Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் மற்றுமொரு நிலக்கீழ் சித்திரவதைக்கூடம்

Featured Replies

திருமலையில் மற்றுமொரு நிலக்கீழ் சித்திரவதைக்கூடம்

 

5 மாணவர் படுகொலை வழக்கில் குற்றப்புலனாய்வுப்பிரிவு நீதிமன்றில் அறிக்கை
(எம்.எப்.எம்.பஸீர்)

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கி வந்ததாக கூறப்படும் மற்றொரு இரகசிய நிலத்தடி சித்திரவதை கூடம் தொடர்பிலான தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர் பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த புதிய சிறைக் கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

திருமலை கடற்படை முகா மில் உள்ள கன்சைட் எனும் இடத்தில் இரகசிய சித்திரவதை கூடங்களுக்குள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டு பிடித்திருந்ததுடன் அந்த நிலத்தடி முகாமில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலக் கீழ் இரகசிய சித்திர வதைக் கூடம் இருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவிக்கின்றது.

திருமலை கன்சைட் நிலத்தடி முகாமில் இடம் பெற்ற விடயங் கள் தொடர்பில் கடந்த இரு வாரங்களுக்குள் கடற்படையின் 25 உத்தியோகத்தர்களை விசாரணை செய்த போது இந்த புதிய நிலத்தடி சிறைக் கூடம் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் நேற்று தெரிவித்தார்.

புதிதாக வெளிப்படுத்தப்பட்ட குறித்த சிறைக் கூடங்களிலும் பெருமளவிலானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமை தொடர்பில் சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் யார் என இதுவரையிலான விசாரணைகளில் தகவல் வெளிப்படவில்லை எனவும் அவர் நீதிவானிடம் சுட்டிக்காட்டினார். இந் நிலையில் இது தொடர்பிலான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க உள்ளிட்ட 7 பேரில் விளக்கமறியலில் இருந்துவரும் அறுவரின் விளக்கமறியல் காலத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை கோட்டை நீதிமன்றம் நீடித்தது.

அத்துடன் கைது செய்வதற்காக தேடப்பட்டுவரும் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டி ஆராச்சியைக் கைது செய்ய மீளவும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க ஜயரத்ன முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தது.

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­கா­ப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­ததிருந்தது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­தர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன்ட் கொமண்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன்ட் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை சிப்பாய் லக்ஷ்மன் உதயகுமார, நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ , கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சம்பத் முனசிங்க பிணையில் உள்ள நிலையில் ஏனையோர் தொடர்ந்து விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.

நேற்றைய விசாரணைகள் ஆரம்பமான போது சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர்செய்யப்பட்டிருந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சார்பில் மன்றில் ஆஜரான விசாரணைப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, நீதிவானின் கேள்விகளுக்கு மத்தியில் மன்றில் பின்வருமாறு கருத்துக்களை பதிவு செய்தார்.

'கனம் நீதிவான் அவர்களே, கடந்த தவணை வழக்கு விசாரணை முடிந்தது முதல் இதுவரை நாம் 25 கடற்படை உத்தியோகத்தர்களிடம் விசாரணை செய்து வாக்கு மூலம் பதிவு செய்துள்ளோம். கடற்படை முகாம்களுக்கு சென்று இந்த வாக்கு மூலங்களை நாம் பெற்றோம்.

இதில் பிரதானமாக தற்போது விளக்கமறியலில் இருந்து வரும், கன்சைட் முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்ட கொமாண்டர் ரணசிங்கவிடம் சேவையாற்றிய இருவரின் வாக்கு மூலங்களும் அடங்குகிறன. ஹெட்டிஹெந்தி, சேனாரத்ன எனப்படும் அந்த இருவரின் வாக்கு மூலத்தின் படி, கன்சைட் நிலத்தடி சிறைக் கூடத்தில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் மற்றொரு தடுப்பு மையம் அல்லது சிறைக் கூடம் இயங்கியுள்ளது.

 இந்த சிறைக் கூடத்தில், பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர். இந்த வழக்குக்கு உரிய 11 பேரும் கன்சைட்ட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் அல்லாமல் வேறு ஒரு தரப்பினரே இந்த சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளனர்.

அவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. அது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. எனினும் இந்த சிறைக் கூடத்திலேயே கேகாலையைச் சேர்ந்த சாந்த, இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமை சாட்சியங்கள் ஊடாக தெரியவந்திருக்கின்றது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

 இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படவேண்டியோர் பட்டியலில் உள்ளனர். இதனைவிட கடற்படை இந்த விசாரணைகளுக்கு அளிக்கும் ஒத்துழைப்பு மிகக் குறைவாக உள்ளது.

