Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கேதீஸ்வரம் விகாரை திறப்பில் ஜனாதிபதி பங்கேற்றால் கறுப்புக்கொடி போராட்டம்

Featured Replies

13280_content_maithiri_president_thinakk

மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


குறித்த பகுதியில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் 
திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவிற்கு நேற்று  திங்கட்கிழமை அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே இவ்வாறு  கேள்வி எழுப்பியுள்ளார். அக்கடிதத்தில்  அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;


1991 ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வரம் பகுதியை இராணுவம் கைப்பற்றிய போது தமது வழிபாட்டுக்கு என அமைக்கப்பட்டது தான் இந்த பௌத்த விகாரை.
 2009 ஆம் ஆண்டிற்கு  பின்னர் இராணுவம் அங்கிருந்து பிரதான படை முகாமை அகற்றிய போதும், இந்த பௌத்த விகாரையையும் பௌத்த மதகுருவையும் பாதுகாப்பதற்கு சிறிய இராணுவ முகாம் அமைத்து பாதுகாத்து வருகிறது. எனவே இராணுவத்தின் ஒத்துழைப்புடனேயே பௌத்த விகாரை அமைப்பு நடை பெறுகின்றது.


வரலாற்றுப் புகழ் மிக்க திருக்கேதீஸ்வரம் சூழலில் இச்செயற்பாடு ஏற்புடையதா? 18.01.2012 இல் பௌத்த மத அலுவல்கள் திணைக்களம் இந்த விகாரையின் பதிவை இரத்து செய்ததுடன் கட்டுமானப் பணிகளையும் நிறுத்தியது. ஆனால், உங்கள் நல்லாட்சியில் தான் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

இது சட்ட விரோத ஜனநாயக மீறல் அல்லவா? இதுவா நல்லாட்சி? தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் கலாசார மாற்றத்தை ஏற்படுத்தி போலியான புனைவு பெயர்களின் மூலம் பௌத்த மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்னகர்த்துகிறீர்களா?


எப்படி கதிர்காமத்தை சிங்கள முருகன் ஆக்கினீர்களோ அதே போல் காலப்போக்கில்   திருக்கேதீஸ்வரத்தை சிங்கள    சிவனாக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறீர்களா? இது தானா பௌத்த தர்மம்? புத்த பெருமானின் தர்ம சிந்தனைக்கு எதிராக செயற்படுவது தான் இன்றைய பௌத்த  சிந்தனையா?

பாவம் புத்தர் உயிரோடு இருந்திருந்தால் உங்கள் எல்லோரையும் அழித்து விடுவார். புத்த பெருமானின் தர்ம சிந்தனைகள் உலக நீதிக்கு வழிகாட்டின.  ஆனால் இன்றைய பௌத்தம் இனச்சுத்திகரிப்பு செய்கிறது.


சட்ட விரோதமாக தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட சட்ட விரோதமான  விகாரையை திறப்பதற்கு தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகிய நீங்கள் உங்களை தெரிவு செய்த மக்களின் விருப்புக்கு மாறாக திறப்பு விழாவிற்கு வருவது தார்மீக அடிப்படையில் நியாயம் தானா? என உங்கள் மனச் சாட்சியிடம் கேளுங்கள். தமிழ் மக்களின் அறம் சார்ந்த போராட்டத்தை தான் அடியோடு அழித்து விட்டீர்கள்.


 இனம் சார்ந்த உணர்வையும் நசுக்கி விடப்போகிறீர்களா?. நீங்கள் தமிழ் தலைமைகளை ஏமாற்றலாம். ஆனால், தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். நீங்கள் உண்மையில் அறம் பேசுபவராக இருந்தால் சட்ட விரோத விகாரை திறப்பு விழாவிற்கு வருவது ஏற்புடையது அல்ல .


உடனடியாக பணிகளை நிறுத்த  வேண்டும். எக்காலத்திலும் பௌத்தர்கள் வசிக்காத இடத்தில் எதற்கு விகாரை? திருக்கேதீஸ்வரப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியின்றி ஒரு சிறு குழியைக்கூட அகழ முடியாது.
 ஆனால், விகாரை கட்டுவதற்கு யார் அனுமதி வழங்கியது? இது தானா பௌத்த ஜனநாயகம்? 


