Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலகிவரும் புறச்சூழல்

Featured Replies

விலகிவரும் புறச்சூழல்

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வைப்­பெறும் நேரமும் காலமும் நெருங்­கி­யுள்­ள­தாக கனவு காணப்­ப­டு­கி­றது. ஆனால் அதற்­கான அகச்­சூழ்­நி­லையும் புறச்­சூழ்­நி­லையும் நாளுக்கு நாள் விலத்­திக்­கொண்டு போவ­தைப்­போன்ற ஒரு பிர­மையே இப்­பொ­ழுது முன்­நிற்­கின்­றது.

ஒற்­றை­யாட்­சி­யென்ற நிலை­யி­லி­ருந்து அர­சாங்கம் மாறக்­கூ­டாது, என்று கூறும் கடும் போக்­கா­ளர்­களின் பிடி இறு­கிக்­கொண்­டி­ருக்­கி­றது. இன்­னு­மொரு புறம், வட– கிழக்கு இணைப்பு ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­ ஒன்று எனக் கூறும் இன்­னு­மொரு தரப்­பினர். இதற்கு நடுவில் இடைக்­கால அறிக்கை அண்­மையில் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­ இ­டைக்­கால அறிக்கை தொடர் பில் தமிழ் மக்கள் ஓர­ள­வுக்­கேனும் திருப்­திப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. வழிப்­ப­டுத்தல் குழு­வி­லுள்ள அனைத்துக் கட்­சி­களும் தங்­க­ளது தீர்க்­க­மான ஆலோ­ச­னை­களை முன்­வைத்­துள்­ளன. வைக்­கப்­ப­ட்ட ஆலோ­ச­னைகள் எவற்­றி­லுமே இணைப்பு, சமஷ்டி ஆகிய விவ­கா­ரங்­களை அவர்கள் எவ்­வி­டத்­தி­லுமே முன்­வைக்­க­வில்­லை­ என்ற உண்மை வெளிப்­ப­டை­யா­கவே தெரி­ய­வ­ரு­கி­றது.

 இவ்­வாறு இருக்­கின்ற நிலையில் ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­காரப் பகிர்வு என்ற விடயம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது. இதை தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தி வரு­வதும் தெரிந்­து­கொள்­ளப்­பட்ட விவ­கா­ர­மாகும்.

இடைக்­கால அறிக்கை தொடர்பில் பல்­வேறு அபிப்­பி­ரா­யங்கள் வெளி­வந்­துள்­ளன. இவ்­வ­றிக்கை தொடர்­பான திறந்த விவாதம் ஒக்­டோபர் மாத இறு­தியில் அர­சியல் அமைப்பு சபையில் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது.

இடைக்­கால அறிக்கை மற்றும் ஆறு உப குழுக்­களின் அறிக்­கைகள் பற்­றிய திறந்த விவா­தமும் நடத்­தப்­ப­டவுள்­ளது. இதே­வேளை நாட­ளா­விய ரீதியில் கிடைக்கப் பெற்ற உப குழுக்­களின் அறிக்­கைகள் மற்றும் இடைக்­கால அறிக்­கைகள் பற்­றிய பொது­வான கருத்­து­களும் கருத்தில் கொள்­ளப்­ப­ட­வி­ருக்­கி­ன்றன.

இவ்­வி­வ­காரம் ஒரு­பு­ற­மி­ருக்க புதிய அர­சியல் திருத்தம் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மாயின் சர்­வ­சன வாக்­கெ­டுப்­புக்கு விட வேண்­டு­மென அர­சாங்கம் கூறி வரு­கின்ற போதிலும் இவ்­வாக்­கெ­டுப்­புக்­கான எதிர்ப்பும் வளர்ந்­து­கொண்டு போவதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் இடைக்­கால அறிக்­கையில் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பையோ அபி­லாஷைக­ளையோ பூர்த்தி செய்­யக்­கூ­டிய எந்த பரி­கா­ரமும் இல்­லை­யென்ற கருத்து கூறப்­பட்டு வரும் நிலையில், மாறாக புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக மத்­திய அர­சாங்­கத்தைப் பயன்­ப­டுத்தி தமிழ் பிரி­வி­னை­வா­தி­களின் தேவை­களை நிறை­வேற்ற முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என்ற கருத்தை ஒரு சாரார் கூறிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

