Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவமும் சமதரப்பு அங்கீகாரமும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவமும் சமதரப்பு அங்கீகாரமும் - சில குறிப்புக்கள

பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி

(ஆய்வாளர், ஊடகவியலாளர், விமர்சகர்)

அண்மையில் பாரிஸ் பல்கலைக்கழக வளாகத்தில் எனது கற்கைநெறிக்குத் தொடர்பில்லாத போராசிரியர் ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது. என்னுடைய துறை பெண்ணியம் (றழஅநn'ள யனெ பநனெநச ளவரனநைள) தொடர்பானது. இவர் அனைத்துலக போரியல் கற்கை நெறி (iவெநசயெவழையெட றயச ளவரனநைள) பேராசிரியர். இப்பேராசிரியர் குறித்தான எனது நண்பன் ஒருவனின் அறிமுகம் அவருடன் பேசவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. ஸ்பெயின் நாட்டவரான அவர் இன்னும் சில வாரங்களில் ஓய்வு பெற இருக்கிறார்.

விரிவுரைகள் முடிந்து அவர் வரும்வரை பொறுமையாகக் காத்திருந்து அவரைச் சந்தித்தோம். மேற்குலகம் சார்ந்து தீவிரமான போர் அறிவியலை வளர்த்திருக்கும் அவரிடம் கீழைத்தேயம் குறித்த படைத்துறை விஞ்ஞானத்தில் அவரது அறிவு சற்று குழப்பமானதாக இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மேற்குலகம் ஓ இஸ்லாம் என்ற இரட்டை அளவுகோலை வைத்து அவர் எல்லாவற்றையும் மதிப்பிட முற்படுகிறார். அவர் மட்டுமல்ல இன்று முழு உலகமுமே இந்த சித்தாந்;தத்துக்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டத்தின் தற்போதைய தேக்க நிலைக்கும் மேற்குலகத்தின் இந்த ஒற்றை அறமும் அளவீடும்தான் காரணம். செப். 11 இற்குப்பிறகு நடந்த பேரவலமாக இதைக் குறிப்பிடலாம். அல்கைதா, தலிபான், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புக்களுடன் முழுமையாக ஒப்பிடாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் மாவோ போராளிகள், விடுதலைப் புலிகளை சேர்த்து வைத்துக் குழப்பினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தீவிரமாக எதிர்க்கும் அவர் தன்னையறியாமலேயே அதன் சித்தாந்தத்தை தன் வழியே கோடு காட்டினார். இருந்த போதிலும் போரின் பின்விளைவுகளையும் அது குறித்த அரசியலையும் ஆழமாகக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

அவர் சார்ந்திருந்த துறை காரணமாக மட்டும் நான் அவருடன் உரையாடும் ஆர்வம் கொள்ளவில்லை. இன்னொரு காரணமும் இருந்தது. அண்மைக்காலமாக புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஐந்தாண்டு நிறைவையொட்டி தமிழர் தாயகத்திற்கான ஒரு அங்கீகாரப் புரளி ஒன்று பல மட்டங்களிலும் உலாவிக்கொண்டிருந்தது. இது என்னைப் பெரும் குழப்பத்திற்குள்ளாக்கியிரு

Edited by பண்டிதர்

எனவே புலிகள்தான் எமது ஏகப் பிரதிநிதிகள் என்பதை உலகத்திற்கு உரத்துச் சொல்லவேண்டும். புலிகள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற விவாதங்களுக்கும் அப்பால் ஒரு பலமான எந்த சமரசங்களுக்கும் விலைபோகாத ஒரு தரப்பை முன்னிறுத்துவதனுடாகத்தான் ஒரு இனம் தனது விடுதலையை போரின்முலம் மட்டுமல்ல பேச்சின் முலமும் வென்றெடுக்க முடியும் என்பது அந்த பேராசிரியர் குறிப்பிட்ட மிக முக்கியமான கருத்துருவாக்கம் ஆகும். இதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது போராட்டத்தின் இன்றைய தேக்கநிலை பற்றிய மிகவும் ஆழமான விபரணம்.

வழங்கியமைக்கு நன்றி.

பண்டிதர் அவர்களே அருமையான கருத்துகள்,அலசல்கள், காலத்தின் முக்கியமான பிற்போட முடியாத முடிபுகள்-விடுதலைப்புலிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய செயற்படுத்த வேண்டிய விடயங்கள் இப்படியான அறிவுபூர்வமான கருத்துக்களை

தொடர்ந்து வளங்குங்கள்.அத்துடன் பிரச்சாரங்கள் எப்படி அந்தந்த நாட்டு அரசுக்களை அடையவைக்கலாம். அதன் தாக்கங்கள் எப்படி சிங்கள அரசை எப்படி பாதிப்புகளை ஏற்படுத்தும் போன்றவைகளை எதிர்பாக்கிறோம்............ நன்றி.

