Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை

Featured Replies

விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை

எரிமலைபடத்தின் காப்புரிமைBERNARD MERIC/AFP/GETTY IMAGES

700 ஆண்டுகளின் மிகப்பெரிய அளவிலான எரிமலை வெடிப்பாக இருந்தாலும், அதற்கு காரணமான எரிமலையை விஞ்ஞானிகளால் இன்னமும் கண்டறியமுடியவில்லை.

1465 அக்டோபர் பத்தாம் தேதி, நேப்பள்சின் அரசர் இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம், மிலானைச் சேர்ந்த புகழ்பெற்ற இப்போலிட்டா மரியாஸ் கொர்பாவுடன் ஆடம்பரமாக நடைபெறவிருந்ததால், மக்கள் அனைவரும் உற்சாகம் அடைந்திருந்தனர். மணப்பெண்ணை பார்க்கும் ஆவலில் நகருக்குள் அவர் நுழைந்ததும் அவரை காணவேண்டும் என்று திரளான மக்கள் கூடினார்கள்.

அதற்குமுன் பார்த்திராத, வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அழகான காட்சியை அவர்கள் பார்த்தார்கள். அந்தோ! இந்த வர்ணனை மணப்பெண்ணை பற்றியதல்ல… நண்பகல் வேளையில், வானம் கருத்துப்போய், சூரியன் மங்கி, நகரையே இருளில் மூழ்கடித்துவிட்டது. சூரியகிரகணமாக இருக்குமோ? என்றும் வதந்திகள் பரவின. நண்பகலில் வானத்தில் அந்தி சாய்ந்தது போல தோன்றியபொழுது, அது வானிலை மாற்றத்தின் விளைவாக இருக்கலாம் என கருதப்பட்டது. அடர்ந்த, ஈரமான மூடுபனியாக வானத்தில் இருள் கவிந்த அந்தக் காலம் ஈரமான இலையுதிர்க் காலம்.

'கண்டறியமுடியாத வெடிப்பு' பல மைல்கள் உயரமான சாம்பல் மேடுகளை உருவாக்கியதுபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY Image caption'கண்டறியமுடியாத வெடிப்பு' பல மைல்கள் உயரமான சாம்பல் மேடுகளை உருவாக்கியது

அதுதான் முதல் அறிகுறி. தொடர்ந்து சில மாதங்களில் ஐரோப்பா முழுவதிலும் வானிலை மாற்றங்கள் தாறுமாறாயின. ஜெர்மனியில் அடைமழை கொட்ட, போலந்தின் த்ரோன் நகர வீதிகளில் மக்கள் படகு சவாரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ட்யூடொனிக்கில் தொடர்ந்து கொட்டிய அடைமழை, குதிரைகளை அடித்துச் சென்றது; கிராமங்களும் மூழ்கின.

பிறகு, அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பாவிற்கு பனியால் பாதிப்பு ஏற்பட்டது. குளங்களில் நீந்திய மீன்கள் உறைந்து போயின, மரங்கள் மலர்களை மலர்விக்க மறந்துபோக, புல்லும் முளைக்கமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தது. இத்தாலியின் போலங்காவில் நிலவிய கடும் பனியால், உறைந்துபோன நீர்வழித் தடங்களில், உள்ளூர் மக்கள் தங்கள் குதிரைகள் மற்றும் வண்டிகளில் பயணித்தனர்.

உண்மையில் அரசர் இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அசாதாரணமாக இருந்தது. வெப்பமண்டலப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து ஒரு பெரிய எரிமலை, இந்த மறக்கமுடியாத புவியியல் சரித்திரத்தை ஏற்படுத்தியது.

பூமியை சாம்பல் மேகத்தால் சூழச் செய்த இந்த மிகப் பெரிய வெடிப்பு, பல நூற்றாண்டுகளிலேயே குளுமையான தசாப்தம் என்று சொல்லும் அளவுக்கு பூமியை குளிர்வித்தது.

