Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா கணவர் நடராஜனுக்காக மூளை சாவு வாலிபரின் உடல் அபகரிப்பு

Featured Replies

சசிகலா கணவர் நடராஜனுக்காக
மூளை சாவு வாலிபரின் உடல் அபகரிப்பு
 
 
 

சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல், திருச்சியிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் வரவழைக்கபட்டு உள்ளது.

 

சசிகலா,கணவர்,நடராஜனுக்காக,மூளை சாவு,வாலிபரின்,உடல், அபகரிப்பு


சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி,பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகாலாவின் கணவர் நடராஜன், 74, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், சென்னை, குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.'நுரையீரல் பாதிப்பும் உள்ளதால், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தஞ்சையில் மூளைச்சாவு அடைந்த கார்த்திக் என்பவரது உடல், நேற்று நள்ளிரவு, 1:55 மணிக்கு, கோவை தனியார் மருத்துவ மனைக்கு சொந்தமான, 'ஏர் ஆம்புலன்ஸ்' விமானத்தில், திருச்சியிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
 

வாலிபர் யார்?


அவரது உடல், விமான நிலையத்தில் இருந்து, ஆம்புலன்சில் குளோபல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்காக, மருத்துவ மனை வளாகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மூளைச்சாவு அடைந்த கார்த்திக்கின் உடல், நடராஜனுக்காக அபகரிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே, கூத்தாடி வயல் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக், 19; இவர், ப்ளக்ஸ் பேனர் ஒட்டும் வேலை பார்த்து வந்தார். செப்., 30ல், பைக்கில் செல்லும் போது,கார் மோதி படுகாயம்

அடைந்தார். தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கார்த்திக் சேர்க்கப்பட்டார். அங்கு அவர், மூளை நரம்பு வெடித்து, மூளைச்சாவு நிலையை அடைந்து விட்டதாக தெரிகிறது.

டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9:40 மணிக்கு அவரது உடலை குடும்பத்தார், டாக்டர்களின் அறிவுரையை மீறி, மருத்துவமனையிலிருந்து எடுத்து சென்றுள்ளனர்.

பின், தனியார் ஆம்புலன்சில், திருச்சி விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்ட கார்த்திக்கின் உடல், அங்கிருந்து இரவு, 12:32 மணிக்கு, கோவை கங்கா மருத்துவமனை நிர்வாகத்துக்கு சொந்த மான, ஏர் ஆம்புலன்சில் சென்னை கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து, தஞ்சை மருத்துவமனைக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:
கார்த்திக் விஷயத்தில், ஆரம்பம் முதலே தமிழக அமைச்சர் ஒருவரும், பிரபல டாக்டர் ஒருவரும் அதிக அக்கறை காட்டினர். அவர்களின் துாண்டுதல் படி தான், கார்த்திக் இங்கிருந்து குடும்பத்தாரால் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்டார்.

ஏர் ஆம்புலன்சில் எடுத்து சென்று சிகிச்சை அளிக்கும் அளவுக்கு, கார்த்திக் குடும்பம் வசதியான குடும்பம் அல்ல. நடராஜனுக்கு உறுப்பு தானம் செய்வதற்காக, கார்த்திக்கை முழு உடலோடு, அபகரித்து சென்றுள்ளனர் என, தெரிகிறது.
 

முதல்முறை


பொதுவாக இதுபோன்ற உடல் உறுப்பு தானம் செய்ய, 'தமிழ்நாடு ஆர்கன் ரிஜிஸ்டரி
நெட்வொர்க்' என்பதில் பதிவு செய்து, சீனியாரிட்டி அடிப்படையில், காத்திருப்பவர்களுக்கு தான் உடல் உறுப்புகள் வழங்கப்படும்.ஆனால், இதில் எந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. அதேபோல், உறுப்பு தானத்துக்கு, எங்கிருந்தாலும், உறுப்புகள் மட்டுமே எடுத்துச் செல்லப்படும்.

ஆனால், முழுமனித உடலை, உறுப்பு மாற்றத்துக் காக எடுத்துச் செல்வது இதுவே முதல்முறை. இந்த செயல் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, தஞ்சை மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனை, டீன் ஜெயக்குமார் கூறியதாவது:

விபத்தில் சிக்கி, 'அட்மிட்' ஆனவர்கள், இறந்தால்

 

மட்டுமே உடல், 'போஸ்ட்மார்டம்' செய்யப் படும். அதற்கு முன், சிகிச்சை யில் திருப்தி இல்லை என்றால்,அவரை, குடும்பத்தினர் சிகிச்சைக்கு எங்கும் அழைத்துச் செல்ல உரிமை உள்ளது. கார்த்திக் விஷயம் குறித்து, எனக்கு எதுவும் இதுவரை தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து, எடுக்கப்படும் உறுப்புகள் மட்டுமே எடுத்து வரப்படும். இதற்கு, முறை யாக அரசின் உடல் உறுப்பு தான ஆணைய அனுமதி பெறப்படும். ஆனால், ஆணையத்திற்கு கூட தகவல் தராமல், மூளைச் சாவு அடைந்த வாலிபரின் உடல், சென்னைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
 

அரசு சொல்வது என்ன?


இது குறித்து, அரசின் உடல் உறுப்புகள் மாற்று திட்ட இயக்குனர், பாலாஜி கூறியதாவது:
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சைக்காக, நடராஜன், ஏப்ரலில் பதிவு செய்துஉள்ளார். சீனியாரிட்டி அடிப்படையில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்படும்.

மூளைச்சாவு அடைந்த ஒருவரின், உடல் உறுப்புகளை, நடராஜனுக்கு பொருத்துவது தொடர்பாக, அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறுகையில், ''நடராஜனின் ரத்த உறவினர்கள் இரண்டு பேர்,உடல் உறுப்புகள் தானம் தர முன் வந்தனர்.அவர்கள், உடல் உறுப்புகள் தானம் அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1867893

  • தொடங்கியவர்

சசிகலாவின் கணவர் நடராசனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை!

சசிகலாவின் கணவர் ம.நடராசனுக்கு இன்று அதிகாலை உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

natarajan
 

 

74 வயதான நடராசன், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், கடந்த ஒன்பது மாதங்களாக குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டும்வருகிறது. மருத்துவர்கள் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை அளிக்க முடிவுசெய்து, தமிழக அரசின் உறுப்புதான பதிவேட்டில் நடராசனின் பெயரைப் பதிவுசெய்திருந்தனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகளை நடராசனுக்குப் பொருத்துவதற்காக, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் தஞ்சாவூரிலிருந்து திருச்சிக்கு ஆம்புலன்ஸ்மூலம் கொண்டுவரப்பட்டது. நேற்று இரவு தனிவிமானம்மூலம் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் திருச்சியிலிருந்து சென்னைக்குக் கொண்டுவரப்பட்டது.

மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை நடராசனுக்குப் பொருத்துவதற்காக, மருத்துவர்கள் சோதனைசெய்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை நடராசனுக்கு உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நடைபெற்றதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடராசனின் உடல்நிலைகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வத் தகவல் வெளியிடவில்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/103985-sasikalas-husband-natarajan-undergone-organ-transplantation.html

  • தொடங்கியவர்

நடராசனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் சந்தேகம் எழுப்பும் தமிழிசை!

