Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் விவகாரம் ; வெளியானது புதிய தகவல்கள், கைதாகினர் பிரபல பாடசாலை மாணவன், தந்தையான பொலிஸ் வைத்தியர்

Featured Replies

உயர்தரப் பரீட்­சை  வினாத்தாள் விவகாரம் ; வெளியானது புதிய தகவல்கள், கைதாகினர் பிரபல பாடசாலை மாணவன், தந்தையான பொலிஸ் வைத்தியர்

 

 

கல்விப் பொதுத் தரா­தர உயர்தரப் பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாடம் -2017, பகுதி இரண்டு வினாத்தாளினை பரீட்சை இடம்­பெறும்போதே நவீன தொலைத்தொடர்பு கரு­வி­யினைப் பயன்­ப­டுத்தி மண்­ட­பத்­துக்கு வெளியில் அனுப்பி, கேள்­வி­க­ளுக்­கான விடை­களை எழு­தி­ய­தாக கூறப்­படும் கொழும்பு பிர­பல பாட­சா­லையின் மாணவன் ஒரு­வரை  குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கைது செய்­தனர்.

 

அவருடன் குறித்த சம்பவத்துக்கு உடந்தையாக செயற்பட்ட மாணவனின் தந்தையான நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையின் வைத்தியரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான சந்தேக நபரையும் சி.ஐ.டி.யினர் கைது செய்தனர்.

 

கல்விப் பொதுத் தரா­தர உயர்தர பரீட்சை 2017 இன் இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாட வினா பத்­தி­ரத்தின் பகுதி இரண்டில் கேட்­கப்­பட்­டி­ருந்த வினாக்­க­ளுடன் கூடிய துண்டுப்பிர­சு­ரங்­களை கம்­பஹா  மகளிர் பாட­சாலை ஒன்றின் முன்­பாக விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களின் போதே இவ் விருவரையும் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று கைது செய்­தனர்.

உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகரின் மக­னுக்கு இர­சா­ய­ன­வியல் கேள்­வி­க­ளுக்கு விடை சொல்லிக் கொடுக்க, இந்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­டை­யவர் என்னும் சந்­தே­கத்தில் தேடப்­படும் மேல­திக வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா ஒப்­பந்த அடிப்­ப­டையில் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதன் பிர­கா­ரமே இந்த வினா பத்­திரம் நவீன கரு­வியைப் பயன்­ப­டுத்தி, வட்ஸ்அப் ஊடாக ஆசி­ரி­ய­ருக்கு குறித்த மாண­வனால் அனுப்­பப்பட்­டுள்­ள­தா­கவும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது.

 

இவ்­வாறே குறித்த கேள்­விகள் பெறப்­பட்டு துண்டுப்பிர­சுரம்  அச்­சி­டப்­பட்­டுள்­ள­தாக விசா­ரணை ஊடாக உறு­தி­யா­கி­யுள்­ளது. இதனால் பரீட்­சைக்கு முன்­ன­தா­கவே  வினா பத்­திரம் வெளி­யா­க­வில்லை என்­பதை குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வினர் ஊர்­ஜிதம்  செய்­துள்­ளனர். 

 

இச்­சம்­பவம் தொடர்பில் ஏற்­க­னவே தேடப்­படும் மேல­திக வகுப்பு ஆசி­ரி­யரின் தந்­தை­யையும் சகோ­த­ர­ரையும் துண்டுப் பிர­சு­ரத்தை வினாத்­தாளில் உள்ள கேள்­வி­க­ளுடன் அச்­சிட்டு வழங்­கிய அச்­சக உரி­மை­யா­ள­ரையும் கைது செய்து எதிர்­வரும் 30 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைத்­துள்ள நிலை­யி­லேயே மேல­திக விசா­ர­ணை­களில் இந்த மாணவனையும் தந்தையான உதவி பொலிஸ் அத்தியட்சகரும் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்ளனர். 

 

இதனையடுத்து அவ்விருவரும் நேற்று இரவு கம்பஹா நீதிவான் டி. ஏ .ருவன் பத்திரன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  நீதிவான் உத்தரவிட்டார்

நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தரா­தர உயர்தர பரீட்­சையின் இர­சா­ய­ன­வியல் விஞ்­ஞான பாடத்­துக்­கான வினா பத்­தி­ரத்தின் 3 பிர­தான கேள்­விகள், பரீட்சை நேரத்­துக்கு முன்­ப­தா­கவே வெளி­யா­கி­விட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­பட்ட நிலையில் அது தொடர்பில் பெற்றோர் சிலர் பரீட்­சைகள் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­தி­ருந்­தனர்.

