Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உத்திகளைக் கையாண்டு உச்ச அதிகாரத்தைப் பெறவேண்டும்

Featured Replies

உத்திகளைக் கையாண்டு உச்ச அதிகாரத்தைப் பெறவேண்டும்

 
 
உத்திகளைக் கையாண்டு உச்ச அதிகாரத்தைப் பெறவேண்டும்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

இந்­தச் சந்­தர்ப்பத்­திலே எமது உத்­தி­க­ளைக் கையாண்டு பெறக் கூடிய உச்­சத்­தைப் பெற வேண்­டும். நாங்­கள் பெறக்­கூ­டிய உச்­சம் என்­பது எமது இலக்கு அல்ல. ஆனால் இப்­போது பெறக்­கூ­டிய உச்­சம் எதுவோ அதைப் பெற்­று­விட்­டால் அதற்குப் பிறகு ஏற்­ப­டு­கின்ற நல்­லி­ணக்­கத்­தின் மூலம் அதற்­குக் கூடு­த­லாக நாங்­கள் பெற முடி­யும். இவ்­வாறு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் செய­ல­ரும், கிழக்கு மாகாண விவ­சாய அமைச்­ச­ரு­மான கி.துரை­ரா­ச­சிங்­கம் தெரி­வித்­தார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் போர­தீ­வுப் பற்­றுப் பிர­தே­சக் கிளை­யின் ஏற்­பாட்­டில் இடம்­பெற்ற தியாகி திலீ­ப­னின் 30ஆவது ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்­வில் கலந்து உரை­யாற்­றும்போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

திலீ­ப­னின் கனவை
நன­வாக்க வேண்­டும்

நமது உற­வு­கள் சுதந்­தி­ர­மாக வாழ வேண்­டும் என்ற தியாகி திலீ­ப­னின் கன­வை நன­வாக்க வேண்­டிய கடப்­பாடு எமக்கு உண்டு. எந்­த­வி­த­மான வழி­முறை­களை நாங்­கள் அந்­தக் கடப்­பாட்டை நிறை­வேற்­றக் கையா­ளப் போகின்­றோம் என்­பது தான் எமக்கு முன்­னாள் உள்ள கேள்வி. தற்­போது இருக்­கும் சந்­தர்ப்­பம் நழுவ விடப்­பட்­டால் இதற்கு மேல் நாம் சிந்­திப்­ப­தற்கோ, செயற்­ப­டு­வ­தற்கோ எந்­த­வி­த­மான சந்­தர்ப்­ப­மும் நமக்கு இருக்­காது.

தமி­ழீ­ழத்­துக்­குள்
கிழக்கு வருமா ?

பேச்­சுக்­க­ளின் போதெல்­லாம் கிழக்கு எவ்­வாறு தமி­ழீ­ழத்துக்குள் வரும் என்ற சந்­தே­கம் இருந்­தது. ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, அமிர்­த­லிங்­கத்­தி­டம் தமி­ழீ­ழத்தை வடக்­கில் தரு­கின்­றோம் கிழக்கை மறந்து விடுங்­கள் என்று கூறி­ய­தாக அறி­யப்­ப­டு­கின்­றது. கிழக்கை நாம் நிரூ­பிக்க வேண்­டும். கிழக்கை நிரூ­பிப்­ப­தற்­காக அப்­போ­தி­ருந்த எமது தலை­வர்­க­ளான சிவ­சி­தம்­ப­ரம், அமிர்­த­லிங்­கம் போன்­ற­வர்­க­ளால் அடை­யா­ளம் காட்­டப்­பட்­ட­வர் தான் தற்­போ­துள்ள எமது தலை­வர் சம்­பந்­தன். அதன் பின்­னர் 1981ஆம் ஆண்டு நடை­பெற்ற மாவட்ட சபைத் தேர்­த­லில் வடக்கு -– கிழக்கு பகு­தி­க­ளில் தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி அனைத்து இடங்­க­ளை­யும் கைப்­பற்­றி­யது.