 

Natarajan-_tamilisai_12558.jpg

சசிகலாவின் கணவர் நடராசனுக்கு நடைபெற்ற உறுப்பு மாற்று சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

உடல்நலக்குறைவால் சசிகலாவின் கணவர் எம்.நடராசன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நடராசனுக்கு நேற்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, நடராசனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

இதனிடையே, நடராசனுக்கு நடைபெற்ற உறுப்பு மாற்று சிகிச்சையில் சந்தேகம் இருப்பதாக, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நடராசனுக்கு நடந்த உறுப்பு மாற்று சிகிச்சையில் பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறி உள்ளன. பல சந்தேகங்களைக் கிளப்பிய அறுவைசிகிச்சைகுறித்து விசாரணை நடத்த வேண்டும். தனியார் மருத்துவமனைகள் லாப நோக்கத்துடன் செயல்படுவதால், ஏழைகள் உறுப்பு மாற்று சிகிச்சை பெற இயலவில்லை. உறுப்பு மாற்று சிகிச்சை என்ற பெயரில் மிகப்பெரிய வியாபாரம் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/104098-tamilisai-raises-question-over-natarajan-organ-surgery.html

  • தொடங்கியவர்
நடராஜனுக்காக மனித உரிமை மீறல்
தானாக கையில் எடுக்குமா நீதிமன்றம்?
 
 
 

திருச்சி:தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறலாக, நடராஜன் உறுப்பு மாற்று ஆப்பரேஷனுக்காக, குற்றுயிராக கிடந்த இளைஞர் உடல், விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டதாக, கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

நடராஜனுக்காக,மனித உரிமை, மீறல்,தானாக,கையில்,எடுக்குமா நீதிமன்றம்?

இது குறித்து, உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என, மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பழுதடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு உடனடியாக, உறுப்பு மாற்று ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.தஞ்சை அரசு மருத்துவ மனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, அறந்தாங்கியைச் சேர்ந்த ஏழை கூலித் தொழிலாளியின் மகன் கார்த்திக், 19, என்ற இளைஞர், மேல் சிகிச்சை என்ற பெயரில், ஏர் ஆம்புலன்ஸ்மூலம் சென்னைக்கு அழைத்து

செல்லப்பட்டார். இதன் பின்புலத்தில் தமிழக அமைச்சர் மற்றும் சில டாக்டர்கள் இருந்துள்ளனர். சென்னைக்கு கொண்டு செல்லப்பட்ட கார்த்திக், நடராஜன் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில், மூளைச்சாவு அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. பின், கார்த்திக் உடலில் அகற்றப்பட்ட கல்லீரல், ஒரு சிறுநீரகம் நடராஜனுக்கு பொருத்தப்பட்டதாக, தனியார் மருத்துவமனை மறைமுகமாக அறிவித்தது.

இந்த செயல், திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம். தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறல் செயல். உடல் உறுப்பு தானத்தில் மோசடிகள் அரங்கேறவும், பணத்துக்காக உறவினர்களே, தங்களின் உறவுகளை உயிரோடு விற்க, சிறந்த முன்னுதாரணம் என்றே கூறலாம்.விபத்தில் சிக்கிய கார்த்திக்கை தனியார் மருத்துவமனையில் சேர்க்க முடியாத நிலையில் தான், அவரை அறந்தாங்கி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை களில் அடுத்தடுத்து சேர்த்துள்ளனர். தினமும் வேலைக்கு சென்றால் தான் சோறு என்பது தான் அவர்களின் குடும்ப சூழல்.

இருக்கும் குடிசை வீடும், புறம்போக்கு நிலத்தில் உள்ளது. இப்படிப்பட்ட குடும்ப பின்னணி கொண்டவர்களுக்கு, எப்படி சென்னைகுளோபல் மருத்துவமனை தெரிந்தது, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல வேண்டும் என்பது எப்படி தெரிந்தது, அதற்கு யார் ஏற்பாடு செய்தது, கோடி களில் புரளும் நடராஜன் போன்றவர்கள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனையில், கார்த்திக்கை அவரது குடும்பத்தார் எப்படி சிகிச்சைக்கு சேர்க்க முன் வந்தனர்.இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே, நடராஜனுக்கு ஆதரவாக, குற்றுயிரும்,

 

குலையுயிருமாக இருந்த கார்த்திக்கை, ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றது தெரியவரும்.

அதிகாரம், பணபலம் படைத்த நடராஜன் குடும்பத்தாரால், கார்த்திக் குடும்பத்தை சரிக்கட்டுவது பெரிய காரிய மல்ல.இது தவிர, உடல் உறுப்புகள் மாற்றியதில் மிகப்பெரிய சட்டவிதிமீறல்களும் நடந்துள்ளன.ஆகையால், இந்த விஷயத்தை, உடல் உறுப்புக்காக நடந்த படுகொலை என்ற கண்ணோட்டத்தில் பொதுமக்கள் பார்க்கின்றனர்.

இந்த விஷயத்தில், ஏதோ ஒரு காரணத்துக்காக, கார்த்திக் குடும்பத்தினர் மவுனமாகி விட்ட நிலையில், இந்த மனித உரிமை மீறலை தட்டிக் கேட்க நீதிமன்றத்துக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. ஆகவே, அவர்கள் இந்த பிரச்னையை தானாக முன்வந்து, வழக்காக எடுத்து, விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1869315

  • தொடங்கியவர்

கல்லீரல்... சர்ச்சையும் சிகிச்சையும்

 

சிக்கலில் நடராசன்... சிறைக்கு வெளியே சசிகலா...

 

சிகலாவின் கணவர் நடராசன், மர்மங்கள் சூழ்ந்த மாய மனிதர். அ.தி.மு.க என்ற கட்சி, அதன் தலைமையில் அமையும் ஆட்சி, போயஸ் கார்டனில் கோலோச்சிய சசிகலாவின் அதிகாரம் என அத்தனை பரபரப்புகளையும் விட்டு அவர் ஒதுங்கியிருப்பதுபோல் தோன்றும். ஆனால், அந்த இடங்களிலிருந்து கிளம்பும் அத்தனை சர்ச்சைகளும் கடைசியில் நடராசனிடமே போய் முடியும். 25 நாள்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக முடங்கிக்கிடக்கும் நடராசனைச் சுற்றி இப்போதும் அப்படிப்பட்ட கடுமையான சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஆட்சியும், கட்சியும் அந்தக் குடும்பத்திடமிருந்து பறிபோனது. அப்போதெல்லாம் பரோலில் வராத சசிகலா, இப்போது முதல்முறையாக பரோல் கேட்டு சிறைக்கு வெளியே வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பாகவே நடராசனுக்குக் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டுமென்பது உறுதியானது. இதையடுத்து மாற்று உறுப்புகளுக்காக பிப்ரவரி மாதம், தமிழக அரசின் உறுப்பு தான ஆணையத்தில் நடராசன் பதிவுசெய்து வைத்தார். இதற்கிடையில் உடல்நிலை மோசமடைய, சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச்  சேர்க்கப்பட்டார். ‘உடனடியாக கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை செய்தால்தான் அவரைக் காப்பாற்ற முடியும்’ என டாக்டர்கள் தெரிவித்தனர்.

