Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. சபையின் 72 ஆவது அகவை சாதனைகளா? சோதனைகளா?

Featured Replies

ஐ.நா. சபையின் 72 ஆவது அகவை சாதனைகளா? சோதனைகளா?

 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம் 
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)

 

இம்­மாதம் 24 ஆம் திகதி ஐ.நா. சபையின் 72 ஆவது அகவை என்­பதால் உலக மக்கள் அனை­வ­ருக்கும் உன்­ன­த­மான தின­மாகும். ஏனெனில் அர­சியல், பொரு­ளா­தார, சமூக, விஞ்­ஞான, கல்வி, தொழில்­நுட்பம் மற்றும் இன்னும் பல துறை­களில் மானுடம் பல குறிப்­பி­டத்­தக்க சாத­னை­களை நிகழ்த்­து­வ­தற்கு கார­ண­மா­யி­ருந்­த­து­ ஐக்­கி­ய­ நா­டு கள் சபை­யாகும். சில அர­சியல் ஆய்­வா­ளர்கள் ஐ.நா. சபையை உலக அர­சாங்கம் என்று கூட வர்­ணிக்­கின்­ற ­சூ­ழலில் இக்­கட்­டு­ரையை ஐ.நா.வின் 72 ஆவது பிறந்த நாளை­யொட்டி சமர்ப்­பிக்க விரும்­பு­கிறேன்.

இன்று உல­க­மட்­டத்தில் ஐக்­கிய நாடுகள் சபை, அணி­சேரா இயக்கம், பொது­ந­ல­வாய நாடு­களின் கூட்டு என பல நாடு­கள்­அங்கம் வகிக்கும் பல்­த­ரப்­பு­ அ­மைப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றுள் ஐக்­கிய நாடுகள் சபையே மிகப்­பி­ர­தான உலக அமைப்­பாகும். சகல நாடு­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­துமாகும். இலங்கையில் சாதா­ரண பொது­மக்கள் யுனிசெப், யுனேஸ்கோ, யு.என்.எச்.சி.ஆர், ஜெனிவா மனித உரி­மைகள் காப்­பகம் என்­றெல்லாம் பேசு­வதை நாம் காணக்­கூ­டி­ய­தா­கவும் கேட்­கக்­கூ­டி­ய­தா­கவும் உள்­ளது. இந்தக் குறிப்­பிட்ட நிறு­வ­னங்கள், முகவர் நிறு­வ­னங்கள் யாவுமே ஐக்­கி­ய ­நா­டுகள் சபையின் நிறு­வ­னங்கள் என்பது குறிப்­பி­ட­ வேண்­டி­யுள்­ளது. உல­க­ச­மா­தானம், அமைதி, பாது­காப்பு, மனித உரி­மைகள் மேம்­பாடு, சமூக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி,சூழல் பாது­காப்பு, மனி­தா­பி­மான உதவி வழங்கல் ஆகி­யவை குறிப்­பி­டத்­தக்க நோக்­கங்­க­ளாக இருந்­தன. மனி­தா­பி­மான உதவி என்­பது பட்­டினி, இயற்கை அனர்த்தம், ஆயுத மோதல்கள் ஏற்­படும் சந்­தர்ப்­பங்­களில் பொது மக்­க­ளுக்­கான உத­வி­யாகும். ஐ.நா. சபையின் தலைமைச் செய­லகம் அமெ­ரிக்­காவில் நியூயோர்க் நக­ரிலும் மேலும் மூன்று பிர­தான செய­ல­கங்கள் ஜெனிவா, வியன்னா, நைரோபி ஆகிய நக­ரங்­க­ளிலும் அமைந்­துள்­ளன. ஆரம்­பத்தில் ஐம்­பத்­தொரு நாடு­களே ஆரம்ப உறுப்பு நாடு­க­ளாக இணைந்­தன. இதற்கு ஒரு பிர­தான கார­ண­முண்டு. ஐம்­பது அறு­ப­து­களில் பல நாடுகள் கால­னித்­துவ ஆட்­சியின் கீழ் சுதந்­திரம் மறுக்­கப்­பட்ட பகு­தி­க­ளாக இருந்­தன. உதா­ர­ண­மாக இந்­தியா 1947 இலும் இலங்கை 1948 இலும் சுதந்­திரம் பெற்ற பின்­னரே இணைந்­தன. அதைப்போன்றே ஏரா­ள­மான ஆசிய, ஆபி­ரிக்க, இலத்தீன் அமெ­ரிக்க நாடுகளும் ஐம்­பது அறு­ப­து­களில் சுகந்­திரம் அடைந்த பின்­னரே அவை அங்­கத்­துவ நாடு­க­ளாக இணைந்­தன. தற்­போது 193 நாடுகள் அங்­கத்­துவம் வகிக்­கின்­றன.

