Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க போர்க்கப்பல்களின் படையெடுப்பு

Featured Replies

அமெரிக்க போர்க்கப்பல்களின் படையெடுப்பு

Page-01-pic-1-01-7ee4f45ab00524a15b081400e9812b028df3fd1b.jpg

 

இலங்­கையும் அணு­ஆ­யுத தாக்­கு­த­லுக்கு இலக்­காகும் ஆபத்து இருப்­ப­தாக, கடந்­த­வாரம் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதா­ரண, எச்­ச­ரிக்கை ஒன்றை விடுத்­தி­ருந்தார்.

அணு­வா­யுத நாடான வட­கொ­ரி­யா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில், எந்த நேரத்­திலும் போர் வெடிக்கக் கூடிய பதற்­ற­மான சூழல் நில­வு­கின்ற நிலையில் தான், அவர் இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்தார். இலங்­கையை அமெ­ரிக்கப் படைகள் ஒரு தற்­கா­லிக தள­மாகப் பயன்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ள­தா­லேயே இவ்­வா­றான எச்­ச­ரிக்­கையை திஸ்ஸ விதா­ரண விடுக்க நேரிட்­டது.

அமெ­ரிக்க கடற்­ப­டையின் நிமிட்ஸ் விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணி (Nimitz Carrier Strike Group) கொழும்புத் துறை­மு­கத்தில் தரித்து நின்ற போதே, திஸ்ஸ விதா­ரண இந்த எச்­ச­ரிக்­கையை விடுத்­தி­ருந்தார்.

கடந்­த­மாதம் இலங்­கையில் நடந்த விமா­னப்­ப­டையின் கருத்­த­ரங்கு ஒன்றில் பங்­கேற்ற, அமெ­ரிக்க இரா­ணுவ அதி­காரி ஒரு­வரும் கூட, இலங்­கையும் வட­கொ­ரி­யாவின் அணு­வா­யுத தாக்­குதல் வீச்­செல்­லைக்குள் தான் இருக்­கி­றது என்­பதை நினை­வு­ப­டுத்­தி­யி­ருந்தார்.

வட­கொ­ரி­யா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான பதற்றம் அதி­க­ரித்­துள்ள சூழலில், அமெ­ரிக்க கடற்­ப­டையின் மூன்று விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணிகள் தற்­போது, இந்­தோ-­ப­சுபிக் கடற்­ப­கு­திக்கு நகர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. அதில் ஒன்று தான், நிமிட்ஸ் விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணி.

இந்தப் பிர­தே­சத்தில் அமெ­ரிக்க கடற்­ப­டையின் இரண்டு கப்­பல்­படைப் பிரி­வுகள் உள்­ளன. ஐந்­தா­வது (5th Fleet) மற்றும் ஏழா­வது (7th Fleet) கப்­பல்­ப­டை­களே அவை.

5 ஆவது கப்­பல்­ப­டைப்­பி­ரிவில் மூன்று விமா­னந்­தாங்கி அணி­களும், இணைந்து போர்ப்­ப­யிற்­சி­களில் ஈடு­பட்ட பின்னர், 7ஆவது கப்பல் படைப்­பி­ரிவில் இணைந்து கொண்­டது நிமிட்ஸ் விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணி. அதன் பின்­னரே, அந்த அணி கொழும்பு வந்­தது. இது விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணி 11 (Carrier Strike Group 11) என்றும் அழைக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்க கடற்­ப­டையில், இப்­போது, 9 விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணிகள் (Carrier Strike Group) செயற்­பாட்டு நிலையில் இருக்­கின்­றன. அவற்றில் ஒன்று தான் நிமிட்ஸ் விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணி.

ஒவ்­வொரு விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணி­க­ளுக்கும், ஒரு விமா­னந்­தாங்கி கப்பல் தலைமை தாங்கும், கிட்­டத்­தட்ட 7500 படை­யி­னரைக் கொண்­ட­தாக இது இருக்கும்.

