Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி

Featured Replies

300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

 
 
300-வது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் தோனி
 
கொழும்பு:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ம் ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். 2009-ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட தோனியின், தலைமையில் 2011-ம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை இந்தியா வென்றது.

மேலும், சர்வதேச தரவரிசைப்பட்டியலிலும் இந்திய அணி பலமுறை முதலிடத்தை பிரித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தோனி, நாளை தனது 300-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக தோனி நின்றார். 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவதை கணக்கில் கொண்டு தோனி தனது பழைய ஆட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளதாக விளையாட்டு நோக்கர்கள் கருதுகின்றனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/30101501/1105220/MS-Dhoni-gears-up-for-300th-ODI-dreams-to-finish-on.vpf

  • தொடங்கியவர்

300 போட்டிகளும் தோனியின் அந்த 10 சாதனைகளும்!

 

நெருக்கடி நேரங்களில் தனக்கே உரிய ஸ்டைலில் அதிரடி காட்டி, அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்து பதிலடிகொடுப்பதுதான் தோனியின் வழக்கம். அதை, மீண்டும் இலங்கைத் தொடரில் நிரூபித்துள்ளார் தோனி. இலங்கைத் தொடருக்கு முன்பு, தோனிகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களே கமென்ட் அடித்தார்கள். அவர்கள் அனைவரையும், தனக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டிய ஒரு சூழலை தோனி ஏற்படுத்திவிட்டார்.

தோனி


300 போட்டிகள் முடிவடைந்த பிறகும், தனது சாதனை வேட்டைகளைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார். மிஸ்டர் கூல்... நேற்றைய போட்டியில் 49 ரன்கள், மூன்று கேட்ச், ஒரு வெற்றிகரமான டி.ஆர்.எஸ் ரிவ்யூ என்று அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி, 300-வது போட்டியை ஸ்பெஷலாக்கியுள்ளார். குறிப்பாக, 'எங்களுக்கு எப்போதுமே நீங்கள்தான் கேப்டன்' என்று கோலியே புகழாரம் சூட்டினார். 300 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், கிரிக்கெட்டில் தோனி வசம் உள்ள 10 சாதனைகளின் லிஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

தோனி

* கிரிக்கெட்டில் (உலகக் கோப்பை, 20/20 உலகக் கோப்பை, சாம்பியன் ட்ராபி) என்று மூன்று வகையான ஐ.சி.சி தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே கேப்டன்.

* அனைத்துத் தரப்பு கிரிக்கெட்டிலும், மொத்தம் 331 போட்டிகளில் கேப்டனாக இருந்த ஒரே வீரர்.

*  ஒரு நாள் போட்டியில், வெற்றிகரமான  ரன் சேஸிங்கில் தோனியின் சராசரி 101.84.

* ரன் சேஸிங்கின்போது, ஒன்பது போட்டிகளை சிக்ஸர் மூலம் ஃபினிஷிங் செய்தவர்.

* 6 அல்லது அதற்குக் கீழ் வரிசையில் இறங்கி அதிக ரன்கள் அடித்தது (4,601).

* ஒரு நாள் கிரிக்கெட்டில் 200 சிக்ஸர்களைத் தெறிக்கவிட்ட ஒரே இந்திய வீரர்.

* இலங்கையுடன் அவர் அடித்த 183 ரன்தான், தற்போதுவரை ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோர்.

* ஒருநாள் கிரிக்கெட்டில், வெற்றிகரமான ரன்சேஸிங்கின்போது, 40 இன்னிங்ஸ்களில் நாட் அவுட்.

* அனைத்துத் தரப்பு கிரிக்கெட்டிலும், அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய விக்கெட் கீப்பர்  (737).

* ஒருநாள் கிரிக்கெட்டில், அதிக நாட் அவுட் என்ற சாதனை. நேற்றைய போட்டியையும் சேர்த்து, மொத்தம் 73 போட்டிகளில் தோனி நாட் அவுட்.

 

இன்னும் பல நாட் அவுட்களையும், ஃபினிஷிங்களையும் கொடுக்க வாழ்த்துகள் மிஸ்டர் கூல்..!

http://www.vikatan.com/news/sports/100971-dhonis-10-records-in-cricket.html

  • தொடங்கியவர்

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட அந்த 2 மாற்றங்கள்! #Dhoni300

 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 300-வது போட்டியில் இன்று களமிறங்கியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. 