ஐ.நா. சபையின் முன்­னோடி அமைப்­பாக நாடு­களின் கூட்­டணியை குறிப்­பி­டலாம். முதலாம் உலக மகா யுத்­தத்தின் பேர­ழிவு பல சிந்­த­னை­யா­ளர்­க­ளி­டையே யுத்­தத்­திற்­கெ­தி­ரான முன்­னெ­டுப்­புக்­களை உரு­வாக்­கப்பட்டது. அர­சியல் தலை­வர்­களில் முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ரூஸ்வெல்ட் உலக சமா­தான ஒழுங்கின் அவ­சியம் பற்றி குர­லெ­ழுப்­பினார். வேறு ஐரோப்­பிய நாடு­களும் ஆத­ரவு தெரி­வித்து கார்த்­திகை 1920ஆம் ஆண்டு நாடு­களின் கூட்­டணி உரு­வாக்­கப்பட்டது. பாரிஸ் பிர­க­டன அடிப்­ப­டையில் நாடு­களின் கூட்­டணி உரு­வாக்­கப்­பட்­டது. இந்த அமைப்­புதான் 24, ஒக்டோபர் 1945 ஆம் ஆண்டு ஐக்­கி­ய ­நா­டுகள் சபை­யாக பரி­ண­மித்­தது. இரண்டாம் உலக மகா யுத்­தத்தை வென்ற நாடு­களின் கூட்­டணி அமெ­ரிக்கா, சோவியத் ரஷ்யா, பிரிட்டன் ஆகி­யவை பிர­தா­ன­மான நாடு­க­ளா­யின. சீனாவும் இக்­கூட்­ட­ணிக்கு ஒத்­தா­சை­யாக இரண்டாம் உல­க­மகா யுத்­தத்தில் செய­லாற்­றி­யது. இதன் கார­ண­மா­கவே ஐக்­கிய நாடுகள் பாது­காப்புச் சபையில் அமெ­ரிக்கா, பிரிட்டன், சோவியத் ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்­தர அங்­கத்­துவ நாடு­க­ளா­யின. சித்­திரை 1945 இல் சென்.பிரான்­சிஸ்கோ நகரில் ஐ.நா. அமைப்­பது தொடர்­பான கொள்கைப் பிர­க­ட­ன­மாக ஐக்­கி­ய நா­டுகள் சபை பட்­டயம் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஐ.நா. சபை 24, ஒக்டோபர் 1945 இல் அங்­கு­ரார்ப்­பணம் செய்­யப்­பட்­டது. ஐ.நா. சபை அமைப்பில் ஐந்து பிர­தான பிரி­வுகள் உள்­ளன. ஐ.நா. பொதுச்­சபை, ஐ.நா. பாது­காப்­புச்­சபை, ஐ.நா. தலைைமைச் செய­லகம், சர்­வ­தே­ச ­நீ­தி­மன்றம், பொரு­ளா­தார சமூக சபை ஆகிய ஐந்து பிரி­வு­க­ளு­மாகும். ஐ.நா.வின் உத்­தி­யோ­க­பூர்வ மொழி­க­ளா­க­ அ­ராபி, ஆங்­கிலம், ஸ்பானிஸ், சீன மொழி, ரஷ்ய மொழி, பிரெஞ்ச் ஆகிய ஆறு மொழி­களும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. ஐ.நா. அமைப்பின் கீழ் உலக வங்கி குழுமம், உல­க­சு­கா­தார ஸ்தாபனம், உலக உணவு தாபனம், யுனிசெப், யு.என்.எச்.சி.ஆர், யுனெஸ்கோ ஆகி­யவை உள்­ள­டங்­க­லாக பல நிறு­வ­னங்கள் இயங்­கு­கின்­றன.

