Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாச்சாரத்துடன் தொடர்புபட்டது – பூஜித ஜெயசுந்தர!

Featured Replies

2e79051f535b06583dfeaa47b4b5b74c_XL.jpg

வடக்கு மக்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாச்சாரத்துடன் தொடர்புபட்டது. அந்த மக்கள் கல்வி கற்றது, வளர்ந்தது அனைத்தும் ஆயுதக் கலாச்சாரத்திலேயே. அம்மக்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தியவர்கள். ஆகையால் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் அங்கு இடம்பெற்ற சம்பவங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தேன் என சிறிலங்கா காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

வடக்கில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் சாதாரணமானவையா அல்லது பாரதூரமானவையா என ஊடகமொன்றினால் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற பின்னணி தொடர்பாக நாம் கரிசனை கொண்டால் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு தற்போது ஒன்பது , பத்து வருடங்களே கழிந்துள்ளன.

நாம் இது பற்றிச் சிந்திக்கவேண்டும். அங்குவாழும் பொதுமக்கள் மற்றும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பிலும் கரிசனை கொள்ளவேண்டும்.

அவர்கள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களா? இல்லை. பல வருடகாலமாக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள் இப்போதும் அங்குள்ளன.

அம்மக்கள் கல்வி கற்றது, வளர்ந்தது அனைத்தும் ஆயுதக் கலாச்சாரத்திற்குள்ளேயே. அவர்கள் வெடிபொருட்களைப் பயன்படுத்தியவர்கள்.

அவர்களின் எண்ணங்களும் சிந்தனைகளும் ஆயுதக் கலாச்சாரத்துடன் தொடர்புபட்டவையே. இந்த நிலமையை மாற்றுவதற்கு நான் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்தேன். இது தொடர்பில் அறிக்கையிட்டேன்.

இது தொடர்பில் படை அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். அவர்களின் ஆலோசனைக்கமையவும், ஆயுதப் படையினருடனும் இணைந்து நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளேன் எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=78168

 

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மக்கள் ஆயுதக் கலாசாரத்துடன் பிணைந்துள்ளனராம்! - பொலிஸ்மா அதிபர் கூறுகிறார் 
[Sunday 2017-09-10 07:00]
வடக்கு மக்­க­ளின் எண்­ணங்­க­ளும், சிந்­த­னை­க­ளும் ஆயுதக் கலா­சா­ரத்­து­டன் கலந்­தது. இநந்த நிலை மாற்­ற­ம­டைய வேண்­டும். இது தொடர்­பில் தனிப்­பட்ட முறை­யில் கவ­னம் செலுத்­தி­யுள்­ளேன் என்று பொலிஸ்மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­த­தார். கொழும்பு தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

வடக்கு மக்­க­ளின் எண்­ணங்­க­ளும், சிந்­த­னை­க­ளும் ஆயுதக் கலா­சா­ரத்­து­டன் கலந்­தது. இநந்த நிலை மாற்­ற­ம­டைய வேண்­டும். இது தொடர்­பில் தனிப்­பட்ட முறை­யில் கவ­னம் செலுத்­தி­யுள்­ளேன் என்று பொலிஸ்மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­த­தார். கொழும்பு தொலைக்­காட்­சிக்கு வழங்­கிய நேர்­கா­ண­லி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

  

“கடந்த 30 ஆண்­டு­க­ளாக இடம்­பெற்ற போர் தொடர்­பில் கரி­சனை செலுத்­தி­னோம். பயங்­க­ர­வா­தத்­தின் பின்­னர் தற்­போது எட்டு ஆண்­டு­களே கடந்­துள்­ளது. இந்த நிலை­யில், பொது மக்­கள் மற்­றும் சமூ­க­வி­ரோதச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­வர்­கள் குறித்­துக் கரி­சணை கொள்ள வேண்­டும். அவர்­கள் அனை­வ­ரும் மறு­வாழ்வு வழங்­கப்­பட்­ட­வர்­கள் இல்லை.

பல ஆண்­டு­க­ளா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயு­தங்­கள் மற்­றும் வெடி பொருள்­கள் இப்­போ­தும் அங்கு இருக்­கின்­றன. அந்த மக்­க­ளின் மன­ நி­லை­யைப் பார்க்க வேண்­டும். அங்­குள்ள மக்­கள் கல்வி கற்­றது, வளர்ந்­தது அனைத்­தும் ஆயுத கலா­சா­ரங்­க­ளின் மத்­தி­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளது. அவர்­கள் வெடிப்­பொ­ருள்­களைப் பயன்­ப­டுத்­தி­ய­வர்­கள்.அந்த மன­ நிலை மாறவேண்­டும். வடக்கு மக்­க­ளின் எண்­ணங்­க­ளும், சிந்­த­னை­ க­ளும் ஆயுதக் கலா­சா­ரத்­து­டன் கலந்­தது. இந்த நிலமை மாற வேண்­டும். இது தொடர்­பில் தனிப்­பட்ட முறை­யில் கவனம் செலுத்தி யுள்ளேன் – என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=189935&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதத்தை தூக்க பண்ணியது யார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.