Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் கணவன் மீது வெறும் பதவிக்காக குற்றத்தை சுமத்தாதீர்!

Featured Replies

என் கண­வன் மீது வெறும் ப­த­விக்­காக குற்­றத்தை சுமத்­தா­தீர்!

 
 
என் கண­வன்  மீது வெறும்  ப­த­விக்­காக குற்­றத்தை சுமத்­தா­தீர்!

தமது பத­வியைத் தக்க வைப்ப­தற்­கா­க வும் புதி­தா­கப் பத­வி­யைப் பெறுவ­தற் கா­க­வும் எனது கண­வன் மீது பொய்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்த வேண்டாம் என்று தார்மீ­கக் கோபத்து­டன் சீறிச் சினந்­தார் புளொட் அமைப்பி­லிருந்து உயி­ரி­ழந்த ஊத்தை பவான் என அழைக் கப்­ப­டும் கந்­தையா செல்­வ­ரா­சாவின் மனைவி செ.யோக­ராணி.

‘‘எனது கண­வர் புளொட்­டில் இருந்த காலத்தில் எவ­ரை­யும் கொலை செய்­ய­வில்லை. அது எனக்கு நன்கு தெரி­யும். தமது பதவி­யைத் தக்­க­வைக்­க­வும் புதி­தா­கப் பதவி­யைப் பெற்றுக்­கொள்­ள­வும் சிலர் குழப்ப­மான – உண்­மைக்குப் புறம்­பான கதைகளை எனது கண­வர் இறந்த நிலை­யில் கூறு­வதை நான் கண்­டிக்­கின்­றேன்’’ என்று உத­யன் பத்தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார் யோக­ராணி.

பிர­பல பத்­தி­ரி­கை­யா­ளர் தராக்கி சிவராம் கொலை­யு­டன் தொடர்பு­பட்­ட­வர் புளொட் அமைப்­பைச் சேர்ந்த ஊத்தை பவான் என் ப­வரே என்று வடக்கு மாகாண முத­லமைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அண்­மையில் பகி ரங்­க ­மா­கத் தெரி­வித்­தி­ருந்­தார். அது குறித்­துக் கருத்­துத் தெரி­வித்­த­போதே யோக­ராணி அறச் சீற்­றத்­து­டன் தனது கண­வன் மீது பழி­போட்­ட­வர்­களை நிந்­தித்­தார்.

தராக்கி சிவ­ராம் கொலை­யு­டன் தொடர் பு­டை­ய­வர் என்­கிற குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­ப­டு­வ­தன் கார­ணத்­தால் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான கந்­தையா சிவ­நே­ச­னுக்கு(தூள் பவான்) அமைச்­சர் பதவி வழங்க முடி­யாது என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறி­வித்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் தூள் பவா­னுக்கு கடி­தம் ஒன்­றை­யும் அனுப்பி வைத்­தி­ருந்­தார். ஆனால், அண்­மை­யில் நடந்த வடக்கு மாகாண அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது தூள் பவான் எனப்­ப­டும் கந்­தையா சிவ­நே­ச­னுக்கு விவ­சாய அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டது.

கொலைச் சந்­தே­க­ந­பர் என்று கூறி முன்­னர் நிரா­க­ரித்த நப­ருக்கு இப்­போது எப்­படி அமைச்­ச­ராக நிய­ம­னம் வழங்­கி­னீர்­கள் என்று செய்­தி­யா­ளர்­கள் முத­ல­மைச்­ச­ரி­டம் கேட்­ட­னர்.

அதற்­குப் பதி­ல­ளித்த சி.வி.வின்­னேஸ்­வ­ரன், ‘‘தூள் பவன் எனப்­ப­டும் சிவ­நே­சன் குற்­ற­மற்­ற­வர் என்று தெரிந்­த­தால் அமைச்­சுப் பதவி வழங்­கத் தீர்­மா­னித்­தேன். சிவ­ராம் கொலை­யில் தொடர்­பு­பட்­டது இவ­ரல்­லர் அது ஊத்­தை­ப­வான்­தான்’’ என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

முத­ல­மைச்­சர் கூறிய புளொட்­டின் ஊத்தை பவான் எனப்­ப­டும் கந்­தையா செல்­வ­ரா­சா­வின் குடும்­பத்­தி­னர் தற்­போ­தும் வவு­னியா மாவட்­டத்­தில் வசித்து வரு­கின்­ற­னர். முத­ல­மைச்­ச­ரின் கருத்­தால் வெகுண்­டெ­ழுந்­துள்ள செல்­வ­ரா­சா­வின் மனைவி தனது கண­வன் பற்­றிய விவ­ரங்­களை உத­யன் பத்­தி­ரி­கை­யு­டன் பகிர்ந்து கொண்­டார்.

