Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மையிலேயே வலுவாக இருக்கிறதா பொன்சேகவின் படை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''உண்மையிலேயே வலுவாக இருக்கிறதா பொன்சேகவின் படை?

-பு. சத்தியமூர்த்தி-

சிறிலங்கா இராணுவத்தின் போர்முனைச் செயற்பாடுகள் மிக அதிகமாக காணப்படுகின்றன அங்கிங்கெனாதபடி ஒவ்வொரு நாளும் அது நகருவதாகவும் நிலையெடுப்பதாகவும் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவதாகவும் பாய்ந்து பரந்து புலிகளை பஸ்மீகரம் செய்துவிடப் போவதாகவும் அதனது தரப்பு ஊடகங்கள் படாடோபமாகப் பிரசாரம் செய்து வருகின்றன.

இந்தக் கருத்துருவாக்கம் சிறிலங்காவின் அதிகாரபீடத்தை முற்றாகக் கபளீகரித்துள்ளது. அதன் காரணமாக ஆழ்ந்த பொருள் பொதிந்த பிரதாபங்களை அது தினந்தினம் வெளியிட்டு வருகிறது. இந்த எண்ண அலைகள் கொழும்பு மையச் சிங்கள, ஆங்கில ஊடகங்களையும் வெகுவாகப் பாதித்துள்ள காரணத்தால் அவை வெளியிடும் செய்திகளும் பத்திகளும் கட்டுரைகளும் இதோ வன்னியையும் சிறிலங்காப் படைகள் பிடித்து விடப்போகின்றன என்ற தொனியிலேயே அமைந்துள்ளன. சம்பூரையும் வாகரையையும் கஞ்சிக்குடிச்சாறையும் பிடித்த சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்ககைக்களை கிழக்கு “துப்பரவு” செய்யப்பட்டதாக அவை வர்ணிக்கின்றன.

மட்டக்களப்பின் படுவான்கரை என்றொரு பெருநிலப்பரப்பில் புலிகள் உறுதியாக நிலை கொண்டுள்ளனர் என்பதை இதற்குள் மறைத்துவிட அவை முயல்கின்றன அல்லது அங்கிருந்தும் பலிகள் பின்வாங்கிவிட்டனர் என அவை எண்ணிக் கொண்டுள்ளனவோ தெரியவில்லை.

ஆனால் இதே ஊடகங்களுள் ஒன்றான திவயின என்ற சிங்களத் தினசரிக்கு லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா தகவல் தெரிவிக்கையில் தொப்பிக்கல மீதான தாக்குதல் இன்றோ நாளையோ ஆரம்பிக்கப்படும், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளார்.

சமநேரத்தில் வவுனியா, ஓமந்தை மற்றும் முகமாலைப் பகுதிகளில் பெரும் படைவலுக் குவிப்பை லெப்.ஜெனரல் பொன்சேகா மேற்கொள்கிறார். கிளாலி முகமாலை நாகர்கோவில் படைமுன்னரங்கநிலையிலும் துரப்புக்களும் தளபாடங்களும் குவிக்கப்படுகின்றன.

இந்தக் குவிப்புக்கள் தொடர்பான குழப்பங்களையும் பதற்றங்களையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளையும் இராணுவப் புலனாய்வு பிரிவு யாழ்பாணத்திலும் வவுனியாவிலும் மேற்கொள்கிறது. தேவாலயங்களிலும் ஆசிரியகலாசாலையிலும் அது ஆயுதங்களைக் கண்டுபிடிக்கிறது. சாலைகளிலும் வணிக நிலையங்களிலும் குண்டுப்புரளிகளை மேற்கொள்கிறது. படைநகர்வுக்கான நேரமான நான்குமணி நேரத்தைப் பிரகடனப்படுத்திப் பொதுப் போக்குவரத்தை தடை செய்கிறது. இதில் உள்ள வினோதம் என்னவென்றால் எந்தப் படைநகர்தலையும் எந்த இராணுவமும் பகிரங்கமாகச் செய்வது வழமையன்று. சிறிலங்கா இராணுவமும் அவ்வாறுதான் செய்து வருகிறது அப்படியாயின் என் இந்தப் பிரகடனம் ? நிலையான பாதையில் நிலையான நேர ஒழுங்கில் இராணுவத் தொடரணி செல்லுமாயின் அது தாக்குதலுக்கு இலக்காகாதா? எங்கோ உதைக்கிறதல்லவா?

இங்கே தான் இருக்கிறது விடயம். தனது படை நகர்த்தல் படைப்பரம்பல் படை நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு குழப்பமான மயக்கமான நிலையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தவே இந்த ஏற்பாடுகள். மறுதலையாக சிங்கள மக்களுக்கு ஒருவித புத்தூக்கத்தையும் எழுச்சியையும் ஏற்படுத்த முயல்கிறார் லெப்.ஜெனரல் பொன்சேகா.

வவுனியா மடுக்கந்தயில் புதிதாக நிர்மாணிக்கப்படும் படை வலயம் .இதற்கு நல்ல உதாரணம் சிங்களக்குடியேற்றப்பகுதியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கேள்விக்கு பதில் தேடவேண்டிய அவசியம் தமிழர் தரப்பிற்கு இல்லையென்றே நான் நினைக்கின்றேன்.. இதற்கு பதில் தேடுவதை விடுத்து..

தமிழர் தரப்பு போரை முறியடித்து வெற்றியை நாட்டுவதற்கான பலத்தை பெற்றுவிட்டது என்பதே காலத்தின் நிதர்சனம்..!

இந்த கேள்விக்கு பதில் தேடவேண்டிய அவசியம் தமிழர் தரப்பிற்கு இல்லையென்றே நான் நினைக்கின்றேன்.. இதற்கு பதில் தேடுவதை விடுத்து..

சாமான்ய தமிழர்கள் மத்தியில் பீதியை கிழப்ப முயலும் எதிரியின் பிரச்சாரத்தை முறியடிக்க இது போன்ற கட்டுரைகள் பெரிதும் உதவும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமான்ய தமிழர்கள் மத்தியில் பீதியை கிழப்ப முயலும் எதிரியின் பிரச்சாரத்தை முறியடிக்க இது போன்ற கட்டுரைகள் பெரிதும் உதவும்.

சிவராஜா அவர்களே,

உங்களை நினைக்கும் போது என் உள்ளம் சிறிது தெளிகிறது. தமிழ் நாட்டுத் தமிழனும் ஈழத்தமிழனுக்கும் உள்ள உறவு என்ன என்று தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.