Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பிகள்

Featured Replies

தீபாவளி ஸ்பெஷல் ரெசிப்பிகள்

 

 

திரசம், முறுக்கு, தட்டை, லட்டு எனத் தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பட்சணங்கள் இருக்கட்டும். ரபடி, ஷாகி துக்கடா, க்ரானோலா பார், சாபுதானா சிவ்டா... இப்படி புதுமையான சில இனிப்புகளை நாமே செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தால், நமக்குக் கிடைக்கும் பாராட்டே ஸ்பெஷல்தான். 
``சாப்பிடச் சாப்பிட சுவையைத் தூண்டும் இந்த ஆரோக்கிய ரெசிப்பிகளைச் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவார்கள்’’ என்கிற  சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார், அழகிய புகைப்படங்களுடன்கூடிய செய்முறை குறிப்புகளையும் வழங்குகிறார் இங்கே!

p7a.jpg

p7b.jpg

ரபடி

தேவையானவை:

காய்ச்சாத பால் - அரை லிட்டர்
சர்க்கரை - 80 கிராம் (அல்லது 5 டேபிள்ஸ்பூன்)
குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - தலா கால் டீஸ்பூன்
பாதாம், பிஸ்தா, முந்திரி - தலா 5 (பொடியாக நறுக்கவும்)

1.jpg

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பால் பாதியாகச் சுண்டிய பிறகு சர்க்கரை, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். பால் நன்கு கெட்டியானவுடன் பாதாம், பிஸ்தா, முந்திரியைத் தூவி இறக்கவும். ரபடி ரெடி!

p7c.jpg

குறிப்பு :

ரபடியை ரசமலாய், ஷாகி துக்கடா, பெங்காலி ஸ்வீட்ஸ் செய்யப் பயன்படுத்தலாம்.  ரபடி கெட்டியாக, கண்டன்ஸ்டு மில்க் கால் கப் அளவு சேர்க்கலாம். கண்டன்ஸ்டு மில்க் சேர்த்தால் சர்க்கரை அளவைக் குறைக்கவும்.குங்குமப்பூ இல்லாவிட்டால், பாதாம் மிக்ஸ் 2 டீஸ்பூன் சேர்க்கலாம்.

ஷாகி துக்கடா

தேவையானவை:

பிரெட் ஸ்லைஸ் - 4
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - கால் கப்
ரபடி – தேவையான அளவு
துருவிய பாதாம், பிஸ்தா - சிறிதளவு

p7d.jpg

செய்முறை:

சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு பிசுக்குப் பதத்தில் பாகு காய்ச்சி இறக்கவும். பிரெட் ஸ்லைஸ்களை முக்கோண வடிவில் வெட்டி எடுக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, நெய்விட்டு சூடாக்கி, பிரெட் துண்டுகளைப் போட்டு இருபுறமும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுக்கவும். பிறகு, பிரெட் துண்டுகளைச் சர்க்கரைப் பாகில் போட்டு முக்கி எடுக்கவும். தட்டில் பிரெட் துண்டுகளை அடுக்கி, அதன் மேல் ரபடியைச் சேர்க்கவும். துருவிய பாதாம், பிஸ்தா தூவிப் பரிமாறவும். இதைக் குளிரவைத்தும் பரிமாறலாம்.

குறிப்பு:

ரபடி செய்முறை தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

கேரட் கேசரி

தேவையானவை:

ரவை - அரை கப்
கேரட் விழுது - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
முந்திரி - 10
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - கால் கப்

p7e.jpg

செய்முறை:

வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, முந்திரியைச் சேர்த்து வறுத்துத் தனியாக வைக்கவும். அதே நெய்யில் ரவையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவைத்து ரவை, கேரட் விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் வேகும் வரை கிளறவும். இதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது இறக்கவும். நெய் தடவிய தட்டில் கேசரியைச் சமமாக பரப்பி, ஸ்டார் வடிவக் குக்கி கட்டரால் வெட்டி எடுக்கவும்.

குறிப்பு:

சர்க்கரையைக் கடைசியில் சேர்க்கவும். முதலில் சேர்த்தால் ரவை வேகாது. கலர் சேர்க்கத் தேவையில்லை. கேரட் கலரே போதுமானது.