ஓர் அதி­வேக வழி­காட்டல் ஏவு­கணைப் போர்க்­கப்­பலும் (cruiser), ஒரு நாச­காரி ஸ்குவாட்­ரனும் (Destroyer squadron) இடம்­பெற்­றி­ருக்கும். இரண்டு தொடக்கம் ஐந்து வரை­யான நாச­கா­ரிகள் (Destroyer) இதில் இருக்கும். விமா­னந்­தாங்கி கப்­பலில், 65 தொடக்கம் 70 வரை­யான போர் விமா­னங்கள் இருக்கும்.

சில சந்­தர்ப்­பங்­களில் இந்தத் தாக்­குதல் அணியில், நீர்­மூழ்­கிகள் (submarines) மற்றும் விநி­யோக கப்­பல்­களும் (logistics and supply ship) இடம்­பெ­று­வ­துண்டு.

நான்கு நாட்கள் பய­ண­மாக கடந்த 28ஆம் திகதி கொழும்புத் துறை­மு­கத்தை வந்­த­டைந்த, நிமிட்ஸ் விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணியில், மொத்தம் ஆறு கப்­பல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் (USS Nimitz -CVN 68) என்ற 330 மீற்றர் நீளம் கொண்ட விமா­னந்­தாங்கி கப்­பலே இதற்குத் தலைமை தாங்­கி­யி­ருந்­தது, அமெ­ரிக்க கடற்­ப­டையில் உள்ள மிகவும் வய­தான விமா­னந்­தாங்கிக் கப்பல் இது. 3200 கடற்­ப­டை­யினர், விமா­னப்­ப­டை­யினர், 90 விமா­னங்கள், ஹெலி­கொப்­டர்­க­ளையும் தாங்­கி­யது இந்த விமா­னந்­தாங்கிக் கப்பல்.

இத­னுடன், யு.எஸ்.எஸ். பிரின்­சிடோன் (USS Princeton (CG 59) என்ற, வழி­காட்டல் ஏவு­கணைப் போர்க்­கப்பல்(cruiser) ஒன்றும், நாச­காரிக் கப்­பல்­க­ளான(Destroyer), யு.எஸ்.எஸ். ஷோப் (USS Shoup (DDG 86),, யுஎஸ்எஸ் பின்க்னி (USS Pinckney (DDG 91), யு.எஸ்.எஸ். கிட் (USS Kidd (DDG 100), யு.எஸ்.எஸ். ஹவார்ட் (USS Howard (DDG 83)ஆகிய ஐந்து போர்க்­கப்­பல்­களும் கொழும்பு வந்­தி­ருந்­தன.

இந்தப் போர்க்­கப்­பல்­களில் 5000 க்கும் அதி­க­மாக அமெ­ரிக்கப் படை­யினர், அதி­ந­வீன ஏவு­க­ணைகள் மற்றும் நவீன போரா­யு­தங்­க­ளுடன் கொழும்பில் தரித்­தி­ருந்­தனர். அணு­சக்தி ஆயு­தங்­களும் கூட இந்தப் போர்க்­கப்­பல்­களில் இருந்­தி­ருக்க வாய்ப்­புகள் உள்­ளன.

அமெ­ரிக்க கடற்­ப­டையின் இந்தப் போர்க்­கப்­பல்கள், கொழும்பில் தரித்­தி­ருந்த போது, ஒரு­வேளை, வட­கொ­ரி­யா­வுடன் போர் மூண்­டி­ருந்தால், கொழும்பும் கூட ஏவு­கணைத் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யி­ருக்­கலாம்.

இந்தக் கப்­பல்­களின் வரு­கையால், இலங்­கைக்கு 10 மில்­லியன் டொலர் வரு­மானம் கிடைக்கும் என்று அமெ­ரிக்க தூத­ரகம் ஓர் அறிக்­கையில் கூறி­யி­ருந்­தது.

இந்தக் கப்­பல்­களின் பயணம், இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான நெருங்­கிய உற­வு­களின் ஓர் அடை­யா­ள­மா­கவும் அமெ­ரிக்க தூத­ரக செய்­திக்­கு­றிப்பில், சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­த­துடன், அமெ­ரிக்கப் படை­யினர் இலங்­கையில் பல்­வேறு சமூக சேவை­களில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­கவும் கூறப்­பட்­டி­ருந்து.

