Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் வந்துள்ள அரசதலைவர் தற்போது நிலாவரையில்

Featured Replies

யாழ். வந்துள்ள அரசதலைவர் தற்போது நிலாவரையில்

 
யாழ். வந்துள்ள அரசதலைவர் தற்போது நிலாவரையில்
 
 

அரச தலைவர்  மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

அவர் தற்போது அச்சுவேலி, நிலாவரையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார்.

விவசாய உற்பத்திகள், மற்றும் விவசாய உள்ளீடுகளை அதிகரிப்பது தொடர்பான நிகழ்வொன்றிலேயே அவர் கலந்து கொண்டுள்ளார்.

IMG-aedb3c44823a3e70abdeb5b026524e24-V-7IMG-9e47561749a32c956c19a45250b4a2df-V-7

IMG-06382f7fa865d844ca19a4530cea71c3-V-7IMG-34181082682c3805b427fc26a3760d7d-V-7IMG-bc3111608d57bc5bbc04d300ca69c535-V-7IMG-aa0608ef00acf6fd01b077cb639dcf44-V-7

http://newuthayan.com/story/36835.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
உணவு உற்பத்திப் புரட்சியின் வட மாகாண திட்டம் ஆரம்பம்
 

“விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்” தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (14) ஆரம்பமானது.

புத்தூர், நிலாவரைப் பிரதேசத்தில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் பழ மரக்கன்றுகள், உணவுப் பயிர் கன்றுகளை ஜனாதிபதி விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

உணவுப் பயிர்களை நாட்டுகின்ற முறையை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், “சிதமு கான்தா” விவசாய அமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 4,000 பெண்களுக்கு உணவுப் பயிர் விதைகளை வழங்கி வைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

விவசாயத்துறை அமைச்சால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயக் கிணறுகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபாய் நிதிக்கான காசோலையையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

விவசாயத்துறைக்கு குறைந்த செலவில் சூரிய சக்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், வாழைக்குலைகளை வெட்டும் நவீன இயந்திரமொன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார். நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய சமூகத்தினருடன் ஜனாதிபதி சுமுகமாகக் கலந்துரையாடினார்.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் கந்தையா சிவநேசன், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர் சிவகுமார், யாழ். மாவட்ட அதிபர் என். வேதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/உணவு-உற்பத்திப்-புரட்சியின்-வட-மாகாண-திட்டம்-ஆரம்பம்/71-205549

  • தொடங்கியவர்

வடபகுதி விவசாயிகள் திறமையானவர்கள்: புகழாரம் சூடிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி

 

யாழ் விவசாயிகள் என்று சொன்னால் அவர்கள் எதற்கும் முகம் கொடுத்தும் சிறப்பாக பணியாற்றுவார்கள் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திபால ஸ்ரீசேன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி யாழ் இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில்....

வடபகுதி விவசாயிகள் திறமையானவர்கள்: புகழாரம் சூடிய ஸ்ரீலங்கா ஜனாதிபதி

இன்று விவசாயம் தொடர்பான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைத்தோம். விளைச்சல் பெருகிட புரட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

கடந்த பல மாதங்களாக அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இருந்தது.ஒன்றரை வருடம் கடும் வரட்சி நிலவியது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கமத்துறைக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டது. 50 வீதம் விளைச்சல் இல்லாமல் போனது.

இதனால் தான் நாங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் பெரிய அழிவு உலகில் ஏற்பட்டு வருகிறது.இது எமது நாட்டிற்கு மட்டும் அல்ல உலகின் உள்ள பல நாடுகள் முகம்கொடுத்திருக்கின்றன.

எனவே இயற்கைக்கு சவால் விடுத்துக்கொண்டு விவாசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.எங்களுக்கு தேவையான உணவை நாங்களே உற்பத்தி செய்யவேண்டும்.

கடந்த பல வருட தசாப்தங்களை பார்க்கும் போது வடபகுதி விவசாயிகள் மிகவும் திறமையான விவசாயிகள் என்பதை முழு நாடும் அறியும்.

யாழ்ப்பாண  விவசாயிகள் பற்றி மிகவும் கீர்த்தியான நல்ல சரித்திரம் வரலாறு தான் இருக்கின்றது.

பல்வேறு கஸ்ட நஸ்டங்களுக்கு முகம்கொடுத்து பலவிதமான எதிர்பார்ப்புக்கள் இல்லாமல்  எதற்கும் முகம்கொடுத்து அவர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றும் விவசாயிகள் தான் யாழ்ப்பாண விவசாயிகள்.

எனவே கமத்தொழிலை மேம்படுத்த இன்னும் உதவி செய்யவுள்ளோம். அனைத்து விவசாயிகளுக்கும்  வழங்குவோம்.

காலை விவசாயிகளை சந்தித்த போது பல விதமான வேண்டுகோள்களை முன்வைத்தார்கள். வெளிநாட்டில் இருந்து உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்ய வேண்டாம். தேவையான உருளைக்கிழங்கினை தாம் தருவதாக சொல்கின்றார்கள்.

அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற முடிவு எடுப்போம்.

கடன் பழு தொடர்பாக சொன்னார்கள். விவசாய பெரும் குடி மக்கள் நிவாரணம் பெற்றுக்கொடுக்க விவசாய அமைச்சுடன் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்.

வடமாகாண விவசாய பெரும் மக்கள் வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ள அரச மற்றும் தனியார் வங்கியுடன் பேசவுள்ளேன்.

1960 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண விவசாயம் பற்றி படித்துள்ளேன். பலர் சிறப்பான விவசாயம் செய்கின்றார்கள் என சிங்கள புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது.

விவசாயத்தினை பெற்றுக்கொடுத்து விவசாயத்தினை மேம்படுத்த உள்ளோம் என்று மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/North-farmers-skille-SriLankan-president

  • தொடங்கியவர்

தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் !

 

'விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் ! 

இன்று காலை  புத்தூர்-நிலாவரைப் பிரதேசத்தில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

குறித்த பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் பழ மரக்கன்றுகள் மற்றும் உணவுப் பயிர் கன்றுகளை ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கி வைத்தார்.

 தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் !

உணவுப் பயிர்களை நாட்டுகின்ற முறையை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், 'சிதமு கான்தா' விவசாய அமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 4000 பெண்களுக்கு உணவுப் பயிர் விதைகளை வழங்கி வைக்கும் நிகழ்வையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயக் கினறுகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட 20 மில்லியன் ரூபா நிதிக்கான காசோலையையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் ! 

விவசாயத்துறைக்கு குறைந்த செலவில் சூரிய சக்தியை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றதுடன் வாழைக்குலைகளை வெட்டும் நவீன இயந்திரமொன்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

அத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட விவசாய சமூகத்தினருடன் ஜனாதிபதி சுமுகமாகக் கலந்துரையாடினார்.

 தேசிய உணவு உற்பத்திப் புரட்சி திட்டம் !

மேலும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், வட மாகாண விவசாயத்துறை அமைச்சர் கந்தையா சிவநேசன், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர் சிவகுமார், யாழ் மாவட்ட அதிபர் என். வேதநாயகம் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உட்பட பெருமளவானோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

https://news.ibctamil.com/ta/internal-affairs/National-food-production-revolution-Program

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் பங்கு பற்றவில்லையோ?

  • தொடங்கியவர்
Just now, putthan said:

முதலமைச்சர் பங்கு பற்றவில்லையோ?

இல்லை. அவரும் இந்த நிகழ்வுகளை தவிர்த்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நவீனன் said:

இல்லை. அவரும் இந்த நிகழ்வுகளை தவிர்த்து விட்டார்.

தகவலுக்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.