Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை உலுக்கிய அமெரிக்க லஸ்வோகஸ் படுகொலை பயங்கரம் அமெரிக்க சமூகம் பிறழ்கிறதா?

Featured Replies

உலகை உலுக்கிய அமெரிக்க லஸ்வோகஸ் படுகொலை பயங்கரம்

 

அமெரிக்க சமூகம் பிறழ்கிறதா?

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் 
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

ஐம்­ப­தி­னா­யி­ர­த­துக்கு மேற்­பட்ட இர­சி­கர்கள் திரண்­டி­ருந்த மைதா­னத்தில் பிர­ப­ல­மான இசைக்­கு­ழுவின் நிகழ்வு நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்த வேளை திடீ­ரென துப்­பாக்கி சன்­னங்­கள பத்து நிமி­ட­ஙகள் வரை அடுக்­க­டுக்­காக வெடித்­தன. ஐம்­ப­திற்கு மேற்­பட்டோர் அவ்­வி­டத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர், 500 க்கும் மேற்­ப­ட்டோர் காய­ம­டைந்­தனர். இக் கொலை பாதகம் எவ்­வாறு நடை­பெற்­றது, இதற்கு சூத்­தி­ர­தாரி யார் என்­பதை சம்­பவம் இடம் பெற்று ஒரு மணித்­தி­யா­லத்­திற்குள் பொலிஸார் கண்­டு­பி­டித்­தனர். இசை நிகழ்வு நடை­பெற்ற மைதா­னத்தை அண்­ணாந்து பார்த்­துக்­கொண்­டி­ருந்த பல மாடி­களைக் கொண்ட பிர­மாண்­ட­மான ஹோட்­டலின் 32 ஆவது மாடியின் அறையில் ஒருவன் தற்­கொலை செய்­து­கொண்டான். என்­பது தெரி­ய­வந்­தது. அறையைப் பரி­சோ­தித்த பொலி ஸார் கொலைக்குப் பயன்­ப­டுத்­திய ரைபிளை கண்­டு­பி­டித்­தனர்.

கொலை­யா­ளியின் பெயர் ஸ்ரீபன் படொக், வயது 64 அவ­னொரு இளைப்­பா­றிய கணக்­காளர் சூதாட்­டத்­திலும் கைதேர்ந்­த­வன் கொலை­கா­ர­னென நம்­பப்­படும் படொக் வாழ்க்­கையில் முன்­னேற வேண்டும். பணம் சம்­பா­திக்க வேண்டும் என பல முயற்­சி­களை மேற்­கொ­ண்­டான். நில­பு­லன்­களை வாங்­கு­வதும் விற்­ப­துமே அவ­ருக்கு வெற்­றி­ய­ளித்­தது. அவன் பல ஆடம்­பர வீடு­க­ளுக்கு சொந்­தக்­கா­ர­னாக விளங்­கி­னாலும் அவன் அவ்­வீ­டு­களில் வாழ­வில்லை எள ஆரம்ப புலன் விசா­ர­ணைகள் வெளிப­்ப­டுத்­து­கின்­றன. அவன் அமை­தி­யான சுபாவம் கொண்­ட­வ­னென்றும் நட்­பு­வட்டம் ஏதும் அற்­ற­வ­னென்றும் அவ­னுடன் பழ­கி­ய­வர்கள் தெரி­விக்­கின்­றனர். பொலிஸார் தொடர்ந்தும் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவ­ருடன் கூட்­டா­ளிகள் யாரும் இப்­பெ­ருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூட்­டுக்கு உடந்­தை­யாக இருந்­தி­ருப்­பா­ர்க­ளா­ வென்ற கோணத்தில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்ற போதிலும் இத்­தி­சையை நோக்கி எவ்­வி­த­மான முடிச்­ச­வி­ழ்ப்­புக்­க­ளையும் விசா­ர­ணை­யா­ளர்கள் பெற­வில்லை. முன்னர் விசா­ர­ணை­யா­ளர்கள் கூறி­ய­தன்­படி படொக் தங்­கி­யி­ருந்த 62 ஆவது மாடி சொகுசு அறைப்­ப­கு­தியில் பெருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூடு தொடர்ந்து 10 நிமிடம் வரை நீடித்­தது எனவும் அதன் பின்­னரே பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரை படொக் சுட்­டுக்­கா­யப்­ப­டுத்­தினான் எனவும் சொல்­லப்­பட்­டது. தற்­போது பெருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூட்டை படொக் ஆரம்­பிப்­ப­தற்கு 10 நிமி­டத்­திற்கு முன்­னரே பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரை சுட்­டுக்­கா­யப்­ப­டுத்­தினான் என பொலிஸ் விசா­ர­ணை­யா­ளர்கள் கூறு­கின்­றனர். அவ­னது அறையை சோதித்த பொலிஸார் அறை­யி­லி­ருந்து 23 சுடு­க­லன்­களை கைப்­பற்­றினர். அவ­னது காரி­லி­ருந்து ஐம்­பது இறாத்தல் நிறை­யுள்ள வெடி­பொ­ரு­ட­களும் 1600 சுற­றுக்கள் சுடக்­கூ­டிய ரவை­களும் கைப்­பற்­றப்­ப­ட­டன.

