Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடும் இந்தியாவின் இராஜதந்திரமும்

Featured Replies

இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடும் இந்தியாவின் இராஜதந்திரமும்

 

 

அமெரிக்கா இந்தியா மற்றும் ஈரான் உள்ளிட்ட 17 நாடுகள் பங்கு பற்றும் இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு எதிர் வரும் வியாழக்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Local_News.jpg

எதிர் வரும் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இந் மாநாடு அலரிமாளிகையில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ் பாபு, மற்றும் வெளியுறவு செயலாளர் எஸ். ஜெயசங்கர் உள்ளிட்ட உயர் மட்ட குழுவினர் எதிர் வரும் புதன் கிழமை இலங்கைக்கு வரவுள்ளனர்.

சீனா தனது பட்டுப்பாதை திட்டத்தை கடல் மற்றும் நிலம் மார்க்கமாக நட்பு நாடுகளின் ஒத்துழைப்புக்களுடன் மிக வேகமாக தனத இழக்கை அடைந்து வருவதால் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு சவாலாகவுள்ளது இதனால் இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு விடயத்தில் இந்தியா முன்பை விட தற்போது கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது.

சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் ஒன்றே ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் என நன்கு அறிந்த இந்தியா இங்குள்ள நிலைமைகளை சரி செய்வதற்கும் இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொளவதற்குமான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இச் சூழ் நிலையில் இலங்கையில் இடம்பெறவுள்ள இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாட்டை தனக்கு சார்பாக்கி கொள்ளும் முழு மூச்சுடனே இரண்டு மத்திய அமைச்சர்கள் உட்பட உயர் மட்ட குழுவை டெல்லி இலங்கைக்கு அனுப்பிவைக்கவுள்ளது.

பல முக்கிய நாடுகளின் பிரமுகர்களின் பங்களிப்புடன் கொழும்பில் இடம்பெறவுள்ள மாநாட்டில் கடல் பாதுகாப்பு சார்ந்த பல விடயங்கள் குறித்து பொது இணக்கப்பாடுகள் எடுக்கப்படவுள்ளன.

http://www.virakesari.lk/article/23640

  • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு மேல வெள்ளம் ஓடத்தொடங்கி விட்டுது இந்தியாவுக்கு .

  • தொடங்கியவர்

தீவிரமாகும் இந்திய - சீன இராஜதந்திர பனிப்போர்

 

17 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு
லியோ நிரோஷ தர்ஷன்

இந்­தியா, அமெ­ரிக்கா மற்றும் ஈரான்  உள்­ளிட்ட 17 நாடுகள் பங்­கு­பற்றும் இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு வியா­ழக்­கி­ழமை கொழும்பில் ஆரம்­பிக்கப்­பட உள்­ளது. இதில் கலந்து கொள்­வ­தற்­காக இந்­தி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி பிரணாப் முகர்ஜி, வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்­திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ சுரேஷ் பாபு மற்றும் வெளி­யு­றவு செயலர் எஸ். ஜெய­சங்கர் உள்­ளிட்ட உயர் மட்டக் குழு­வினர் புதன் கிழமை இலங்கை வரு­கின்­றனர்.  

இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாடு 31 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஆரம்­ப­மாக உள்­ளது . தொடர்ந்தும் இரண்டு நாட்கள் அலரி மாளி­கையில் இடம்­பெ­ற­வுள்ள இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்­கி­லேயே இந்­திய மத்­தி­ய­ரசின் வெளி­வி­வ­கார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலை­மை­யி­லான உயர் மட்ட குழு இலங்கை வரு­கின்­றது.

இதன் போது மாநாட்டின் பக்க நிகழ்­வு­க­ளாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­ன­ருடன் சிறப்பு சந்­திப்­பு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.

