Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லிணக்கம், ஜனநாயக மாற்றங்களுக்கு ‘அமெரிக்கா ஒத்துழைக்கும்’

Featured Replies

நல்லிணக்கம், ஜனநாயக மாற்றங்களுக்கு ‘அமெரிக்கா ஒத்துழைக்கும்’
 

“நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் ஜனநாயக மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளின் பெறுபேறுகள் பாராட்டத்தக்கவை” என, ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்கச் செயலாளர் எலிஸ் வெல்ஸ் அம்மையார் தெரிவித்துள்ளார்.   

பல்வேறு விமர்சனங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில், ஜனாதிபதி மேற்கொள்ளும் இந்த வரலாற்று ரீதியான நடவடிக்கைகளின் வெற்றிக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்றுமுன்தினம்(30) பிற்பகல் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நீதி, சமத்துவம், இன நல்லிணக்கம், சகவாழ்வு, அரசியலமைப்புத் திருத்தங்கள், நிலையான சமாதானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இலங்கை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாக, ஐக்கிய அமெரிக்கா நம்புவதாகவும் எலிஸ் வெல்ஸ் அம்மையார் இதன்போது தெரிவித்தார்.   

நல்லிணக்கச் செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் பல்வேறு தடைகள் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் ரீதியான இலாபங்களைப் பெறுவதற்காக மக்களைத் தூண்டுவதற்கு சில இனவாத சக்திகள் முயற்சிப்பதுடன், நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் தடைகளை ஏற்படுத்துகின்றன. எனினும், எக்காரணத்துக்காகவும் தனது பாதையை மாற்றப்போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.   

நல்லிணக்க செயற்பாடுகளின் பெறுபெறுகள் துரிதமானதாக இல்லாவிடினும், நிலையான ஒரு குறிக்கோளுடன் வெற்றிகரமாக முன்னோக்கிப் பயணிப்பதாக ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.   

அண்மையில், தெற்காசிய மற்றும் பசுபிக் வலயத்துக்கான அமெரிக்காவின் புதிய தந்திரோபாய செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐக்கிய அமெரிக்காவின் பதில் கடமையாற்றும் உதவி இராஜாங்க செயலாளர், இத்திட்டத்தின் முக்கிய அங்கத்தவராக இலங்கையும் செயற்படும் என, ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.   

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளுக்கான மிலேனியம் சவால்கள் கூட்டுறவு நிறுவனத்தின் உதவிகளை அண்மையில் இலங்கைக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எலிஸ் வெல்ஸ் அம்மையார் இதன்போது தெரிவித்தார்.   

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/நல்லிணக்கம்-ஜனநாயக-மாற்றங்களுக்கு-அமெரிக்கா-ஒத்துழைக்கும்/150-203087

  • தொடங்கியவர்

“டொனால்ட் டரம்பின் தந்திரோபாய திட்டத்தின் முக்கியபங்குதாரர் இலங்கை”

தென் ஆசியாவிற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தந்திரோபாய திட்டத்தின் முக்கிய பங்குதாரராக இலங்கை திகழ்கின்றது என அமெரிக்க பதில் துணை ராஜாங்கச் செயலாளர் அலிஸ் வேல்ஸ்  ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Local_News.jpg

மேலும் இது குறித்து அலிஸ் வேல்ஸ் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆட்சி வரவேற்கத்தக்கதாக உள்ளது.

மேலும் ஜனநாயக மறுசீரமைப்புக்கள், நல்லிணக்க முனைப்புக்கள் போன்றன பாராட்டுக்குரியவை.

இதனால் அனைத்த வழிகளிலும் இயன்றளவு உதவிகளை இலங்கைக்கு வழங்க அமெரிக்கா விரும்புகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/23868

  • கருத்துக்கள உறவுகள்

வழங்குங்கோ இசகுபிசகா நடந்திச்சினம் என்றால் மீண்டும் ஒரு வியட்நாமை உருவாக்கி போட்டு சமதானம் பேசுங்கோ.:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.