Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் போட்டி செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

கொல்கத்தா டெஸ்ட்: டி.ஆர்.எஸ். சர்ச்சையில் சிக்கிய இலங்கை பேட்ஸ்மேன்

 

கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின்போது இலங்கை பேட்ஸ்மேன் டி.ஆர்.எஸ். கேட்கும் முன் டிரெஸ்ஸிங் அறையை பார்த்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கொல்கத்தா டெஸ்ட்: டி.ஆர்.எஸ். சர்ச்சையில் சிக்கிய இலங்கை பேட்ஸ்மேன்
 
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது. பின்னர் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் சண்டிமல் அவுட்டானதும் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா ஹெராத் உடன் ஜோடி சேர்ந்தார்.

57-வது ஓவரை மொகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஷமி இன்-ஸ்விங்காக வீசினார். பந்து வலது கை பேட்ஸ்மேன் ஆன தில்ருவான் பெரேராவின் வலது காலை தாக்கியது. இதனால் இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்டனர்.

உடனே நடுவர் நிகெல் லாங் எந்தவித யோசனையும் இல்லாமல் அவுட் கொடுத்தார். தில்ருவான் பெரேரா விளையாடிய ஸ்டிரைக்கின் பின்புறம்தான் இலங்கையின் டிரஸ்ஸிங் அறை இருந்தது. அவுட்டுதான் என்று நினைத்து டிரஸ்ஸிங் அறை நோக்கி நடக்க முற்சி செய்த தில்ருவான், டிரஸ்ஸிங் அறையை பார்த்த பின்னர் ரிவியூ கேட்டார்.

201711191903589154_1_7dilruwan002-s._L_styvpf.jpg

ரிவியூ-வில் பந்து ஆஃப் சைடு பிட்ச் ஆனதால் நடுவர் அவுட் முடிவு திரும்பப்பெறப்பட்டது. இதனால் தில்ருவான் டக்அவுட்டில் இருந்து தப்பினார். பின்னர் 5 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமியின் 69-வது ஒவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்.

தில்ருவான் பெரேரா டிரஸ்ஸிங் அறையை பார்த்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் பெங்களூரு டெஸ்டின்போது ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் எல்.பி.டபிள்யூ-விற்கு எதிராக அப்பீல் கேட்களாமா? என்று டிரஸ்ஸிங் அறையை நோக்கி கேட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இந்த சம்பவம் ஒரு சீட்டிங் என கடுமையான சாடினார். எனது மூளை மங்கிவிட்டது (Brain Fade) என ஸ்மித் வருத்தம் தெரிவித்தார்.

தற்போது தில்ருவான் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், எதிர்முனையில் விளையாடிய ஹெராத், தில்ருவான் பெரேரா தவறு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹெராத் கூறுகையில் ‘‘இது ஒரு சிம்பிள் விஷயமாக நான் நினைக்கிறேன். நான் நடுவர் நிகெல் லாங்கிடம் ரிவியூவிற்காக கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவேளை தில்ருவான் நான் கூறியதை கேட்டிருக்கலாம்.

தில்ருவான் டிரஸ்ஸிங் அறையை நோக்கியதை நான் பார்க்கவில்லை. நான் நிகெல் லாங் உடன் பேசிக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட சின்னல் டிரஸ்ஸிங் அறையில் இருந்து கொடுக்கப்படவில்லை’’ என்றார்.

201711191903589154_2_7diruwan003-s._L_styvpf.jpg

இதுகுறித்து புவனேஸ்வர்குமார் கூறுகையில் ‘‘போட்டிக்கான நடுவர் மற்றும் அம்பயர்களின் அதிகாரப்பூர்வ வார்த்தை வரும் வரை, நாம் அதுகுறித்து ஒருவார்த்தைக் கூட கூற இயலாது. இந்த சம்பவம் குறித்து கருத்துக் கூற நாங்கள் விரும்பவில்லை’’ என்றார்.

இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்த சர்ச்சையை மறுத்துள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/19190355/1129790/India-vs-Sri-Lanka-2017-Rangana-Herath-Denies-Dilruwan.vpf

  • Replies 64
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இலங்கை 122 ரன்கள் முன்னிலைக்குப் பிறகு தவண், ராகுல் அதிரடி: இந்தியா 171/1

Dhawan

ஷிகர் தவண்.   -  படம்.| ஏஎப்பி.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான இன்று இலங்கை அணியை 294 ரன்களுக்கு சுருட்டிய பிறகு இந்திய தொடக்க வீரர்கள் ஷிகர் தவன், கே.எல்.ராகுல் அதிரடியாக ஆட இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட முடிவில் ராகுல் 73 ரன்களுடனும் புஜாரா 2 ரன்களுடனும் இருந்தனர், இந்திய அணி 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பிட்சிலும் வானிலையிலும் பேட்டிங் நிலமைகள் சற்றே எளிதாக ஷிகர் தவண் மிக அருமையாக அதிரடியை வெளிப்படுத்தி 116 பந்துகளில் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 94 ரன்கள் எடுக்க, ராகுல் 113 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 37 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக விரைவுகதி 167 ரன்களைச் சேர்த்தனர்.

முன்னதாக சொந்த மண்ணில் ஆடும் மொகமது ஷமி, புவனேஷ் குமார் ஆகியோர் அற்புதமாக வீசி தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீசினர். அஸ்வின் 8 ஓவர்களே வீசினார், ஜடேஜாவுக்கு ஒரே ஓவர்தான் அளிக்கப்பட்டது. 3-வது முறையாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவில் ஒரு இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுகளையும் தங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர். 1983-84-க்குப் பிறகு இப்போது முதல் முறை. அப்போது கபில்தேவ், மதன்லால் ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இங்கிலாந்தை வீழ்த்தினர்.

இலங்கை அணி 294 ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி தொடக்க வீரர்கள் ராகுல், தவண் அதிரடியாகத் தொடங்கினர், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் கமகே மூன்று பவுண்டரி பந்துகளுடன் தொடங்க ராகுல் அந்த 3-ஐயும் பவுண்டரியாக மாற்றினார். தவண் கட், புல் ஷாட் என்று அசத்தினார். ஸ்பின்னர்களைக் கொண்டுவந்ததும் பயனளிக்கவில்லை, ராகுல் ஒன்று இரண்டு என்று எளிதில் சேர்க்க, தவண் மேலேறி வந்து நேராக சாத்துமுறை நடத்தினார். குறிப்பாக ரங்கனா ஹெராத் 3 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்தார்.

இலங்கை அணியின் முன்னிலையான 122 ரன்களை இந்திய அணி 29 ஓவர்களில் எடுத்தது. 94 ரன்கள் எடுத்த ஷிகர் தவண், ஷனகா பந்தை மேலேறி வந்து ஆடினார். உள்விளிம்பில் பட்டு டிக்வெல்லாவிடம் கேட்ச் ஆனது, ஆனால் தவண் ரிவியூ செய்தார், அதில் எட்ஜ் ஆனது உறுதியானது.

இன்று காலை நிரோஷன் டிக்வெல்லா, சந்திமால் பேட்டிங்கைத் தொடங்கினர். இருவரும் எதிர்த்தாக்குதல் முறையில் ஆடினர், பந்து நிறைய முறையை மட்டையை நூலிழையில் கடந்து சென்றதால் வெறுப்படைந்த ஷமி ஓரிரு ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினார், புவனேஷ்வர் குமாரும் களைப்பின் காரணமாக ஒரு கட்டத்தில் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை கொடுத்தார், இலங்கை அணி முதல் அரைமணிநேரத்தில் 200 ரன்களைக் கடந்தனர். டிக்வெல்லா ஷமியின் அருமையான அவுட் ஸ்விங்க்கருக்கு எட்ஜ் ஆகி வெளியேறினார்.

தசுன் சனகாவுக்கு புவனேஷ்வர் குமார் ஒரு மனோஜ் பிரபாகர் ரக பெரிய இன்ஸ்விங்கரை வீசினார், பந்து வெளியே செல்வதாக நினைத்து சனகா அதனை ஆடாமல் விட கால்காப்பைத் தாக்கியது. அவுட் ஆனார். இவ்வகை லேட்ஸ்விங் பந்துகளை தற்போதைய கிரிக்கெட்டில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டுமே வீசி வருகிறார். 5 பந்துகள் சென்று ஷமியிடம் சந்திமால் வீழ்ந்தார், ஆனால் இது ஆட வேண்டாத பந்து, ஆடினார் எட்ஜ் ஆனது. இலங்கை அணி 201/7 என்று ஆனது. திலுருவன் பெரெரா ஷமி பந்தில் ஆன எல்.பி. சர்ச்சைக்குரிய வகையில் ரிவியூ செய்யப்படாமல் இருந்தால் இலங்கை அணி 210ரன்களுக்குள் சுருண்டிருக்கும். ஆனால் ரங்கனா ஹெராத் மீண்டும் ஒருமுறை கடினமான பந்து வீச்சுக்கு எதிராக தனது குறுக்கு மட்டை ஷாட்களை திறம்பட பயன்படுத்தி 67 ரன்களை எடுத்தார், இதில் 9 பவுண்டரிகள் அடித்து ஷமி பந்தில் புவனேஷ்வரிடம் கேட்ச் கொடுத்தார்.

நாளை 5-ம் நாள் ஆட்டம், இந்திய அணி 49 ரன்களையே எடுத்திருப்பதால் ஆட்டம் ட்ராவை நோக்கியே செல்கிறது என்று தெரிகிறது. கோலி ஏதாவது சுவாரசிய டிக்ளேர் செய்தால்தான் உண்டு.

http://tamil.thehindu.com/sports/article20555824.ece

  • தொடங்கியவர்

வெற்றியை நோக்கிய இந்திய அணியின் அபார முயற்சி: தப்பித்த இலங்கை; ஆட்டம் டிரா!

 

kumar

இலங்கையின் திலுருவன் பெரேரா, புவனேஷ் பந்தில் பவுல்டு ஆகும் காட்சி.   -  படம். | கே.ஆர்.தீபக்.

buvanesh

ஆட்ட நாயகன் புவனேஷ்வர் குமார்.   -  படம்.| ஏ.பி.

kumar

இலங்கையின் திலுருவன் பெரேரா, புவனேஷ் பந்தில் பவுல்டு ஆகும் காட்சி.   -  படம். | கே.ஆர்.தீபக்.

buvanesh

ஆட்ட நாயகன் புவனேஷ்வர் குமார்.   -  படம்.| ஏ.பி.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நிறைய நாடகங்களுடன் நடந்தேறி கோலியின் அபாரமான சதம் மற்றும் புவனேஷ் குமாரின் பிரமாதப் பந்து வீச்சுடன் வெற்றிக்கான முயற்சியுடன் ஆடப்பட்டு கடைசியில் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இலங்கை தன் 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் என்று போராடிய நிலையில் டிரா ஆனது.

முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் முன்னிலை பெற்று கடைசியில் தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய நிலைக்கு இலங்கை அணி தள்ளப்ப்பட்டதற்குக் காரணம் கோலியின் சதமும் இந்திய வேகப்பந்து வீச்சும் என்றால் மிகையாகாது.

போதிய வெளிச்சமின்மை காரணமாக போதிய ஓவர்கள் இருந்தும் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது, கோலி நடுவரிடம் விசாரித்தார், பெரிய சர்ச்சை ஒன்றுமில்லை, உடனேயே நடுவருக்குக் கைகொடுத்தார், ஹெராத்துக்குக் கைகொடுத்து அவர் முதுகில் தட்டிக்கொடுத்தார், 5-ம் நாளில் நிகழ்ந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் கடைசியில் சமாதானத்துடன் முடிந்தது.

கோலியின் சதம் இல்லையெனில், அவர் ஒருவேளை தான் ஆடிய அந்த முதல் ரிஸ்க் ஷாட்டில் ஆட்டமிழந்திருந்தால், ஆட்டம் ஒருவேளை இலங்கைக்குச் சாதகமாக அமைந்திருக்கும், ஆனால் சஹா ஆட்டமிழந்தவுடன் விராட் கோலி எதிர்த்தாக்குதல் ஆட்டம் ஆடினார். முதல் 50 ரன்களை 80 பந்துகளில் எடுத்த விராட் அடுத்த 54 ரன்களை 39 பந்துகளில் விளாசி 50வது சதமெடுத்தார்.

இலங்கை அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது, 40க்கும் மேற்பட்ட ஓவர்கள் இருந்தன, ஆனால் விராட் கோலியின் அதிநெருக்கடி கேப்டன்சி, அவர் எதிர்பார்ப்புக்கு இணங்கிய புவனேஷ் குமார், மொகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரது பந்து வீச்சு இலங்கை அணியை அதீதப் பதற்றத்துக்கு ஆளாக்கியது, ஆனாலும் தொடக்க வீரர்கள் அனாவசியமாக வெளியே சென்ற பந்தை சரியாக ஆடாமல் மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆக ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்தது.

கோலி முன்னதாகவே டிக்ளேர் செய்திருக்க வேண்டும் என்று அபத்தமாக சிலர் கருதக்கூடும் அவரது சதம் இல்லையெனில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடியிருக்கும் என்பதே உண்மை. மேலும் மழையால் ஏகப்பட்ட ஓவர்களை இழந்த ஒரு டெஸ்ட் போட்டியை இந்த அளவுக்கு விறுவிறுப்பாகக் கொண்டு சென்றதற்காக விராட்கோலி பாராட்டுக்குரியவரானார். வேகப்பந்து வீச்சு பவுலர்களூம் பாராட்டுக்குரியவர்களே. குறிப்பாக புவனேஷ் குமார் 11 ஓவர்கள் வீசி அதில் 8 மெய்டன்களுடன் 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஷமி 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பறிகொடுத்த 17 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே கைப்பற்றினர். இது உள்நாட்டில் அரிதான ஒரு விஷயமே.

சுரங்க லக்மல் அபாரப் பந்து வீச்சு:

இன்று காலை 171/1 என்று தொடங்கியது இந்திய அணி. சதமெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல் 79 ரன்கள் எடுத்து ஆஃப் ஸ்டம்பில் ஃபுல் லெந்தில் பிட்ச் ஆகி உள்ளே வந்த பந்தை தவறாக பிளிக் ஆட முற்பட்டார் கால்காப்புக்கும் மட்டைக்கும் இடையே புகுந்து மிடில் ஸ்டம்பை தாக்கியது. காலை இன்னும் நன்றாக நீட்டி, நேர் பேட்டில் ஆடியிருந்தால் பந்து புகுந்திருக்காது.

அடுத்ததாக புஜாரா 22 ரன்கள் எடுத்த நிலையில் லக்மலின் பந்து ஒன்று அதிகமாக எழும்ப புஜாரா திகைத்தார். ஆனால் பந்து மட்டையின் மேல் பகுதியில் பட்டு கல்லியில் திலுருவனின் அருமையான கேட்சாக அமைந்தது, லக்மல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதே ஒவரில் அதிர்ச்சிக் காத்திருந்தது, ரஹானே இறங்கியவுடன் மிக அருமையாக லக்மல் அவருக்கு 3 ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அவரை பின்னங்காலில் நிறுத்தினார், பிறகு ஒரு பந்தை ஃபுல் லெந்தில் உள்ளே கொண்டு வர ரஹானே கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆகி டக் அவுட் ஆனார். அனுபவசாலியான ரஹானே 3 ஷார்ட் பிட்ச் பந்துக்குப் பிறகு ஒரு ஃபுல் லெந்த் இன்ஸ்விங்கரையோ அவுட் ஸ்விங்கரையோ எதிர்பார்த்திருக்க வேண்டும்.

213/4 என்ற நிலையில் ஜடேஜா, கோலியுடன் இணைந்து ஸ்கோரை 249க்கு கொண்டு சென்றனர். ஜடேஜா 41 பந்துகள் நின்று ஒரு பவுண்டரியுடன் ஆடிய மந்தமான இன்னிங்ஸ் ஆஃப் ஸ்பின்னர் திலுருவன் பெரேரா மூலம் முடிவுக்கு வந்தது. கட் ஆட முடியாத பந்தை பின்னால் சென்று ஆடினார், ஆனால் கட் ஆடமுடியவில்லை ஏதோ செய்தார் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. உணவு இடைவேளையின் போது இந்திய அணி 251/5, விராட் கோலி 41 நாட் அவுட். அதன் பிறகு அஸ்வின் (7), சஹா (5) ஆகியோர் ஷனகாவிடம் வீழ்ந்தனர். புவனேஷ் குமார் 8 ரன்களில் கமகேவிடம் வீழ்ந்தார். ஷமி 12 ரன்கள் எடுக்க புதிய பந்து எடுத்தவுடன் கோலி அதிரடி ஆட்டம் ஆடி சதமெடுக்க இந்திய அணி 352/8 என்று டிக்ளேர் செய்தது.

லக்மல் 3 விக்கெட்டுகளையும், ஷனகா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

புவனேஷ்வர் குமார் அபாரம்; தோல்வியிலிருந்து தப்பிய இலங்கை அணி:

231 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆக்ரோஷமான இந்திய பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் புவனேஷ்குமார் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான பந்தை சதீரா பஞ்ச் செய்ய முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். உண்மையில் தேவையில்லாத ஷாட். அதே போல் ஷமி பந்திலும் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார் கருண ரத்னே. தேநீர் இடைவேளையின் போது இலங்கை 8/2.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு 7 ரன்கள் எடுத்த திரிமானே ஆட்டமிழந்தார். புவனேஷ் குமார் ரவுண்ட் த விக்கெட்டில் உள்ளே வரும் கோணத்தில் பந்தை வீசினார், ஆனால் பந்து அவ்வளவாக உள்ளே வரவில்லை, ஆடாமல் விட்டிருக்கலாம் ஆனால் ஆடினார் கல்லியில் ரஹானேயிடம் கேட்ச் ஆனது. மேத்யூஸ், உமேஷ் யாதவ்வை பவுண்டரி அடித்த அதே ஓவரில் பந்து ஒன்று சறுக்கிக் கொண்டு ஸ்டம்புக்கு நேராக வர கால்காப்பில் வாங்கினார் மேத்யூஸ், நடுவர் நாட் அவுட் என்றா, கோலி ரிவியூ செய்தார், மிகச்சரியான ரிவியூ, இலங்கை 22/4.

சந்திமால், டிக்வெல்லா இணைந்தனர், டிக்வெல்லா, மொகமது ஷமியை இலக்கு வைத்து அடித்தார், முதலில் ஷார்ட் பிட்ச் பந்து ஒன்றை லாங் லெக்கில் ஹூக் செய்து அபாரமான சிக்சரை அடித்தார், பிறகு ஆஃப் ஸ்ட்ம்புக்கு வெளியேயான பந்தை டி20 பாணியில் நகர்ந்து சென்று ஸ்டம்புகளுக்குப் பின்னால் சென்று லெக்திசையில் ஒரே தூக்குத் தூக்கினார் சிக்ஸ் ஆனது.

பிறகு தேவையில்லாமல் காலத்தை விரயம் செய்யும் நோக்கத்துடன் ஷமி ஓடிவரும்போது அவரை ஓரிருமுறை நிறுத்தினார், இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதற்கிடையே ஒரு பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்புக்கு முன்னால் பிட்ச் ஆகிச் சென்றது, ஷமி பந்தில் தப்பினார் டிக்வெல்லா. இருவரும் இணைந்து 47 ரன்களை சேர்த்தனர். சந்திமால் 20 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி ஒரு பந்தை அருமையாக குட் லெந்த்திலிருந்து உள்ளே கொண்டுவர லெக் திசையில் பிளிக் செய்யும் தவறான முயற்சியில் பவுல்டு ஆனார். டிக்வெல்லாவும் 27 ரன்களில் புவனேஷ்குமாரின் பந்தை நகர்ந்து பிளிக் ஆடமுயன்று எல்.பி.ஆகி வெளியேறினார்.

கடைசியாக திலுருவன் பெரேரா, புவனேஷ் குமாரிடம் பவுல்டு ஆனார். வைடு ஆஃப் த கிரீசிலிருந்து உள்ளே பந்தை செலுத்தி பிறகு லேசாக பந்து நேராக ஆஃப் ஸ்டம்பைத் தாக்கியது, மிக அருமையான பந்து இலங்கை அணி 69/7 என்ற நிலையிலிருந்து ஷனகா, ஹெராத் க்ரீசில் இருக்க 75/7 என்ற நிலையில் போதிய வெளிச்சமின்னை கோரல் ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆட்டம் டிரா. ஆட்ட நாயகனாக மிகச்சரியாக புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/article20582463.ece

  • தொடங்கியவர்

கொல்கத்தா டெஸ்ட் கடைசி நாள் ஆட்டத்தில் உணர்ச்சிகளின் மோதல்

 

 
shami

டிக்வெல்லா, ஷமி மோதல், நடுவர், விராட் கோலி சமாதானம்.   -  படம். | ஏ.பி.

