Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் பட்டுப்பாதை முக்கியத்துவம் யாது?

Featured Replies

சீனாவின் பட்டுப்பாதை முக்கியத்துவம் யாது?

 

ஐயம்பிள்ளை  தர்மகுலசிங்கம் 
(இளைப்பாறிய  பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

சீனாவின் பட்டுப்பாதை எனும் திட்டமானது, சீன ஜனா­தி­பதி லீ ஜின்பிங்கின் எண்ணத்தில் உருவானதாகும். மக்கள் சீனாவை தரை, கடல் இணைப்­புக்கள் மூலம் ரதஷ்யா, மங்­கோ­லியா, துருக்கி, சிங்­கப்பூர், பாகிஸ் தான், பங்­க­ளாதேஷ், இந்­தியா, மியன்மார், ஆபி­ரிக்கா என ஆசியா, ஐரோப்பா, ஆபி­ரிக்கக் கண்டம் என்­ற­ வ­கையில் 65 நாடு­ களை இணைக்­கின்­றது. இத்­திட்டம் இரு பகு­தி­களை உள்­ள­டக்­கி­யது. தரைப்­ப­குதி Silk road economic belt என்றும் சமுத்­திரப் பகுதி Maritime silk road எனவும் அழைக்­கப்ப டு­கின்­றது. 2017 வைகாசி, 14 15 ஆம் திக­தி­களில் பீஜிங்கில் உத்­தி­யோகபூர்­வ­மாக இத் திட்டம் ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. இத்­திட்டம் பற்றி முதன் முத­லாக ஐப்­பசி 2013 இல் சீன ஜனா­தி­பதி உல­குக்கு அறி­வித்தார். இத்­திட்டம் பொரு­ளா­தார விருத்­தியை அடிப்­படை நோக்­க­மாகக் கொண்­ட­தாகும். 

ஆரம்ப உரையில் சீன ஜனா­ தி­பதி பூகோள பொரு­ளா­தார வளர்ச்­சியில் காப்புக் கொள்­கைகள் வேண்டாம், பூகோ­ள­ம­ய­மாக்­கலின் நன்­மை­களை பயன்­ப­டுத்தி பொரு­ ளா­தார விருத்தி என்ற இலக்கை நோக்கி பய­ணிக்­கலாம். உலகப் பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து கற்றுக் கொள்ள வேண்­டிய பாடமும் இதுதான். ஆசிய பசுபிக் பொரு­ளா­தார கூட்­டு­றவு, ஆசியா ஆபி­ரிக்கா ஒன்­றியம், ஐரோப்­பிய ஒன்­றியம் போன்ற அமைப்­புக்­களின் அபி­வி­ருத்திக் கொள்­கை­களை ஒருங்­கி­ணைத்து செயற்­ப­டு­வது அவ­சியம் என்றார். அய­லாரை வறி­ய­வ­ராக்கும் கொள்­கை­களை நிரா­க­ரிக்க வேண்டும். இந்த மா­நாட்டில் கலந்து கொண்ட இலங்கை பிர­தமர் இப்­பி­ராந்­தி­யங்­களில் இரா­ணுவ தொடர்­பு­க­ளற்ற சமா­தான உற­வு­களை மேம்­ப­டுத்த இத்­திட்டம் அவ­சியம். பல்­பக்க வர்த்­தக உற­வுகள் மூலம் அபி­வி­ருத்தி சாத்­தியம். இலங்கை, இந்து சமுத்­தி­ரத்தில் கேந்­திர மைய­மாக அமைந்­துள்­ளதால் இலங்கை இத்­திட்­டத்தின் மூலம் பய­ன­டைய வாய்ப்­புண்டு. Financial city இத்­திட்­டத்தின் ஒரு பகு­தி­. இத்­திட்­டத்தில் உள்­ள­டங்­கிய நாடுகள் கூட்­டாக செயற்­பட்டால் இலக்­கு­களை அடை­யலாம் என்றார். 

