Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிராக மாறும் அகப்புறச் சூழல் !

Featured Replies

எதிராக மாறும் அகப்புறச் சூழல் !

 

மத­பீ­டங்கள், அர­சியல் தலை­மைகள், தேரர்கள், இரா­ணுவத் தரப்­பினர்,  பொது­மக்கள், இன­வா­திகள்,  அடிப்­ப­டை­வா­திகள், ஆட்சி எதி­ரா­ளர்கள் என்று எல்லாத்  தரப்­பி­ன­ரையும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள அர­சியல் அமைப்­புக்கு எதி­ராக  கூர்­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மிகக்  கச்­சி­த­மா­கவும்  மதி­நுட்­பத்­து­டனும் மேற்­கொண்­டு­வரும் ஒரு சூழ்­நிலை விளைந்து வரு­கின்ற நிலையில்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் அண்­மையில் ஒரு செய்­தியைக் கூறி­யது கவ­னத்­தின்­பாற்­பட்­டது. 

 

பௌத்த மதத்தின் முதன்­மை க்கு அல்­லது சிங்­கள பெரும்­பான்மை ஆட்­சிக்கு ஊறு விளை­விக்கும் எந்­த­வொரு அர­சியல் யோச­னைக்கும் யான் கையொப்பம் இடப்­போ­வ­தில்லை. இது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரியா.

இல்­லாத அர­சியல் அமைப்­பு கு­றித்து பொய்­யான கருத்­து­களைப் பரப்­ப­வேண்டாம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஊட­கங்­க­ளுக்கும் எதி­ர­ணி­யி­ன­ருக்கும் ஆலோ­சனை.

“நாட்டைப் பிரிக்க நினைக்கும் துரோ­கி­களை கொல்­ல­வேண்டும்” மேஜர் ஜெனரல் கமல் குண­ரட்ன எச்­ச­ரிக்கை, புதிய அர­சியல் சாசனம் பாரா­ளு­மன்றில் கொண்­டு­வ­ரப்­ப­டு­மானால் பாரா­ளு­மன்றை குண்­டு­வைத்­தேனும் தகர்ப்பேன், முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்­சவின் அபாய அறி­வித்தல். 

நீதி சக்­தி­களால் தடைகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டாலும் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கியே தீருவோம். அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல, அடித்­துக்­கூ­றி­யுள்ளார்.

இவ்­வே­ளையில் இலங்­கைக்கு கடந்த வாரம் விஜயம் செய்­தி­ருந்த ஐக்கிய நாடு கள் சபையின் அறிக்­கை­யாளர் பப்லோ டி கிரீப் பல்­வேறு விட­யங்­களைச் சுட்­டிக்­காட்டி இலங்கை அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடுத்துச் சென்­றிருப்­ப­தையும் காணு­கி றோம். அர­சியல் அமைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் அர­சாங்கம் இன்று திண றும் நிலை கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­றது.

தேசிய அர­சாங்கம் அர­சியல் சாச­னத்தை உரு­வாக்­கு­வதில் தீவிர கவனம் செலுத்­தி­வ­ரு­கின்­ற­போதும் அச்­சா­ச­னத்தை உரு­வாக்­கு­வ­தி­லுள்ள தடை­க­ளையும் சவால்­க­ளையும் எவ்­வாறு வெற்றி கொள்­ளப்­போ­கி­ற­தென்­பதே சந்­தேக நிலை­களை வளர்த்துக் கொண்­டி­ருக்­கி­றது.

தேசிய அர­சாங்­க­மென்ற பெயரில் பல­ கட்சி ஆட்சி இரண்டு வரு­டங்­களை நக ர்த்தி விட்­ட­போதும் அழுத்­த­மான பல­மான கூட்டுத் தன்­மை­யுடன், இரண்டு பிர­தான கட்­சி­களும் ஆட்­சியை நடத்த முடி­யாமல் இருக்­கின்­றது என்­பதே உண்மை.