கொல்கத்தா டெஸ்ட் போட்டி பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றாலும் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பான நிலைக்குச் செல்ல இரு அணி வீரர்களிடையேயும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஏற்பட்டன.

விராட் கோலி இலங்கை அணியின் 2-வது இன்னிங்சின் போது அடிக்கடி ரசிகர்கள் அமர்ந்திருந்த காலரியை நோக்கி ‘சத்தம் போதாது, இன்னும் சத்தம் தேவை’ என்ற ரீதியில் செய்கைச் செய்தபடியே இருந்தார். ஆட்டத்தில் உற்சாகத்தைக் கூட்ட அவர் இவ்வாறு செய்கை செய்தார்.

That moment when the Indian Skipper asks the Eden Gardens crowd to get behind the bowlers #INDvSL pic.twitter.com/i9KqZbsFTZ

— BCCI (@BCCI) November 20, 2017
 

காலையில் விராட் கோலி ஒரு அருமையான சதத்தின் மூலம் இலங்கையின் வெற்றியைப் பறித்ததையடுத்து இலங்கை அணி சற்றே ஏமாற்றமடைந்தது, இலங்கை கேப்டன் சந்திமால் ஏமாற்றத்தை பலமுறை வெளிப்படுத்தினார், அதுவும் ஒருமுறை புவனேஷ் குமாருடன் விராட் கோலி விளையாடியபோது கோலிக்கு சிங்கிள் கொடுத்துவிட்டு புவனேஷ் குமார் விக்கெட்டை வீழ்த்துவதுதான் திட்டம், ஆனால் ஓவர் த்ரோவினால் கோலி 2 ரன்களை எடுத்ததோடு, அதே ஓவரில் அதி அற்புதமான நேர் பவுண்டரி ஒன்றையும் அடித்தார், இதனால் சுரங்க லக்மல் மிகவும் வேதனையடைந்தார், சந்திமால் கடுப்பானார்.

இந்நிலையில் விராட் கோலிக்கு நடுவர் அவுட் கொடுத்து அதனை ரிவியூ செய்து மட்டையில் பட்டதை நிரூபித்ததும் இலங்கை அணியின் கூடுதல் வெறுப்புக்குக் காரணமானது.

இந்நிலையில் இலங்கை அணி இறங்கி விக்கெட்டுகளை வரிசையாக இழந்து வந்த போது நிரோஷன் டிக்வெல்ல, கேப்டன் சந்திமாலுடன் இணைந்தார். அவர் ஷமியை ஒரு ஹூக் சிக்சும் இன்னொரு டி20 பாணி ஸ்கூப் ஷாட்டில் ஒரு சிக்சரும் அடிக்க ஷமி வெறுப்பானார்.

2வது சிக்ஸ் அடித்த பந்து நோ-பால் என்று நடுவரால் அறிவிக்கப்பட்டது, காரணம் லெக் திசையில் ஸ்கொயராக 3 பீல்டர்களை நிறுத்தியதே. இதனைத் தெரிந்து கொண்டுதான் டிக்வெல்லா 3 ஸ்டம்புகளையும் விட்டு விட்டு வெளியே சென்று ஒரு சுழற்று சுழற்றி சிக்ஸ் அடித்தார். டிக்வெல்லா இதனைச் சுட்டிக்காட்டியதும் இந்திய வீரர்களையும் ஷமி, கோலியையும் வெறுப்பேற்றியது.

இப்படியே உணர்வுகளின் பில்ட்-அப் அடர்த்தியானது. இந்நிலையில்தான் இன்னிங்சின் 19-வது ஓவரை ஷமி வீச முதல் பந்து பவுன்சர், 2வது பந்தை வீச ஷமி ஓடி வர முயன்ற போது டிக்வெல்லா தயாராகவில்லை, இதனால் ஷமி வெறுப்படைந்தார், மேலும் தலையைக் குனிந்தபடியே டிக்வெல்லா ஷமியை பின்னால் செல்லுமாறு கையை அசைத்ததும் கோலி, ஷமியின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

இதனையடுத்து பவுலிங் மார்க்கிலிருந்தே ஷமி, டிக்வெல்லாவிடம் சில வார்த்தைகளைப் பிரயோகித்தார், அடுத்த பந்துதான் எட்ஜ் ஆகி ஸ்லிப்புக்கு முன்பாக பிட்ச் ஆகிச் சென்றது, இப்போது ஷமி டிக்வெல்லாவுக்கு மிக நெருக்கமாக அருகில் வந்து சில வார்த்தைகளைக் கூறி கடிந்து கொண்டார்.

அடுத்த பந்து முடிந்தவுடன் கோலி ஸ்லிப்பிலிருந்து வந்து ஓரிரு வார்த்தைகளை உதிர்த்தார். மீண்டும் டிக்வெல்லா ஸ்டம்பிலிருந்து ஒதுங்கி ஆட்டத்தை தாமதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இப்போது கூர்மையான கொல்கத்தா ரசிகர்கள் இணைந்து கூவத் தொடங்கினர். இப்போது நடுவர் டிக்வெல்லா, கோலியை அழைத்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன் பிறகு இரு அணிகளும் சமாதானமடைந்தன.

இரு அணிகளும் கடைசி நாளில் உணர்வுடன் ஆடியது ரசிகர்களிடையே ஆரவாரத்தை அதிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/article20588246.ece

  • தொடங்கியவர்

இலங்கையுடன் இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் விஜய் சங்கர்

 

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், தமிழக வீரர் விஜய் சங்கர் இடம் பிடித்துள்ளார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கையுடன் இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் விஜய் சங்கர்
 
புதுடெல்லி:

இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், தமிழக வீரர் விஜய் சங்கர் இடம் பிடித்துள்ளார் என 
இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நூலிழையில் இந்தியாவின்  வெற்றி தள்ளிப்போனது.

இந்நிலையில், நாக்பூரில் வரும் 24ம் தேதி முதல் 28-ம் தேதி வரை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக போட்டியில் விளையாட முடியாது என தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார்கள்.

இதையடுத்து, தமிழ்நாடு அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக பொறுப்பு வகித்த ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியின் விவரம் வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், எம்.விஜய், செதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவிந்திரா ஜடேஜா, குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் விஜய் சங்கர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/11/21001203/1130047/Dhawan-Bhuvi-released-rookie-allrounder-Vijay-Shankar.vpf

  • தொடங்கியவர்

நிரோஷன் திக்வேல செய்தது சரியா தவறா...

விறுவிறுப்பான முதலாம் டெஸ்ட் போட்டியின் இறுதி நாளில் இலங்கை அணி தோல்வியுறும் நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் நிரோஷன் திக்வேல மீது நேரத்தை வீண் விரயம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

  • தொடங்கியவர்

இந்திய வீரர்களுகெதிராக கொந்தளித்த திக்வெல்லவின் மறுமுகம்

Featured-image-1-696x463.jpg Photo by Deepak Malik / BCCI / Sportzpics
 

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கொல்கத்தா டெஸ்ட் போட்டி பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றாலும் கடைசி நாள் ஆட்டம் பரபரப்பான நிலைக்குச் செல்ல இரு அணி வீரர்களிடையேயும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் ஏற்பட்டன.

விராட் கோஹ்லியின் அதிரடியான சதத்தின் மூலம் இந்திய அணி இலங்கைக்கு 231 ஒட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப் போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக இறுதியில் சமநிலையில் முடிவுற்றது.  

போட்டிகயின் இறுதி நாளன்று இந்தியாவின் அபார பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கை அணி மளமளவென ஒருபுறத்தில் ஆட்டமிழக்க, மறுபுறத்தில் இலங்கை அணியின் இளம் அதிரடித் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்லவுக்கும், இந்தியாவின் பந்து வீச்சாளர் மொஹமட் ஷமிக்கும் இடையில் போட்டியின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

 

2ஆவது இன்னிங்ஸிற்காக களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை பறிகொடுத்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் இலங்கை அணி தோல்வியடையும் நிலைமையில் இருந்தது. ஆனால் இலங்கை வீரர்கள் வெற்றியைப் பற்றி சிந்திக்காமல் எப்படியாவது போட்டியை சமநிலையில் முடிக்கும் நோக்கில் விளையாடினர்.   

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. இதில் போட்டியை சமநிலையில் நிறைவு செய்வதற்காக நிதானம் கலந்த அதிரடியுடன் விளையாடிய நிரோஷன் திக்வெல்ல 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்களினைப் பெற்று அணியை தோல்வியிலிருந்து மீட்பதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்த திக்வெல்ல, 2 ஓவர்களில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசினார். அதனையடுத்து போட்டியின் 14ஆவது ஓவரில் அஷ்வினுக்கும் திக்வெல்லவுக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாட்டில் கோஹ்லியும் இணைந்துகொண்டார். எனினும் களத்தில் இருந்த நடுவர் தலையிட்டு வீரர்களை சமாதானப்படுத்தினார்.

இதனையடுத்து போட்டியின் 18ஆவது ஓவரில் மொஹமட் ஷமியின் பந்தில் பௌண்டரி ஒன்றை பெற்றுக்கொண்ட திக்வெல்ல, கிரிக்கெட் விதிமுறைகளை மீறி வீரர்களை களத்தடுப்பில் வைத்திருந்ததை கவனித்து அதனை நடுவரிடம் முறையற்ற பந்தாக்க கோரியிருந்தார். இதன்படி அப்பந்து நோபோல் என அறிவிக்கப்பட்டது.