 இந்­நி­கழ்வு நடப்­ப­தற்கு முன் கொலை­யாளி அந்த ஹோட்­டலில் அறை ஒன்றை பதிவு செய்­து­ கொண்டான் அவ­னது 32 ஆவது மாடி அறை­யி­லி­ருந்து இசை நிகழ்வு நடந்த மைதானம். இல­கு­வாக சுடு­வ­தற்கு ஏற்­ற­தாக இருந்­ததால் இந்த அறையை தெரி­வு­செய்து பதிவு செய்­து­கொண்டான். இந்த ஹோட்­டலின் பெயர் மண்­டலா ஹோட்டல். அவ­னது அறை­யி­லி­ருந்து பல இலக்­கங்கள் எழு­தப்­பட்ட கடி­தத்­துண்டு பின்னர் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இவ­னது காதலி மரி­லி­யோ­டன்லே, சம்­பவம் நடை­பெறும் போது பிலிப்பைன்ஸ் நாட்­டி­லி­ருந்தாள். பிலிப்பைன்ஸ் நாட்­டி­லி­ருந்து இச்­சம்­பவம் நடை­பெற்ற பின்னர் பொலி­ஸாரின் அழைப்பின் பேரில் லஸ்­வே­கா­வுக்கு வந்தாள். பொலிஸார் இவ­ளிடம் பல­வித கோணங்­களில் துரு­வித்­து­ருவி ஆராய்­கின்­றனர். இற்­றை­வரை இக்­கொ­லை­யா­ளிக்கும் பயங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளுடன் தொடர்பு இருந்­தமை பற்றி எவ்­வித ஆதா­ரமும் கிடைக்­க­வில்லை. ஜனா­தி­பதி ட்ரம் பாரியார் சகிதம் உட­ன­டி­யாக லஸ்­வே­கா­வுக்கு வருகை தந்து மர­ணித்­த­வர்­கட்கும் காய­ம­டைந்­தோ­ருக்கும் அவர்­களின் குடும்­பங்­க­ளுக்கும் ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரி­வித்­துள்­ள னர். ஜனா­தி­பதி ட்ரம் ஸ்ரீபன் படொக ஒரு மகா கெட்­டவன் என கண்­டித்­துள்ளார்.