p36d.jpg-

உறவுகளில் தேடிய சசி குடும்பம்

நடராசனின் உறவினர் சங்கர் என்பவரிடம் கல்லீரலில் ஒரு பகுதியும், கலாவதி என்பவரிடம் சிறுநீரகமும் பெறுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மாநில அளவிலான உடலுறுப்பு தான கமிட்டியில் அனுமதி வாங்கப்பட்டது. ஆனால், இவர்களின் உறுப்புகள், நடராசனுக்குப் பொருந்தாது என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில், சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மூலம் தமிழகம் முழுவதுமுள்ள மருத்துவமனைகளில் உடலுறுப்பு தானம் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

உடலுறுப்பு தானம் செய்வதற்கும் பெறுவதற்கும் பல விதிமுறைகள் உள்ளன. உயிருடன் இருப்பவர்களின் உறுப்புகளைத் தானம் பெறவும், மூளைச்சாவு அடைந்தவர்களிட மிருந்து பெறவும் தனித்தனி வழிமுறைகள் உள்ளன. மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து பெறப்படும் உறுப்புகள், தானம் கேட்டுப் பதிவுசெய்தவர்களின் உடல்நிலை மற்றும் பதிவு சீனியாரிட்டியைப் பொறுத்து அவர்களுக்குப் பொருத்தப்படும். தானம் பெறுபவர் இருக்கும் மருத்துவமனையில் யாரேனும் மூளைச்சாவு அடைந்தால், தானத்தில் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த விதிகளைப் புரிந்துகொண்டு தேடல் தொடர்ந்தது.

அச்சாரமிட்ட அரசு மருத்துவர்கள்

தஞ்சாவூரில் சசிகலாவின் அண்ணன் பெயரில் இயங்கும் வினோதகன் மருத்துவமனையில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் பகுதிநேரமாகப் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கும் நடராசனின் பிரச்னைகள் சொல்லப்பட்டன. அவர்கள் மூலம்தான், கார்த்திக் என்பவர் பற்றிய விவரங்கள் சசிகலா குடும்பத்துக்குத் தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கூத்தாடிவயலைச் சேர்ந்த நடராசன்-பார்வதி தம்பதியின் மகன் கார்த்திக். செப்டம்பர் 30-ம் தேதி அவர் டூ-வீலரில் போனபோது, எதிரில் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் இவர் மூளைச்சாவு அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. அவருடைய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு இப்போது நடராசனுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.

p36c.jpg

‘எல்லாம் மர்மம்!’ - புலம்பும் அக்கா

கூத்தாடிவயலில் கதவுகூட இல்லாத சிறிய கீற்றுவீடு. கார்த்திக்கின் படத்துக்கு மாலை போட்டிருக்க, கார்த்திக்கின் அக்கா பிரேமலதாவிடம் பேசினோம்.  

‘‘அறந்தாங்கியில் கார்த்திக்கின் நண்பர் ஒருவர் கடை வைத்துள்ளார். அங்கு போனபோதுதான் விபத்து நடந்ததாகத் தகவல் வந்தது. பதறிப்போய் நாங்கள் சம்பவ இடத்துக்குப் போனோம். என் தம்பி ரத்த வெள்ளத்தில கிடந்தான். உடனே, அறந்தாங்கி ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனோம். அங்கு பார்த்த டாக்டர்கள், ‘கழுத்து நரம்பு துண்டாகியிருக்கு. புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு போங்க’னு சொன்னாங்க. அங்கே போனோம். அவங்க, ‘அடி பலமா இருக்கு... உடனே தஞ்சாவூர் கொண்டு போங்க’னு சொல்லிட்டாங்க. நாங்களும் தம்பியத் தூக்கிட்டு தஞ்சாவூர் போனோம்.

அங்கே, ‘கார்த்திக் நல்லபடியாக இருக்கான்’னுதான் ஆரம்பத்துல டாக்டர்கள் சொன்னாங்க. அவங்க சொன்னத நம்பித்தான் நான், அம்மாவையும் அப்பாவையும் அங்க விட்டுட்டு ஊருக்குக் கிளம்பிவந்தேன். இங்க வந்துட்டாலும் அம்மாவுக்குப் போன் பண்ணி பேசிக்கிட்டுதான் இருந்தேன். நான் கேட்டப்ப எல்லாம், ‘தம்பிக்கு இப்போ பரவாயில்லை’ன்னுதான் எங்க அம்மா சொல்லுச்சு. நாங்களும் நம்பிக்கையாக இருந்தோம். திடீர்னு 3-ம் தேதி எங்க அம்மா போன் பண்ணி, ‘தம்பி பிழைக்கமாட்டான்னு சொல்றாங்க... தம்பி மேல மோதின கார் ஓனர், தம்பிய சென்னைக்கு அழைச்சிக்கிட்டுப் போனா பிழைக்க வைக்கலாம். செலவைப் பாத்துக்கிறேன்னு சொல்றார்’னு சொல்லுச்சு. அதுக்குப் பிறகு, எங்கம்மா என்கிட்ட பேசவே இல்ல. என் தம்பியை சென்னைக்குக் கொண்டு போனது... இப்போ தம்பி இறந்துபோயிட்டான்னு சொல்லுறது... எல்லாம் மர்மமாவே இருக்கு. என் தம்பி சாவுக்கு நீதி வேணும்’’ என்றபடி கதறினார்.

p36b.jpg

‘‘பணத்துக்குத் தம்பியை வித்துட்டீங்களா?’’

கார்த்திகேயனின் அத்தை செல்வி, ‘‘கார்த்திக்கை தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில நான்தான் கவனிச்சுட்டு இருந்தேன். ரெண்டு நாளுக்குப் பிறகு நானும் ஊருக்கு வந்துட்டேன். மொத ரெண்டு நாள் அந்தப் புள்ள நல்லாதான் இருந்துச்சு. அதுக்குப்பிறகு யார் யாரோ வந்து பேசுறாங்கன்னு சொன்னாங்க. அப்புறம் நான் விசாரிச்சப்போ, ‘பெட்ல ஆள் இல்லை’னு சொன்னாங்க. உடனே, கார்த்திக் அம்மாவுக்கு போன் பண்ணி கேட்டேன். கார்த்திக்கை சென்னைக்குக் கொண்டு போறதா சொன்னாங்க. அடுத்து அவங்ககிட்ட பேச முடியல. அவங்க செல்போனுக்கு போன் பண்ணினா, போனை வேறு யாரோ எடுத்து, பெயரைக் கேட்டுட்டு கட் பண்ணாங்க. கடைசியில ‘கார்த்திக் செத்துட்டான், உடல் உறுப்புகளை எடுத்துட்டாங்க’ன்னு சொல்றாங்க. எங்களுடைய வறுமையைப் பயன்படுத்தி, விலைபேசிட்டாங்க’’ என்றார் கோபமாக.