இடைக்­கால அறிக்­கை­யா­னது, தமிழ் மக்­க­ளுக்­கான சுய நிர்­ணய உரி­மையை முன்­மொ­ழி­ய­வில்லை. இணைந்த வட– கிழக்கில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அதி­காரம் பகி­ரப்­பட வேண்­டு­மென்ற தமிழ் மக்­களின் நீண்­ட­கால கோரிக்­கை­களை முற்­றாக நிரா­க­ரித்­துள்­ளது என்ற சீற்­றத்தை ஒரு சில அர­சியல் தலை­மைகள் வெளிக்­காட்­டி­யுள்­ளன.

சமஷ்டி என்ற வாதம் தொடர்பில் நீண்­ட­கா­ல­மாக தென்­ன­கப்­ப­குதி மக்­க­ளிடம் பூதா­க­ர­மான எதிர்ப்­பி­ர­சா­ரங்கள் மேற்­கொண்டு வந்­ததன் கார­ண­மா­கவே அதை அவர்கள் ஒரு கொடூ­ர­மான பிரி­வி­னைச்­சொல்­லாக நினைத்து வந்­துள்­ளனர் என்­பதை அண்­மையில் வட மாகாண முத­ல­மைச்சர், அஸ்­கி­ரிய பீடா­தி­ப­தி­களைச் சந்­தித்­த­வேளை தெளி­வாக புலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சமஷ்­டி­முறை நாட்டைப் பிள­வு­ப­டுத்தி பிரி­வினைவாதத்தை தோற்­று­விக்­காது என்ற கூற்றில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. ஒற்­றை­யாட்­சிக்கு ஆபத்து ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய எந்­த­வொரு அர­சியல் அதி­கார கோரிக்­கைக்கும் அங்­கீ­காரம் வழங்க முடி­யாது என அஸ்­கி­ரிய பீடத்தின் தலைமைச் செய­லாளர் தம்­மா­னந்த அநுநாயக்க தேரர் தெரி­வித்­தி­ருந்தார்.

சமஷ்­டி­யென்­பது சிங்­கள மக்­க­ளுக்­கான நச்­சு­வலை என்ற அபிப்­பி­ராயம் சகல சிங்­களத் தலை­வர்­க­ளி­னதும் ஏகோ­பித்த கருத்­தா­க­ இ­ருக்­கி­றது. தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை தமி­ழீழம் தவ­றிப்­போன நிலையில் தமக்­கு­ரிய அடுத்த தெரி­வாக சமஷ்டி முறை­யி­லான அர­சியல் அதி­காரப் பகிர்­வையே எதிர்­பார்க்­கின்­றார்கள் என்­பது தெளிவுபடுத்­தப்­பட்ட விடயம்.

இவ்­வா­றான ஒன்­றுக்குப்பின் ­முரணான ­போட்­டி­களில் அர­சாங்­க­மா­னது சிங்­கள மக்­களை சமா­தா­னப்­ப­டுத்­தக்­கூ­டிய அதே­வேளை, தமிழ் மக்­களை திருப்­திப்­ப­டுத்­தக்­கூ­டிய அர­சியல் தீர்­வொன்றை எவ்­வாறு கொண்டு வரு­வது என்­பதே இன்­றைய அர­சாங்­கத்­துக்கு உண்­டா­கி­யி­ருக்கும் சவா­லாகும்.

