Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வளைகுடாவில் கட்டார் வளைந்து கொடுக்குமா?

Featured Replies

வளைகுடாவில் கட்டார் வளைந்து கொடுக்குமா?

 

இலங்­கை­யர்­க­ளா­கிய நாம் கட்டார் என்னும் போது எம்­மவர் தொழில் செய்யும் நாடு என்­பது தான் ஞாப­கத்­துக்கு வரும். இலங்­கையின் வட­ப­கு­தியைப் போன்று கட்­டாரும் ஒரு குடா­நா­டுதான். அதன் ஒரே ஒரு தரை எல்லை சவூதி அரே­பி­யா­வு­ட­னா­ன­தாகும். மூன்று பக்­கமும் கடலால் சூழப்­பட்­டது. தொன்று தொட்டு மீன்­பி­டித்­த­லுக்கு பெயர் போன நாடாகும். எழு­ப­து­களின் இறு­தியில் அரே­பிய எண்ணெய் வள­நா­டுகள் OPEC அமைப்பின் தோற்­றத்­தாலும் தீர்­மா­னங்­க­ளாலும் செல்­வந்த நாடு­க­ளாக நிமிர்ந்­தன. இதற்கு முன்னர் இந்­நா­டு­களின் எண்­ணெய்­வளம் ஐரோப்­பிய, அமெ­ரிக்க கம்­ப­னி­களால் சுரண்­டப்­பட்­டது.

இவ்­வாண்டு ஆனி­மாதம் சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு இராச்­சியம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நான்கு நாடுகள் திடீ­ரென ஒரு அறி­வித்­தலை விடுத்­தன. அதா­வது கட்­டா­ருடன் இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை துண்­டிப்­ப­தா­கவும் தூது­வர்கள் உட்­பட இரா­ஜ­தந்­தி­ரி­களை மீள அழைப்­ப­தா­கவும் அறி­வித்­தன. இரா­ஜ­தந்­திர தொடர்பு துண்­டிக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மல்ல தரை, கடல், விமா­ன­த­டை­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன. இச் செய்தி உலக மக்­க­ளுக்கு வியப்­பா­கவும் இலங்கை மக்­க­ளுக்கு தலை­யி­டி­யா­கவும் இருந்­தது. ஏனெனில் எம்­ம­வர்கள் கணி­ச­மா­ன­ளவில் தொழில் பார்க்கும் நாடு. அங்­கி­ருந்து பெறும் வரு­மானம் பல குடும்­பங்­களை வாழ வைக்­கி­றது. இனி என்­னா­குமோ என்ற கலக்கம் இலங்­கை­யர்­களை வாட்­டி­யது. கட்­டா­ரி­லுள்ள இலங்­கைத்­தூதுவர் உட­ன­டி­யா­கவே தலை­யிட்டு உண்மை நிலையை வெளியிட்டார். இப்­பி­ரச்­சினை ஒரு அர­சியல் இரா­ஜ­தந்­திர நெருக்­கடி எனவும் இதனால் இலங்­கை­யரின் வேலைவாய்ப்­புக்­க­ளுக்கு எந்­தப்­பி­ரச்­ச­ினையும் இல்லை என்­பதை தெளிவு­ப­டுத்­தினார். அர­சாங்­கமும் வெளிவி­வ­கார அமைச்சு,வெளிநாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் மூல­மாக ஆரம்­பத்­தி­லேயே நிலை­மையை தெளிவு­ப­டுத்­தி­யது. இலங்­கை­யர்கள் நிம்­மதி அடைந்­தனர்.