இதில் 2ஆவது பந்தை வீச ஷமி ஓடி வர முயன்ற போது நிரோஷன் திக்வெல்ல தயாராகவில்லை. இதனால் ஷமி வெறுப்படைந்தார். மேலும் தலையைக் குனிந்தபடியே ஷமியை பின்னால் செல்லுமாறு திக்வெல்ல கையை அசைத்து சைகை செய்தார். அது கோஹ்லி, ஷமியின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.

kholi-Dickwella.jpg

இதனையடுத்து ஷமி, நிரோஷனிடம் சில வார்த்தைகளைப் பிரயோகித்தார், அடுத்த பந்து முடிந்தவுடன் கோஹ்லி ஸ்லிப்பிலிருந்து வந்து ஓரிரு வார்த்தைகளை தெரிவித்தார். மீண்டும் திக்வெல்ல ஸ்டம்பிலிருந்து ஒதுங்கியிருந்தார். இதன்போது நடுவர் திக்வெல்ல, கோஹ்லியை அழைத்து சில ஆலோசனைகளை வழங்கினார். அதன் பிறகு இரு அணி வீரர்களும் சமாதானமடைந்தனர்.

இதேவேளை, குறித்த போட்டியின் போது இந்திய விக்கெட் காப்பாளர் சாஹா பிடியெடுப்பு செய்துவிட்டு அதனை ஆட்டமிழப்பாக கோரிக்கை விடுத்தபோது அது நிலத்தில் பட்டதாக தெரிவித்து நிரோஷன் வாதாடினார்.

 

இவையனைத்துக்கும் மத்தியில் வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஷமியின் ஆக்ரோஷத்திற்கு தனியொரு வீரராக நிரோஷன் திக்வெல்ல முகங்கொடுத்ததுடன், விராட் கோஹ்லியுடனும் ஒரு சில வார்த்தைப் பிரயோகங்களிலும் ஈடுபட்டமை உள்ளிட்ட பல சம்பவங்கள் போட்டி நிறைவடைய ஒரு மணித்தியாலங்களுக்குள் அரங்கேறின. இவை அனைத்தும் இப்போட்டியின் பிறகு பெரிதும் பேசப்பட்ட விடயங்களாக மாறின.

திக்வெல்லவின் இந்த செயற்பாடு எப்போதும் மைதானத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டிவருகின்ற இந்திய வீரர்களுக்கும் ஆத்திரத்தை கொடுத்திருந்தாலும், அவையனைத்துக்கும் தனியொரு வீரராக முன்நின்று முகங்கொடுத்த திக்வெல்ல, இறுதியில் அனுபவமிக்க வீரரைப் போல நடந்து கொண்டு பலரது பாராட்டையும் பெற்றுக்கொண்டார்.

Dicwella-image-01-300x200.jpg Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இந்நிலையில் இளம் வீரர் நிரோஷன் திக்கெல்ல மைதானத்தில் நடந்துகொண்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் தமது பாரட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிரணி வீரர்கள் தகராறில் ஈடுபடுகின்ற போது அதனை கண்டு பயப்படாமல், எதிர்த்து நின்று முகங்கொடுக்கின்ற தைரியம், சிறந்த கிரிக்கெட் அறிவு மற்றும் தலைமைத்துவம் உள்ளிட்ட பல நல்ல விடயங்கள் நிரோஷன் திக்வெல்லவின் இந்த குறுகிய கால கிரிக்கெட் வாழ்க்கையில் காணமுடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

”இரண்டாவது இன்னிங்ஸில் நிரோஷன் திக்வெல்லவின் விசித்திரமான நடத்தையை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மற்றுமொரு சிறந்த டெஸ்ட் போட்டியாக இது இருந்தது. கோஹ்லி சிறப்பாக விளையாடியிருந்தார். அடுத்த டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.

 

Enjoyed @NiroshanDikka attitude and antics this afternoon. Good test match.. well played @imVkohli. Looking forward to the next one.??

 

 

திக்வெல்லவின் இந்த நடத்தை குறித்து இலங்கை அணிக்காக வர்னணையில் ஈடுபட்ட, முன்னாள் வீரரான ரசல் ஆர்னல்ட் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிடுகையில், நிரோஷன் திக்வெல்லவிடம் இருந்த தைரியம் மற்றும் போட்டிக்கு முகங்கொடுத்த விதம் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த மற்றைய வீரர்களிடம் காணமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.

 

 

Hahaha... You have to love @NiroshanDikka Great attitude and approach .. the arrogance and confidence the others lack !! #INDvSL

 

இதேவேளை, இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் போட்டியின் பிறகு கருத்து வெளியிடுகையில்,நிரோஷன் எப்போதும் சவாலை விரும்புகின்ற வீரர். அவர் விளையாடுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 100 சதவீத பங்களிப்பினை வழங்குவதற்கு முயற்சிப்பார். அதிலும் எதிரணியினை சிறந்த முறையில் எதிர்கொள்ளவே எப்போதும் விரும்புவார். எனவே, இப்போட்டியில் அவர் தவறிழைத்ததாக நான் கருதவில்லை. ஒவ்வொரு வீரரும் வித்தியாசமானவர்கள்” என சந்திமால் தெரிவித்திருந்தார்.

ஓட்டுமொத்தத்தில் திக்வெல்லவின் செயற்பாடு இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான குமார் சங்கக்காரவின் நடத்தை குணங்களை ஒத்ததாகவும் காணப்படுகின்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

எனினும், இலங்கை அணி தோல்வியின் பிடியில் சிக்கிய நிலையில் கடைசி கட்டத்தில் இலங்கை வீரர்கள் நேரத்தை கடத்துவதில் கவனம் செலுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.   

எவ்வாறிருப்பினும் இரு அணிகளும் கடைசி நாளில் உணர்வுடன் விளையாடியது ரசிகர்களிடையே ஆரவாரத்தை அதிகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

‘நடுவர் வேலையைச் செய்ய வேண்டாம்’ கோலியின் பேச்சால்தான் அனைத்தும் தொடங்கியது: காலங்கடத்தியதற்கு டிக்வெல்லா காரணம்

kohli

கொல்கத்தா டெஸ்ட்.   -  படம். | பிடிஐ.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் நிரோஷன் டிக்வெல்லா, மொகமது ஷமியை பந்து வீச விடாமல் சீண்டினார், அவ்வாறு சீண்டி ஆட்டத்தைக் காலங்கடத்துவது ஒரு உத்தியாகவே செய்யப்பட்டது என்று அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

இது அனைத்தும் எப்படி தொடங்கியது என்றால், நான் ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸ் அடித்தேன். லெக் திசையில் ஸ்கொயர்லெக்கில் 3 பீல்டர்கள் நிறுத்தப்பட்டனர், அதனை நடுவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன் அதன் பிறகு அந்தப் பந்து நோ-பால் ஆனது. அப்போது விராட் கோலி என்னிடம் வந்து அது நடுவரின் வேலை நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றார், இப்படித்தான் ஆரம்பித்தது.

இப்படிச் செய்து வார்த்தைப் பரிமாற்றங்களைத் தூண்டினால் காலத்தை கொஞ்சம் கடத்தலாம் என்று நான் எண்ணினேன். கோலி என் எண்ணத்தைப் புரிந்து கொண்ட கோலி தன் இடத்துக்கு விரைவில் சென்று விட்டார். அதன் பிறகு மொகமது ஷமியை நிறுத்திய விவகாரம் நடந்தது. அது ஒரு வேடிக்கைதான், அப்போது அந்த போராட்டத்தில் நான் வென்றதாகவே நினைக்க விரும்புகிறேன்.

ஷமி என்னிடம் வந்தார், இதோ பார், நான் உள்ளூர் வீரர், நான் கொல்கத்தாவைச் சேர்ந்தவன் என்றார். நான் உடனே எனக்கு அதனால் என்ன என்றேன் உடனேயே ஷமி நீங்கள் நல்ல வேகத்தில் பவுன்சுடன் வீசுகிறீர்கள் என்றேன், அவரும் திருப்தியுடன் சென்றார்.

நான் என் டைமை எடுத்துக் கொண்டேன் அது இந்தியர்களுக்குப் பிடிக்கவில்லை. எதிர்முனையில் கேப்டன் சந்திமால் என்னை அமைதியாக இயல்பான ஆட்டத்தை ஆடினாலே போதும் என்றார்.

களத்தில் என்னை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன், விராட் கோலியும் அப்படிப்பட்ட மனநிலை படைத்தவர் என்பதால் இவையெல்லாம் நடந்தது.

இவ்வாறு தெரிவித்தார் டிக்வெல்லா.

http://tamil.thehindu.com/sports/article20645598.ece?homepage=true

  • தொடங்கியவர்

நிரோஷன் திக்வெல்லவை பாராட்டிய இந்திய அணித் தலைவர் கோஹ்லி

Kohli applauds Dickwella's character Photo by Deepak Malik / BCCI / Sportzpics
 

சமநிலை அடைந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாலது டெஸ்ட் போட்டியில் இலங்கையின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல நேரத்தை கடத்த கையாண்ட உத்திகளை இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி பாராட்டியிருக்கின்றார்.

 

24 வயதாகும் திக்வெல்ல கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் விராத் கோலி மற்றும் ஏனைய இந்திய வீரர்களுடன் பேசி  மைதானத்தில் சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் போட்டி சிறிது நேரம் தாமதித்திருந்தது.

இந்த விடயம் பற்றி கோஹ்லி எனக்கு அவர் (போட்டியில்) எடுத்துக் கொண்ட பாத்திரத்தினை பார்க்க மிகவும் பிடித்திருந்தது. மைதானத்தில் அவ்வாறு போட்டித்தன்மையாக இருந்ததும் மிகவும் விருப்பமாக இருந்தது. அவர் (திக்வெல்ல) அவரது கிரிக்கெட்டுக்கு உரிய பெருமையினை எடுத்துக் கொள்ளும் ஒரு வீரர். எனவே, இதுவரை அவரிடம் பார்த்த அனைத்து விடயங்களுக்காகவும் நான் கவரப்பட்டிருக்கின்றேன்.  இதற்கு முன்னர் நடந்த தொடரிலும் அவரின் நடத்தை பிடித்திருந்தது. இலங்கை அணிக்காக விஷேடமான விடயங்களைச் செய்யும் ஆற்றல் அவருக்குள்ளே இருக்கின்றது. என இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முன்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கோஹ்லி கருத்து தெரிவித்திருந்தார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 47 ஓவர்களில் 231 ஓட்டங்களினை நிர்ணயம் செய்திருந்தது. இந்த இலக்கினை பெற பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை, போட்டியின் இறுதி இடைவெளியில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் போதிய வெளிச்சமின்மையும் போட்டியில் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த தருணத்தில் சாமர்த்தியமாக செயற்பட்ட திக்வெல்ல சில உத்திகள் மூலம் நடுவர்களுடன் பேச சந்தர்பத்தினை ஏற்படுத்திக் கொண்டு நேரத்தினை சற்று வீணடித்திருந்தார்.