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது எல்­லா­வகைத் தேர்­தல்­க­ளிலும் ஒரு மக்கள் ஆணையைப் பெற்­றுள்­ளது. தமிழ் மக்கள் அந்த ஆணையை வாக்­கு­ப­லத்தால் மாத்­தி­ர­மின்றி, தங்­க­ளது தியா­கத்­தி­னாலும் மான­சீ­க­மாக வழங்­கி­யுள்­ளனர். எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தமிழ் மக்கள்

புதிய

அர­சி­ய­ல­மைப்­பா­னது எப்­படி

இருக்­கப்­போ­கி­றது? அதன் உள்­ள­டக்கம் என்ன என்­பது பற்றி அறி­வதில் தமிழ் மக்கள் ஆர்­வ­மாக இருந்­த­போ­திலும்

அவர்­களின் ஆர்­வத்­துக்கு சிறி­ய­ள­வி­லா­வது தீனி போடும் அம்­சங்­க­ளை­யோ­ அ­தி­காரப்

பகிர்­வு­க­ளையோ

உடை­ய­தாக இடைக்­கால அறிக்கை வெளி­வ­ர­

வில்­லை­யென்­பது

பெருத்த ஏமாற்­றமே.

 தங்­க­ளது நிலைப்­பாட்­டி­லி­ருந்து மாறா­த­வர்­க­ளா­கவே இருந்­துள்­ளனர். குறிப்­பாக வன்னிப் போருக்குப் பின் அவர்கள் முழு­மை­யாக நம்­பிய கட்­சி­யாக தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு காணப்­ப­டு­கி­றது. 2010 ஆம் ஆண்டு தேர்­தலின் போது மஹிந்த ஆட்­சியின் கொடு­மையை தாங்­கிக்­கொண்டே கூட்­ட­மைப்­புக்கு திறந்த ஆணையை வழங்­கி­யி­ருந்­தார்கள்.  

இந்த ஆணை­யா­னது ஏறத்­தாழ வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தை மீண்டும் உருப்­ப­டுத்­தி­ய­தா­கவும் திம்புப் பேச்­சு­வார்த்­தைக்கு மறு­வ­டிவம் கொடுப்­ப­து­வா­க­வு­மே­இருந்­துள்­ளது.

இப்­ப­டி­யான ஒரு எதிர்­பார்ப்பு நிலையில் மக்­களின் அபி­லா­ஷை­களை குறைந்­த­ள­வா­வது நிறை­வேற்­றாத ஒரு அர­சியல் தீர்­வைப்­பெற முடி­யாத நிலை­யொன்று உரு­வா­கு­மாயின் அந்த ஏமாற்­றத்தை தமிழ் மக்கள் தாங்க முடி­யாமல் போவது மாத்­தி­ர­மல்ல, கூட்­ட­மைப்பின் மீது உள்ள அசைக்க முடி­யாத நம்­பிக்­கை­யையும் இழந்­து­போய்­வி­டு­வார்கள் என்ற பயம் தமிழ்த் தரப்­பி­ன­ரிடம் பாரிய அளவில் உள்­ளது.

ஆட்­சி­யா­ளர்­களைப் பொறுத்­த­வரை சிங்­கள மக்கள் ஏற்றுக் கொள்­ளக்­கூ­டிய, தமிழ் மக்­களை திருப்­திப்­ப­டுத்­தக்­கூ­டிய அதி­காரப் பகிர்வை உரு­வாக்­கு­வ­தற்கு அர­சியல் சாச­ன­மென்ற ஆயு­தத்தை அவர்கள் கையில் தூக்­கி­யி­ருக்­கி­ற­போதும் அதற்கு ஏற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் சவால்கள் கன­தி­யா­க­வே­யுள்­ளது. என்­னதான் இருந்­தாலும் சிங்­கள மக்­களின் கருத்­துக்­களை மீறி ஒரு வலு­வு­டைய அர­சியல் தீர்வை கொண்டு வரு­வ­தற்­கு­ரிய திராணி தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளி­ட­மில்லை.

