Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது, சுரேஸ்

Featured Replies

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது, சுரேஸ்

 

இலங்கை தமிழரசு கட்சி தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக செயற்படுவதனால் எதிர்காலத்தில் அக்கட்சியுடன் இணைந்து செயற்படப்போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை தமிழரசு கட்சியின் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிறேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

 தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது, சுரேஸ்

புதிய அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் சமஷ்டி என்பது பேசப்படவில்லை. அதே சமயம் வடகிழக்கு இணைப்பும் பேசப்படவில்லை.

அந்த அரசியலமைப்பை தமிழரசு கட்சி ஆதரித்துள்ளது. அதேபோல் புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன் உரிமை என்பதையும் தமிழரசு கட்சி எந்த எதிர்ப்பும் இல்லாமல் அப்படியே ஏற்று கொண்டிருக்கின்றது.

ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது வடகிழக்கு இணைப்பு ,  வடகிழக்கு தமிழர்களின் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கொள்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அந்த கொள்கைகளுக்கு மாறாகவே தமிழரசு கட்சி செயற்பட்டு வருகின்றது.

அதே சமயம் பௌத்த மதத்திற்கு முன் உரிமை என்பதை தமிழரசு கட்சி எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆதரிக்கிறது. பௌத்ததிற்கு முன் உரிமை என்பதற்கு மக்கள் ஆணை வழங்கினார்களா?

இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படுவதில்லை என்னும் தீர்மானத்தை நாம் எடுத்திருக்கிறோம்.

மேலும் தமிழரசு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதும் இல்லை. அதற்காக நாங்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியதாக அல்லது வெளியேறியதாகவும் இல்லை.

தமிழ்தேசிய கூட்டமைப்பை உரிமைகோர தமிழரசு கட்சிக்கு உரிமை இல்லை.

தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது 4 கட்சிகள் பிரதானமாக அதில் இடம்பெற்றிருந்தன. அவை தமிழர் விடுதலை கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் கையொப்பமிடவில்லை என கூறியுள்ளார்.

அவருக்கு வரலாறு தெரியாவிட்டால் பேசாமல் இருக்கவேண்டும். ஆரம்பத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவம் பெற்றிருந்த தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டமைப்பி லிருந்து வெளியேறிய பின்னதாகவே தமிழரசு கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் உள்வாங்கப்பட்டது.

இப்போது தமிழரசு கட்சி தாய் கட்சி என கூறுபவர்கள் இந்த வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Can-not-work-with--ITAK--EPRLF

  • கருத்துக்கள உறவுகள்

சிவசக்தி ஆனந்தனை பாராளுமன்றத்தில்  நாடாளுமன்றத்தில் பேச விடாதது உச்சக்கட்ட ஜனநாயக மீறல் என்பது  Eprlfவினை மிக கடுமையான ஆத்திரத்துக்கு  உள்ளாக்கியுள்ளது என நினைக்கிறேன். Eprlf இனை பிழை சொல்ல முடியாது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.