இந்த விட­யங்­க­ளை­யெல்­லாம் சொல்லி நிரூ­பித்­த­தன் பிறகுதான் வடக்கு -– கிழக்கு என்ற அடிப்­ப­டை­யி­லே­யான தீர்­வை­யும், இணைப்பு தொடர்­பில் கிழக்­கில் ஒரு மக்­கள் தீர்ப்பு அளிக்­கப்­பட்ட பின்­பு­தான் அது நிரந்­த­ர­மாக இணைக்­கப்­ப­டும் என்ற நிபந்­த­னை­யும் வைக்­கப்­பட்­டது. அந்த நேரத்­தில் நிபந்­த­னையை எந்­த­வி­தத்­தி­லும் நாங்­கள் நடை ­மு­றைப்­ப­டுத்தமாட்­டோம் என்று தெரி­விக்­கப்­பட்­ட­தாக எமது தலை­வர்­கள் குறிப்­பிட்­டி­ருக்­கின்­றார்­கள்.

1987ஆம் ஆண்டு வட-­–கி­ழக்கு இணைந்­த­தாகத் தேர்­தல் நடை­பெற்­றது. இந்­தி­யப் படை­கள் நின்று அதைச் செயற்­ப­டுத்­தின. மக்­கள் வாக்­குப் போட்­டார்­களோ போட­வில்­லையோ தெரி­ய­வில்லை வாக்­குப் பெட்­டி­கள் நிறைந்­தன.
அந்த வாக்­கெ­டுப்­பிலே அவர்­கள் நினைத்­த­ வர்­களை மாகா­ண­ச­பைக்கு அனுப்­பி­னார்­கள். இதே போன்­ற­தொரு வாக்­கெ­டுப்பு அந்த நேரத்­தில் வட­ – கி­ழக்கு இணைப்புத் தொடர்­பில் கிழக்­கி­லும் நடந்­தி­ருந்­தால் 2006ஆம் ஆண்டு வட­–கி­ழக்கு இணைப்­புக்கு எதி­ரான வழக்குக் குச் சென்­றி­ருக்க வேண்­டி­ய­தும் இல்லை. தற்­போது நாங்­கள் மீண்­டும் வட­–கி­ழக்கு இணைப்­புப் பற்றி பேச வேண்டி அவ­சி­ய­மும் இருந்­தி­ருக்க மாட்­டாது. இந்­தி­யாவை நாம் ஏன் பயன்­ப­டுத்­த­வில்லை என்ற கேள்­வி­யும் இருக்­கின்­றது.

விமர்­ச­னங்­கள் தேவை­யில்லை

நாங்­கள் மிக­வும் கவ­ன­மாக யோசிக்க வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றோம். முன்­னர் பல சந்­தர்ப்­பங்­கள் நமக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளி­லுமே நாங்­கள் ஆரம்­பத்­தில் பொறு­மை­யாக இருந்து செயற்­பட்டு வந்து பின்­னர் பொறுமை இழந்­த­வர்­க­ளாக முடி­வு­றும் சந்­தர்ப்­பத்­தில் மிக மிக வேக­மா­கச் செயற்­பட்டு இறு­தித் தரு­ணத்­தில் அந்­தச் சந்­தர்ப்­பத்தை நழுவ விட்­டி­ருக்­கின்­றோம்.

தமிழ் மக்­க­ளுக்குத் தங்­க­ளு­டைய கருத்­துக்­க­ளைச் சொல்ல வேண்­டிய எல்­லாத் தலை­வர்­க­ளும் தங்­கள் மன­திலே நிலை நிறுத்­தி­யி­ருக்க வேண்­டிய முக்­கிய விட­யம் என்­ன­வென்­றால் எமது பல­வீ­னங்­கள், எமக்கு ஏற்­பட்ட எதிர்ப்­பு­கள் தொடர்­பாக நாங்­கள் பேசா­மல் இருப்­பது கூட சில வேளை­க­ளில் சிறந்­த­தாக இருக்­கும். எமது இலக்கை அடை­வ­தில் நாங்­கள் என்­னென்ன உத்­தி­க­ளைக் கையாள வேண்­டும் என்­கின்ற விட­யத்­தில் நாங்­கள் தெளி­வாக இருக்க வேண்­டும். அடை­யும் வரை அடை­வோம் என்ற நம்­பிக்­கை­யு­டன் இருக்க வேண்­டுமே தவிர, வெறு­மனே விமர்­ச­னங் ­களை மாத்­தி­ரம் சொல்­லிக் கொண்டு இருக்­கக் கூடாது.