இன்று வரை 9 நாடுகள் கட்­டா­ருடன் முற்­றாக இரா­ஜ­தந்­திர உற­வு­களை துண்­டித்­துள்­ளன. சவூதி தலை­மை­யி­லான நாடு­களைத் தவிர மாலை­தீவு, கொமராஸ், மொரித்­தா­னியா, ஏமன், செனகல் ஆகி­ய­வை­யாகும். சவூதி அரே­பியா, கட்டார் விமா­னங்கள் தனது நாட்டின் வான் பரப்­புக்குள் பறக்க கூடாது எனவும் சவூதி விமா­னத்­த­ளங்­களை பயன்­ப­டுத்த முடி­யா­தென்றும், கட்டார் சரக்கு கப்­பல்­களோ சவூ­தியின் எந்த துறை­மு­கத்­திற்கும் உள்­ளிட முடி­யாது எனவும், சவூதி மத்­திய வங்கி கட்டார் நாட்­டுடன் எந்த நிதி தொடர்­பு­க­ளையும் பேணக்­கூ­டாது எனவும் அறி­வித்­தது. பஹ்ரைன், UAE, எகிப்து ஆகியனவும் இதே வித­மான நட­வ­டிக்­கை­களை அறி­வித்­தன. சவூதி தலை­மையில் ஏனைய நாடுகள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு என்ன காரணம் என அறிந்து கொள்­வது அர­சியல் மாண­வர்கள், அர­சியல் அவ­தா­னிகள், இரா­ஜ­தந்­தி­ரி­கட்கு அவ­சி­ய­மான தொன்­றாகும். கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு துணை போகின்­றது என்­பதே பிர­தான குற்­றச்­சாட்­டாக சவூதியும் ஏனைய நாடு­களும் கூறு­கின்­றன. பிராந்­தி­யத்தில் ஹமாஸ், முஸ்லிம் சகோத­ரத்­துவ இயக்கம் (Muslim Brotherhood), அல்­–கைதா ஆகிய இயக்­கங்­க­ளுக்கு நிதி, தார்­மீக ஆத­ரவை வழங்­கு­கின்­றது என்­பதும் குற்­றச்­சாட்­டாகும். அத்­துடன் சிரி­யாவின் கிளர்ச்சி இயக்­கங்கள் சில­வற்­றுக்கு கட்டார் ஆத­ரவு வழங்­கு­கின்­றது என்­பதும் குற்­றச்­சாட்­டுக்கள் ஆகும்.

கட்டார் சிறிய நாடு. சனத்­தொகை 26 இலட்­சங்­க­ளாகும். அதில் கட்­டா­ரிய மக்கள் 3 இலட்­சத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள். அங்கு தொழில்­பு­ரிய சென்ற வெளிநாட்­டவர் 23 இலட்சம். உலகில் திர­வ­வாயு ஏற்­று­ம­தியில் முத­லா­வது அதிக வரு­மானம் பெறும் நாடு கட்டார் ஆகும். எண்ணெய், வாயு இயற்கை வளங்­களின் இருப்பில் உலகில் 3 ஆவது நாடு. அரே­பிய பிராந்­தி­யத்தில் மிக உயர்ந்த மனி­த­வள அபி­வி­ருத்­தியை கொண்ட நாடாகும். 2022இல் FIFA உலகக் கிண்ண கால்­பந்து போட்டி கட்­டாரில் நடை­பெற உள்­ளது. தனி­நபர் வரு­மா­னத்தில் கட்டார் முத­லிடம் வகிக்­கின்­றது. பிராந்­தி­யத்தில் செல்­வாக்கு செலுத்தும் வல்­லமை உள்­ளது. அமெ­ரிக்க படைத்தளம் அரே­பிய பிர­தே­சத்தில் கட்­டாரில் மட்டும் தான் உள்­ளது. இவ்­வ­ளவு பின்­ன­ணியில் உள்ள கட்டார் எந்தப் புய­லையும் சமா­ளிக்கும் ஆற்றல் கொண்­டது.

