Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசாங்கத்தின் அற்ப சொற்ப ஆசைகளுக்கு தமிழ் தலைமைகள் விலைபோய்விட்டன – கபே அமைப்பு குற்றச்சாட்டு!

Featured Replies

59c3c0a5a864b-IBCTAMIL.jpg

வட-கிழக்கு தமிழ் தலைமைகள் தமது அற்பசொற்ப ஆசைகளுக்காக சிறிலங்கா அரசாங்கத்திடம் விலைபோயுள்ளதாகவும், இதனால் வட-கிழக்கில் பாரியளவிலான பாதிப்புக்கள் ஏற்படும் என சிறிலங்காவின் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கபே அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவிக்கையில்,

தமிழ் அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களின் அற்பசொற்ப எதிர்பார்ப்புக்களுக்காக உள்ளூராட்சிகள் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி திருத்தங்களைக் கொண்டுவந்ததினால் வடக்கு, கிழக்கில் பாரியளவான பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன.

இதனை தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சரிவர புரிந்து வைத்திருந்தார் எனத் தெரிவித்த கீர்த்தி தென்னக்கோன் தற்போது தமிழர்களின் அரசியல் ஆலோசகராக இருக்கும் சுமந்திரன் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விலைபோயுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

பல மாதங்களாக இழுபறிநிலையிலிருந்த உள்ளூராட்சித் திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேறியுள்ளது.

எனினும் இத்திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுவதாக பல அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளபோதிலும் தமிழரசுக் கட்சி ஆதரவாக வாக்களித்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன், குறைபாடுகளுடன் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டதாக அதிருப்தி வெளியிட்ட அதேவேளை, தமிழ்த் தலைமைகளை சிறிலங்கா அரசாங்கம் விலைகொடுத்து வாங்கிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

“சிறிலங்கா நாடாளுமன்ற வரலாற்றில் பின்கதவால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட முதலாவது சட்டமாக உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமாக அடையாளமிடப்படுகின்றது. இது ஜனநாயக விரோத மற்றும் முறையற்ற சட்டமாகும். குறிப்பாக துரதிஷ்டவசமாக தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைக்கு இடையிலான 60, 40 வீத வித்தியாசம் இறுதி தருணத்தில் சபையில் வாக்கெடுப்பு நடத்தவிருந்த 15 நிமிட சொற்ப நேரத்திலேயே 50க்கு 50ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த விகிதத்திற்கு கொண்டுவந்தமைக்கான காரணம், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிஷாத் பதியூதீன் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தேவைகளை நிறைவேற்றவே ஆகும். அவர்களது வாக்குகளற்ற நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற்போன சூழ்நிலை உருவாகியிருந்தது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு அம்மூவரது கோரிக்கையான 50க்கு 50 என்ற திருத்தம் சட்டமூலத்திற்கு உள்வாங்கப்பட்டது. இந்த திருத்தத்துடன் விகிதாசார தொகுதிவாரியுடன் சேர்த்த பின்னர் நடக்கும் ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நாட்டில் பரந்துவாழும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே கிடைக்காத நன்மையொன்று கிடைக்கும். இந்த சட்டமூலத்திற்கு திருத்தங்கள் பின்கதவால் கொண்டுவந்து நிறைவேற்ற செலுத்தப்பட்ட விலை அதிகமாகும். இதனால் வடக்கு, கிழக்கிலேயே அதிக அநீதி ஏற்படும் என்று கூறுகின்றோம். அரசியல் கட்சிகளுக்கு தத்துவாசிரியர்கள் உள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அன்ரன் பாலசிங்கம் இப்பதவியிலிருந்தார். ஆனால் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தத்துவாசிரியராக இருக்கும் சுமந்திரன், அந்தக் கடமையை சம்பந்தனுக்கு செய்யாமல் ரணிலுக்கே நிறைவேற்றினார். இது இனவாத அறிவிப்பல்ல. இந்த நாட்டில் சட்டத்தை பற்றி நன்கு தெரிந்தவர்களும், மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் சட்டத்தை சரிவர நிறைவேற்றுவோம் என குரல் கொடுத்தவர்கள் நாடாளுமன்றத்தில் இப்போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கீழே கண்களுக்கு எவ்வாறு மண்ணைத்தூவுகிறது என்று ஆலோசனை கூறுபவர்களாக மாறிவிட்டனர்” என்றார்.

http://thuliyam.com/?p=79334

29 minutes ago, Athavan CH said:

