Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஒற்றையாட்சி மனப்பிரதிமை"யையே இலங்கை எம்.பி.க்கள் கொண்டுள்ளனர்; கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண கூறுகிறார்

Featured Replies

864_content_article_thinakkural_25-09-20

அரசியலமைப்பின் "ஏகிய ராஜ்ஜிய' என்ற வார்த்தையை ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் உள்ளீர்த்துக் கொள்வதற்கான தேவை அவசியமானதாக காணப்பட்டதாக  கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண எம்.பி. தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றையாட்சி மனப்பாங்கையே கொண்டிருக்கின்றார்கள் எனவும் அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையான ஏகிய என்பதை ஆங்கிலத்தில் உள்ளீர்த்துக் கொள்வது நல்லதொரு முன்னேற்றமாக அமைந்ததென அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். 


இலங்கை அரசியலமைப்பு நிர்ணய சபையின் மத்திம ஸ்தானமாக விளங்கும் வழிகாட்டல் குழுவின்  இடைக்கால அறிக்கை கொண்டிருக்கும் முக்கியமான விடயங்கள் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணியும் லங்கா சமசமாஜக் கட்சி உறுப்பினரும் எம்.பி.யுமான ஜயம்பதி விக்கிரமரட்ண சிலோன் டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். பேட்டி வருமாறு;

கேள்வி: வாக்களிப்பு முறைமை தொடர்பாக எவ்வாறு கருத்தொருமைப்பாட்டுக்கு உங்களால் வர முடிந்தது?

பதில்: பெரும்பான்மையான ஆட்கள் விருப்பு வாக்கிற்கு எதிரானவர்களாக இருக்கின்றனர். தொகுதிகளுக்கு எம்.பி.க்களை அவர்கள் விரும்புகின்றனர். அதேவேளை விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையையும் அவர்கள் விரும்புகின்றனர்.

ஆதலால் வெவ்வேறான அரசியல் அபிப்பிராயங்கள் பாராளுமன்றத்தில் பிரதிபலித்தன.  கலப்பு உறுப்பினர் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை  பிரேரிக்கப்பட்டிருக்கின்றது. இங்கு வேட்பாளர் தொகுதியிலும் போட்டியிட வேண்டும், கட்சிக்காகவும் போட்டியிட வேண்டும். 

பாராளுமன்றத்தின் முழுமையான உள்ளடக்கம் கட்சி வாக்கினால் தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. அது முக்கியமானதென நான் நினைக்கிறேன்.  விருப்பு வாக்கு முறைமையை நீங்கள் இல்லாதொழிக்கும் போது ஒவ்வொருவரும் தொகுதியில் தமக்கென சொந்த எம்.பி. ஒருவரை கொண்டிருப்பார்கள். அதேசமயம் முழுமையான உள்ளடக்கம் விகிதாசாரமாக இருக்கின்றது. 

கேள்வி: சிறிய கட்சிகள் என்னமாதிரியாக உள்ளன?

பதில்: சிறிய கட்சிகளும் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ளும். உதாரணமாக, கடந்த பொதுத் தேர்தலில் இந்த முன்வைக்கப்பட்ட முறைமை இருந்திருக்குமானால் ஜே.வி.பி. 12 ஆசனங்களைப் பெற்றிருக்கும். அவர்கள் தற்போது கொண்டிருக்கும் ஆறு ஆசனங்களுக்குப் பதிலாக 12 ஆசனங்களை அக்கட்சி கொண்டிருக்கும்.

கேள்வி: 1970 களில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே இப்போதும் தொகுதிகள் இருக்கின்றன. புதிய முறைமையை உள்ளீர்த்துக் கொள்வதற்கான புதிய எல்லை நிர்ணய நடவடிக்கைகள் இடம்பெறுமா?

