Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

52jlht.jpg

மருத்துவ படிப்பிற்கு வஞ்சகமாய் நுழைத்துள்ள கிந்திய அரசின் 'நீட்(NEET)' தேர்வு துரோகத்தால் தற்கொலையான மாணவி அனிதாவின் மரணத்தால் கொந்தளித்துகொண்டிருக்கும் தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாய் இத்தமிழனின் காணொளியை பார்க்கிறேன்..

நன்றி ஐயா..! :100_pray:

 

 

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா? MinnambalamDec 09, 2024 07:00AM ராஜன் குறை மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். எது மிக முக்கியமான வேறுபாடு என்று புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் தனி மனிதர் அரியணை ஏறி ஆட்சிக்கு வருவார். அவர் மன்னராக முடிசூட்டப்பட்டிருந்தால் அவர் தனது ஆயுட்காலம் முழுவதும் மன்னராக இருப்பார். அவர் ஒரு தனி மனிதராகத்தான் பிறப்பின் அடிப்படையிலோ, யானை மாலை போட்டதாலோ, வேறு எந்த காரணத்தாலோ அரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மக்களாட்சியில் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். ஒட்டுமொத்த கட்சியும் ஆட்சி செய்ய முடியாது என்பதால்தான் அந்தக் கட்சியினர் தேர்ந்தெடுக்கும் ஒருவர் முதல்வராகவோ, பிரதமராகவோ பதவி ஏற்று ஆட்சி செய்வார். மக்களாட்சியில் கட்சித் தலைவர் நேரடியாக ஆட்சிக்கு வர முடியாது. சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள், அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரே கட்சியை அல்லது ஒரு கூட்டணியைச் சார்ந்தவர்கள் யாரை பிரதம அமைச்சராக, முதல் அமைச்சராகத் தேர்வு செய்கிறார்களோ அவர்தான் ஆட்சிக்குத் தலைமை தாங்குவார். அந்தக் கட்சிக்காரர்களே எப்போது ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர் பதவி இழந்து விடுவார். மராத்திய மாநிலத்தில் உத்தவ் தாக்கரே அப்படித்தான் பதவி இழந்தார். அவர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களே பாஜக தூண்டுதலில் அவருக்கான ஆதரவை விலக்கிக் கொண்டனர். அப்படி நிகழாவிட்டால்கூட ஐந்தாண்டுக் காலம்தான் ஒருவர் ஆட்சியில் தொடர முடியும். பின்னர் மீண்டும் தேர்தல். அதில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அவரையே தேர்ந்தெடுத்தால்தான் தொடர முடியும். அப்படி கட்சியினருடைய, மக்களுடைய ஆதரவை தொடர்ந்து பெறுவது யாருக்குமே பெரிய சவால்தான். ஏகப்பட்ட பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மன்னர் போல ஆட்சிக்கு வர விரும்பும் தனி நபரே விஜய் விஜய் ஒரு பிரபல திரைப்பட நடிகர். கதாநாயகனாக அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு நடிகராக அவர் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடிப்பதற்காக, குணசித்திர நடிப்பிற்காக புகழ் பெற்றவர் இல்லை. நன்றாக நடனம் ஆடுகிறார், சண்டை செய்கிறார், முத்தாய்ப்பான வசனங்களை ஸ்டைலாக உச்சரிக்கிறார் ஆகிய அம்சங்களே அவரை மக்கள் திரளை கவரும் கதாநாயகன் ஆக்கின. வணிக அம்சங்களை நம்பிய வாழ்க்கை. அருவாளை எடுத்து வெறித்தனமாக வெட்ட வேண்டும். வடு மாங்கா ஊறுதுங்கோ என்று ஆட வேண்டும். இவ்வாறு திரைப்பட நடிகராக அவருக்குள்ள பிம்பத்தை வைத்து ஒரு தனி நபராகத்தான் ஆட்சி செய்ய தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார். அவர் ஒரு கட்சி தொடங்கியுள்ளார். ஆனால், அந்தக் கட்சியில் பல்வேறு அணிகளுக்கோ, மாவட்ட அளவிலோ வேறு யாரும் குறிப்பிடப்படத்தக்க தலைவர்களாக இருப்பதாகத் தெரியவில்லை. கட்சிப் பணிகளை நிர்வகிக்க ஒரு மேலாளரை நியமித்துள்ளார். அவர் பெயர் புஸ்ஸி ஆனந்த். மற்றபடி அவர் கட்சியில் வேறு நிர்வாகிகளோ, அரசியல் அனுபவம் உள்ள தலைவர்களோ கிடையாது.   விஜய்தான் கட்சி என்பதை அவர் கட்சியின் முதல் மாநில மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அதில் அவர் மட்டும்தான் பேசினார். ஒரு பேச்சுக்குக் கூட வேறு பேச்சாளர்கள் கிடையாது. அவரும் கட்சி நிர்வாகிகள் பெயர்களைச் சொல்லி விளித்து பேச்சைத் தொடங்குவது தேவையற்ற சடங்கு என்று ஏளனமாகச் சொல்லி விட்டார். அவர்தான் கட்சி, அவர் ஆட்சிக்கு வருவதுதான் கட்சியின் ஒரே நோக்கம். மக்களாட்சி என்றால் என்னவென்று புரியாதவர்கள் இப்படி தனி நபர் தலைமைதான் கட்சி என்று பாமரத்தனமாக நினைத்துக் கொள்வார்கள். ரசிகர் மன்றங்கள் கட்சி அமைப்புகள் ஆகுமா? மக்களாட்சி அரசியல் என்பதன் அடிப்படை வெவ்வேறு மக்கள் தொகுதிகளின் கோரிக்கைகள்தான். விவசாயிகளுக்குக் கோரிக்கைகள் இருக்கும், மீனவர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும், ஆசிரியர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும், வர்த்தகர்களுக்குக் கோரிக்கைகள் இருக்கும். இவர்கள் கோரிக்கைகளுக்காக