Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை வெளிவருகிறது மதிசுதாவின் உம்மாண்டி திரைப்படம்

Featured Replies

நாளை வெளிவருகிறது மதிசுதாவின் உம்மாண்டி திரைப்படம்

 
 

22853000_1740697896235640_24055063917741

 
2009 போருக்குப் பின்னர், ஈழத்தில் வெளிவரும் முதலாவது முழு நீளத் திரைப்படமாக உம்மாண்டி திரைப்படம் வெளிவருகின்றது. நாளை 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள சில திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் திரையிடப்படுகின்றது.
 
வாடைக்காற்று, நதிமூலம், உயிர்ப்பு, மண்ணுக்காக, தேசத்தின் புயல்கள், ஈரத்தீ போன்ற தனித்துவமான திரைப்படைப்புக்களை கொண்டது ஈழ சினிமா. அண்மைய காலத்தில் ஈழத்தில் குறும்பட முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் ஈழ மண்ணுக்கான திரைப்படங்கள் வெகு குறைவாகவே தயாரிக்கப்படுகின்றன.
 
இந்த நிலையில் ஈழ மண்ணுக்கான சினிமா முயற்சியில் வெகு சிலரே ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதிசுதா முக்கியமான இயக்குனராக காணப்படுகின்றார்.   ஈழக் குறும்படங்களின் மூலம் தாக்கம் செலுத்திய இயக்குனர் மதிசுதா உம்மாண்டி என்ற ஈழத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
 
பாதுகை, துலைக்கே போறியள், தழும்பு, ரொக்கட் ராஜா, மிச்சக்காசு, தொடரி போன்ற தன்னுடைய குறும்படங்களின் மூலம் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியவர் மதிசுதா. ஈழ வாழ்வையும் ஈழத்து திரையின் தனித்துவமான இயல்புகளையும் இவரது குறும்படங்கள் கொண்டிருக்கின்றன.
 

அந்த வகையில் வெளிவரவிருக்கும் உம்மாண்டி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போரால் திரைத்துறை நலிவடைந்துள்ள இந்த மண்ணிலிருந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய எளிய முயற்சிகளை ஆதரிப்பதும் இந்த கலைச் செயற்பாட்டை வளர்த்தெடுப்பதும் அவசியமானதொரு கலைச்செயற்பாடு ஆகும்.

http://globaltamilnews.net/archives/47219http://globaltamilnews.net/archives/47219

  • தொடங்கியவர்

உம்மாண்டி திரைப்படம் ஈழசினிமாவின் அடையாளமா ? மதிசுதாவின் பதில் என்ன !

 

இலங்கையில் தயாரிக்கப்பட்டு விரைவில் திரைக்கு வர இருக்கின்ற 'உம்மாண்டி' திரைப்படம், ஈழசினிமாவின் அடையாளமா என்ற கேள்விக்கு அப்படத்தின் இயக்குனர் மதிசுதா அவர்கள் பதில் அளித்திருக்கின்றார்.

ஐ.பி.சி தமிழ் இணையத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலே இக்கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
செவ்வியின் முழுவிபரம் :

உம்மாண்டி திரைப்படம் ஈழசினிமாவின் அடையாளமா ? மதிசுதாவின் பதில் என்ன !

கேள்வி : தங்களின் உம்மாண்டி படத்திற்கு பரவலான எதிர்பார்ப்பு உள்ளமையினை சமூக வலைத்தளங்களில் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இந்த எதிர்பார்ப்பினை எப்படி பூர்த்தி செய்யப் போகின்றீர்கள். இதற்கு என்ன காரணம் ?

பதில் : நானும் இந்தளவு ஆதரவு இப்படத்தக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை. இப்படிக் கிடைக்கும் எனத் தெரிந்திருந்தால் டப்பிங்கிற்காவது இன்னும் கொஞ்ச பணத்தை கடன் பெற்று முதலிட்டிருப்பேன். எனது ஆரம்ப பேட்டிகள் பார்த்தால் தெரியும் 9 இலட்சம் இடுகிறேன் 3000 பேர் பார்த்தால் போதும் போட்ட பணம் எடுப்பேன் என்ற கணக்கில் தான் முதலிட்டிருந்தேன். படம் முடித்த பின்னர் திரு.முகுந்த முரளி அண்ணா தான் படத்தின் முக்கிய பாத்திரம் ஒலி தான், அதை சீர் செய் படத்தை எடுக்கிறேன் என அதற்கான பணத்தையும் கொடுத்து முதலிட்டிருந்தார்.