Dhoni_16288.jpg


கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியின் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியிருக்கிறார். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் நம்பர் ஒன் என தோனியின் கேப்டன்ஷிப் ரெக்கார்டுகள் மற்றெந்த கேப்டனும் எட்டாதது. கேரியர் கிராஃப் உச்சத்தில் இருந்தபோதே, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக ஒரு அவசர அறிவிப்பு தோனியிடமிருந்து வந்தது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தப் போவதாக கூலாகச் சொன்னார் தோனி. களத்தில் நெருக்கடியான நேரங்களானாலும் சரி, கேரியரில் நெருக்கடியான நேரமானாலும் சரி நிதானமாக முடிவெடுப்பவர் அவர். அதுதான், கோரக்பூர் ரயில்நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஒரு ஊழியரை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிஸ்டர் கூல் என்று போற்றப்படும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. 

கடந்த 2014 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது அவருக்கு ஏற்பட்ட அதே நெருக்கடியான சூழல் இலங்கை ஒருநாள் தொடருக்கு முன்னரும் தோனிக்கு ஏற்பட்டது. இங்கிலாந்தில் நடந்துமுடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தோனியின் செயல்பாடு சரியாக இல்லாதது, பெரிய அளவில் விமர்சனங்களுக்குள்ளானது. தோனி சரியாக விளையாடவில்லையென்றால், அவருக்கு மாற்றுவீரரைத் தேட வேண்டி வரும் என்று கூறினார் இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரின் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்யும் என்றார் இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளர் டிராவிட். பழைய ரெக்கார்டுகளை வைத்துக்கொண்டு மட்டுமே ஒருவர் அணியில் நீடிப்பது என்பது இயலாத காரியம் என்கிற ரீதியில் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பேசியிருந்தார். இது ஒருபுறமிறக்க இந்திய அணியின் வெற்றிக்குத் தோனி இன்னும் பெரிய அளவில் பங்களிப்பு செய்வார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸியிடமிருந்து தோனிக்கு ஆதரவுக் குரலும் எழுந்தது. இந்தநிலையில்தான் இலங்கையில் காலடி எடுத்து வைத்தார் தோனி. முதல் ஒருநாள் போட்டியில் தோனிக்கு வேலை வைக்காமல் இந்திய அணி வென்றது. 

இரண்டாவது போட்டியில் தோனியின் அனுபவமும், பேட்டிங்கும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின. இலங்கை அணி நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஒருகட்டத்தின் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருடன் கைகோத்த தோனி, இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். அந்த போட்டியில் 6-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய தோனி 45 ரன்கள் குவித்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் குவித்ததோ 53 ரன்கள். போட்டிக்குப் பின்னர் பேசிய புவனேஷ்வர் குமார், விக்கெட்டை இழக்காமல் இருந்தாலே வென்று விடலாம். டெஸ்ட் போட்டியைப் போல விளையாடுமாறு தோனி கூறினார். அதையே பின்பற்றினேன் என்று தோனிக்கு கிரடிட் கொடுத்தார். கேப்டன் கோலியும் தோனியின் பங்களிப்பு குறித்து சிலாகித்தார். 

மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் தோனி மின்னினார். இலங்கை அணியின் 217 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த சூழலில் தோனி களமிறங்கினார். தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுடன் கைகோர்த்த தோனி, இந்த முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் ஷர்மா சதமடிக்க, தோனி 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியில் தோனி நீடிப்பது சந்தேகமே என்று கூறி வந்தவர்களை, தனது சிறப்பான ஆட்டத்தால் அமைதிப்படுத்தினார் தோனி.  