அமைப்புகள் தோன்றும். ஒரு வெகுஜன கட்சி என்பது ஒரு சில பொது முழக்கங்களுக்குள் இவர்கள் கோரிக்கைகளை ஒன்று திரட்ட வேண்டும். அப்போதுதான் கட்சி வெற்றி பெறும். அது தவிர அந்தந்த தொகுதிகளுக்கான தனி கட்சிகளும், அமைப்புகளும் இருக்கும். அவர்கள் ஆதரவையும் பெற வேண்டும். பல விவசாயிகள், தொழிலாளர் அமைப்புகளின் தொகுப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. குறிப்பிட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் கோரிக்கைகளுக்காக கட்சிகள் உள்ளன. வன்னியர் சங்கம் என்ற பெயரில் இயங்கிய அமைப்புதான் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. இது வன்னியர்கள் போதுமான அளவு பிரதிநிதித்துவம் பெறவில்லை, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் உருவானது. கலைஞர் அவர்களையும் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20% உள் ஒதுக்கீட்டை உருவாக்கினார். இப்போது அதற்குள்ளும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இப்படியாக மக்கள் தொகுதிகள் கோரிக்கை அடிப்படையில்தான் கட்சிகளாகவோ, கட்சி அணிகளாகவோ மாறும். அவைதான் மக்களாட்சி அரசியல் வேர்கள். கட்சிகளின் சமூகத்தளம். ரசிகர் மன்றங்களுக்கு என்று அரசியல் கோரிக்கைகள் எதுவும் இருக்க முடியாது. படம் வெளியிடுவதற்கு முன்னால் தனி ரசிகர் மன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை இருக்கலாம். ஆனால், இது முக்கியமான அரசியல் கோரிக்கை என்று யாரும் கூற மாட்டார்கள். அதற்காக வாக்களிக்கவும் மாட்டார்கள். மற்றபடி ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மக்கள் தொகுதிகளின் அங்கமாகத்தான் இருப்பார்கள். ஒருவர் வர்த்தகராக இருப்பார். போக்குவரத்து ஊழியராக இருப்பார். ஆட்டோ ஓட்டுநராக இருப்பார். அவர்களுடைய அரசியல் கோரிக்கைகள் தனித்தனியானவை. ரசிகர் மன்றம் என்பது கேளிக்கைக்கான, மன உற்சாகத்திற்கான ஓர் அமைப்பு. உதாரணமாக “ஆதி பராசக்தி வார வழிபாட்டு மன்றம்” என்ற அமைப்பை நான் ஓர் ஊரில் பார்த்திருக்கிறேன். அதன் உறுப்பினர்களாக பல்வேறு பணிகளில், தொழில்களில் உள்ளவர்கள் இருப்பார்கள். அவர்கள் வழிபாட்டு நேரத்தில் அங்கே கூடுவார்கள். சிவப்பு ஆடை அணிந்திருப்பார்கள். அவர்களை உடனே ஓர் அரசியல் தொகுதியாக மாற்ற முடியாது. அவரவர் தொழில்கள் சார்ந்தோ, சமூக பின்னணி சார்ந்தோதான் அவர்கள் அரசியலில் அணி திரள்வார்கள். திரை பிம்பத் தலைமைக்கு சமூக அடித்தளம் உண்டா? திரைப்பட நடிகர்கள் எந்த ஊருக்குப் போனாலும் பெரும் கூட்டம் கூடும். அவர்களைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டு செல்வார்கள். அப்படிச் செல்வதால் அந்த நடிகர்கள் கூறுபவர்களுக்கு உடனே வாக்களித்துவிட மாட்டார்கள். உதாரணமாக அறுபதுகளின் பிற்பகுதி, எழுபதுகளில் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்தவர்கள், பங்கேற்றவர்கள் பலரிடம் கேட்டபோது அவர்கள் ஓர் ஊரில் எம்.ஜி.ஆரை பார்க்க எவ்வளவு கூட்டம் வருமோ, அதே அளவு சிவாஜியை பார்க்கவும் வரும் என்று கூறினார்கள். ஆனால், வாக்குகள் எம்.ஜி.ஆர் கட்சியான தி.மு.க-விற்கு அல்லது அ.இ.அ.தி.மு.க-விற்குத்தான் விழும். சிவாஜி ஆதரிக்கும் காங்கிரஸ் வேட்பாளருக்கு விழாது. திரைப்படத் துறையில் எம்.ஜி.ஆருக்கு இணையான போட்டியைத் தந்த சிவாஜியால், அரசியலில் அப்படித் தர முடியவில்லை. காரணம் என்ன? எம்.ஜி.ஆருக்கான சமூக அடித்தளத்தை தி.மு.க உருவாக்கித் தந்தது. அந்தக் கட்சியினர் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் கோரிக்கைகளையும் அறிந்து, அனைத்திற்கும் தீர்வாக முற்போக்கான, மக்கள்நல சோஷலிஸ கொள்கைகளைக் கொண்ட ஆட்சியை அமைக்க உறுதியளித்தார்கள். ‘காங்கிரஸ் தனவந்தர்களின், மேட்டுக்குடியினர் கட்சி, நாங்கள் சாமானியர்கள் கட்சி’ என்பதை தொடர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். அதற்கு ஏற்றாற்போல எம்.ஜி.ஆர் ஏழைகளை, எளியோரைக் காப்பவராக சினிமாவில் நடித்தார். அதனால் அந்த கட்சியினரின் அணி திரட்டலும், அவர் திரை பிம்பமும் இணைந்து போனது. அவர் தி.மு.க-விலிருந்து பிரிந்தபோதும் பல தலைவர்களை அவரால் தன்னுடன் கூட்டிச் செல்ல முடிந்தது. அவரை கடுமையாக எதிர்த்த நாவலர் நெடுஞ்செழியனே அவர் கட்சியில் இணைந்தார். தத்துவ மேதை, பகுத்தறிவுப் பகலவன் பெரியார் ஐம்பதாண்டுக் காலம் அவர் கால்படாத கிராமமே இல்லையென்ற அளவு தமிழ்நாட்டில் பயணம் செய்து மக்களிடையே தன்னுணர்வை மலரச் செய்தார். அரசியல் தத்துவ மேதை அண்ணா திராவிடவிய சிந்தனையை அரசியல் கோட்பாடாக பயிற்றுவித்தார். கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட பல படைப்பாளுமை மிக்க இளைஞர்கள் ஓயாமல் உழைத்து கட்சியின் சமூக அடித்தளத்தை வடிவமைத்தார்கள். எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தில் தன்னை பிணைத்துக் கொண்டு அதன் நிழலில் தனக்கென ஒரு சமூக தளத்தை உருவாக்கிக் கொண்டார். எம்.