எமிர் அல்­தானி நான்கு நாடு­களின் இரா­ஜ­தந்­திர துண்­டிப்பு நட­வ­டிக்­கை­களை நியா­யப்­ப­டுத்த முடி­யாது என கண்­டித்­துள்ளார். ஐ.நா. பாது­காப்பு சபை, பொது­ச்சபை இப்­பி­ரச்­ச­னையை சுமுக­மான முறையில் தீர்க்­க­வேண்டும் எனக் கூறி­யுள்ளார். பயங்­க­ர­வா­தத்­திற்கு துணை­போ­கி­றது என்­பதை கட்டார் முற்­றாக மறுத்­துள்­ளது. சிரி­யாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்­திற்கு அமெ­ரிக்­காவின் எதி­ராக விமான தாக்­கு­த­லுக்கு போர் விமா­னங்கள் கட்­டா­ரி­லுள்ள அல்­உ­த­யத்­ அ­மெ­ரிக்­க வான் தளத்­தி­லி­ருந்தே நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. கட்டார் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக செய்­யப்­ப­டு­கி­றது என கட்டார் கூறு­கின்­றது. எகிப்­திலும் டுனி­சியா, ஏமன் போன்ற நாடு­க­ளிலும் 2010 இல் ஆரம்­பித்த அரபு வசந்தம் என வர்­ணிக்­கப்­படும் மக்கள் போராட்டம் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்­கத்தால் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ேஹாஸ்­னி­ மு­பாரக் எகிப்­திய ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது அவ­ருக்­கெ­தி­ராக கிளர்ச்சி ஆரம்­ப­மா­னது. கட்டார் இவ்­வி­யக்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­யது. முபா­ரக்கின் ஆட்சி மாறு­வ­தற்கு உதவி வழங்­கி­யது.

ஆனால் சவூதி, முபா­ரக்கின் ஆட்­சிக்கு ஆத­ரவு அளித்­தது. பாலஸ்­தீன இயக்கத் தலைவர் யசீர் அரபாத் பாலஸ்­தீன அதி­கார சபைக்கு தலை­வ­ராக இருந்தார். அவரின் பின்பு அப்பாஸ் தலை­வ­ராக தெரிவு செய்­யப்­பட்டார். ஆனால் ஹமாஸ் இயக்­கத்­துடன் பாலஸ்­தீன விடு­தலை இயக்­கத்­துக்கு ஆழ­மான முரண்­பா­டு­களும் உள்­போ­ராட்­டங்­களும் இடம்பெற்­றன. கட்டார் ஹமா­ஸுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றது. பாலஸ்­தீன விடு­தலை இயக்கத் தலைவர், இஸ்­ரேலின் பொம்­மை­யாக செயல்­ப­டு­கிறார் என கட்டார் குற்றம் சாட்­டு­கின்­றது. இவ்­வி­ட­யத்­திலும் சவூதி தலைவர் அப்­பாஸின் பாலஸ்­தீன விடு­தலை இயக்­கத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­கி­றது. செல்­வந்த நாடா­கிய சவூதி, பிராந்­தி­யத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடாகும். அதே நேரம் ஈரா­னுடன் பிராந்­திய ஆதிக்­கப்­போட்­டியும் உள்­ளது. கட்டார் ஈரா­னுடன் நெருங்­கிய உறவைப் பேணு­வது சவூதிக்கு ஏற்­பு­டை­ய­தா­க­வில்லை. சவூதியின் நிலைப்­பாட்டை UAE ஆத­ரிக்­கி­றது. அதேவேளை பஹ்ரைன் சிறிய நாடு. சவூதியின் வெளிநாட்டு கொள்­கையை பின்­பற்றும் நாடு. எகிப்தின் ஆட்­சி­யாளர் முஸ்லிம் சகோ­த­ரத்­து­வத்­திற்கு எதி­ரா­னவர். முபாரக் ஆட்சி கவிழ்ந்து பின்னர் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ ஆத­ர­வாளர் ஜனா­தி­ப­தி­யான பின்னர் அவர் பதவி நீக்­கப்­பட்டு பற்­ற­அல்­சிசி வந்தார். சவூதி அவரை ஆத­ரிக்­கின்­றது.

