Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாட்டில் ஹிந்திக்கு வித்திட்ட பெரியார் - கவிஞர் கலைக்களஞ்சியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாட்டில் ஹிந்திக்கு வித்திட்ட பெரியார் - கவிஞர் கலைக்களஞ்சியம்

பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் தென்னாட்டில் முதன்முதலில் ஹிந்திக்கு வித்திட்டவர். இவர் 1922-ல் ஈரோட்டில் ஹிந்திப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க இலவசமாக இடம் கொடுத்தார். "திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகள்" என்ற நூலில் பக்கம் 436ல் "இராமசாமி நாயக்கர் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் அவர் முயற்சியால் ஈரோட்டில் ஹிந்தி வகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானுஞ் சென்றிருந்தேன். தென்னாட்டில் ஹிந்திக்கு விதை இட்டவர் நாயக்கரே" என்று திரு.வி.க. அவர்கள் எழுதியுள்ளார்.

1917-ஆம் ஆண்டிலிருந்து 1925-ஆம் ஆண்டுவரை பார்ப்பனர்களின் தாசனாக விளங்கி வந்த பெரியார் ஈ.வெ.ரா. 1925-க்குப் பிறகு பார்ப்பனர்களின் சிம்ம சொப்பனமாய் விளங்கி அவர்களின் எதிரியானார். அவர் தனது முதல் கட்டமாக அவரால் வித்திட்ட ஹிந்தி மொழியை எதிர்க்க ஆரம்பித்தார்.

"சித்திர புத்திரன்" என்ற புனைப்பெயரில் பெரியார் ஈ.வெ.ரா. 07.03.1926-ல் தனது 'குடியரசு' இதழில், 'தமிழுக்கு துரோகமும் இந்தி மொழியின் ரகசியமும்' என்ற தலைப்பில்:

"ஹிந்திக்காக செலவாயிருக்கும் பணத்தின் பெரும்பாகம் பார்ப்பனரல்லாதவருடையது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இந்தி படித்தவர்களில் 100-க்கு 97 பேர் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டில் மொத்தத் தொகையில் 100-க்கு 97 பேர் பார்ப்பனரல்லாதவராயிருந்தும

Edited by தூயவன்

பெரியார் தேவஸ்தான தலைவராக எல்லாம் இருந்தவர். இடையில் சன்னியாசி ஆகிறேன் என்று மொட்டை எல்லாம் அடித்துக் கொண்டு திரிந்தர்.

அதைப் பற்றியும் யாராவது "தமிழ் நாட்டில் இந்து மதத்திற்கு வித்திட்ட பெரியார்" என்று தலைப்பில் கட்டுரை எழுதினால், அதையும் படித்து சிரிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ ஒரு கருத்திலும் தெளிவில்லாமல் இருந்தவர் பெரியார் என்று ஒத்துக் கொள்கின்றீர்கள். ஆரம்பத்தில் கடவுள் பக்தி, பிறகு திராவிடக் கொள்ளை, பின்பு தமிழ் தேசியம் எண்டு நினைப்புக்கு நினைப்பு ஒவ்வொரு கொள்கை கொண்டிருந்தவரைத் தலைவர் எண்டு கும்புடுறியள். வெட்கமாக இல்லை.

அதை வேறு, தேசியத் தலைவரோடு ஒப்பீடு வேற! :rolleyes:

தந்தை பெரியார் பற்றி நீங்கள் நிறையப் படிக்க வேண்டும்.

அவருடைய எதிரிகள் எழுதிய புத்தகங்களை மட்டும் படித்தால் போதாது. தந்தை பெரியார் எழுதியவைகளையும், கூறியவைகளையும் தேடிப் படிக்க வேண்டும். நான் இரண்டையும் படிப்பது வழக்கம்.

எந்த ஒரு மனிதனுடைய அறிவும் பரிமாண வளர்ச்சி அடைய வேண்டும். ஆரம்பத்தில் சிந்தித்தது போலவே 60 வயதிலும் சிந்தித்தால், அவன் மனிதன் அல்ல. மிருகம்.

தந்தை பெரியாரே சொல்லியிருக்கிறார். 40 வயதிற்கு முன்பு இருந்த பெரியார் வேறு, 40 வயதிற்கு பிறகு இருக்கின்ற பெரியார் வேறு.