எனினும், செய்­திக்­கு­றிப்பில் கூறப்­பட்­டி­ருந்­தது போல, பெரி­ய­ளவில் அமெ­ரிக்கப் படை­யினர் பொது நிகழ்­வு­களில் பங்­கேற்­க­வில்லை. அங்­கொன்றும் இங்­கொன்­று­மா­கவே சில நிகழ்­வு­களில் பங்­கேற்­றனர். அதுவும் வரை­ய­றுக்­கப்­பட்­ட­ள­வி­னரே பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதற்­கான காரணம் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும், அமெ­ரிக்க கடற்­ப­டையின் நிமிட்ஸ் தாக்­குதல் அணி, கொழும்­புக்கு மேற்­கொண்ட பயணம் நீண்ட திட்­ட­மி­டல்­க­ளுடன் கூடிய ஒன்று அல்ல. 

சில வெளி­நாட்டு ஊட­கங்கள் சீனா­வுக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் ஒரு நகர்­வாக இதனை வர்­ணித்­தி­ருந்­தன. இன்னும் சில ஊட­கங்கள், வட­கொ­ரிய பதற்­றத்­துடன் தொடர்­பு­ப­டுத்­தி­யி­ருந்­தன.

எவ்­வா­றா­யினும், அமெ­ரிக்கா தனது விமா­னந்­தாங்கி ஒன்றை 32 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், இலங்­கைக்கு அனுப்­பி­யதும், அத­னுடன், கூட 5 பாரிய நாச­காரி கப்­பல்­களை அனுப்­பி­யதும் சாதா­ர­ண­மான விட­ய­மாக கருதக் கூடிய ஒன்­றல்ல.

இலங்­கையில் அமெ­ரிக்கா தளம் அமைக்கப் போகி­றது என்று பர­ப­ரப்­பாக பேசப்­பட்டு வந்த, ஜே.ஆர்.ஜய­வர்த்­தன ஆட்­சிக்­கா­லத்தில்- 1985ஆம் ஆண்டு யுஎஸ்எஸ். கிற்றி ஹோக் (USS Kitty Hawk) என்ற விமா­னந்­தாங்கிக் கப்பல், திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்­துக்கு வந்­தி­ருந்­தது.

அதற்குப் பின்னர், அமெ­ரிக்க விமா­னந்­தாங்கி கப்பல் ஒன்று இலங்­கைக்கு வந்­தி­ருப்­பது இதுவே முதல்­முறை.

2015 ஜன­வரி ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர், அமெ­ரிக்க போர்க்­கப்­பல்கள் அடுத்­த­டுத்து இலங்­கைக்கு வரத் தொடங்­கிய போதே, விமா­னந்­தாங்கி கப்­பல்­களின் வரு­கையும் விரைவில் இடம்­பெறும் என்ற எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டது.

அதனை உறு­திப்­ப­டுத்தும் வகையில் யு.எஸ்.எஸ். நிமிட்ஸின் வருகை அமைந்­தி­ருந்த போதிலும், அதற்கும் அப்பால் நிமிட்ஸ் தாக்­குதல் அணியின், ஆறு போர்க்­கப்­பல்கள் ஒரே நேரத்தில் கொழும்பில் நங்­கூ­ர­மிடும் என்று எவ­ருமே எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை.

அமெ­ரிக்கப் போர்க்­கப்­பல்­களை கொழும்புத் துறை­மு­கத்தில் இறங்­கு­து­றையில் தரித்து நிறுத்­து­வ­தற்கு இடம் இல்­லா­த­ள­வுக்கு, இவற்றின் வருகை அமைந்­தி­ருந்­தது.

இதற்கு முன்னர், வேறெந்த நாட்­டி­னதும், ஆறு போர்க்­கப்­பல்கள் ஒரே நேரத்தில் கொழும்பு வந்­த­தாகத் தெரி­ய­வில்லை.

அமெ­ரிக்கா- இலங்கை இடை­யி­லான, பாது­காப்பு ஒத்­து­ழைப்பு உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யுள்­ளது என்­பதை நிரூ­பிக்கும் வகையில் இந்தக் கப்­பல்­களின் வருகை அமைந்­தி­ருந்­தது.