ஜி.ஆர் போல வேறு எந்த நடிகரும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் அவர் தி.மு.க என்ற பெருமரத்தின் நிழலில் வளர்ந்தார் என்பதுதான். கட்சியைத் தேடும் பிம்பத் தலைமை விஜய் விஜய்க்கு தன்னிடம் சமூக அடித்தளம் கொண்ட கட்சி இல்லை என்பது புரிகிறது. ஆனால் அவர் என்ன நினைக்கிறார் என்றால் சமூக அடித்தளம் கொண்ட கட்சிகளை ஆட்சியில் பங்கு தருவதாகச் சொல்லி இணைத்துக் கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார். ஒரு சொலவடை சொல்வார்கள்: “நீ அவல் கொண்டு வா, நான் உமி கொண்டுவருகிறேன்; இருவரும் ஊதி, ஊதி தின்னலாம்” என்று ஒருவர் சாதுரியமாக சொன்னதாக. விஜய் அப்படித்தான் அரசியல் கட்சிகளைக் குறிவைக்கிறார். முதலில் அ.இ.அ.தி.மு.க; அரை நூற்றாண்டு கடந்த கட்சி. கிட்டத்தட்ட முப்பதாண்டுக் காலம் ஆட்சியில் இருந்த கட்சி என்பதால் மிக வலுவான சமூக அடித்தளம் அதனிடம் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஒரு கருத்தொருமிப்பு கொண்ட தலைமை உருவாக பாஜக விடவில்லை. அ.இ.அ.தி.மு.க-வை பிளந்து, பலவீனப்படுத்தி அதன் சமூகத்தளத்தில் தான் கால் பதித்துவிடலாம் என்று நினைத்தது பாஜக. ஆனால், பாதிக்கிணறுதான் தாண்ட முடிந்தது. அ.இ.அ.தி.மு.க-வை உடைத்து விட்டது. பலவீனப்படுத்திவிட்டது. ஆனால், அதனால் அந்த இடத்தில் காலூன்ற இயலவில்லை. திராவிடவிய அரசியல் தடுக்கிறது. அதற்குச் சான்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள். எடப்பாடி பழனிசாமி கட்சியின் பெருவாரியான நிர்வாகிகளை தன்னிடம் தக்கவைத்துக்கொள்வதில் வெற்றி பெற்று விட்டார். ஆனால், அவரிடம் மக்களை வசீகரிக்கும் அளவு பேச்சாற்றலோ, ஆளுமைத் திறமோ இருப்பதாகத் தெரியவில்லை. சசிகலா முடக்கப்பட்டுவிட்டார். ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஒரு சில பகுதிகளில்தான் செல்வாக்குடன் உள்ளனர். இவர்கள் யாருமே பாஜக-வை எதிர்த்து திராவிடவிய அரசியல் செய்வதில் தி.மு.க-வை முந்திச் செல்ல முடியாத அளவு ஒன்றிய அரசின் அழுத்தங்கள் உள்ளன. இந்த நிலையில் தன்னுடைய கவர்ச்சிகரமான முகத்தை ஏற்றுக்கொண்டு இவர்கள் எல்லாம் அல்லது ஒரு சிலராவது, தங்கள் கட்சிகளின் சமூக அடித்தளத்தைக் கொண்டுவந்தால், வெறும் பிம்பமாக இருக்கும் தனக்கு ஓர் அரசியல் உடல் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார் விஜய். எப்படியாவது தி.மு.க-வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பது பாஜக-வின் அகில இந்திய செயல்திட்டத்திற்கு அவசியம் என்பதால் பாஜக இத்தகைய இணைவிற்கு ஒத்துழைக்கலாம் என்று நினைக்கிறார். அதைக்கூட மன்னிக்கலாம். ஆனால், முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நின்று, கிராமம் கிராமமாக சென்று பேசி, எந்த ஊடகத்திலும் வராத எண்ணற்ற போராட்டங்களை களத்தில் நடத்தி, அகில இந்திய அளவில் முக்கியமான தலித் அரசியல் தலைவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள திருமாவளவனை விஜய் குறிவைப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாக உள்ளது. இதுதான் “நீ நெல் கொண்டு வா; நான் உமி கொண்டு வருகிறேன்” என்ற சூதிற்கு மிக மோசமான உதாரணமாக இருக்கிறது. விஜய் அவருடைய கட்சி மாநாட்டில் பேசியதானாலும், விகடன்-ஆதவ் அர்ஜுன் உருவாக்கிய அரக்கு மாளிகை மேடையில் பேசியதானாலும், அவருக்கென்று எந்த சொந்த அரசியல் கொள்கையும், கோட்பாடும், குறிக்கோளும் இல்லை என்பதையே தெளிவுபடுத்தியது. ஏன் அரசியல் புரிதலே அறவே இல்லை என்பதை வரி, வரியாகச் சுட்டி விளக்கலாம். விஜய் பிரபல நட்சத்திரம் என்பதால் மக்கள் பேராதரவில் மிதப்பதாக நினைக்கிறார். அதனால் ஆட்சிக்கு வந்துவிட்டதாகவே நினைக்கிறார். ஊடகங்களுக்கு அரசியலை சுவாரஸ்யமாக்க இது நல்ல கதையாடல் என்பதால் அவருக்கு நிறைய வெளிச்சம் போடுவார்கள். ஆனால், அவர் கற்பனை செய்யும் அந்த மக்கள் ஆதரவைத் திரட்டி உதவ அவருக்கு சமூக அடித்தளம் கொண்ட கட்சி வேண்டும். அதற்கு யார் தங்கள் கட்சி சமூக அடித்தளத்தை கொடுத்து உதவினாலும் அவர்களை கூட்டணி அரசில் சேர்த்துக் கொள்வார். பாண்டவர்கள் தங்குவதற்காக மிக அழகான ஓர் அரக்கு மாளிகையை கெளரவர்கள் உருவாக்கினார்கள். அதில் அவர்கள் தங்கி உறங்கும்போது அதை கொளுத்தி விடலாம் என்று திட்டம். இன்று பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் பெயரைக் கொண்டவரே அரக்கு மாளிகை கட்டுகிறார். திருமாவளவன் அதற்குச் செல்லவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். இன்றைய