“சிறிலங்கா நாடாளுமன்ற வரலாற்றில் பின்கதவால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட முதலாவது சட்டமாக உள்ளூராட்சிகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமாக அடையாளமிடப்படுகின்றது. இது ஜனநாயக விரோத மற்றும் முறையற்ற சட்டமாகும். குறிப்பாக துரதிஷ்டவசமாக தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைக்கு இடையிலான 60, 40 வீத வித்தியாசம் இறுதி தருணத்தில் சபையில் வாக்கெடுப்பு நடத்தவிருந்த 15 நிமிட சொற்ப நேரத்திலேயே 50க்கு 50ஆக மாற்றப்பட்டுள்ளது. இந்த விகிதத்திற்கு கொண்டுவந்தமைக்கான காரணம், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிஷாத் பதியூதீன் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தேவைகளை நிறைவேற்றவே ஆகும். அவர்களது வாக்குகளற்ற நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமற்போன சூழ்நிலை உருவாகியிருந்தது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு அம்மூவரது கோரிக்கையான 50க்கு 50 என்ற திருத்தம் சட்டமூலத்திற்கு உள்வாங்கப்பட்டது. இந்த திருத்தத்துடன் விகிதாசார தொகுதிவாரியுடன் சேர்த்த பின்னர் நடக்கும் ஒருவிடயம் இருக்கிறது. அதுதான் நாட்டில் பரந்துவாழும் சிறுபான்மையின மக்களைப் பிரதிநிதித்துவப்படும் அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே கிடைக்காத நன்மையொன்று கிடைக்கும்.

http://thuliyam.com/?p=79334

எச்சுக்குச்சி மீ.... தொகுதி வாரி 60 வீதத்தில் இருந்து 50 வீதத்துக்கு குறைத்தது / அல்லது விகிதாசார முறை 40 இல் இருந்து 50 இற்கு அதிகரித்தது சிறுபான்மை இனங்களுக்கு நன்மை தானே? அது எப்படி அற்ப சலுகையாகும்? ஆராவது விளக்க முடியுமா?

  • தொடங்கியவர்
4 hours ago, நிழலி said:

எச்சுக்குச்சி மீ.... தொகுதி வாரி 60 வீதத்தில் இருந்து 50 வீதத்துக்கு குறைத்தது / அல்லது விகிதாசார முறை 40 இல் இருந்து 50 இற்கு அதிகரித்தது சிறுபான்மை இனங்களுக்கு நன்மை தானே? அது எப்படி அற்ப சலுகையாகும்? ஆராவது விளக்க முடியுமா?

தமிழரசுக் கட்சி கண்ணைமூடிக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு – பங்காளிக் கட்சிகள் குற்றச்சாட்டு!

தமிழரசுக் கட்சி கண்ணைமூடிக்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

மாகாணசபையின் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், புளொட் போன்ற அமைப்புக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாது வெளிநடப்புச்செய்தனர். தமிழரசுக் கட்சி மாத்திரம் ஆதரவாக வாக்களித்தது.

இச்சட்டத்தின்பிரகாரம், மாகாணசபைக்கான தேர்தல்களை 50வீதம் தொகுதி வாரியாகவும், 50 வீதம் விகிதாசார முறையின்மூலம் தேர்தல் நடத்தப்படும்.

ஏற்கனவே, 60வீதம் தொகுதி வாரியாகவும் 40வீதம் விகிதாசாரமுறையின்மூலம் தேர்தல் நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முஸ்லிம் காங்கிரசும், மலையக் கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டன. இதனையடுத்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே தொகுதிவாரியாக 50வீதமும், விகிதாசார ரீதியில் 50 வீதமும் எனக் கொண்டுவரப்பட்டது.

ஆனால் தமிழரசுக் கட்சி மாத்திரம் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை. மாற்றம் செய்வதற்கான பேச்சுக்களில் தமிழரசுக் கட்சி கலந்துகொண்டது. ஆனாலும் அரசாங்கம் முன்னர் பரிந்துரைத்த 60க்கு 40 என்ற முறையை ஏற்றுக்கொண்டு ஆதரவு வழங்கியது.

முஸ்லிம் கட்சிகளும், மலையக கட்சிகளும் பேச்சுவார்த்தை நடாத்தி 50:50 என்ற முறையைக் கொண்டுவந்திருக்காவிட்டால் வட – கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் பெரும் சிக்கலை எதிர்நோக்கவேண்டி வந்திருக்கும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி கண்ணை மூடிக்கொண்டு நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். இந்த சட்டமூலத்திற்கு 154 வாக்குகள் ஆதரவாகவும் 43 வாக்குகள் எதிராகவும் பெறப்பட்டன. கூட்டு எதிர்கட்சியும் ஜே.வி.பியும் எதிர்த்து வாக்களித்துள்ளன.

http://thuliyam.com/?p=79313

18 minutes ago, Athavan CH said:

ஆதவன், என் கேள்வி தமிழரசுக் கட்சி ஆதரித்ததா இல்லையா என்பது தொடர்பானது அல்ல. கபே அமைப்பின் தலைவர் சொல்கின்ற மாதிரி மனோ, ரிஷாட், ரவூப் போன்றவர்கள் பொறுப்பாக இருக்கும் சிறுபான்மை கட்சிகள் அற்ப சலுகைகளுக்காக இணங்கி விட்டனர் எனச் சொல்வது தொடர்பாகவே என் கேள்வி.