இந்த வெடிப்பினால் 2,000 கி.மீ (1,242 மைல்) தொலைவுக்கு சப்தம் எழும்பியது. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு பேரழிவை ஏற்படுத்திய சுனாமியையும் உருவாக்கியது. இதன் அளவை குறிப்பிட வேண்டுமானால், 1815இல் தம்பொராவில் ஏற்பட்ட வெடிப்பை விட பெரியதாகவும், 2.2 மில்லியன் லிட்டில் பாய் அணுகுண்டுகளுக்கு சமமான ஆற்றலை வெளியிட்டது என்று சொல்லலாம். இதில் குறைந்தபட்சம் 70,000 பேர் பலியாகினார்கள். இந்த வெடிப்பின் தடயங்கள் அண்டார்டிகாவில் இருந்து கிரீன்லாந்து வரை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பேரழிவுக்கு காரணமான எரிமலை கண்டுபிடிக்கப்பட்டதா? என்ன நடக்கிறது?

புவியியல் புதிராக தொடரும் இந்த வெடிப்பு, பல தசாப்தங்களாக புவியியலாளர்களுக்கு சவாலாக இருக்கிறது

'கண்டறியப்படாத வெடிப்பு' நிகழ்ந்ததை மறுக்க இயலாது. பிற பெரிய அளவிலான வெடிப்புகளைப் போலவே இதிலும் கந்தகம் அதிகமாகக் கொண்ட பாறைகள் வளிமண்டலத்தில் வெடித்துச் சிதறின. இறுதியில் துருவப் பிரதேசங்களிலும் கந்தக அமிலம் பொழிந்தது. அங்கு அவை பனிக்குள் சிறைப்பட்டு, இயற்கையுடன் ஒன்றிணைந்துவிட்டது, இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு படிமங்களாக நீடிக்கும்.

ஆனால் அதை நிரூபிப்பது எளிதானதாக இருந்தாலும் விஞ்ஞானிகளுக்கு பல கருத்துக்களில் தெளிவு ஏற்படவில்லை. இது ஒரு புவியியல் மர்மமாக பல தசாப்தங்களாக புவியியலாளர்களின் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் சவாலாக தொடர்கிறது.

ஒரு வதந்தியாலும், தெற்கு பசிஃபிக்கடலில் இருக்கும் ஒரு பவளப்பாறை தீவையும் கொண்டு இந்த மர்மக் கதைகள் தொடங்கின…

1950 களில், டோங்கோவிற்கு சென்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பழங்கால நிலப்பகுதியான வன்வாட்டு தொடர்பான கதைகளை அறிந்தனர். அந்தப் பகுதி, பல தலைமுறைகளுக்கு முன்பு அண்டைத் தீவான எப்பியுடன் இணைந்திருந்தது. குவா (Kuwae) என்றும் அழைக்கப்படும் இந்த தீவின் மையத்தில் ஒரு பெரிய எரிமலை இருந்தது.

வெளிப்படையான விஷயங்களைத் தவிர்த்து, உள்ளூர்வாசி ஒருவர், தனது தாயுடன் முறையற்ற உறவை ஏற்படுத்திக் கொண்டது போன்ற பல தார்மீக புறக்கணிப்புகளால் சீற்றமடைந்த எரிமலை, தனது கோபத்தை உமிழ்ந்து இப்படி வெளிப்படுத்தியதாக கதைகள் சொல்லப்பட்டன. மேலும், ஒரே நாளில் ஏற்பட்ட பல வலுவான பூகம்பங்களை அடுத்து, தீவு இரண்டாக பிளந்துவிட்டதாம்!

மாபெரும் வெடிப்புக்கு பிறகு கந்தக அமில மழை துருவங்களில் பொழிந்ததுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமாபெரும் வெடிப்புக்கு பிறகு கந்தக அமில மழை துருவங்களில் பொழிந்தது.

மக்களில் பலர் தப்பித்து, அருகிலிருந்த தீவுகளுக்கு படகுகள் மூலம் வெளியேறினார்கள். பலர் இறந்துபோனாலும், இளைஞனான 'டி டோங்கா லிசெய்ரிகி', எரிமலையின் உமிழ்வு நின்றவுடன் டோங்காவை மீளமைத்தார். அவர் மூலம் பரம்பரையினருக்கு, தலைமுறைகளாக தொடர்ந்து சொல்லப்பட்ட இந்த கதைகள், இன்றும் உயிர்ப்புடன் உலாவுகின்றன.