அவர் தெரி­வித்­த­தா­வது:
1989ஆம் ஆண்டு நான் திரு­ம­ணம் செய்­தேன். எனக்கு இப்­போது 5 பெண்­பிள்­ளை­க­ளும் ஒரு ஆண்­பிள்­ளை­யும் இருக்­கின்­ற­னர். எனது கண­வர் புளொட் அமைப்­பின் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்ட காலத்­தில் அவர் செய்­கின்ற நட­வ­டிக்­கை­கள் முழு­வ­தும் எனக்­குத் தெரி­யும்.

அவர் யாரை­யும் கொலை செய்­ய­வில்லை. அநி­யா­ய­மாக எனது கண­வர் மீது கொலைக்­குற்­றச்­சாட்டை சுமத்­து­கின்­றார்­கள். முத­ல­மைச்­சர் கூறி­யதை நான் மறுக்­கின்­றேன். எனது கண­வனை ஊத்தை பவான் என்று அமைப்­பில் கூப்­பி­டு­வார்­கள். அதற்­காக அவர் குற்­றம் செய்­த­வர் என்று அர்த்­த­மல்ல.

பத­விக்­காக எனது கண­வன் மீது குற்­றத்தை சுமத்த முயற்­சிக்­கின்­றார்­கள். அதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது.

எனது கண­வன் 2008ஆம் ஆண்டு மே மாதம் பூந்­தோட்­டம் சந்­திப் பகு­தி­யில் வைத்­துச் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார். அவ­ரது அமைப்­பைச் சேர்ந்த வேறு சில­ரா­லேயே அவர் கொல்­லப்­பட்­டார் என்று எனக்கு தக­வல் கிடைத்­தது. அவர்­கள்­தான் இப்­போது எனது கண­வர் மீது வீண் பழி சுமத்­து­கி­றார்­கள்’’ – என்­றார்.

http://newuthayan.com/story/23281.html

  • தொடங்கியவர்

முத­ல­மைச்­சர் தெளி­வு­ப­டுத்­து­வாரா?

 
 
  •  

கோவ­ல­னுக்கு அநீதி இழைத்த பாண்­டிய அர­ச­னுக்கு முன்­னால் தன் சிலம்­பு­டன் எழுந்து நின்ற கண்­ண­கி­யைப் போன்று தன் கண­வன் மீது சுமத்­தப்­பட்ட பழிக்­காக வெகுண்டு எழுந்­தி­ருக்­கி­றார் ஒரு பெண். புளொட் அமைப்­பின் உறுப்­பி­ன­ரும் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­வ­ரு­மான ஊத்தை பவான் எனப்­ப­டும் கந்­தையா செல்­வ­ரா­சா­வின் விதவை மனைவி.

போர்க் காலங்­க­ளில் புளொட் அமைப்பு இரா­ணு­வத்­து­டன் சேர்ந்­தி­யங்­கி­யது என்­ப­தும் வவு­னி­யா­வில் கடும் அட்­டூ­ழி­யங்­கள் செய்­தது என்­ப­தும் ஒன்­றும் இர­க­சி­யங்­கள் அல்ல. கொழும்பு அரச இரா­ணு­வத்­தின் துணைப் படை­யாக அது இயங்­கி­யது என்­ப­தும் எல்­லோ­ருக்­கும் தெரிந்த ஒன்­று­தான்.

அந்த அமைப்­பின் இரா­ணு­வத் தள­ப­தி­யாக விளங்­கி­ய­வ­ரான மாணிக்­க­தா­சன் ஒரு காலத்­தில் மிகக் கொடூ­ர­மா­ன­வ­ரா­கக் கணிக்­கப்­பட்­டார். புளொட் அமைப்­பின் யாழ். மாவட்­டப் பொறுப்­பா­ள­ராக இருந்த ஒரு­வர் யாழ்ப்­பா­ணத்­தில் கொல்­லப்­பட்­ட­போது அவ­ரைக் கொன்­ற­வர்­க­ளுக்கு அவரை அடை­யா­ளம் காட்­டி­னார் என்று கரு­தப்­பட்ட ஒரு இளை­ஞ­ரின் தலை வெட்­டப்­பட்டு யாழ். நக­ரில் போடப்­பட்ட பயங்­க­ரம்­கூட நடந்­தி­ருக்­கி­றது.

மாணிக்­க­தா­ச­னைப் பார்த்து கட்­சிக்­குள் இருந்­த­வர்­களே அச்­சப்­ப­டும் அள­வுக்­குக்­கூட நில­மை­கள் இருந்­தன. கடை­சி­யில் அவ­ரது அலு­வ­ல­கத்­தின் உள்ளே வெடித்த கிளை­மோர் குண்­டுக்கு அவர் இரை­யா­னார். அது­வும்­கூட உட்­கட்சி வேலை­தான் என்­கிற குற்­றச்­சாட்­டும் உண்டு.