இவ் மூவரும் செய்த மாற்றம் சிறுபான்மையினத்தவருக்கான அனுகூலங்களை கொடுக்கும் மாற்றம் என்பதால் இது அற்ப சலுகைகளுக்கானது அல்ல.

த.தே.கூவில் இருக்கும் தமிழரசு தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட இம்  மாற்றத்தினை முன் வைக்காமல் வெறுமனே வெளியேறி இருக்கையில் மேலே சொன்ன மூவரும் சரியாக நடந்து மாற்றத்தை கொண்டு வந்து இருக்கின்றார்கள். தொகுதிவாரி தேர்தலில் திருமலை / மட்டக்கிளப்பு என்பனவற்றின் தமிழ் பிரதிநிதித்துவம் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிந்தும் சம்பந்தன் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு கொடுக்க மிச்ச ஆட்கள் வழக்கம் போல வெறுமனே எதிர்ப்பை மட்டும் பதிவு செய்து விட்டு வெளியேறீ இருக்கினம்

  • தொடங்கியவர்

இதில் எனக்கு உண்மையிலேயே தெளிவில்லை  நிழலி , ஒன்றில் ஆதரித்தவர்கள் அதிலுள்ள சாதகங்களை மக்களுக்கு விளக்கியிருக்க வேண்டும், அல்லது எதிர்த்தவர்கள் பாதகங்களை சொல்லியிருக்க வேண்டும் அப்படி யொன்றும் நிகழ்ந்ததாகத்  தெரியவில்லை, தெளிவாகத் தெரிந்தது ஒன்றே ஒன்றே ஒன்று தான் , எம்மிடையே பிளவுகளும் , விரிவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன......

Edited by Athavan CH

புலிகளின் போராட்ட காலத்திற்கு முன்பும் புலிகளின் முடிவுக்கு பின்பும் தமிழ் அரசியல் கட்சிகள் போரினவாத அரசியலை அனுசரித்தே பழக்கப்பட்டது. அடிப்படையில் இக் கட்சிகளுக்கு கொள்கை என்பது கிடையாது. தமிழர்களுக்கு தனி நாடுவேண்டுமா இல்லை மாநில சுயாட்சி வேண்டுமா இல்லை எவ்வளவு அதிகாரம் வேண்டும் என்ற எந்த வரையறையும் அற்ற, எந்த இலக்கும் அற்ற ஒரு போக்கே இவர்களது அரசியல். தமிழர்களுக்காக பிச்சைப் பாத்திரம் ஏந்தி அதில் உங்களால் முடிந்தளவு தீர்வை போடுங்கள் என்று கேட்கும் நிலை. தட்டில் ஏதாவது போடச்சொல்லி சிங்களத்திற்கு சொல்லும் படி இந்தியாவை கேட்பது. சிங்களம் அவ்வப்போது தட்டில் போடுவதற்குப் பதிலாக பக்கெட்டில் கொஞசம் போட்டுவிடும். அமிர் தொடங்கி சங்கரி சம்மந்தன் வரை இதே கதைதான். புலிகளின் போராட்ட காலத்தில் இந்தக் கட்சிகளில் பலர் கொள்கை சார்ந்து செயற்பட்டு சிங்களத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இனம் இனத்திற்கான தீர்வு போராட்டம் விடுதலை என்ற எந்த அடிப்படை நம்பிக்கையும் அற்றவர்கள். இவர்கள் அரசியல் எப்போதும் இந்த நம்பிக்கையற்ற தன்மையை மக்களுக்கு ஏற்படுத்துகின்றது. பொன்சேகவுடனும் கூட்டணி போடுவார்கள் மகிந்த மைத்திரி ரணில் சந்திரிக்கா என எந்த விதிவிலக்கும் இவர்களுக்கு இல்லை.  எல்லாவற்றுக்குமான முக்கிய காரணம் புலிகளுக்கு பின்னர் தமிழர்களுக்கென்று அரசியல் தளம் என்று எதுவும் இல்லை. தளமற்று செய்யப்படும் அரசியல் எந்த வலுவுமற்ற கோமாளித்தனமகவே அமைகின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.