இப்போது அந்த எரிமலையின் மிச்சமாக இருப்பது சுமார் அரை மைல் ஆழமுள்ள 'குவே கல்டெரா' என்றால், சொச்சமாக இருப்பது, டோங்கா மற்றும் எபியில் ஏற்பட்ட தடிமனான அடுக்கைக் கொண்ட சாம்பல் மேடு மட்டுமே. இந்த எச்சங்கள், நூற்றுக்கணக்கான மைல்கள் வேகத்தில் தீவைத் தாக்கிய அதிக வெப்பமுள்ள எரிவாயு மற்றும் பாறைகளால் உருவானவை.

15ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்த வெடிப்பைப் பற்றி 1980இல் பாறைப் பனிக்கட்டிலிருந்து எடுக்கப்பட்ட படிமங்களில் அமிலத்தன்மை இருப்பதைக் கண்டறியும்வரை விஞ்ஞானிகளும் அறியவில்லை.

குவா (Kuwae) வை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தவர்களுக்கு இதில் ஆதாரம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. குவாவில் ஆட்சி செய்த பழங்குடியினத் தலைவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், கி.பி 1540 முதல் கி.பி 1654 இடைப்பட்ட காலகட்டத்தில் வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.

'லிசைரிகி' எலும்புக்கூட்டிற்கான காலம் 14 முதல் 15 ஆம் நூற்றாண்டுகள் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துவிட்டனர்.

பூமி குளிர்வடைந்த காலகட்டத்தின் அடிப்படையில் குவே வெடிப்பு நிகழ்ந்த சரியான காலகட்டத்தை கண்டறியலாம் என பாங் கூறுகிறார்

விரைவிலேயே வேறு வழிகளில் இருந்தும் ஆதரங்கள் கிடைக்கத் தொடங்கின. அந்த ஆழமான பகுதியை சுற்றியிருக்கும் தீவுகளில் காணப்படும் பொதுவான மொழியியல் வேர்களில் இருந்து பல நூறாண்டுகளாக உள்ளூர் மொழிகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1993இல் நாசாவின் 'ஜெட் ப்ரொபுல்சன் ஆய்வகம்' (Nasa's Jet Propulsion Laboratory) இந்த ஆய்வில் ஈடுபட்டது. வளிமண்டலத்தில் இருக்கும் கந்தக தூசுப்படலங்கள், விண்வெளியை நோக்கி சூரிய ஒளியைப் பிரதிபலித்தன. உமிழ்வுகள் அல்லது வெடிப்புகள் ஏற்படும்போது, அவற்றை குறைக்கச்செய்தால் அதன்விளைவு, மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செயற்கை 'எரிமலைகளை' உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

எனவே, பூமி குளிர்வடைந்த காலத்தின் அடிப்படையில் குவே வெடிப்புக் காலத்தை சரியாக கணிக்கலாம் என்று கூறும் பாங், இதற்காக விரிவான ஆதரங்களை தேடுகிறார். பஞ்சம் ஏற்பட்டது தொடர்பான பழையபதிவுகள், பிரிட்டனின் ஓவியங்களில் செய்யப்பட்டிருக்கும் ஓக் மரச்சட்டங்கள் ஆகியவற்றையும் அவர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்.

இறுதியில் இந்த எரிமலை வெடிப்பு 1453இல் நடைபெற்றிருக்கலாம் என்றும், இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம் இந்த இடையூறை ஏற்படுத்தியது என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டது. ஆனால், மற்றொரு அசம்பாவித சம்பவம் நடைபெற்ற வேறொரு ஆண்டில் திருமண நிகழ்வு நிகழ்ந்திருக்கலாம்.

ஸ்வீடனில் பயிர் பொய்த்துப்போனது, தானியக் கிடங்குகள் காலியாகின. ஐரோப்பா முழுவதும் மரங்களின் வளர்ச்சி தடைபட்டது. சீனாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்தார்கள். சில மாதங்களுக்கு பிறகு வடக்கு மெக்ஸிகோவின் அதே அட்சரேகையில் இருக்கும் யாங்சீ ஆற்றில் 40 நாட்களுக்கு தொடந்து பனிப்பொழிந்தது. இதனால் மஞ்சள் கடல், கரையிலிருந்து 20 கி.மீ தொலைவு வரையிலும் பனியால் உறைந்துபோனது. உலகின் பிற பகுதிகளில், மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது.

