Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி வருவார் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் : திட்டமிட்டு நடைபெற்ற விடயம்

Featured Replies

ஜனாதிபதி வருவார் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் : திட்டமிட்டு நடைபெற்ற விடயம்

 

 

"தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்திற்குள் ஜனாதிபதி வருவார், அங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசுவார் என்பது திட்டமிட்டு நடைபெற்ற ஒரு விடயம், ஜனாதிபதி வருவதற்கு முன்னதாகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த விடயம் கூறப்பட்டிருந்தது" என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

Local_News.jpg

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்...

"கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அந்த போராட்டத்தை குழப்பும் வகையில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆளுநரை சந்தித்தார். தொடர்ந்து சனிக்கிழமை ஜனாதிபதி வருகையின்போது ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும்போது ஜனாதிபதி அந்த வழியால் வருவார், போராட்டத்தில் ஈடுபடுகிறவர்களுடன் பேசுவார் என்பது முன்னதாகவே தெரிந்திருந்தது.

அது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கூறப்பட்டும் இருந்தது. அப்போது நாங்கள் கூறியது, ஜனாதிபதியுடன் பேசுவதற்கு ஒன்றுமில்லை, ஏற்கனவே அரசின் பங்காளி கட்சியான தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மேற்படி அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் மற்றொரு பங்காளியான அமைச்சர் மனோகணேசன் ஜனாதிபதியுடன் இந்த விடயம் தொடர்பாக பேசியிருக்கின்றார். எனவே ஜனாதிபதிக்கு இந்த அரசியல் கைதிகளின் வழக்கு மாற்றப்பட்ட விடயம் நன்றாகவே தெரியும். எனவே ஜனாதிபதிக்கு மேலதிக விளக்கம் தேவையில்லை என கூறினோம்.

இவ்வாறான நிலையில் ஜனாதிபதி வந்தார். முன்னர் கூறியதைபோல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சந்தித்தார். அப்போது முதலில் ஓடி சென்று பேசியவர் எம்.கே.சிவாஜிலிங்கம் மட்டுமே. இந்த சிவாஜிலிங்கம் அரசியல் கைதிகளின் குடும்பங்களை பயன்படுத்தி பொய் வாக்குறுதிகளை கொடுத்து அரசியல் கைதிகளுக்கான போராட்டங்களை மழுங்கடிக்கிறார். அதன் ஊடாக அரசாங்கத்துக்கு துணைபோகிறார். எனவே தன்னுடைய நலனுக்காக இவ்வாறு செயற்படும் சிவாஜிலிங்கத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும். இல்லையேல் அவர் செய்யும் பச்சை துரோகத்தை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்". 

http://www.virakesari.lk/article/25876

 

 

சம்பந்தன் கூறிய கருத்தை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

 

"இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருக்கும் கருத்தினை கோமாளியின் கருத்தாக நினைக்க இயலாது, அவர் தமிழ் மக்களிடம் நான் என்ன சொன்னாலும்  அவர்கள் அதனை நம்புவார்கள் என நினைத்து இறுமாப்பில் கூறிய கருத்து, அதனை மக்கள் சரியாக விளக்கி கொள்ளவேண்டும், இல்லையேல் அதன் விளைவுகளை பெற தயாராகவேண்டும்" என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Local_News.jpg

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக இன்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...

"இலங்கையின் தேசிய தீபாவளி ஒன்றுகூடலில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசும்போது அடுத்த தீபாவளி பண்டிகை மகிழ்வான சூழலில் நடக்கும் என கூறியுள்ளார், இது சம்பந்தனின் கோமாளிதனமான கருத்து என எவரும் நினைக்க கூடாது, அவர் கோமாளி அல்ல, தான் தமிழ் மக்களுக்க எதை சொன்னாலும் அவர்கள் அதனை நம்புவார்கள் என இறுமாப்பில் கூறும் கருத்து. இந்த கருத்தின் ஊடாக இரா.சம்பந்தன் தமிழ் மக்களை அவமதித்துள்ளார்.

எனவே தமிழ் மக்கள் அவருடைய கருத்தில் உள்ள சரியான அர்தங்களை புரிந்து கொள்ளவேண்டும். கடந்த தீபாவளி, அடுத்த தீபாவளி அதாவது இந்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்றார். இப்போது இந்த தீபாவளிக்கும் இல்லை அடுத்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு தீர்வு வருமாம், எனவே தமிழ் மக்கள் தாங்கள் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் இந்த பொய்களை நம்பியதால் உண்டாகும் விளைவுகளை ஏற்பதற்கு  தயாராக இருக்கவேண்டும்" என்றார்.

http://www.virakesari.lk/article/25875

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.