எனவே அந்த அமைப்­பில் இருந்­த­வ­ரான ஊத்தை பவான் புனி­த­மா­ன­வர் என்றோ குற்­றங்­கள் எதி­லும் தொடர்­பு­ப­டா­த­வர் என்றோ எழுந்­த­மா­ன­மாக நாம் சொல்­லி­வி­ட­மு­டி­யாது. அது பற்றி ஒரு நீதி­யான விசா­ர­ணை­யின் முடி­வு­தான் சொல்­ல­வேண்­டும்.

ஆனால், முத­ல­மைச்­சர் சாட்­டிய குற்­றச்­சாட்­டின் மீது – அவர் முன்­வைத்த நீதி­யின் – மீது நின்­று­கொண்டு ஊத்தை பவா­னின் மனைவி கேட்­கும் கேள்வி நியா­ய­மா­னதே.

புளொட் அமைப்­பின் மற்­றொரு உறுப்­பி­ன­ரான தூள் பவான் எனப்­ப­டும் கந்­தையா சிவ­நே­ச­னுக்கு வடக்கு மாகாண அமைச்­சர் பத­வியை வழங்க முடி­யாது என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார். பிர­பல பத்­தி­ரி­கை­யா­ள­ரும் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­வ­ரு­மான தராக்கி சிவ­ரா­மின் கொலை­யு­டன் தொடர்­பு­பட்­டார் என்று குற்­றச்­சாட்­டுத் தெரி­விக்­கப்­ப­டு­வ­தன் கார­ண­மா­கவே அவ­ருக்கு அமைச்­சுப் பத­வி­யைக் கொடுக்­க­ மு­டி­யாது என்று தூள் பவானுக்கு எழு­திய கடி­தத்­தில் முத­ல­மைச்­சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்.

என்­றா­லும் அண்­மை­யில் அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது தூள் பவா­னுக்கு விவ­சாய அமைச்­சர் பதவி வழங்­கப்­பட்­டது. கொலைக் குற்­றத்­தில் தொடர்­பு­பட்­ட­வர் என்று கூறி முன்­னர் அவ­ருக்கு அமைச்­சுப் பதவி வழங்­காது நிரா­க­ரித்­தீர்­களே என்று முத­ல­மைச்­ச­ரி­டம் கேட்­ட­போது, சம்­பந்­தப்­பட்­ட­வர் தூள் பவான் அல்­லர் ஊத்தை பவானே என்று முத­ல­மைச்­சர் பதி­லி­றுத்­தார்.

முத­ல­மைச்­சர் நீதி­ய­ர­ச­ராக இருந்­த­வர். அவ­ருக்­குத் தெரி­யாத நீதி­யும் நீதி முறை­மை­யும் சட்­டங்­க­ளும் இருக்க முடி­யாது. அப்­படி நாலும் தெரிந்த நேர்­மை­யான மனி­தர் என்­ப­தற்­கா­கவே அவர் ஓர் அர­சி­யல் தலை­வ­ரா­க­வும் மாற்­றப்­பட்­டார்.

ஆகவே தூள் பவான் மீது குற்­றம் சுமத்­தி­ய­தற்­கும் அவரை அந்­தக் குற்­றத்­தில் இருந்து விடு­வித்­த­தற்­கும் மற்­றொரு நபர் மீது அந்­தக் குற்­றத்­தைச்­சாட்­டி­ய­தற்­கும் முத­ல­மைச்­ச­ருக்கு ஒரு நீதிப் பொறி­முறை இருந்தே இருக்­கும்.
ஒரு பொது­ம­க­னாக இருந்து பார்க்­கும்­போது, யாரோ தூள் பவான் மீது அந்­தக் குற்­றச்­சாட்டை சுமத்தி முன்­னாள் நீதி­ய­ர­ச­ருக்கு அறி­வித்­தார்­கள், அந்­தக் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் தூள் பவான் தான் இல்லை என்று விளக்­க­ம­ளித்­தார், எனவே அவ­ரைக் குற்­றச்­சாட்­டில் இருந்து விடு­வித்­தார் முத­ல­மைச்­சர் என்றே அந்த நீதிப் பொறி­மு­றை­யைப் புரிந்­து­கொள்ள முடி­யும்.

ஆனால் பிரச்­சி­னையே அங்­கே­தான் ஆரம்­ப­மா­கி­றது. தூள் பவா­னைக் குற்­றச்­சாட்­டில் இருந்து விடு­விக்க அதே­போன்ற பெய­ரைக் கொண்ட இன்­னொ­ரு­வரே அந்­தக் குற்­றச்­சாட்­டுக்கு உரி­ய­வர்­கள் என்ற முன்­னாள் நீதி­ய­ர­ச­ரி­டம் சொல்­லி­விட்­டார்­கள்.