1815 இல் தம்போராவின் வெடிப்பே மிகப் பெரியதாக கருதப்பட்டது.படத்தின் காப்புரிமைஅறிவியல் புகைப்பட களஞ்சியம் Image caption1815 இல் தம்போராவின் வெடிப்பே மிகப் பெரியதாக கருதப்பட்டது.

தனது ஆராய்ச்சியில் மிகவும் நம்பிக்கைக் கொண்டிருக்கும் பாங், மே மாதம் 22ஆம் தேதியன்று இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக சொல்கிறார். அன்று கான்ஸ்டான்டினோபிள் நடந்த சண்டையில் இடையூறு ஏற்படுத்தியது துருக்கியின் தாக்குதல்காரர்கள் வைத்த பெரிய அளவிலான "தீ" என்பதைவிட, அந்திசாயும் வேளையில், வெடித்துச் சிதறிய எரிமலையின் சாம்பலின் பிரதிபலிப்பே என்கிறார் பாங்.

அந்த தீவில் நெருக்கமான ஆய்வுகளை மேற்கொள்ள வந்த பிரெஞ்சு புவியியலாளர்களின் குழு, சாம்பலின் இறுதி எச்சங்களைக் கண்டது. அதன் அளவை பார்க்கும்போது, குவாயேவின் வெடிப்பானது, பெரிய அளவிலான 'மேக்மா'வை வெளியிட்டதும், அது எம்பையர் ஸ்டேட்ஸ் கட்டிடத்தை 37 மில்லியன் தடவை நிரப்ப போதுமானது என்றும் கண்டறிந்தது. ஆகாயத்தில் 30மைல் (48 கி.மீ) தொலைவுக்கு வெடிப்பின் சிதறல்கள் தூக்கி வீசப்பட்டன. தம்போராவின் வெடிப்பில், வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிக சல்பேட் வெளியானது. இது, பருவநிலை மீது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அளவைவிட மிகவும் அதிகமானது.

 

முக்கியமாக, கரிமம் கலந்த பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பதற்கான கதிரியக்க அளவைமுறையான, 'கதிரியக்கக் கரிம காலக்கணிப்பு' (Radiocarbon dating) மூலம், மரங்களின் காலத்தை கணித்தபோது, இந்த வெடிப்பானது 1420 முதல் 1430 இடைப்பட்டக் காலத்தில் நடந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. இவை, பனிக்கட்டிகளுடன் சரியாக பொருந்தவில்லை என்றாலும், நெருக்கமானவையாக கருதப்பட்டது.

எரிமலை படிமங்கள் இருப்பதில் சந்தேகம் இல்லையென்றாலும், அவற்றின் அளவானது, எதிர்பார்ப்பைவிட பிரம்மாண்டமானது காரோலி நெமேத், சுற்றுச்சூழல் விஞ்ஞானி

15ஆம் நூற்றாண்டின் 'குவா' வெடிப்பை, 'உத்வேக சேகரிப்பு' (gathering momentum) கோட்பாட்டுடன் ஒப்பிடத் தொடங்கினார்கள். ஆனால், தெளிவு ஏற்படவில்லை. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் குவா வெடிப்பு குறித்து ஆராய்சி செய்த ஃபிரான்சு விஞ்ஞானிகளின் குழு, அந்த குழியைச் சுற்றி அமைந்திருக்கும் எரிமலை வெடித்து சிதறிய தீவுகளுக்கு திரும்பினார்கள்.

நியூசிலாந்தின் மஸ்ஸே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி கரோலி நெமெத் தலைமையிலான குழுவினர், உலகளாவிய பருவநிலை மாறுதல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், பாதிப்பு ஏற்படுத்தும் 'ஸ்பாய்லர் எச்சரிக்கை' எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

உண்மையில் மிகப்பெரிய வெடிப்புக்களில் குறைந்தபட்சம் 25km (15.5 மைல்கள்) உயரத்தில் ஏற்படும். அவை வளிமண்டலத்தின் மேற்பகுதிக்குள் நேரடியாக சல்பரை ஊடுருவச் செய்வதோடு, குப்பைகளை பரவலாக சிதறடிக்கின்றன. 'குவா' எந்த அளவு கண்கவரக்கூடியதாக இருந்தது என்பதை கண்டுபிடிக்க, அது எப்படி வெடித்தது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியிருந்தது.

