Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தொடர்

Featured Replies

எங்கள் அணியை எங்கள் மண்ணில் வீழ்த்த முடியாது: ஆஸி.க்கு ஷாகிப் அல் ஹசன் சவால்

 

 
shakib%202

இலங்கைக்கு எதிராக சதம் கண்ட ஷாகிப்.   -  படம். | ஏ.பி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் வருகை தரும் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுத்துள்ளார்.

அதாவது தங்கள் நாட்டில் தங்கள் அணி ஏறக்குறைய வீழ்ட்த முடியாத அணியே என்று ஷாகிப் அல் ஹசன் ஆஸ்திரேலியாவைச் சீண்டியுள்ளார்.

தி கார்டியன் இதழில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தப் பயணம் மிக நீண்ட பயணம், நம்ப முடியாத பயணம். வங்கதேசத்தில் கூட நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறுவோம் என்று யாரும் நம்பவில்லை. எங்களிடம் இந்தத் திறமை உள்ளது, இந்த நம்பிக்கையை வெற்றிகளின் மூலமே உருவாக்கியுள்ளோம். இப்போதைக்கு தன்னம்பிக்கையில் குறைவில்லை.

உள்நாட்டில் எங்களை வீழ்த்த முடியாது என்று பலமாக நம்புகிறோம். யார் எதிரணி என்பது பற்றிக் கவலையில்லை. எனவே இந்த ஒரு நம்பிக்கைதான் ஒரு அணியை சிறந்த அணியாக, வெற்றியணியாக உருவாக்குகிறது.

முன்பு வலுவான அணிகளுடன் மோதும்போது டிரா செய்ய வேண்டும் என்ற மனநிலையே பிரதானமாக இருந்தது. அதன் பிறகு வெற்றி பெற முயற்சி செய்வோம் என்று ஆடினோம். இதுதான் எங்களால் எந்த அணியையும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை நிலைபெறச் செய்தது.

மகுராவில் நான் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் ஆடிவந்தேன். அப்போது முதலே தோல்வியை வெறுத்தேன். எனவே நிறைய முறை வெற்றி பெற்றுள்ளேன். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்தையும் விரும்பினேன்.

வங்கதேசத்தில் கிரிக்கெட் ஒரு மதம். நாங்கள் ஆடினால் அனைவரும் டிவி முன் உட்கார்ந்து விடுவார்கள். அப்போதெல்லாம் கிரிக்கெட்டைத் தவிர அவர்களுக்கு வேறு வேலை கிடையாது. இதுதான் எங்கள் வளர்ச்சியிலும் பங்காற்றியது என்றால் மிகையாகாது.

இவ்வாறு கூறினார் ஷாகிப் அல் ஹசன்.

http://tamil.thehindu.com/sports/article19539729.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அடுத்த வாரம் பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரில் மோதும் அவுஸ்திரேலியா

Australia tour to bangladesh
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

பங்களாதேஷிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இம்மாதம் 27 ஆம் திகதி டாக்கா நகரில்  ஆரம்பமாகும் போட்டியுடன் அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

இத்தொடரில் விளையாடுவதற்காக ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியினர், கடந்த வெள்ளிக்கிழமை (18) பங்களாதேஷ் விஜயம் மேற்கொண்டனர்.  

இந்த டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் அணியின் தலைவராக முஷ்பிகுர் ரஹீம் செயற்படவுள்ளார். அதோடு சகல துறை ஆட்டக்காரர் நஸீர் ஹொசைன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சபியுல் இஸ்லாம் ஆகியோர் மீண்டும் பங்களாதேஷ் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் இத்தொடரின் மூலம் விளையாடவுள்ளனர்.   

இந்த சுற்றுப் பயணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் இணைக்கப்பட்டிருக்கும் துடுப்பாட்ட வீரரான  உஸ்மான் கவாஜா தனது வழமையான ஆட்டத்தினை பங்களாதேஷ் உடனான தொடரின் மூலம் மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதியாக, இந்திய அணியுடன் டெஸ்ட் தொடர் ஒன்றில் விளையாடியிருந்த அவுஸ்திரேலிய அணி, அத்தொடரினை  2-1 என பறிகொடுத்திருந்தது. அத்தோல்வியின் காரணமாக, டெஸ்ட் தரவரிசையில் நான்காம் இடத்தில் காணப்படும் அவுஸ்திரேலியவிற்கு மீண்டும் புள்ளிகளை அதிகரித்து முன்னிலை பெற இத்தொடர் வரப்பிரசாதமாக அமையும்.

எனினும் துடிப்பு மிக்க பங்களாதேஷ் அணியானது, தமது சொந்த மண்ணில் வைத்து பலமிக்க இங்கிலாந்து அணியினை கடந்த வருடம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வரலாற்று வெற்றி ஒன்றினைப் பதிவு செய்து இருந்ததுடன், இவ்வருட மார்ச் மாதத்தில் இலங்கை அணிக்கெதிராகவும் டெஸ்ட் போட்டியொன்றில் முதல் தடவையாக வெற்றிபெற்று சாதனை புரிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடரில் பங்கேற்வுள்ள இரு அணிக்களதும் குழாம்

பங்களாதேஷ்

முஷ்பிகுர் ரஹீம் (அணித் தலைவர்), தமிம் இக்பால், செளம்யா சர்க்கர், இம்ருல் கைஸ், சகிப் அல் ஹஸன், மெஹதி ஹஸன் மிராஸ், சப்பீர் ரஹ்மான், நஸீர் ஹொசைன், லில்டன் டாஸ், தஸ்கின் அஹமட், சபியுல் இஸ்லாம், முஸ்தபிசுர் ரஹ்மான், தய்ஜூல் இஸ்லாம், மொமினுல் ஹக்