கார்த்திக்கின் உடலைக் கூத்தாடிவயலுக்குக் கொண்டுவந்தபோது, ‘‘பணத்துக்குத் தம்பியை வித்துட்டீங்களா?’’ என அம்மா பார்வதியிடம் கேட்டு பிரச்னை செய்துள்ளார் கார்த்திக்கின் அக்கா பிரேமலதா. இதே கேள்வியை அந்த ஊர் இளைஞர்களும் கேட்டுள்ளனர். கார்த்திக்கின் பெற்றோர், ‘‘அதெல்லாம் இல்லை’’ என்று சமாளிப்பதிலேயே குறியாக இருந்தனர்.

கார்த்திக்கின் பெற்றோரிடம் நாம் சில சந்தேகங்களைக் கேட்க முயற்சி செய்தோம். அவர்கள் பேச மறுத்து விட்டனர்.  

p36.jpg

‘‘எனக்கு வேற வேலை இருக்கு!’’

இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘சசிகலாவின் அண்ணன் விநோதகனின் மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஒரு டாக்டர்தான், மருத்துவக் கல்லூரியில் ஒரு துறைத் தலைவராக உள்ளார். அவர் மூலம்தான் கார்த்திக் குறித்த தகவல்கள் வெளியே போயுள்ளன. விதிகளையும் நடைமுறைகளையும்மீறி கார்த்திக்கை இங்கிருந்து சென்னைக்குக் கொண்டுசென்றுள்ளனர். எல்லாமே பேசிவைத்தபடி, உடனுக்குடன் நடந்துள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்’’ என்றனர் சில டாக்டர்கள்.

இந்தநிலையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயகுமாரிடம் பேசினோம். ‘‘கார்த்திக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ‘டீன்’ என்பவர் மருத்துவமனையை நிர்வாகம் செய்பவர் மட்டும்தான். மற்ற விவரங்கள் பற்றி, நீங்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். ரொம்ப முக்கியமான விஷயமா இருந்தா மட்டும்தான், எனக்கு நோட்டிஃபிகேஷன் தருவார்கள். அதுவும் அவங்க சொல்ற நாள், லீவு நாளா வேற இருக்கு. அதுனால எனக்கு அவங்க எந்த நோட்டிஃபிகேஷனும் கொடுக்கல. அப்படி ஒண்ணும் என் கவனத்துக்கு வரல. எனக்கு வேற வேலை இருக்கு’’ எனச் சலனமே இல்லாமல் சொன்னார்.

ஒரு நாடகம் படுவேகமாக நடந்து முடிந்திருக்கிறது.

- சி.ய.ஆனந்தகுமார், கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்


கூட்டுச்சதி நடந்துள்ளது! - ‘பாடம்’ நாராயணன்

ந்த உறுப்பு மாற்று சிகிச்சை குறித்து சர்ச்சை கிளப்பும் சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணனிடம் பேசினோம். ‘‘நான் நடராசன் விவகாரமாக இதைப் பார்க்கவில்லை. அந்த அரசியலுக்குள் போகவும் விரும்பவில்லை. மாறாக, பணத்துக்காக நடைபெற்ற ஒரு கூட்டுச்சதியாகவே இதைப் பார்க்கிறேன்.

p36a.jpg‘ஒருவர் எந்த மருத்துவமனையில் மூளைச்சாவு அடைகிறாரோ, அந்த மருத்துவமனை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புக்களைத் தானமாகப் பெற்றுக் கொள்ளலாம். அந்த மருத்துவமனையின் தேவைக்குப்போக மீதமுள்ள உறுப்புகளை மற்ற மருத்துவமனைகளுக்குத் தரலாம்’ என்று விதி உள்ளது. இதைப் பயன்படுத்தித்தான் குளோபல் மருத்துவமனையும், தஞ்சை அரசு மருத்துவமனையும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.
அக்டோபர் 3-ம் தேதி இரவு, குளோபல் மருத்துவமனையில் கார்த்திக் மூளைச்சாவு அடைந்தாகச் சொல்லப்படுகிறது. அவர் தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து இங்கு சிகிச்சைக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளார். அதுவும் தஞ்சை மருத்துவமனையின் ஆலோசனையைமீறிக் கொண்டுவரப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. கார்த்திக்கை அப்படி எளிதாக இடம்மாற்றிக் கொண்டு வரமுடியாது. ஏனென்றால், அவர் கார் விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்காகச் சேர்ந்தவர். அந்த விபத்து வழக்கை போலீஸ் விசாரித்துக்கொண்டிருக்கிறது. ஆக, அது ‘மெடிகோலீகல்’ வழக்கு. அப்படி இருக்கும்போது, ‘உறவினர்கள் கேட்டார்கள்... அதனால், நாங்கள் அனுப்பிவிட்டோம்’ என மருத்துவமனை எப்படிச் சொல்ல முடியும்? அதற்கு போலீஸ் அனுமதி வேண்டும்.

சரி, போலீஸ் அனுமதி கொடுத்துத்தான் கார்த்திக்கைக் கொண்டுவந்தார்கள் என்றால், அவருடன் எப்படி ஓர் அரசு மருத்துவர் வந்தார்? அதுவும் கோவையில் உள்ள கங்கா மருத்துவமனையின் ஏர் ஆம்புலன்ஸில் அரசாங்க டாக்டரை எந்த அடிப்படையில் யார் அனுப்பி வைத்தார்கள்? இதைக் கேட்டால், ‘எனக்கு ஒன்றும் தெரியாது’ என்கிறார் டீன். இப்படிப் பொறுப்பில்லாமல் பேசும் ‘டீன்’ மற்றும் டீனுக்குத் தெரியாமல் அந்த அரசாங்க டாக்டரை அனுப்பிவைத்த மற்றோர் அதிகார சக்தி இருவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒருவேளை டீனுக்குத் தெரிந்து இது நடந்திருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அந்த இளைஞரின் குடும்பம் மிக ஏழ்மையான குடும்பம். அவர்கள் எப்படி ஏர் ஆம்புலன்ஸை ‘புக்’ செய்து சென்னை வரை வந்தனர்? அவர்களுக்கு யார் பணம் கொடுத்தது? எதற்காக அந்தப் பணம் கொடுக்கப்பட்டது? இவற்றையெல்லாம் பார்க்கும்போது, விபத்தில் காயம்பட்ட இளைஞரை, உயிருடன் இருப்பதாகச் சொல்லி, குளோபல் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து, அங்கு அவரை மூளைச்சாவு அடைய வைக்க வேண்டும் என்று திட்டம் போட்டு நடத்திய சதி தெரிகிறது. அப்போதுதானே அந்த இளைஞரின் உறுப்புகளை மொத்தமாக அறுவடை செய்ய முடியும்! இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய விசாரணை நடத்தி, உண்மையைக் கண்டறிந்து அவர்களைத் தண்டிக்க வேண்டும்’’ என்கிறார் நாராயணன்.