இந்த இரண்டு போட்டிகளிலும் தோனியின் பேட்டிங் டெக்னிக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டதை கிரிக்கெட் ஆர்வலர்கள் கண்டிருக்கலாம். ஒன்று தனது ஆஸ்தான மொரான்ட் பேட் (Morrant Pad) எனப்படும் அகலமான பேட்களை மாற்றிவிட்டு, சாதாரண பேட்களுக்கு மாறினார். 36 வயதில், 300-வது போட்டியில் விளையாடப் போகும் சூழலில், இதுபோன்ற ஒரு புது முயற்சியை எடுக்க தனித்தெம்பு வேண்டும். அவரது கேரியரில் முதன்முறையாக இந்த முயற்சிகளை அவர் எடுத்துள்ளார் என்றே கூறலாம். சாதாரண பேட்களை விட, மொரான்ட் பேட்கள் எடையில் 200 கிராம் அளவுக்குக் குறைந்தவை. இதனால் களத்தில் வேகமாக ஓடி ரன் குவிக்க முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் ரவிச்சந்திர அஷ்வின் ஆகிய ஒருசிலரே இந்த மொரான்ட் பேட்களைப் பயன்படுத்திவுள்ளனர். 

மொரான்ட் பேட்களைப் பயன்படுத்துவதில் ஒரு சின்ன குறை இருக்கிறது. மற்ற சாதாரண பேட்களில் இருப்பதுபோல் இந்த பேட்களில் மூன்று ஸ்ட்ராப்கள் இருக்காது. இரண்டு மட்டுமே இருக்கும். அதிலும் ஒன்று முட்டிக்கு நேர் பின்னால் இருக்கும். இதனால் முன்னங்கால் முட்டியை மடக்கி அடிக்கும் பல்வேறுவிதமான ஷாட்களை ஆடுவது சிரமம். ஆனால், இந்த வயதில் பரிசோதனை முயற்சியாக எடை அதிகமான பேட்களுடன் களமிறங்கியிருக்கிறார் தோனி. பெரும்பாலும், பார்வார்டு ஷாட் எனப்படும் முன்னோக்கிச் சென்று விளையாடுவதிலேயே ஈடுபாடு கொண்ட தோனி, இலங்கை அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பேக்ஃபூட் ஷாட்களையும் (Backfoot Shot) ஆடி அசத்தினார். 

 

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட இரண்டாவது மாற்றம் ட்ரிக்கர் மூவ்மெண்ட் (trigger movement). பந்துவீச்சாளர்கள் பந்துவீச ஓடிவரும்போது பின்னங்கால் முதலில் லெக்கிலிருந்து ஆஃப் திசையை நோக்கி செல்லும், அதைத் தொடர்ந்து முன்னங்காலும் செல்லும். இவை அனைத்தும் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதற்கு முன்னதாக நிகழ்த்தப்படும். (இதற்கும் பிக்பாஸ் ட்ரிக்கரிங்-க்கும் எந்த தொடர்பும் இல்லை மக்களே!). இதன்மூலம் பந்துவீச்சாளர்களின் கவனத்தை திசைதிருப்பலாம். இதனால், வேகமாக பந்துவீச வேண்டும் என்ற ஒற்றை எண்ணமே பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படுமே தவிர, நேர்த்தியாக வீச வேண்டும் என்பதை பந்துவீச்சாளர்கள் பலரும் யோசிக்கமாட்டார்கள். தனது கேரியரின் பெரும்பாலான சமயங்களில் சேவாக் போன்று, பந்துவீசும்போது எந்தவொரு மூவ்மென்டை தோனி காட்டியதில்லை. பந்துவீச்சாளரின் கையிலிருந்து பந்து வெளிப்பட்ட பின்னரே, அதை எப்படி எதிர்கொள்வது என்பதை தோனி முடிவு செய்து ஆடுவது வழக்கம். சில சமயங்களில் பந்துவீச்சாளரை நோக்கி கிரீஸை விட்டு வெளியே தோனி நடந்து வருவதுண்டு. அது ஃபுல்டாசாக பந்துவீச வேண்டிய கட்டாயத்துக்கு பௌலர்களை ஆளாக்கும். ஆனால், இலங்கைத் தொடரில் இந்த வழக்கத்தையும் தோனி மாற்றிக்கொண்டார். இந்த இரண்டு மாற்றமும் தோனிக்குக் கைகொடுத்தது என்றே கூறலாம். இலங்கை அணிக்கெதிராகக் களமிறங்கிய 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகளில் தோனியின் விக்கெட்டை இலங்கை பந்துவீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. 

http://www.vikatan.com/news/sports/100909-dhoni-changes-his-batting-techniques.html

  • தொடங்கியவர்

தோனியின் 300-வது ஒருநாள் போட்டியில் நெகிழ்ந்த விராட் கோலி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 300-வது ஒருநாள் போட்டியை ஒட்டி, அவருக்கு கேப்டன் கோலி நினைவுப் பரிசு வழங்கினார். 