இதே வேளை இந்து சமுத்­தி­ரத்தின் பாது­காப்பு ஆதிக்கம் விட­யத்தில் இந்­தியா முன்­பை­விட தற்­போது கூடிய அக்­க­றை­யுடன் செயற்­ப­டு­கின்­றது. ஆபி­ரிக்க முனை வரை­யான சீனாவின் பட்­டுப்­பாதைத் திட்­டம்­இந்து சமுத்­தி­ரத்தின் இந்­தி­யாவின் ஆதிக்­கத்­திற்கு சவா­லாக அமைந்­துள்­ளது. நிலம் மற்றும் கடல் மார்க்­க­மாக சீனா தனது பட்­டுப்­பாதை இலக்கை மிகவும் வேக­மாக நட்பு நாடு­களின் ஒத்­து­ழைப்­பு­க­ளுடன் முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

இதன் அடிப்­ப­டை­யி­லேயே இலங்­கையில் அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனவின் பட்­டுப்­பாதை திட்­டத்­திற்குள் உள்­வாக்­கப்­பட்­டது. தென்­னி­லங்­கையில் அம்­பாந்­தோட்டை பகு­தியை தனது முழு­மை­யான கண்­கா­ணிப்பின் கீழ் வைத்­தி­ருக்க சீனா திட்­ட­மிட்­டுள்­ளது. இதனால் அங்கு வாழும் மீனவ குடும்­பங்­க­ளுக்கு வீட்­டுத்­திட்டம் மற்றும் இளை­யோர்­க­ளுக்­கான தொழில் நுட்பக் கல்வி திட்டம் என பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

எனவே இங்­குள்ள நிலை­மை­களை சரி செய்­வ­தற்கும் இந்து சமுத்­தி­ரத்தில் தனது ஆதிக்­கத்தை தொடர்ந்தும் தக்க வைத்­துக்­கொள்­வ­தற்­கு­மான நகர்­வு­களை இந்­தியா எடுத்து வரு­கின்­றது. இலங்­கையின் துறை­முகம் மற்றும் கரை­யோர திட்­டங்­களில் இந்­தியா அக்­க­றை­யின்றி செயற்­பட்­ட­மையின் விளை­வா­கவே சீனாவின் நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ளது என அந்­நாட்டு மூத்த இரா­ஜ­தந்­தி­ரிகள் விமர்­சித்­துள்­ளனர்.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் இலங்­கையில் இடம்­பெ­ற­வுள்ள இந்து சமுத்­திர பாது­காப்பு மாநாட்டை தனக்கு சாத­க­மாக்கிக் கொள்­வ­தற்கு இந்­தியா முழு மூச்­சுடன் செயற்­ப­டு­கின்­றது. எனவே தான் இரண்டு மத்­திய அமைச்­சர்கள் உட்­பட உயர் மட்டக் குழுவை டில்லி கொழும்­பிற்கு அனுப்­பு­கின்­றது. பல முக்­கிய நாடு­களின் பிர­மு­கர்­களின் பங்­க­ளிப்­புடன் கொழும்பில் நடை­பெ­ற­வுள்ள இந்து சமுத்­திர மாநாட்டில் கடல் பாது­காப்பு சார்ந்த பல விட­யங்கள் குறித்து பொது இணக்­கப்­பா­டு­கள்­எ­டுக்­கப்­பட உள்­ளன.

இந்­நி­லை­யில்­டோக்லாம் விவ­கா­ரத்தில் இந்­தி­யா­விற்கு எதி­ரான பிர­சா­ரத்தை பன்­னா­டு­க­ளிலும் சீனா முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இந்­தியா - சீனா - பூட்டான் ஆகிய மூன்று நாடு­களின் எல்லைப் பகு­திகள் இணையும் பகு­தியே டோக்லாம் பீட­பூமி. இது சிக்கிம் மாநி­லத்தின் எல்­லையில் அமைந்­துள்­ளது. இப்­ப­கு­தியில் கடந்த ஜூன் 16-ஆம் திகதி சீனா வீதிப் பணிகளை மேற்கொண்ட நிலையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு பிரிவு இடையூறு செய்வதாகவும் , சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் இந்தியா செயற்படுவதாகவும் தெரிவித்து 15 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை சீனத் தூதரகம் வெளியிட்டது. இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான இராஜதந்திர போரின் வெளிப்பாடுகளாகவே இது அமைந்துள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-08-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.