மேட்டிமை வாத மேலாதிக்கத்தை தான்தோன்றித்தனமாக தமிழர் பிரதேசத்தில் இராணுவ உதவியுடன் செயற்படுத்திக்கொண்டு உலகத்தை ஏமாற்ற உதட்டளவு நல்லிணக்கம் பேசுகிறீர்களே! எப்படி நல்லிணக்கம் ஏற்படும். எனவே இந்த சட்ட விரோத விகாரை திறப்பு விழாவில் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் கலந்துகொள்வது ஏற்புடையது அல்ல.


எமது நியாய பூர்வமான வேண்டுகையை புறக்கணித்து குறித்த திறப்பு விழா நடை பெற்றால் ஜனநாயக ரீதியில் கறுப்புக் கொடியேந்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்பதையும் தங்களுக்கு வினயமாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

http://www.thinakkural.lk/article.php?local/krkihcbhme9703ef8f94395b32686xwmn9e9fd78b7d0aeecf7864a03yaqhb

விகாரைத் திறப்புவிழாவுக்கு மைத்திரி வந்தால் கறுப்புக்கொடியேந்திப் போராடுவோம்

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவிப்பு

 
விகாரைத் திறப்புவிழாவுக்கு  மைத்திரி வந்தால் கறுப்புக்கொடியேந்திப்  போராடுவோம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

மன்­னார் மாந்தை திருக்­கே­தீஸ்­வ­ரம் பகு­தி­யில் தனி­யா­ருக்குச் சொந்­த­மான 10 ஏக்­கர் காணியை அப­க­ரித்து விகாரை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்த பௌத்த விகாரை எதிர்­வ­ரும் 29ஆம்­தி­கதி வெள்­ளிக் கி­ழமை அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் வைப­வ­ரீ­தி­யாக திறந்து வைக்­கப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பில் பல்­வேறு தரப்­பி­ன­ரா­லும் அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. விகாரைத் திறப்­பு­வி­ழா­வுக்கு அர­ச­த­லை­வர் வந்­தால் கறுப்­புக் கொடி­யேந்தி முற்று­கைப் போராட்­டம் நடத்­தப்­ப­டும் என்று எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பில் மன்­னார் மாவட்ட பொது அமைப்­பு­க­ளின் ஒன்­றி­யம், அர­ச­ த­லை­வ­ர் மைத்­திரி பால சிறி­சே­ன­ வுக்கு நேற்­று­முன்­தி­னம் கடி­தம் ஒன்­றை­யும் அனுப்­பி­வைத்­துள்­ளது.
அக்­க­டி­தத்­தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

1991ஆம் ஆண்டு திருக்­கே­தீஸ்­வ­ரம் பகு ­தியை இரா­ணு­வம் அப­க­ரித்­த­போது தமது வழி­பாட்­டுக்கு என அமைக்­கப்­பட்­டது தான் இந்த பௌத்­த­வி­காரை.
2009ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் இரா­ணு­வம் அங்­கி­ருந்து பிர­தான படை­ மு­காமை அகற்­றி­யது. இந்த பௌத்த விகா­ரை­யை­யும், பௌத்த மத­கு­ரு­வை­யும் பாது­காப்­ப­தற்கு சிறிய இரா­ணு­வ­மு­காம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இரா­ணு­வத்­தின் ஒத்­து­ழைப்­பு­டனே பௌத்­த­வி­காரை அமைப்பு நடை­பெ­று­கின்­றது.

வர­லாற்­றுப் புகழ்­மிக்க திருக்­கே­தீஸ்­வ ­ரச் சூழ­லில் இச் செயற்­பாடு ஏற்­பு­டை­யதா? 18.01.2012இல் பௌத்­த­மத அலு­ வல்­கள் திணைக்­க­ளம் இந்த விகா­ரை­யின் பதிவை இரத்­துச்­செய்­த­து­டன் கட்­டு­ மா­னப் பணி­க­ளை­யும் நிறுத்­தி­யது.

ஆனால் உங்­கள் நல்­லாட்­சி­யில் தான் மீண்­டும் பணி­கள் தொடங்­கப்­பட்­டன.
இது சட்­ட­வி­ரோத சன­நா­யக மீறல் அல்­லவா? இதுவா நல்­லாட்சி? தமிழ் மக்­க­ளின் பூர்­வீக வாழ்­வி­டங்­க­ளில் கலா­சார மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி, போலி­யான புனை­வுப் பெயர்­க­ளின் மூலம் பௌத்த மய­மாக்­கல் வேலைத்­திட்­டத்தை முன்­ன­கர்த்­து­கி­றீர்­களா?