வழக்­கம்­போல அவ­ரும் அதனை நம்பி பகி­ரங்­கப்­ப­டுத்­தி­விட்­டார். ஊத்தை பவான் இறந்­து­விட்­டார் என்­ப­தால் இப்­போது அவ­ரது மனைவி களத்­திற்கு வந்து தனது கண­வ­ருக்­கும் அந்­தக் கொலைக்­கும் எந்­தச் சம்­பந்­த­மும் இல்லை என்­கி­றார். அதா­வது பத­விக்­காக இல­கு­வாக ஆள்­மா­றாட்­டம் செய்து ஏமாற்­றி­விட்­டார்­கள் என்­கி­றார்.

ஊத்தை பவா­னின் மனை­வி­யும் புளொட் இயக்­கத்­தில் இருந்­த­வர் என்­ப­தால் அவ­ரது கண­வ­ரின் நடத்தை குறித்து அவர் அறிந்து வைத்­தி­ருப்­பார் என்று நம்­ப­லாம். துணிந்து பகி­ரங்­க­மா­கத் தன் கண­வர் மீதான குற்­றச்­சாட்டை அவர் மறுக்­கி­றார் என்­கி­ற­போது அவ­ரது பக்க நியா­ய­மும் கவ­னத்­தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யதே.

அதி­லும் முத­ல­மைச்­ச­ரின் நீதிப் பொறி­மு­றை­யின்­படி, அதா­வது ஒரு­வர் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்டு அவர் அதனை மறுத்­து­விட்­டால் அல்­லது பழியை வேறு ஒரு­வர் மீது சாட்­டி­விட்­டால் அவர் குற்­றச்­சாட்­டில் இருந்து விடு­விக்­கப்­பட்­டு­வி­டு­வார் என்­கிற நியா­யத்­தின் பேரால் பார்த்­தால் ஊத்தை பவா­னும் இப்­போது அந்­தக் குற்­றச்­சாட்­டில் இருந்து விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும்.

அந்த நீதி­யைத்­தான் கேட்­கி­றார் ஊத்தை பவா­னின் மனைவி. கண்­ண­கியை மாதிரி நீதி­கேட்டு அவர் முத­ல­மைச்­சர் முன் நிற்­கி­றார். சி.வி.விக்­னேஸ்­வ­ரன் இப்­போது இந்த விட­யத்தை தெளி­வு ­ப­டுத்­து­வாரா? முத­ல­மைச்­சர் சொல்­வது உண்­மையா? ஊத்தை பவா­னின் மனைவி சொல்­வது உண்­மையா? மக்­கள் குழம்­பிப் போயி­ருக்­கி­றார்­கள். முத­ல­மைச்­சர்­தான் நீதி சொல்­ல­வேண்­டும்.

http://newuthayan.com/story/23549.html

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்.. கோத்தபாய கூட ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.. தாங்கள் தான் புளொட்டையும்.. ஈபிடிபியையும்.. கருணாவையும்.. கூலிக்குழுக்களாக இயக்கியது.. ஆயுதம் வழங்கியது.. முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் வரை அவர்களை கொண்டு தமிழ் மக்களை கொன்றது.. காட்டிக்கொடுத்தது.. துன்புறுத்தியது.. பாலியல் பலாத்காரங்கள் செய்தமை.. கப்பம் பெற்றமை என்று இன்னோரென்ன.. உண்மைகளை மறைமுகமாக ஏற்றுக் கொண்டதுடன்.. அவர்களுக்கு வழங்கிய ஆயுதங்களை தாங்கள் திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும் சொல்லி உள்ளார்.

இதில.. ஊத்தை.. தூள் என்ற பாகுபாடில்லாமல்.. புளொட்.. ஒரு படுகொலைக் கும்பலாக.. காட்டிக்கொடுப்பு.. ஒட்டுக்குழு துரோகக் கும்பலாக செயற்பட்டுள்ளது வெளிப்படையாகி உள்ள நிலையில்..

புளொட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்.. முள்ளிவாய்க்காலின் பின் உள்ளிளுத்து.. அதற்கு அரசியல் சாயம் அடிக்கும்.. சம் சும் மாவை கும்பல் தான்.. இவற்றிற்கு தமிழ் மக்களுக்கு விளக்கம் சொல்லனும். 

பாவம்..இடையில.. வந்து இதுகளிடம் சிக்கிக் கொண்ட விக்கி ஐயா. 

புளொட் கும்பலின் இனத்துரோகச் செயலுக்காக.. மேற்படி புளொட் துரோகியின் மனைவி.. தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவது தான் நியாயம். அதைவிடுத்து உந்த துரோகிகளின் மனைவிமாரை.. கண்ணகி ரேஞ்சில்.. வைத்து செய்தி புனையும் தமிழ் ஊடகங்களுக்கு செருப்பால  அடிக்கனும். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.