இவ்­வாண்டு ஆனியில் தற்­போ­தைய நெருக்­கடி நிலை ஆரம்­பித்தாலும் இதற்கு முன்னர் நடை­பெற்ற சில நிகழ்­வு­களும் இன்­றைய நிலை உரு­வாக கார­ண­மா­கின.

2015 இல் ஈராக்கின் தென் பகு­தியில் வேட்­டைக்கு 28 கட்டார் பிர­ஜைகள் சென்­றனர். இவர்­களில் அல்­தானி அர­ச ­வம்­சத்தை சேர்ந்­த­வர்­க­ளும்­ இ­ருந்­தார்­கள்.­ ஷிஆ பயங்­க­ர­வாத குழு ஒன்­றினால் பணயக் கைதி­க­ளாக கடத்­தப்­பட்­டனர். ஈராக், சிரியா நாடு­களில் பல இயக்­கங்கள் யுத்­தத்தில் ஈடு­பட்­டுள்­ளன. பணயக் கைதி­களை விடு­விக்க கட்டார் பல இயக்­கங்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்த நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டது. இறு­தி­யாக சித்­திரை 2017இல் பண­யக்­கை­திகள் விடு­விக்­கப்­பட்டு கட்­டாரைச் சென்­ற­டைந்­தனர். கட்டார் பண­யக்­கை­தி­களை விடு­விக்க ஏரா­ள­மான கப்­பப்­ப­ணத்தை கொடுக்க வேண்­டி­யேற்­றப்­பட்­டது என பல ஊட­கங்­களும் செய்தி வெளியிட்­டன. அத்­துடன் ஷிஆ, சுனி தீவி­ர­வாத இயக்­கங்­களின் உத­வி­யுடன் மனி­தா­பி­மான உத­வி­களை அவ­லப்­படும் சிரியா அக­தி­க­ளுக்கு கிடைக்க கோரு­வதும் இரண்­டா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட அக­தி­களை பாது­காப்­பான இடங்­க­ளுக்கு வெளியேற்­று­வதும் பணயக் கைதிகள் விடு­த­லையில் பேரம் பேசி ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்கள் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது. இவ்­வி­டு­த­லைக்கு ஈரான், ஈராக் ஆகிய நாடு­களின் அர­சாங்­கங்­களும் உத­வின. கப்­பப்­பணம் கொடுக்­கப்­பட்ட விவ­கா­ரமே பயங்­க­ர­வாத இயக்­கங்­க­ளுக்கு கட்டார் நிதி உதவி செய்­கின்­றது என்ற குற்­றச்­சாட்­டுக்கு முன்­னு­ரை­யாகும்.

சித்­திரை 2017இல் சவூதி அரே­பி­யாவில் நடை­பெற்ற ரியாட் உச்சி மாநாட்டில் அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப் விசே­ட­மாக பங்­கு­பற்றி அம்­மா­நாட்டில் சவூதி மன்­னரின் கட்டார் வசை­பா­டு­த­லுக்கு உற்­சா­க­மூட்­டினார். அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் பக்க பலமும் சவூதியின் கட்டார் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பலம் சேர்த்­தது. கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு உத­வு­வதை நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் கூறினார்.