OBOR என்­கின்ற சமுத்­தி­ர­பாதை பெருந்­திட்டம் ஆறு பெரு­வா­சல்­க­ளையும் (corridors) ஒரு கடல் பட்டுப் பாதை­யையும் உள்­ள­டக்­ கி­ய­தாகும். ஆறு பெரு வாசல்­களும் மேற்கு சீனா­வி­லி­ருந்து மேற்கு ரஷ்யாவுக்கும் வட­சீ­னா­வி­லி­ருந்து கிழக்கு ரஷ்யாவுக்கும் மேற்கு சீனா­வி­லி­ருந்து துருக்­கிக்கும் தென் சீனா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கும் தென் சீனா­வி­லி­ருந்து மியன்­மா­ருக்கும், தென்­மேற்கு சீனா­வி­லி­ருந்து பாகிஸ்­தா­னுக்கும் செல்­கின்­றன. இந்து ஆறு பெரு­வா­சல்­க­ளுடன் கடல் பட்­டுப் பா­தையும் வேறாக செல்­கி­றது. இக்­கடல் பட்­டுப்­பாதை சிங்­கப்பூர் ஊடாக மெதித்­தி­ரே­னி யன் பகு­திக்கு செல்­கி­றது. 

இம்­ம­ா­நாட்டில் 65 நாடு­களின் பிர­தி­நி­தி கள் (29 அரச தலை­வர்கள் உட்­பட) பங்­கு­பற்­றி னர். தேர்தல் சம­யத்தில் சீனா­வுக்கு எதி­ரான கருத்­துக்­களை உரத்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உயர்­கு­ழுவை இம்­ம­ா­நாட்­டிற்கு அனுப்­பினார். ஆசிய பிராந்­தி­யத்தில் இரண்டு பிராந்­திய பல­மான நாடுகள் இந்­தியா, ஜப்பான் பங்­கு­பற்­ற­வில்லை. இத்­திட்­டத் 

தின் அம்­ச­மாக பாகிஸ்­தா­னுக்கு ஊட­றுத்து செல்லும் பாதை (China - Pakistan economic corridor) பாகிஸ்­தானின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள காஷ்மீர் பகு­திக்­குள்­ளாகச் செல்­கின்­றது. இப்­ப­குதி தனக்கு சொந்­த­மா­ன­தென இந்­தியா உரிமை கோரு­கி­றது. இந்த அடிப்­ப­டையில் இந்­தியா தனது எதிர்ப்பை காட்­டு­மு­க­மாக பங்­கு­பற்­ற­வில்லை. ஐ.நா.சபை, IMF உல­க­வங்கி தலை­வர்­களும் பங்­கு­பற்­றினர். பிரிட்டன், EU நாடுகள். அவுஸ்­தி­ரே­லியா உட்­பட 65 நாடுகள் பங்­கு­பற்­றின.

OBOR இன் பொரு­ளா­தார சிறப்­பி­யல்­புகள்

சீனாவைப் பொறுத்­த­ளவில் இத்­திட்டம் உட்­கட்­ட­மைப்­பு­ வ­ச­தி­களில் காணப்­படும் பெரும் இடைவெளிகளை நிவர்த்தி செய்­வ­தாகும். மொத்­த­மாக 50 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை அமைப்­ப­தற்கும் மேம்­ப­டுத்­து­வ­தற்கும் சீனா

வால் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் துரித பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியே இலக்­காகும். இப்­பொ­ரு­ளா­தார துரித அபி­வி­ருத்தி முற்­கூ­றப்­பட்ட ஆறு பெரு­வா­சல்­க­ளையும் கடல் பட்­டுப்­பாதை நாடு­க­ளிலும் துரித பொரு­ளா­தார விருத்தி ஏற்­பட வழி­கோலும். ஏறத்­தாழ 900 பில்­லியன் டொலர் அடுத்த 10 ஆண்­டு­களில் சீனாவால் முத­லீடு செய்­யப்­படும். சம்பந்­தப்­பட்ட நாடு­க­ளுக்கு கடன் அடிப்­ப­டையில் நிதி வழங்­கப்­படும். இதன் கார­ண­மா­கவே ஆசிய ஐரோப்­பிய தலை­வர்கள் இத்­திட்­டத்தை வர­வேற்­றுள்­ளனர். பட்­டுப்­பாதை புதிய சர்­வ­தேச நிதி முறை­மை­யென்றும் உட்­கட்­ட­மைப்பு வச­தி­களால் ஊக்­கப்­ப­டுத்­தப்­படும் பொரு­ளா­தார விருத்­திக்கும், உண்­மை­யான சொத்­துக்­களின் வளர்ச்­சிக்கும் பெரும் அக்­கறை காண்­பிக்­கப்­ப­டு­கி­றது என பாராட்­டி­யுள்­ளனர். Global Times என்னும் சர்­வ­தேச புகழ்­வாய்ந்த பத்­தி­ரிகை OBOR விட­யங்­க­ளுக்கு தனி­யா­ன­தொரு பிரிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