க்ரானோலா பார்

தேவையானவை:

கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸ், 
தேன் - தலா அரை கப்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) - 
2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பாதாம், வால்நட் - தலா 10 
(பொடியாக நறுக்கவும்)
பேரீச்சம்பழம் - 4 (கொட்டை நீக்கி, 
பொடியாக நறுக்கவும்)
கோல்டன் கிரேப்ஸ், 
கறுப்பு திராட்சை - தலா 20 
(பொடியாக நறுக்கவும்)

p7f.jpg

செய்முறை:

வெறும் வாணலியில் கார்ன்ஃப்ளேக்ஸ், ஓட்ஸைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். பிறகு பாதாம், வால்நட், பேரீச்சம்பழம், கோல்டன் கிரேப்ஸ், கறுப்பு திராட்சை ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி தேன், பழுப்பு சர்க்கரை சேர்த்து, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்ததும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும். பிறகு, வறுத்த பொருள்களைச் சேர்த்துக் கிளறவும். பிறகு டிரேயில் பட்டர் பேப்பரைப் போட்டு, இந்தக் கலவையைச் சமமாகப் பரப்பி, ஆறியவுடன் துண்டுகளாக்கவும்.

குறிப்பு:

கரகரப்பாக வேண்டுமானால், 180 டிகிரி ப்ரீ ஹீட் செய்த அவனில் (oven)  
5 முதல் 7 நிமிடங்கள் வரை 
வைத்து எடுக்கலாம்.

சிறுதானிய லட்டு

தேவையானவை:
 
சிறுதானிய மாவு (சோளம், வரகு, சாமை,
தினையை வறுத்து அரைத்தது) - ஒரு கப்
பொடித்த வெல்லம் (அ) 
கருப்பட்டி - அரை கப்
தண்ணீர் - 4 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - 2 சிட்டிகை

p7g.jpg

செய்முறை:  

சிறுதானிய மாவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து ஆறவிடவும். வெல்லம் அல்லது கருப்பட்டியுடன் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டுக் கரைத்து வடிகட்டவும். வெல்லக்கரைசல் வெதுவெதுப்பாக இருக்கும்போது சிறுதானிய மாவு, நெய், சுக்குத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.

குறிப்பு:

வெல்லக்கரைசல் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாவு சேர்க்கவும். சூடாக இருந்தால் மாவு கட்டிகளாகிவிடும்.

பலாப்பழ அல்வா

தேவையானவை:

பெரிய பலாச்சுளை - 5 
(கொட்டை நீக்கி, சிறிய 
துண்டுகளாக்கவும்)
பொடித்த வெல்லம் - ஒரு கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பலாப்பழத் துண்டுகள் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். வெல்லத்துடன் மூழ்கும்வரை தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். பலாச்சுளைகளை மிக்ஸியில் போட்டு, தண்ணீர்விடாமல் விழுதாக அரைத்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசல், அரைத்த பலாப்பழ விழுது சேர்த்து சூடாக்கி கிளறவும்.  நடுநடுவே நெய் ஊற்றிக் கிளறவும். கலவை சுருண்டு வந்ததும் இறக்கவும்.

p7h.jpg

குறிப்பு:

பலாப்பழத்தை வேகவைத்தும் அரைக்கலாம்.

கம்பு அவல் மிக்சர்

தேவையானவை:

கம்பு அவல் - ஒரு கப்
பொட்டுக்கடலை - கால் கப்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 15
உலர்திராட்சை - 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

p7i.jpg

செய்முறை:

வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கவும்.  வலையுள்ள எவர்சில்வர் வடிகட்டியில் பொட்டுக்கடலையை எடுத்துக் கொதிக்கும் எண்ணெயில் வைத்துப் பொரித்தெடுக்கவும். இதேபோல முந்திரி, வேர்க்கடலை, உலர்திராட்சை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொரித்தெடுக்கவும், இறுதியாக கம்பு அவலை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்துப் பொரித்தெடுக்கவும். பொரித்தவற்றை எண்ணெய் வடிய டிஷ்யூ பேப்பரில் போடவும். அகலமான தட்டில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வறுத்த பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலந்தால் கம்பு அவல் மிக்சர் ரெடி.

குறிப்பு:

கம்பு அவலை எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக மைக்ரோவேவ் அவனிலும் பொரித்து எடுக்கலாம்.