அர­சியல் அமைப்பைப் பற்றி விஷ­மத்­த­ன­மான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு வரு­வது மாத்­தி­ர­மல்ல அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்த பீடங்­களின் மகா­நா­யக்க தேரர்­க­ளையும் தூண்­டி­விடும் அள­வுக்கு இல்­லாத பொல்­லாத கற்­பனை விளம்­ப­ரங்­களைச் செய்து உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சியல் சாச­னத்தை முளை­யி­லேயே கிள்ளி எறிந்து விடும் முயற்­சியில் அரச எதிர்ப்­பு­வா­திகள் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­வது நிலை­மை­களை மோச­மாக்­கி­விடும் காரி­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கைக்கு புதிய அர­சியல் அமைப்பு தேவை­யில்லை. இருக்கும் அர­சியல் சாச­னமே போது­மா­னது. எனவே புதிய சாச­னத்தை கொண்­டு­வர முன்­னெ­டுக்கும் முயற்­சி­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக நிறுத்த வேண்டும் என அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்த பீடங்கள் அறி­வித்­துள்­ளன என்ற செய்­தியும் அவ்­வாறு நடக்­க­வில்­லை­யென மறுப்பு அறிக்­கையும் பௌத்த பீடங்­களை அர­சாங்­கத்­துடன் முட்டி மோதப்­பண்ணும் கைங்­க­ரி­யங்­களும் அண்­மையில் நடந்­தே­றிய விட­யங்­க­ளாகும்.

அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள் புதிய அர­சியல் சாசனம் தொடர்பில் எவ்­வகை அபிப்­பி­ரா­யங்­களைக் கொண்­டுள்­ளார்கள் என்ற உண்மை தெளி­வு­ப­டுத்­தப்­ப­டாத போதும் இடைக்­கால அறிக்­கையைத் தொடர்ந்து இடம்­பெற்று வரும் விமர்­ச­னங்கள் மீதும் கருத்­துகள் மீதும் அவர்கள் பார்வை கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கி­றது என்­ப­தற்கு உதா­ர­ணந்தான் இரு­பீ­டங்­களைச் சேர்ந்­த­வர்­களும் அர­சியல் அமைப்பு தொடர்பில் ஜனா­தி­ப­தி­யு­டனும் பிர­த­ம­ரி­டமும் கலந்­தா­லோ­சனை நடாத்­த­வுள்­ளார்கள் என்ற செய்­தி­யாகும்.

அர­சியல் அமைப்பின் புதிய வரவு நாட்­டுக்கு தற்­போ­தைய சூழ்­நி­லையில் அவ­சி­ய­மில்லை என அண்­மையில் குறித்த பீடங்­களின் செய­லா­ளர்கள் அறிக்­கை­யொன்றின் மூலம் தெரி­வித்­தி­ருந்­தார்கள். குறித்த அறிக்கை வெளி­யி­டப்­பட்ட வேளையில் குறித்த இரு­பீ­டங்­களின் மஹா­நா­யக்­கர்­களும் நாட்டில் இருக்­க­வில்லை என்ற செய்தி வெளி­யிடப் பட்­டி­ருந்­தது. நாடு திரும்­பிய அவர்கள் புதிய அர­சியல் அமைப்பு தொடர்பில் ஜனா­தி­ப­தி­யையும், பிர­த­ம­ரையும் சந்­தித்து விளக்கம் கோர­வுள்­ள­தா­கவும் இன்­னொரு செய்தி வெளி­வந்­துள்­ளது.

பிர­த­மரோ அல்­லது ஜனா­தி­ப­தியோ எந்­த­வொரு கரு­மத்­தையும் செய்­வ­தாக இருந்­தாலும் மஹா­நா­யக்­கர்­களின் ஆசியைப் பெறாமல் அவற்றை முன்­னெ­டுப்­ப­தில்லை யென்­பது இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­வரை வழ­மை­யான சம்­பி­ர­தா­ய­மாகும். இது எழு­தாத யாப்பைப் போல் மீறப்­ப­டு­வ­து­மில்லை, தாண்­டப்­ப­டு­வ­து­மில்லை.

