Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதித்தீர்மானத்தின்போது சி.வி.யின் இணக்கத்தையும் பெற்றுக்கொள்வோம்

Featured Replies

இறுதித்தீர்மானத்தின்போது சி.வி.யின் இணக்கத்தையும் பெற்றுக்கொள்வோம்

akila-d18d4b489dfea0b38146f2e2c2108a461b2bd6bd.jpg

 

சு.க.வின் சம்மதத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு என்கிறார் அகிலவிராஜ்
(எம்.எம்.மின்ஹாஜ்)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் இணக்­கத்­துடன் புதிய அர­சி­ய­லமைப்­பிற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­படும். அர­சியல் அமைப்புத் தொடர்­பான இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் வட மாகாண முதல்வர்  சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனின் இணக்­கத்­துடன் கூடிய அர­சி­ய­லைப்­பி­னையே நாம் கொண்டு வருவோம் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ்­கா­ரி­ய­வசம் தெரி­வித்தார். 

தற்­போ­தைக்கு இணக்­க­பாடு எட்­டப்­ப­டாத விட­யங்­களில் அனைத்து கட்­சி­க­ளையும் இணக்­கத்­திற்கு கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் . எனினும் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்த வேண்டும் என்­பதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பா­டாகும் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அர­சி­ய­லை­மப்பு வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்பில் வின­விய போதே கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் மேற்­கண்­ட­வாறு கேச­ரிக்கு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான அடிப்­படை ஆவ­ண­மான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தற்­போது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இடைக்­கால அறிக்கை குறித்து பல வாதப்­பி­ர­தி­வா­தங்கள் எழுந்­துள்­ளன.

 வடக்கு முத­லை­மச்சர் சி.வி விக்­கேஸ்­வ­ரனும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்ளார். அனைத்து நட­வ­டிக்­கை­க­ளுக்கும் எதிர்ப்பு தெரி­விப்­பது அவரின் வழக்­க­மாக உள்­ளது. இருந்­த­போ­திலும் புதிய அர­சி­ய­லை­மப்பு தயா­ரிப்பு பணிகள் இன்னும் பூர்த்­தி­யா­க­வில்லை. இறுதி தீர்­மா­னத்தின் போது சி.வி விக்­கி­னேஸ்­வ­ரனின் இணக்­கத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

வடக்கு முதல்­வரின் இணக்­கத்­துடன் அர­சி­ய­ல­மைப்பு கொண்டு வர நட­வ­டிக்கை முன்­னெ­டுப்போம்.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு விட­வேண்டும் என மகா­நா­யக்க தேரர்கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இந்­நி­லையில் மக்­களின் அங்­கீ­கா­ரத்தை பெற்ற பின்­னரே அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்ற வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே ஐக்­கிய தேசியக் கட்சி உள்­ளது.

எனினும் சுதந்­தி­ரக்­கட்சி மாத்­திரம் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு எதி­ராக உள்­ளது. இருந்­த­போ­திலும் இது தொடர்­பாக தொடர்ந்தும் சுதந்­திரக் கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம். ஆகவே இந்த விட­யத்தில் நாம் சுதந்­திரக் கட்­சியை இணக்­கத்­திற்கு கொண்டு வர­வுள்ளோம். சுதந்­திரக் கட்­சியின் இணக்­க­து­ட­னேயே நாம் அர­சி­ய­ல­மைப்­புக்­கான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பினை நடத்­துவோம். எவ்­வா­றா­யினும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றும்­போது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்­கான விட­யங்­களை திருத்தம் செய்­யவும் வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்புக்கு மக்களின் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.

இந்த நிலைப்பாட்டிற்கு சுதந்திரக் கட்சியும் வரும் என நம்புகின்றோம். எவ்வாறாயினும் அனைத்து கட்சிகளினதும் சமூகத்தவர்களினதும் இணக்கத்துடன் புதிய அரசியலைப்பினை கொண்டு வருவோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-26#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.