பொதுச்­ச­பையில் சகல அங்­கத்­துவ நாடு­களும் உச்­சி­ம­ா­நா­டு­க­ளிலும் ஏனைய மா­நா­டு­க­ளி­லும்­பங்­கு­பற்றி தீர்­மா­னங்கள் நிறை­வேற்­று­வது மாத்­தி­ர­மின்றி பல உலக விட­யங்கள் சம்­பந்­த­மாக கருத்­துக்கள் பரி­மாற உரித்­துள்­ளவை. ஐந்து பிரி­வு­க­ளிலும் பாதுகாப்புச் சபையே மிகவும் அதி­கா­ரங்கள் கூடிய பிரி­வாகும். பாது­காப்புச் சபையில் ஐந்து நிரந்­தர அங்­கத்­துவ நாடு­களும் பத்து நிரந்­த­ர­மற்ற அங்­கத்­துவ நாடு­களும் இடம்­பெ­று ­கின்­றன. இப்­பத்து நாடு­களும் சுழற்சி அடிப்­ப­டையில் தெரிவுசெய்­யப்­ப­டு­கின்­றன. ஐந்து நிரந்­தர அங்­கத்­துவ நாடு­க­ளுக்கு வீட்டோ என்னும் அதி­காரம் உண்டு. பாது­காப்புச் சபையில் ஏதா­வ­தொரு விடயம் விவா­திக்­கப்­படும் போது ஒரு நாடு அதனை வீட்டோ செய்தால் அதற்­குமேல் அந்த விடயம் விவா­திக்க முடி­யாது. தற்­போது ஐ.நா. செய­லாளர் நாய­க­மா­க ­போர்த்­துக்­கல்லைச் சேர்ந்த அந்­தோ­னியோ குட்­ரஸ் தெரிவுசெய்யப் ­பட்டு ஜனவரி 2017 இல் பொறுப்­பெ­டுத்­துக்­கொண்டார். ஐந்து நிரந்­தர அங்­கத்­துவ நாடு­க­ளுக்கு மட்­டு­மே ­தீர்­மானம் மேற்கொண்டு அமுல்­ப­டுத்­தும்­ அ­தி­காரம் உண்டு. மனித உரிமை பாது­காப்பு பேரவை உட்­பட ஏனை­ய­ அ­மைப்­புகள் தீர்­மா­ன­ம­் மட்­டுமே மேற்கொள்ள முடியும். அமுல்­ப­டுத்தும் அதி­கா­ரம் இல்லை.