தேதியில் வங்கியில் பணம் இல்லாமல் ஒருவர் பத்து கோடிக்கு ரூபாய்க்கு பதினான்கு மாதம் கழித்த ஒரு தேதியிட்டு காசோலை வழங்கலாம். அதை நம்பி, உற்பத்திக்கான மூலப் பொருட்களை நாம் கொடுத்தால், அவர் வெற்றிகரமாக பண்டத்தை உற்பத்தி செய்து லாபம் ஈட்டினால்தான் அந்தக் காசோலைக்கு மதிப்பு. அதற்கு அடிப்படையில் அவருக்கு தொழில் தெரிந்திருக்க வேண்டும். அனுபவமற்றவர்களின் வாய்ச்சவடாலை நம்பினால் பேரிழப்புதான் மிஞ்சும். விஜய்யின் அரசியல் ஈடுபாடு எத்தகையது என்று தெரிந்துகொள்ள சமீபத்திய நிகழ்வு ஒன்றே போதும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். புதிய கட்சி துவங்குகிறார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை மாநாட்டுக்குத் திரட்டிக் காட்டுகிறார். சில மாதங்கள் கழித்து வரலாறு காணாத புயல் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர் உடனே அவர் கட்சி அணியினருக்கு ஒரு குரல் கொடுத்து, தானே தலைமையேற்றுச் சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டாமா? விஜய் கட்சியினர் மக்களுக்கு பணி செய்வார்கள் என்று நிறுவ வேண்டாமா? விஜய் அவ்வாறு செய்வதை போட்டோ ஆப்பர்சூயினிட்டி, சடங்கு, சம்பிரதாயம் என்று நினைக்கிறார். களத்துக்குச் செல்லாமல், மக்களை தன்னிடத்திற்குக் கூட்டி வந்து நிவாரணப் பொருட்களை வழங்குகிறார். இதுதான் அபத்தமான சடங்காக அனைவராலும் எள்ளி நகையாடப்படுகிறது. அவரை மையப்படுத்தி சிந்திக்கிறாரே தவிர, கட்சி அணியினரைக் குறித்து அவர் சிந்திப்பதேயில்லை. அவருக்கு அரசியல் தெரிந்தால்தானே, அவர்களை அரசியல் மயப்படுத்த முடியும்? மக்களுக்கு பேரிடரில் உதவி செய்வது சம்பிரதாயமா? அதுதானே ஐயா, அரசியல்? ஆனால், விஜய் ஆட்சி அமைப்பதுதான் அரசியல் என்று கூச்சமின்றி முழங்குகிறார். தன்னுடைய தனிநபர் திரை பிம்பத்தை வைத்து வாக்குகளை அறுவடை செய்து ஆட்சிக்கட்டிலில் அமரலாம் என்று நினைப்பதுதான் மன்னராட்சியின் சாராம்சம். அதற்குப் பதில் கட்சியில் ஒரு பொறுப்பினை ஏற்று, கட்சி அணியினருடன் பணி செய்து, உட்கட்சி பூசலுடன் மல்லுகட்டி, மக்களிடையே சென்று பேசி, உதவி செய்து, தினசரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லி, பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அரசியல் செய்பவர் யாரானாலும் அவர்களே மக்களாட்சியின் மாண்பை அறிந்தவர்கள். ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு “கொள்கை வாரிசு தலைவர்கள்” உள்ளபடியே அனுதாபத்திற்கு உரியவர்கள். வசதியான பின்புலம் கொண்ட அவர்கள், தெரிந்த தொழிலை செய்துகொண்டு, அமைதியாக உல்லாசமாக வாழாமல், ஏன் அரசியலில் ஈடுபட்டு, நடையாய் நடந்து, நாவரளப் பேசி பாடுபடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றும். அவர்கள் அப்படி பாடுபட்டு ஆட்சிக்கு வருவது சுயநலம் என்றால், திரை பிம்பங்கள் திடீர் தலைவராகி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தியாக தீபங்களா என்ன? எனக்கு ஓரளவு கட்சி அமைப்பு என்றால் என்ன, கட்சி அணிகளைச் சந்திப்பது என்றால் என்ன என்று களப்பணி மூலம் தெரியும். அதனால்தான் உண்மையில் சமூக அடித்தளம் கொண்ட கட்சி அரசியல் செய்பவர்கள் யார் மீதும் எனக்குப் பரிவு உண்டு. அவர்களை வாரிசு தலைவர்கள் என்று விமர்சிப்பவர்கள், வெறும் திரை பிம்பத்தைத் தூக்கிக்கொண்டு நானும் அரசியல்வாதி என்று வருபவர்களை ரசிக்கும் விநோதம்தான் ஊடகங்கள் உருவாக்கும் மெய்நிகர் உலகம்.   கட்டுரையாளர் குறிப்பு:   ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி.    https://minnambalam.com/political-news/actor-vijay-who-dreams-of-monarchy-does-he-understand-democracy-special-article-in-tamil-by-rajan-kurai/  
    • நம்பிக்கை வைப்பதற்கான ஒரு நேரம்; காப்பாற்றுவதற்கு ஒரு உறுதிமொழி! December 9, 2024 — கலாநிதி ஜெகான்பெரேரா — செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலையும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலையும் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அண்மைய அரசியல் நிலைமாறுதல் “பாகுபாடு காட்டுகின்ற போக்கின் விளைவாக தோன்றிய ஆழமான பிரச்சினைகளை” கையாளுவதற்கு ஒரு திருப்புமுனை வாய்ப்பை தருகிறது. பத்தாவது பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து தனது அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்திய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க இலங்கையில் இனவாதத்தையும் மதத் தீவிரவாதத்தையும் தடுப்பதில் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை அழுத்திக் கூறினார். இனவாத