முரண்பாடான சில கருத்துக்கள். அர்த்தமற்ற முறையில் அரைத்த மா திருப்பி அரைக்கப்பட்டிருக்கு.

மன்னிக்கவும் பரணி kirishnarajanikkum athani thantha panditharukum nanrikal.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவமும் சமதரப்பு அங்கீகாரமும் - சில குறிப்புக்கள

பிரான்சிலிருந்து பரணி கிருஸ்ணரஜனி

(ஆய்வாளர், ஊடகவியலாளர், விமர்சகர்)

குறிப்பாக சிங்களத்தின் நில ஆக்கிரமிப்புகளுக்கு எந்தவிதமான எதிர்வினையும் புரியாமல் மௌனம் காக்கப்படுகிறது. உடனடியாக தமிழர் தரப்பு தமது வலிமையை நிருபிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. அதாவது வலுச்சமநிலையை தம்பக்கம் திருப்ப வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அதுவே மீண்டும் புலிகளுக்கான சமதரப்பு அங்கீகாரத்தை பெற்றுத்தரும்

மேற்படிசெய்தி யாருக்கென்று புரிகிறதா? உரியவர்கள் படிப்பார்களா? நடவடிக்கை எடுப்பார்களா?

நாங்கள் இராணுவச்சமநிலையை வைத்திருந்தால் மட்டுமே ஒரு நியாயமான தீர்வை சிங்கள அரசிடம் பெறமுடியும் கண்டியளோ!

ஆரோ புறபசர் சொன்னவராம். சரியாத்தான் இருக்கும். :P

அது மாத்திரமல்ல உதுக்குள்ள கன காமெடிகள் இருக்கு. இதே ஒன்று...

இறுதியாக மேற்குலத்திற்கு மட்டமல்ல இந்திய அரசிற்கும் சேர்த்து ஒன்றை உலகத்தமிழினம் சொல்லிக் கொன்ள ஆசைப்படுகிறது. புலிகளின் சமதரப்பு என்ற அங்கீகாரத்தையும் தமிழர்களிற்கான ஏகப்பிரதிநிதித்துவத்தையும் நீங்கள் அங்கீகரிக்க மறுப்பது உண்மையான ஜனநாயகத்தின்பாற்பட்டதோ ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உரிமைகள் மீதான அக்கறை குறித்ததோ இல்லை - அது ஒரு இனத்தை இன்னொரு இனத்திடம் அடகு வைப்பது தொடர்பானது......

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரண்பாடான சில கருத்துக்கள். அர்த்தமற்ற முறையில் அரைத்த மா திருப்பி அரைக்கப்பட்டிருக்கு.

பழையபடி வேதாளம் முருக்கை மரத்திலை ஏற வெளிக்கிட்டுது.. குழப்புறீங்கள் சரி.. கொஞ்சம் தெளிவா குழப்பினா எங்களுக்கு விளங்க இலகுவாக இருக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா ரஜனி,

பள்ளிக்கூடம் போனாப் படிச்சமா பாஸ்பண்ணினமா எண்டு வராம, உந்தக்கிழட்டுப் புரபசர் மாரோடை கதைச்சால் உப்பிடித்தான் அவர்கள் தாமும் குழம்பி மற்றவையும் குழப்பிப்போடுவினம். ஓய்வுபெற இருக்கும் நேரமெண்டா ஒரு 80 வயதெண்டு சொல்லுங்கோ.

ஒரு ஆராய்ச்சியாளன் (researcher) ஒரு 35-40 வயது மட்டும் தான் ஆராய்ச்சிக்கு லாயக்கு அதுக்குப்பிறகு மாநாட்டு மேசைகளை (conference table) அலங்கரிக்கத்தான் லாயக்கு என்பது ஒரு பொதுவான கருத்து.

அதவிட, இப்ப மத்தியகிழக்கில ஒரு குண்டு வெடிச்சஉடன இவையை ரிவியில கூப்பிட்டு கருத்துக்கேப்பினம். அவையும் ஏதேதோ அலட்டுவினம்.

அவைக்குப் புதிசா இன்னுமொரு வேலை கிடைச்சுட்டுதெண்டு விளங்குகிறது :lol:

Edited by பண்டிதர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.