சீனா பிறெற்­றன்வுட் (BRETTON WOOD) நிதி நிறு­வ­னங்­க­ளான உலக வங்கி, சர்­வ­தேச நாணய நிதியம் ஆகி­ய­வற்­றுடன் ஒத்­து­ழை த்து வந்­த­தா­யினும் இவ்­விரு பூலோக நிதி நிறு­வ­னங்­களும் பூகோள இலக்­கு­களை எய்­து­வதில் தாம­தித்­துள்­ளன. வறுமை ஒழிப்பு, நிலைத்­தி­ருக்கும் அபி­வி­ருத்தி, எல்லாம் உள்­ள­ட ங்­கிய அபி­வி­ருத்தி இலக்­குகள் இன்னும் வெறும் இலக்­கு­க­ளா­கவே உள்­ளன. உலக வங்கி, சர்­வ­தேச நாணய நிதி நிறு­வ­னங்­களின் சீர்­தி­ருத்­தங்கள் மந்­த­க­தியில் நடை­போ­டு­கின்­றன. 

65 நாடு­களின் அபி­வி­ருத்­திக்கும் இத்­திட்டம் உதவும். அமெரிக்க பொரு­ளா­தார, ஐரோப்­பிய பொரு­ளா­தா­ரங்கள் அண்மைக் காலங்­களில் எதிர்­கொண்ட பொரு­ளா­தார நெருக்­க­டி­களின் பின்னணியில் OBOR முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. இத்­திட்டம் சீன எல்­லை­க­ளுக்­கப்பால் செல்­கி­றது. இத்­திட்டம் வெறு­மனே ஒரு வெளிநாட்டுக் கொள்

­கையில் மாற்றம் ஏற்­ப­டுத்தும் எனக் கூற முடி­யாது. அதற்கு அப்பால் பார்க்க வேண்டும். இத்­திட்டம் ஒரு பொரு­ளா­தார அம்­சத்தை உள்­ள­டக்­கிய கொள்கை மூலோ­பாய நகர்வு எனக் குறிப்­பிட்டு சீனா 1949 சோச­லிச புரட்­சிக்கு பின்னர் நிகழும் பிர­தான நிகழ்­வாக OBOR கரு­தப்­ப­டு­கி­றது. சீனாவின் உள்­நாட்டு பொரு­ளா­தார செழிப்­புக்கும் வேலை­வாய்ப்பு உரு­வாக்­கத்­துக்கும் OBOR பெரும் பங்­காற்றும். மேம்­பா­ட­டையும் இரு­த­ரப்பு, பல்­த­ரப்பு வர்த்­த­கத்­தூ­டாக இது நிகழும். WB, IMF, ADB போன்ற சர்­வ­தேச வங்­கி­களால் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட பொரு­ளா­தார நிதி உத­வி­க­ளி­லி­ருந்து OBOR திட்ட உத­விகள் வேறு­பட்­டவை. நிபந்­த­னைகள் குறைந்­தவை. தலை­யீ­டுகள் குறைந்­தவை. ஆபி­ரிக்க நாடு­க­ளான அங்­கோலா, எதி­யோப்­பியா, சூடான் கொங்கோ ஆகிய நாடுகள் சீனாவின் கடன்­க ளில் தங்­கி­யுள்­ளன. சுதந்­திர வர்த்­தகம் ழுடீ­OBOR அடிப்­ப­டை­யா­னது. 

OBOR இன் அர­சியல் முக்­கி­யத்­துவம்

OBOR பெருஞ் செல்­வத்தை முத­லீடு செய்­கி­றது. 65 நாடுகள் சம்­பந்­தப்­ப­டு­கின்­றன. OBOR மூன்று கண்­டங்­களை ஊட­றுத்து செல்­கி­றது. அபி­வி­ருத்­தி­ய­டைந்த நாடுகள் உட்­பட அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் நாடு