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

எமனுக்கே எமன்

 

ஒரு மன்னர் வயது முதிர்வால் மர­ணிக்கும் தறு­வாயில் இருக்கும் போது அவர் இளைஞன் ஒரு­வனின் இள­மையை பெற்று மீண்டும் திட­காத்­தி­ர­மா­ன­வராக 100 ஆண்­டுகள் வாழ எத்­த­னித்­த­தாக கதை­களில் கேட்­டி­ருக்­கின்றோம். அந்த கதை தற்­போ­தைய கால கட்­டத்­துக்கு மிகவும் பொருத்­த­மா­னதே. இக்கால கட்­டத்தில் மர­ணத்தை வெல்லும் மார்­கண்­டே­யர்கள் யாரும் பிறக்­க­வில்லை. ஆனால் ஆண்­டுகள் 1000 கடந்து வாழ­வேண்டும் என்ற பேராசை எல்லோருக்கும் உள்­ளது. அதற்­காக எதையும் செய்யும் மனமும் பணமும் இருந்தால் சொல்­வ­தற்­கில்லை. தான் வாழ எத்­தனை தலை­களை வேண்­டு­மா­னாலும் உருள வைக்க சிலர் எத்­த­னிக்­கின்­றனர். மனித உரி­மைகள், நீதி, மானுடம் என எத்­தனை விட­யங்கள் பேசப்­பட்­டாலும் மனி­தத்தை கொல்­ப­வர்கள் தொடர்ந்து கொன்று கொண்டே இருக்­கின்­றனர். இன்­றைய உலகில் மனிதன் கன­விலும் நினைக்­காத விந்­தை­களை கூட தனது விஞ்­ஞான தொழில்நுட்ப வளர்ச்­சியால் கண்­முன்னே நடத்­தி­கொண்­டி­ருக்­கின்றான். என்றோ ஒருநாள் மர­ணத்­திடம் தோற்று போகும் அவன், அதனை வெல்ல பல முயற்­சிகளை மேற்­கொள்­வ­தோடு தன் ஆயுளை இரட்­டிப்­பாகும் முயற்­சி­யிலும் ஈடு­பட்­டுள்ளான். அதுவும் மருத்­துவம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி இன்று எல்­லை­யில்லா அளவு வளர்ந்து விட்­டது. கண் தொட்டு இதயம் வரை பல உறுப்­பு­களை மாற்­றி­வி­டு­கின்றான். நாம் இறந்த பின்பு மண்­ணுக்கு போகும் உறுப்­பு­களை மற்­ற­வர்­க­ளுக்கு வழங்கி அதன் மூலம் இன்­னொரு உயிரை வாழ­வைக்க வேண்டும் என்ற விழிப்­பு­ணர்வு அனு­தி­னமும் நடத்­தப்­பட்டு கொண்­டி­ருக்­கின்­றது. இது ஒரு ஆரோக்­கி­ய­மான விட­யமே. ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக தனக்கு இயற்­கை­யாக வரும் ஒரு உடல் உபா­தைக்கு நல­முடன் வாழும் ஒரு உயிரை அழித்து அதன் மூலம் தான் சுகதேகியாக வாழும் செயல் இன்று நடை­மு­றைக்கு வந்­து­விட்­டது. எந்த கொடிய மிரு­கமும் செய்­யாத இச்­செ­யலை மனிதன் திற­முடன் செய்­து­கொண்­டி­ருக்­கிறான்.

இதனை இயக்­குநர் கௌதம் வாசு­தேவின் இயக்­கத்தில் அஜித் நடிப்பில் வெளி­யா­கிய 'என்னை அறிந்தால்' திரைப்­ப­டத்தில் மிக தெளிவாக விளக்­கி­யி­ருந்தார். அது வெறும் கதை என்று பார்த்­த­வர்­க­ளுக்கு இன்று அது­போல தன்னை சுற்றி நடக்கும் சாத­ாரண சம்­பவங்கள் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தாக அமைந்து விடுகின்­றன. அந்­த­வ­கையில் தமி­ழ­கத்தில் கடந்த வாரம் சசி­க­லாவின் கணவர் நட­ரா­ஜனின் அறுவை சிகிச்­சையும் இது போன்ற ஒரு பெரும் சர்ச்­சையை, சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆம். கடந்த வாரம் சசி­க­லாவின் கணவர் நட­ரா­ஜ­னுக்கு செய்­யப்­பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பல்­வேறு சர்ச்­சை­களை எழுப்­பி­யுள்­ளது. சசி­க­லாவின் கண­வ­ரான நட­ராஜன் கடந்த சில நாட்­க­ளுக்கு முன், சென்­னையில் உள்ள தனியார் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார். தொடர்ந்து நட­ரா­ஜனின் உடல்நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக இரு முறை தனியார் மருத்­து­வ­மனை அறிக்கை வெளி­யிட்­டது.

கல்­லீரல் மற்றும் சிறு­நீ­ரக மாற்று அறுவை சிகிச்சை உடனடியாக செய்ய வேண்டும். இதற்காக தமி­ழக அரசின் உறுப்பு மாற்று ஆணை­யகத்தில் பதிவு செய்­தி­ருந்த போதிலும் அவ­ருக்கு உட­ன­டி­யாக மாற்று உறுப்பு கிடைக்­கப்­பெ­ற­வில்லை. குளோபல் மருத்­து­வ­மனை நிர்­வாகம் நட­ராஜனின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது என்று ௨அறிக்­கைகள் வெளி­யிட்ட நிலையில், "விரைவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்­ளது' என்று நம்­பிக்­கை­யுடன் சொன்னார் தின­கரன்.

 அவ­ரது உற­வி­னர்கள் இருவர் அவ­ருக்கு கல்­லீரல் மற்றும் சிறு­நீ­ர­கத்தை தான­மாக கொடுக்க உள்­ள­தாக செய்­திகள் பர­வின. ஆனால் , திடீ­ரென மூளைச் சாவு அடைந்த ஒரு­வரின் உடல் உறுப்­புகள் நட­ரா­ஜ­னுக்கு வெற்­றி­க­ர­மாக அறுவை சிகிச்சை மூலம் பொருத்­தப்­பட்­ட­தாக தகவல் வெளியா­னது. இது பல்­வேறு சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

புதுக்­கோட்டை மாவட்டம் அறந்­தாங்கி அருகே உள்ள கூத்­தா­டி­வ­யலை சேர்ந்த 19 வயது கூலி தொழி­லா­ளி­யான கார்த்திக் கடந்த மாதம் 30ஆம் திகதி விபத்தில் சிக்கி படு­கா­ய­ம­டைந்­துள்ளார். இதை­ய­டுத்து அறந்­தாங்கி அரசு மருத்­து­வ­ம­னையில் சேர்க்­கப்­பட்ட அவர் சுய­நி­னை­வின்றி பின்னர் புதுக்­கோட்டை மற்றும் தஞ்­சாவூர் மருத்­து­வ­ம­னை­க­ளிலும் சேர்க்­கப்­பட்டார்.

இத­னி­டையே மருத்­து­வர்­களின் அறி­வுரையை மீறி கார்த்­திக்கை அழைத்து சென்ற உற­வி­னர்கள் மேல்­சி­கிச்­சைக்­காக சென்னை தனியார் மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்ததாக நட­ரா­ஜ­னுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்­துவமனை நிர்­வாகம் தகவல் தெரி­வித்­துள்­ளது. மேலும் அங்கு இளைஞர் கார்த்திக் மூளை சாவு அடைந்­ததால் அவ­ரது உடல் உறுப்­புகள் தான­மாக பெறப்­பட்­ட­தாக விளக்கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. மருத்­து­வ­ம­னையின் இந்த முரண்­பட்ட தக­வல்கள் பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளன.