அமெ­ரிக்க பிர­பல உளவு நிறு­வ­ன­மான FBI பெருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூடு என்­பதை வரை­வி­லக்­க­ணப்­ப­டுத்­தி­யுள்­ளது. ஒரு சம்­ப­வத்தில் நான்கு பேர் கொல்­லப்­பட்­டாலோ அல்­லது காயப்­பட்­டாலோ அச்­சம்­ப­வம; பெருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூடு என்­கின்ற தலை­யங்­கத்துள் வந்­து­விடும். அமெ­ரிக்­காவில் அர­சியல் மத விட­யங்­கட்கு அப்பால் தனிப்­பட்ட நோக்­கங்­க­ளுடன் துப்­பாக்­கியைப் பயன்­ப­டுத்தி கொல்­லுதல் அல்­லது காயப்­ப­டுத்தல் பெருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூ என வகைப்­ப­டுத்தி ஆராய்ச்சி செய்­துள்­ளனர். இவ் ­வா­ராய்ச்­சியின் முடி­வுகள் ஆச்­ச­ரி­யப்­பட வைக்­கின்­றன. உலகில் நிகழும் பெருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூடு என்ற சம்­ப­வங்­களில் 37 வரையில் அமெ­ரிக்­காவில் நிகழ்­கின்­றன. உலக சனத்­தொ­கையில் 5 வீதம் மக்­களே அமெ­ரிக்­காவில் வாழ்­கின்­றனர். உலகின் பெரு­மை­மிக்க நாடான அமெ­ரிக்­காவில் இப்­ப­டி­யெல்லாம் நிகழ்­கின்­றதா? என்­பது பல­ருக்கு வியப்­பான செய்­தி­யாகும். அண்­மைய வரு­டங்­களில் அமெ­ரிக்க கல்­லு­ரி­களில் தேவா­ல­யங்­களில் நடை­பெற்ற துப்­பாக்கிச் சூட்டு மர­ணங்கள் பெருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூட்­டுக்கு சான்று பகர்­கின்­றன. அமெ­ரிக்க வர­லாற்றில் இத் துப்­பாக்­கிச்­சூடு மிக­மோ­ச­மா­னது என கூறப்­ப­டு­கி­றது.