இலங்­கையின் இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்கு புதிய அர­சியல் சாச­னத்தின் மூலம் நிரந்­த­ர­மான தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென்ற விவ­கா­ரமும் அறி­விப்பும் மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­றுக்­கொண்ட காலப்­ப­கு­தி­யி­லி­ருந்தே கூறப்­பட்டு வரு­கின்ற விட­ய­மாகும்.

அது­வு­மின்றி இலங்­கையின் இரு­பி­ர­தான கட்­சி­களும் 2015 ஆம் ஆண்டு பொதுத்­தேர்­தலின் பின் கைகோர்த்துக் கொண்டு தேசிய அர­சாங்­கத்தை அமைத்­த­தற்­கான மூல­கா­ரணம் நீண்­ட­கா­ல­மாக புரை­யோ­டிப்போய்க் கிடக்­கின்ற தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் ரீதி­யான தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மாயின் அதற்­கான மூல­மாக அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். அவ்­வாறு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மாயின் தேசிய பல­முள்ள இரு­கட்­சி­களும் இணை­வதன் மூலமே அதை நிறைவேற்ற முடி­யு­மென்ற எதிர்­பார்ப்பின் முனைப்பின் மத்­தி­யி­லேயே, நல்­லாட்சி அர­சாங்கம் நிறு­வப்­பட்­டது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முற்­று­மு­ழு­தான இலக்கு அர­சியல் சாசனம் ஒன்றை உரு­வாக்­கு­வ­தாகும். இந்த எதிர்­பார்ப்பின் அனு­கூ­லத்தின் கார­ண­மா­கவே, தமிழ் மக்கள் ஜனா­தி­பதி தேர்­தலில் அமோக ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தார்கள்.

இவை­யெல்லாம் மஹா­நா­யக்­கர்­க­ளுக்குத் தெரி­யாத விட­ய­மல்ல. அவ்­வாறு இருக்கும் போது மஹா­நா­யக்­கர்­களின் வழி­காட்­ட­லையும் ஆசி­யையும் மீறி புதிய அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­ற­தென, எதிர்த்­த­ரப்­பினர், பீடங்­க­ளையும் அர­சாங்­கத்­தையும் முட்­டி­மோத வைக்கும் சூழ்ச்­சி­களை மிகக் கச்­சி­த­மாக மேற்­கொண்டு வரு­கின்­றார்கள் என்­பதே இதி­லி­ருந்து அறிந்து கொள்­ளக்­கூ­டிய உண்­மை­யாகும்.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றுப் படி­மு­றை­களை நோக்கின் பௌத்­த­பீ­டங்­களின் அனு­ச­ரணை, ஆசிர்­வா­த­மின்றி எந்­த­வொரு அர­சியல் முன்­னெ­டுப்­பு­க­ளையும் நகர்த்­திச்­செல்ல முடி­யாது என்­பதை இலங்­கையை இது­வ­ரை­யாண்ட எல்லா பிர­த­மர்­களும், ஜனா­தி­ப­தி­களும் தெரிந்து வைத்­தி­ருந்­தனர் என்­பது யாவரும் அறிந்த உண்மை. அவ்­வாறு இருக்­கும்­போது மகா­நா­யக்­கர்­க­ளுக்குத் தெரி­யாமல் அல்­லது அவர்­க­ளு­டைய கண்ணில் மண்­ணைத்­தூவி­விட்டு, இன்­றைய பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் மீறி­ந­டப்­பார்கள் என்­பது பொருத்­த­மற்ற கருத்­தாகும்.