அதா­வது குடி­சையில் வாழும் குடும்பம், உழைத்தால் மட்­டுமே அடுத்த வேளை உணவு என்ற நிலையில் கூலி தொழி­லா­ளி­யான கார்த்­திக்கை சில இலட்­சங்கள் செல­வாகும் ஏர் அம்­பு­லன்ஸில் சென்னை கொண்டு வந்­தது யார் என்று கேள்வி எழுந்­துள்­ளது. பணம் செல­வ­ழிக்க முடி­யா­ததால் தான் கார்த்திக் அறந்­தாங்கி, புதுக்­கோட்டை என மாறி மாறி அரசு மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்டார். திடீ­ரென அவரை சென்­னைக்கு அழைத்து வர எங்­கி­ருந்து பணம் வந்­தது? அத்­தோடு அவ­ருக்கு சிகிச்சையளித்த மருத்­து­வர்கள் அவ­ரது உடல்­நி­லையை கருத்தில் கொண்டு சென்­னைக்கு அழைத்து செல்ல வேண்டாம் என தெரி­வித்­துள்­ளனர். ஆனால் மருத்­து­வர்களின் அறி­வு­ரையை மீறி கார்த்திக், ஹெலி அம்­புலன்ஸ் மூலம் திருச்­சியில் இருந்து சென்­னைக்கு அழைத்து செல்­லப்­ப­ட்டுள்ளார். அங்கு கார்த்திக் மூளை சா­வ­டைந்­த­தாக கூறப்­ப­ட­வில்லை. ஆனால் சென்னை குளோபல் மருத்து­வ­ம­னைக்கு பின்னி­ரவு 01:45 மணிக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட கார்த்­திக்கை மறுநாள் காலை 10:30- மணிக்கு சோதித்த நரம்­பியல் மருத்­துவர், கார்த்திக் மூளைச்­சாவு அடைந்­து­விட்­ட­தாக தெரி­வித்­துள்ளார். கார்த்திக் மூளைச்­சாவு அடைந்­ததால் அவ­ரது கல்­லீ­ர­லையும் சிறு­நீ­ர­கத்­தையும் நட­ரா­ஜ­னுக்கு மாற்றி அறுவை சிகிச்சை செய்­துள்­ளனர். மேலும் தஞ்­சா­வூரில் மூளைச்­சாவு அடைந்த இளைஞர் ஒரு­வரின் உடல் உறுப்­புகள் தான் நட­ரா­ஜ­னுக்கு பொருத்­தப்­ப­ட­வுள்­ள­தாக 2 நாட்­க­ளுக்கு முன்பே தக­வல்கள் வெளி­யா­கின. இது­போன்ற முன்­னுக்­குப்பின் முர­ணான தக­வல்­களால் உடல் உறுப்பு தானத்தில் பேரம் நடந்­தி­ருக்­கலாம் என சந்­தேகம் எழுந்­துள்­ளது. இத­னி­டையே தான­மாக பெறப்­பட்ட உட­லு­றுப்­பு­களை நட­ரா­ஜ­னுக்கு பொருத்த அனு­மதி வழங்­கி­யது ஜெய­ல­லிதா கைரேகை சர்ச்­சையில் சிக்­கிய மருத்­துவர் பாலாஜி என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­தோடு கார்த்­திக்கின் உறுப்­பு­களை நட­ரா­ஜ­னுக்கு சிகிச்சை அளித்த மருத்­து­வ­மனை அவ­ருக்­குத்தான் பொருத்­தப்­பட்­ட­தாக கூறாமல் 74 வயது நப­ருக்கு என மட்­டுமே குறிப்­பிட்­டி­ருக்­கி­றது. அதா­வது கல்­லீரல் மற்றும் சிறு­நீ­ரகம் செய­லி­ழப்பால் உயி­ருக்குப் போராடி வந்த நட­ரா­ஜ­னுக்கு மூளைச்­சாவு அடைந்த ஏழை இளைஞர் ஒரு­வரின் கல்­லீரல் மற்றும் சிறு­நீ­ர­கத்தைப் பொருத்தி அறுவை சிகிச்சை வெற்­றி­க­ர­மாக நடை­பெற்­ற­தாக குளோபல் மருத்­து­வ­மனை அறிக்கை வெளி­யிட்­டது.

 ஆயினும் குளோபல் மருத்­து­வ­மனை வெளி­யிட்ட அறிக்­கையின் மூலம் எழும் கேள்­விகள்; ஏழை கூலித்­தொ­ழி­லா­ளி­யான கார்த்­திக்கின் குடும்­பத்­தினர், குளோபல் மருத்­து­வ­ம­னையில் வைத்து கார்த்­திக்­கிற்கு மேல்­ சி­கிச்சை செய்யத் துணிந்­தது எப்­படி? உயிரை காப்­பாற்ற வேண்டும் என்ற வேட்­கையில் தனியார் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து சென்­றி­ருக்­கலாம். ஆனால் கல்­லீ­ரலும் சிறு­நீ­ர­கமும் எப்­போது கிடைக்கும் என ஏங்கிக் கொண்­டி­ருக்கும் நட­ராஜன் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள அதே குளோபல் மருத்­து­வ­ம­னைக்கு சென்­றது எப்­படி?

அது எதேச்­சை­யாக நடந்­ததா? அல்­லது கார்த்திக் திட்­ட­மிட்டு குளோபல் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து செல்­லப்­பட்­டாரா?கார்த்திக் உண்­மை­யா­கவே மூளைச்­சாவு அடைந்­தாரா? அல்­லது மூளைச்­சாவு அடைய வைக்­கப்­பட்­டாரா? கார்த்­திக்கின் பெற்றோர் மருத்­து­வர்­களின் பேச்சை மீறி இர­வோடிர­வாக அவரை அழைத்து சென்­றுள்­ளனர். எனவே மகன் இனி பிழைக்க மாட்டார். ஆனால் மண்­ணுக்கு போகும் அவ­ர்களுக்கு உறுப்­பு­களை மற்­ற­வர்­க­ளுக்கு வழங்­கு­வதன் மூலம் பல இலட்­சங்­களை பெறலாம் என அவ­ருக்கு மூளைச்­ச­லவை செய்­யப்­பட்­டி­ருக்கலாம். இறக்க போகி­ற­வரை கட்­டி­லுக்கு பாரமாக வைத்­தி­ருப்­பதை விட அவன் இறந்தும் தம்மை வாழ வைக்க போகின்றான் என்ற மன திருப்திக் கூட பெற்­றோ­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கலாம். ஆனால் உறுப்பு மாற்­றுக்கு நாங்கள் பணம் பெற­வில்லை என அவ­ரது அம்மா கூறி­யுள்ளார். ஆயினும் விதி­களை மீறி நடத்­தப்­பட்ட அறுவை சிகிச்சை என இது தொடர்பில் பல்­வேறு சர்ச்­சைகள் ஏற்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் வெளியான தகவல் ஒன்று இது திட்­ட­மிட்ட படு­கொ­லையா என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதா­வது நட­ரா­ஜ­னுக்கு உறுப்பு தேவை என்று அனைத்து மருத்­து­வ­ம­னை­க­ளுக்கும் அவ­ரது மன்னார்குடி உள­வா­ளி­க­ளினால் அறி­விக்­கப்­பட்ட நிலையில் அவ­ருக்கு ஒத்த பொருந்த கூடிய உறுப்­புகள் உள்ள ஒருவர் கிடைக்­கப்­பெற்­ற­தும் குறித்த நப­ரை­திட்­ட­மிட்டு கடத்தி தமக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னரா என்ற கேள்வி எழு­கின்­றது.

