Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலையில் கதவடைப்புப் போராட்டம்

Featured Replies

யாழ் பல்கலையில் கதவடைப்புப் போராட்டம்

யாழ் பல்கலையில்  கதவடைப்புப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையெனத்

தெரிவித்து, யாழ். பல்கலைக்கழகத்தில் கதவடைப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மூன்று அரசியல் கைதிகளும் கடந்த 35 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில், அரச தலைவர் விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்த போதும், எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்தே இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

uni-3.jpg

uni-1.jpg

uni-4.jpg

http://newuthayan.com/story/41804.html

  • தொடங்கியவர்

யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டன – போராட்டம் தொடர்கிறது:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

jaff-uni1-1-800x450.jpg

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சகல நடவடிக்கைகளையும் முடக்கும் வகையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டு போராட்டம் முன்னெடுக்க படுகின்றது.

யாழ்.பல்கலைகழகம் முன்பாக இன்று காலை கூடிய மாணவர்கள் உள்ளிட்ட பல்கலைகழக சமூகத்தினர் பல்கலை கழக வாயில்களை மூடி கொட்டும் மழைக்கு மத்தியில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சிறைச் சாலைகளில் பல வருடங்களாக எந்த விதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும், உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாய பூர்வமான கோரிக்கைகளை செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும் , சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவல நிலை உணர்ந்து பொறுப்புக் கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள், அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்கைப் பிரயோகித்து கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும்.ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக் கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

jaff-uni2-1-800x450.jpgjaff-uni3-1-800x450.jpgjaff-uni4-800x450.jpgjaff-uni5-800x450.jpg

http://globaltamilnews.net/archives/47517

  • தொடங்கியவர்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சித்த மருத்துவ பீட மாணவர்கள் போராட்டம்

 

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவர்கள் இன்று யாழ்.கைதடி ஏ-9 வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

20171030_090601_copy.JPG

இன்று காலை 9 மணி தொடக்கம் சுமார் 2 மணி நேரம் மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

20171030_090607_copy.jpg

இதன்போது நல்லாட்சி அரசே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். என்ற கோஷங்களை எழுப்பியவாறும் கோஷங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன் வகுப்புக்களையும் புறக்கணித்திருந்தார்கள். 

20171030_090611_copy.jpg

20171030_090655_copy.JPG

20171030_090732_copy.JPG

20171030_090734.jpg

http://www.virakesari.lk/article/26451

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.