Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்காவின் அதிரடி வீண் : CPL தொடரிலிருந்து ஜமெய்க்க அணி வெளியேற்றம்

Featured Replies

சங்காவின் அதிரடி வீண் : CPL தொடரிலிருந்து ஜமெய்க்க அணி வெளியேற்றம்

Sanga-Getty-696x453.jpg Image Courtesy - Getty image
TP-BB-Website-Banner-visit-the-hub-728.jpg

மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின், பிளே ஒப் சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது.

இச்சுற்றில் நடைபெற்று முடிந்திருக்கும் வெளியேறல் (Eliminator) நொக்அவுட் போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியினால் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தப்பட்டிருக்கும் நடப்புச் சம்பியன் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி தொடரில் இருந்து வெளியேறுகின்றது.

 

கடந்த மாத ஆரம்பத்திலிருந்து மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளை ஒத்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே ஒப் போட்டிகள் செப்டம்பர் 5 ஆம் திகதியில் இருந்து தொடங்கியிருந்தன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பிரசன்னத்துடன், ஆறு அணிகள் பங்குபெறும் இத்தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த குழுநிலை போட்டிகளின் முடிவுகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களினைப் பெற்றுக்கொண்ட அணிகள் தீர்மானமிக்க பிளே ஒப் சுற்றிற்கு தெரிவாகியிருந்தன.

அந்த வகையில், தொடரின் இறுதிப் போட்டிக்கு முதலில் தெரிவாகும் அணியினை தேர்ந்தெடுக்கும் பிளே ஒப் சுற்றின், தகுதிபெறல் 1 (Qualifier 1) போட்டி புள்ளிகள் அட்டவணையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட திரின்பாகோ நைட் ரைடர்ஸ் சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணிகள் இடையில் நடைபெற்றிருந்தது.

இப்போட்டியில் 38 ஓட்டங்களால் வெற்றி பெற்ற கிரிஸ் கெயில் தலைமையிலான சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முதலாவது தெரிவாகும் அணியாக தம்மை பதிவு செய்துகொண்டிருந்தது.

தொடரில் புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம், நான்காம் இடங்களினை முறையே பெற்றுக்கொண்ட ஜமெய்க்கா தல்லாவாஸ் மற்றும் கயானா அமேசான் வோரியர்ஸ் அணிகள் தொடரில் இரண்டாவதாக இறுதிப் போட்டியில் இணையப்போகும் அணியினை தேர்வு செய்யும் பிளே ஒப் சுற்றின் தகுதிபெறல் 2 (Qualifier 2) போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற எலிமினேட்டர் போட்டியில் மோதியிருந்தன.

த்ரினேடாட் பிரைன் லாரா மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்த ஆட்டத்தில் ரயாட் எர்மிட் தலைமையிலான கயானா அமேசான் வோரியர்ஸ் தரப்பு குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணியினை முதலில் துடுப்பாடுமாறு பணித்திருந்தது.

இந்த அடிப்படையில் தமது துடுப்பாட்டத்தினை முதலில் தொடங்கிய ஜமெய்க்கா அணிக்கு லென்ட்டல் சிம்மோன்ஸ் நல்லதொரு ஆரம்பத்தினை தந்திருந்தார். சிம்மோன்ஸ் 25 பந்துகளுகளில் வேகமான முறையில் பெற்றுக்கொண்ட 34 ஓட்டங்களால் அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தாலும் எதிரணிப் பந்து வீச்சாளர்கள் ஜமெய்க்காவின் ஏனைய முன்வரிசை வீரர்களினை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இவ்வாறானதொரு நிலையில், மத்திய வரிசை வீரராக களமிறங்கிய ஜமெய்க்கா அணியின் தலைவர் குமார் சங்கக்கார பொறுப்பாக ஆடி அணியினை மீட்டெடுத்தார்.

எனினும், கயானா அணிக்காக விளையாடியிருந்த ஆப்கானிஸ்தானின் வலதுகை சுழல் வீரர் ராசித் கான் ஹட்ரிக் ஒன்றினை கைப்பற்ற ஜமெய்க்கா மீண்டும் சரிவுப்பாதையினை நோக்கி நகர்ந்திருந்தது. இதனை உணர்ந்த குமார் சங்கக்கார அதிரடியான முறையில் ஆடி அரைச்சதம் கடக்க 20 ஓவர்கள் முடிவில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.  

