Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டென்மார்க் செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்கில் ஆர்ப்பாட்டம்:இளைஞர் இல்ல விவகாரம், தீக்கிரை 200 பேர் கைது ! [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007]

டென்மார்க் தலைநகர் கோபன்¦?கனில் இள வயதினருக்கான மையம் ஒன்றில் தர்ணா செய்து கொண்டிருந்தவர்களை அகற்றியது தொடர்பாக இரண்டாவது இரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிட்டதட்ட இருநூறு பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்நொர்ரிபுரோ மாவட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வாகனங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர்.கூட்டத்தினரை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர், இதற்கு பதிலடியாக கூட்டத்தினர் காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசினர்.சர்ச்சைக்குரிய யுவ வயதினருக்கான மையத்தினை இடதுசாரி குழுக்கள் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமித்துள்ளனர்.தற்போது தலைநகரப் பகுதியின் வான மண்டலம் முழுவதும் புகை மூட்டமாகக் காணப்படுகிறது. இந்த ஆர்பாட்டங்களின் ஆபத்துக் காரணமாக நோபுரோகேத, பிரின்ஸ்கேத, பலவை, ஜாக்ற்வை, நோரஅல, போபர்கேத ஆகிய ஐந்து பிரதான சாலைகள் மக்கள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆர்பாட்டக்காரரில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் கைதானவர்களில் 77 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, அதில் 14 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக சுமார் 400 பேர்வரை கைதாக்கப்பட்டு இரு தினங்களில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த ஆர்பாட்டங்களின் போது பின்புறமாக வந்த ஒரு கல்லு தாக்கியதில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார்.

உலகத்தின் பல நாடுகளிலும் இருந்து இளையோர் வந்து தமது திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் இல்லக் கட்டிடம் முன்னரே விற்பனை செய்யப்பட்டுவிட்டது. இதில் தங்கியிருப்போர் பாராம்பரியமிக்க இந்தக்கட்டிடத்தில் இருந்து எழும்ப மறுத்துவருகிறார்கள். கடந்த ஒக்டோபர் இவர்களை எழும்பும்படி கேட்கப்பட்டபோது இதுவரை டென்மார்க்கில் நடைபெற்றிராத பாரிய ஆர்பாட்டம் வெடித்தது. இதன் பின்னர் இவ்வாரம் போலீசார் கட்டாயமாக இவர்களை வெளியேற்ற முயன்றபோது ஆர்பாட்டங்கள் மீண்டும் வெடித்தன. போலீசார் கண்ணீர்ப்புகை அடித்தும், கைதுகளை மேற்கொண்டும் இவற்றைத் தடுக்க முயன்று வருகிறார்கள்.

இந்தக் கட்டிடத்தில் ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்தும் மாணவர்கள் ஒன்று கூடும் கலாச்சாரம் உள்ளதால் இதை அண்டி ஒரு ஐரோப்பிய கலாச்சார வலையாக்கம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த ஆர்பாட்டங்களுக்கு ஆதரவாக ஐரோப்பாவின் பல நாடுகளில் தொடர் ஆர்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இத்தகைய ஆதரவு ஆர்பாட்டங்கள் வெளிநாடுகளில் மட்டும் இதுவரை 50 தடவைகள் நடைபெற்றுள்ளன. இவ்வாரம் மட்டும் 12 இடங்களில் நடைபெற்றுள்ளன. ஸ்ரொக்கோம், ஒஸ்லோ, வீயன்னா, பிளஞ்போ போன்றன முக்கியமானவையாகும். நேற்று பேர்ளினில் சுமார் 100 பேர்வரை டேனிஸ் தூதரகத்தின் முன்னால் ஆர்பாட்டங்களை செய்து கோசமெழுப்பினர். ஜேர்மனி கம்பேர்க்கில் சுமார் 800 பேர்வரை வீறு கொண்டு குப்பைத் தொட்டிகளை கொழுத்தி ஆர்பாட்டம் செய்தனர். இவர்களில் 14 பேர் கைதானார்கள். இது இவ்விதமிருக்க சுவீடனில் இருந்து ஆர்பாட்டங்களை நடாத்துவதற்காக வந்த மூன்றுபேரை சுவீடிஸ் போலீஸ் கைது செய்துள்ளது.

இளைஞர்கள் முறைப்படி கட்டிடத்தை விட்டு கிளம்ப வேண்டும். இவ்வாறான வன்முறைகளும், ஆர்பாட்டங்களும் பயனற்றவை, இவற்றால் யாதொரு தீர்வும் ஏற்படாது என்று கொப்பன்கேகன் மாநகர மேயர் றீட்பியாகோட் தெரிவித்தார். ஆனால் இவ்வளவு பாரததூரமான அதிர்வலைகளை உருவாக்கும் ஊர்வலங்களும் எதிர்ப்பும் நிலவக் காரணமென்ன? வெறும் கட்டிட விற்பனைதான் இதன் பிரச்சனையா? வேறு இடத்திற்கு மாணவர் போக மறுப்பது ஏன்? இதன் பின்னால் யாதாவது முடிச்சு மறைந்து கிடக்கிறதா என்பதை அறிய மேலும் சில காலம் எடுக்கலாம். ஆயினும் கலவரங்கள் தொடர்கின்றன. கிறஸ்டீனாகாவன் கிம்நாசியம் பாடசாலை அடித்து நொருக்கப்பட்டு, கணினிகள் யாவும் உடைத்து வீசப்பட்டு, முழுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நாலு மணிக்கு இது நடந்துள்ளது.

http://www.tamilnews.dk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளுக்கு நன்றி கறுப்பி அம்மணி அவர்களே!

