Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பூரண ஹர்த்தால்; தீவக மக்களும் பெண்கள் அமைப்புக்களும் அழைப்பு!

Featured Replies

யாழில் பூரண ஹர்த்தால்; தீவக மக்களும் பெண்கள் அமைப்புக்களும் அழைப்பு!

 

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தீவக மக்களும் யாழ்ப்பாணம் பெண்கள் அமைப்புகளும் இணைந்தே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்துள்ளனர். இது தொடர்பான சுவரொட்டிகள் சம்மந்தப்பட்டோரால் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் திருநெல்வேலிப் பகுதி அகிய இடங்களில் ஒட்டப்பட்டுக்கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

”குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளாவர், இவர்களும் தண்டிக்கப்படவேண்டும், வித்தியாவுக்கு முழுமையான நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளினை முன்வைத்தே குறித்த ஹர்த்தாலுக்கு அழப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதேவேளை மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட ஏழு பேருக்கு, நீதாய விளக்கத்தின் தீர்ப்பாயம் நேற்றைய தினம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

குற்றவாளிகளை தப்பிக்க விட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு முன்னாள் பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரும் சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வருகிறார்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையிலேயே பூரண ஹர்த்தாலுக்கான இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழில் பூரண ஹர்த்தால்; தீவக மக்களும் பெண்கள் அமைப்புக்களும் அழைப்பு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/hartal-in-jaffna

  • கருத்துக்கள உறவுகள்

குற்றவாளிகள் பாதுகாப்புத்துறையில் அதுவும் சிங்களவர்களாக இருந்து அவர்கள் என்ன குற்றம் செய்தாலும்... சிறீலங்க அரசு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும். சனாதிபதியே முன்னின்று வழங்குவார். தமிழர்கள் மேற்கொள்ளும் இந்தக் கர்த்தால், கடையடைப்பு, உண்ணாவிரதம் போன்றவை எல்லாம் அவர்களுக்குப் பழகிவிட்டது.

  • தொடங்கியவர்

நாளை ஹர்த்தாள் என யாழில் துண்டுப் பிரசுரங்கள்

 
 
நாளை ஹர்த்தாள் என யாழில் துண்டுப் பிரசுரங்கள்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவுக்கு முழுமையான நீதி கோரி நாளை முழுமையான ஹர்த்தாள் என யாழில் துண்டுப் பிரசுரங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/33095.html

  • தொடங்கியவர்

 

யாழ்ப்பாண நகரில் பெண்கள் அமைப்பினர் என பெயர் குறிப்பிட்டு, எதிர்வரும் சனிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

 

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் நாளை ஏற்படவுள்ள மாற்றம்

 

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவை கூட்டு பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றவாளிகளை காப்பாற்ற உதவியர்களை தண்டிக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில்  நாளை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்களினால் யாழ்ப்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்த  சுவரொட்டிகளில் அந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வன்புனர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  7 சந்தேக நபர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டு  மணர தண்டணை விதிக்கப்பட்டிருந்தது.

வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் தலைவமையில் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் திருகோணமலை   மேல்நீதிமன்ற நீதிபதி ஆகிய மூவர் அடங்கிய  நீதாய மன்றம் நேற்று முன்தினம் அந்த தீர்ப்பை வழங்கியிருந்தது.  

யாழ்ப்பாணத்தில்  நாளை ஏற்படவுள்ள மாற்றம்  

 இந்த தீர்ப்பை வித்தியாவிற்காக நீதிகோரி போராடியிருந்த பலரும் வரவேற்றிருந்த போதிலும், படுகொலைச் சம்வம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களை தப்பிக்க வைப்பதற்கு அரசியல்  தரப்பினர் மற்றும் அரச அதிகாரிகள்  முயற்சித்தாக  குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில்  வித்தியா படுகொலை வழங்கின் தீர்ப்பில் சந்தேக நபர்களை தப்பிக்க வைப்பதற்கு முயற்சித்தமை தொடர்பாக தகவல்களை  நீதிபதி மா.இளஞ்செழியன் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கொலை செய்த குற்றவாளிகளை காப்பாற்ற உதவியர்களை தண்டிக்குமாறு வலியுறுத்தி யாழ் நகர் முழுவது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நேற்று நல்லிரவு இனந் தெரியாத நபர்களினால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில்  நாளை ஏற்படவுள்ள மாற்றம்  

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் கொலைக் குற்றவாளிகளை தப்பிக்க உதவியவர்களுக்கும் குற்றவாளிகள், வித்தியாவிற்கு நீதிவேண்டும் போன்ற வாசகங்கள் அந்த சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தன.

வித்தியா கொலை வழங்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால்  அடையாளப்படுத்தப்பட்ட சுவிஸ்குமார் என அழைக்கப்படும்  சசிகுமாரின் புகைப்படத்துடன், சட்டத்தரணி வீ.ரி.தமிழ்மாறன் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புகைப்படங்களும் அதில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

வித்தியா வழக்கில் மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி  வி.மணிவண்ணனும் சந்தேக நபர்களை தப்பிக்க வைத்தவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என  கூறியிருந்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-change-in-Jaffna-tomorrow

எப்படி சுவிஸ் குமாரை அமைச்சருக்கு தெரியும் .  ?   அப்படியானால் ஏதோ தொட ர்பு  முன்பே இருந்துள்ளது

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.