வரகு கேசரி

தேவையானவை:

வரகு - அரை கப்
சர்க்கரை - முக்கால் கப்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
முந்திரி, உலர்திராட்சை - தலா 10
தண்ணீர் - 2 கப்
கேசரி கலர் - 2 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

p7j.jpg

செய்முறை:

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு சூடாக்கி, முந்திரி, திராட்சையைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் வரகைச் சேர்த்து வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறியவுடன் வரகை மிக்ஸியில் போட்டு ரவை பதத்துக்கு உடைக்கவும். அரைத்த ரவையுடன் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இடையிடையே திறந்து கிளறிவிடவும். தண்ணீர் போதவில்லை என்றால் சிறிதளவு தண்ணீரைச் சுடவைத்து ஊற்றவும். ரவை நன்றாக வெந்தவுடன் கேசரி கலர், சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து, கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மினி பெப்பர் தட்டை

தேவையானவை:

அரிசி மாவு - ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

p7k.jpg

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியில் பரப்பவும். அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மிளகு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அதன் மேல் ஒரு ஜிப் லாக் கவரை வைத்து ஒரு சிறிய கிண்ணத்தால் அழுத்தவும். சிறிய மூடியால் வட்டமாக வெட்டி எடுக்கவும். இதேபோல் எல்லா மாவையும் மினி தட்டைகளாகச் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மினி தட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

பூண்டு காராசேவ்

தேவையானவை:

கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
ஓமம் - ஒரு டீஸ்பூன் (பொடிக்கவும்)
பூண்டு - 15 பல் (தோலுரித்து, விழுதாக அரைக்கவும்)
எண்ணெய் (மாவு பிசைய)  - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

p7m.jpg

செய்முறை:

கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பொடித்த ஓமம், பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி மாவில் ஊற்றவும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். முறுக்கு பிழியும் குழலில் காராசேவ் அச்சைப் போட்டு மாவை நிரப்பிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் காராசேவை முறுக்குபோல் பிழிந்துவிடவும். நன்றாக வெந்து சலசலப்பு அடங்கியவுடன் எடுக்கவும். ஆறியவுடன் உடைத்து வைக்கவும்.

குறிப்பு:

மாவை காராசேவ் தேய்க்கும் கரண்டியில் வைத்து நேரடியாக எண்ணெயில் தேய்த்துவிடலாம். ஊறவைத்த மிளகாயுடன் பூண்டு சேர்த்து அரைத்தும் செய்யலாம்.

சாபுதானா சிவ்டா

தேவையானவை:

மாவு ஜவ்வரிசி (பெரியது) - ஒரு கப்
பாதாம், முந்திரி - 20
வேர்க்கடலை, உலர்திராட்சை - 
தலா 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

p7n.jpg

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துத் துணியில் உலர்த்தவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, எவர்சில்வர் வலைக்கரண்டியில் கடலைப்பருப்பை எடுத்து, காய்ந்த எண்ணெயில் வைத்து பொரித்தெடுக்கவும். இதேபோல் பாதாம், முந்திரி, வேர்க்கடலை, உலர்திராட்சை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தனித்தனியாகப் பொரித்தெடுக்கவும். பிறகு, ஜவ்வரிசியைச் சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். பொரித்தவற்றை எண்ணெய் வடிய டிஷ்யூ பேப்பரில் போடவும். பொரித்த பொருள்களுடன் உப்பு, பெருங்காயத்தூள், சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கினால் சாபுதானா சிவ்டா தயார்.

குறிப்பு:

தீயைப் பொரிக்கும்போது கூட்டிவைத்து, கொஞ்சம் பொரிந்ததும் குறைத்துக்கொள்ளவும்.

ராகி சீவல்

தேவையானவை:

கேழ்வரகு மாவு - ஒரு கப்
பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு - 
தலா கால் கப்
மிளகாய்த்தூள் - முக்கால் டீஸ்பூன்
வெள்ளை எள், வெண்ணெய் - 
தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

p7o.jpg

செய்முறை:

கேழ்வரகு மாவுடன் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், வெள்ளை எள், வெண்ணெய், உப்பு போட்டு நன்றாகக் கலக்கவும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துப் பிசையவும். மாவைக் கெட்டியாகவோ, தளரவோ பிசைய வேண்டாம். சரியான பதத்துக்குப் பிசையவும். கெட்டியாகப் பிசைந்தால் சீவல் கடினமாக இருக்கும். தளர்த்தியாகப் பிசைந்தால் சீவல் எண்ணெய் குடிக்கும். முறுக்கு பிழியும் குழலில் ரிப்பன் பக்கோடா அச்சைப் போட்டுப் பிசைந்த மாவை நிரப்பவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, மாவை ரிப்பன்களாகப் பிழிந்து வேகவைத்து எடுக்கவும்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

தீபாவளித் திருநாளில், இல்லத்தை தீப ஒளி நிறைப்பது போல, உள்ளத்தில் இன்ப ஒளி நிறைந்திருக்க வாழ்த்துகள்!