டென்மார்க்கில் பொலிஸாருடன் இளைஞர்கள் மோதல் வெளிநாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர் கைது

டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனில் பொலிஸாரிற்கும் வெளிநாடுகளை சேர்ந்த நூற்றுக் கணக்கான இளைஞர்களிற்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பெருமளவு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் அதிகாரிகள் இளைஞர் நிலையமொன்றை மத அமைப்பொன்றிற்கு விற்றது தொடர்பாக உருவாகிய பதற்ற நிலையே வன்முறையாக மாறியுள்ளது.

குறிப்பிட்ட நிலையம் 1982 இலிருந்து இளைஞர்களின் கைகளிலிருந்து வந்தது. எனினும், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பொலிஸார் அங்கிருந்தவர்களை வெளியேற்ற முயன்றுள்ளனர்.

கையடக்க தொலைபேசி மூலம் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு புதிதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மேலும் வன்முறைகள் இடம்பெறலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது.

கொப்பன்ஹேகனின் தொழிலாளர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சனிக்கிழமை மோதல் மூண்டுள்ளது.

இளைஞர்கள் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளனர்.

பாடசாலையொன்றை தாக்கி சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள் கடைகளை உடைத்து நொருக்கியுள்ளனர்.

இதன்போது, இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மூன்று ஆர்ப்பாட்டக்காரர்களும் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் வெளிநாட்டவர்களை சுற்றிவளைத்துள்ளனர்.

பாடசாலைகளையும், வீடுகளையும், விடுதிகளையும் சுற்றிவளைத்த பொலிஸார் 100 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஜேர்மனி, சுவீடன், நோர்வே, இத்தாலி, பிரிட்டிஷ் நாட்டவர்கள் உள்ளனர். இவர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படப்பிடிப்பாளரை திருமணம் செய்து பட்டத்தை இழந்தார் டென்மார்க் இளவரசி

[06 - March - 2007]

டென்மார்க் இளவரசி அலெக்சாண்ட்ரா கிறிஸ்டினா, புகைப்படக்காரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, அலெக்சாண்ட்ரா, தனது இளவரசி பட்டத்தை இழந்து விட்டதாக டென்மார்க் அரண்மனை அறிவித்துள்ளது.

for1sqo8.jpg

உலகின் மிகப் பழைமையான அரச குடும்பங்களில் டென்மார்க் மன்னர் குடும்பத்திற்கு முக்கிய இடம் உண்டு. பாரம்பரியமும், பழைமையும் மிகுந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்த அரசி மார்க்ரெட்டின் இரண்டாவது மகன் இளவரசர் ஜோவச்சிம். இவருக்கும் ஹொங்கொங்கில் பிறந்த அலெக்சாண்ட்ரா கிறிஸ்டினா என்பவருக்கும் 1995 இல் திருமணம் நடந்தது. இதையடுத்து, அலெக்சாண்ட்ரா, டென்மார்க் நாட்டின் இளவரசியானார்.

இவர்களுக்கு பெலிக்ஸ், நிகோலின் என இரு குழந்தைகள் உள்ளனர். அலெக்சாண்டிராவிற்கும், இளவரசர் ஜோவச்சிம்மிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 2005 இல் விவாகரத்து பெற்றனர். இதற்கிடையே இளவரசி அலெக்சாண்ட்ரா (42), மார்டின் ஜோர்கென்சன் (29) என்ற புகைப்படக்காரரை காதலித்து வந்தார். இருவருக்கும் திருமணம் நடக்கப் போவதாக டென்மார்க் பத்திரிகைகள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வந்தன.

இந்நிலையில், தன்னை விட 13 வயது இளையவரான மார்டின் ஜோர்கென்சனை, இளவரசி அலெக்சாண்ட்ரா சனிக்கிழமை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தேவாலய ஒன்றில் நடந்த திருமண விழாவில் புதுமண தம்பதிகளுக்கு மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இளவரசர்கள் பெலிக்ஸ், நிகோலின் ஆகியோர் தங்களது தாயின் திருமண விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சாதாரண குடிமக்களில் ஒருவரை மணந்ததால், அலெக்சாண்ட்ரா தனது இளவரசி பட்டத்தையும், அரச குடும்பத்தினர் என்ற பெருமையையும் இழந்துவிட்டதாக டென்மார்க் அரண்மனை அறிவித்துள்ளது. இதுவரை இளவரசி என்பதால், பெற்று வந்த வருமான வரி விலக்கு சலுகையும் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தனது திருமணம் குறித்து அலெக்சாண்டரா கூறும் போது, `மார்டினை திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது. எனது எதிர்காலத்தை அமைதியாகக் களிக்க முடிவு செய்துள்ளேன்' என்றார்.

www.thinakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.