எப்­படி, கதிர்­கா­மத்தை சிங்­கள முரு­கன் ஆக்­கி­னீர்­களோ அதே போல் காலப்­போக்­கில் திருக்­தீ­கேஸ்­வ­ரத்தை சிங்­களச் சிவ­னாக்­கும் பணி­யைத் தொடங்­கி­யி­ருக்­கி­றீர்­களா?

இது­தானா பௌத்த தர்­மம்? புத்­த­பெ­ரு­மா­னின் தர்ம சிந்­த­னைக்கு எதி­ராக செயற்­ப­டு­வது தான் இன்­றைய பௌத்த சிந்­த­னையா? பாவம் புத்­தர் உயி­ரோடு இருந்­தி­ருந்­தால் உங்­கள் எல்­லோ­ரை­யும் அழித்து விடு­வார். புத்­த­பெ­ரு­மா­னின் தர்ம சிந்­த­னை­கள் உல­க­நீ­திக்கு வழி­காட்­டி­யது.
ஆனால் இன்­றைய பௌத்­தம் இனச்­சுத்­தி­க­ரிப்பு செய்­கி­றது.

சட்­ட­வி­ரோ­த­மாக தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணி­யில் விகா­ரை­யைத் திறப்­ப­தற்கு நீங்­கள் வரு­வது தார்­மீக அடிப்­ப­டை­யில் நியா­யம் தானா?
தமிழ்­மக்­க­ளின் வாக்­கு­க­ளால் தெரி­வு­செய்­யப்­பட்ட அர­ச­த­லை­வ­ரான நீங்­கள் உங்­களைத் தெரிவு செய்த மக்­க­ளின் விருப்­புக்கு மாறாக செயற்­ப­டு­வது சரியா?
ஏன் உங்­கள் மனச் சாட்­சி­யி­டம் கேளுங்­கள், தமிழ் மக்­க­ளின் அறம் சார்ந்த போராட்­டத்தை தான் அடி­யோடு அழித்து விட்­டீர்­கள்.

இனம் சார்ந்த உணர்­வை­யும் நசுக்கி விடப்­போ­கி­றீர்­களா?. நீங்­கள் தமிழ்த் தலை­மை­களை ஏமாற்­ற­லாம், ஆனால் தமிழ் மக்­களை ஏமாற்­ற­மு­டி­யாது.
அவர்­கள் உங்­களை மன்­னிக்க மாட்­டார்­கள். நீங்­கள் உண்­மை­யில் அறம்­பே­சு­ப­வ­ராக இருந்­தால் சட்­ட­வி­ரோத விகா­ரைத் திறப்­பு­வி­ழா­வுக்கு வரு­வது ஏற்­பு­டை­ய­தல்ல .

உட­ன­டி­யாக பணி­களை நிறுத்­த­ வேண்­டும். எக்­கா­லத்­தி­லும் பௌத்­தர்­கள் வசிக்­காத இடத்­தில் எதற்கு விகாரை? திருக்­கே­தீஸ்­வ­ரப் பகு­தி­யில் தொல்­லி­யல் திணைக்­க­ளத்­தின் அனு­ம­தி­யின்றி ஒரு­சிறு குழி­யைக்­கூட அக­ழ­மு­டி­யாது–அவ்வாறிருக்க விகாரை கட்­டு­வ­தற்கு யார் அனு­மதி வழங்­கி­யது.

இது­தானா பௌத்த சன­நா­ய­கம். தமி­ழர் பிர­தே­சத்­தில் இரா­ணுவ உத­வி­யு­டன் தான்­தோன்­றித்­த­ன­மாக மேலா­திக்­கத்தை செயற்­ப­டுத்­திக்­கொண்டு உல­கத்தை ஏமாற்ற உதட்­ட­ளவு நல்­லி­ணக்­கம் பேசு­கி­றீர்­களே! எப்­படி நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டும்.

எமது நியா­ய­பூர்­வ­மான வேண்­டு­கையை புறக்­க­ணித்து குறித்த திறப்­பு­விழா நடை­பெற்­றால் கறுப்பு கொடி­யேந்தி முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­து­வோம் என்று – அக்­க­டி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
மன்­னார் மாவட்ட பொது அமைப்­பு­க­ளின் ஒன்­றியத் தலை­வர் வி.எஸ்.சிவ­க­ரன் இக்­க­டி­தத்தை அனுப்­பி­வைத்­துள்­ளார்.

http://newuthayan.com/story/32573.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.