Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பின் அனுமதியை வடக்கு அதிகாரிகள் தடுக்க முடியாது

Featured Replies

கொழும்பின் அனுமதியை வடக்கு அதிகாரிகள் தடுக்க முடியாது

வடக்­குக் கட­லில் மீன்­பி­டிக்க கொழும்பு அனு­மதி கொடுத்­து­விட்­டால் வடக்கு அதி­கா­ரி­கள் தடுக்­கவே கூடாது
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வடக்­குக் கட­லில் தெற்கு மீன­வர்­கள் மீன்­பி­டிப்­ப­ தற்கு கொழும்­பி­லுள்ள கடற் றொழில் அமைச்சு அனு­மதி கொடுத்­து­விட்­டால் அதன் பின்­னர் அவர்­க­ளுக்கு பிர­தேச செய­லர்­களோ திணைக்­கள அதி­கா­ரி­களோ எந்த இடைஞ்­சல்­க­ளை­யும் செய்­யக்­கூ­டாது.

இந்த விட­யத்­தில் உள்­ளூர் மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைக் கரி­ச­னை­க­ளைச் செவி­ம­டுக்க வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

இவ்­வாறு அழுத்­தம் திருத்­த­மாக, உரத்த தொனி­யில் வட­ப­கு­தி­யில் உள்ள அரச உயர் அதி­கா­ரி­கள் மத்­தி­யில் தெரி­வித்­தார் கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் எம்.சி.எல்.பெர்­னாண்டோ.

வடக்­கில் தெற்கு மீன­வர்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் ஆராய மாகாண ஆளு­நர் றெஜி­னோல்ட் குரே­யால், யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது செய­லகத்­தில் நேற்று ஒரு கூட்­டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டது.

அந்­தக் கூட்­டத்­துக்கு கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் எம்.சி.எல்.பெர்­னாண்டோ வருகை தந்­தி­ருந்­தார். அத்­து­டன், வடக்கு மாகா­ணத்­தின் சில பிர­தேச செய­லா­ளர்­கள், மாவட்­டங்­க­ளின் மேல­தி­கச் செய­லா­ளர்­கள், நீரி­யல் வளத் திணைக்­க­ளத்­தின் யாழ்ப்­பா­ணம் மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளின் பிர­திப் பணிப்­பா­ளர்­கள் வீட­மைப்பு அதி­கார சபை­யின் மாவட்ட அதி­கா­ரி­கள், முல்­லைத்­தீவு காணி அலு­வ­லர் மற்­றும் தென்­னி­லங்கை மீன­வர்­கள் சிலர் இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லுக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

தென்­னி­லங்கை மீன­வர்­கள் வடக்கு கடற்­ப­ரப்­பில் சுதந்­தி­ர­மாக கடற்­றொ­ழி­லில் ஈடு­பட அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தும் அதற்கு வடக்­கில் உள்ள அதி­கா­ரி­கள் இடைஞ்­ச­லாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தி­லுமே அதி­கம் கரி­சனை காட்­டப்­பட்­ட­தாக உத­யன் அறிந்­தான்.

தென்­னி­லங்கை மீன­வர்­க­ளால் வடக்கு மீன­வர்­கள் படும் இன்­னல்­கள், பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தில் கூட்­டம் அவ்­வ­ள­வாக அக்­கறை செலுத்­த­வில்லை. அதே­நே­ரம், தெற்கு மீன­வர்­க­ளின் விட­யத்­தில் உள்ளூர் மீன­வர்­க­ளின் குறை நிறை­க­ளுக்கு வடக்­கில் உள்ள அதி­கா­ரி­கள் செவி­ம­டுக்க வேண்­டி­ய­தில்லை என்­கிற அறி­வு­றுத்­த­லும் வழங்­கப்­பட்­டது.

‘‘கடற்­றொ­ழில் திணைக்­க­ளத்­தால் அனு­மதி வழங்­கப்­பட்ட பாடு­க­ளில் தென்­னி­லங்கை மீன­வர்­கள் எந்­த­வி­தத் தடை­யு­மின்றி தொழி­லில் ஈடு­ப­ட­வேண்­டும். அந்­தப் பாடு­க­ளுக்கு பிர­தேச செய­லர்­கள் நிபந்­த­னை­யின்றி அனு­ம­திப் பத்­தி­ரம் வழங்­க­வேண்­டும்.

இந்த விட­யத்­தில் உள்­ளூர் மீனவ சங்­கங்­க­ளின் ஆலோ­ச­னை­யைப் பிர­தேச செய­லர் பெற வேண்­டிய சட்ட ஏற்­பாடு எது­வுமே கிடை­யாது’’ ” என்று கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­க­ளப் பணிப்­பா­ளர் பிர­தேச செய­லர்­க­ளுக்கு திட்­ட­வட்­ட­மாக அறி­வு­றுத்­தி­னார்

http://newuthayan.com/story/26711.html

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்கண்ட ஆக்களும் 'கேகால, நுவரெலியா,கண்டீல' மீன் பிடிக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் போட வேண்டியது தான்.

நல்ல டீற்ரெயிலு சொல்லுவதாக பத்திரிகையில் போடுகினம். 

மீன் பிடித்துறை என வடமாகாணத்துக்கு அமைச்சு இருக்கா, இல்லையா?

அதன் வேலை என்ன? கொழும்ப அதிகாரி அறப்படித்தால் சுமந்திரன், சம்பந்தனுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தது?

dg-photo-233x300.jpeg

வடக்குக் கடற்பரப்பில் மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களிடம் வடக்கிலுள்ள பிரதேச செயலர்களோ, அதிகாரிகளோ எந்தவொரு கேள்வியும் கேட்கக்கூடாது என நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எல்.சி. பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

அத்துடன் இவ்விடயத்தில் உள்ளூர் மீனவர்களின் கரிசனைகளைக் கருத்தில் கொள்ளத் தேவையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் சிங்கள மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நேற்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கொழும்பிலிருந்து நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எல்.சி. பெர்னாண்டோ வருகை தந்திருந்தார்.

அத்துடன் இக்கூட்டத்திற்கு பல பிரதேச செயலர்கள், மாவட்டத்தின் மேலதிக செயலர்கள், நீரியல்வளத் திணைக்களத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு அதிகாரிகள், வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட காணி அலுவலகர்கள், தென்பகுதி மீனவர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எல்.சி பெர்னாண்டோ, வடபகுதிக் கடலில் மீன்பிடிக்க அனுமதி கொடுக்கப்பட்ட தென்பகுதி மீனவர்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கக்கூடாது என எச்சரித்துள்ளார்.

மேலும், தென்பகுதி மீனவர்கள் வடக்குக் கடற்பரப்பில் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படவேண்டும். அதற்கு வடபகுதி அதிகாரிகள் இடைஞ்சலாக இருக்கக்கூடாது.

அத்துடன், வடபகுதியில் கடற்றொழில திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பாடுகளில் தென்பகுதி மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்காக அந்தப் பாடுகளுக்கான அனுமதிப் பத்திரத்தை பிரதேச செயலர்கள் எந்தவித விசாரணையுமின்றி வழங்கவேண்டும்.

இந்த விடயங்களுக்கு உள்ளூர் மீனவர்களின் கருத்துக்களை பிரதேச செயலர்கள் கேட்கவேண்டிய அவசியம் இல்லையெனவும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

http://thuliyam.com/?p=78194

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.