பதில்: ஆம். தற்போது தொகுதிகள் இல்லை. நாங்கள் பழைய தேர்தல் பிரிவுகளுக்கே செல்கின்றோம். ஆனால், மக்கள் பாரியளவு நகர்வுகளை மேற்கொண்டுள்ளார்கள். உதாரணமாக, கடுவெலயில் 1 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். சில பகுதிகளில் 20 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரம் வாக்காளர்களே உள்ளனர். குடித்தொகை, புலம்பெயர்வு முறைமைகள் மாற்றமடைந்துள்ளன. அவற்றைக் கவனத்தில் எடுக்க வேண்டும். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரே மாகாணமாக அரசியலமைப்பு அங்கீகரிப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இணைப்பை இது குறிப்பிடுகின்றதா?

பதில்: அது ஒரு யோசனை மட்டுமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடே அந்த யோசனை என்பதை சகலரும் அறிவார்கள்.


கேள்வி: ஆகவே இணைப்பு இருக்கமாட்டாதா?

பதில்: எனது கருத்தானது 2 அல்லது 3 மாகாணங்கள் இணைப்பைக் கொண்டிருப்பதற்கு நான் எதிர்ப்பை கொண்டிருக்கவில்லை.  அதாவது ஒவ்வொரு மாகாணங்களினதும் பெரும்பான்மை வாக்காளர்கள் இணங்கினால் இணைப்பைக் கொண்டிருப்பதை நான் எதிர்க்கவில்லை.

உதாரணமாக நான் மத்திய மாகாணத்தில் இருந்து வருகிறேன். ஊவா மாகாணத்துடன் இணைவது தொடர்பாக எனக்கு பிரச்சினையில்லை. ஆனால், ஊவா மாகாண மக்களும் மத்திய மாகாண மக்களும் தனித்தனியாக ஆதரவாக வாக்களிப்பது அவசியம். தற்போதைய அரசியலமைப்பு கூட இதனை வழங்குகின்றது. 13 ஆவது திருத்தம் இணைப்புக்கு சாத்தியமானதைக் கொண்டிருக்கின்றது.

ஆனால் இது தொடர்பாக சட்டம் ஒன்று இருக்க வேண்டும் என்று அது கூறுகிறது. ஆகவே பாராளுமன்றம் இது தொடர்பாக சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.  மாகாண சபைகள் சட்டமூலம் என்ற சட்டத்தை பாராளுமன்றம் கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்திற்கு மட்டுமே ஏற்பாடு பொருந்தக் கூடியதாக இருந்தது. இப்போது சட்டம் இல்லை. ஆதலால் ஆட்கள் ஏன் இ து தொடர்பாக கவலைப்பட வேண்டும் என்பது குறித்து எனக்குத் தெரியாது.

தற்போதைய ஏற்பாட்டை இப்போது இருப்பது போன்றே விட்டுவிட வேண்டும். இதற்கு ஒவ்வொரு மாகாணமும் இணங்குவது அவசியம் என்பது மக்களுக்கான மேலதிக பாதுகாப்பாக இருக்கின்றது. அத்துடன் அதனைச் செய்வதற்கான அதிகாரத்தை பாராளுமன்றம் வழங்குவதும் அவசியமாகும். பாராளுமன்றமே சட்டத்தை நிறைவேற்றுவது அவசியம். இல்லாவிடில் இந்த அரசியலமைப்பு ஏற்பாடு அர்த்தமற்றதாக இருக்கின்றது. பாராளுமன்றம் சட்டத்தை நிறைவேற்றாவிடின் என்ன நடக்கும்? சட்டத்தை நிறைவேற்றுமாறு உங்களால் பாராளுமன்றத்தை நிர்ப்பந்திக்க முடியாது. 

கேள்வி: சு.க., ஜாதிக ஹெல உறுமய மற்றும் வேறு சில கட்சிகள் பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமையான இடத்தை கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகின்றன. ஏனைய மதங்கள் பாரபட்சத்திற்கு இலக்காகாத விதத்தில் இதனைக் கொண்டிருக்க வேண்டுமென அவை கருதுகின்றன. எவ்வாறாயினும் தமிழ்க் கூட்டமைப்பு மதச் சார்பற்ற அரசாக இருக்க வேண்டுமென கருதுகிறது. உங்களின் கருத்து என்ன?