வேண்­டாத பிர­சா­ரங்கள் மூலமும், பொய்­யான வதந்­தி­களைப் பரப்­பு­வதன் மூலமும் பௌத்­த­பீ­டங்­களை இன்­றைய ஆட்­சி­யாளர்­க­ளுக்கு எதி­ராகத் திசை­தி­ருப்பி அவர்­களின் முரண்­பாட்டில் குளிர்­காய நினைக்கும் எதி­ர­ணி­யி­னரின் பொய்­யான பிர­சா­ரங்­க­ளுக்கும் வதந்­தி­க­ளுக்கும் விலை­போ­காமல் இருக்க வேண்­டிய அவ­தானம் இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளையும் அர­சாங்­கத்­தையும் சார்ந்­த­தாகும்.

ஏலவே இந்த நாட்டில் இவ்­வகைச் சம்­ப­வங்­க­ளுக்கு பல உதா­ர­ணங்­க­ளுண்டு. பண்டா– செல்வா உடன்­ப­டிக்கை (27.07.1957) மேற்­கொள்­ளப்­பட்­ட­போது அன்­றைய பிர­தமர் பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு எதி­ரான அடிப்­ப­டை­யான ஒரு பௌத்த வாதம் கிளம்பி விடப்­பட்­டதன் கார­ண­மா­கவே பிர­தமர் பண்­டா­ர­நா­யக்க தந்தை செல்­வா­வுடன் செய்து கொண்ட உடன்­ப­டிக்­கையை கிழித்­தெ­றிந்­த­துடன் படு­கொ­லையும் செய்­யப்­பட்டார்.

இதன் அடுத்­த­கட்ட நகர்­வாக, டட்லி– செல்வா உடன்­ப­டிக்கை (24.03.1965) செய்­யப்­பட்டு ஒரு­சில நாட்­க­ளுக்குள் வன்­செ­யல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இருந்­த­போ­திலும் தாக்­கு­பி­டிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதும் அது முடி­யாத நிலையில் ஒப்­பந்தம் கைவி­டப்­பட்­டது.

இது ஜன­நா­ய­க­வழிப் போர்­களை தமி­ழர்கள் நடாத்­திய காலத்தில் இடம்­பெற்­ற­வை­யாகும். ஆயு­தப்போர் நிகழ்ந்த காலத்தில் திரு நீலன் திருச்­செல்­வத்­தினால் தயா­ரிக்­கப்­பட்டு, சந்­தி­ரிகா அம்­மை­யாரால் ஏற்றுக் கொள்­ளப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் புதிய யாப்பின் முன்­மொ­ழி­வுகள் வெளி­யி­டப்­பட்­டது. இத்­தீர்­வுத்­திட்­டத்­தினை ஐக்­கி­ய ­தே­சியக் கட்­சியும் பௌத்த குரு­மா ரும் கடு­மை­யாக எதிர்த்­ததன் விளைவு அது கிழித்­தெ­றி­யப்­பட்­டது.

இவ்­வாறு எல்லாக் காலப்­ப­கு­தி­யிலும் தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வா­னது விரோத எண்­ணத்­து­டனும் குரோத சக்­தி­க­ளாலும் தடுக்­கப்­பட்ட அனு­ப­வ­நி­லை­கொண்டே தற்­போ­தைய சூழ்­நி­லையும் தமிழ்­மக்­களால் பார்க்­கப்­ப­டு­கி­றது.

