Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனைவரும் தயா­ரா­குங்­கள்

Featured Replies

மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனைவரும் தயா­ரா­குங்­கள்

மாவீ­ரர்­களை நினை­வு­கூர அனைவரும் தயா­ரா­குங்­கள்

தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக தமது இன்­னு­யிர்­களை உவந்­த­ளித்த புனி­தர்­க­ளா­கிய மாவீ­ரர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்­காக எதிர்­வ­ரும் நவம்­பர்-27 மாவீ­ரர் நாளைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு இப்­போதே தயா­ரா­கு­மாறு கிளி­நொச்சி மாவட்ட மாவீ­ரர் பணிக்­குழு அழைப்பு விடுத்­துள்­ளது.

கிளி­நொச்சி மாவீ­ரர் பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் சந்­திப்பு கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சாலை முன்­பா­வுள்ள இடத்­தில் நேற்று மாலை நடை­பெற்­றது. அங்கு பணிப்­புழு இவ்­வாறு அழைப்பு விடுத்­தது.

கிளி­நொச்சி மாவட்ட மாவீ­ரர் பணிக்­கு­ழு­வின் தலை­வர் சுப்­பி­ர­ம­ணி­யம் பசு­ப­திப்­பிள்ளை இது தொடர்­பில் மேலும் தெரி­வித்­தவை வரு­மாறு:

தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக தாம் வாழ­வேண்­டிய வய­தில் தம்­மையே கொடை­யாக்­கிய புனி­தர்­க­ளா­கிய மாவீ­ரர்­களை ஒவ்­வொரு வரு­ட­மும் நவம்­பர்-27 ஆம் திகதி மாவீ­ரர் நாளாக தமி­ழர் தாய­கத்­தி­லும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் தமிழ் மக்­கள் மிக­வும் உணர்­வெ­ழுச்­சி­யா­கக் கடைப்­பி­டிப்­பது வழமை.

அந்த வகை­யில் இந்­த­மு­றை­யும் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள கன­க­பு­ரம் மாவீ­ரர் துயி­லும் இல்­லம், முழங்­கா­வில் மாவீ­ரர் துயி­லும் இல்­லம் ஆகி­ய­வற்­றில் உணர்­வெ­ழுச்­சி­யா­கக் கடைப்­பி­டிக்­கத் தயா­ராகி வரு­கின்­றோம்.

2008 ஆம் ஆண்­டின் பின்­னர் 7 வரு­டங்­கள் தமி­ழர் தாய­கப் பகு­தி­க­ளி­லுள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளில் தமிழ் மக்­கள் தமது உற­வு­க­ளான மாவீ­ரர்­களை விதைத்த கல்­ல­றை­க­ளில் சுட­ரேற்றி நினை­வு­கூர முடி­யா­த­படி இரா­ணு­வத்­தி­னர் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­களை இடித்­த­ழித்­துத் துவம்­சம் செய்­தி­ருந்­த­னர்.

மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளி­லுள்ள மாவீ­ரர்­க­ளின் கல்­ல­றை­க­ளின் மேல் இரா­ணு­வ­மு­காம்­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இரா­ணுவ அச்­சு­றுத்­தல்­க­ளும் காணப்­பட்­டன.

ஆட்சி மாற்­றத்­தைத் தொடர்ந்து கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளி­லி­ருந்த இரா­ணுவ முகாம்­கள் அகற்­றப்­பட்டு துயி­லும் இல்­லங்­கள் இரா­ணு­வக் கண்­கா­ணிப்­பின் கீழ் காணப்­பட்­டன.

மாவீ­ரர்­க­ளான தமது உற­வு­களை மாவீ­ரர் நாளில் மாவீ­ரர் துயி­லும் இல்­லத்­தில் நினை­வு­கூ­ரு­வ­தற்­கா­கக் காத்­தி­ருந்த மாவீ­ரர்­க­ளின் உற­வு­கள் கடந்த வரு­டம் கிளி­நொச்சி மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளுள் தற்­து­ணி­வா­கச் சென்று சிர­ம­தா­னம் செய்து கடந்த வரு­டம் மாவீ­ரர் நாள் நிகழ்­வு­களை மிக­வும் உணர்­வெ­ழுச்­சி­யா­கக் கடைப்­பி­டித்­தி­ருந்­தோம்.

ஆனா­லும் தமி­ழர் தாய­கத்­தின் பல பாகங்­க­ளி­லும் உள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளின் மீது இரா­ணுவ முகாம்­கள் தற்­போ­தும் காணப்­ப­டு­கின்­றன. அவை எப்­போது விடு­விக்­கப்­ப­டும், அங்கு விதைக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளான புனி­தர்­களை எப்­போது அங்கே அவர்­க­ளின் கல்­ல­றை­க­ளில் நினை­வு­கூ­ரப்­போ­கின்­றோம் என்ற எதிர்­பார்ப்­புக்­க­ளு­ட­னும் ஏக்­கத்­து­ட­னுமே நாம் இருக்­கி­றோம்.

கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லுள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளான கன­க­பு­ரம் மாவீ­ரர் துயி­லும் இல்­லம், முழங்­கா­வில் மாவீ­ரர் துயி­லும் இல்­லம் ஆகி­ய­வற்­றில் இந்­த­மு­றை­யும் மிக­வும் உணர்­வெ­ழுச்­சி­யாக மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

மாவீ­ரர் நாள் நிகழ்­வு­களை உணர்­வெ­ழுச்­சி­யா­க­வும் சீரான ஒழுங்­கு­ப­டுத்­த­லு­ட­னும் கடைப்­பி­டிப்­ப­தற்­காக மாவீ­ரர் நாள் ஒழுங்­க­மைப்­புப் பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

கிளி­நொச்­சி­யின் பல பாகங்­க­ளி­லும் இருந்­தும் மாவீ­ரர்­க­ளது உற­வி­னர்­கள், முன்­னாள் போரா­ளி­கள், மத­கு­ரு­மார் ஆகி­யோரை உள்­ள­டக்கி சட்­டப்­படி பிர­தேச சபை­யி­னது அனு­ம­தி­யு­டன் இந்­தப் பணிக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­கா­கப் போரா­டிய தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் இணைந்து தமி­ழர்­க­ளின் விடி­வுக்­கா­கப் போராடி தம் இன்­னு­யி­ரையே கொடை­யாக்­கிய எமது மாவீ­ரர்­களை நவம்­பர்-27 அன்­றைய தினம் நினை­வு­கூ­ரு­வ­தற்கு தயா­ரா­கும் நாம் அர­சி­ய­லுக்­கப்­பால் சென்று கட்சி பேதங்­களை மறந்து நாம் எல்­லோ­ரும் உணர்­வுள்ள தமி­ழர்­கள் என்ற எண்­ணத்­து­டன் செயற்­ப­டத் தயா­ரா­கு­வோம் – என்­றார்.

http://newuthayan.com/story/41821.html

  • தொடங்கியவர்

நவம்பர் 27ஆம் திகதியை உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிப்பதற்குத் கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழு அழைப்பு

 

 

நவம்பர் 27ஆம் திகதியை உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிப்பதற்குத்  கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழு அழைப்பு

தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நவம்பர் 27ஆம் திகதியை உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிப்பதற்குத் தயாராகுமாறு கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது. கிளிநொச்சி மாவீரர் பணிக்குழுவின் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை முன்பாக நடைபெற்றது. இந்த சந்திப்பின்போதே மாவீரர் பணிக்குழு தமிழ் மக்களிடம் இந்த அழைப்பை விடுத்துள்ளது.
ஊடகவியலாளர்கள் முன் கருத்துரைத்த கிளிநொச்சி மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் தலைவர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளை, தமிழ் மக்களின் விடுதலைக்காக தாம் வாழவேண்டிய வயதில் தம்மையே கொடையாக்கிய புனிதர்களாகிய மாவீரர்களை ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் தமிழ் மக்கள் மிகவும் உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிப்பது வழமை. இம்முறையும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் மிகவும் உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிக்கத் தயாராகி வருகின்றோம்.
கடந்த 2008ஆம் ஆண்டின் பின்னர் 7 வருடங்கள் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் தமிழ் மக்கள் தமது உறவுகளான மாவீரர்களை விதைத்த கல்லறைகளில் சுடரேற்றி நினைவுகூர முடியாதபடி இராணுவத்தினரால் மாவீரர் துயிலும் இல்லங்கள் இடித்தழித்துத் துவம்சம் செய்யப்பட்டிருந்தது.மாவீரர் துயிலும் இல்லங்களிலுள்ள மாவீரர்களின் கல்லறைகளின் மேல் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டுக் காணப்பட்டதுடன், இராணுவ அச்சுறுத்தல்களும் காணப்பட்டன.
கடந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு இராணுவக் கண்காணிப்பின் கீழ் காணப்பட்டன. மாவீரர்களான தமது உறவுகளை மாவீரர் நாளில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுகூருவதற்காகக் காத்திருந்த மாவீரர்களின் உறவுகள் கடந்த 2016இல் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லங்களுள் தற்துணிவாகச் சென்று சிரமதானம் செய்து கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்வெழுச்சியாகக் கடைப்பிடித்திருந்தோம்.
ஆனாலும், தமிழர் தாயகத்தின் பல பாகங்களிலும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களின் மீது இராணுவ முகாம்கள் தற்போதும் காணப்படுகின்றமை எம்மத்தியில் எப்போது அவை விடுவிக்கப்படும் அங்கு விதைக்கப்பட்ட எமது உறவுகளான புனிதர்களை எப்போது அங்கே அவர்களின் கல்லறைகளில் நினைவுகூரப்போகின்றோம் என்ற எதிர்பார்ப்புக்களுடனும் ஏக்கத்தையுமே ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களான கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் இம்முறையும் மிகவும் உணர்வெழுச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.அந்த வகையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்வெழுச்சியாகவும் சீரான ஒழுங்குபடுத்தலுடனும் கடைப்பிடிப்பதற்காக மாவீரர் நாள் ஒழுங்கமைப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்குழுவானது கிளிநொச்சியின் பல பாகங்களிலும் இருந்து மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள், மதகுருமார் ஆகியோரை உள்ளடக்கி சட்டப்படி பிரதேச சபையினது அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமிழர்களின் விடிவுக்காகப் போராடி தம் இன்னுயிரையே கொடையாக்கிய எமது மாவீரர்களை நவம்பர் 27 அன்றைய தினம் நினைவுகூருவதற்கு தயாராகும் நாம் அரசியலுக்கப்பால் சென்று நாம் எல்லோரும் உணர்வுள்ள தமிழர்கள் என்ற எண்ணத்துடன் செயற்படத் தயாராகுவோம் என கிளிநொச்சி மாவீரர் பணிக்குழு அழைப்பு விடுத்துள்ளது.(15)12

http://www.samakalam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.