இந்தளவு ஆதரவுக்கும் காரணம் படத்தின் தரம் , என்ன படம், யார் எடுத்தது என்பதல்ல ஆதரவு
கொடுக்கும் அத்தனை பேருக்கும் எங்களுக்கென்றொரு சினிமா எங்கள் மொழி எங்கள் வாழ்வியல் பேச வேண்டும் என்ற தேவையிருக்கிறது எனது முன்னைய படைப்புக்களில் இவை இருந்ததால் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

கேள்வி : நீள் படம் என்பது இலகுவானது அல்ல. எந்த நம்பிக்கையில் இந்த முயற்சியில் இறங்கினீர்கள் ? 

Something Is Better Than Nothing ஒன்றுமே இல்லாமல் இருப்பதிலும் ஏதோ ஒன்றாய் இருந்து விட்டுப் போகலாம் என்பது என் வாழ்க்கைக்குரிய தாரக மந்திரம்.முன்னோட்டத்தில் கூட அந்த வசனத்தை வலியுறுத்தியிருப்பேன். 'நாங்கள் வாழ்ந்து சாதிக்கேலாத ஒன்றை மரணம் சாதித்து தரும் என்றால் அந்த மரணத்தை நாங்களே தேடிப் போகலாம்'

இதுவும் அது போல ஒரு தற்கொலை முயற்சி தான். இவ்வளவு பணத்தை கடன் பெற்று இடும் போது எனக்குத் தெரியும் நான் நட்டப்பட்டால் சாதாரண வாழக்கைக்கு மீளத் திரும்ப 2 வருடங்களுக்கு மேல் தேவை என முன்னமே கணக்கிட்டிருந்தேன். அதே போல் வென்றால் 2 வருடத்துக்கு காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து சாப்பிடலாம் என்பதும் எனது கணிப்பாகும்.

கேள்வி : உம்மாண்டி ஈழசினிமாவின் அடையாளம் என தங்களின் ச மூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளீர்கள். எந்த வகையில் சினிமாவாக இதனை அடையாளப்படுத்துகின்றீர்கள் ?

பதில் : இல்லையே உம்மாண்டி ஈழசினிமாவின் அடையாளம் என நண்பர்கள் தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், உம்மாண்டி ஈழத்து வாழ்வியல் மற்றும் எங்கள் அடையாளங்களைத் தாங்கியது என்று தான் நான் குறிப்பிடுகிறேன். காரணம் ஈழ சினிமாவின் அடையாளம் என்பதை நான் தீர்மானிக்க முடியாது ஏனென்றால் படம் முற்று முழுதாக எனது சுயவிருப்பு வெறுப்புக்களைத் தாங்கியது என் குணவியல்புகள் பிடித்தவருக்கு மட்டுமே படம் பிடிக்கும் மற்றவரிடம் பயங்கர விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதே என் எண்ணம்.

கேள்வி : தமிழர் தாயகத்தில் சினிமா முயற்சிகள் என்பது இரண்டுபட்டு இருப்பதனை காண்கின்றோம். இது புலத்துக்கும் பொருந்தும். ஒன்று தமிழக சினிமாவை முன்னுதாரணமாக வைத்து, மற்றையது தனித்துவமான ஈழசினிமா. இந்த முரண்பாடுகளுக்குள் தங்களின் சினிமா முனைப்பு எவ்வகையானது. சவால்கள் என்ன ?

பதில் : அதற்கு எம் பார்வையாளர்களும் மிக முக்கிய காரணம். இன்று கூட என்னைக் காணும் பலர் கேட்பர் ஏன் இந்த தமிழில் செய்கின்றீர்கள் நாம் பேசும் போது இப்படிப் பேசலாம் ஆனால் படம் என்று பார்க்கும் போது அந்த மொழி பழகிவிட்டது அது இல்லாவிடில்p ஏதோ குறைவது போல் உள்ளது என்பர்.

நீரிழிவுக்காக பாவிக்கும் குளிசை கசக்கிறது என்பதற்காக அதை சீனியில் சுத்திக் கொடுக்கலாமா? ஒரு காலத்தில் பிஞ்சுமனம், உயிர்ப்பூ, விடுதலை மூச்சு எலலாம் ரசித்தவர்கள் தானே நாம். இந்திய ஊரைக்காட்டும் படத்தை அந்த மொழில் ரசி என் ஊரைக்காட்டும் படத்தை எம் மொழில் ரசி என அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டியது ஒவ்வொரு படைப்பாளியினதும் கடமையாகும்.

இவ்வாறு ஐ.பி.சி தமிழ் இணையத்துக்கு வழங்கிய செவ்வியில் உம்மாண்டி திரைப்படத்தின் இயக்குனர் மதிசுதா அவர்கள் தெரிவித்துள்ளார்.

உம்மாண்டி திரைப்படம் ஈழசினிமாவின் அடையாளமா ? மதிசுதாவின் பதில் என்ன !

உம்மாண்டி திரைப்படம் ஈழசினிமாவின் அடையாளமா ? மதிசுதாவின் பதில் என்ன !

https://news.ibctamil.com/ta/cinema/director-mathisutha-interview

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.