முரண்­பா­டு­க­ளுக்குள்
கடைந்­தெ­டுத்த இணக்­கப்­பாடு

எமது நாட்­டில் அர­ச­மைப்பை ஆக்­கு­ வ­தென்­பது மிகக் கடி­ன­மான காரி­யம். எமது தலை­வர்­கள் எத்­த­னையோ முரண்­பா­டு­கள் உள்ள தலை­வர்­க­ளு­டன் பேசித்­தான் இந்த இடைக்­கால அறிக்கை வந்­தி­ருக்­கின்­றது. இவ்­வாறு பல விளக்­கங்­கள் முரண்­பா­டு­க­ளுக்கு மத்­தி­யில் கடைந்­தெ­டுத்து வந்த ஒன்று தான் இந்த இடைக்­கால அறிக்கை. இதிலே மக்­கள் பிர­தி­நி­தி­க­ளுக்குச் சந்­தே­கம் வந்­தால் அத­னை எமது தலை­வர்­க­ளி­டம் கேட்டுத் தெளி­வ­டைந்து கொள்ள வேண்­டுமே தவிர இதில் சந்­தே­கம் இருக்­கின்­றது என வெளி­யில் சொல்­லிக்­கொண்டு மாத்­தி­ரம் இருக்­கக் கூடாது.

ஒற்­றை­யாட்சி என்ற சொல்லை அகற்றி ஒரு­மித்த நாடு என்ற பதத்­தினை அங்கு இடு­வ­தற்கு எமது தலை­வர்­கள் எத்­தனை வித­மான உத்­தி­க­ளைக் கையாண்­டி­ருப்­பார்­கள் என்­ப­தை­யெல்­லாம் நாம் சற்­றுக் கவ­னிக்க வேண்­டும். வந்­தி­ருக்­கின்ற இந்த இடைக்­கால அறிக் கை­யை நாங்­கள் மிகக் கவ­ன­மா­கச் செய்­தி­ருக்­கின்­றோம். இதனை அர­ச­மைப்­பாக ஆக்­கு­வ­தும் நாடா­ளு­மன்ற வாக்­கெ­டுப்புக்கும், மக்­கள் தீர்ப்­புக்­கும் கொண்டு வரு­வது பற்றி நாங்­கள் இன்­னும் மிகக் கவ­ன­மா­கச் சிந்­திக்க வேண்­டும்.
இவற்­றை­யெல்­லாம் சாதித்துத் தரு­ப­வர்­கள் யார். இந்­தப் பொறுப்பை அர­சி­டம் மட்­டும் நாங்­கள் வைத்து விட முடி­யாது. நாடா­ளு­மன்­றத்­திலே மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யைப் பெற வேண்­டு­மாக இருந்­தால் குறைந்­தது 150 வாக்­கு­க­ளை­யா­வது பெற­வேண்­டும். நம்­மி­டம் இருப்­பதோ ஆக 16 வாக்­கு­களே. மிகுதி வாக்­கு­களை அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் சேர்ந்து பெற வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்­கள். அவர்­க­ளும் அவ­ர­வர் தரப்­பில் எழுப்­பப்­ப­டும் கேள்­வி­க­ளுக்குப் பதில் சொல்ல வேண்­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்­றார்­கள். இந்­தச் சந்­தர்ப்­பத்­திலே எமது உத்­தி­க­ளைக் கையாண்டு பெறக் கூடிய உச்­சத்­தைப் பெறவேண்­டும். நாங்­கள் பெறக்­கூ­டிய உச்­சம் என்­பது எமது இலக்கு அல்ல. ஆனால் இப்­போது பெறக்­கூ­டிய உச்­சம் எதுவோ அதைப் பெற்­று­விட்­டால் அதற்குப் பிறகு ஏற்­ப­டு­கின்ற நல்­லி­ணக்­கத்­தின் மூலம் அதற்­குக் கூடு­த­லாக நாங்­கள் பெற முடி­யும்.