ஆனால் அவருடைய எதிரிகள் அவர் ஆரம்ப காலங்களில் கொண்டிருந்த கருத்துக்களை பற்றி இப்பொழுதும் விமர்சனம் செய்வது, விமர்சனம் செய்பவர்களின் கருத்து வறட்சியையே காட்டுகிறது.

நாமும் ஆரம்பத்தில் சமஸ்டி, 50இற்கு 50 எல்லாம் கேட்டுத்தான் தமிழீழத்தில் வந்து நிற்கிறோம்.

திராவிடம் பேசிய பெரியார் தமிழ் தேசியம் என்று முன்னேறியது சரியான ஒன்று.

அறிவுள்ள மனிதர்கள் முன்னோக்கித்தான் போவார்கள். ஒரே இடத்தில் நிற்கமாட்டார்கள்.

சிலர் மட்டும் பத்து வயதில் "நான் விரும்பும் பெரியார் ஆறுமுகநாவலர்" என்று படித்ததை தாண்டி சிந்திக்கவும் மாட்டார்கள், போகவும் மாட்டார்கள். அதில் அவர்களுக்கு பெருமை வேறு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட விதத்தில் பெரியார் என்று ஒருவர் இருந்தது பற்றி எனக்கு எவ்வித கவலையும் இல்லை. அது அவரது உரிமை. ஆனால் ஒரு மக்கள் சமூதாயத்தினை தன் கொள்கையால் வழிநடத்த வெளிக்கிட்ட ஒருவர் இத்தனை தளம்பல்களோடு இருப்பது தகுதியான விடயமல்ல.

ஏனென்றால் அவருக்குப் பின்னால் வருகின்ற மக்களுக்கு அவர் நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும். இன்றைக்கு அவர் தமிழகத்தில் ஏற்படுத்தி விட்டுப் போன விளைவுகளால் தமிழ் உலகம் அல்லல் படுகின்ற விதத்தைப் பட்டியலிட நான் தயார். அதற்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?

வீரத்தமிழனாக இருந்தவன், இன்றைக்கு தண்ணிக்கு கூட, அடுத்தவனிடம் கைகட்டி நிற்கின்றான் என்பதற்கு, தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பிரிவினைகளே காரணம். மற்றய மாநிலங்களில் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒன்று சேர்கின்றபோது, இன்றைக்குத் தமிழகத்தில் அவ்வாறு முடிகின்றதா?

சொல்லப் போனால், எந்தப் பிரச்சனைக்கும் போராடுவதைத் தவிர்த்து விட்டு, அதற்கு குற்றவாளியாக பிராமண சமுதாயத்தைக் குற்றம் சாட்டி, அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் இருந்து விலத்திக் கொண்டோம்.

இன்றைக்கு பிராமணர்கள், தமிழர் விடயத்தில் தீர்வு காண்பதில் இருந்து ஒதுங்கியிருக்கின்றார்கள் என்று கூச்சல் போடுகின்றவர்கள், அந்தப் பிராமணர்களைத் தமிழ் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தது யார் என்று சிந்திக்கக் கடவார்களாக!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரியமொழியெதிர்ப்பு, வடமொழியெதிர்ப்பு என்று எல்லாம் கூச்சலிடுபவர்களுக்கு இக்கட்டுரை நல்ல பதிலினைத் தந்திருக்கின்றது. இந்தியைத் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்ததே, பெரியார் என்பவரே என்று. முன்பு இளங்கோவும், சபேசனும் இந்தியை சட்டாமாக்க உதவியர் ராஜாஜி என்று சொன்ன போது குழப்பமாகத் தான் இருந்தது. அப்படிப்பட்டவர் கூடவா, பெரியார் நட்புப் பாராட்டி வந்தார் என்று? ஆனால் இப்போது தான் உண்மை புரிகின்றது. இரண்டு பேருக்கும் இந்தியைத் தமிழ்நாட்டினுள் கொண்டுவரப் பங்கிருந்தது என்று.