பெளத்த மதத்தின் முதன்­மைக்கும் தேச த்தின் ஒற்­று­மைக்கும் ஊறு­வி­ளை­விக்கும் எந்­த­வொரு அர­சியல் சாச­னத்­திலும் யான் கையெ­ழுத்­தி­டப்­போ­வ­தில்­லை­யென சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய அறி­வித்­தி­ருப்­பது பாரா­ளு­மன்­றுக்குள் ஏதா­வது நடந்து விடு­வ­தற்கு என்­னு­டைய ஒத்­து­ழைப்பு கிடைக்­கப்­போ­வ­தில்­லை­யென்ற எச்­ச­ரிக்கை விடும் செய்­தி­யா­கவே தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இலங்­கையின் சுதந்­திர அர­சியல் யாப்­புகள் 1972, 1978 ஆகிய இரு­கா­லப்­ப­கு­தியில் உரு­வாக்­கப்­பட்ட போதெல்லாம் பௌத்த மதத்தை முதன்­மைப்­ப­டுத்தும் தீவிரம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. அவை­ய­னைத்­திலும் இல்­லாத முக்­கி­யத்­துவம் புதிய அர­சியல் யாப்பில் கொண்­டு­வரும் முன்­னெ­டுப்­பா­கவே இடைக்­கால அறிக்­கையில் அதிக முக்­கி­ய­தானம் வழங்­கப்­பட்­டி­ருக்கும் நிலை­யிலும் பௌத்த மதம் இடைக்­கால அறிக்­கையில் உதா­சீ­னப்­ப­டுத்தப் பட்­டுள்­ளது. இதுவே புதிய அர­சியல் சாசன ஆக்­கத்­திலும் இடம்­பெ­ற­வுள்­ளது என்ற பொய்­யான பிர­சா­ரங்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருக்கும் நிலை­யி­லேயே பௌத்த அடிப்­படை வாதி­க­ளையும், மதப்­பீ­டங்­க­ளையும், தேரர்­க­ளையும் புதிய அர­சியல் முயற்­சிக்கு எதி­ராக தூண்­டி­விடும் சதி முயற்­சிகள் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் நிலையே இன்­றைய அர­சியல் கொதி­நி­லை­யாகக் காணப்­ப­டு­கி­றது.

மத­பீ­டங்கள், அர­சியல் தலை­மைகள், தேரர்கள், இரா­ணுவத் தரப்­பினர், பொது­மக்கள், இன­வா­திகள் அடிப்­ப­டை­வா­திகள், ஆட்சி எதி­ரா­ளர்கள் என்று எல்லாத் தரப்­பி­ன­ரையும் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள அர­சியல் அமைப்­புக்கு எதி­ராக கூர்­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மிகக் கச்­சி­த­மா­கவும் மதி­நுட்­பத்­து­டனும் மேற்­கொண்­டு­வரும் ஒரு சூழ்­நிலை விளைந்து வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் அண்­மையில் ஒரு செய்­தியைக் கூறி­யது கவ­னத்­தின்­பாற்­பட்­டது.

அதி­காரப் பகிர்வு என்­பது அர­சியல் சார்ந்­த­தல்ல. அது மக்கள் சார்ந்­தது என்றும் அதனை எதிர்ப்போர் யதார்த்­தத்தைப் புரிந்­து­கொள்­வது அவ­சி­ய­மென வவு­னி­யாவில் வைத்து கூறி­யி­ருந்தார். அவர் மேலும் இது பற்றி கருத்துத் தெரி­விக்­கையில், தேசிய பிரச்­சி­னைக்கு நியாயமான தீர்வு வழங்­கப்­ப­டா­விட்டால் எதிர்­கால விளை­வு­க­ளுக்கு அதனை எதிர்ப்­போரே பொறுப்­புக்­கூ­ற­வேண்டும் எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.

என்­னதான் ஆட்­சி­யா­ளர்கள் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் காண­வேண்டும் என விசு­வா­சத்­து­டனும் தீரத்­து­டனும் செயற்­பட்­டாலும் அகப்­புறச் சூழல் எதிர்ச்­சா­தக நிலை­யை­நோக்கி நகர்ந்து கொண்­டு­போ­வ­தையே அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க அவர்கள் குறிப்­பிட்­டது போல் இல்­லாத அர­சியல் அமைப்­புக்­கு­றித்து பொய்­யான கருத்­து­களைப் பரப்ப வேண்­டா­மென்ற உண்மை நிலை­களை புத்­தி­ஜீ­வி­களும் அர­சியல் தலை­வர்­களும் தெரிந்­து­வைத்­தி­ருக்­கின்ற போதும் பௌத்த பீடங்­க­ளையும் தேரர்­க­ளையும் தூண்­டி­விடும் கைங்­க­ரி­யத்தில் ஒரு கூட்­டத்­தினர் மிகத் தீவி­ர­மாக ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள் என்­பது வெளிப்­ப­டை­யா­கவே புரிந்­து­கொள்ளக் கூடிய விட­ய­மாகும்.