அண்­மைக்­கா­ல­மாக கட்­டாரில் இருந்து இயங்­கி­வரும் சர்­வ­தேச புகழ்­பெற்ற அல்­ஜ­சீரா ஊடக அமைப்பு சைபர் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­வ­ருவ­தாக நடு­நி­லை­யான விமர்­ச­கர்கள் கூறு­கி­றார்கள். சைபர் தாக்­குதல் கார­ண­மாக அல்­ஜ­சீ­ராவில் தவ­று­த­லான செய்­திகள் ஒளிப­ரப்­பப்­பட்டு கட்டார் எமிர் கூறி­ய­தாக பொய்­யான செய்­திகள் பரப்­பப்­பட்­டதும் இம் முறுகல் நிலை உரு­வா­வ­தற்கு கார­ணமாகும். அந்த திரிபுபடுத்தப்­பட்ட செய்­திகள் கட்டார் எமிர் ஈரானை புகழ்ந்து பேசு­வ­தா­கவும் சவூதி, UAE நாடு­க­ளுக்கு ஆத்­திரம் ஊட்டும் வகையில் செய்­திகள் வெளியி­டப்­பட்­டன. இச்சைபர் தாக்­கு­தலின் பின்­ன­ணியை கண்­டு­பி­டிக்க அமெ­ரிக்க புல­னாய்வு நிறு­வனம் FBI கட்டார் வந்து பரி­சோ­த­னைகள் நடத்­தி­யது. அமெ­ரிக்க சவூதி, கட்டார் ஒத்­து­ழைப்­புக்­களில் விரி­சலை எற்­ப­டுத்த ரஷ்ய உள­வா­ளிகள் சைபர் தாக்­குதல் நிகழ்த்தி இருக்க கூடும் என ஒரு ஊகம் தெரி­விக்­கப்­பட்­டது. பின்னர் அது நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

கட்டார், எகிப்து உற­வுகள் 2005இல் தாழ்வு நிலை அடைந்­தன. 21 எகிப்­திய கத்­தோ­லிக்­கர்கள் லிபி­யாவில் சிரச்­சேதம் செய்­த­மையை காரணம் காட்டி எகிப்­திய விமா­னங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். நிலைகள் மீது தாக்­குதல் நடத்­தின. அப்­பாவி மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­ய­தாக அல்­ஜ­சீரா செய்­திகள் வெளியிட்­டது. எகிப்து, கட்டார் பயங்­க­ர­வா­தி­களை ஆத­ரிப்­ப­தாக குற்றம் சாட்­டி­யது. ஆனால்­ வ­ளை­குடா சபை இக்­குற்­றச்­சாட்டை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. சவூதி, கட்டார் இரா­ஜ­தந்­திர உற­வுகள் முன்­னரும் தாழ்வு நிலையை அடைந்­தன. அல்­ஜ­சீரா சவூ­தியைப் பற்றி விமர்­ச­னங்­களை முன்­வைத்­ததை அடுத்து 2002 இல் சவூதி தூது­வரை வாபஸ் பெற்­றது. பின் கட்டார் அல்­ஜ­சீ­ராவை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக வாக்­கு­றுதி அளித்­ததன் பின் 2008 இல் மீண்டும் இரா­ஜ­தந்­திர தொடர்­புகள் மீள­மைக்­கப்­பட்­டன. 2014 இல் UAE, பஹ்ரைன், சவூதி அரே­பியா ஆகிய நாடுகள் இரா­ஜ­தந்­திர தொடர்பை இடை­நி­றுத்­தின. தமது உள்­நாட்டு விவ­கா­ரங்­களில் கட்டார் தலை­யி­டு­வ­தாக குற்றம் சாட்­டின. பின்னர் முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்க உறுப்­பி­னர்கள் கட்­டாரை விட்டு விலக்­கிய பின்னர் நிலைமை தணிந்­தது.

சர்­வ­தேச ரீதி­யாக அமெ­ரிக்க ஜனா­தி­பதியின் நிலைப்­பாடு சுவா­ரஸ்­ய­மா­னது. அவர் கடு­மை­யாக கட்­டாரை கண்­டனம் செய்­கிறார். அதே வேளை அவரின் வெளிநாட்டு, பாது­காப்பு அமை­ச­்சர்கள் கட்­டா­ருக்கு ஆத­ர­வாக பேசு­கின்­றனர். இந்த நெருக்­கடி விரை­வாக தீர்வு காணப்­பட வேண்டும் என்றும் கட்டார் மிக நெருங்­கிய நட்பு நாடு என்றும் அமெரிக்க இரா­ணு­வ­தளம் அமைந்­துள்ள நாடு என்றும் தெரி­விக்­கின்­றனர்.