புலவர்களையும், கவிஞர்களையும், பெரியார் திட்டுகின்றார். இதைச் சிலர் முன்பும் நியாயப்படுத்தியிருந்தனர். இன்றைக்கு தமிழ்மொழி பழமை வாய்ந்தது என்றும், இலக்கியமொழி தமிழ்மொழி என்று உலகம் போற்றுவதற்கும் காரணமே, இப் புலவர்கள் தானே! முன்பு எழுத்தறிவில்லாத மக்களுக்கு, தமிழ்மொழியின் சிறப்பையும், பெருமையையும், கொண்டு சென்றவர்கள் இப் புலவர்கள் தானே!

ஒரு மொழி தோன்றி இத்தனை காலம் சிதைவற்று இருக்கின்றது என்றாலே, அதற்குக் காரணம், அம்மொழி பாடல்களாலும், சொற்பொழிவுகளாலும், நிரப்பப்பட்டது தான். இந்திய மொழிகளில், இவ்வளவு தூரம், பாவனையோடும், சிறப்போடும் இருக்கின்ற தமிழ்மொழியை அக்கன்னடர் விரும்பமாட்டார் என்பது உண்மை தான்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறப்பாக இருப்பார்கள். புலவர்கள் தமிழ்துறையைச் சிறப்பாக முனைந்தார்கள். அவ்வளவு தான். ஆனால் தமிழினின் வளர்ச்சி பற்றிக் கவலைப்பட்டதாகச் சொல்கின்ற பெரியார் புலவர்களை மட்டுமே ஏன் குறி வைத்தார்? அவ்வாறு புலவர்களை கேவலப்படுத்தி கண்ட பலன் என்ன? இன்றைக்கு தமிழ் இத்தனை தூரம் பிறமொழிகளால் மாசுபட்டிருப்பதை, தமிழின் பெருமையை மக்கள் அறிய விருப்பமில்லாமல் செய்ததால் தான் எனலாமா?

இலக்கியங்கள், இலக்கணம் படிக்க எவனுக்கும் உரிமையிருக்கின்றது. அதைப் படிக்காமல் விடுவதும் அவனைப் பொறுத்ததே! ஆனால் தமிழகத்தில் எத்தனையாயிரம் பேர், கல்வியறிவற்ற நிலமையைப் போக்க விரும்பாத, அதைப் பற்றிக் கவலைப்படாத பெரியார், தமிழ்மொழிக்கு துணை நின்றவர்களைக் குறி வைத்துத் தாக்கியிருக்கின்றார் என்றால் அதில் ஏதோ சூட்சமம் இருக்கின்றது.

தன்னைத் தமிழ் ஆர்வலராகக் காட்டும் இளங்கோ, அத் தமிழ் களஞ்சியத்தைத் தமிழுக்குத் தந்த, புலவர்களைப் பெரியார் திட்டியபோதும், மெளனமாக இருப்பது கன்னடன் காலில் விழுந்த நிலையைத் தான் காட்டுகின்றது

சாதி, ஒழிப்புக்கு ஆசைப்படுபவர்கள் நோக்க வேண்டியது. எந்தச் சாதிப் பெயர்கள், தமிழனைச் சிதைக்கின்றது என்று கருதினமோ, எச் சாதிப்பெயர்களை அழிப்பதாகப் பகுத்தறிவாளர்கள் கும்பல்கள் காட்டிக் கொள்ள முனைந்ததோ, அச் சாதிப்பெயர்களைத் தயக்கமின்றி வரிக்கு, வரி பெரியார் உரைக்கின்றார். இந்த இலட்சணத்தில் தமிழரின் ஜாதிப்பிரிவினைக்கு எதிராக இவர்கள் இருக்கின்றார்களாம்.

-------------------------------------------------------------

தமிழ் வளர்த்த மூத்தவர்களைப் பெரியார் திட்டியது சரி என்று எடுக்கின்ற எவரும், அத் தமிழ் வளர்த்தவர்களை அடையாளப்படுத்ததீர்கள். அவ்வாறு அடையாளம் கொடுக்காமல், உங்களின் தமிழ் பற்றைக் காட்டிக் கொள்ளுங்கள். பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்கு ஆன கதை மாதிரி, வடமொழியை எதிர்க்கப் போய், அதை விட அதிகமாக ஆங்கிலக்கலப்பை உள்வாங்கிக் கொண்டார்கள்.