அரசியலும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுப்பதற்கு தனது அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கூறிய அவர் அச்சமும் சந்தேகமும் இல்லாத ஜனநாயக அரசொன்றை நிறுவப்போவதாக சூளுரைத்தார். சட்டத்தின் ஆட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி சட்டத்திற்கு மேலானவர் என்று எந்தவொரு தனிநபருமோ அல்லது அரசியல்வாதியுமோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய குற்றச்செயல்களை விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதுடன் சட்டமுறைமை மீதான நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்பப்போவதாக அவர் தனதுரையில் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பகிரங்க முகம் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்க எதிர்பார்ப்புகளை விஞ்சிவிட்டார். அரசாங்கத்தின் முதன்மையான தொடர்பாடல்காரராக அவர் விளங்குகிறார். மக்கள் மத்தியிலான தனது ஆரம்ப வாழ்வையோ அல்லது கொள்கைகளையோ அவர் மறந்து விடவில்லை. அவரது உடைநடையில் அதை தெளிவாகக் காணமுடியும். இனவாதமும் இனவெறுப்பும் நாட்டில் மீண்டும் வேர்விடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதியின் சூளுரை அவர் வளர்ந்துவந்த பண்புமுறைமைக்கு இன்னொரு சான்றாகும்.  சிங்கள பௌத்த இராச்சியங்களின் மையப் பிராந்தியமாக ஒரு காலத்தில் விளங்கிய வடமத்திய மாகாணத்தின் விவசாய வலயங்களில் ஜனாதிபதியின் தோற்றுவாயும் வறுமையுடனான அவரது தனிப்பட்ட போராட்டமும்  இலங்கையின் முன்னைய அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூக நலன்புரி திட்டங்களின் உதவியுடன் அந்த போராட்டத்தை வெற்றிகொண்ட விதமும் இலங்கையின் வெற்றிக் கதையின் முழுநிறைவான ஒரு  எடுத்துக்காட்டாக அவரை விளங்க வைத்திருக்கிறது. பல தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கையின் இன்னொரு தலைவர், ” வெறுப்பை வெறுப்பினால் ஒழிக்கமுடியாது. அன்பினாலேயே ஒழிக்கமுடியும்” என்று பௌத்த போதனையை மேற்கோள் காட்டினார். அந்த வார்த்தைகளை கொழும்பில் உள்ள தற்போதைய ஜப்பானிய தூதுவர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அண்மையில் நிகழ்த்திய வரவேற்புரையில் நினைவுபடுத்தினார். இரண்டாவது உலக மகாயுத்தத்தில்  தோற்கடிக்கப்பட்ட பிறகு இழப்பீட்டைச் செலுத்தவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதில் இருந்து ஜப்பானைப் பாதுகாக்க முன்னாள்  ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனாவும் இதே வார்த்தைகளைப் பேசினார். இந்த வார்த்தைகள் உலகில் எந்தளவுக்கு நடைமுறையில் பின்பற்றப்படுகிறது என்பதே முக்கியமான கேள்வி. ஜனாதிபதி ஜெயவர்தன உலகிற்கு தான் பேசிய அந்த வார்த்தைகளை தனது சொந்த நாட்டில் நடைமுறையில் கடைப்பிடிக்கத் தவறியது துரதிர்ஷ்ட வசமானதாகும். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. )வும் விடுதலை புலிகளும் முன்னெடுத்த கிளர்ச்சிகளில் எளிதில் கையாளமுடியாத எதிரிகளுக்கு முகங்கொடுத்தபோது ஜெயவர்தன மூர்க்கத்தனமான அரச வன்முறையை கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்டார். இறந்தவர்களை நினைவுகூருதல் : =========== ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தான் பேசுகின்ற பண்புகளின் பிரகாரம் இதுவரையில் வாழ்ந்தும்  நடந்தும் வருகின்றார் என்று தோன்றுகிறது. ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றிபெற்று இரு மாதங்களே கடந்திருக்கும் நிலையில்,  நிச்சயமாக எதையும் கூறுவது தற்போதைய தருணத்தில் பொருத்தமில்லாததாக இருக்கக்கூடும். ஆனால், அவரது சொல்லிலும் செயலிலும் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில் காண்பிக்கின்ற அக்கறையிலும் நேர்மையின் அறிகுறிகள் தெளிவாக தெரிகின்றன. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னைய அரசாங்கம் இணங்கிக்கொண்ட நடைமுறைச் சாத்தியமான பொருளாதாரக் கொள்கைகளை தேசிய மக்கள் சக்தியின் மையக்கட்சியான ஜே.வி.பி. ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அதை வழிநடத்திய முறையில் இதை காணக்கூடியதாக இருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் விளைவாக மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்ற போதிலும், தற்போதைய தருணத்தில் நடைமுறைச் சாத்தியமான மாற்றுவழி எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்கள் தாங்கள் அதிகாரத்துக்கு வந்திருந்தாலும் கூட வேறு விதமாகச் செயற்படுவதற்கான வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் சிலவேளை தங்களுக்கு தேவையானதை அவர்கள் எடுத்திருக்கக்கூடும். அதனால் தான் அவர்களை மக்கள் நிராகரித்தார்கள். போரில் உயிர்துறந்தவர்களின் உறவினர்கள் மாவீரர்கள் தினம் என்று அறியப்பட்ட தினத்தில் நினைவேந்தலைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் அரசாங்கத்தின் அணுகுமுறை ஜனாதிபதியும் அவரது நிருவாகமும் தங்களது பண்புகளைப் பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதை காண்பிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகும். மாண்டுபோன தங்கள் பிள்ளைகளுக்கு நினைவேந்தல் செய்ய விரும்புகிறவர்கள் ஒரு சுமூகமான, அமைதியான முறையில் நினைவு கூருவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இது உண்மையில் இழப்பீட்டுக்கான அலுவலகச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. 