திடீ­ரென, கொழும்பை நோக்கி அமெ­ரிக்கா தனது விமானந் தாங்கி தாக்­குதல் அணி ஒன்­றையே திருப்பி விட்­டதன் உண்­மை­யான நோக்கம் இன்­னமும் தெளி­வா­க­வில்லை.

ஏனென்றால், முழு­மை­யாக இது ஒரு நல்­லெண்ணப் பய­ண­மாக இருந்­தி­ருந்தால், கூடுதல் சமூக நிகழ்­வுகள், கூட்டுப் பயிற்­சிகள், ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருக்கும்.

அவ்­வாறு நடை­பெ­றா­தது, திடீர் முடிவு ஒன்றின் படியே இது நடந்­தி­ருப்­ப­தற்­கான சாத்­தி­யங்­களை ஊகிக்கத் தூண்­டு­கி­றது.

2013இல் சீன நீர்­மூழ்கி கொழும்பில் தரித்துச் சென்­றமை இந்­தியா, அமெ­ரிக்கா போன்ற நாடுகள் மத்­தியில் கடும், விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

மீண்டும் கடந்த மே மாதம் கொழும்பு வரு­வ­தற்கு சீன நீர்­மூழ்­கிக்கு அனு­மதி கோரப்­பட்­டது. ஆனால் பிராந்­தியப் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தும் என்று கூறி அதற்கு அர­சாங்கம் அனு­மதி அளிக்­க­வில்லை.

ஆனால், வட­கொ­ரி­யா­வுடன் பதற்றம் உச்ச நிலையில் உள்ள சூழலில், வட­கொ­ரிய ஏவு­கணை வீச்­செல்­லைக்குள் இலங்­கையும் இருக்கும் நிலையில், அமெ­ரிக்­காவின் ஒரு விமா­னந்­தாங்கி தாக்­குதல் அணியே கொழும்பில் தரித்­தி­ருந்து விட்டுச் சென்­றி­ருக்­கி­றது. அதற்கு அர­சாங்கம் மறுப்­பின்றி அனு­ம­தியும் கொடுத்­தி­ருக்­கி­றது.

இலங்­கையும், இலங்கைக் கடற்­ப­டையும் இப்­போது சர்­வ­தேச முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாக மாறி­யி­ருக்­கின்­றன என்­ப­தையே இது காட்­டு­கி­றது.

அதற்கு மற்­றொரு உதா­ர­ண­மாக கூறக் கூடிய சம்­ப­வமும் கடந்த வாரம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது.

இலங்கைக் கடற்­படைத் தள­ப­தி­யாக கடந்த மாத இறு­தியில் நிய­மிக்­கப்­பட்ட வைஸ் அட்­மிரல் சிறி­மேவன் ரண­சிங்­கவை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சந்­திப்­ப­தற்கு முன்­னரே, இந்­தியா, சீனா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­களின் கடற்­படை அதி­கா­ரிகள் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்­ததே அது­வாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­டாரில் இருந்­த­போதே, புதிய கடற்படைத் தளபதிக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளரே அதனை வழங்கினார். இது மரபுக்கு மாறான ஒன்று.

ஜனாதிபதி நாட்டில் இல்லாதபோதே புதிய கடற்படைத் தளபதி பதவியேற்றார். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர், நேரம் போதாமையால் புதிய கடற்படைத் தளபதியைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை.

அதற்குள்ளாக, கடந்த மாதம் 30ஆம் திகதி, இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகரும், சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகரும், அமெரிக்காவின் நிமிட்ஸ் தாக்குதல் அணியின் தளபதியும் புதிய கடற்படைத் தளபதியை, சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

அதற்கு மறுநாளான, 31ஆம் திகதியே ஜனாதிபதியை முதல்முறையாக கடற்படைத் தளபதி சந்தித்தார்.

இது, தற்செயலான நிகழ்வு மாத்திரமல்ல, இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா, இநதியா, சீனா போன்ற நாடுகள் எந்தளவுக்கு ஆர்வத்துடன் இருக்கின்றன என்பதையும் கூட வெளிப்படுத்தியிருக்கிறது.

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.