"அங்கு எரிமலை வெடிப்பின் எச்சங்கள் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை உண்மையிலுமே நாம் கணித்திருக்கும் அளவிலான மிகப்பெரிய வெடிப்பா என்பதைத்தான் கண்டறிய வேண்டியிருந்தது".

எரிமலை வெடிப்பின் எச்சங்களின் படிமங்கள், எரிமலை சிறியது என்றும் 1000 அடி உயரத்திற்கும் அதிகமானதாக இல்லை என்றும் காட்டுகிறது. அது தம்போரா வெடிப்பதற்கு முன் இருந்த உயரத்தில் நான்கில் ஒரு பங்கை விட குறைவானது. "இந்த எரிமலை, ஒரே சமயத்தில் பெரிய அளவில் வெடிப்பதற்கு பதிலாக, மிக சிறிய அளவில், பலமுறை வெடித்தது என்பதே உண்மை" என்பதை தனது ஆய்வின் முடிவாக நெமேத் முன்வைத்தார். உண்மையில் இது ஒரு பேரழிவு வெடிப்பாக இருந்தது அல்லது அப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அறிவியல் சமூகம் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

அண்டார்டிகாவில் பனிக்கட்டி உள்ளகம் அருகே விஞ்ஞானிகள்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅண்டார்டிகாவில் பனிக்கட்டி உள்ளகம் அருகே விஞ்ஞானிகள்.

பிறகு 2012ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் இருக்கும் ஒரு பனிக்கட்டி உள்ளகம் (Ice Core) மிகப் பெரிய ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. 'லா டோம்' (Law Dome) என்ற இடம் மிக அதிக அளவிலான பனிப்பொழிவை எதிர்கொள்ளும் பிரபலமான இடம். தடிமனாக இருக்கும் பனிப் படலமானது, தனிப்பட்ட மற்றும் ஆண்டுதோறும் உருவாகும் பனியை வேறுபடுத்தி காட்டுவதால் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்சிக்கும் உகந்த இடமாக இது திகழ்கிறது.

கடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை வெடிப்புகள் தொடர்பான துல்லியமான பதிவுகளை குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

15 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது, ஒன்றல்ல இரண்டு வெடிப்புகள் என்பதை படிமப்பதிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இவை 1458இல் நிகழ்ந்தவை, குவா வெடிப்பிற்கு மிகவும் பிந்தைய காலத்தில் ஏற்பட்டது. எரிமலையின் புதிர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. ஓராண்டுக்கு பிறகு மற்றொரு ஆய்வு, தங்களது முடிவை உறுதிசெய்தது.

விஞ்ஞானிகள் முரண்படுவது ஏன்?

இறுதியில் மூன்று சூழ்நிலைகளையும் இணைக்கும் ஆதாரம் கிடைத்தது.

'பனி உள்ளகத்தை' கணக்கிடும் முறையில்தான் விஞ்ஞானிகள் முரண்படுகின்றனர். அவர்களால் சரியான தேதியை கொடுக்கமுடியாது, எந்த ஆண்டில் நடைபெற்றது என்பதை மட்டுமே சொல்லமுடியும்.

வருடாந்திர நிகழ்வுகளை வரிசை சக்கரமமாக ஒன்றன் பின் ஒன்றாக சொல்லமுடியும். 'தெரியாத வெடிப்பு' போன்ற நிகழ்வை மதிப்பிடும்போது, பனி உள்ளகத்தில் படிந்திருக்கும் பொருட்களின் தரவுகளுடன் பழைய பதிவுகளுடன் ஒப்பிட்டு அளவுகள் சீரமைக்கப்படுகிறது. அதாவது, 1453 இல் ஏற்பட்ட 'காலநிலை மாற்ற குழப்பம்' போன்ற நிகழ்வுகள்.

"இது நம்பமுடியாத அர்த்தமில்லாத வெற்றுவிவாதமாகவே இருக்கும்" என்கிறார் நெமத். வெடிப்பு 1453ல் நடந்தது என்று கருதப்பட்டது. அப்போது நமது கிரகம் குளிர்ச்சியடைந்தது… அதனால்தான்.