இது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளி­டமும் இருக்­க­வில்லை. பின்­னைய ஆட்­சி­யா­ள­ருக்கும் வரப்­போ­வ­தில்லை. மீறிச் செயற்­படும் வல்­ல­மை தற்­போ­தைய அர­சுக்­கு­மில்லை. இவ்­வா­றான சூழ்­நி­லையில் அர­சியல் தீர்­வொன்றை எவ்­வாறு நிறை­வேற்றி வைக்­கப்­போ­கி­றார்கள் என்ற சந்­தேகம் தமிழ் மக்­க­ளுக்கு வலுத்­துக்­கொண்டே போகி­றது.

துணைக்­கு­ழுக்கள் பரிந்­து­ரைத்த விட­யங்கள் தொடர்­பிலும் கட்­சி­க­ளுக்கு இடையே முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கி­றன. இத்­துணைக் குழுக்­களின் பரிந்­து­ரை­களை ஆதா­ர­மாகக் கொண்டே வழிப்­ப­டுத்­தல்­குழு அர­சியல் தீர்வை வரைய இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதன் முன்­ன­றிக்­கை­யா­கவே இடைக்­கால அறிக்கை வெளி­வந்­துள்­ளது. அதன் அடிப்­ப­டையில் அர­சியல் அமைப்­புக்­கான வரைபை வழி­ந­டத்தல் குழு தயா­ரிக்­கு­மென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்­பா­னது எப்­படி இருக்­கப்­போ­கி­றது? அதன் உள்­ள­டக்கம் என்ன என்­பது பற்றி அறி­வதில் தமிழ் மக்கள் ஆர்­வ­மாக இருந்­த­போ­திலும் அவர்­களின் ஆர்­வத்­துக்கு சிறி­ய­ள­வி­லா­வது தீனி போடும் அம்­சங்­க­ளை­யோ­ அ­தி­காரப் பகிர்­வு­க­ளையோ உடை­ய­தாக இடைக்­கால அறிக்கை வெளி­வ­ர­வில்­லை­யென்­பது பெருத்த ஏமாற்­றமே.

தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை அர­சியல் சீர்­தி­ருத்­தத்தில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் குறைக்­கப்­பட வேண்டும். தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர­வேண்டும். மதங்கள் முன்­னு­ரி­மைப்­ப­டுத்த வேண்­டு­மென்­பதில் அதிக அக்­கறை கொண்­ட­வர்­க­ளாக இருக்­கின்­றார்கள் என்ற கருத்து ஏற்­பு­டை­ய­தொன்­றல்ல.

தமிழ் மக்­க­ளுக்­கான முற்று முழு­தான எதிர்­பார்ப்பு என்­பது வட –கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் சுய நிர்­ண­யத்­துடன் கூடிய அதி­காரப் பகிர்வின் மூலம் நிரந்­த­ர­மான தீர்­வொன்­றையே எதிர்­பார்த்து வந்­துள்­ளனர். தந்தை செல்வா காலத்­தி­லி­ருந்து இந்த எதிர்­பார்ப்­பி­லி­ருந்தும் நிலைப்­பாட்­டி­லி­ருந்தும் அவர்கள் தங்­களை விலத்­திக்­கொள்­வ­தில்லை. இடையில் ஏற்­பட்ட ஆயுதப் போராட்ட காலத்­திலும் தமி­ழீ­ழ­மென்ற இலக்கை அடை­வ­தி­லுள்ள சிக்­க­லையும் சிர­மத்­தையும் உணர்ந்­தி­ருந்­தார்கள் என்­பதும் கசப்­பா­ன­ உண்­மையே.