அதா­வது கார்த்திக் கடந்த செப்ெ­டம்பர் 30ஆம் திகதி மதியம் பைக்கில் சென்ற போது அறந்­தாங்­கியில் இருந்து கீர­மங்­கலம் நோக்கிச் சென்ற காரின் வேகம் கண்டு தடு­மாறி, மோதி­யதில் 10 அடி உய­ரத்­திற்கு மேலே சென்று கீழே விழுந்­ததில் இரத்த சக­தி­யானார். அரு­கி­லி­ருந்த மருத்­து­வ­ம­னையில் முத­லு­த­விக்குப் பின் புதுக்­கோட்டை மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு சென்றும் பய­னில்­லா­ததால், தஞ்சை மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைத்­துள்­ளனர்.

மருத்­து­வ­ம­னையில் கார்த்திக் அனு­ம­திக்­கப்­பட்ட அன்று இரவு 7 மணிக்கு வந்த ஒருவர் தன்னை வழக்­க­றிஞர் என்று அறி­முகம் செய்து கொண்டு கார்த்திக்கின் உற­வி­னர்கள் கூடவே மருத்­து­வ­ம­னைக்குள் சென்­றுள்ளார். "தலையில் பலத்த காயம் இருக்கு. உடனே ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்­கணும்' என்று மருத்­து­வர்கள் சொல்ல அதற்­கான ஏற்­பா­டுகள் நடந்­தன. ஊழி­யர்­க­ளிடம் ரூ. 2 ஆயி­ரத்தை வழக்­க­றிஞர் கொடுத்­து­விட்டு, கார்த்­திக்கின் உற­வி­னர்­க­ளி­டமும் பணத்தை நீட்ட அவர்கள் மறுத்­து­விட்­டனர்.

வழக்­க­றிஞர் என்று சொல்­லிக்­கொண்­ட­வரோ, "உங்­க­ளுக்கு மண­மேல்­குடி கார்த்­தி­கேயன் அண்­ணனை தெரி­யும்ல.… அவ­ருக்கு வேண்­டிய நான்தான் இந்த விபத்து வழக்கை நடத்­தப்­போறேன்' என்று சொல்லிக் கொண்டு, சில வெளி மருத்­து­வர்­க­ளையும் அழைத்து வந்து காட்­டியுள்ளார். அவர்களும் "பைய­னுக்கு நினைவு திரும்பி கண் விழித்த பிற­குதான் ஆப­ரேசன் செய்ய முடியும். அது­வரை இருக்­கட்டும்' என்று சொல்லிச் சென்­றுள்ளனர்.

இளைஞர் கார்த்திக் கண் விழிக்­காத நிலையில், 2-ஆம் திகதி அதி­காலை கார்த்­திக்கின் அக்கா புவ­னா­விடம் "உங்க வீட்டில் உள்­ள­வர்­களின் ஆதார் அட்­டை­களை கொண்டு வாங்க' எனக் கேட்டு வாங்­கிய குறித்த வழக்­க­றிஞர் . அதன்பின், இரவு 8 மணிக்கு திடீ­ரென ஒரு­வரை அழைத்­து­வந்து பரி­சோ­த­னைக்­கென கார்த்­திக்­கி­ட­மி­ருந்து இரத்தம் எடுத்­துள்ளார். இரவு 10 மணிக்குப் பிறகு வந்த வழக்­க­றிஞர் கூட இருந்த நண்­பர்­க­ளிடம் "இந்த விபத்­துக்கு ரூ.8 இலட்சம் வரை இழப்­பீடு கிடைக்கும். அதை நான் பார்த்துக் கொள்­கிறேன். இப்­பவே சென்னை அப்­பலோ கொண்டு போய் சிகிச்சை எடுத்து பிழைக்க வைக்­கலாம். பணம் நீங்க தர வேண்டாம். இன்­சூரன்ஸ் வந்­ததும் தரலாம்' என்று சொல்ல. "அனை­வரும் சரி போகலாம்' என்று சொல்­லி­யுள்­ளனர். இரவு 11 மணிக்கு சில கார்கள் வர "கார்த்­திக்கின் அம்மா, அப்பா, அக்கா எல்­ேலாரும் அம்­பு­லன்ஸ்ல வரட்டும்' என்று சொன்ன வழக்­க­றிஞர் கார்த்­திக்கின் நண்­பர்­களை காரில் ஏற்றி சென்­னைக்கு அனுப்­பி­யுள்ளார்.

பின் அம்­பு­லன்ஸை திருச்சி விமான நிலை­யத்­திற்கு கொண்டு செல்­லும்­படி உத்­த­ர­விட, அங்­கி­ருந்து சென்­னைக்கு ஏர் அம்­புலன்ஸ் மூலம் கார்த்­திக்கைக் கொண்டு வந்­துள்­ளனர். ஆனால், அப்­பலோ­வுக்குப் பதில் குளோபல் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றுள்ளனர். காரில் வந்­த­வர்­க­ளையும் அங்­கேயே அழைத்துச் சென்­றுள்­ளனர். அவ­சர சிகிச்சைப் பிரிவில் கார்த்திக் சேர்க்­கப்­பட்ட நிலையில், அவ­ரது அம்மா, அப்பா, அண்ணன், அக்கா ஆகி­யோரை மட்டும் தனி­யாக ஒரு அறையில் தங்க வைத்­துள்ளனர். வழக்­க­றிஞர் கூடவே வேறு அறையில் கார்த்­திக்கின் நண்­பர்கள் தங்க வைக்­கப்­பட்­டனர். செல்போன் பேச்­சு­க­ளுக்குத் தடை போடப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த நிலை­யில்தான், நட­ரா­ஜ­னுக்கு வெற்­றி­க­ர­மாக உறுப்பு மாற்று சிகிச்சை நடந்­த­தாக தக­வல்கள் வெளி­யாகிக் கொண்­டி­ருந்­தன.

சென்னை சென்ற கார்த்திக்கின் நண்­பர்­களில் சிலர் "அப்­பல்­லோ­வுல வச்சு வைத்­தியம் செய்­யலாம், செலவை இன்­சூ­ரன்ஸ்ல இருந்து கட்­ட­லாம்னு வழக்­க­றி­ஞ­ர் ­சொன்னார். ஆனால் குளோ­ப­லுக்கு கூட்டி வந்­துட்­டாங்க. அவங்க அம்மா, அப்­பாவை உள்ளே கூட்­டிப்­போ­ன­தோட சரி வெளிய வரல. அதனால் உள்ள வச்சே அவங்­க­ளோட சம்­ம­தத்தை வாங்­கி­யி­ருக்­கலாம்'' என்­கின்­றனர்.