தலை­மை­யால்
மாத்­தி­ரம் முடி­யாது

இப்­போ­தி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்­தில் அவர்­கள் மூலம் இது வெற்றி பெற வேண்­டும் என்­கின்ற அடிப்­ப­டை­யிலே எவ்­வ­ளவு பவ்­வி­ய­மாக, நிதா­ன­மாக, கண்­ணி­ய­மாக நாம் நடந்து கொள்ளவேண்­டும். எமது தலை­வர் மாத்­தி­ரம் அவ்­வாறு நடந்து கொண்­டால் போதாது. பார­தம் என்­பது இன்­னும் முடி­ய­ வில்லை. இங்­கும் அது­தான் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. பார­தத்­தின் சூதாட்ட நிகழ்­வில் சகோ­த­ரர்­க­ளி­டம் எத்­த­னையோ விமர்­ச­னங்­கள் பெற்றுப் பொறு­மை­யோடு இருக்­கும் தரு­ம­னைப் போல் எமது தலைமை இருக்­கின்­றது. அது போல் எமது சகோ­த­ரர்­க­ளின் குமு­றல் எமக்­குத் தெரி­கின்­றது. ஆனால் பெரும்­பான்மை மக்­க­ளி­னு­டைய தலை­வர்­கள் இது நியா­யம் என்று உண­ரக் கூடிய வகை­யிலே எமது விட­யங்­களை உணர்த்­து­வ­தும், உலக நாடு­கள் தமிழ்த் தலை­வர் சரி­யான முறை­யிலே தான் தன்­னு­டைய நகர்­வு­களை மேற்­கொள்­கின்­றார், தன் மக்­களை மட்­டும் அவர் மன­திலே வைத்­த­வ­ராக இல்லை என்­கின்ற விட­யங்­க­ளை­யெல்­லாம் செயன்­மு­றை­யில் காட்ட வேண்­டும். அதைத்­தான் எமது தலைமை செய்­கின்­றது.

பகைமை தவிர்ப்பு

எமது பிர­தே­சத்­தில் ஏற்­ப­டு­கின்ற முஸ்­லிம், தமிழ்ப் பிரச்­சி­னை­களை எமது தலைமை சொல்­லி­யது போல் பகைமை இல்­லாத வகை­யிலே கையாள வேண்­டும். நாங்­கள் சொல்­லிக் கொண்­டி­ருக்­கின்ற வட­–கி­ழக்கு இணைப்­பாக இருந்­தா­லும் சரி, தீர்­வாக இருந்­தா­லும் சரி அது முஸ்­லிம் சகோ­த­ரர்­க­ளை­யும் ஒன்று சேர்த்து செய்ய வேண்­டிய ஒன்­றா­கத் தான் இருக்­கின்­றது. இந்த நேரங்­க­ளி­லெல்­லாம் பகைமை தவிர்ப்பு உத்­தி­க­ளை­யெல்­லாம் கையாண்டு எங்­களை நாங்­கள் அவர்­க­ளுக்கு விளங்க வைத்து அவர்­க­ளி­டம் இருக்­கின்ற தப்­பான அபிப்­பி­ரா­யங்­க­ளைக் களை­யும் வித­மா­கச் செயற்­பட வேண்­டும்.

இங்­கி­ருக்­கின்ற சிங்­க­ளத் தலை­வர்­க­ளும் முறை­யான ஒரு அர­சி­யற் தீர்வு வேண்­டும் என்று விரும்­பு ­கின்­றார்­கள், நாமும் அதைத்­தான் கேட்­கின்­றோம். ஆனால் சிலர் குழப்பி விடு­வார்­களோ என்ற அச்­சம் அனை­வர் மத்­தி­யி­லும் இருக்­கின்­றது. இவ்­வாறு தான் பல தீர்­வுத் திட்­டங்­கள் குழப்­பப்­பட்­டன. அவ்­வா­றான நிலமை வரக் கூடாது – – என்­றார்.

http://newuthayan.com/story/32885.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.