 

அணிக்காக போராடும் இந்த அணுகு முறையை பாராட்டிய கோஹ்லி, இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் தானும் தனது அணியின் வெற்றிக்காக அவ்வாறான உத்திகளை பயன்படுத்தியிருப்பேன் எனக் கூறியிருந்தார்.

பரபரப்பான வேளைகளில், நானும் எனது அணி வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வேன். போட்டி முடிந்தததும் அனைத்தும் சாதாரண நிலைமைக்குத் திரும்பிவிடும். நாங்கள் சிறுபேச்சுவார்த்தையொன்றோடு சண்டையும் போட்டிருந்தோம். அதெல்லாம் மைதானத்தில் மட்டும் தான். எங்களுக்கு மைதானத்தில் சவால் தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் மதிப்போம். இப்போது அந்த மதிப்பினை  அவர் (திக்வெல்ல) சவால் தந்தமைக்காக பெற்றுக் கொள்கின்றார். நான் உறுதியாகச் சொல்கின்றேன் அவர் எதிர்காலத்தில் இலங்கை அணிக்காக பல நல்ல விடயங்களைச் செய்வார். “ எனவும் கோஹ்லி கூறியிருந்தார்.

திக்வெல்ல குறிப்பிட்ட போட்டியில் நடந்து கொண்ட விதத்தினை முன்னாள் வீரர்கள் பாராட்டியிருந்தாலும், அணி முகாமைத்துவம் அதில் சிறிது கவலைப்பட்டிருந்தது .

ஏனெனில், திக்வெல்ல ஏற்கனவே நன்னடத்தை விதி மீறல் புள்ளிகளைப் பெற்று இருப்பதால் இனி அவ்வாறு நடந்து கொள்ளும் போது 4 போட்டிகளைப் பெற்று விளையாடத் தடையினை பெற்றுவிட முடியும். இதற்கு முன்னர் திக்வெல்ல அவுஸ்திரேலிய அணியுடனான சுற்றுப் பயணத்தில்  ஒழுக்க விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதற்காக T-20 போட்டி ஒன்றில் விளையாட தடையினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

 

திக்வெல்லவுடன் குறித்த சம்பவம் நடந்திருந்த போது துடுப்பாட்ட ஜோடியாக காணப்பட்ட இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், திக்வெல்லவின் பக்கம் தவறு ஏதும் இல்லாதிருந்தமையினால் குறித்த விடயத்தில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

குறிப்பிட்ட போட்டியில் இந்திய அணி 75 ஓட்டங்களுக்கு இலங்கையின்  7 விக்கெட்டுக்களை கைப்பற்றி பிரபல்யமான டெஸ்ட் வெற்றியொன்றினை பெறும் நிலையில் காணப்பட்டிருந்தது.

அப்போட்டியில் இலங்கை அணிக்காக 27 ஓட்டங்கள் சேர்த்த திக்வெல்ல போட்டியின் நேரத்தை சிறிது நேரம் வீணடிக்க கையாண்ட உத்திகளே அன்றைய நாளில் இலங்கை அணியைத் தோல்வியில் இருந்து தடுத்திருந்தது.

அச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த திக்வெல்ல “ (குறிப்பிட்ட நிகழ்வினால்) இந்திய அணியினர் இரண்டு அல்லது மூன்று ஓவர்களை இழந்துவிட்டனர். “ எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

இலங்கை - இந்தியா மோதும் 2வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

 

 

இலங்கை – இந்­திய அணிகள் மோதும் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இந்­தி­யாவின் மராட்­டிய மாநிலம் நாக்­பூரில் இன்று தொடங்­கு­கி­றது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்­தி­யா­விற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு 3 டெஸ்ட் போட்­டிகள், 3 ஒருநாள் போட்­டிகள், 3 இரு­ப­துக்கு 20 போட்­டிகள் கொண்ட தொடரில் விளை­யா­டு­கின்­றது. 

இவ்­விரு அணி­களும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சம­நி­லையில் முடிந்­தது. இந்­நி­லையில் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி மராட்­டிய மாநிலம் நாக்­பூரில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மா­கின்­றது.

கொல்­கத்­தாவில் நடந்த முதல் டெஸ்டின் முதல் 2 நாட்கள் மழையால் பெரிதும் பாதிக்­கப்­பட்­டன. இப்­போட்­டியில் முதல் இன்­னிங்ஸில் திண­றிய இந்­திய அணி 2-ஆவது இன்­னிங்ஸில் மீண்­டது. 

வேகப்­பந்து வீச்­சுக்கு சாத­க­மான ஆடு­க­ளத்தில் இலங்கை அணியின் சுரங்க லக்மால் மற்றும் தசுன் சானக்க ஆகியோர் சிறப்­பாக செயற்­பட்­டனர். 

முதல் டெஸ்டில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்­திய இந்­திய பந்­து­வீச்­சாளர் புவ­னேஷ்வர் குமார் திரு­மணம் கார­ண­மாக எஞ்­சி­யுள்ள 2 டெஸ்ட் போட்­டி­க­ளி­லி­ருந்து வில­கி­யுள்ளார். அவ­ருக்கு பதில் வேகப்­பந்து வீச்­சாளர் இஷாந்த் சர்மா இடம் பெறுவார்.

இதேபோல் இந்­தி­யாவின் தொடக்க வீரர் ஷிகார் தவான் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் போட்டியில் விளை­யா­ட­வில்லை. இதனால் முரளி விஜய் தொடக்க வீர­ராக கள­மி­றங்­கு­கிறார்.

முதல் டெஸ்டை போலவே இன்று தொடங்கும் 2ஆ-வது டெஸ்­டிலும் வேகப்­பந்து ஆடு­க­ளத்தை அமைக்க வலி­யு­றுத்­தப்­பட்டிருக்­கி­றது. 

நாக்பூர் டெஸ்டில் வெற்றி பெற்று தொடரில் முன்­னிலை பெறும் ஆர்­வத்தில் இந்­தியா உள்­ளது.

அதேபோல் சந்­திமால் தலை­மை­யி­லான இலங்கை அணியில் சதீர சம­ர­விக்­ரம, கரு­ணா­ரத்ன, திரி­மான்ன, அஞ்­சலோ மெத்­தியூஸ், டில்­ருவன் பெரேரா, டிக்­வெல்ல என பல­மான துடு­ப்பாட்ட வரிசை உள்­ளது. 

பந்­து­வீச்சில் சுரங்க லக்மால், தசுன் சானக்க, கமகே, ஹேரத், டில்­ருவன் பெரேரா ஆகியோர் இருக்­கி­றார்கள். 

இலங்கை அணியும் இந்­தி­யாவை வீழ்த்தி தொடரில் முன்­னிலை பெறும் முனைப்பில் இருப்­பதால் ஆட்டம் விறு­வி­றுப்­பாக இருக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

http://www.virakesari.lk/article/27428

32/1 * (13.4 ov)
  • தொடங்கியவர்

இரண்டு சுழல்; ஒரு வேகம் - 205 ரன்னுக்கு சுருண்டது இலங்கை

 

Ashwin_test_long_16573.jpg

இரண்டு சூழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளரைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

 

கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இரண்டாவது போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சண்டிமால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக சமரவிக்ரமா- கருணாரத்னே களமிறங்கினர். 20 ரன்னில் இந்த ஜாேடியை வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா பிரித்தார். பின்னர் வந்த திரிமன்னே சிறிது நேரம்கூட தாக்கபிடிக்கவில்லை. 9 ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். இவரைத் தொடர்ந்து மேத்யூஸ் களம் கண்டார். மறுமுனையில் அரை சதம் அடித்த கருணாரத்னே 51 ரன்னில் வெளியேறினார். இவரது விக்கெட்டை இசாந்த் கைப்பற்றினார்.

மேத்யூஸ்- சண்டிமால் ஜோடியை சுழல் பந்துவீச்சாளர் ஜடேஜா பிரிந்தார். 10 ரன்னில் வெளியேறிய மேத்யூஸ் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். பின்னர் வந்த டிக்வெல்லா 24 ரன்னிலும் ஷனகா 2 ரன்னிலும் பெரைரா 15 ரன்னிலும் ஹெராத் 4 ரன்னிலும் லக்மால் 17 ரன்னிலும் வெளியேறினர். சண்டிமால் 8வது விக்கெட்டாக வீழ்ந்தார். 57 ரன்கள் அடித்த இவர் 4 பவுண்டரி ஒரு சிக்சர் விளாசினார். முடிவில் இலங்கை அணி 205 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இந்தியா தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டும் ஜடேஜா 3 விக்கெட்டும் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

 

இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ராகுல், முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். ராகுல் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் புஜாரா விளையாட வந்தார்.  விஜய் 2 ரன்னிலும் புஜாரா 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 11 ரன்கள் எடுத்துள்ளது. நாளை 2வது நாள் ஆட்டம் தொடர்கிறது.

https://www.vikatan.com/news/sports/108804-second-test-lanka-all-out-for-208-runs.html

  • தொடங்கியவர்

2-வது டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம்! விஜய் அரை சதம்!

 

 
pujara_vijay1

 

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 2-வது நாளின் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது.

நாகபுரியில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே, கேப்டன் சண்டிமல் அரைசதம் கடந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 2, புஜாரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று இந்திய அணி ரன்கள் குவித்து இலங்கை அணிக்கு அழுத்தமளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேர்த்தியான பந்துவீச்சால் விஜய்யும் புஜாராவும் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்டார்கள். மிகவும் நிதானமாக ரன்கள் சேர்த்து இலங்கை அணியின் திட்டங்களைத் தோல்வியடையச் செய்தார்கள். இருவரும் சேர்ந்து 143 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பிறகு 112 பந்துகளில் முரளி விஜய் அரை சதமெடுத்தார். 2-ம் நாளின் முதல் பகுதியில் இருவரும் 86 ரன்கள் சேர்த்தார்கள். அதிலும் இன்றைய முதல் 18 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 56, புஜாரா 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/25/vijay-pujara-see-off-tough-session-2814775.html

  • தொடங்கியவர்

2-வது டெஸ்டில் இந்திய அணி ஆதிக்கம்! விஜய், புஜாரா சதம்!

 

 
pujara901xx

 


இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் முரளி விஜய், புஜாரா ஆகியோர் சதமெடுத்துள்ளார்கள். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. 