அவுஸ்திரேலியா

ஸ்டீவ் ஸ்மித் (அணித் தலைவர்), டேவிட் வோர்னர், அஸ்டன் அகார், ஜேக்ஸ்சன் பேர்ட், ஹில்டன் கார்ட்விரைட், பேட் கம்மிண்ஸ், பீட்டர் ஹேன்ஸ்கொம்ப், ஜோஸ் ஹேசல்வூட், உஸ்மான் கவாஜா, நதன் லயன், கிளேன் மெக்ஸ்வெல், மெத்திவ் ரேன்சவ், மிச்செல் ஸ்வெப்சன், மெத்திவ் வேட்

போட்டி நேர அட்டவணை

முதல் டெஸ்ட்ஒகஸ்ட் 27ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரைடாக்கா

இரண்டாவது டெஸ்ட்செப்டெம்பர் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரைசிட்டகொங்க்

http://www.thepapare.com

  • தொடங்கியவர்
2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் அவுஸ்திரேலியா களமிறங்கும்?
 

image_bba909b2eb.jpg

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில், எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடரில், 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன், அவுஸ்திரேலிய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகறது.

இந்திய உபகண்டத்தில், 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரொன்றை வென்றிருக்காத அவுஸ்திரேலியா, ஓரளவு அழுத்தங்களுடனேயே போட்டிகளில் பங்குபற்றவுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமன், பங்களாதேஷ் அணியில் சிறப்பான துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுவதாகவும், தமது சொந்த நாட்டில், சிறப்பான பெறுபேறுகளைக் கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான அண்மைய தொடரில், பங்களாதேஷ் அணி, சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியமையைச் சுட்டிக்காட்டிய லீமன், ஆரம்பத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை உள்ளது என்று குறிப்பிட்டார்.

அவுஸ்திரேலிய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக நேதன் லையன் காணப்படும் நிலையில், அஸ்டன் ஏகர், இன்னொரு சுழற்பந்து வீச்சாளராகக் காணப்படுகிறார். அதேபோல், இளம் வீரரான மிற்சல் ஸ்வெப்ஸனும் காணப்படுகிறார். ஏகருக்கும் ஸ்வெப்ஸனுக்கு இடையிலேயே போட்டி காணப்படுவதாக, லீமன் குறிப்பிட்டார்.

ஆனால், அஸ்டன் ஏகரின் சிறப்பான துடுப்பாட்டம், அவரது சிறப்பான களத்தடுப்பு ஆகியன, ஏகருக்கு முன்னிலையை வழங்குவதாகவும் லீமன் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் வைத்து இடம்பெற்ற தொடரில், இடதுகைச் சுழற்பந்து வீச்சாளரான ஸ்டீவ் ஓஃப் கீப் சிறப்பாகச் செயற்பட்ட நிலையில், தற்போது அஸ்டன் ஏகரைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சிறப்பாகச் செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/2-சுழற்பந்து-வீச்சாளர்களுடன்-அவுஸ்திரேலியா-களமிறங்கும்/44-202682

  • தொடங்கியவர்

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய லெவன் அணி அறிவிப்பு

 

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் நாளை தொடங்கும் நிலையில், ஆடும் லெவன் அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலிய லெவன் அணி அறிவிப்பு
 
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.

பெரும்பாலும் போட்டி நடைபெறுவதற்கு சற்று முன்புதான் ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் பெயரை அணி வெளியிடும். ஆனால் நாளை டாக்காவில் தொடங்கும் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள 11 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அந்த அணி இன்றே வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக விளையாடிய ஷான் மார்ஸ் மற்றும் ஓ'கீபே ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக கவாஜா மற்றும் அஷ்டோன் அகர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். லயன் உடன் இணைந்து அகரும் சுழற்பந்து வீச்சில் பங்கெடுத்துக் கொள்வார்.

201708261859108707_1_5ashton-s._L_styvpf
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் அஷ்டோன் அகர்

வங்காள தேச அணிக்கெதிரான முதல் டெஸ்டிற்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள 11 பேர் விவரம்:-

1. ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), 2. டேவிட் வார்னர், 3. மேத்யூ ரென்ஷா, 4. உஸ்மான் கவாஜா, 5. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், 6. க்ளென் மேக்ஸ்வெல், 7. வடே, 8. அஷ்டோன் அகர், 9. பேட் கம்மின்ஸ், 10. நாதன் லயன், 11. ஜோஷ் ஹசில்வுட்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/26185908/1104594/Australia-Announce-Playing-XI-for-1st-Test-Against.vpf

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா வங்காளதேசம்? - முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா வங்காளதேசம்? - முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்
கோப்பையுடன் வங்காளதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் (இடது), ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்.
டாக்கா:

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திப்பது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

வங்காளதேச ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் ஆஸ்திரேலிய அணி நாதன் லயன், ஆஷ்டன் அகர் ஆகிய இரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க முடிவு செய்துள்ளது. மேக்ஸ்வெல்லும் பகுதி நேர சுழற்பந்து வீச்சு பணியை கவனிப்பார். உஸ்மான் கவாஜாவுக்கும் ஆடும் லெவன் அணியில் இடம் உண்டு என்று ஸ்டீவன் சுமித் உறுதிப்படுத்தியுள்ளார்.