உலகின் பல நாடு­க­ளி­லி­ருந்தும் அமெ­ரிக்­கா­விற்கு பச்சை அட்டை விசா­வைப பெற்­றுக்­கொண்டு குடி­யேற வேண்­டு­மென துடிப்போர் ஏராளம். தத்தம் நாடு­களில் அமெ­ரிக்­காவை கண்­டிப்­ப­வர்கள் கூட அமெ­ரிக்­காவில் குடி­யேற துடிப்­ப­தற்கு அமெ­ரிக்­காவின் ’ஜன­நா­யக ஆட்­சி­மு­றையும் சமா­தானம், பொரு­ளா­தார செழு­மை­யு­ட­னான வாழ்­வுமே கார­ண­மாக இருக்­கி­றது. அமெ­ரிக்­காவில் நடை­பெறும் துர்ப்­பாக்­கி­ய­மான துப்­பாக்கி பாவ­னைக்கு காரணம் என்ன? இவற்றை கட்­டுப்­ப­டுத்­த­மு­டி­யாதா? என சிந்­திக்­காமல் இருக்­க­மு­டி­யாது. அமெ­ரிக்­காவில் தானி­யங்கி துப்­பாக்கி பெரும்­பா­லான அமெ­ரிக்க மாநி­லங்­களில் சட்­ட­பூர்­வ­மாக கொள்­வ­னவு செய்­ய­ மு­டியும். ஆனால் பூரண தானி­யங்கி துப்­பாக்கி கொள்­வ­னவு செய்­ய­மு­டி­யாது. சட்டம் தடை செய்­கின்­றது. அதே நேரம் சில விசேட உதி­ரிப்­பா­கங்கள் உத­வு­க­ரு­வி­களை கொள்­வ­னவு செய்ய சட்­டத்தில் இட­முண்டு. இந்த கரு­வி­களை தானி­யங்கி துப்­பாக்­கி­க­ளுக்கு பொருத்­தினால் துப்­பாக்­கி­யி­லி­ருந்து விரை­வாக சன்­னங்­கள வெளியேறும். அடிக்­கடி இவ்­வா­றான சூட்டுச் சம்­ப­வங்கள் நிக­ழும்­போது அர­சியல் கட்­சிகள் துப்­பாக்கிச் சட்­டத்தில் மாற்றம் கொண்­டு­வ­ர­ வேண்­டு­ மென சில கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தும். இன்று வரை இன்னும் குறிப்­பி­டத்­தக்க மாற்­றங்கள் எதுவும் ஏற்­ப­ட­வில்லை. அமெ­ரிக்க குடி­ய­ர­சுக் ­கட்­சி­யினர் ஆயுதம் உற்­பத்­தி­செய்யும் கம்­ப­னி­க­ளுடன் நெருங்­கிய தொடர்பு கொண்­டுள்­ளார்கள். தேசிய றைபிள் சங்கம் பிர­தா­ன­மான கம்­ப­னி­யாகும். இவர்­களின் அர­சியல் பலத்­தி­னாலும் செல்­வாக்­கி­னாலும் துப்­பாக்­கி­சட்­டங்­களில் மாற்றம் ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை. அதே­வேளை அமெ­ரிக்க பிர­ஜை­க­ளுக்கு துப்­பாக்­கி­களை வைத்­தி­ருக்கும் உரி­மை­ மீது மிகக்­க­வர்ச்சி உள்­ளது. ஜனா­தி­பதி ட்ரம் துப்­பாக்­கி­ச் ச­டங்­களில் மாற்றம் ஏற்­ப­டுத்த வேண்டும். அதற்­கான கலந்­து­ரை­யா­டலை நடத்தி சில தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ள­வேண்டும் எனக் கூறி­யுள்ளார். அமெ­ரிக்க அர­சியல் அமைப்பின் 2 ஆவது பிரிவு அமெ­ரிக்க பிர­ஜைகள் துப்­பாக்கி வைத்­தி­ருக்கும் உரி­மையை அங்­கீ­க­ரித்­துள்­ளது. அமெ­ரிக்க அர­சியல் சாச­னத்­திற்கு மேற்­கொள்­ளப்­பட்ட இரண்­டா­வது திருத்தம் அமெ­ரிக்க பிர­ஜை­க­ளுக்கு துப்­பாக்­கி­களை வைத்­தி­ருக்கும் உரி­மையை வழங்­கி­யுள்­ளது. இத்­தி­ருத்தம் அடிப்­படை உரி­மை­கள்­ என்ற அத்­தி­யா­யத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. துப்­பாக்கி பாவ­னைக்கு தடை கொண்­டு­வ­ர ­வேண்­டு­மெ­னவும் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் கொண்­டு­வ­ர­ வேண்­டு­மெ­ன வும் நியுஸ்­வீக சஞ்­சிகை தெரி­வித்­துள்­ளது. அமெ­ரிக்­கவை பின்­பற்றி மெக்­சிக்கோ, கௌ­த­மாலா ஆகிய நாடு­க­ளிலும் பிர­ஜைகள் துப்­பாக்கி வைத்­தி­ருக்கும் உரிமை சட்­ட­பூர்­வ­மாக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கவை பின்­பற்றி பல லத்தீன் அமெ­ரிக்க நாடு­களும் துப்­பாக்கி வைத்­தி­ருக்கும் உரி­மையை தங்கள் பிர­ஜை­க­ளுக்கு முன்னர் வழங்­கி­யி­ருந்­தன இன்று அந்­நி­லைமை மாறி­விட்­டது.

 ஒரு பொரு­ளா­தார வல்­ல­ரசு நாட்டில் ஏன் இந்த துர்ப்­பாக்­கியம் நிகழ்­கின்­றது என்­பது பல ஆராய்ச்­சி­க­ளுக்­கான வாசலைத் திறந்­துள்­ளது. இது உள­வியல் பிரச்­ச­னையா? அல்­லது வேறு தொடர்­பா­னதா? என ஆய­்வுகள் நடக்­கின்­றன. ஹாலிவூட் சினிமா படங்கள் வன்­மு­றையை துதிக்கின்றன, இதுவும் ஒரு கார­ண­மா­கலாம் என ஒரு உள­வியல் அறிஞர் கருத்து தெரி­வித்­துள்ளார்.