ஐ.நா. சபை உட்­கட்­ட­மைப்பைப் பொறுத்­த­மட் டில் பல விமர்­ச­னங்கள் குறிப்­பாக பாது­காப்­புச்­ச­பையில் சீர்தி­ருத்­தங்கள் வேண்டி நிற்­கின்­றன. இது­வரை ஐ.நா. அமைப்பில் ஒரே­யொ­ரு­ கு­றிப்­பி­டத்­தக்க சீர்­தி­ருத்தம் இடம்­பெற்­றுள்­ளது. நிரந்­த­ர­மற்ற பாது­காப்­புச்­சபை நாடுகள் முன்னர் ஆறாக இருந்து1965 இல் அவை பத்­தாக அதி­க­ரித்­தன. 1992 இல் ­சீர்­தி­ருத்­தங்கள் பற்­றிய குரல்கள் ஒலிக்கத் தொடங்­கின. பாது­காப்­புச் ­ச­பையில் நிரந்­தர அங்­கத்­துவ நாடுகள் அவை­களின் வீட்டோ அதி­காரம், சபையில் உலக பிராந்­திய அடிப்­படை யில் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமை, பாது­காப்­புச் ­சபை, பொதுச்­சபை உற­வுகள் பற்­றாக்­குறை ஆகி­ய­வையே சீர்­தி­ருத்தம் கோரு­வோரின் விமர்­ச­னங்கள் ஆகும். அமெ­ரிக்கா, வட அமெ­ரிக்க கண்­ டத்­தையும், பிரிட்டன், பிரான்ஸ் மேற்கு ஐரோப்­பா­வையும், ரஷ்யா கிழக்கு ஐரோப்­பா­வையும், சீனா ஆசியக் கண்­டத்­தையும் சேர்ந்­தவை. ஆபி­ரிக்க, இலத்தீன் அமெ­ரிக்க நாடு­க­ளுக்கு பிர­தி­நி­தித்­துவம் இல்­லாமை, ஆசியக் கண்­டத்­திற்கு பிர­தி­நி­தித்­துவம் போதா­மை­ என்­பது பிராந்­திய பிர­தி­நி­தித்­துவம் தொடர்­பான விமர்­சனம் ஆகும். அண்­மைக்­ கா­லங்­களில் ஜேர்­மனி, ஜப்பான் ஆகி­யவை ஐ.நா. ச­பையின் செயற்­பாட்­டிற்­கான நிதி­ வ­ழங்­கலில் இரண்டாம், மூன்றாம் நிலை­களில் இருக்­கின்­றன. இரு நாடு­களும் நிரந்­தர அங்­கத்­துவ நாடு­க­ளாக தங்­க­ளையும் இணைக்க வேண்டும் என கோரு­கின்­றார்கள். பிரேசில் உலகின் நிலப்­ப­ரப்பில் ஐந்­தா­வது பெரிய நாடு. இந்­தியா உலக சனத்­தொ­கையில் இரண்டாம் இடத்­தி­லுள்ள நாடு. இந்த இரு நாடு­களும் பாது­காப்­புச் ­ச­பையில் நிரந்­தர அங்­கத்­துவம் கோரி­யுள்­ளன. இந்த நான்கு நாடு­க­ளும் ஜி4 நாடுகள் என அழைக்­கப்­ப­டு­கின்­றன. பிரிட்­டனும் பிரான்ஸும் பாது­காப்புச் சபையில் நிரந்­தர அங்­கத்­துவ நாடு­க­ளையும், நிரந்­த­ர­மற்ற அங்­கத்­துவ நாடு­களின் எண்­ணிக்­கையை அதி­க­ரிப்­ப­தற்கும் ஜி4 (இந்­தியா, பிரேசில், ஜேர்­மனி, ஜப்பான்) நாடுகளை நிரந்­தர நாடு­க­ளாகச் சேர்ப்­ப­தற்கும் விருப்பம் தெரி­வித்­துள்­ளன. அமெ­ரிக்கா ஜப்பான், இந்­தியா ஆகிய இரு நாடு­க­ளையும் நிரந்­தர அங்­கத்­துவ நாடு­க­ளாக சேர்ப்­பதை விரும்­பு­கி­றது. சீனா, ரஷ்யா இந்­தி­யா­விற்கு ஆத­ரவு காட்­டு­கின்­றன. அத்­துடன் சீனா அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் நாடுகள் பாது­காப்­புச்­ச­பையில் இடம்­பெற வேண்­டு­மென கோரு­கின்­றது. அதே­நேரம் பிராந்­திய பகை­மையும் ஜி4 நாடு­க­ளுக்கு எதி­ராக உள்­ளது. இத்­தாலி, - ஜேர்மன் இணை­வதை விரும்­ப­வில்லை. பாகிஸ்தான், இந்­தியா இணை­வதை விரும்­ப­வில்லை, மெக்­சிக்கோ, - பிரேசில் இணை­வதை விரும்­ப­வில்லை. எகிப்தும் ஜி4 க்கு எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ளது. இத்­தாலி, பாகிஸ்தான், மெக்­சிக்கோ, எகிப்து ஆகிய நாடுகள் கோப்பி கழகம் என அழைக்­கப்­ப­டு­கின்­றது. ஐ.நா. பட்­ட­யத்தின் பிர­காரம் சீர்­தி­ருத்­தங்கள் மேற்­கொள்­வ­தற்கு உறுப்­பி­னர்­களின் மொத்த எண்­ணிக்­கையில் மூன்றில் இரண்­டு­ பங்­கி­னரின் ஆத­ரவும் ஐந்து பாது­காப்­புச்­சபை நிரந்­தர அங்­கத்­துவ நாடு­களின் ஆத­ரவும் தேவை. ஏதா­வது ஒரு­நாடு வீட்­டோவை அல்­லது பிர­சன்­ன­ம­ளிக்­கா­விடின் சீர்­தி­ருத்தத்தை நிறை­வேற்ற முடி­யாது.