கள் பெரும்­பான்­மை­யாகும். USA, USSR பனிப்போர் காலத்தில் அர­சியல், பொரு­ளா­தார, இரா­ணுவ வல்­ல­மை­க­ளுடன் புவிசார் அர­சியல் கார­ணங்­களால் ஏனைய நாடு­களில் செல்­வாக்கு செலுத்­தின. இன்று உலக பலம் பொருந்­திய பிராந்­திய நாடுகள் பிராந்­தி­யங்­க­ளிலும் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன. இப்­பின்னணியில் சீனாவின் OBOR ஆராய வேண்டும். சீனாவின் பெரு­நிதி இந்­நா­டு­களின் அபி­வி­ருத்­திக்கு, உட்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுக்கு, தேசிய வரவு செலவு திட்­டங்­களுக்கு பெரும் உத­வி­யாக அமையப் போகின்­றன. OBOR பொரு­ளா­தாரம் ஊடாக சீனா­வுக்கு அர­சியல் மேலா­திக்­கத்தை வழங்கப் போகின்­றது. அமெரிக்க அதி­பரின் தேர்தல் பிர­சா­ரமும் பின்னர் சீனாவை பாராட்­டு­வதும் நல்ல உதா­ர­ண­மாகும். வர­லாறு எமக்கு கற்­றுத்­தந்த பாடம். ஒரு நாடு பல­ம­டையும் போது அதன் செல்­வாக்கு விஸ்­த­ரிப்பு எல்­லை­களை தாண்­டு­கி­றது. உள்­வி­வ­கா­ரத்தில் தலை­யி­டாமை, வெளிப்­ப­டைத்­தன்மை, அதி­க­ரித்த வர்த்­தகம் ஆகிய சீனாவின் அறி­விப்­புக்கள் கவர்ச்­சி­க­ர­மா­க­வுள்­ளன. OBOR திட்டம் பல­வந்த செயற்­பா­டு­களோ அல்­லது இரா­ணுவ நலன்­களோ அடங்­கிய திட்­ட­மல்ல என சீனா வெளிப்­ப­டை­யாக கூறு­கின்­றது.

இப் பெருந்திட்டம் அமெரிக்காவின் முழு மு­யற்­சியால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட Trans pacific Partnership, Transatlantic Trade and Investment Partnership திட்­டங்­களை விட சாராம்­சத்­திலும் உள்­ள­டக்­கத்­திலும் வேறு­பட்­ட­தாகும். பசுபிக் சுற்று வட்ட கூட்டுறவு அத்­தி­லாந்திக் சுற்று வட்ட வர்த்­தக முத­லீட்டு திட்டம் இரண்­டுமே வர்த்­தக ஒப் பந்­தங்­க­ளாகும். உலக வர­லாற்றில் மிகப் பெரிய வர்த்­தக ஒப்­பந்­த­மாகும். இத்­திட்­டத்தில் அமெரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா. கனடா, சிலி, ஜப்பான், மலே­சியா, மெக்­சிகோ, நியூ­சி­லாந்து, பேரு, சிங்­கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகள் அங்­கத்­துவம் வகிக்­கின்­றன. இந்த ஒப்­பந்தம் 4/2/2016 இல் கைச்­சாத்­தி­டப்­ 

பட்­டது. இன்னும் அமு­லாக்­கத்­திற்கு வர­வில்லை. தற்­போது அமெரிக்கா அமைப்­பி­லி­ருந்து வில­கி­விட்­ட­தனால் எதிர்­காலம் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. ஆனால் இல்லாமலே திட்­டத்தை முன்­னெ­டுக்க வேண்டும் என ஏனைய நாடுகள் தீவி­ர­மாக முயற்­சிக்­கின்­றன. இரண்­டா­வ­தான திட்டம் அமெரிக்கா ஐரோப்­பிய ஒன்றியத்துக்கு­மி­டையில் செய்­ய­வுள்ள ஒப்­பந்­த­மாகும். தற்­போது பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. ஒப்­பந்தம் இன்னும் கைச்­சாத்­தா­க­வில்லை. இவ்­வி­ரண்டு ஒப்­பந்­தங்­க­ளும், ­திட்­டங்­களும் கட்­டுப்­பா­டற்ற சுதந்­திர வர்த்­த­கத்தை ஊக்­கு­விக்­கின்­றன.

OBOR விரி­வான பல இலக்­கு­களை கொண்­டது. OBOR திட்­டமும் AIIB எனும் ஆசிய உட்­கட்­ட­மைப்பு முத­லீட்டு வங்கியும் இணைந்து செயல்­ப­டு­வன. AIIB இன் முத­லீடு 1400 பில்­லியன் வரையில் காணப்­ப­டு­கின்­றது. சீனாவில் இன்னும் 18 கோடி மக்கள் வரையில் வறு­மை­யி­லி­ருந்து மீட்­கப்­பட வேண்­டி­யுள்­ளது. பின்­தங்­கிய பிர­தே­சங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­பட வேண்­டி­யுள்­ளது. சீனாவில் ஊழல் பெரும் பிரச்­சி­னை­யா­கி­விட்­டது. வரு­மான பகிர்வில் ஏற்­றத்­தாழ்­வுகள் காணப்­ப­டு­கின்­றன. முதியோர் சனத்­தொகை, சேத­மாகும் சுற்­றாடல் ஆகி­யவை சீனா முகம் கொடுக்கும் பிரச்­சி­னைகள் என கூறலாம். OBOR உள்­நாட்டு உற்­பத்தி, அதி­க­ரித்த சர்­வ­தேச வர்த்­தகம் சீனா­வுக்கும் ஏனைய நாடு­க­ளுக்கும் பரஸ்­பர நன்­மைகள் எடுத்­து­வரும் என பொரு­ளா­தார அறி­ஞர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். சீன பொரு­ளா­தாரம் முன்­னைய ஆண்­டு­களில் ஏற்­று­மதி அடிப்­படை வளர்ச்­சிக்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து தற்­போது நுகர்­வுக்கும் வெளிநா­டு­களில் முத­லீடு செய்­வ­தற்கும் முக்­கி­யத்­து­வ­ம­ளிக்­கி­றது.