இறுதியில், மூன்று சூழ்நிலைகளையும் இணைப்பதற்கு ஒரே ஆதாரம் உள்ளது. "இது வரலாற்றுத் தகவல்களுக்கு தவறான விளக்கம் கொடுப்பதன் அடிப்படையில் ஏற்பட்டது'' என்று 1465-ல் உலகமே குளிர்ந்துபோன நிகழ்வுக்கான சான்றுகளை ஆராயும் ஜெர்மனியின் லைப்சிக் பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆசிரியர் மார்ட்டின் பாச் கூறுகிறார்.

'தெரியாத வெடிப்புக்கான' ஆதாரங்கள் பனி உள்ளகங்களில் இருந்தது அறியப்பட்டபோது, அந்த இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர், எனவே குவாவில் வெடிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதும், அந்தப் புள்ளிகளை இணைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. "இதுவும் ஒரு விபத்துதான்," என்கிறார் நெமத்.

கான்ஸ்டாண்டினோபிலின் முற்றுகைக்கு ஒரு எரிமலை வெடிப்பு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதப்படுகிறது.படத்தின் காப்புரிமைJEAN-JOSEPH BENJAMIN CONSTANT/WIKIMEDIA COMMONS/PU Image captionகான்ஸ்டாண்டினோபிலின் முற்றுகைக்கு ஒரு எரிமலை வெடிப்பு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதப்படுகிறது.

'குவா'வில் வெடிப்புகள் நடக்கவில்லை என்றால், அது எங்கு நடந்தது?

உண்மையிலேயே உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான உமிழ்வுகள் வெப்ப மண்டலத்தில் நடந்துள்ளன. வெப்பமண்டலங்களுக்கு மேல் உள்ள காற்றானது, எரிமலையில் இருந்து எழும் புகையை தன்னிடம் ஈர்க்கக்கூடியது, அவை வளிமண்டலத்திலேயே பல ஆண்டுகள் நீடிக்கக்கூடியவை.

பூமத்திய ரேகையில் இருந்து துருவங்களை நோக்கி இழுக்கக்கூடிய தன்மை கொண்டதாக இருப்பதால், இந்த குப்பைகள் பரவலான வேகமான காற்றால் பெரிய அளவிலான பரப்பளவிற்கு பரவக்கூடியவை.

"ஒரு பெரிய பகுதியின் வரைபடத்தை பார்க்கும்போது, பசிஃபிக் பிராந்தியத்தின் பல நூற்றுக்கணக்கான எரிமலைகளை பற்றி நாம் பேசுகிறோம்," என்கிறார் நெமத். இந்தோனேசியா, மெலனேசியா, பொலினேசியா மற்றும் மைக்ரோனேஷியாவின் தொலைதூர பகுதிகள் உள்ளிட்ட தீவு வளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டுமென்று பிற விஞ்ஞானிகள் ஆலோசனை கூறுகின்றனர்.

பெரிய அளவிலான வெடிப்புக்கு காரணமான தம்போரா வெடிப்பு 4,300 மீட்டர் உயரத்தில் உமிழ்வை வெளிப்படுத்தியது. கணிக்க முடியாத காரணங்களினால், வெடிப்பிற்கான காரணங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 15ஆம் நூற்றாண்டில் போடப்பட்ட மர்ம முடிச்சு இன்னும் விடுவிக்கப்படவில்லை.

1465இல் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான குளிர்த்தன்மைக்கு காரணம் என்ன? 1460 இல் வெடிப்பு நிகழ்ந்ததாக கணிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு சில ஆண்டுகளில் குளிர் அதிகமானது என்பதை ஒரு உறுதியான ஆதரமாக எடுத்துக்கொள்ளமுடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆனால், அது வெடிப்பின் எதிர்விளைவுகள் நிகழக்கூடிய காலகட்டத்தில்தான் ஏற்பட்டுள்ளது.

ஆனால், உண்மையை யார் இறுதியாக அறுதியிட்டுச் சொல்லமுடியும்? இடையூறு ஏற்படுத்திய எரிமலை வெடிப்பானது, அரசர் இரண்டாம் அல்ஃபன்சாவின் திருமணத்திற்கு கவனத்தை ஈர்ப்பதற்காக நிகழ்ந்ததோ என்னவோ? எது எப்படியிருந்தாலும், இரண்டாம் அல்ஃபோன்சாவின் திருமணம் கவன ஈர்ப்புக்கு தகுந்ததுதான்!

http://www.bbc.com/tamil/science-40719769

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.