 நாம் கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் சேவையாற்றியோர் பட்டியலை கோரியிருந்தோம். அவர்கள் 15 பேர் கொண்ட பட்டியல் ஒன்றினை அனுப்பினர். அவர்களிடம் விசாரணை செய்த போது, குறித்த காலப்பகுதியில் அவர்களில் பெரும்பாலானோர் ரணசிங்கவின் கீழ் சேவையாற்றவில்லை என்பது தெரியவந்தது. கடற்படை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பொய்யான தகவல்களை வழங்குவதால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுகிறது.

 இது தொடர்பில் நாம் புதிய கடற்படை தளபதியின் கவனத்துக்கு விடயத்தை கொண்டு வந்துள்ளோம்.

 இந்த விடயம் மட்டுமன்றி ஹெட்டி ஆராச்சி பயன்படுத்திய வேன் ஒன்று கொமாண்டர் முனசிங்கவின் மனைவிக்கு சொந்தமானது. இந்த வேன் ஹெட்டிஆராச்சிக்கு கையளிக்கப்பட்ட விதம் தொடர்பில் நாம் ஆவணங்களை கடற்படையிடம் கோரினோம். இதுவரை ஹெட்டி ஆராச்சி தொடர்பிலான எந்த தகவல்களையும் வழங்க கடற்படை முன்வரவில்லை. இந்த விடயத்தையும் புதிய கடற்படை தளபதிக்கு அறிவித்துள்ளோம். என்றார்.

 இந் நிலையிலேயே முதல் சந்தேக நபர் தவிர ஏனைய 6 பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இதன் போது முதலாவது சந்தேக நபர் பிணையில் இருப்பது குறித்து அரச சட்டவாதி பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவினால் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், அவரது பிணையை ரத்து செய்து அவரையும் விளக்கமறியலில் வைப்பது தொடர்பில் கருத்து பரிமாற்றப்பட்டது.

இது தொடர்பில் ஆவணங்களைப் பரீட்சித்த பின்னர் கருத்துக்களை அரச சட்டவாதி மன்றில் முன்வைக்கவுள்ளார்.

இந் நிலையில் அடுத்த தவணை வழக்கானது ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-26#page-1

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

அவர்கள் யார் என்பது இதுவரை தெரியவில்லை. அது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. எனினும் இந்த சிறைக் கூடத்திலேயே கேகாலையைச் சேர்ந்த சாந்த, இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகிய இருவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்துள்ளமை சாட்சியங்கள் ஊடாக தெரியவந்திருக்கின்றது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியவில்லை.

 இந்த கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படவேண்டியோர் பட்டியலில் உள்ளனர். இதனைவிட கடற்படை இந்த விசாரணைகளுக்கு அளிக்கும் ஒத்துழைப்பு மிகக் குறைவாக உள்ளது.

 நாம் கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் சேவையாற்றியோர் பட்டியலை கோரியிருந்தோம். அவர்கள் 15 பேர் கொண்ட பட்டியல் ஒன்றினை அனுப்பினர். அவர்களிடம் விசாரணை செய்த போது, குறித்த காலப்பகுதியில் அவர்களில் பெரும்பாலானோர் ரணசிங்கவின் கீழ் சேவையாற்றவில்லை என்பது தெரியவந்தது. கடற்படை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பொய்யான தகவல்களை வழங்குவதால் விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவுகிறது.

 இது தொடர்பில் நாம் புதிய கடற்படை தளபதியின் கவனத்துக்கு விடயத்தை கொண்டு வந்துள்ளோம்.

 இந்த விடயம் மட்டுமன்றி ஹெட்டி ஆராச்சி பயன்படுத்திய வேன் ஒன்று கொமாண்டர் முனசிங்கவின் மனைவிக்கு சொந்தமானது. இந்த வேன் ஹெட்டிஆராச்சிக்கு கையளிக்கப்பட்ட விதம் தொடர்பில் நாம் ஆவணங்களை கடற்படையிடம் கோரினோம். இதுவரை ஹெட்டி ஆராச்சி தொடர்பிலான எந்த தகவல்களையும் வழங்க கடற்படை முன்வரவில்லை. இந்த விடயத்தையும் புதிய கடற்படை தளபதிக்கு அறிவித்துள்ளோம். என்றார்.

புதிய கடற்படை தளபதிக்கு ஆப்பு இறுகுகிறது ...
சிங்களவனா ..கொக்கா 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.