முஷ்பிகுர் ரஹிம் தலைமையிலான வங்காளதேச அணி, கடந்த ஓராண்டில் இங்கிலாந்து, இலங்கை அணிகளை டெஸ்டில் வீழ்த்தி வரலாறு படைத்தது. அதே போன்று ஆஸ்திரேலியாவுக்கும் அதிர்ச்சி அளிக்க முடியும் என்று நம்புகிறது. முஷ்பிகுர் ரஹிம் கூறும் போது, ‘ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணி தான். ஆனால் எங்களது சொந்த மண்ணில் அவர்களை தோற்கடிக்கக்கூடிய திறமை இருக்கிறது’ என்றார். தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன் ஆகியோருக்கு இது 50-வது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இவ்விரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 4 டெஸ்டுகளிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி. தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி இரு டெஸ்டுகளிலும் தோல்வியை தழுவினால், மோசமான நிலையாக 6-வது இடத்துக்கு தள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/27093642/1104647/Bangladesh-vs-Australia-1st-Test-starts-today.vpf

(20.2 ov)61/3
 
  • தொடங்கியவர்

முதல் டெஸ்ட்: வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்ட தமீம் இக்பால் - சாஹிப் அல் ஹசன்

 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் 10 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்து வங்காள தேசத்தை தமீம் இக்பால் - சாஹில் அல் ஹசன் சரிவில் இருந்து மீட்டனர்.

 
 
 
 
முதல் டெஸ்ட்: வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்ட தமீம் இக்பால் - சாஹிப் அல் ஹசன்
 
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்கியது. வங்காள தேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி தமீம் இக்பால், சவுமியா சர்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் 10 ரன்னாக இருக்கும்போது சவுமியா சர்கர் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த இம்ருல் கெய்ஸ், சபீர் ரஹ்மான் ஆகியோரை ரன்ஏதும் எடுக்க விடாமல் கம்மின்ஸ் தன் வேகத்தில் அடுத்தடுத்து பெவிலியின் திருப்பினார். இதனால் வங்காள தேச அணி 10 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

201708271439228187_1_2cummins-s._L_styvp
3 விக்கெட் வீழ்த்திய கம்மின்ஸ்

4-வது விக்கெட்டுக்கு தமீம் இக்பால் உடன் சாஹிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். அனுபவ வீரர்களான இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதானல் வங்காள தேச அணியின் ஸ்கோர் 100-ஐ தாண்டியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

அணியின் ஸ்கோர் 165 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தமீம் இக்பால் 71 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டது. தமீம் இக்பால் அவுட்டான சிறிது நேரத்தில் சாஹிப் அல் ஹசன் 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது வங்காள தேசம் 188 ரன்கள் எடுத்திருந்தது.

201708271439228187_2_2shakib-s._L_styvpf
84 ரன்கள் சேர்த்த சாஹிப் அல் ஹசன்

6-வது விக்கெட்டுக்கு கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் உடன் நசிர் ஹொசைன் ஜோடி சேர்ந்தார். முதல் நாள் தேனீர் இடைவேளை வரை வங்காள தேச அணி 5 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்துள்ளது.

முஷ்பிகுர் ரஹிர் 12 ரன்னுடனும், நசிர் ஹொசைன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/27143921/1104686/Dhaka-Test-BANvAUS-1st-Test-tamim-iqbal-shakib-al.vpf

  • தொடங்கியவர்

டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த வங்கதேசம்!

 


ஆஸ்திரேலிய அணி தற்போது, வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி, டாக்காவில் இன்று தொடங்கியது. வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய முதலே, அந்த அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. 

ஆஸ்திரேலியா - வங்கதேசம்


ஆனால், மறுபக்கம் தொடக்க ஆட்டக்காரர் தமீம் இக்பால் மற்றும் ஷக்கிப் ஆகியோர் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஷக்கிப் 84 ரன்களும், இக்பால் 71 ரன்களும் எடுத்தனர். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் கமின்ஸ் லியோன், அகார் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி, சொந்த மண்ணில் கெத்து காட்டியது வங்கதேசம். வார்னர் 8, கவாஜா 1, லியோன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.


முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 18 ரன்கள் எடுத்தது. ரென்ஷா 6, கேப்டன் ஸ்மித் 3 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

http://www.vikatan.com/news/sports/100472-australia-18-for-3-stump-on-day-1-vs-bangladesh.html

  • தொடங்கியவர்

டாக்கா டெஸ்ட்: ஆஸி. முதல் இன்னிங்சில் 217 ரன்னில் சுருண்டது; சாஹிப் அல்ஹசன் 5 விக்கெட்

டாக்காவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் சாஹிப் அல்ஹசன் மற்றும் மெஹெதி ஆகியோரின் பந்து வீச்சால் ஆஸ்திரேலியா 217 ரன்னில் சுருண்டது.

டாக்கா டெஸ்ட்: ஆஸி. முதல் இன்னிங்சில் 217 ரன்னில் சுருண்டது; சாஹிப் அல்ஹசன் 5 விக்கெட்
 
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேச அணி தமீம் இக்பால் (71), சாஹிப் அல்ஹசன் (84) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 260 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட் கம்மின்ஸ், நாதன் லயன் மற்றும் அஷ்டோன் அகர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 18 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. ஸ்மித் 3 ரன்னுடனும், ரென்ஷா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201708281603437267_1_1maxwell-s._L_styvp
மேக்ஸ்வெல் ஸ்டம்பிங் ஆகிய காட்சி

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரென்ஷா, ஸ்மித் ஆட்டத்தை தொடங்கினார்கள். ரென்ஷா மிகவும் நிதானமாக விளையாடினார். மறுமுனையில் விளையாடிய ஸ்மித் 8 ரன்கள் எடுத்த நிலையில் மெஹெதி பந்தில் க்ளீன் போல்டானார்.

அடுத்து ரென்ஷா உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடித்து விளையாடியது.

201708281603437267_2_1renshaw-s._L_styvp
சாஹிப் அல்ஹசன் பந்தில் ரென்ஷா அவுட்டான காட்சி

மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ஹேண்ட்ஸ்காம்ப் தைஜுல் இஸ்லாம் பந்தில் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டம் இழந்தார். ரென்ஷா - ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தது.