நாகபுரியில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கருணாரத்னே, கேப்டன் சண்டிமல் அரைசதம் கடந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 2, புஜாரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இன்று இந்திய அணி ரன்கள் குவித்து இலங்கை அணிக்கு அழுத்தமளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேர்த்தியான பந்துவீச்சால் விஜய்யும் புஜாராவும் ரன்கள் குவிக்கச் சிரமப்பட்டார்கள். மிகவும் நிதானமாக ரன்கள் சேர்த்து இலங்கை அணியின் திட்டங்களைத் தோல்வியடையச் செய்தார்கள். இருவரும் சேர்ந்து 143 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பிறகு 112 பந்துகளில் முரளி விஜய் அரை சதமெடுத்தார். 2-ம் நாளின் முதல் பகுதியில் இருவரும் 86 ரன்கள் சேர்த்தார்கள். அதிலும் இன்றைய முதல் 18 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

2-ம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 39 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 56, புஜாரா 33 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

உணவு இடைவேளைக்குப் பிறகு கவனமான ஆட்டத்தை விஜய்யும் புஜாராவும் தொடர்ந்தார்கள். விஜய் - புஜாரா ஆகிய ஒருவரும் 2-வது விக்கெட்டுக்கு 260 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்தார்கள். இதன்பின்னர் 145 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதத்தை எட்டினார் புஜாரா. இருவருடைய கூட்டணி 150 ரன்களைச் சேர்த்தபிறகு முரளி விஜய் 187 பந்துகளில் 1 சிக்ஸர் 9 பவுண்டரிகளுடன் சதமடித்தார். இது அவருடைய 10-வது சதமாகும். தனிப்பட்ட காரணங்களுக்காக 2-வது டெஸ்ட் போட்டியை தவன் தவறவிட்டதால் அவருடைய இடம் விஜய்க்குக் கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். இதனால் அடுத்த டெஸ்டிலும் விஜய் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேநீர் இடைவேளையை நெருங்கும்போது இந்திய அணியின் ஆட்டம் வேகம் எடுத்தது. கடைசி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்தார்கள். ஒரு கேட்சைத் தவறவிட்டதோடு டிஆர்எஸ்-ஐயும் தவறாகப் பயன்படுத்திய இலங்கை அணிக்கு இன்றைய நாளின் 2-வது பகுதி மோசமாக அமைந்தது.  

2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 65 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 106, புஜாரா 71 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். விஜய்யும் புஜாராவும் 2-வது விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்துள்ளார்கள். 73-வது ஓவரில் இந்திய அணி இலங்கை அணியின் ஸ்கோரைத் தாண்டி முன்னிலை பெற்றது. இதையடுத்து இந்திய அணி எப்படியும் 200 ரன்களுக்கு அதிகமாக முன்னிலை பெறும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இரண்டாவது நாளில் சதமெடுத்த முரளி விஜய், இன்னும் அதிகமாக ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தவறான ஷாட்டால் ஹெராத் பந்துவீச்சில் 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விஜய்யும் புஜாராவும் இரண்டாவது விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வலுவான தொடக்கத்தை அளித்துள்ளார்கள். விராக் கோலி களமிறங்கியபிறகு ஆட்டம் சுறுசுறுப்பு அடைந்தது. அவர்களுடைய கூட்டணியின் ரன் ரேட் நான்கு ரன்களாக இருந்தது. 80 ஓவர்களுக்குப் பிறகு இலங்கை அணி புதிய பந்தைத் தேர்வு செய்தது. இருந்தும் இந்திய அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. புஜாரா 246 பந்துகளில் சதமெடுத்தார். இது அவருடைய 14-வது டெஸ்ட் சதமாகும். புஜாரா - கோலி கூட்டணி 70 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது. 

90 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. இதுவரை, முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/nov/25/vijay-pujara-2814833.html

  • தொடங்கியவர்

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி- 143 ரன்கள் எடுத்த நிலையில் புஜாரா ஆட்டமிழந்தார். இந்தியா 400/3

  • தொடங்கியவர்

5-வது இரட்டைச் சதம் விளாசினார் கோலி; ரோஹித் சர்மாவும் சதம்: இந்தியா 610/6 டிக்ளேர்

 

rOhitjpg
virat%20kohli

விராட் கோலி.   -  படம். | விவேக் பெந்த்ரே.

rOhitjpg
virat%20kohli

விராட் கோலி.   -  படம். | விவேக் பெந்த்ரே.

இலங்கைக்கு எதிரான 2-வது, நாக்பூர், டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது டெஸ்ட் 5-வது இரட்டைச் சதத்தை எடுத்தார். ரோஹித் சர்மாவும் சதம் எடுக்க இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 610 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை முடித்து கொள்வதாக அறிவித்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து முதல்தர கிரிக்கெட்டை ஆடாத ரோஹித் சர்மா இன்று 160 பந்துகளில் 8 பவுண்டரிக்ள் 1 சிக்சருடன் 102 நாட் அவுட்டாகத் திகழ்ந்தார், இவர் சதமெடுத்த உடனேயே விராட் கோலி டிக்ளேர் செய்தார்.

முன்னதாக விராட் கோலி தனது டெஸ்ட் வாழ்வின் 5-வது இரட்டைச் சதத்தை எடுத்து முடித்தார். அவர் 259 பந்துகளில் இரட்டைச் சதம் கண்டு பிறகு 267 பந்துகளில் 17 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 213 ரன்கள் எடுத்து பெரேரா பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

98 ஓவர்களில் 312/2 என்று 3-ம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கி, கடைசியில் 176 ஓவர்களில் 610 ரன்கள் என்று டிக்ளேர்  செய்துள்ளது, அதாவது கிட்டத்தட்ட இன்று 78 ஓவர்களில் 298 ரன்களை எடுத்துள்ளது இந்திய அணி.

புஜாராவும் விராட் கோலியும் 3-வது விக்கெட்டுக்காக 183 ரன்கள் கூட்டணி அமைக்க, ரோஹித் சர்மா, விராட் கோலி கூட்டணி 40 ஓவர்களில் 173 ரன்கள் கூட்டணியை 5-வது விக்கெட்டுக்காக அமைத்தது.

நடுவில் ரஹானேயின் மோசமான பார்ம் தொடர்ந்தது, 2 ரன்களில் அவர் நொறுக்க வேண்டிய பெரேரா ஷார்ட் பிட்ச் பந்தை பாயிண்டில் நேராக கேட்ச் கொடுத்தார். இவருக்குப் பதிலாக் முச்சத நாயகன் கருண் நாயரைக் கொண்டு வருவதுதான் முறை. புஜாரா 362 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் எடுத்து ஷனகாவின் யார்க்கர் லெந்த் பந்தில் பவுல்டு ஆனார்.

அஸ்வின் 5 ரன்கள் எடுத்து பெரேரா பந்தை சுய யார்க் செய்துகொண்டு பவுல்டு ஆனார். இலங்கை பந்து வீச்சில் பெரேரா இரட்டைச் சதம் கண்டு 45 ஓவர்களில் 202 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சற்று முன் இசாந்த் சர்மாவின் உள்ளே வரும் பந்தை ஆடாமல் விட்டு சதீரா பவுல்டு ஆக இலங்கை அணி தன் முதல்விக்கெட்டை இழந்தது.

 

முன்னதாக...

இந்திய கேப்டன் விராட் கோலி  சாதனை!

நாக்பூர் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இந்திய கேப்டன் விராட் கோலி சதமெடுத்தார், இது இந்த ஆண்டு கேப்டனாக அவர் எடுக்கும் 10-வது சதமாகும்.

கேப்டனாக ஓராண்டில் அதிக சதங்கள் எடுத்த கேப்டன் ஆனார் விராட் கோலி, இன்னொரு மகுடம்.

இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

புஜாரா 140 ரன்களுடனும், விராட் கோலி 142 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 105 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இலங்கை அணி விக்கெட்டுகளை வீழ்த்த திணறி வருகிறது.

புஜாராவும் கோலியும் சேர்ந்து 146 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்துள்ளனர். இது அவரது 19வது டெஸ்ட் சதமாகும். லக்மல் பந்தை லெக் திசையில் தட்டி விட்டு ஒரு ரன் எடுத்து சதம் கண்டார் விராட் கோலி.

இந்த ஆண்டில் 45 போட்டிகளில் 50 இன்னிங்ஸ்களில் 10-வது சதம் எடுத்தார் கோலி. ஒரு ஆண்டில் கேப்டனாக அதிக சதங்கள் எடுத்த சாதனையில் ரிக்கி பாண்டிங்கை (9) தாண்டினார்.

http://tamil.thehindu.com/sports/article20943576.ece

  • தொடங்கியவர்

நாக்பூர் டெஸ்ட்: அதிரடி பந்துவீச்சில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

 

 
karunaratne%20afpjpg

கருணரத்னே விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடும் இந்திய அணியினர் | படம்: ஏ.எஃப்.பி

நாக்பூரில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4ஆம் நாளான இன்று 21 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இலங்கை ஆட்டத்தை தொடர்ந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 384 ரன்கள் பின்தங்கி இருந்தது. நாளின் 7வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா தனது சுழலில் கருணரத்னேவை பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்த சில ஓவர்களில் உமேஷ் யாதவ் திரிமண்ணே விக்கெட்டை வீழ்த்தினார். 4 ஓவர்கள் கழித்து ஏஞ்சலோ மாத்யூஸ் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. நேற்று ஒரு விக்கெட் எடுத்திருந்த இஷான் சர்மா, இன்று டிக்வெல்லாவின் விக்கெட்டுடன் தனது கணக்கைத் தொடங்கினார். தொடர் விக்கெட்டுகள் விழுவதைப் பார்த்து மறுமுனையில் களத்தில் இருந்த இலங்கை வீரர் ஷனகா அதிரடியாக ரன் சேர்த்து இந்திய அணிக்கு அழுத்தம் தர முயற்சித்தார்.

அஸ்வினின் ஓவரில் 2 சிக்ஸர்களும் 1 பவுண்டரியும் வர, இவர் அதிரடிக்கு துணையாக சந்திமாலும் இஷாந்த் சர்மா வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரிகளை அடுத்தடுத்து பெற்றார். ஆனால் இந்த 2 ஓவர்களைத் தாண்டி இவர்களது அதிரடி நீடிக்கவில்லை. ஷனகாவின் விக்கெட்டை அடுத்த ஓவரிலேயே அஸ்வின் எடுத்தார்.