உலகில் ஆயு­த­ப­ரி­க­ரணம் அதா­வது ஆயு­தக்­கட்­டுப்­பாடு பற்றி ஐ.நா.சபை மாபெரும் நிகழ்ச்­சித்­திட்­டத்தை செய­லாக்க முனைகின்­றது. நாடுகள் பிர­ஜைகள் சமா­தா­னமாக் நிம்­ம­தி­யாக வாழ­வேண்­டு­மானால் ஆயு­தப் ­ப­ாவனை கட்­டுப்­பாட்­டுக்கு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். இந்த அடிப்­ப­டை­யி­லேயே அணு ஆயுத உற்­பத்­திகள் உற்­று­நோக்­கப்­ப­டு­கி­றன. சுர்­வ­தேச அணு­சக்தி முகவர் நிலையம் அணு ஆயுத உற்­பத்­தி­களை மேற்­பார்வை செய்து வரு­கின்­றது. இனறு ஈரான், வட­கொ­ரியா நாடு­களின் அணு­ ஆ­யுத உற்­பத்­தியில் சர்ச்­சைகள் தோன்­றி­யுள்­ளன. நாடு­கட்கு ஆய­ுத­ப­ரி­க­ரணம் தேவை என்றால் பிர­ஜைகள் மத்­தியில் ஆயுத பரவல் அனு­ம­திக்­கப்­ப­ட­லாமா என்ற கேள்வி அமெ­ரிக்­காவில் அடிக்­கடி நிக­ழு­கின்­றது. முன்­னைய பெருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூ­டுகள் கார­ண­மாக தொடர் விவாதம் நடந்­தாலும் தற்­போ­தைய படு­கொ­லைகள் மீண்டும் வாத பிர­தி­வா­தங்­களை உரு­வா­க்கி­யுள்­ளது. எனினும் சர்வ­தேச ஆயத உற்­பத்­தி­யா­ளர்கள் அர­சியல் ரீதி­யாக பலம் பொருந்­தி­ய­வர்­கள் என்பதையும் அலட்­சி­யப்­ப­டுத்­த­மு­டி­யாது, அமெரிக்கா உல­கி­லேயே பெருந்­தி­ர­ளான துப்­பாக்கிச் சம்­ப­வங்­கட்கு பிர­சித்தி பெற்ற நாடாகும். உலகில் மிக முன்­னே­றிய ஒழுங்­க­மைப்­புள்ள அமெ­ரிக்­காவின் உயர் சமு­தாய வாழ்க்­கையில் புரை­யோ­டிக்­கொண்­டி­ருக்கும் புண்­ணா­கவே இச்­சம்­ப­வங்­களை உள­வி­ய­லா­ளர்­களும் மனோ­தத்­த­து­வ­வா­தி­களும் கரு­து­கின்­றனர். அமெ­ரிக்­காவின் அர­சியல் சமூக குறை­பா­டா­கவும் இப்­பி­ரச்­சினை அல­சப்­ப­டு­கி­றது. புயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்பு எதுவும் இருப்­ப­தாக இன்று வரை விசா­ர­ணை­யா­ளர்கள் உறு­தி­யாக எதையும் கூற­வில்லை. உண்­மையில் இச்­ ச­ம­்பவம் பயங்­க­ர­வா­தத்­துடன் எவ்­வித தொடர்பும் இருக்­க­வில்லை என கூறு­கின்­றார்கள். எனினும் பயங்­க­ர­வாதச் செயல்­களில் ஏற்­படும் விளை­வு­கள்தான் இச்­சம்­ப­வத்­தாலும் ஏற்­பட்­டி­ருக்­கின்­ற­தென்­பதை மறுக்க முடி­யாது. ஒரு தற்­கொலைப் போராளி எவ்­வாறு பலரைக் கொல்­கின்­றானோ அதே விளை­வுதான் இச்­சம்­ப­வத்­தாலும் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இச்­ச­ம­பவம் நடை­பெற்று சில மணித்­த­ியா­லங்­களுக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு படொக் இஸ்­லா­மி­ய­ராக மதம் மாறி­விட்டான் (சற்று காலத்­திற்கு முன்­ன­தாக) என அறிக்­கை­யொன்று வெளியிட்­டது. பயங்­க­ர­வாத இயக்­கங்கள் தங்­களின் பிர­ப­லத்­திற்கும் பாது­காப்பு அதி­கா­ரி­களைக் குழப்­பு­வ­தற்கும் இப்­ப­டி­யான வெளியீ­டு­களை பரப்­பு­வது புதிய விட­ய­மல்ல. ஆனால இப்­ப­டி­யாக ஐ.எஸ்.ஐ.எஸ். கூறு­வதால் முஸ்­லிம் என்றால் பயங்­க­ர­வாதி என்ற முடி­வுக்கு ஒரு போதும் வர­மு­டி­யாது. பயங்­க­ர­வாதம் என்றால் அதற்கு பிரத்­தி­யே­க­மான வரை­வி­லக்­கணம் ஒன்று உண்டு. பயங்­க­ர­வா­தத்தில் முஸ்லிம் பயங்­க­ர­வாதம், தமிழ் பயங்­க­ர­வாதம், சிங்­கள பயங்­க­ர­வாதம் என்ற பிரி­வுகள் இல்லை. ஐ.எஸ்.ஐ.எஸ். இன் நட­வ­டிக்­கைகள் ஏனை­யோரை முஸ்லிம் மக்கள் மீது தவ­றான பாரி­வை­யொன்றைச் செலுத்­து­வ­தற்கு வழி­வ­குக்கும். இதுவே ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­கட்கு தேவை­யா­னது.