ஹேண்ட்ஸ்காம்ப் அவுட்டான சிறிது நேரத்தில் ரென்ஷா 45 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 2-வது நாள் மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்திருந்தது. மேக்ஸ்வெல் 8 ரன்னுடனும், வடே 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் முதல் ஒவரிலேயே வடே ஆட்டம் இழந்தார். அடுத்து மேக்ஸ்வெல் உடன் அஷ்டோன் அகர் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மேக்ஸ்வெல் ஆட்டம் இழக்கும்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தது.

201708281603437267_3_1wadelbw-s._L_styvp
வடே எல்.பி.டபிள்யூ ஆகிய காட்சி

கடைநிலை வீரர்களான அஷ்டோன் அகர் (41 அவுட்இல்லை), கம்மின்ஸ் (25), ஹசில்வுட் (5) ஓரளவிற்கு ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 217 ரன்களில் சுருண்டது.

வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டர் சாஹிப் அல்ஹசன் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். மெஹெதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

201708281603437267_4_1shakibalhasan-s._L
ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய சாஹிப் அல்ஹசன்

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 217 ரன்னில் சுருண்டதால், வங்காள தேச அணி முதல் இன்னிங்சில் 43 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த முன்னிலையுடன் அந்த அணி 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/28160341/1104906/Dhaka-Test-BANvAUS-Australia-217-all-out-Bangladesh.vpf

  • தொடங்கியவர்
260 & 133/3 (50 ov)
Lunch
 

Day 3: Bangladesh lead by 176 runs with 7 wickets remaining

  • தொடங்கியவர்
260 & 221
 
217 & 51/2 (14.1 ov, target 265)
Day 3 Session 3: Australia require another 214 runs with 8 wickets remaining
  • தொடங்கியவர்

டாக்கா டெஸ்ட்: ஆஸி. வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்

தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹிமின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம்.

டாக்கா டெஸ்ட்: ஆஸி. வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்
 
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்காள தேசம், முதல் இன்னிங்சில் 260 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தமீம் இக்பால் 71 ரன்னும், சாஹிப் அல் ஹசன் 84 ரன்னும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் கம்மின்ஸ், லயன் மற்றும் அகர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

201708291540074141_1_1rahimrunout-s._L_s
முஷ்பிகுர் ரஹிம் ரன்அவுட் ஆகிய காட்சி

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. சாஹிப் அல் ஹசனின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 217 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ரென்ஷா 45 ரன்னும், அகர் 41 ரன்னும் எடுத்தனர். சாஹிப் அல் ஹசன் 5 விக்கெட்டும், மெஹெதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

201708291540074141_2_1mehedihasan-s._L_s
மெஹெதி ஹசன் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் காட்சி

43 ரன்கள் முன்னிலையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வங்காள தேசம் 1 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்திருந்தது. தமீம் இக்பால் 30 ரன்னுடனும், தைஜுல் இஸ்லாம் ரன் எதுவும் இன்றியும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்தது. ஆஸ்திரேலியாவின் ஆஃப் ஸ்பின்னர் லயன் சிறப்பாக பந்து வீசினார். தைஜுல் இஸ்லாம் (4), இம்ருல் கெய்ஸ் (2) ஆகியோரை லயன் அடுத்தடுத்து வெளியேற்றினார்.

அடுத்து தமீம் இக்பால் உடன், முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. முஷ்பிகுர் ரஹிம் 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். தமீம் இக்பால் 78 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

201708291540074141_3_1lyon-s._L_styvpf.j
6 விக்கெட் வீழ்த்திய நாதன் லயன்

சாஹிப் அல் ஹசன் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். சபீர் ரஹ்மான் 22 ரன்னும், மெஹெதி ஹசன் மிராஸ் 26 ரன்னும் எடுக்க, வங்காள தேசம் 79.3 ஓவரில் 221 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.

முதல் இன்னிங்சில் 43 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால், வங்காள தேசம் ஒட்டுமொத்தமாக 264 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஒத்துழைத்து வருவதால் வங்காள தேசம் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/29154004/1105101/Dhaka-Test-BANvAUS-bangladesh-265-runs-target-to-australia.vpf

217 & 109/2 (30 ov, target 265)
 
Day 3: Australia require another 156 runs with 8 wickets remaining
 
  • தொடங்கியவர்

பரபரப்பான கட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்க தேச முதல் டெஸ்ட்... வெற்றி யாருக்கு?

 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வங்க தேசத்துக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

வார்னர் மற்றும் ஸ்மித்

 

கடந்த 27-ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற வங்க தேசம் அணி, பேட்டிங் ஆட நிர்ணயித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் வங்க தேசம், 260 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, 217 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இரண்டாம் இன்னிங்ஸில் வங்க தேசம் 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா, மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து களத்தில் தொடர்ந்து விளையாடி வருகிறது. டேவிட் வார்னர் 75 ரன்களுடனும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்களுடனும் நாளை ஆட்டத்தை தொடங்க உள்ளனர். எப்படியும் போட்டிக்கான முடிவு உறுதியாகிவிட்ட நிலையில் இக்கட்டான சூழலை ஆஸ்திரேலியா - வங்க தேச டெஸ்ட் எட்டியுள்ளது. 

http://www.vikatan.com/news/sports/100704-first-test-of-australia-vs-bangladesh-promises-nail-biting-finish.html

  • தொடங்கியவர்
260 & 221
 

Lunch

217 & 199/7 (57 ov, target 265)

Day 4: Australia require another 66 runs with 3 wickets remaining

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவை அசைத்த வங்கதேசம்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது!