தொடர்ந்து ஜடேஜா ஒரு மெய்டென் ஓவரை வீச, தனது ஸ்பெல்லைத் தொடர்ந்த அஸ்வினின் பந்துவீச்சில் பெரேரா, ஹெராத் என ஒரே ஓவரில் இரண்டு இலங்கை வீரர்களை ஆட்டமிழத்தனர்.

பின் சந்திமலுடன் இணைந்த லக்மல் உணவு இடைவேளை வரை தனது அணிக்கு விக்கெட் இழப்பின்றி பார்த்துக் கொண்டார். சந்திமல் 65 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார்.

61 ரன் எடுத்திருந்த சந்திமல், யாதவ் போட்ட பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த காமெஜ் ஒரு சில ஓவர் தாக்குப்பிடித்து ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி  இன்னிங்க்ஸ் வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் லக்மல் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், இஷாத் ஷர்மா, யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அஸ்வின் 300

இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் வேகமாக 300 விக்கெட்டுகளை எட்டிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதற்கு ஆஸ்திரேலியவின் டென்னிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எட்டியதே சாதனையாயிருந்தது.

http://tamil.thehindu.com/sports/article20950894.ece

  • தொடங்கியவர்

`பேட்டிங் குறித்து வீரர்கள் வெட்கப்பட வேண்டும்' - கொதி கொதிக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்

 
 

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்துள்ளதை அடுத்து, இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ், `எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆட்டம் குறித்து வெட்கப்பட வேண்டும்' என்று கருத்து கூறியுள்ளார். 

Nic Pothas

 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, தலா 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளது. 

 

இந்தப் படுதோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ், `ஆட்டம் குறித்து என்ன வேண்டுமானாலும் வெகு நேரம் பேசலாம். அது குறித்து திட்டம் தீட்டலாம். அதேநேரத்தில், அதை செயல்படுத்த வேண்டும். இன்று எங்கள் அணி வீரர்கள் விளையாடிய விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஏனென்றால், பேட்டிங்கில் நன்றாகச் செயல்பட வேண்டும் என்பதால், கடுமையாக உழைத்தோம். ஆனால், அப்படி நடக்கவில்லை. இலங்கை வீரர்கள், அவர்களின் ஆட்டம் குறித்து வெட்கப்பட வேண்டும். ரன்கள் எடுக்காமல் நெட் பயிற்சி மட்டும் எடுத்துக்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை' என்று கறார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.  

https://www.vikatan.com/news/sports/109069-players-should-be-embarrassed-in-their-own-performances-nic-pothas.html

  • தொடங்கியவர்

டெல்லி டெஸ்ட்டில் இருந்து ரங்கனா ஹெராத் விலகல்! 

 
 

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் காயம் காரணமாக விலகியுள்ளார். 

ஹெராத்

 
 


இலங்கை அணிக்கெதிரான 3 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. தொடரின் முக்கியமான போட்டியாகக் கருதப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் டிசம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ரங்கனா ஹெராத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஜெஃப்ரி வாண்டர்சே-வை மாற்று வீரராக இலங்கை அணி தேர்வுசெய்துள்ளது. 27 வயதான வாண்டர்சே, இதுவரை டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றதில்லை. டெல்லி டெஸ்டின் ஆடும் லெவனில் இடம்பெற்றால், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவரது அறிமுகப் போட்டியாக அது இருக்கும். 

இலங்கை அணியைப் பொறுத்தவரை அனுபவ வீரரான ஹெராத், நடப்புத் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், 8 ஓவர்கள் மட்டுமே அவர் பந்துவீசினார். நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி பேட் செய்த ஒரே இன்னிங்ஸில் 39 ஓவர்கள் வீசி, அவர் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். 

https://www.vikatan.com/news/sports/109216-india-vs-sri-lanka-2017-rangana-herath-ruled-out-of-delhi-test.html

  • தொடங்கியவர்

இலங்கையை வீழ்த்தி சாதனை புத்தகத்தில் இடம்பெற காத்திருக்கும் இந்தியா

india-cricket-team-696x464.jpg
 

டெல்லி, பெரோஸ் ஷாஹ் கொட்லா மைதானத்தில் நாளை (02) ஆரம்பமாகவிருக்கும் இலங்கையுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லியின் இந்திய அணி முக்கியமான உலக சாதனை ஒன்றை சமன்செய்ய எதிர்பார்த்துள்ளது. இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரை வென்றால் தொடர்ச்சியாக ஒன்பது டெஸ்ட் தொடர்களை வென்று தற்போதைய சாதனையை சமன் செய்யும்.

இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் இந்தியா கடைசி டெஸ்ட்டை வென்றால் அல்லது சமன் செய்தால் தொடரை கைப்பற்றிவிடும். இதன்மூலம், 2005 தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரையான காலத்தில் அவுஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக ஒன்பது    தொடர்களை வென்ற சாதனையையே இந்திய அணி சமன் செய்ய எதிர்பார்த்துள்ளது.

>>

எனினும் இந்த சாதனையை முறியடிக்க இந்திய அணி அடுத்து தென்னாபிரிக்க மண்ணில் தென்னாபிரிக்க அணியை வீழ்த்த வேண்டியுள்ளது. இதற்கு ஏற்பாடாகவே இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு இலங்கை சுற்றுப்பயணத்திலேயே இந்தியாவின் இந்த வெற்றிப்பயணம் ஆரம்பமானது. இவ்வாறு 7 தொடர்களில் வெற்றி பெற்ற நிலையிலேயே அந்த அணி கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை மண்ணில் இலங்கை அணியை டெஸ்ட் தொடரில் வைட்வொஷ் (Whitewash) செய்தது.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் இடம்பெறும் தொடரில் நாக்பூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் வீழ்த்தியே இந்தியா தொடரில் முன்னிலை பெற்றது.

குறிப்பாக அடுத்த தொடருக்கு ஏற்பாடாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்காக ஆடுகளங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  

தென்னாபிரிக்காவில் மிக கடினமான சவாலுக்கு முகம்கொடுக்க தமது அணி தயாராக இருக்க வேண்டும் என்று கோஹ்லி குறிப்பிடுகிறார்.இதனாலேயே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் ஆடுகளங்களை தயாரிக்க நாம் கோரினோம். போட்டிகளுக்கு இடையில் தயாராக போதிய காலம் இல்லை. எனவே, எதிர்வரும் மிகப்பெரிய சவாலுக்காக நாம் இருக்கும் காலத்தை பயன்படுத்துகிறோம் என்றார் கோஹ்லி.

இந்திய அணியின் வேகப்பந்து முகாமில் இரண்டாவது டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இஷான்த் ஷர்மா வெற்றிகரமாக அணிக்கு திரும்பியபோதும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

கொல்கத்தாவின் பச்சை நிறமாக இருந்த ஆடுகளத்தில் ஆரம்ப டெஸ்ட் போட்டியில் இலங்கை விக்கெட்டுகளை சாய்த்த புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாகவே 6 அடி 5 அங்குலம் உயரமான ஷர்மா அழைக்கப்பட்டார்.    

இந்திய வேகப்பந்து வரிசையில் உமேஷ் ஷர்மா மாத்திரமே பலவீனம் கொண்டவராக பார்க்கப்படுவதோடு, இரண்டாவது டெஸ்டில் இடம்பெறாத மொஹமட் ஷமி நாளைய டெஸ்டில் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கோஹ்லி ஓய்வெடுத்துக்கொள்ளவுள்ள நிலையில் ரோஹித் ஷர்மா இந்திய அணித்தலைவராக செயற்டவுள்ளார்.  

அவர்கள் (வேகப்பந்து வீச்சாளர்கள்) மிக உக்கிரத்தோடு போட்டியில் பங்கேற்று வருகின்றனர்என்று ரோஹித் ஷர்மா குறிப்பிட்டார்.

சந்திமாலின் நெருக்கடி

இந்திய மண்ணில் முதலாவது டெஸ்ட் போட்டி ஒன்றை வெல்லும் கனவுடனேயே இலங்கை அணி இந்தியா சென்றது. உண்மையில் இந்த டெஸ்ட் தொடர் இலங்கை அணியின் யதார்த்தத்தை புரியவைப்பதாகவே உள்ளது. நாக்பூரில் அடைந்த தோல்வி இலங்கை அணியின் மிகப்பெரிய டெஸ்ட் தோல்வியாக இருந்தது.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் முன் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசை ஆட்டம் கண்டது. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்ரன் அஷ்வின் கடைசி டெஸ்டில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஓட்டங்கள் பெற வசதியாக இருந்த ஆடுகளத்தில், அனுபவ துடுப்பாட்ட வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரவின்திர ஜடேஜாவின் பந்துக்கு ஏமாற்றம் தந்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

இலங்கை அணி தனது உத்வேகத்தை தொடர முடியாமல் தடுமாறுகிற நிலையில் மோசமான முடிவுகள் அணிக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று இலங்கை அணியின் பயிற்சியாளர் நிக் போதாஸ் எச்சரித்தார்.

முதல் இன்னிங்ஸில் நாம் அதிக ஓட்டங்கள் பெற வேண்டும். டெல்லியில் அதனையே செய்ய வேண்டும் என்று அணித்தலைவர் தினேஷ் சந்திமால் குறிப்பிட்டார்.

எமது வரிசையில் அஞ்செலோ சிரேஷ்ட வீரர் ஒருவராக உள்ளார். அவர் ஓட்டங்கள் பெறாதபோது எமது அணி வீழ்ச்சி காணும். ஒரு சிரேஷ்ட வீரர் என்ற வகையில் நிலைகொண்டு திறமையை வெளிப்படுத்த வேண்டும். அப்போதே இளம் வீரர்கள் அதனை தொடருவார்கள் என்று சந்திமால் குறிப்பிட்டார்.

டெல்லி டெஸ்டில் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறன. குறிப்பாக அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. ஜெப்ரி வெண்டர்சே அல்லது லக்ஷான் சதகான் அவரது இடத்தை பிடிக்க எதிர்பார்த்துள்ளனர்.