மகிழம்பூ முறுக்கு

தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண் ணெய் - கால் கிலோ, பெருங் காயத்தூள் - சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.

 
Bild könnte enthalten: Essen

Bild könnte enthalten: Essen

 

அல்வா (தீபாவளி சிறப்பு இனிப்புகள்)

தேவையான பொருட்கள்:

சோள மாவு - 1/2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
தண்ணீர் - 1 கப் + 1 1/2 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 1/4 கப் (நறுக்கியது)
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
கேசரி பவுடர் - 1 சிட்டிகை

செய்முறை:

1.3.முதலில் சோள மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.

2.பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் சிறு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

3.பின்பு ஒரு நாண்-ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

4.அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.

5. அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா போன்று வரும் வரை கிளறி, பின் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி, ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, அதனை துண்டுகளாக்கினால் அல்வா ரெடி!!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

அதிரசம், சந்திரகலா, இனிப்பு பூந்தி.. மகிழ்ச்சியூட்டும் தீபாவளி பலகாரங்கள்! #VikatanPhotoCards #DiwaliRecipes

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி வர முதலே இனிப்பு பட்சனங்கள் எல்லாம் சும்மா அள்ளுது.....!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பண்டிகையும் கொண்டாடும் ஆர்வமில்லை ஆனால் இந்த இனிப்பு பட்சணங்கள் செய்து பழகணும் போல இருக்கு என்ன செய்யலாம்.....!?

  • தொடங்கியவர்

பூந்தி லட்டு (தீபாவளி சிறப்பு இனிப்புகள்)

முதலில் நம்ம பாரம்பரிய பூந்தி லட்டுவிலிருந்து ஆரம்பிக்கலாம். இது தென்னிந்திய ஸ்பெஷல். பருப்பில்லாமல் கல்யாணமா என்பது போல லட்டில்லாமல் ஒரு விழாவா? இது செய்ய பலர் பயப்படுவார்கள். ஒரு பூந்தி தேய்க்கும் ஜாரணி (ஓட்டைகள் உள்ள நீளக்கரண்டி) வாங்கி வைத்துக்கொண்டால் போதும் நீங்களே லட்டு செய்யலாம். குறைந்த செலவில் நிறைய காணும் ஒரு இனிப்பு இது.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு ஒரு கப்
அரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை ஒன்றேமுக்கால் கப்
முந்திரி, பாதாம், காய்ந்த திராக்ஷை தலா ஒரு பிடி;
டைமன்ட் கல்கண்டு ஒரு ஸ்பூன்;
கிராம்பு 10;
வாசனைக்கு ஏலத்தூள்,பச்சை கற்பூரம்; வண்ணத்துக்கு கேசரி அல்லது எல்லோ கலர்;
மரசெக்கு கடலை எண்ணெய் எண்ணெய் பொரிக்கத் தேவையான
முக்கியமா ஜாரணி கரண்டி

இங்கே நான் சொல்வது ஒரு கப் அளவுக்கு மட்டுமே, அதிகம் செய்ய விரும்புபவர்கள் அப்படியே அளவை proportionate ஆ அதிகரிச்சுக்கலாம்.

கடலைமாவில் அரிசி மாவையும் கலந்து ஒரு பின்ச் உப்பு சேர்த்து (இனிப்பு பட்சணம் செய்யும்போது ஒரு பின்ச் உப்பும் சேர்ப்பது பெரியவர்கள் வழக்கம், இது குறைவான சர்க்கரை உபயோகித்தாலும் இனிப்பை highlight செய்துகாட்டும்) சல்லடையில் சலிக்கவும்.

செய்முறை

1. மாவை தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்கும் முன் சர்க்கரையில் பாகு வைக்கணும்.

2. சர்க்கரையில் கொஞ்சம் நீர் விட்டு (அரை கப் அல்லது முக்கால் கப்) கரைக்கவும். கொதிக்கும்போது ஒரு ஸ்பூன் பாலை விட, சர்க்கரையில் உள்ள அழுக்கு நுரைத்து வரும். அதை கரண்டியால் எடுத்து விடவும்.