ஜேர்­மனி கட்­டா­ருக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. கட்டார் பயங்­க­ர­வா­தத்­திற்கு துணை­போ­கின்­றது என்­பதும் சர்­வ­தேச ரீதி­யாக அவ்­வ­ள­வாக எடு­ப­ட­வில்லை. உண்­மையில் பயங்­க­ர­வாத இயக்­கத்­திற்கு சவூதி நிதி உதவி செய்­கின்­ற­தென்ற குற்றச்சாட்டும் ஏற்­க­னவே எழுந்­துள்­ளது. பெரும்­பா­லான உலக நாடுகள் நடு­நி­லையைப் பேணி வரு­கின்­றன.

இந்தப் பின்ன­ணியில் வளை­குடா நாடு­க­ளான குவைத், ஓமான் நடு­நி­லையைப் பேணு­கின்­றன. குவைத் எமிர் சமா­தான முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்றார். சவூ­தியின் 13 நிபந்­த­னை­களை கட்­டா­ருக்கு தெரி­யப்­ப­டுத்தி உள்ளார். சவு­தியின் 13 நிபந்­த­னை­களும் பின்­வ­ரு­மாறு! அல்­ஜ­சீ­ராவை மூடுதல், வேறு ஊடக நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி­யீட்­டத்தை நிறுத்­துதல், ஈரா­னுடன் பொரு­ளா­தார வர்த்­தக தொடர்­பு­களை தவிர அர­சியல் உற­வு­களை குறைத்தல், கட்­டாரில் நிலை கொண்­டுள்ள துருக்கி இரா­ணு­வத்தை அகற்றல், முஸ்லிம் சகோ­த­ரத்­துவம் கம­கலஸ், ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்­கைதா இணைப்­புகள்,ஹிஸ்­புல்லா ஆகிய பயங்­க­ர­வாத இயக்­கங்­க­ளுடன் தொடர்­பு­களை துண்­டிப்­ப­தாக பகி­ரங்க அறி­வித்தல் வெளியி­டுதல், கட்­டாரில் இருக்கும் பயங்­க­ர­வா­திகளை சர­ண­டையச் செய்தல், நான்கு நாடு­களில் உள்­வி­வ­கா­ரங்­களில் தலை­யி­டு­வதை நிறுத்தல், நான்கு நாடு­க­ளிலும் வேண்­டப்­படும் அந்­நாட்டுப் பிர­ஜை­க­ளுக்கு கட்டார் பிரஜாவுரிமை வழங்­கு­வதை நிறுத்தல், ஏற்­க­னவே பிரஜாவுரிமை வழங்­கப்­படல் அவற்றை மீள வாபஸ் பெறுதல், இதற்கு முன் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கு நஷ்ட ஈடு வழங்கல், 2014இல் சவூ­தி­யுடன் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் பிர­காரம் ஏனைய வளைகுடா, அரே­பிய நாடு­க­ளுடன் அர­சியல் பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பை அதி­க­ரித்தல் ஆகும்.

கட்டார் நிலைப்­பாட்­டிற்கு துருக்கி,ஈரான், ரஷ்யா ஆகிய நாடுகள் ஆத­ரவு தெரிவித்­துள்­ளன. பேச்சுவார்த்தை மூலம் சுமுக நிலையை உரு­வாக்க வேண்டும் என கூறி­யுள்­ளனர். துருக்­கியின் இரா­ணு­வத்­தளம் கட்­டாரில் நிலை கொண்­டுள்­ளது. முன்னர் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு ஒப்­பந்தத்தின் கீழ் துருக்­கிய படைகள் கட்­டா­ருக்குள் அனு­ம­திக்­கப்­பட்­டனர். தற்­போ­தைய நெருக்­கடி ஆரம்­பித்த சில தினங்­க­ளுக்குள் துருக்கி படைகள் கட்­டா­ருக்குள் பிரவே­சித்­தன.