 

இத­னை­ய­டுத்து பரீட்­சைகள் ஆணை­யாளர் எம்.என்.ஜே. புஷ்­ப­கு­மா­ரவின் ஆலோ­ச­னைக்கு அமைய உதவி பரீட்­சைகள் ஆணை­யாளர் பொலிஸ் மா அதி­பரின் நிவா­ரணப் பிரிவில் அது தொடர்பில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் கவ­னத்­துக்கு குறித்த விவ­காரம் கொண்­டு­வ­ரப்­பட்­டதை தொடர்ந்து, பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உத்­த­ர­வுக்கு அமைய கம்­பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­லவின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்டன். 

இது தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­திய பொலிஸார் குறித்த துண்டுப்பிர­சு­ரத்தை விநி­யோ­கித்­த­தாக கூறப்­படும் கந்­தான, பட்­ட­கம பகு­தியைச் சேர்ந்த இரு­வரை நேற்று முன்தினம் கைது செய்­தனர். 67 வய­தான நபர் ஒரு­வ­ரையும் அவ­ரது 29 வய­தான மகன் மற்றும் 42 வய­தான அச்­சக உரி­மை­யாளர் ஆகி­யோரைக் கைது செய்­தனர். இத­னை­ய­டுத்து மேல­திக விசா­ர­ணைகளை நடத்துவதற்கான பொறுப்பு குற்றப் புல­னா­ய்வுப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது. 

குற்றப்புல­னா­ய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பணிப்­பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் பிரதிப் பணிப்­பாளர் சானி அபே­சே­க­ரவின் வழி நடத்­தலில்  மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இந்த சம்­பவம் தொடர்பில் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்ள தக­வல்­க­ளுக்கு அமைய, கொழும்பின் பிர­பல பாட­சாலை மாண­வ­னான குறித்த உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகரின் மகன், பரீட்­சைக்கு செல்லும் போது பரீட்சை வினாத்­தாளை ஸ்கேன் செய்­யத்­தக்க ஒரு­வகை நவீன கரு­வி­யையும், காதில் புளூடூத் உடன் கூடிய கருவி ஒன்­றி­னையும் எடுத்து சென்­றுள்ளான். 

ஏற்­க­னவே இது திட்­ட­மி­டப்­பட்­டுள்ள நிலையில், அம்­மா­ணவன் நவீன கரு­வியைப் பயன்­ப­டுத்தி, வினாத்­தாளை மேல­திக வகுப்பு ஆசி­ரி­ய­ருக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்­பி­யுள்ளார். அதற்கு ஆசி­ரியர் சொல்லிக் கொடுக்கும் விடை­யினை அம்­மா­ணவன் எழு­தி­யுள்ளான். இது தொடர்பில் ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இவ்­வாறு ஆசி­ரியர் வட்ஸ்அப் மூலம் பெற்ற வினாத்­தாளில் உள்ள வினாக்கள் மூன்­றினை உட­ன­டி­யாக தனது மேல­திக வகுப்­புக்கு மாண­வர்­களை ஈர்க்கும் துண்டுப் பிர­சு­ரத்தில், பரீட்சை இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்கும் போதே இணைத்து அச்­சிட்டு, சகோ­தரன் உத­வி­யுடன் பகிர்ந்­துள்ளார். 

இது தொடர்பில் ஆறு ஊழி­யர்­களை அவர்கள் நாள் சம்­பளம் அடிப்­ப­டையில் பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட மூவ­ருக்கு மேல­தி­க­மாக குற்றப்புல­னா­ய்வுப் பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு மாண­வனை நேற்று கைது செய்தது. 

அத்­துடன் தலை­ம­றை­வா­கி­யுள்ள மேல­திக வகுப்பு ஆசி­ரி­யரை கைது செய்ய அவ­ரது தொலை­பேசி பதி­வுகள் உள்­ளிட்ட பல­வற்­றினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பொலிஸார் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். இந்த குற்­றத்­துடன் தொடர்­பு­டைய தொடர்­பாடல் கரு­விகள் சில­வற்­றையும், வழங்­கப்­பட்ட பணத்தில் பெரும்­பா­லான பகு­தி­யையும் மீட்­டுள்ள பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/23542

6 hours ago, நவீனன் said:

கொழும்பின் பிர­பல பாட­சாலை மாண­வ­னான குறித்த உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகரின் மகன், பரீட்­சைக்கு செல்லும் போது பரீட்சை வினாத்­தாளை ஸ்கேன் செய்­யத்­தக்க ஒரு­வகை நவீன கரு­வி­யையும், காதில் புளூடூத் உடன் கூடிய கருவி ஒன்­றி­னையும் எடுத்து சென்­றுள்ளான். 

6 hours ago, நவீனன் said:

ஆசி­ரியர் சொல்லிக் கொடுக்கும் விடை­யினை அம்­மா­ணவன் எழு­தி­யுள்ளான். இது தொடர்பில் ஆசி­ரி­ய­ருக்கு 10 இலட்சம் ரூபா ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ள­தாக

சிங்கள-பௌத்த போலீஸ் சமூகவிரோதிகளின் அடாவடித்தனம் பல வடிவங்களில் அரங்கேறுகிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.