எவ்வாறு இருப்பினும் இலங்கை அணிக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகப் பெரிய நெருக்கடி கொண்டதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

http://www.thepapare.com/

  • தொடங்கியவர்

இந்திய அணி முதலில் துடுப்பாட்டம்

 

இலங்கை அணிக்கெதிரான  3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

india1.jpg

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொட்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இதில் கொல்கத்தாவில் இடம்பெற்ற முதலாவது போட்டி வெற்றி தோலிவியின்றி சமநிலையில் முடிவடைந்தது.

இரு அணிகளுக்குமிடையிலான நாக்பூரில் இடம்பெற்ற 2 ஆவது போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலைபெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான போட்டி இன்று டில்லியில் ஆரம்பமாகின்றது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

http://www.virakesari.lk/article/27763

  • தொடங்கியவர்

வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம்

 

kholi-_murali_vijay_test_1_14258.jpg

டெல்லியில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்து, இந்திய வீரர்களில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. நாக்பூரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்து. இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டெல்லியில் இன்று காலை ஆரம்பமானது. இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டிய நிலையில் இலங்கை அணி உள்ளது. வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் போட்டித் தொடரை டிரா செய்ய முடியும். தோல்வியடையும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை இழக்க வேண்டிய நிலைவரும். டாஸில் வெற்றிபெற்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக முரளிவிஜய்- தவான் களமிறங்கினர். முதல் போட்டியில் சோபிக்காத தவான், மூன்றாவது போட்டியான இதிலும் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடாமல், 23 ரன்னிலே ஏமாற்றத்துடன் வெளியேறினார். பின்னர் புஜாரா களம் கண்டார். இவரும் 23 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து கேப்டன் கோலி வந்தார். இவர் நங்கூரம் போல் நின்று ரன்களை விளாசினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வரும் முரளி விஜய் தனது 11வது சதத்தை நிறைவு செய்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். கோலியும் தன் பங்குக்கு ரன்களைக் குவித்து வருகிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார். 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 105வது இன்னிங்ஸில் இந்தச் சாதனையை அவர் படைத்துள்ளார். 

தேனீர் இடைவேளை முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய் 101 ரன்னிலும் கோலி 94 ரன்னிலும் களத்தில் உள்ளனர். 

https://www.vikatan.com/news/sports/109572-vijay-scores-another-hundred-kohli-crossed-5000-in-third-test-match-against-srilanka.html

  • தொடங்கியவர்

கோஹ்லி – விஜய் இணைப்பாட்டம் மூலம் இந்திய அணி அபாரம்

BCCi-2-696x494.jpg Photo by Deepak Malik / BCCI
 

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய தரப்பு, அணித்தலைவர் விராத் கோஹ்லி மற்றும் முரளி விஜய் ஆகியோரின் சதங்களோடு வழங்கிய உறுதியான இணைப்பாட்டம் (283) மூலம் தமது தரப்பினை வலுப்படுத்தியுள்ளது.

 

முன்னதாக டெல்லி பெரோஸ் ஷாஹ் கோட்லா மைதானத்தில் இன்று (02) ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

நாக்பூரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வரலாற்றில் தமது மோசமான டெஸ்ட் தோல்வியினை பதிவு செய்திருந்தது. அதோடு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றிருக்கின்றது. இவற்றின் காரணமாக இந்தப் போட்டியில் நல்ல முடிவுகளை எதிர்பார்த்து இந்தியாவுக்கு சென்றுள்ள விருந்தாளிகள் தமது குழாத்தில் சில மாற்றங்களைச் செய்திருந்தனர்.

முதல்தரப் போட்டிகளில் பல வருட அனுபவத்தினைக் கொண்ட துடுப்பாட்ட வீரரான ரொஷேன் சில்வா இலங்கை அணியில்  அறிமுக வீரராக லஹிரு திரிமான்னவுக்குப் பதிலாக இணைக்கப்பட்டதோடு, தனன்ஞய டி சில்வா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தசுன் சானக்க மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரின் இடத்தினை பிரதியீடு செய்திருந்தனர்.

மறுமுனையில் இந்திய அணியிலும் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் சமி, சிக்கர் தவான் ஆகியோர் அணிக்கு மீண்டும் திரும்பியிருந்ததோடு அவர்களுக்கு பதிலாக லோக்கேஷ் ராகுல் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய் மற்றும் சிக்கர் தவான் ஆகியோருடன் தொடங்கியது.

 

இந்திய அணிக்கு விரைவான ஆரம்பம் ஒன்றினைத் தந்த சிக்கர் தவான் 23 ஓட்டங்களினைப் பெற்றிருந்த போது, தில்ருவான் பெரேராவின் பந்துவீச்சில் சதீர சமரவிக்ரமவிடம் பிடிகொடுத்து வீழ்ந்தார். தவானின் இந்த விக்கெட்டினை கைப்பற்றியதன் மூலம் இலங்கை சார்பாக அதிகுறைந்த டெஸ்ட் போட்டிகளில் (24) 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக சுழல்பந்துவீச்சாளரான பெரேரா புதிய சாதனை ஒன்றினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தவானின் விக்கெட்டினை அடுத்து களம் நுழைந்த செட்டெஸ்வர் புஜாரா இந்திய அணிக்கு நல்லதொரு ஆட்டத்தினை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும் சோபிக்கத் தவறியிருந்தார்.

எனினும் மூன்றாம் விக்கெட்டுக்காக, ஏனைய ஆரம்ப வீரராக வந்த முரளி விஜய் மற்றும் அணித்தலைவர் விராத் கோஹ்லி ஆகியோர் ஒன்று சேர்ந்து பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றினை பெறத் தொடங்கினர். போட்டியின் மதிய போசன இடைவேளை, தேநீர் இடைவேளை என்பவற்றினை தாண்டி இவர்களது இணைப்பாட்டம் நீடித்தது.

தேநீர் இடைவேளைக்காக மைதானத்தினை விட்டு வீரர்கள் வெளியேறும் போது, முரளி விஜய் தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்திருந்தார். தேநீர் இடைவேளை முடிந்த பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தனது 14 ஆவது டெஸ்ட் சதத்தினை கடந்திருந்தார். கோஹ்லிக்கு இத்தொடரில் இது தொடர்ச்சியான மூன்றாவது சதமாகும்.

இரண்டு வீரர்கள் மூலமும் 283 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்ட பின்னர் இந்திய அணியின் 3ஆம் விக்கெட்டாக முரளி விஜய் லக்ஷான் சந்தகனின் சுழலில் வீழ்ந்தார்.

 

முரளி விஜய் ஆட்டமிழக்கும் போது, 267 பந்துகளுக்கு 13 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 155 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைய சிறிது நேரத்துக்கு முன்னர், இந்தியா இன்னுமொரு விக்கெட்டினை பறிகொடுத்தது.

எனினும், அணித் தலைவர் விராத் கோஹ்லியின் அபாரத்தினால் முதல் நாள் ஆட்ட முடிவின் போது இந்தியா 90 ஓவர்கள் நிறைவுக்கு 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 371 ஓட்டங்களினைப் பெற்று வலுப்பெற்றிருக்கின்றது.

இந்தப் போட்டி மூலம் தனது 5,000 ஆவது டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த கோஹ்லி 156 ஓட்டங்களுடனும் ரோஹித் சர்மா 6 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் நின்றிருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில்,  இன்றைய நாளில் லக்ஷான் சந்தகன் 2 விக்கெட்டுக்களையும் லஹிரு கமகே மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.  

போட்டியின் சுருக்கம்33333-1.jpg

http://www.thepapare.com

  • கருத்துக்கள உறவுகள்

Ajinkaya முரளி விஜய் பாணியிலேயே அவுட் ஆனது விசேடம்.

  • தொடங்கியவர்

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம்: புதிய சாதனை நிகழ்த்திய கோலி

 

இலங்கைக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

kohli

 
 

இந்தியா- இலங்கை மோதும் மூன்றாவது மட்டும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தியா- இலங்கை மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கைநழுவிப்போனது. கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைவில் இருக்கிறது இலங்கை அணி. இரண்டாவது போட்டியில் வெற்றி; மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் இருக்கிறது இந்திய அணி. கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

 

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் மிகுந்த விறுவிருப்புடன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில்  விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பொறுமையாக விளையாடி வருகின்றனர். ஆட்டத்தின் 108 வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இந்த ஆண்டில் இது அவரது மூன்றாவது இரட்டை சதமாகும். இதன் மூலம் டெஸ்ட் போட்டியின் கேப்டனாக அதிக முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற புதிய சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 

https://www.vikatan.com/news/india/109651-virat-kohli-made-a-new-record.html

  • தொடங்கியவர்

இலங்கை வீரர்கள் மூச்சுத்திணறலால் அவதி: மூவர் வெளியேறியதால் மைதானத்தில் சலசலப்பு, இந்தியா டிக்ளேர்

 

 
kohli,_sl_team

 

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய், விராட் கோலி ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது. முதல்நாள் ஆட்டநேர இறுதியில் முரளி விஜய், 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து 2-ஆம் நாளில் தொடர்ந்து பேட் செய்த விராட் கோலி, இரட்டைச் சதம் விளாசினார். மேலும், நடப்புத் தொடரிலேயே அடுத்தடுத்து 2 இரட்டைச் சதங்களை விளாசி புது சாதனையும் படைத்தார்.

இந்நிலையில், இலங்கை வீரர்கள் மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இலங்கை வீரர்கள் அனைவரும் முகமுடி அணிந்து விளையாடினர்.

இந்த பாதிப்பு காரணமாக இலங்கையின் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களான காமாகே, லக்மல் மற்றும் சடீரா ஆகிய மூவரும் களத்தில் இருந்து வெளியேறினர். இதன்காரணமாக மைதானத்தில் சலசலப்பு நிலவி வருகிறது.

இச்சம்பவங்களை அடுத்து கோபமடைந்த விராட் கோலி இந்திய அணி டிக்ளெர் செய்வதாக அறிவித்தார். களத்தில் இருந்த சாஹா 9*, ஜடேஜா 5* ஆகியோரை திரும்ப வருமாறு அழைத்தார்.

இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 127.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 25 பவுண்டரிகளை விளாசி 243 ரன்களைக் குவித்தார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது அதிகபட்சமாகும்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய  இலங்கை அணி முதல் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தது.  துவக்க வீரர் கருணரத்னே ஷமி பந்துவீச்சில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக்-அவுட்டாகி வெளியேறினார்.

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/03/srilankan-cricket-team-suffers-breathing-wears-masks-2819673.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.