இதற்­கி­டையில் Every Town for Gun Safety எனும் தொண்டர் நிறு­வனம் பெருந்­தி­ர­ளான துப்­பாக்­கிச்­சூட்டு சம்­பவம் தொடர்­பாக தேசிய றைபிள் சங்­கம மீது கண்­டனம் தொடுத்­துள்­ளது. தானி­யங்கி துப்­பாக்­கி­களை பூர­ண­மான தானி­யங்கி துப்­பாக்­கி­க­ளாக மாற்­றப்­ப­யன்­ப­டுத்­தப்­படும் கரு­வி­களை தடை­செய்­ய­க­கூ­டாது சில கட்­டுப்­பா­டு­களை விதிக்­கலாம் என தேசிய றைபிள் சங்­கம கூறி­யுள்­ள­மையைக் கண்­டிக்­கின்­றது. மேற்­படி கரு­வி­களை பூர­ண­மாக தடை­செய்­ய­வேண்­டு­மென Every Town for Gun Safety. இவ்­வ­ள­வுக்கு மத்­தி­யிலும் அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற கருத்­து­க­ணிப்பு விநோ­த­மான முடிவை தந்­துள்­ளது. அமெ­ரிக்­காவில் ஆய­ுதப்­பா­வனை (துப்­பாக்கி) கட்­டுப்­பாட்­டுக்கு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். என்ற அடிப்­ப­டை­யிலே இடம்­பெற்ற கருத்­துக்­க­ணிப்பில் எண்­பது வீதத்­துக்கு மேற்­பட்டோர் ஆய­ுதப்­பா­வனை வேண்­டும என்று வாக்­க­ளித்­துள்­ளனர். அமெ­ரிக்க பிர­ஜை­க­ளுக்கு துப்­பாக்­கி­களை வைத்­தி­ருக்கும் உரி­மை­மீது மிகக்­க­வர்ச்சி உள்­ளது. இவ்­வா­றான சூழ்­நி­லை­களில் அமெரிக்­காவில் பிர­ஜைகள் துப்­பாக்­கிகள் வைத்­தி­ருக்க அனு­ம­திக்கும் சட்­டங்­களில் பெரிய மாற்றம் ஏதும் நிக­ழு­மென எதிர்­பார்க்க முடி­யாது.