பதில்: அங்கு இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய ஏற்பாட்டை தொடர்ந்து வைத்திருப்பது ஒன்றாகும். பௌத்தத்திற்கு அதி முன்னுரிமையான இடத்தைக் கொண்டிருப்பது மற்றையதாகும். பௌத்தத்திற்கு முன்னுரிமையான இடத்தை மாற்றமடையாமல் வைத்திருப்பதை சகலரும் விரும்புகின்றனர். ஆயினும் சிலரால் வேறுபட்ட வடிவம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஏனைய மதங்களும் பாரபட்சமாக நடத்தக்கூடாது என்பதாக அது அமைந்திருந்தது. தமிழ்க் கூட்டமைப்பு மதச் சார்பற்ற அரசை விரும்பக் கூடும். ஆனால், அங்கு இரு யோசனைகள் மட்டுமே முன்வைக்கப்பட்டன. இரண்டுமே பௌத்தத்தின் தற்போதைய நிலைப்பாடு தொடர்ந்து பேணப்படுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்க் கூட்டமைப்பு தாங்கள் மதச்சார்பற்ற அரசொன்றை விரும்புவதாக குறிப்பிடும் போது அவர்கள், இரு பிரதான கட்சிகளும் இணங்கியிருந்தால் அறிக்கை தொடர்பாக தமக்கு பிரச்சினை இல்லையென கூறியுள்ளனர். எவ்வாறாயினும் இலங்கை மதச் சார்பற்ற அரசாகவே இருக்கின்றது. பௌத்தம் உத்தியோகபூர்வ மதமல்ல. ஆனால் இரு தீர்ப்புகளில் அதாவது ஒலி மாசு வழக்கொன்றிலும் முதலாவது 19 ஆவது திருத்த வழக்கொன்றிலும்  பௌத்தம்  அதி முக்கியமான இடத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும்  ஏனைய மதங்களும்  பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இலங்கையின் மதச் சார்பற்ற அரசு நிலைமை தக்க வைக்கப்பட்டிருக்கின்றது. ஜாதிக ஹெல உறுமய கூட அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. பௌத்தத்திற்கு அதி முக்கியமான இடத்தைக் கொடுத்திருப்பது வெறுமனே அலங்காரமாகவே இருப்பதாக தனது அவதானிப்பில் ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.

கேள்வி: அதிகாரப் பகிர்வு தொடர்பாக வேறுபட்ட அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. இவற்றுக்கு எவ்வாறு நீங்கள் தீர்வு காண்பீர்கள்?

பதில்: அதிகாரப் பகிர்வு தொடர்பான யோசனைகள் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன கூறியிருக்கின்றது என்பது குறித்தும் நான் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதிகாரப் பகிர்வு யோசனைகள் தொடர்பாக அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐ.தே.க.வும் இணங்கியுள்ள நிலையில், அவற்றுடன் இணைந்து செல்ல தாங்கள் விரும்புவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

அதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். வழிகாட்டல் குழு மற்றும் பல்வேறு உப குழுக்களினால் தெரிவிக்கப்பட்ட யோசனைகளை அடிப்படையாகக் கொண்டது அதிகாரப் பகிர்வு யோசனைகள் என்று அறிக்கை கூறுகின்றன. தெற்கில் சிறப்பான யோசனைகள் ஏழு முதலமைச்சர்களிடமிருந்தும் வந்திருந்தது. அவர்கள் யாவருமே சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அவர்களின் யோசனைகள் முப்பது வருட அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டவை. இது மிகவும் நடைமுறைச்சாத்தியமானது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிமுறையாக அவர்கள் அதிகாரப் பகிர்வை பார்த்துள்ளனர். அத்துடன் அபிவிருத்திக்கான கருவியாகவும் அவர்கள் அதனைப் பார்த்துள்ளனர். 


அத்துடன் மக்களை ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக கொண்டு செல்வதாகவும் அவர்கள் அதனைப் பார்க்கின்றனர்.  அதிகாரப் பகிர்வு விதிமுறைகளிலுள்ள அநேகமான ஒவ்வொன்றுக்குமே வழிகாட்டல் குழுவின் இணக்கம் காணப்பட்டுள்ளது. அவை நாட்டின் தெற்கிலுள்ள முதலமைச்சர்களிடமிருந்து வந்துள்ளவையாகும்.