 

ஆஸ்திரேலிய அணி, தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,  இரண்டு டெஸ்ட் போட்டிகள்கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. டாக்காவில் நடந்த  முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, வங்கதேசம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ban wins over australia


டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்த வங்கதேசம், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 260 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்க ஆஸ்திரேலியா, வங்கதேச சுழற்பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல், 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேசம் தரப்பில் அனுபவ வீரர், ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் அபாரமாகப் பந்து வீசி, 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதன் பின்னர், இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம், 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 265 ரன்களை நிர்ணயித்தது வங்கதேசம். 


அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ரென்ஷா மற்றும் கவாஜா ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தாலும், ஸ்மித் மற்றும் வார்னரின் பொறுப்பான ஆட்டத்தினால் அந்த அணி நல்ல நிலையில் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வார்னர், சதமடித்து, பின்னர் ஆட்டமிழந்தார். இந்நிலையில், இன்று காலை வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் மீண்டும் ஆஸ்திரேலியா அணியைத் தனது பந்துவீச்சால் திணறடித்தார். சிறப்பாகப் பந்து வீசி, ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். இறுதியில், அந்த அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 

 


வங்கதேசம், டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, வங்கதேச அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

http://www.vikatan.com/news/sports/100776-bangladesh-create-historical-win-over-australia.html

  • தொடங்கியவர்

டாக்கா டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை 20 ரன்னில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனை

 

டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் சாஹிப் ஆல் ஹசனின் அபார பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.

 
டாக்கா டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை 20 ரன்னில் வீழ்த்தி வங்காள தேசம் வரலாற்று சாதனை
 
ஆஸ்திரேலியா - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் வங்காள தேசம் 260 ரன்களும், ஆஸ்திரேலியா 217 ரன்களும் சேர்த்தன.

43 ரன்கள் முன்னிலையுடன் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நாதன் லயன் பந்து வீச்சால் வங்காள தேசம் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வங்காள தேசம் 264 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்.

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. வார்னரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது. வார்னர் 75 ரன்னுடனும், ஸ்மித் 25 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 156 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் இருந்தது.

201708301610065479_1_1warner-s._L_styvpf
சதம் அடித்த வார்னர்

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வார்னர், ஸ்மித் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். வார்னர் சிறப்பாக விளையாடி 121 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது.

இருவரது விளையாட்டையும் பார்க்கும்போது ஆஸ்திரேலியா வெற்றிபெறும் என்ற நிலைமை இருந்தது. ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 158 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. வார்னர் 112 ரன்கள் எடுத்த நிலையில் சாஹில் அல் ஹசன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

201708301610065479_2_1maxwell-ss._L_styv
மேக்ஸ்வெல் க்ளீன் போல்டாகிய காட்சி

அடுத்து ஸ்மித் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 171 ரன்னாக இருக்கும்போது சாஹிப் அல் ஹசன் பந்தில் ஆட்டம் இழந்தார். ஹேண்ட்ஸ்காம்ப் 15 ரன்னிலும், மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், வடே 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல்லை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் சாஹிப் அல் ஹசன் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

மேக்ஸ்வெல் அவுட்டாகும்போது ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 2 விக்கெட் இருக்கையில், 66 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் வங்காள தேசம் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

9-வது விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விரைவாக ரன்கள் சேர்த்தது. இதனால் வங்காள தேச வீரர்கள் பதற்றம் அடைந்தனர். இறுதியில் ஸ்கோர் 228 ரன்னாக இருக்கும்போது லயன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி விக்கெட்டுக்கு கம்மின்ஸ் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசினார். இதனால் ஸ்கோர் 244 ஆக உயர்ந்தது. 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஹசில்வுட் ரன்ஏதும் எடுக்காத நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். இதனால் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

201708301610065479_3_1shakib-s._L_styvpf
2-வது இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் சாஹிப் அல் ஹசன்

இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. இரண்டு இன்னிங்சிலும் தலா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த சாஹிப் அல் ஹசன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/30161002/1105318/Shakib-stars-with-ten-for-in-historic-Bangladesh-win.vpf

  • தொடங்கியவர்

இனி எங்களை ஆஸி. அணியினர் மதிப்பார்கள்: ‘ஸ்லெட்ஜிங்’ பற்றி ஷாகிப் அல் ஹசன்

 

 
mush

முஷ்பிகுர், ஷாகிப் ரன் ஓடுவதைப் பார்க்கும் ஆஸி.வீரர் பாட் கமின்ஸ்.   -  படம். | ஏ.எஃப்.பி.

வங்கதேச அணி வெற்றி பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்களுக்கு இடையேயும் சிறு சிறு வார்த்தைப் பரிமாற்றங்கள், ஸ்லெட்ஜிங் ஆகியவை நடைபெற்றன.

நேதன் லயனுக்கு ஷாகிப் அல் ஹசன் ‘செண்ட் ஆஃப்’ கொடுத்தார். வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட் ஆகியோரும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதோடு, வங்கதேச ஸ்லெட்ஜிங்குக்கு எதிர்வினையும் ஆற்றியது நிகழ்ந்தது.

இந்நிலையில் ஆட்ட நாயகன் ஷாகிப் அல் ஹசன் கூறும்போது, “ஸ்லெட்ஜிங்கில் ஆஸ்திரேலியர்கள் வல்லவர்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு வருகிறோம். இந்த டெஸ்ட்டிற்குப் பிறகு அவர்கள் எங்களுக்கு அதிகம் மரியாதை கொடுப்பார்கள்.

உள்நாட்டில் நாங்கள் எந்த அணியையும் வீழ்த்துவோம் என்று நம்பிக்கை வைத்துள்ளோம். கடந்த 2-3 ஆண்டுகளாகவே எங்களுக்கு அந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பலர் எங்களை கவனிப்பதில்லை, ஆனால் நாங்கள் எங்கள் வேலையைத் திறம்பட செய்து வருகிறோம்” என்றார்.

கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறும்போது, “அவர்கள் ஆக்ரோஷமாக ஆடுகின்றனர், நாங்களும் ஆக்ரோஷமான அணியே என்பதை அவர்களுக்குக் காட்டியுள்ளோம். எங்கள் பேட்டிங், பவுலிங் தவிர எங்கள் உடல் மொழியையும் அவர்கள் பார்த்துள்ளார்கள்.

முதல் செஷன் முடியும் தறுவாயில் பார்த்தால் கிளென் மேக்ஸ்வெல் மேலும் ஓவர் வீசிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார், காலத்தைக் கடத்தினார், இது ஆஸ்திரேலிய அணியின் மனநிலையை எதிரொலித்தது.

இந்த வெற்றி ஒரு பெரிய செய்தியாகும். எங்கள் பின்கள வரிசை வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜிங் செய்தாலும் கூடுதல் ரன்கள் தேவை என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். நாங்கள் பழைய வங்கதேசம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள், இப்போது எந்த நிலையிலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் எங்களிடத்தில் உள்ளனர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடரை வெல்வதே குறிக்கோள்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/article19588719.ece

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரலாற்று வெற்றி... வங்கதேச அணியினர் எப்படி கொண்டாடினர் தெரியுமா?

 

ஆஸ்திரேலிய அணி, தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, வங்கதேசம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு, வங்கதேச அணி கொண்டாடியது வீடியோவாக வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

கொண்டாட்டத்தில் ஷகிப் அல் ஹசன்

கடந்த 27-ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டிக்கான டாஸை வென்ற வங்க தேச அணி, பேட்டிங் ஆட நிர்ணயித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் வங்க தேசம், 260 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா, 217 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இரண்டாம் இன்னிங்ஸில் வங்க தேசம் 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா, மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தது. இதையடுத்து இன்று களமிறங்கிய ஆஸ்திரேலியா, ஆரம்பத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. இதையடுத்து, 244 ரன்கள் எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா. இதனால், வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. வங்க தேசம் சார்பில் ஷகிப் அல் ஹசன் 10 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதையடுத்து பெவிலியன் திரும்பிய வங்க தேச அணியினர், கொண்டாட்டத்தில் இறங்கினர். அப்போது வங்க தேச அணியினர் வட்டமாக நின்று பாட்டுப் பாடி, கோஷமிட்டு வெற்றியடைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இந்தக் கொண்டாட்ட வீடியோ ட்விட்டரில் வெளியாகி தற்போது படு வைரலாகி வருகிறது. 
 

http://www.vikatan.com/news/sports/100798-this-is-how-bangladesh-celebrated-their-victory-against-australia.html

  • தொடங்கியவர்

நாளை 2-வது டெஸ்ட்: வங்காள தேசத்துக்கு பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா?

வங்காளதேசத்துக்கு எதிராக நாளை 2-வது டெஸ்ட் போட்டியில் மோத இருக்கும் ஆஸ்திரேலியா, முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
நாளை 2-வது டெஸ்ட்: வங்காள தேசத்துக்கு பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா?
 
2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா அணி வங்காள தேசத்துக்கு சென்று உள்ளது. மிர்பூரில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா 20 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்ட காஸ்வில் தொடங்குகிறது. இதில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் ஆஸ்திரேலியா உள்ளது. மேலும் முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுக்கும் கட்டாயத்திலும் இருக்கிறது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றாலும் அல்லது டிரா ஆனாலும் தொடரை இழக்க நேரிடும் அப்படி தொடரை இழந்தால் அது ஆஸ்திரேலியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் முதல் டெஸ்டை போல 2-வது போட்டியிலும் வெற்றி பெற்று அல்லது டிரா செய்து தொடரை கைப்பற்றும் முனைப்பில் வங்காள தேசம் உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/03130848/1105993/Australia-vs-Bangladesh-collide-on-2nd-test-tomorrow.vpf

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவுடன் 2-வது டெஸ்ட்: நாதன் லயோனின் துல்லியமான பந்துவீச்சில் வங்கதேசம் திணறல்

 

ஆஸ்திரேலியாவுடனான கடைசி மற்றும் 2-வது டெஸ்டின் முதல் நாள் முடிவில் வங்காள தேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

 
ஆஸ்திரேலியாவுடன் 2-வது டெஸ்ட்: நாதன் லயோனின் துல்லியமான பந்துவீச்சில் வங்கதேசம் திணறல்
 
சிட்டகாங் :

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டாக்காவில் நடந்த முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணியினர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் சவும்யா சர்க்கார் களமிறங்கினர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயோனின் துல்லியமான பந்துவீச்சால் வங்காள தேச அணியினர் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். 117 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணியினர் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தனர்.

201709041949494743_1_batsman-2._L_styvpf

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் மற்றும் சபீர் ரகுமான் ஆகியோர் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் அடித்தனர். 66 ரன்கள் எடுத்த நிலையில் சபீர் ரகுமான் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 222 ரன்களாக இருந்தது. இந்த ஜோடி 100 ரன்களை சேர்த்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வங்காள தேச அணியினர் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளனர். முஷ்பிகுர் ரஹிம் 62 ரன்களும், நாசர் உசேன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயோன் சிறப்பாக பந்துவீசி 77 ரன்களுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஆஷ்டன் அஹர் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

நாளை இரண்டாவது நாளில் எஞ்சியுள்ள விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/04194946/1106230/australia-second-test-nathan-lyon-bowls-to-bangladesh.vpf

  • தொடங்கியவர்

வங்காள தேசம் 305: வார்னர், ஹேண்ட்ஸ்காம்ப் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 225/2

 

சிட்டகாங் டெஸ்டில் வங்காள தேசம் 305 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வார்னர், ஹேண்ட்ஸ்காம்ப் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.

