Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலை சிறீலங்காவுக்கான ஈரூடக் படையணியை உருவாக்கும் அமெரிக்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயக தலைநகரான திருக்கோணமலையை ஆக்கிரமித்து நிற்கும் சொறீலங்கா கடற்படை மற்றும் அமெரிக்க ஈரூடகப் படை பயிற்சியாளர்கள் இணைந்து சிறீலங்காவுக்கான ஈரூடகப் படைப்பிரிவை உருவாக்கி வருகின்றனர்.

ஈழப்போர்களின் காலத்தில் கூட சிறீலங்காவிடம் ஈரூடகப் படையணி இருந்திராத நிலையில்.. போர்க்குற்ற.. மற்றும் இனப்படுகொலை குற்றச்சாட்டுக்களை சுமக்கும் சிறீலங்காவுக்கு அமெரிக்க ஏகாதபத்தியம்.. ஈரூடக் படையணியை உருவாக்க உதவி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சம்பூர் தமிழர் நிலப்பரப்பு சிங்கள ஈரூடகப் படைகளின் தேவைக்காக சிறீலங்கா கடற்படையால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. 

விடுதலைப்புலிகள் மட்டும் ஈரூடகப் படையணியை வைத்திருந்ததோடு.. 2006 க்குப் பின்னரான.. யாழ் குடா மீட்புக்கான ஒரு சண்டையில்.. மண்டைதீவு வழியாக.. தீவகத்தின் பெரும் பகுதியை புலிகளின் ஈரூடகப் படைப்பிரிவினர் கைப்பற்றி இருந்த நிலையில்.. திடீரெனப் பின்வாங்கி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

US Marines in Trincomalee with SL military

US Marines in Trincomalee with SL military

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=38814

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லாதிக்க சக்திகளுக்கு ஈழத்தமிழர் மீதான அடக்குமுறைகள் தெரிந்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் வன்முறையாளர்களுடன் கூட்டு வைக்கின்றார்கள் என்றால் யார் காரணம்? 

ஈழத்தமிழனுக்கென்று ஒரு நிறுதிட்டமான அரசியல் கட்சி....சர்வதேசத்துடன் பேரம்பேசக்கூடிய ஒரு குழு 2009க்கு பின்னர் இல்லையென்பதே அர்த்தம்.

ஒரு தலைவர் இப்ப கதைக்க நேரமில்லையென்பார்.
அடுத்த தலைவர் புதிய ஆக்கள் கேள்வி கேக்கேலாது எண்டது மட்டுமில்லாமல் புரட்சி வெடிக்கும் எண்டு ஈக்குவாணம் விடுவார்..
மற்றவர் அங்கினேக்கை தன்ரை காணிக்கை பனங்கொட்டையை தாட்டுப்போடு வந்து......ஆரும் கேள்விகேட்டால் எச்சரிக்கிறன் எண்டு வெருட்டுவார். இப்பிடி நிலமை இருக்கேக்கை இந்தியனும் அமெரிக்கனும் சீனனும் முத்துக்கு ஆசைப்படுறதிலை என்ன தப்பு இருக்கு...:116_eye:

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னுமொரு நாடு எமக்கு ஆதரவு அளிக்க வேண்டுமானால் எம்மிடம் இருந்து அவர்களுக்கு ஏதாவது ஒரு லாபம் இருக்க வேண்டும் தவிர அறம் நியாம் நீதி தர்மம் என்ற எதன் அடிப்படையிலும் எமக்கான ஆதரவு கிடைக்காது. ஆனால் எம்மால் ஒரு நாட்டுக்கு ஏதோ ஒரு வகையில் லாபம் உண்டு என்றால் இந்த அறம் நீதி நியாயத்தை சிங்களத்திற்கு எதிராக பயன்படுத்துவார்கள். எமது ஒற்றுமையும் அதனூடாக வலுப்பெறும் பொருளாதரா பலமும் தந்திரமும் தான் என்றோ ஒருநாள் எமக்கான விடிவோடு சம்மந்தப்படும். இது தனியே ஈழத்தமிழர் என்றில்லாமல் தமிழகம் மற்றும் அனைத்துலக தமிழர்கள் என்ற பொது சக்தியோடு தொடர்புபட்டது எனினும் இதுகுறித்து நாம் என்னும் சிந்திக்கவும் ஆரம்பிக்கவில்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.