இந்த முயற்­சி­களை எடுத்­தது யார்? என்ற கேள்­விக்கு அறந்­தாங்கி வட்­டா­ரத்தில் இருந்து வந்த பதில் என்று ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ள­மை­யா­னது... ""மன்­னார்­கு­டிக்கு ரொம்­பவே வேண்­டப்­பட்­டவர் மண­மேல்­குடி கார்த்­தி­கேயன். தற்­போ­தைய தின­கரன் அணி மாவட்ட செயலாளர். இவர் கலை­ஞரை எதிர்த்து திரு­வா­ரூரில் 2011-இல் போட்­டி­யிட்ட குட­வாசல் எம்.ராஜேந்­தி­ர­னோட மரு­மகன். அறந்­தாங்கி அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் ரெத்­தி­ன­ச­பா­ப­திக்கு தம்பி. அவர்தான் ஏற்­பா­டுகள் செய்­தி­ருக்­கிறார்.

மூளைச்­சாவு அடைந்­த­வரின் உட­லு­றுப்­பு­களை பிற­ருக்குப் பொருத்­து­வது என்றால் அந்த உறுப்­பு­களை மட்­டும்தான் எடுத்­துக்­கொண்டு போவார்கள். ஆனால் கார்த்­திக்கை மட்­டும்தான் ஆளையே கொண்­டுபோய் வைத்து உறுப்­பு­களை எடுத்­துள்­ளனர். இதற்கு அரசு அனு­ம­தியும் வேண்டும் என்­ப­தால்தான் 3ஆம் திகதி காலை தனது அண்ணன் ரெத்­தி­ன­ச­பா­பதி மற்றும் மாவட்ட ஆட்­சியர் கணேஸை நேரில் பார்த்து தகவல் சொல்­லி­யி­ருக்­கிறார் கார்த்­தி­கேயன்'' என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த நிலை­யில்தான் 3-ஆம் திகதி இரவு 10 மணிக்குப் பிறகு கார்த்­திக்­குக்கு அறுவை சிகிச்சை செய்து கல்­லீரல், சிறு­நீ­ரகம் மற்றும் செயல்­பாட்டில் உள்ள உறுப்­புகள் அகற்­றப்­பட்ட நிலையில், அவரது மரணம் அறி­விக்­கப்­பட்­டது. மிகக் கச்­சி­த­மாக காய் நகர்த்­திய மன்­னார்­குடி தரப்பு, கார்த்திக் குடும்­பத்­திற்கு மொத்­த­மாக பத்­து­ லட்ச ரூபா தரவும் முன்­வந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஆயினும் இது உடல் உறுப்­புக்­காக நடந்த படு­கொலை. உயர் நீதி­மன்றம் தானாக முன்­வந்து விசா­ரிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்­வ­லர்கள் கோரிக்கை விடுத்­துள்­ளனர். உடல் உறுப்பு தானத்தில் மோச­டிகள் அரங்­கே­றவும், பணத்­துக்­காக உற­வி­னர்­களே, தங்­களின் உற­வு­களை உயி­ரோடு விற்க, சிறந்த முன்­னு­தா­ரணம் என்றே கூறலாம். இந்த மனித உரிமை மீறலை தட்டிக் கேட்க நீதிமன்றத்துக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. ஆகவே, இந்த பிரச்சினையை தானாக முன்வந்து, வழக்காக எடுத்து, விசாரணை நடத்த வேண்டும்.என்று தெரிவித்துள்ளனர்.

ஆயினும் இது தொடர்பில் என்ன விசாரணை நடத்தினாலும் பரவாயில்லை என்று தினகரன் தரப்பு கூறிவிட்டனர். சிலவேளைகளில் எடப்பாடி, பன்னீர் தரப்பு இவ்விடயங்களை பெரிது படுத்தலாம். ஆனால் அதற்கும் அவசியம் இருக்காது என்றே தோன்றுகின்றது. ஏனெனில் சசிகலா பரோலில் வந்த போது கூட அவரை அமைச்சர்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

எடப்பாடி, பன்னீர் தரப்பு சசிகலாவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. சசிகலாவும் அமைதியாக வந்து அமைதியாக சிறைக்கு சென்று விட்டார். இனி சசி தரப்பால் அ.தி.மு.க. ஆட்சிக்கு பெரிய பாதிப்பு வர வாய்ப்பில்லை. ஏனெனில் தினகரன் ஆட்சியை மாற்றுவோம் வீட்டுக்கு அனுப்புவோம் என்று ஏதேதோ கூறிவிட்டார் எதுவும் நடக்கவில்லை. இவ் ஆட்சிக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளித்து வருகின்றமையால் அத்தனை எளிதாக ஆட்சியை கலைக்க முடியாது.

 ஒருவேளை யாராவது இந்த நடராஜனின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் கார்த்திக் மரணம் தொடர்பில் வழக்கு தொடர்ந்தால் கூட உண்மைகளை கண்டறிவது சாத்தியமற்றதே. ஏனெனில் இங்கு எமனுக்கே எமனாக சில அதிகார வர்க்கங்கள் மாறிவிட்டன.

 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தன் கண் அசைவிலேயே ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டு அடிபணியவைக்குமளவு அத்தனை கம்பீரமாக வலம்வந்தவர். ஆனால் 75 நாட்கள் அவர் என்ன ஆனார் என்று யாருக்கும் தெரியாது. வெளியுலகுக்கு இன்னும் தெரியவில்லை. இஸட் பிரிவு பாதுகாப்பில் இருந்த அவரது மரணமே மர்ம முடிச்சாக உள்ள போது சாதாரண கூலி தொழிலாளியின் மரணத்துக்கு எங்கிருந்து நீதி தேடுவது? மர்மத்தை விளக்குவது? நிச்சயம் இதுவும் கடைசிவரை மர்மமாகவே இன்னும் சில காலங்களில் மறைந்து போகக்கூடும்.

– குமார் சுகுணா –

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-14#page-7

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DNAQCnbUIAAobpd.jpg

சசிகலா புருசன் நடராசன். 

  • தொடங்கியவர்

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நடராஜன் புகைப்படம்!

சசிகலா கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னை சோளிங்கநல்லூரில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவமனையில் இருக்கும் தனது கணவரை காண, சிறையில் இருக்கும் சசிகலா பரோலில் வெளியே வந்தார். 

nat_04018.jpg

 
 

ஐந்து நாள் பரோலில் வந்த சசிகலா, தினமும் நடராஜனை மருத்துவமனை வந்து பார்த்துச் சென்றார். தற்போது நடராஜன் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகிறார். தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையதளங்களில் பரவி வருகிறது. அதில் அவர் மருத்துவமனை உடையில்  இருப்பது போன்றும், அவருடன் மருத்துவர்கள் இருப்பது போன்றும் உள்ளது. எனினும் இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/105956-sasikalas-husband-natarajan-treatment-photo-in-net.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.