Dhoni_09545.jpg

 


கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடந்த அந்த போட்டியில், இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின்  300-வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

இதையொட்டி, போட்டிக்கு முன்னதாக பிளாட்டினம் பேட் ஒன்றை தோனிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார் கோலி. அப்போது பேசிய கோலி, ’இங்குள்ள 90 சதவிகித வீரர்கள், உங்கள் தலைமையிலேயே சர்வதேச போட்டிகளில் அறிமுகமானோம்.

இந்த நினைவுப் பரிசை உங்களுக்கு அளிப்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். நீங்கள்தான் எங்களுக்கு எப்போதுமே கேப்டன்’ என்று கூறி நெகிழ்ந்தார். அந்தப் போட்டியில் களமிறங்கிய தோனி, ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் குவித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவர், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 73 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.  

http://www.vikatan.com/news/sports/100972-you-are-captain-always-says-virat-kohli-on-ms-dhonis-300th-odi-celebration.html

  • தொடங்கியவர்

ஒரே நாளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரனான டோனி

இலங்கை அணிக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மகேந்திர சிங் டோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரனாகியுள்ளார்.

dhoni.jpg

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான  4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

நேற்றைய போட்டி டோனியில் 300 ஆவது ஒருநாள் போட்டியாகும்.  இப் போட்டியில்  மகேந்திர சிங் டோனி நிகழ்த்திய சாதனைகள் வருமாறு,

ஒட்டுமொத்தமாக அதிக போட்டிகளில் விக்கெட் காப்பாளராக விளையாடிய வீரராக டோனி திகழ்கிறார். இந்திய அணியின் டோனி 467 போட்டிகள் விளையாடியுள்ளதுடன் தென்னாபிரிக்காவின் பௌச்சர் 466 போட்டிகளிலும் சங்கக்கார 464 போட்களிலும் விக்கெட் காப்பாளராக கடமையாற்றியுள்ளனர்.

இதேவேளை, அதிகமுறை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளில் ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற பெருமையையும் இப் போட்டியில் பெற்றுள்ளார் டோனி.

இதிலும் இந்திய அணி வென்ற பெரும்பாலான போட்டிகளிலேயே டோனி ஆட்டமிழக்காது இருந்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு மட்டும் ஒருநாள் போட்டிகளில் டோனி 500 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

அனைத்து விதமான போட்டிகளிலும் விக்கெட் காப்பாளராக எதிரணியின் அதிக ஆட்டமிழப்புக்களை ஏற்படுத்தியவர் என்ற பெருமையையும் டோனி பெற்றுள்ளார். அந்தவகையில் மொத்தமாக 737 ஆட்டமிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளார்.

இதேவேளை,  300 ஆவது போட்டியில் விளையாடிய 6 ஆவது இந்தியா வீரராக டோனி இடம்பிடித்துள்ளார்.

இதுவரை 99 முறை ஸ்டொம் முறையில் எதிரணி வீரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ள டோனி ஒரு ஸ்டெம்பிங் செய்தால், ஒருநாள் போட்டிகளில் 100 ஆவது ஸ்டெம்பிங் செய்து சாதனை படைப்பார்.

நேற்றைய போட்டியுடன் சேர்த்து ஒரு நாள் போட்டியில் 73 முறை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து ஒருநாள் போட்டியில் அதிக முறை ஆட்டமிழக்காமல் இருந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் டோனி.

இதேவேளை, ஒருநாள் போட்டி, இருபதுக்கு - 20 போட்டி மற்றும் சாம்பியன்ஸ் கிண்ணம் என மூன்று வகையான உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணித் தலைவர் என்ற பெருமையையும் டோனி படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/23867

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.