 ஓட்டங்களைப்பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 21 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் 5 ஆவது ஒருநாள் போட்டியை வெற்றிபெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி இலங்கையை அதன் சொந்த மண்ணில் வெள்ளையடிப்புச் செய்துள்ளது.

இத் தொடரின் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா தெரிவுசெய்யப்பட்டார்.

தனது சொந்தமண்ணில் இலங்கையை வேறு நாட்டு அணியொன்று ஒருநாள் போட்டித் தொடரை வெள்ளையடிப்புச் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான ஒரேயொரு இருபதுக்கு-20 போட்டி எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23959

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.