2018 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட அந்த சட்டத்தின் 27 வது பிரிவு தனிநபர்களும் குழுக்களும் நினைவேந்தலைச் செய்ய அனுமதிக்கிறது.  கொழும்பில் உள்ளவர்களுக்கு மாத்திரமல்ல கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு நல்வாழ்வு வேண்டும் என்பதற்காக  சமூகத்தை மாற்றுவதற்கு போராடிய தங்கள் தியாகிகளை ஜே.வி.பி. யினர் நீண்டகாலமாக நினைவுகூர்ந்து வருகிறார்கள். தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் உயர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இருக்கிறது என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. போரில் உயிரிழந்த தங்களது இரு மகன்களை நினைவு கூருவதற்கு யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும் ( முன்பு மயானமாக இருந்த) இடத்துக்குச்  சென்ற ரி. செல்லத்துரை என்பவரும் அவரது மனைவியும் இப்போது இராணுவ முகாம் ஒன்றில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இராணுவ முகாமுக்கு எதிரே இருக்கும் தனியாருக்கு சொந்தமான சிறிய துண்டு நிலத்தில் அடையாளபூர்வமான ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. “எமது மகன்களை நினைவு கூருவதற்கு நாம் விரும்புகிறோம். அதற்காக அவர்களுக்கு விருப்பமான உணவுடன் பிரார்த்தனை செய்வதற்காக வந்தோம் ” என்று அந்த தம்பதியர் கூறினார்கள். உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்,  ஆனால் அவர்கள் சார்ந்திருந்த இயக்கத்தை நினைவுகூர முடியாது என்பதே இந்த சந்தர்ப்பத்தில் அரசாஙகத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. யாழ்ப்பாணம் இணுவிலில் 29 வயது இளைஞன் ஒருவன் இந்த வாரம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக இன்னொரு செய்தி கூறியது.  மாவீரர்தின நிகழ்வுகளின்போது சமூக ஊடகங்களில் தகவல்களை  பகிர்ந்து கொண்டமை தொடர்பாகவே அந்த இளைஞன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னைய தலைவர்களின் படங்களை மறைக்காமல் விடுவதைப் போன்று எதிர்காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர்களின் படங்களையும் பொலிசார் மறைக்காமல் இருக்கக்கூடும். விடுதலை புலிகளை நினைவுகூருவதற்கு அனுமதித்ததாக அரசாங்கத்தை எதிரணி அரசியல்வாதிகள் கடுமையாக கண்டனம் செய்கிறார்கள். இனத்துவ தேசியவாத சக்திக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கப்படக்கூடிய சாத்தியங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்பட்டது ஒன்றும் புதியது அல்ல. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை வகித்த முன்னைய அரசாங்கங்களினால் இதே போன்ற அனுமதி வழங்கப்பட்டது. இனவாதமற்ற இலங்கை ஒன்றை உருவாக்குவதற்கான அந்த அணுகுமுறை பாராட்டப்பட வேண்டியதேயாகும். முன்னாள் ஜனாதிபதி இலங்கைச் சமுதாயப் போட்டித் தேசியவாதங்களினால் கிரமமாக  திணறடிக்கப்பட்டு வந்திருக்கின்ற போதிலும், அந்த சமுதாயத்தின் பல்லின — பன்முகத்தன்மையை நீண்டகாலமாக பிரதிநிதித்துவம் செய்து வந்திருக்கிறார். இந்த சிந்தனைக்கு நெருக்கமானதாகவே பாரம்பரியமாக ஜே.வி.பி. இருந்து வந்திருக்கிறது. இதன் காரணத்தினாலேயே இன்றைய நேர்மறையான மாற்றத்துக்கான பெருமை பெருமளவுக்கு ஜனாதிபதி திசாநாயக்கவை சேருகிறது. முஸ்லிம் புறக்கணிப்பு: ==============  ஆட்சிமுறையில் இனவாதமற்ற போக்கு கடைப்பிடிக்கப்படும் என்று அளித்த உறுதிமொழிக்கு இணங்க, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் முதலாவது அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரைச் சேர்த்துக்கொள்ளாமல் விட்ட தவறை சீர்செய்வதற்கு இடையறாது முயற்சியை மேற்கொண்டு வருகிறது. முதற்தடவையாக  அரசாங்கத்தின் அதியுயர் மட்டத்தில் தீர்மானங்களை எடுக்கும்  செயன்முறைகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதை முஸ்லிம் சமுதாயம் காண்கிறது.   