 

இதில் இறுதிவரை களத்தில் நின்ற சங்கக்கார 38 பந்துகளில் 7 பெளண்டரிகளுடன் 57 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். கயானா அணியின் பந்து வீச்சில் ராசித் கான் 3 விக்கெட்டுக்களையும், ஸ்டீவன் ஜேக்கப்ஸ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து வெற்றியிலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவாலான 169 ஓட்டங்களினைப் பெறுவதற்கு பதிலுக்கு ஆடிய கயானா அணி, நியூசிலாந்து வீரர் லூக் ரோன்ச்சியின் அபார ஆட்டத்துடன், வெற்றி இலக்கை வெறும் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 17.5 ஓவர்களில் அடைந்தது.

இதில் ரோன்ச்சி வெறும் 33 பந்துகளினை மாத்திரம் எதிர்கொண்டு 5 அபார சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். அதோடு, ஆரம்ப வீரராக வந்திருந்த சட்விக் வால்டனும் பெறுமதிமிக்க 39 ஓட்டங்களினைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் சுழல் வீரர் மஹமதுல்லாஹ் மூன்று விக்கெட்டுக்களை ஜமெய்க்கா அணிக்காக கைப்பற்றியிருந்த போதும் அது எதிரணியினை வீழ்த்த போதுமாக அமைந்திருக்கவில்லை.

இப் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும் கயானா அணி குவாலிபயர் 2 (Qualifier 2) போட்டியில் இலங்கை நேரப்படி நாளை (8) இடம்பெறும் போட்டியில் திரின்பாகோ நைட்ரைடர்ஸ் அணியுடன் இறுதிப் போட்டிக்கான தெரிவுக்காக மோதுகின்றது.

போட்டியின் சுருக்கம்

ஜமெய்க்கா தல்லாவாஸ் – 168/8 (20) குமார் சங்கக்கார 57(38)*, லென்ட்ல் சிம்மோன்ஸ் 34(25), ராசித் கான் 3-32 (4)

கயானா அமேசான் வோரியர்ஸ் – 169/5 (17.5) லூக் ரோன்ச்சி 70(33), சட்விக் வோல்ட்டன் 39(23), மஹமதுல்லாஹ் 3-25 (4)

போட்டி முடிவுகயானா வோரியர்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

http://www.thepapare.com/

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

சிபிஎல் டி20-கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக்: ஆப்கான் வீரர் ரஷீத் கான் சாதனை

 

 
Rashid%20Khan

ஆப்கான் லெக்ஸ்பின்னர் ரஷீத் கான் ஹாட்ரிக் சாதனை.   -  படம். | கெட்டி இமேஜஸ்.

கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட்டில் முதன் முதலாக ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனையை ஆப்கான் வீரர் ரஷீத் கான் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக நிகழ்த்தினார். இதனால் கடந்த முறை சிபிஎல் சாம்பியன் அணியான ஜமைக்கா தலவாஸ் அணி வெளியேற்றப்பட்டது.

தரவ்பா, பிரையான் லாரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் ஜமைக்கா அணியை பேட் செய்ய அழைத்தது.

சிம்மன்ஸ் 25 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 34 எடுக்க, லூயிஸ் 3 பவுண்டரிக்ளுடன் 10 பந்துகளில் 15 எடுத்த நிலையில் எம்ரிட் பவுன்சரில் வெளியேறினார். கேப்டன் சங்கக்காரா 38 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், இந்நிலையில்தான் ரஷீத் கான் ஹாட்ரிக் 20-25 கூடுதல் ரன்களை எடுக்க விடாமல் தடுத்ததோடு சங்கக்காராவுக்கு பார்ட்னர் இல்லாமல் செய்து விட்டது.

ரஷீத் கானின் ஹாட்ரிக் கூக்ளி

15-வது ஓவரில் ரஷீத் கான் முதலில் மெக்கார்த்தியை பவுல்டு செய்தார், டிரைவ் ஆட முயன்று ஏமாந்தார். ஜொனாதன் ஃபூ அடுத்த பந்தில், கூக்ளிக்கு லெக் ஸ்டம்பை இழந்தார்.

ரோவ்மன் போவெல் ஆஃப் ஸ்டம்புக்கு நன்றாக வெளியே வீசப்பட்ட பந்துக்கு ஆவலாதி போல் டிரைவ் ஆட முயற்சி செய்தார், பந்து கூக்ளியில் உள்திரும்பி ஆஃப் ஸ்டம்பைப் பதம் பார்த்தது. ஆக மூன்றுமே பவுல்டு, மூன்றுமே கூக்ளி, சிபில் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஹாட்ரிக் எடுத்த வீரர் என்ற சாதனையை ரஷீத் கான் நிகழ்த்தினார்.

ஜமைக்கா அணி 20 ஓவர்களில் 168/8 என்று கட்டுப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் லூக் ரோங்கி 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 70 ரன்கள் விளாச 17.5 ஓவர்களில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

http://tamil.thehindu.com/sports/article19636265.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.