3.பாகு கெட்டியாக ஆரம்பித்ததும் தட்டில் ஒரு சொட்டு விட்டுத் தொட்டுப் பார்த்தால் ரெண்டு விரல்களுக்கு நடுவில் கம்பி போல இழுபடும். இது மெல்லிய கம்பியாக இருந்தால் அது ஒத்தைக் கம்பிப்பதம், கொஞ்சம் திக் கம்பியாக இருந்தால் ரெட்டைக்கம்பி பதம். இந்த ரெட்டைக்கம்பிப்பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அடுப்பின் மேலேயே வைக்கவும்.

3.பாகில் வாசனைக்கான ஏலத்தூள், பச்சை கற்பூரம், கலர் பொடி எல்லாம் கலந்து தயாராக வைக்கவும்.
கடலை மாவில் அளவாக நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

4.வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடாகும் முன்னேயே ஜாரணியை எண்ணையினுள் ஒரு முறை அமிழ்த்தி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்படி செய்வது மாவு கரண்டியில் உள்ள கண்களில் அடைபடாமல் தடுக்கும். கரண்டியை அலம்புவதும் ஈஸி. (ஆனால் சூடான எண்ணையினுள் அமிழ்த்திவிட்டால் அந்த சூட்டிலேயே மாவு வெந்து கரண்டிக்கு கண் குருடாயிடும், ஜாக்கிரதை)

5.எண்ணெய் சுட்டதும் ஜாரணியை எண்ணெய்க்கு மேலே (எண்ணெய் மேலே படாதபடி) பிடித்துக்கொண்டு ஒரு கரண்டி மாவை ஜாரணி மேலே விடவும். கையால் பர பரவென்று தேய்த்து விட்டால் பூந்திகள் எண்ணையினுள் விழும். ஜாரணியை மீண்டும் தட்டிலேயே வைத்துவிட்டு பூந்திகளை எடுத்து நேரே பாகில் போடவும். பாகை அடுப்புக்குப் பக்கத்திலேயே வைப்பது அது இறுகிவிடாமல் தடுக்கும். (பூந்தியை வடிதட்டில் போடாமல் நேரே பாகினுள் போட்டால் அதிலுள்ள எண்ணெய் உருண்டை பிடிக்கும்போது வேலையை சுலபமாக்கும்).

6.மாவு கொஞ்சம் நீர்க்க இருந்தாலும் கவலைப்படவேண்டாம். பூந்தி சப்பையாக நீட்ட நீட்டமாக வரும். அது லட்டுக்கு ஓகே தான். பூந்தியை முக்கால் வேக்காட்டில் எடுப்பதும் நல்லதே. ரொம்ப கரகரப்பாக எடுத்தால் உருண்டை பிடிக்கும்போது கொஞ்சம் காலை வாரலாம், தவிர, நாம் காரா பூந்தி செய்யும்போதுதான் கரகர பதம் தேவை.

7.எப்போதும் இப்படி ஒரு கப் மாவுக்கு ஒன்றேமுக்கால் கப் சர்க்கரை எடுத்தால் பூந்தி முழுக்க சலித்துப் போட்டாலும் இன்னும் பாகு நீர்க்கவே இருக்கும். அதனால் எப்போதும் லட்டு செய்யும்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா மாவை பக்கத்திலேயே வைத்திருந்தால் பாகு நீர்க்க இருக்கும்போல தோன்றினால் இன்னும் ஒரு கரண்டி மாவை எடுத்து பூந்தி சலித்துச் சேர்க்கலாம். (எனக்கு ஒரு கப் மாவுக்கு ஒன்றரை கப் சர்க்கரை அளவுக்கே இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மாவு போடும்படி இருக்கும்)

8. இப்படி ஒரு கப் மாவு முழுதையும் பூந்திகளாக சலித்து பாகில் சேர்த்துவிட்டால் கடைசியில் அடுப்பை அணைத்துவிட்டு முந்திரி, பாதாம் ரெண்டையும் சேர்க்கவும்.