முஸ்லிம் ஒருவரை பிரதி சபாநாயகராகவும் இன்னொரு முஸ்லிமை பிரதியமைச்சராகவும் நியமித்ததன் மூலம் நிலைவரத்தை சீர்செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்திருக்கின்ற  போதிலும்  கூட, புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்ட வேதனை உணர்வு  முஸ்லிம் சமுதாயத்தை விசேடமாக அரசாங்கத்துக்கு வாக்களித்த கணிசமான எண்ணிக்கையான முஸ்லிம்களை தொடர்ந்து குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், கடந்த காலத்தில் பல முஸ்லிம் அமைச்சர்களைக் கொண்டிருந்த அரசாங்கங்கள் அதிகாரத்தில் இருந்த வேளைகளில் கூட, முஸ்லிம் சமுதாயத்துக்கு இழைக்கப்பட்ட பெரிய அநீதிகளை தடுக்க முடியவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு தேசியவாத குழுக்களின் பிரதான இலக்காக  முஸ்லிம் சமுதாயம் இருந்து வந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரமான கலவரங்களில் அவர்களின்  உடைமைகள் சூறையாடப்பட்டு நிர்மூலம் செய்யப்பட்டதுடன் சிலர் கொல்லப்பட்ட அதேவேளை அந்த அட்டூழியங்களைச் செய்தவர்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவையில் பல முஸ்லிம்கள் இருந்தும் அந்த அக்கிரமங்களை தடுக்க முடியவில்லை. கடன்பொறி ஒன்றில் நாடு சிக்கிக் கொள்ளவதற்கு வெகு முன்னதாக, ஊழல் தலைவிரித்தாடும் நாடாக இலங்கை மாறுவதற்கு முன்னதாகவும் கூட,  நாட்டின் ஐக்கிய உணர்வைச் சிதைத்த இனப்பிளவு ஒன்று இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற கையோடு இந்திய வம்சாவளி தமிழர்களின் (மலையக தமிழர்கள்) குடியுரிமையும் அதன் வழியாக வாக்குரிமையும் பறிக்கப்பட்டு அவர்கள் அரசியல் சமுதாயத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்கள். அதை தொடர்ந்து தனிச்சிங்களக் கொள்கையின் மூலமாக சகல  தமிழ்பேசும் மக்களினதும்  சமத்துவமான மொழியுரிமைகள் மறுக்கப்பட்டன. அதுவே  இலங்கையின் குடிமக்களில் பெருமளவானவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழிவகுத்தது. அந்த நேரத்தில் மிகவும் படித்த சமூகத்தவர்களாக விளங்கிய பறங்கியர் சமூகம் வெளிநாடுகளுக்கு சென்றது. இன்று நாட்டின் நாலாபுறங்களிலும் உள்ள மக்களும் மத்திய பகுதியில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்துக்காக, ஐக்கியத்துக்காக, ஒரு புதிய தொடக்கத்துக்காக  வாக்களித்திருக்கிறார்கள். இது தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்திருக்கும் ஒப்பற்ற ஒரு வாய்ப்பாகும்.  வாக்குறுதிகள் காப்பாற்றப்பட வேண்டும். https://arangamnews.com/?p=11518
    • யாழ் -மட்டக்களப்பு சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை கணவனின் பரபரப்பு புகார்! Vhg டிசம்பர் 09, 2024 யாழ்ப்பாண சிறையில் தனது மனைவி உதயகலாவுக்கு கொடுமைகள் நடப்பதாக தயாபராஜ் என்பவர் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தயாபராஜ் உதயகலா தம்பதியினர் யுத்தம் முடிந்த பின்னர் பல்வேறு நிதிக்குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தனர். பின்னர் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் தப்பிச் சென்றனர். அங்கு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயத்தில், மீண்டும் சட்டவிரோத இலங்கைக்குள் நுழைந்திருந்தனர். பின்னர் சர்வமக்கள் கட்சியென்ற பெயரில் உதயகலா ஒரு அமைப்பை ஆரம்பித்திருந்தார். மேலும் தனது மனைவி மீது தகாத துஸ்பிரயோக முறைகளை சிறையில் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள்ளே சிறைச்சாலை ஆட்கள் இருக்கும் போதே சிறைச்சாலை அதிகாரிகளால் ஆடைகளைக் கழட்ட வைத்து மானபங்கம் செய்துள்ளனர் இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.   https://www.battinatham.com/2024/12/blog-post_74.html   உதயகலா தொடர்பான பழைய செய்தி..   தயாபரராஜா, உதயகலா தம்பதியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை   கப்பம் பெறுதல், பாரிய பண மோசடி; வட மாகாண மக்களிடம் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதன் பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள தயாபரராஜா. உதயகலா தம்பதியினரை கைதுசெய்வதற்கு இன்டர்போலின் உதவியை நாட தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். உதயகலா என்னும் மேற்படி பெண் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்துவதுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியென்பதும் அவரினால் ஏமாற்றப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.  