இதைப் பற்றி எந்தப் பகுத்தறிவுக் கும்பல்களும், கவலைப்பட்டதாக்க காணோம். இக்கணத்தில் தான் தமிழ் புலவர்கள், பாடல்கள் மூலம், எவ்வளவு தூரம் மக்களுக்கு பாடல்கள் மூலம் தமிழ் வளர்த்தனர் என்பதைப் புரியலாம்.

வீரத் தமிழனாக இருந்தவன் பார்ப்பனர்களின் சொல்லைக் கேட்டு கோயில் கட்டத் தொடங்கினானோ அன்றைக்கு விழுந்து விட்டான்.

வர்ணங்களை ஏற்றபோதே விழுந்து விட்டான்.

புலவர்கள் தமிழர்களின் எதிரிகளை போற்றிப் பாடிக் கொண்டிருந்ததால்தான் பெரியார் புலவர்களை கண்டித்தார்.

நாம் யாரும் இந்தி படிப்பதற்கு எதிரானவர்கள் அல்ல. ஈழத் தமிழர்கள் சிங்களம் படிப்பதையும் விரும்புவோம். எதையும் திணிப்பதற்கே எதிரானவர்கள்.

இந்தியை படிப்பதற்கு பள்ளிக்கூடம் திறப்பது ஒன்றும் குற்றம் அல்ல. இந்தியை கட்டாயம் தமிழர்கள் படிக்க வேண்டும் என்பதுதான் தவறு.

தமிழர்கள் முன்னேறுவதற்கு என்ன மொழி தேவையோ அதை படிக்க வேண்டும் என்பது பெரியாரின் கொள்கையாக இருந்தது. அவர் இந்திப் பள்ளிக்கூடம் திறந்த போது, அவருடைய கருத்து இந்தி தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தேவையானது என்று இருந்திருக்கும்.

அது திணிக்கப்பட்ட போது அவர் எதிர்த்தார்.

இதில் முரண்பாடு எங்கே இருக்கிறது?

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அந்தக் கட்சி நியதிக் கேற்ப அவர் இந்திப் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அதன் பின் அவர் உண்மையை உணர்ந்து கொண்டார். 1925 ஆம் அவர் காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதைக் கட்சியை தொடங்கியதன் நோக்கம் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழித்து சமூக நீதியை நிலை நாட்டவே. அவர் தனது குடியரசு இதழை தொடங்கும் போது எல்லம் வல்ல இறைவன் அருள்புரிவாராக என்றுதான் எழுதினார். அப்போது அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்திருக்கிறது. பின் அவர் நாத்திகராக மாறினார்.

இந்தி ஆதிக்கம் செலுத்தியதால்தான் அவர் இந்தியை எதிர்த்தார். பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தியதால்தான் அவர் அதை எதிர்த்தார். ஆண்கள் ஆதிக்கம் செலுத்தியதால் அவர் ஆண்களை எதிர்த்தார். அவரது ஒவ்வொரு போராட்டமும் ஆதிக்கத்திற்கு எதிரான சமூகநீதிப் போராட்டமே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் முன்னேறுவதற்கு என்ன மொழி தேவையோ அதை படிக்க வேண்டும் என்பது பெரியாரின் கொள்கையாக இருந்தது. அவர் இந்திப் பள்ளிக்கூடம் திறந்த போது, அவருடைய கருத்து இந்தி தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தேவையானது என்று இருந்திருக்கும்.

அவர் காங்கிரசில் இருந்ததால்தான் அந்த நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. (அந்த குதிரைகளின் பாஷை தமிழனுக்கு ஒருபோதும் தேவையில்லை) காங்கிரசை விட்டு வெளியேறியதும் அவர் இந்தியை ஒருபோதும் தூக்கிப் பிடித்ததில்லை. அவர் ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தார். அதற்கு நீங்கள் குறிப்பிட்டது காரணம். ஆனால் பிற்காலத்தில் அவர் தமிழ் மொழியையே உயர்த்திப் பிடித்தார்.

பெரியார் இன்று இருந்திருந்தால் ஆங்கில ஆதிக்கத்தை அவர் நிச்சயம் எதிர்த்திருப்பர்.

Edited by இளங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.