2008 க்கு பின்­ன­ரான உலக பொரு­ளா­தார நெருக்­கடி மேற்கு நாடு­களின் பொரு­ளா­தார வல்­ல­மை­களை பல­வீ­னப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஆகையால் அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் நாடு­ களில் முத­லீடு செய்யும் ஆற்­ற­லையும் குறைத்­துள்­ளது. அமெ­ரிக்­காவில் சீன முத­லீ­டு­க­ளினால் இயங்கும் பல கம்­ப­னி­களில் அமெ­ரிக்­காவில் 80000க்கு மேற்­பட்­ட­வர்கள் நேரடி தொழிலில் ஈடு­பட்­டுள்­ளனர். தற்­போது 46 பில்­லியன் டொலர் முத­லீ­டுகள் அமெரிக்காவில் உள்­ளன. 2020 இல் 100 – 200 மில்­லியன் டொலர் வரை அதி­க­ரித்து 2 இலட்­சத்­தி­லி­ருந்து 4 இலட்சம் அமெ­ரிக்­கர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு கிடைக்­கு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அமெ­ரிக்கா சீனா­வின் பொரு­ளா­தார உறவுகளை தட்டிக்கழிக்க முடியாது 

உற­வு­களை தட்­டிக்­க­ழிக்க முடி­யாது

OBOR/ AIIB முகம் கொடுக்கும் சவால்களைப் பார்ப்போம். அமெரிக்காவும் ஜப்பானும் AIIB இல் முதலீடு செய்வது பற்றி உறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான் முதலீடு இல்லா விடினும் AIIB இயங்குவதில் பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் இரண்டு நாடுகளும் முதலீடு செய்தால் AIIB இன் மதிப்பு, அந்தஸ்து உயர வாய்ப்பு உண்டு. 

OBOR இன் ரயில பாதை 81000 கிலோ மீற்றருக்கு அதிகமானது. இந்த புகை யிரத பாதை தற்போதைய உலக புகையிரத மொத்தப் பாதையை விடவும் அதிகமா னது. இப்பாதையை பாதுகாப்பது பிரச்சினை யாக அமையலாம். பயங்கரவாத அச்சுறுத்த லினால் பாகிஸ்தானில் பாதையை பாதுகாக்க முடியுமா என்பது பற்றி ஐயப்பாடாக உள்ளது. 

ஆசிய அபிவிருத்தியடைந்துவரும் நாடு கள் OBOR கடன்களை ஒழுங்காக மீளசெலுத்துமா என்பதும் நிச்சயமற்றதொன் றாகவுள்ளது. தற்போது சீனாவின் மெதுவான பொருளாதார வளர்ச்சி குறைந்துவரும் அந் நிய செலாவணி கையிருப்புOBOR, AIIB திட்ட ங்களுக்கு தொடர்ந்து நிதியீட்டம் செய்ய முடியுமா என்ற கேள்வியும் முன்வைக் கப்படுகிறது. சில ஊடகங்கள் இலங்கையிலும் வெளி நாடுகளிலும் சீன ஆதிக்கம், விஸ்தரிப்பு ஆகியவற்றின் மூலம் சீனா அச்சுறுத்தல் சக்தி யாக உருவாகும் ராஜதந்திரமாக செயல்படுவ தாக கூறுகின்றன. அத்துடன் பிரித்தானிய சாம்ராச்சியமும் ஐரோப்பிய வல்லரசுகளும் அமெரிக்காவும் உலகின் பல நாடுகளையும் காலனித்துவம் செய்த ஞாபகங்களே சீனாவின் பட்டுப்பாதை பற்றிய சந்தேகத்திற்கு காரண மாகும் என்றுணர்ந்து கூறலாம்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-23#page-9

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.