ஐ.நா. அமைப்­புக்கு அப்பால் சென்று இது­வரை காலமும் ஐ.நா.வின் சிறப்­பான சாத­னை­க­ளையும் சவால்­க­ளையும் அலசி ஆரா­யாமல் ஐ.நா.வின் வகி­பா­கத்­தி­னையும் 72 ஆண்­டு­க­ளாக அடைந்த அடை­வு­களின் பய­ணத்­தையும் சரி­யாக விளங்­கிக்­கொள்ள முடி­யாது. ஐ.நா. கடந்த சில ஆண்­டு­க­ளுக்குள் இரண்டு பெரும் சாத­னை­களை நிகழ்த்­தி­யுள்­ளது. முத­லா­வது சாத­னை­யா­னது ஈரான் அர­சாங்­கத்­துடன் அணு­சக்தி தொடர்­பா­ன­ ஒப்­பந்­தத்தைக் கைச்­சாத்­திட்­ட­மையைக் குறிப்­பி­டலாம். இந்த ஒப்­பந்­தத்தில் பாது­காப்­புச்­சபை அங்­கத்­துவ நாடு­க­ளான அமெ­ரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுடன் ஜேர்­ம­னியும் கைச்­சாத்­திட்­டுள்­ளது. இந்த ஒப்­பந்தம் மிகவும் உறு­தி­யா­னது. ஈரான் ஒப்­பந்த ஏற்­பா­டு­க­ளி­லி­ருந்து விலக முடி­யாது. இரண்­டா­வது சாத­னை­யாக மி­லே­னியம் அபி­வி­ருத்தி இலக்­குகள் நிகழ்ச்­சித்­திட்­டத்தை (ஏ.டி.ஜி.) நிறை­வேற்­றி­ய­மையைக் குறிப்­பி­டலாம். ஏ.டி.ஜி. திட்டம் மானிட வர­லாற்றில் பாரிய நீண்ட நிகழ்ச்­சித்­திட்­ட­மாகும். முதன்­மு­றை­யா­க­ வ­றுமை ஒழிப்பைப் பிர­தா­ன­ இ­லக்­காகக் கொண்டு தயா­ரிக்­கப்­பட்ட திட்­ட­மாகும். இரண்டு ஐ.நா. பொதுச் செய­லா­ளர்­க­ளான கோபி அனான், பான் கீ மூன் ஆகி­யோரால் நேர­டி­யாக மேற்­பார்வை செய்யப்பட்ட திட்­ட­மாகும். வறுமை ஒழிப்பு, சுகா­தார மேம்­பாடு, பாட­சா­லையில் மாண­வர்­களைச் சேர்த்தல், பெண்கள் சமத்­து­வம் ­போன்ற பல இலக்­குகள் முன்­னேற்­ற­க­ர­மான அடை­வு­களை பெற்­றுள்ளது. உலகில் கடு­மை­யான வறுமை அரை­வா­சி­யாகக் குறைந்­துள்­ளது. ஏ.டி.ஜி. இன் வெற்­றி­களால் உந்­தப்­பட்ட உலக நாடுகள் 2015 ஆம் ஆண்டு ஏ.டி.ஜி. இன் தொடர்ச்­சி­யாக நிலைத்­தி­ருக்கும் அபி­வி­ருத்தி இலக்­கு­களை ஐ.நா. உச்சி மா­நாட்டில் அங்­கீ­க­ரித்­தன. 2030 க்கு முன்­னர் எஸ்.டி.ஜி. இலக்­கு­களை அடை­ய­வேண்­டு­மென திட­சங்­கற்பம் பூண்­டுள்­ளனர். கடு­மை­யான வறு­மையை முற்­றாக ஒழித்தல், சமத்­து­வ­மின்­மையில் பாரிய முன்­னேற்றம் ஏற்­ப­டுத்தல், நிலைத்­தி­ருக்கும் சுற்­றா­டலைப் பேணல்­ஆ­கி­யவை மிகப்­பி­ர­தான இலக்­குகள் ஆகும். மேலும் ஐ.நா.வின் இன்­னொரு சாத­னை­யாக பாரிஸ் மா­நாட்டில் (COP 21) கால­நிலை மாற்றம் தொடர்­பான ஐ.நா. சம­வா­யத்தின் கீழ் மேற்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னங்கள் கால­நி­லை­மாற்றம், (புவி வெப்­ப­ம­டைதல்) தொடர்­பான மிகப்­பெ­ரிய வெற்­றி­யாகும். அத்­துடன் ஐ.நா. சமா­தானப் படை பல நாடு­களில் சேவை­யாற்­றி­யுள்­ளது. கடும் தொற்­று­நோய்­களை தடுப்­பதில் பல நிகழ்ச்சித் திட்­டங்­களை நிறை­வேற்­றி­யுள்­ளது. இயற்கை அனர்த்தம், பட்­டினி ஏற்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் நிவா­ரண நட­வ­டிக்­கை­களை நிறை­வேற்­றி­யுள்­ளது. உள்­நாட்டு மோதல்கள் கார­ண­மாக உரு­வா­கி­யுள்ள பாரிய அக­திகள் பிரச்­சி­னையை வினைத்­தி­றனுடன் கையாள்­கின்­றது. தொற்­றுநோய் தடுப்பு நட­வ­டிக்­கை­களில் எச்.ஐ.வி. நிகழ்ச்­சித்­திட்டம் முக்­கி­ய­மா­ன­தாகும். 2030 இல் எஸ்.டி.ஜி. இல் எயிட்ஸ் தொற்­று­நோயை முடி­வுக்குக் கொண்­டு­வ­ருதல் என்ற இலக்­குடன் செய­லாற்­று­கின்­றது. இதன்கீழ் புதிய எச்.ஐ.வி. தொற்­றுக்­களை இல்லாமல் செய்தல் எச்.ஐ.வி. தொற்­றி­ய­வர்­க­ளுக்கு எச்.ஐ.வி. சிகிச்­சைக்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்ளல், அவர்­களின் மனித உரி­மை­களைப் பாது­காத்தல், மேம்­ப­டுத்தல் தொற்று தொடர்­பான தர­வு­களை சேமித்து பத்­தி­ரப்­ப­டுத்­தி­ கொள்கை உரு­வாக்­கத்­திற்கு உத­வுதல் ஆகி­யவை ஐ.நா. வின் போற்­ற­தற்­தக்க சேவை­க­ளாகும்.