அவர்கள் என்ன விரும்புகின்றனர் என்றால்  தேசியக் கொள்கை ஏற்பாடானது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் போது அதிகாரம் தொடர்பான தெளிவான முறையில் பிரிவு தேவை என அவர்கள் கேட்கின்றனர். தேசியக் கொள்கைகளில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது சம்பந்தப்படுவதற்கு இந்த முதலமைச்சர்கள் விரும்புகின்றனர்.

அதிகாரப் பகிர்வு விடயங்கள் இடம்பெறும் போதும் தேசியக் கொள்கைகளை உருவாக்கும் போர்வையில் அந்த அதிகாரங்களை எடுத்துக் கொள்ளப்படும் போதும் தாங்கள் சம்பந்தப்பட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். 

கேள்வி: பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான தீர்மானம் என்ன?

பதில்: உள்ளூராட்சித் தேர்தல்களில் இது எவ்வாறு செயற்படுகின்றது என்பதனை நாங்கள் பார்ப்போம் என எண்ணியுள்ளோம். அதனை கொள்கையளவில் நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். மாகாண சபைகளிலும் அவற்றை உள்ளீர்த்துக் கொண்டுள்ளோம். கடந்த வாரம் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளோம்.

கேள்வி: பொதுமக்கள் பாதுகாப்பு விடயத்தை எவ்வாறு நீங்கள் கையாள உள்ளீர்கள்?

பதில்: பொதுமக்கள் பாதுகாப்பை வழிகாட்டல் குழு கையாண்டிருக்கவில்லை. சட்டம், ஒழுங்கு தொடர்பான உப குழுவின் வரையறைக்குள் அந்த விடயம் வந்திருந்தது. அந்த உப குழுவிற்கு அமைச்சர் சாகல ரட்ணாயக்க தலைமை தாங்கியிருந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பாகவும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய விபரங்கள் குறித்தும் அந்த அறிக்கை விபரமாக விடயங்களைக் கொண்டிருக்கின்றது. அது தொடர்பாக சகலருமே அக்கறை கொண்டிருக்கின்றார்கள்.

கேள்வி: ஒற்றையாட்சி அரசு என்ற கோட்பாட்டுக்கு சகலரும் எவ்வாறு தீர்மானத்தை மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்:  சிங்கள மக்களுடன் நீங்கள் கதைத்தால், அவர்களின் பெரும்பான்மையானோர் ஏகிய ராஜ்ஜியத்தை  விரும்புவதாக கூறுவார்கள். "ஏகிய ராஜ்ஜிய' என்றால் என்ன என்று அவர்களை நீங்கள் கேட்டால் பிரிக்க முடியாத நாட்டை விரும்புவதாக அவர்கள் கூறுவார்கள். ஆனால் ஒற்றையாட்சி (Unitary) என்ற ஆங்கிலத்திலான சொல்லானது வேறுபட்ட கருத்தைக் கொண்டதாகும். அதுவே 30 வருட காலமாக எமது அனுபவமாக உள்ளது.

சட்டவாக்கமும் நிறைவேற்று அதிகாரமும் ஏன் நீதித்துறையும் கூட ஒற்றையாட்சி என்ற வார்த்தையையே பயன்படுத்துகின்றன. கமலாவதி என்றழைக்கப்பட்ட வழக்கு ஒன்று உள்ளது. மாகாண அரச சேவையில் மாகாண ஆசிரியர் ஒருவருடன் தொடர்புபட்ட இடமாற்றக் கொள்கை பற்றியது அந்த விடயமாகும். இடமாற்றங்கள் தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஒன்று உள்ளது.

நாங்கள் கொண்டிருந்த சிறப்பான நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் மார்க் பெர்னாண்டோ துரதிர்ஷ்டவசமாக ஒற்றையாட்சி பிரதிமையை கொண்டிருந்தார். மத்தியிலுள்ள அமைச்சரவையின் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான தீர்மானம் மாகாணங்களைக் கட்டுப்படுத்தும் தேசியக் கொள்கை என அவர் தீர்ப்பளித்திருந்தார். விவசாயச் சேவைகள் பகிரப்பட்ட விடயமாகும்.

அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட்ட முதல் மூன்று வருட காலத்திலும் மாகாண சபைகளினால் அவை கையாளப்பட்டன. அதன் பின்னர் விவசாய சேவைகள் சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டமூலம்  மாகாண சபைகளின் கருத்துகளைப் பெற்றுக் கொõள்வதற்காக அனுப்பப்பட்டிருக்கவில்லை. அந்த விடயம் தொடர்பாக சவால் விடுக்கப்பட்ட போது அரசோ அல்லது சட்டமா அதிபரோ நீதிமன்றத்திற்கு வந்திருக்கவில்லை.

தாங்கள் தேசியக் கொள்கையை வகுத்திருந்ததாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் நீதிமன்றம் (நீதியரசர் மார்க் பெர்னாண்டோ) இதனை தேசியக் கொள்கை உருவாக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தது. தேசியக் கொள்கையை உருவாக்குவதற்கான சட்டமூலத்தின் நோக்கமாக இது இருக்கின்றது என்பதை அரசாங்கம் கூற வேண்டியதாக இருந்தது. ஆனால் நான் வேறொன்றை குறிப்பிட்டிருந்தேன். எனது எழுத்துகளில் ஒன்றில் அதனைத் தெரிவித்திருந்தேன்.

உயர் நீதிமன்றம் அரசாங்கத்திற்காக பேசும் போது நீதிமன்றத்தின் முன்பாக அரசாங்கம் வேறொரு வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் போது அதாவது தேசியக் கொள்கை தொடர்பாக வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் போது நீதிமன்றம் அரசாங்கத்துக்காக பேசுவதாக நான் எனது எழுத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

தேசியக் கொள்கை என்று ஊகித்தால் கூட அதாவது விவாதத்திற்காக குறிப்பிட்டிருந்தால் நீதியரசர் மார்க் பெர்னாண்டோவின் நிலைப்பாடு சரியானதாகும்.  விவசாய சேவைகளை ஒதுக்கீடு செய்த விடயமாக அது கொண்டிருக்கவில்லை. விவசாய சேவைகள் பகிரப்பட்டவை அல்ல என்ற அந்தத் தீர்ப்பை சட்டமா அதிபர் அபிப்பிராயமாகக் கொடுக்கும் போது அது ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயமாக இருக்கவில்லை. அதனை எவ்வாறு செய்ய முடியும்?

ஏனெனில் தேசியக் கொள்கையாக உருவாக்கப்பட்ட விடயம் மாகாண சபையின் பட்டியலுக்கு மாற்ற முடியாது. இந்நிலையில் 9 விவசாய சேவைகள் திணைக்களங்களும் அதிகாரிகளும் கனரக பொருட்களும் வாகனங்களும் மத்திய அரசுக்கு திரும்ப எடுத்துக் கொள்ளப்பட்டன. 2003 இல் இந்த வழக்கு மத்தும பண்டார அழைக்கப்பட்ட வழக்கொன்றில் இந்த விடயம் மீளப் பரிசீலிக்கப்பட்டிருந்தது. விவசாய சேவைகள் பகிரப்பட்ட விடயமென்ற நிலைப்பாட்டை அது கொண்டிருந்தது.

14 வருடங்கள் கடந்து சென்றிருந்தன. இப்போதும் திணைக்களம் மாகாணத்திற்கு மீள வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே அவர்கள் இந்த ஒற்றையாட்சி மனப்பான்மையைக் கொண்டிருக்கின்றனர். அதனாலேயே ஏகிய ராஜ்ஜிய என்ற சிங்கள வார்த்தைக்கு தாங்கள் இணங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. ஆனால் அதனுடன் ஆங்கில வார்த்தையையும் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். அது மிகவும் சிறப்பான முன்னேற்றமாகும். "பிரிக்க முடியாத அரசு' என்பதையே ஏகிய ராஜ்ஜிய வாக சிங்கள மக்கள் விரும்புகின்றனர். 