மோதல்களைத் தொடர்ந்து மன்னாரில் தலைமறைவாகியிருந்த மேற்படி தம்பதியினர் எவ்வித ஆவணங்களுமின்றி தமிழ்நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்றவேளை தனுஷ்கோடியில் வைத்து தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த செய்திகள் தம்பதியினரின் படங்களுடன் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உதயகலாவிடம் தாம் இழந்த பணத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை மேற்கொண்டு ள்ளனர். இத்தம்பதி மீது பண மோசடி, கப்பம் தொடர்பாக வடக்கு. கிழக்கு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதுடன்.  சிலவற்றில் இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இவர்கள் குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. இத்தம்பதிக்கு எதிராக வட மாகாணத்திலுள்ள நீதிமன்றங்களில் மட்டும் 11 வழக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றம் மேற்படி தம்பதியினரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யுமாறு நீதி அமைச்சைக் கோரியுள்ளது. சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட இவர்கள் 2011 ஆம் ஆண்டு குறித்த இளைஞனின் குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு 10 இலட்சம் ரூபாவினை பெற்றுத் தந்தால் மகனை விடுவித்து தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அக்குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொழுப்புக்கு வந்தபோது ரயில் நிலையத்திலிருந்து அவர்களை அடையாளம் தெரியாத இடமொன்றுக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்ததுடன் இம்மூவரையும் விடுவிப்பதாயின் 30 இலட்சம் ரூபா தரப்பட வேண்டுமெனவும் அச்சுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் 28 இலட்சம் ரூபாவினை செலுத்தியே தம்மை விடுவித்துக் கொண்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைவாகவே சாவகச்சேரி நீதிமன்றம் இன்டர்போலின் உதவியை நாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நீதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர் ஒருவரின் முன்னாள் மனைவியான உதயகலா எனும் குறித்த நபர் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரிடமிருந்து தாங்கள் இழந்த பணத்தை மீளப் பெற்றுத்தர உதவவேண்டுமெனக் கோரியும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சியூலெர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்கள் உதயகலா தங்களை கொழும்பிலுள்ள வி. எப். எஸ். க்ளோபல் யு. கே. வீஸா விண்ணப்பப்படிவங்கள் வழங்கும் நிலையத்திற்கு நேரில் அழைத்துச் சென்று பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வழங்கி தங்களை ஊக்குவித்ததாகவும் தெரிவித்தனர். உதயகலா மூன்று மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் பிரிட்டனில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபாய்களை அபகரித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேர்மையான பயணி என்பதனை நிரூபிப்பதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் மேலதிகமாக 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அறவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிரித்தானியா செல்வதற்குத் தயாரான நிலையிலிருந்த நபர்களை நீர்கொழும்பிலுள்ள ஒரு விடுதியில் தங்க வைத்த பின்னர் தலா 2 ஆயிரம் டொலர்கள் வீதம் அறவிட்டுள்ளார். விமான நிலையத்திற்கு வருமாறும் தான் முன்கூட்டியே அங்கு வந்து தேவையான வேலைகளை முன்னெடுப்பதாகவும் கூறிச் சென்றார். விடுதியில் தங்கியிருந்தவர்கள் விமானம் நிலையம் சென்று தேடியபோது உதயகலாவை அங்கு காணாது அப்போது தான் தாங்கள் ஏமாந்ததனை அவர்கள் உணர்ந்தனர். எங்கு தேடியும் உதயகலா பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. உதயகலா தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒரு இலங்கை அதிகாரி கூறுகையில், தமிழ்நாட்டு பொலிஸார் இவரை கைதுசெய்திருக்காவிட்டாலும் இவர்களது கைது பற்றிய செய்தியினை இலங்கை இராணுவம் பிரபல்யப் படுத்தி இருக்காவிட்டிருந்தால் இவர் இலகுவாக மேற்குலக நாடொன்றிற்கு தப்பிச் சென்றிருப்பது உறுதியென்றார். மே 05 ஆம் திகதி தனுஷ்கோடியில் சட்டவிரோதமாக வந்திறங்கிய 05 சிறுவர்கள் உள்ளிட்ட 10 தமிழர்களுடனேயே உதயகலா இருந்துள்ளார். சட்டவிரோத ஆட் கடத்தல் தொடர்பில் விரிவான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும். உதயகலாவின் இரண்டாவது கணவரான கதிரவேல் தயாபரராஜாவையும் எம்மால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இவர் 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக காணாமற்போனோர் பெயர்ப் பட்டியலில் இடம்பிடித்தவர் ஆவார்.   http://archives.thinakaran.lk/2014/05/16/?fn=n1405166
    • சத்தியமூர்த்தியை கேள்வி கேட்பவர் கவனம் காவல்துறையில் முறைப்பாடு குடுத்துவிடுவார். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.