ஐ.நா. வைப் பற்றிப் பேசும் போது கல்வி, விஞ்­ஞானம், தொழில்­நுட்பம், மர­பு­ரிமைச் சொத்­துக்­களைப் பரா­ம­ரித்தல் ஆகிய அறி­வுக்­கொ­டை­களை வாரி­வ­ழங்கும் யுனெஸ்­கோவைப் பற்றி பேசாமல் இருக்க முடி­யாது. கல்­வி­யறி­வினை உயர்த்துதல், தர­மான கல்­வியை அளித்தல், புதிய தொழில்­நுட்ப உரு­வாக்­கங்­களை விரி­வ­டை­யச்­செய்தல், விஞ்­ஞான ஒத்­து­ழைப்பை விசா­லித்தல், சிந்­தனை வெளிப்­ப­டுத்தல், சுதந்­தி­ரத்தை மேம்­ப­டுத்தல், இயற்கை அனர்த்தம், மோதல்கள் போன்ற சந்­தர்ப்­பங்­களில் எவ்­வாறு முகங்­கொ­டுத்தல் என்ற துணி­வினை ஏற்­ப­டுத்தல், மர­பு­ரிமைச் சொத்துக்களைப் பரா­ம­ரித்தல் ஆகி­யன யுனெஸ்­கோ­வுக்கு மகுடம் சேர்க்கும் விட­யங்­க­ளாகும். மனித உரிமை பாது­காப்பு பேரவை, மனித உரிமை பாது­காப்பு, மனித உரி­மைகள் மேம்­பாடு போன்ற நட­வ­டிக்­கை­க­ளில போற்­ற­த்­தக்க சேவை செய்­கி­றது.