இலங்கை அர­சியல் அமைப்­புகள் பல­வந்­த­மாக இந்­தி­யாவால் திணிக்­கப்­பட்ட 13 ஆவது திருத்­தத்தை மேலும் பலப்­ப­டுத்தும் வகையில் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. தமி­ழீ­ழத்­துக்கு சட்ட அங்­கீ­கா­ரத்தை வழங்க நல்­லாட்சி அர­சாங்கம் முற்­பட்டால் மகா சங்­கத்­தி­னரின் எதிர்ப்பை அர­சாங்கம் சந்­திக்க நேரி­டு­மென ஸ்ரீ கல்­யாணி சாம கிரி­தம்ம சங்க சபையின் அநு­நா­யக்க பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் நேர­டி­யா­கவே தற்­போ­தைய அர­சாங்­கத்தை எச்­ச­ரித்­துள்ளார்.

நாட்டின் இத்­த­கைய கொதி­நி­லைகள் கருக்­கட்­டு­வ­தற்கு முன்பே குழந்­தையை அழித்­து­விடும் முயற்சியாகவே எண் ணத்தோன்றுகிறது. பிரதமர் அவர்கள் குறிப்பிட்டதுபோல் அரசியல் அமைப் பொன்று உத்தியோக பூர்வமாக உருவாக் கப்படும் முயற்சிகளுக்கு இன்னும் கால்கோள் இடுவதற்கு முன்பே அர சியல் அமைப்பானது சமஷ்டியை உருவாக்கப்போகிறது. தமிழீழத்தை கொண்டு வரப்போகிறது. நாடு துண்டு படுத்தப்படப் போகிறது. வடகிழக்கு இணைக்கப்பட்டுவிட்டது. ஒருமித்தநாடு தேசம் என்பது சமஷ்டியைக் குறிக்கும் இரகசியமான பதம் என்றெல்லாம் கோரமான உருவகப்படுத்தல் மூலம் அரசியல் சாசன உருவாக்கத்தை இல்லாது ஆக்கும் முயற்சிகள் நாலு திசைகளாலும் மூட்டிவிடப்படுகிறது.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற அடையாளத்தை இல்லாததாக்கும் வகையில் பௌத்தத்தின் முதன்மை நிலை குறைக்கப்படவுள்ளது என்ற பிரசாரமானது அடிப்படைவாதிகளுக்கும் இனவாதிகளுக்கும் தேரர்களுக்கும் ஒரு தீனிபோடும் விவகாரமாகவே உள்ளது. இவ்வாறு இருக்கின்ற நிலையில் வட–கிழக்கு இணைப்பு சுயநிர்ணயத்தை உறுதிப்படுத்தும் சமஷ்டியை மையப் படுத்துகின்ற அரசியல் தீர்வு என்ற கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் எந்த நிலையில் சாத்தியமாகப் போகின்றதென்ற சந்தேக நிலைகளே தமிழ் மக்களை பீதிகொள்ள வைக்கிறது.

இவையெல்லாவற்றையும் மீறி அரசி யல் சாசனம் உருவாக்கப்பட்டு அச்சா சனமும் அரசுக்குள்ள தற்போதைய ஆளும்பலத்துடன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும் பொதுசனவாக்கெடுப்பு என்ற போரை எப்படி வெற்றிகொள்ள முடி யும்? அதற்குரிய சாதக நிலையை யாரால் உருவாக்க முடியுமென்பது தொடர்பில் அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். 

திரு­மலை நவம்

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.