இடைக்­கால அறிக்­கையின் மூலம் அறிந்து கொள்­ளக்­கூ­டிய இன்­னொ­ரு­உண்மை. வட – கிழக்கு இணைப்­பென்ற விட­ய­மாகும். வட கிழக்கு இணைக்­கப்­பட வேண்­டு­மென்­பது தமிழ் மக்­க­ளு­டைய நீண்­ட­கால கோரிக்­கை­யாகும். 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் பிர­காரம் வட – கிழக்கு இணைக்­கப்­பட்­டது. இவ்­வி­ணைப்பு தொடர்­பாக பார­தூ­ர­மான எதிர்ப்­புகள் தென்­ப­ட­வில்லை.

ஆனால் 2006 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்குப் பிரிக்­கப்­பட்­டதன் பின், அதிலும் 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­பட்­டதன் பின் வட – கிழக்கு இணைக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற வாதமும் எதிர்ப்பும் அதி­க­கூர்மை பெற்­று­வந்­துள்­ளது.

இவை­யெல்­லா­வற்­றுக்­கு­மு­ரிய பின்­ன­ணி­யாக இருந்­தவை அரசின் பிரித்­தாளும் தந்­தி­ர­மாகும். இவை மட்­டு­மின்றி யுத்த காலத்தில் இடம்­பெற்ற அசம்­பா­வி­த­மான சம்­ப­வங்­களும் இவ்­வா­தத்­துக்கு உர­மிட்­டி­ருக்­கலாம்.

தற்­போ­தைய சூழ்­நி­லையில் வட – கிழக்கு இணைக்­கப்­பட்டு விடக்­கூ­டாது என்ற எதிர்ப்பு மிக மோச­மான அளவில் கூர்மை பெற்று நிற்­கின்­றது. வட – கிழக்கு இணைக்­கப்­ப­டு­மாயின் தாம் சிறு­பான்மை ஆகி­வி­டு­வோ­மென்ற அச்சம் ஒரு­பு­றமும், அர­சியல் அதி­கா­ரங்கள் இன்­னொரு திசைக்கு சென்று விடு­மென்ற பய­முமே இந்த எதிர்ப்­புக்­கான கார­ண­மாக இருக்­கலாம்.

இவ்­வி­த­மான நிலை­யில்தான் அர­சியல் சாச­னத்தின் மூலம் வட –கிழக்கு இணைக்­கப்­பட்­டு­விடக் கூடாது என்­பதில் கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது. ஆனால் வட – கிழக்கு இணைப்பு சம்­பந்­த­மான சாத­க­மான குறி­காட்­டிகள் இடைக்­கால அறிக்­கையில் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

சில அர­சியல் தலை­வர்கள் பயத்தின் கார­ண­மாக வட– கிழக்கு இணைப்­புக்கு நாம் ஒருபோதும் அனு­ம­திக்கப் போவ­தில்­லை­யென குரல் கொடுத்து வரு­கி­றார்கள். உதா­ர­ண­மாக வட– கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம் மக்­களும் அவர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் துணை­போ­க­மாட்­டார்கள்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு வட – கிழக்கை இணைக்க தடம்புரண்டு செயற்­பட்டு வரு­கி­றது. இதன் கார­ண­மாக கிழக்கு இளை­ஞர்கள் கூட்­ட­மைப்பின் மீது விரக்தி கொண்­டுள்­ளனர் என முஸ்லிம் காங்­கி­ரஸின் சிரேஷ்ட உறுப்­பி­னரும் பிரதி அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.ஹரிஸ் சூளு­ரைத்­துள்ளார். அவர் இன்­னு­மொன்றை எச்­ச­ரித்­துள்ளார். அவ்­வா­றான நிலை­யேற்­ப­டு­மாயின் இளை­ஞர்­களை ஒன்­று­தி­ரட்டி போரா­டு­வோ­மென்றும் கூறி­யுள்ளார்.

இவ்­வா­றா­ன­தொரு எச்­ச­ரிக்­கையை,

கட்­சிகள் அனைத்தும் இடைக்­கால அறிக்கை தொடர்பில்

இணைப்­பு­களை

சேர்த்­தி­ருப்­ப­தாகத்

தெரி­ய­வ­ரு­கி­றது. உப குழுக்­க­ளிலும்

வழிப்­ப­டுத்தல்

குழு­விலும் மிக

முக்­கி­ய­மான அனைத்து கட்­சி­களும்

இடம்பெற்­றுள்­ளன.