கட்டார் ஏனைய மன்­ன­ராட்சி நாடுகள் போன்று அமெ­ரிக்­கா­வுடன் நெருங்­கிய உற­வு­களை பேணி­னாலும் வெளிநாட்­டுக்­கொள்கைத் தீர்­மா­னங்­களில் சுதந்­தி­ர­மான போக்கை கடைப்­பி­டிக்­கின்­றது. அமெ­ரிக்கா ஈரா­னுடன் பகை­மை­யான போக்கை கடைப்­பி­டித்த போது கட்டார் ஈரா­னுடன் உறவு நிலையை பேணி­யது. பாலஸ்­தீன விவ­கா­ரத்தில் பாலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு வர­லாற்று ரீதி­யான இன்­னல்­கள் தீர்க்­கப்­பட்டு பாலஸ்­தீனம் பூரண சுதந்­திர நாடாக அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டு­மென்ற நிலைப்­பாட்டைத் தொடர்ந்து ஆத­ரிக்­கின்­றது. ஏனைய சில பிராந்­திய நாடு­களைப் போன்று சவூதியின் வெளிநாட்டு கொள்கை மார்க்­கத்தை கட்டார் பின்­பற்­ற­வில்லை.

அண்­மையில் ஓமா­னுக்­கான கட்டார் தூதர்­களின் கருத்­துக்கள் கட்டார் நிலையை விளக்­கு­கின்­றது. எமது சகோ­த­ரர்கள் எமக்கு தலை­யி­டி­களை ஏற்­ப­டுத்­திய போதும் நாம் தளர்ந்து விட மாட்டோம். சுயதேவை பூர்த்தி என்பது எமக்கு உறுதியாகி விட்டது. எமது நட்பு நாடுகளின் உதவியுடன் நாம் எந்த சவாலையும் முறியடிப்போம் எனக் கூறியுள்ளனர். தற்போது முஸ்லிம் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு கட்டார் யாத்திரிகர்கள் சவூதிக்கு உம்ரா கடமைகளுக்கு செல்வதற்கு சவூதி இணக்கம் தெரிவித்துள்ளது.

கட்டார் தண்ணீர் உணவு தேவைகளுக்கு வளைகுடா நாடுகளில் தங்கியுள்ளது. பெரும்பாலான பண்டங்கள் சவூதி, கட்டார் எல்லைகளூடாக வருகின்றன. பாதை மூடியதால் ஆரம்ப காலங்களில் கட்டாரில் தட்டுப்பாடுகள் நிலவினாலும் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பியது என கட்டாரில் தொழில் புரியும் எம்மவர்கள் உறுதிப்படுத்துகின்றார்கள். ஈரான், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து தண்ணீர், உணவு பண்டங்கள் தாராளமாக வருகின்றன.

தற்போதைய நெருக்கடி அரசியல் இராஜதந்திர நெருக்கடி என இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர். சவூதி, கட்டார் ஏனைய வளைகுடா சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவைக் கொண்ட நாடுகளாகும். இராஜதந்திரம் என்பது ஒவ்வொரு நாடுகளினதும் சுயநலன்களில் இருந்தே உருவாகிறது. அமெரிக்கா இப்பிரச்சினையை தொடர்ந்து இழுபறியாக இருப்பதை விரும்பவில்லை. இந்நிலையில் இந்நெருக்கடி விரைவில் தீர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. அதேநேரம் பொருளாதார பலமிக்க கட்டார் சவால்களை வெற்றிகரமாக முகங்கொடுப்பதை நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது. இலங்கையர்களின் வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் பின்னிப்பிணைந்த மத்திய கிழக்கு நாடுகளில் பூரண அமைதி சமாதானம் உருவாக வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை ஆகும்.

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் 
(இளைப்பாறிய  பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-26#page-10

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.