ஐக்கிய இராச்சியம் சகல ஒற்றையாட்சி அரசுகளுக்கும் சகல பாராளுமன்றங்களுக்கும் தாய் என்று வர்ணிக்கப்படுகின்றது. 1920 களில் பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் அயர்லாந்தை சுதந்திரமான நாடாக செல்வதற்கு அனுமதித்தது. அயர்லாந்து குடியரசு உதயமானது. வட அயர்லாந்து நெருக்கடிக்கான தீர்வாக பெரிய வெள்ளி உடன்படிக்கை மேலெழுந்தது. 

வட அயர்லாந்தின் பெரும்பான்மையான மக்கள் குடியரசுடன் ஐக்கியப்பட்டிருக்க விரும்பியிருந்தனர். அதற்கு பெரிய வெள்ளி உடன்படிக்கை இடமளித்தது. பிரிட்டன் அதனை ஏற்க வேண்டியிருந்தது. வெஸ்ட் மின்ஸ்டர் பாராளுமன்றத்தினால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த வருடம் வெஸ்ட் மின்ஸ்டர் பாராளுமன்றம் ஸ்கொட்லாந்து தனி நாடாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பை நடத்த ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்திருந்தது.

இந்த விடயம் ஒற்றையாட்சி என்ற வார்த்தையானது பிரிவினைக்கு எதிரான உத்தரவாதமாக இருக்கவில்லை என்பதை காண்பிக்கின்றது. பிரிவினைக்கு எதிரான உத்தரவாதத்தை இந்த நாட்டு மக்கள் விரும்புகின்றனர். ஆதலால் ஒற்றையாட்சி என்பது உதவியாக அமைந்திருக்கவில்லை. 

ஏகிய என்ற உணர்வானது இலங்கை பிரிக்க முடியாத, பிளவுபடுத்த முடியாத நாடு என்ற உணர்வைத் தருகின்றது. அத்துடன் இலங்கை மக்கள் இறைமையுடைய மக்கள் என்பதாக அது தருகிறது.  இறைமை  மக்களை முழுமையாகக் கொண்டதாகும். அது விட்டு விலகிக் கொள்ள முடியாததாகும். அரசியலமைப்பு மாற்றத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் மத்திய சட்டவாக்க சபையில் உள்ளது.

அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளில் மாகாண சபைகள் எந்தவொரு உரித்தையும் கொண்டிருக்க மாட்டாது. ஆனால் இப்போது 20 ஆவது திருத்தம் தீர்மானம் தொடர்பாக நாங்கள் பிரச்சினை ஒன்றை கொண்டிருக்கின்றோம். உதய கம்மன்பில போன்றவர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு சவால் விடுத்துள்ளனர். மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் வாக்குரிமையின் அங்கமாக இருக்கின்றன என அவர்கள் வாதிடுகின்றனர். 


பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பாக அரசியலமைப்பின் பிரகாரம் வாக்குரிமை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தல்களும் நாட்டின் வாக்குரிமையின் அங்கமாக இருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர். இதன் அர்த்தம் என்ன?


மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டவையாக இருக்கின்றன என இது அர்த்தப்படுகிறது. இதனை மாற்றியமைக்க முடியாது. நாட்டின் இறைமையின் அங்கமாக இது இருக்கின்றது. ஆதலால் மாகாண சபைகளை இல்லாதொழிக்க முடியாதென இது அர்த்தப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல்களை உங்களால் தாமதிக்க முடியாவிட்டால் மாகாண சபைகளையும் உங்களால் நிச்சயமாக இல்லாதொழிக்க முடியாது. ஆதலால் அந்தத் தீர்ப்பின் விளைவு என்னவாக உள்ளது. நாங்கள் ஒற்றையாட்சி முறைமையை கொண்டிருக்கின்றோம்.

 

http://www.thinakkural.lk/article.php?article/znftdfaayp19358d55a249e64734jgyn3baa5c06772297520da2051rkyzj

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.