இப் பெருந்­திரள் துப்­பாக்கிச் சூட்டுச் சம்­பவம் கொடூ­ர­மா­னது, அநா­க­ரி­க­மா­னது மனி­த­கு­லத்­துக்கு அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்தும் சம்­பவம் என்­பதில் இரண்டு கருத்து இருக்க முடி­யாது. இருண்ட கண்டம் என அழைக்­கப்­பட்ட ஆபி­ரிக்க கண்­டத்தை இருண்ட இதயம் என வர்­ணித்து பிர­பல நாவ­லா­சி­ரியர் யோசப் கொன்றாட் ஆபி­ரிக்­காவை பின்­ன­ணி­யாகக் கொண்டு பிர­சித்தி பெற்ற Heart of Darknes என்ற நாவலை படைத்தார். உலகில் பின் தங்­கிய பிர­தே­சங்­கள, கல்வி அறிவு வளர்ச்­சியில் பின் தங்­கிய மக்கள் கூட்டம் வாழும் இடங்­களில் பெரும்­திரள் துப்­பாக்கிச் சூடு இடம்­பெ­ற­வில்லை. மாறாக மிக உயர்ந்த வாழ்க்­கைத்­தரம் உள்ள உலகின் உயர்­நாடு ஐக்­கிய அமெரிக்க நாட்டில் இச் சம்­ப­வங்­கள நிகழ்ந்­த­ப­டியால் பல வாதப் பிரதி வாதங்­களை மீண்டும் ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அமெரிக்க குடும்பம் சமூகம் என ஆராயும் பொழுது குடும்ப அமைப்பு மிகவும் தளர்­வாக உள்­ளது. கொலை­யாளி எனக் கூறப்­படும் பொடக் 64 வயதைத் தாண்­டி­யவர். அவரின் காதலி மரி­லி­யோ­டன்லே 62 வயதைத் தாண்டியவர். அவர் பேரப்­பிள்­ளை­களைக் கண்­டவர். அவர் பொலி­சா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தின் படாக் தன் மீது மிகவும் அன்­புள்­ளவர் என்றும் மற்­ற­வர்­க­ளுக்கு கரைச்சல் தராமல் தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்ல இக் கொலைகள் நிகழ்வதற்கு முன்னைய வாரத்தில் ஒரு லட்சம் அமெரிக்க டொலர்களை தனக்கு அனுப்பியுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை இந்திய சமுதாயங்களோடு ஒப்பிடும்போது அமெரிக்க சமுதாய வாழ்க்கை முறை எவ்வளவு வேறுபாடு மாறுபாடு உள்ளதென்று தெளிவாகத் தெரிகின்றது. அமெரிக்க சமுதாயத்தில் குடும்பம் பிள்ளைகள், பொறுப்பு,பராமரித்தல் என்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. எவ ரும் எப்போதும் எதையும் செய்ய முடியும் என்ற வாறு அமெரிக்க சமுதாய வாழ்க்கை முறை அமைந் துள்ளது. உலகின் ஏக வல்லரசான அமெரிக்கா பனிப்போர் காலத்தில் சோவியத் ரஷ்யாவுடன் வல்லரசு போட்டியில் ஈடுபட்டு உலகில் எங்கோ ஓர் மூலையில் நடைபெறும் அரசியல் பிரச்சினைகள், மோதல்கள் ஆகியவற்றில் சம்பந்தப்பட்டிருந்தன என்பது வரலாறு. இதனாலேயே ஆசிய, ஆபிரிக்க , இலத்தீன் அமெரிக்க நாடுகள் அணிசேரா இயக்கம் என்ற கோட்பாட்டின் கீழ் ஒன்று சேர்ந்தன. மத்திய கிழக்கில் அரபு, இஸ்ரேல் பிணக்காயினும் சரி இந்தோ சீன பிராந்தியத்தில் வியட்நாம் யுத்தமாகிலும் சரி ஈராக் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நாட்டை சின்னாபின்னப்படுதியதாயினும் சரி பயங்கரவாத அழிப்பு என்ற கோஷத்து டன் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த

மையாயினும் சரி அரபு வசந்தம் என கூறிக் கொண்ட எகிப்து, லிபியா, யேமன், சிரியா ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தினாலும் சரி சகல அரசியல் இராணுவ நடவடிக்கைகளில் எதேச்சாதிகாரம், வன்முறை, குருதி தோய்ந்த கதைகள் யாவும் அமெரிக்காவின் வகிபாகத்தை எடுத்தியம்புகின்றன. அமெரிக்கர்கள் அன்றாடம் கேட்கின்ற இச் செய்திகள் யாவும் யுத்தம், ஆக்கி ரமிப்பு, படுகொலைகள் சம்பந்தமான வையாகும். இவை யாவும் அமெரிக்க சமுதாயத்தில் எதிர்ம றையான செல்வாக்கை செலுத்தியதன் விளைவே அமெரிக்க சமூகத்தின் பிறழ்வு என சில உளவி யலாளர்களும் மனோ தத்துவ அறிஞர்களும் கூறியுள்ளனர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-14#page-8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.