வங்காள தேசம் 305: வார்னர், ஹேண்ட்ஸ்காம்ப் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 225/2
 
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது.

நேற்று தொடங்கிய இந்த போட்டியில் வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் அபார பந்து வீச்சால் வங்காள தேசம் தொடக்க விக்கெட்டுக்களை மளமளவென இழந்தது.

பின்னர் முஷ்பிகுர் ரஹிம், சபிர் ரஹ்மான் ஆகியோர் ஆட்டத்தால் வங்காள தேசம் சரிவில் இருந்து மீண்டும், முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்திருந்தது. முஷ்பிகுர் ரஹிம் 62 ரன்னுடனும், நஸிர் ஹொசைன் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

201709051813475722_1_smith-s._L_styvpf.j
ஸ்மித் போல்டாகிய காட்சி

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய வங்காள தேசம் 305 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முஷ்பிகுர் ரஹிம் 68 ரன்கள் எடுத்த நிலையில் லயன் பந்தில் க்ளீன் போல்டானார். நஸிர் ஹொசைன் 45 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் லயன் 7 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

201709051813475722_2_renshaw-s._L_styvpf
ரென்ஷா அடித்த பந்தை பாய்ந்து பிடிக்கும் முஷ்பிகுர் ரஹிம்

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரென்ஷா, வார்னர் ஆகியோர் களம் இறங்கினார்கள். ரென்ஷா 4 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் பந்தில் ஆட்டம் இழந்தார். லெக்சைடு வந்த பந்தை அடித்தார். பந்து பேட் விளிம்பில் பட்டுச் சென்றது. அதை விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் அருமையாக டைவ் அடித்து பிடித்தார்.

2-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ஸ்மித் 58 ரன்கள் எடுத்த நிலையில் தைஜூல் இஸ்லாம் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.

201709051813475722_3_handscomb01-s._L_st
அரைசதம் அடித்த ஹேண்ட்ஸ்காம்ப்

3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் ஹேண்ட்ஸ்காம்ப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்தனர். அத்துடன் 2-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

201709051813475722_4_warner02-s._L_styvp
ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் வார்னர்

2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 88 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 69 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி இதுவரை 3-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை ஆஸ்திரேலியா 80 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளது.

நாளை 3-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடினால் 150 ரன்களுக்கு மேல் முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/05181343/1106376/Chittagong-Test-BANvAUS-bangladesh-305-all-out-australia.vpf

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசி தாக்குதல்: வங்காளதேச போலீசார் விசாரணை

வங்காளதேசத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல் பட்டு கண்ணாடி உடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக வங்காள தேச போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 
ஆஸ்திரேலிய வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசி தாக்குதல்: வங்காளதேச போலீசார் விசாரணை
 
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி வங்காள தேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் டாக்காவில் நடைபெற்றது. இதில் வங்காள தேசம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முடிந்ததும் ஆஸ்திரேலியா வீரர்கள் கடுமையான போலீ்ஸ் பாதுகாப்புடன் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கல் ஒன்று வீரர்கள் சென்ற பஸ்சின் ஜன்னல் கண்ணாடியில் பட்டது. இதில் கண்ணாடி உடைந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதுடன் வீரர்கள் செல்லும் பாதையும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சிட்டகாங் மாநகர போலீஸ் கமிஷனர் இக்பால் பஹர் கூறுகையில் ‘‘பஸ் சென்ற பாதையில் சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. கடுமையான பாதுகாப்பு வாகனத்துடன் சென்ற பஸ் மீது ஒரு கல் எதிர்பாராத விதமாக பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய விபத்து என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மானேஜர் சீன் கர்ரோல் முன்னெச்சரிக்கை காரணமாக பாதுகாப்பை அதிகரிக்கக் கேட்டுக் கொண்டார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் செல்லும் பாதை மாற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

‘‘நாங்கள் ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் வீரர்கள் சென்ற பஸ்சின் கண்ணாடி உடைந்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை. சிறிய விபத்திற்குப் பிறகு வங்காள தேச அதிகாரிகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது’’ என ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க பாதுகாப்பு மேலாளர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா ஏற்கனவே பாதுகாப்பு காரணமாக வங்காள தேச தொடரை புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/05195336/1106386/Bangladesh-police-investigate-after-stone-damages.vpf

  • தொடங்கியவர்

இரண்டரை மணி நேரம் பேட்டிங் செய்து 4.5 கிலோ எடையை இழந்த ஆஸி. பேட்ஸ்மேன்

 

சிட்டகாங்கில் நடைபெற்று வரும் வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டரை மணி நேரம் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய வீரர் 4.5 கிலோ எடையை இழந்துள்ளார்.

இரண்டரை மணி நேரம் பேட்டிங் செய்து 4.5 கிலோ எடையை இழந்த ஆஸி. பேட்ஸ்மேன்
 
ஆஸ்திரேலியா அணி வங்காள தேசம் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பொதுவாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் ஆசிய கண்டத்தில் விளையாடும்போது சுழற்பந்துக்கு மட்டுமல்ல, வெப்பத்தையும் தாங்க திணறுவார்கள்.

சிட்டகாங்கில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஹேண்ட்ஸ்காம்ப் வெப்பத்தை தாங்க முடியாமல் 4.5 கிலோ எடையை இழந்துள்ளார்.

ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது பேட்டிங் செய்தது. ஸ்மித் அவுட்டானதும் ஹேண்ட்ஸ்காம்ப் களம் இறங்கினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் இரண்டரை மணி நேரம் அவர் பேட்டிங் செய்தார்.

