Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று வரு­டங்­க­ளுக்குள் மன்னார் மேலும் அபி­வி­ருத்தி அடையும்

Featured Replies

மூன்று வரு­டங்­க­ளுக்குள் மன்னார் மேலும் அபி­வி­ருத்தி அடையும்

 

(தலை­மன்னார் நிருபர்)

மன்னார் மாவட்­டத்தின் அபி­வி­ருத்­திக்­கென பல மில்­லியன் ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. மூன்று வரு­டங்­க­ளுக்குள் மேலும் அபி­வி­ருத்திப் பணிகள் இவ் மாவட்­டத்தில் எனது அமைச்சின் மூலம் மேற்­கொள்­ளப்­படும் என சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

-மன்னார் மடு பிர­தேச செய­லகப் பிரிவில் மடு பிர­தேச செய­லாளர் எவ்.சத்­தி­ய­ஜோதி தலை­மையில் கடந்த சனிக்­கி­ழமை நூறு பேருக்கு வாழ்­வா­தார உத­விகள் வழங்கும் வைபவம் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்ட சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்வு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இங்கு தொடர்ந்தும் பேசு­கையில்,

எங்­க­ளு­டைய அமைச்சு இந்த வருடம் என்ன செய்­தி­ருக்­கின்­றது. அத்­துடன் கடந்த வருடம் என்ன செய்­தி­ருக்­கின்­றது என்­பது உங்­க­ளுக்கு தெளிவுபடுத்­தப்­பட்­டுள்­ளது. எங்கள் அமைச்சின் மூல­மாக கடந்த வரு டம் 263 மில்­லியன் ரூபா வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த வருடம் 223 மில்­லியன் ரூபாவை மன்னார் மாவட்­டத்­துக்கு வழங்­கி­யுள்ளோம்.

இதில் வாழ்­வா­தார அபி­வி­ருத்­திக்கு 100 மில்­லியன் ரூபாவை செலவு செய்­துள்ளோம். உண்­மையில் இன்­று­ வரை இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்­காக 573 மில்­லியன் ரூபா செலவில் 706 வீடுகள் வழங்­கப்­பட்­ டுள்­ளன. இத்­துடன் பகு­தி­யாக சேத­ம­டைந்த வீடு­களில் 92 வீடுகள் செய்து கொடு க்­கப்­பட்­டுள்­ளன. இதற்­காக 20 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மேலும் குடிநீர் திட்ட பய­னா­ளிகள் 892 பேருக்கு 15 மில்­லியன் ரூபா செலவில் ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இல­வச மின்­சார இணைப்­புக்­காக 25 மில்­லியன் ரூபா செலவில் 1035 இணைப்­பு­களை மேற்­கொண்­டுள்ளோம். சிறு நீர்த்­தாங்கி அபி­வி­ருத்­திக்­கென 33 பய­னா­ளி­க­ளுக்கு 100 மில்­லியன் ரூபா செலவு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அடுத்த வருட திட்­டத்தில் சிறு நீர் குளங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் நான் மேற்­கொள்ள இருக்­கின்றேன்.

உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்­து­மு­க­மாக 30 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. பாரி­ய­ளவு சுகா­தார துப்­பு­ரவு அபி­வி­ருத்தி திட்­டத்­துக்­கென 15 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. வாழ்­வா­தா­ரத்­துக்கு 500 பேருக்கு 50 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் 31 கல்­வி ­திட்­டத்­துக்­கென 50 மில்­லியன் ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது. சிகிச்சை முறை­மை­யத்­துக்­கென 30 மில்­லியன் ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது.

கடற்­ப­டை­யினால் பயன்­ப­டுத்­தப்­பட்ட முள்­ளிக்­குளம் மக்கள் பூர்­வீ­க­மாக குடி­யி­ருந்த 100 ஏக்கர் காணியை அவர்­க­ளி­ட­மி­ருந்து எமது அமைச்சு மீளப் ­பெற்­றுள்­ளது. இதற்­காக கடற்­ப­டை­யி­ன­ருக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் நன்றி தெரி­வித்து நிற்­கின்றேன். காரணம் நாங்கள் கேட்கும் விட­யங்­களை அவர்கள் முன்­வந்து எம்­முடன் ஒத்­து­ழைத்து செயற்படுத்தி வருகின்றனர்.

எங்களுடைய அமைச்சானது மக்களாகிய உங்களது முன்னேற்றத்துக்காகவே செயற் பட்டு வருகின்றது. இன்னும் மூன்று வருடங்களுக்குள் நாங்கள் உங்களுக்கு பல அபிவிருத்தி வேலைகளை செய்வதற்காக இருக்கின்றோம். மன்னார் மாவட்டத்தை முன்னேற்றுவதற்காக நான் எனது முயற் சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.