9. எண்ணெய் சூட்டிலேயே பருப்புகள் வெந்துவிடும். எடுத்து பாகில் சேர்த்துவிட்டு உடனேயே த்ராக்ஷைகளை போடவும். திராட்சைகள் வெந்து பெரிதாக ஆனதும் அவைகளையும் எடுத்து பாகில் போடவும், அடுத்து கிராம்பு, இது எண்ணையில் போட்டதும் தீவிரவாதிகள் ஆகிவிடும், பட படவென்று வெடித்து உங்கள் முகத்துக்கு இலவசமாக மேக்கப் போட்டுவிடும். அதனால் கிராம்பை சேர்த்ததும் கொஞ்சம் ஒதுங்கி வந்துவிடுங்கள்.

10.கிராம்பையும் பாகில் போட்டுவிட்டு கல்கண்டை அப்படியே கலந்துவிட்டு கரண்டியால் நன்றாக அழுத்திக்கலக்கவும். பருப்பு கடையும் மத்து அல்லது potato masher கொண்டு நசுக்கிக் கலப்பது உருண்டை பிடிக்க உதவும்.

11.கை பொறுக்கும் சூட்டில் பூந்திகளை அழுத்தமாகப்பிசைந்து லட்டுகளாகப் பிடித்து வைக்கவும். இது செய்ய ஸ்பீட் தேவை. கொஞ்சம் ஆறவிட்டால் பூந்தியாகவே நின்றுவிடும் அபாயம் உண்டு. அப்படி ஆறிப்போகாமல் இருக்க அடிக்கடி கிளறி விடவும். அடியில் சூடு இருந்துகொண்டே இருக்கும்.

குறிப்பு

1.ஒரு முறை ஒரு கப் அளவில் செய்து பார்த்துக்கொண்டால் அடுத்த முறை அளவை அதிகரிக்கலாம். சிலருக்கு உருண்டை பிடிக்க வேகம் பத்தாது, ரெண்டு பேர் இருந்தால் வேலை சுலபம். இல்லாவிட்டால் ஒவ்வொரு கப் மாவுக்கும் லட்டு பிடிக்கும் வரையிலும் செய்து முடித்துவிட்டு அடுத்த கப் மாவை மீண்டும் முதலிலிருந்து தொடங்கலாம்.
மூன்று கப் மாவுக்கு (அரை கிலோவுக்கும் கொஞ்சம் மேலே) எலுமிச்சை அளவு லட்டுகள் 75 கண்டிப்பாக கிடைக்கும்.

2.சிலர் கேசரி கலர் விரும்ப மாட்டார்கள், அவர்கள் லெமன் எல்லோ கலர் உபயோகிக்கலாம். எங்கள் வீட்டில் கலர் பொடியை பாகில் சேர்ப்போம். மாவில் சேர்ப்பது சிலர் வழக்கம்.

3.பிடித்த லட்டு உருண்டைகளை அகலத் தாம்பாளத்தில் ஒன்று மீது ஒன்றாக இல்லாமல் பக்கம் பக்கமாக அடுக்கவும். நன்றாக ஆறியதும் Air tight டப்பாவில் அடுக்கினால் வாசனை வராமல் பல நாள் இருக்கும்.

4.எண்ணெய் வாணலி நிறைய இருக்க வேண்டும். எண்ணெய் நல்ல கொதி நிலையில் இருக்க வேண்டும். பூந்தி சலிப்பது எண்ணெய் முழுக்க இருக்கணும். அரை கரண்டி தேய்த்துவிட்டு நிறுத்தி விடக்கூடாது. வேகமாக தேய்க்கும்போது எண்ணெய் சூட்டினால் கை wrist வரை சிவக்கும். பழகினால் சரியாகிவிடும்.

5.லட்டு சாப்பிடவும் செய்து பார்க்கவும் ரொம்பவும் ஆசைப்படுபவர்கள் மேலே சொன்ன முறையை ரெண்டு மூணு தடவை படித்து நெட்ரூப் போட்டுவிட்டு தைரியமாக ஆரம்பியுங்கள். தப்பா வந்தால் உருண்டை பிடிக்க வராது அவ்வளவுதான். மற்றபடி சாப்பிட இனிப்பான பூந்திகள் கிடைக்குமே? அப்படி உருண்டை பிடிக்க வராவிட்டால் என்னவெல்லாம் தாஜா செய்து உருண்டை பிடிக்கலாம் என்று பார்க்கலாமா?

 
Bild könnte enthalten: Essen
  • தொடங்கியவர்

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

தீபாவளி லேகியம் முதல் பனீர் ஜாமூன் வரை... தித்திக்கும் தீபாவளி பட்சணங்கள்! #DiwaliSweets #VikatanPhotoCards

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.