இவர்­களே மேற்­படி

அறிக்­கை­களைத்

தயா­ரித்­துள்­ளனர். இவ்­வாறு இருக்கும் நிலையில், இறுதி நேரத்தில்

இணைப்­பு­க­ளையும்

வழங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இவ்­வா­றான நிலையில் வழிப்­ப­டுத்தல்

குழு­வி­னரால்

சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் இடைக்­கால

அறிக்­கை­யா­னது அர­சியல் வரைபை வரை­வ­தற்கு எவ்­வாறு அடிப்­ப­டை­யாக

இருக்­கப்­போ­கி­ற­தென்­பதும் புரி­யாத புதி­ரா­கவே

இருக்­கி­றது.

 முன்னாள் அமைச்­ச­ரான அதா­வுல்­லாவும் கூறி­யுள்ளார். இவ்­வா­றான கருத்­துக்கள் கூட்­ட­மைப்­புக்கு மாத்­தி­ர­மல்ல. தமிழ் மக்­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டி­ருக்கும் எச்­ச­ரிக்­கை­யா­கவும் கரு­தப்­ப­டலாம். எது எவ்­வாறு இருந்­த­போ­திலும் இவ்­வா­றான குறு­கிய கருத்­துகள் மூலம் வர­வி­ருக்கும் அர­சியல் சாச­னத்­துக்கு குந்­தகம் விளை­விக்கும் நிலை­யொன்றே உரு­வா­கி­வி­டு­மென்­பது கவலை தரு­கின்ற விட­ய­மாகும். 

கட்­சிகள் அனைத்தும் இடைக்­கால அறிக்கை தொடர்பில் இணைப்­பு­களை சேர்த்­தி­ருப்­ப­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது. உப குழுக்­க­ளிலும் வழிப்­ப­டுத்தல் குழு­விலும் மிக முக்­கி­ய­மான அனைத்து கட்­சி­களும் இடம்பெற்­றுள்­ளன. இவர்­களே மேற்­படி அறிக்­கை­களைத் தயா­ரித்­துள்­ளனர்.

இவ்­வாறு இருக்கும் நிலையில், இறுதி நேரத்தில் இணைப்­பு­க­ளையும் வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவ்­வா­றான நிலையில் வழிப்­ப­டுத்தல் குழு­வி­னரால் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்கும் இடைக்­கால அறிக்­கை­யா­னது அர­சியல் வரைபை வரை­வ­தற்கு எவ்­வாறு அடிப்­ப­டை­யாக இருக்­கப்­போ­கி­ற­தென்­பதும் புரி­யாத புதி­ரா­கவே இருக்­கி­றது.

புதிய அர­சியல் சாச­ன­மா­னது சிறு­பான்மைச் சமூ­கத்தின் நீண்­ட­கால அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணவும், நாட்டில் நிரந்­த­ர­மான சமா­தா­னமும், அமை­தியும் கொண்­டு­வ­ரவும் உரு­வாக்­கப்­ப­டு­கி­ற­தென்று கூறப்­பட்­ட­போதும் தற்­போ­தைய சூழ்­நிலை சவால்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கின்றபோது, அரசியல் சாசனமானது இனங்களுக்கும் சமூகங்க ளுக்குமிடையேயுள்ள விரிசலை இன் னும் தூண்டிவிடுமோ என்ற அச்சமே மேலோங்கி நிற்கிறது. காரணம் சமஷ்டி, இணைப்பு, மதம், சர்வசன வாக்கெடுப்பு என்ற விடயங்கள் இந்த விவகாரங்களைத் தூண்டுவதாகவே அமைந்து காணப்படுகின்றன.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-30#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.