அக­திகள் தொடர்­பாக சேவை­யாற்றும் அமைப்பு யு.என்.எச்.சி.ஆர் ஆகும். இன்று உலகம் பூரா­கவும் 65.6 மில்­லியன் மக்கள் அக­தி­க­ளாக உள்­ளனர். கடந்த ஏழு ஆண்­டு­க­ளாக சிரிய உள்­நாட்டு மோதல்­களின் கார­ண­மாக ஐந்து மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட சிரிய மக்கள் அக­தி­க­ளாக பல நாடு­களில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். லெபனான், ஜோர்தான், ஈராக், எகிப்­து­ ஆ­கிய நாடு­க­ளிலும் ஐரோப்­பா­விலும் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். தென் சூடானில் அக­திகள் பிரச்­சினை பார­தூ­ர­மா­க­வுள்­ளது. 1949 இல் அக­தி­க­ளான பலஸ்­தீ­னர்­களைக் கவ­னிப்­ப­தற்கு ­முகவர் நிலையம் ஸ்தாபிக்­கப்­பட்­டது. இவை யாவற்­றிற்கும் ஐ.நா. சபையின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது.

இன்று பயங்கரவாதம் என்பது உலகை அச்சுறுத் தும் பிரச்சினைகளில் மிக முக்கியமானது என் பதை சர்வதேச அமைப்புக்களிலும், பிராந்திய அமைப்புக்களிலும், தேசிய அரசாங்க பாரா ளுமன்றங்களிலும் விவாதிப்பதிலிருந்து பயங்க ரவாதம் எவ்வளவு தூரம் மானுட இருப்பை அச்சுறுத்துகின்றது என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஐ.நா. சபை பயங்கரவாதத்தை உலக நாடுகள் எதிர்கொள்ளும் பொருட்டு ஐ.நா. சபை யில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இத் தீர்மானங்கள் அங்கத்துவ நாடுகள் எவ்வாறு தத்தமது நாடுகளில் தனியாகவும் வேறுநாடுக ளுடன் கூட்டாகவும் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டுமென வழிகாட்டுகின்றன.

இரண்டு மகாயுத்தங்களை பூலோகம் கண்டது. இவை மனித குலத்தின் சிதைவுக்கும் நாகரிக வீழ்ச்சிக்கும் காரணமாயின. பொதுவாக நாம் எமது அன்றாட விவாதங்களில், அரசியல் தொடர் பான விடயங்களில் தான் கூடுதலான அக்க றையை வெளிப்படுத்தி ஐ.நா.வின் சாதனைகளை நிறைபோட்டுக் பார்க்கும் போது உலகின் பல தளங்களில் நடந்த, நடைபெறுகின்ற இராணுவ மோதல்கள் பற்றியும் அவற்றின் தாக்கங்கள் பற்றியும் அவற்றை தடுப்பதில் ஐ.நா. சபை தவறி விட்டது என்று விமர்சனங்களை முன்வைக்கும் பண்பு பொதுவாக காணப்படுகின்றது. அதே நேரம் எவ்வளவு தான் விமர்சனங்கள் முன்வைக் கப்பட்டாலும் மூன்றாம் உலக யுத்தம் இன்று வரை தோற்றுவிக்கப்படவில்லை என்பதும் முற்பந்தி களில் கூறப்பட்ட சமூக, விஞ்ஞான, அறிவியல் சார்ந்த அடைவுகள் ஐ.நா. சபையின் குறிப்பி டத்தக்க பெறுகைகள் ஆகும். ஐ.நா. சபையில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்றி னால் ஐ.நா. சபையின் பங்களிப்பு மேலும் காத்திர மாகும் என்பதில் சந்தேகமில்லை.

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.