Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜயதாஸ ராஜபக்ஷவை பதவி நீக்கினார் ஜனாதிபதி

Featured Replies

விஜயதாஸ ராஜபக்ஷவை பதவி நீக்கினார் ஜனாதிபதி

 

 

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சர் பதவியிலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

Image result for விஜயதாஸ ராஜபக்ஷவை

இது தொடர்பில் அமைச்சர் விஜயதாஸவுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

நீதியமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ஷவை நீக்குமாறு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில்விக்ரமசிங்க, ஜனாதிபதியிடம் நேற்று கோரி இருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சனம் செய்ததன் மூலம் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பொறுப்புக்களை மீறியுள்ளாரென்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரது அமைச்சுப் பதவிகளை நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்டுள்ளது.

இத்தீர்மானத்துக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் நேற்றுக் காலை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் அமைச்சுப் பதவிகளை நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஜனாதிபதி தனது தீர்மானத்தை இன்று அறிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/23482

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தருக்கு ஆப்பு இறுகுது. :rolleyes:

  • தொடங்கியவர்

பதவி நீக்கப்பட்டார் விஜேதாஸ

p21-2ddd1fbae606a09f1d6ba06abe4b8fdac934ea27.jpg

 

ஐ.தே.க.வின் கோரிக்கைக்கமைய ஜனாதிபதி நடவடிக்கை
 (ரொபட் அன்­டனி)

விஜே­தாஸ ராஜ­ப­க் ஷ நீதி­ மற்றும் புத்தசாசன அ­மைச்சர் பத­வி­யி­லி­ருந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்ளார். விஜே­தாஸ ராஜ­ப­க் ஷவை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­க­வேண்­டு­மென்று ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் விடுத்­தி­ருந்த கோரிக்­கைக்கு அமை­வா­கவே ஜனா­தி­பதி அவரை பதவி நீக்கம் செய்­துள்ளார். அதன்படி தனது அமைச்சு பதவி நீக்கம் தொடர்­பான கடிதம் கிடைத்­ததன் பின்னர் நேற்றுபிற்பகல் நீதி­ய­மைச்­சுக்கு வருகை தந்த விஜே­தாஸ ராஜ­பக் ஷ தான் பதவி வில­க­வில்லை என்றும் தன்னை பதவி நீக்கம் செய்­துள்­ளனர் என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பத­வி­யிலி­ருந்து விஜே­தாஸ ராஜ­ப­க் ஷவை நீக்­க­ வேண்டும் என்ற ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் கோரிக்­கைக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இணக்கம் தெரி­வித்­துள்­ள­மையை சுட்­டிக்­காட்டியே விஜே­தாஸ ராஜ­ப­க் ஷ­வுக்கு நேற்­றுக்­காலை ஜனா­தி­பதி செய­ல­கத்­தி­லி­ருந்து கடி­த­மொன்று

அனுப்­பப்­பட்டிருந்தது.

விஜே­தாஸ ராஜ­ப­க் ஷ ­வுக்கு அனுப்­பப்­பட்­டுள்ள இந்த கடி­தத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யினால் விடுக்­கப்­பட்ட கோரிக்கை மற்றும் ஜனா­தி­பதி சம்­மதம் தெரி­வித்த விட­யங்கள் உள்­ள­டங்­கி­யி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது. அதன்­படி தான் பதவி நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக விஜே­தாஸ ராஜ­பக் ஷ அறி­வித்­துள்ளார். இதே­வேளை நேற்று காலை

  அர­சாங்கத் தவகல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யிட்ட பேச்­சாளர் கயந்த கரு­ணா­தி­லக்க விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷவை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்­கான கடிதம் ஜனா­தி­ப­தி­யினால் அனுப்­ப­பட்­டுள்­ள­தா­கவும், அது தொடர்­பான தக­வல்­களை விரைவில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பெற்­றுக்­கொள்ள முடியும் எனவும் கூறினார்.

அந்­த­வ­கையில் கடந்த சில தினங்­க­ளாக இழு­ப­றியில் இருந்து வந்த விஜே­தாஸ ராஜ­பக்ஷ விவ­கா­ரத்தில் முடிவு எட்­டப்­பட்­டுள்­ளது. விஜ­ய­தாஸ ராஜபக் ஷவை அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கடந்த திங்­கட்­கி­ழமை இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். அதற்­க­மை­யவே தற்­போது அமைச்­சரை பதவி நீக்­கு­வ­தற்கு அர­சாங்க மட்­டத்தில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ அமைச்­ச­ரவைக் கூட்­டுப்­பொ­றுப்பை மீறி­யுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் பின் வரிசைப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அண்­மையில் குற்­றம்­சாட்­டி­யி­ருந்­த­துடன் அவரை பதவி வில­கு­மாறு வலி­யு­றுத்­தி­ய­துடன் அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கித்து வந்­தனர்.

எனினும் தான் எக்­கா­ரணம் கொண்டும் இரா­ஜி­னாமா செய்­ய­மாட்டேன் என விஜ­ய­தாஸ ராஜபக் ஷ தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் நான்கு பௌத்த பீடங்­க­ளையும் சேர்ந்த தேரர்­களும் அமைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷவுக்கு தமது ஆத­ரவைத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

எனினும் கடந்த வாரம் நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழுக் கூட்­டத்­திலும் விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷ­வுக்கு எதி­ராக கடும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

அதா­வது அமைச்­ச­ரவை கூட்­டுப்­பொ­றுப்பை மீறி விஜ­ய­தாஸ ராஜபக் ஷ செயற்­பட்­டுள்­ளதால் அவர் பதவி விலக வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் எம்.பி.க்கள் கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­யி­ருந்­தனர்.

எனினும் அவர்­மீ­தான குற்­றச்­சாட்­டுக்­களை ஆராய எம்.பி.க்களான மங்­கள சம­ர­வீர, மலிக் சம­ர­விக்­கி­ரம மற்றும் ரவீந்­திர சம­ர­வீர ஆகிய மூவர் கொண்ட குழு நிய­மிக்­கப்­பட்­டது. ஆனால் அந்­தக்­கு­ழு­வுடன் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ ஓத்­து­ழைத்து செயற்­ப­ட­வில்லை என தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் அக்­கு­ழுவின் அறிக்­கை­பி­ர­த­ம­ரிடம் சில தினங்களுக்கு முன்னர் கைய­ளிக்­கப்­பட்­டது. அதன் பின்­னரே அமைச்சர் விஜ­ய­தா­ஸவை பதவி நீக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். அந்த வகையில் பிரதமரின் கோரிக்கையையேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவி நீக்கத்தினை செய்துள்ளார்.

தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் அமைச்சுப் பத­வி­களை புரிந்துணர்வின் அடிப்படையில் பகிர்ந்து கொண்­டுள்­ளன. அந்­த­வ­கையில் நீதி­ய­மைச்­சா­னது ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம் இருக்­கி­றது.

எனவே ஐ.தே.க.வைச் சேர்ந்த ஒருவரின் அமைச்சுப் பத­வியை மாற்றி வேறு ஒரு­வ­ருக்கு வழங்­கு­மாறு ஐக்­கிய தேசியக் கட்சியின் தலைவர் கூறுமிடத்து அதனை ஜனாதிபதி செவிமடுத்தே ஆகவேண்டிய நிலைமை காணப்படுகிறது. அதன்படியே தற்போது ஐக்கிய தேசியக்கட்சியின் தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்து ஜனாதிபதி விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு பதவி நீக்கல் கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

ஏற்கனவே நீதியமைச்சருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வர முயற்சித்தனர். எனினும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவின் தலையீட்டை அடுத்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.  

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.