201709061751112588_1_handscomb-s._L_styv

113 பந்துகளை சந்தித்து 69 ரன்கள் சேர்த்து அவுட்டாகாமல் இருந்தார். வங்காள தேசத்தின் சுழற்பந்துகளை லாவகமாக சமாளித்த ஹேண்ட்ஸ்காம்பால் வெப்பத்தை சமாளிக்க முடியவில்லை. அவரது உடல் வியர்வையால் நனைந்தது. அடிக்கடி ஐஸ் கட்டி பேக் வைத்து வெப்பத்தை தணிக்க முயற்சித்தார். இருந்தாலும் முடியவில்லை. இரண்டரை மணி நேரம் வெயிலில் நின்று விளையாடியதன் காரணமாக அவரது எடையில் 4.5 கிலோ குறைந்துவிட்டது. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/06175106/1106567/Chittagong-Test-Handscomb-loses-4-and-half-kg-in-two.vpf

  • தொடங்கியவர்

சிட்டகாங் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 377/9; 72 ரன்கள் முன்னிலை

 

வார்னர் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது.

 
 
சிட்டகாங் டெஸ்ட்: 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸி. 377/9; 72 ரன்கள் முன்னிலை
 
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 305 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 7 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.

201709061913004042_1_5warner-s._L_styvpf
சதம் அடித்த மகிழ்ச்சியில் வார்னர்

வார்னர் 88 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்காம்ப் 69 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் 82 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். சதம் அடித்த வார்னர் 123 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். வார்னர் அவுட்டாகும்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தது.

201709061913004042_2_5rahman-s._L_styvpf
3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான்

அதன்பின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. கார்ட்ரைட் (18), வடே (8), மேக்ஸ்வெல் (38), அகர் (22), கம்மின்ஸ் (4) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்துள்ளது.

201709061913004042_3_5maxwell-s._L_styvp
மேக்ஸ்வெல் கேட்சை அபாரமாக பிடித்த விக்கெட் கீப்பர் ரஹிம்

தற்போது 72 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் கடைசி விக்கெட் ஜோடி மேலும் 28 ரன்கள் எடுத்து 100 ரன்கள் முன்னிலைப் பெற்றால், வங்காள தேசத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/06191255/1106580/Chittagong-Test-3rd-Day-BANvAUS-australia-377-for.vpf

  • தொடங்கியவர்

வங்காள தேசம் 157 ரன்னில் சுருண்டது: ஆஸ்திரேலியா வெற்றிக்கு 86 ரன்கள் இலக்கு

நாதன் லயனின் அபார பந்து வீச்சால் வங்காள தேசம் 2-வது இன்னிங்சில் 157 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 86 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

 
 
 
 
வங்காள தேசம் 157 ரன்னில் சுருண்டது: ஆஸ்திரேலியா வெற்றிக்கு 86 ரன்கள் இலக்கு
 
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்டகாங்கில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 305 ரன்கள் சேர்த்தது.

201709071535408064_1_1rahim-s._L_styvpf.
முஷ்பிகுர் ரஹிமை வீழ்த்திய கம்மின்ஸ்

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 377 ரன்கள் குவித்தது. 72 ரன்கள் பின்தங்கிய நிலையில் வங்காள தேசம் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் சுழலில் வங்காள தேச வீரர்கள் சிக்கித் திணறினார்கள். இதனால் 157 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நாதன் லயன் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

201709071535408064_2_1tamim-s._L_styvpf.
நாதன் லயன் பந்தில் ஸ்டம்பிங் ஆகிய தமிம் இக்பால்

வங்காள தேசம் ஒட்டுமொத்தமாக 85 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 86 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் தொடரை 1-1 என சமன் செய்யும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/07153535/1106765/Chittagong-Test-BANvAUS-86-run-target-to-australia.vpf

  • தொடங்கியவர்

சிட்டகாங் டெஸ்டில் 13 விக்கெட் வீழ்த்தி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார் நாதன் லயன்

 
 
 

சிட்டகாங்கில் நடைபெற்று வரும் வங்காள தேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் நாதன் லயன் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

 
 
 
 
சிட்டகாங் டெஸ்டில் 13 விக்கெட் வீழ்த்தி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரானார் நாதன் லயன்
 
வங்காள தேசம் - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டாக்காவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வங்காள தேசம் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டும் வீழ்த்தினார்.

தற்போது சிட்டகாங்கில் 2-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கள் வீழ்த்திய நாதன் லயன், 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஒரே டெஸ்டில் 13 விக்கெட்டும், இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் 22 விக்கெட்டுக்களும் வீழ்த்தியதன் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

2-வது டெஸ்டில் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் ஆசிய கண்டத்தில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் லயன். இதற்கு முன், கடந்த பிப்ரவரி மாதம் புனே மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் ஓ'கீபே 12 விக்கெட்டுக்கள் வீழ்த்தியது சாதனையாக இருந்தது.

201709071641042915_1_2lyon002-s._L_styvp

ஆஸ்திரேலிய வீரர் புருஷ் ரெய்ட் கடைசியாக 1990-ல் இங்கிலாந்துக்கு எதிராக 13 விக்கெட்டுக்கள் எடுத்திருந்தார். அதன்பின் 13 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை லயன் பெற்றுள்ளார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் லயன். ஹெராத் பாகிஸ்தானுக்கு எதிராக 23 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். முத்தையா முரளீதரன் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக 22 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

201709071641042915_2_2lyon-s._L_styvpf.j

அத்துடன இந்த வருடத்தில் 45 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய பந்து வீச்சாளர் பட்டியலில் லயன் முதல் இடத்தில் உள்ளார். ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 44 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/09/07164058/1106791/Nathan-Lyon-is-the-first-Australian-to-take-13-wickets.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.