Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் குற்­றச்­சாட்டும் உண்­மை­யான நிலைப்­பாடும்

Featured Replies

மஹிந்த ராஜ­ப­க் ஷவின் குற்­றச்­சாட்டும் உண்­மை­யான நிலைப்­பாடும்

 

புதிய அர­சியல் யாப்­பினை உரு­வாக்கி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணும் முயற்சி இடம்­பெற்று வரும் வேளையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் குறித்து தற்­போது அவ­தானம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது. புதிய அர­சி­யல் ­யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை மீதா­ன ­வி­வா­தத்தில் உரை­யாற்­றிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தனது ஆட்­சிக்­கா­லத்தின் போது இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண தான் முயன்­ற­தா­கவும் ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு அதற்­கான ஒத்­து­ழைப்­பினை வழங்­க­வில்லை என்றும் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வு­காண பல தட­வைகள் நாங்கள் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் பேசி­யி­ருந்தோம். ஆனால் எமக்கு ஒத்­து­ழைப்பு வழங்க கூட்­ட­மைப்பின் தலைமை முன்­வ­ர­வில்லை. இவ்­வாறு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்தால் தீர்வை கண்­டி­ருக்க முடியும் என்றும் கூறி­யி­ருந்தார்.

இதே­போன்றே கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் எம்­பி­லிப்­பிட்­டி­யவில் உரை­யாற்­றி­யி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ யுத்­தத்தை நிறை­வு­செய்த பின்னர் நாட்­டி­லுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண்­ப­தற்கு நான் ஆவ­லாக இருந்தேன். அது­கு­றித்து சகல தரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி அனை­வரும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான தீர்வை முன்­வைப்­ப­தற்கு எதிர்­பார்த்­தி­ருந்தேன். அது தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, ஐக்­கிய தேசி­யக்­கட்சி உட்­பட எதிர்க்­கட்­சி­யி­லுள்ள ஏனைய கட்­சி­க­ளுக்கும் அழைப்பு விடுத்­தி­ருந்தேன். எனினும் அக்­கட்­சிகள் பேச்­சு­வார்த்­தைக்கு முன்­வ­ர­வில்லை என்றும் கூறி­யுள்ளார்.

இத­னை­விட என்­னிடம் கிடைக்கும் எந்­த­வொரு தீர்­வையும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டாம் என சர்­வ­தே­சமும் புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களும் கேட்­டுக்­கொண்­டி­ருந்­தன. அத­னா­லேயே எனது அழைப்பை கூட்­ட­மைப்­பினர் ஏற்­க­வில்லை. மேலும் என்னைத் தேர்­தலில் தோற்­க­டிப்­பதே சர்­வ­தே­சத்­தி­னதும், புலம் பெயர் அமைப்­புக்­க­ளி­னதும் திட்­ட­மாக இருந்­தது. அத­னா­லேயே என்­னுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி பிரச்­சி­னையைத் தீர்த்­துக்­கொள்ள இவர்கள் முன்­வ­ர­வில்லை என்றும் முன்னாள் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தனது ஆட்­சிக்­கா­லத்­தின்­போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தனது செயற்­பா­டு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­யி­ருந்தால் அர­சியல் தீர்­வினை எப்­போதோ கண்­டி­ருக்க முடியும் என்று கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்­னரும் மஹிந்த ராஜ­பக் ஷ கூறி­யி­ருந்தார்.

தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு கூட்­ட­மைப்பு நல்­கி­வரும் ஆத­ரவைப் போன்று தனது அர­சாங்­கத்­திற்கு ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை என்றும் அவர் கவ­லையும் வெளி­யிட்­டி­ருந்தார். இதன் ஒரு கட்­ட­மா­கவே அர­சியல் யாப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பான விவா­தத்தின் போதும் மஹிந்த ராஜ­பக் ஷ இதனை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் உயி­ரி­ழந்தும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்தும் உடை­மைகள், அழிக்­கப்­பட்­டுமே யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. யுத்தத்தில் இடம்­பெ­யர்ந்த 3 இலட்சம் மக்கள் வரை சொல்­லொண்ணாத் துன்­பங்­களை அனு­ப­வித்­தி­ருந்­தனர்.

யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து இலங்­கைக்கு ஐ.நா.வின் அப்­போ­தைய செய­லாளர் பான் கீ மூன் விஜயம் செய்து நிலை­மை­களை பார்­வை­யிட்­டி­ருந்தார். இதன்­போது அர­சாங்­க­மா­னது பொறுப்­புக்­கூறும் செயற்­பாட்டில் அக்­க­றை­காட்டும் என்றும் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண நட­வ­டிக்கை எடுக்கும் என்றும் உறு­தி­மொழி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இதே­போன்றே யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து இந்­தி­யா­விற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, இந்­தி­யாவின் அப்­போ­தைய பிர­தமர் மன்­மோகன் சிங்கை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

இந்தப் பேச்­சு­வார்த்­தை­யைய­டுத்து கருத்து தெரி­வித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ 13 ஆவது திருத்­தத்­திற்கு அப்பால் சென்று பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண தயார் என்றும் அறி­வித்­தி­ருந்தார். இவ்­வாறு அறி­விக்­கப்­பட்­ட­போ­திலும் அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­காக இதய சுத்­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

2011 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் வரையில் அர­சியல் தீர்வு விடயம் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­ன­ருடன் அர­சாங்கம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தது. அர­சாங்­கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தலை­மை­யி­லான குழு­வி­னரும் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மி­டையில் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது. 16 சுற்றுப் பேச்­சுக்கள் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து அர­சாங்­க­மா­னது பேச்­சு­வார்த்­தை­யி­லி­ருந்து வில­கிக்­கொண்­டது.

அடுத்த சுற்றுப் பேச்­சுக்­காக திகதி நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் கூட்­ட­மைப்பின் குழு­வினர் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் பேச்­சு­வார்த்­தைக்­காக காத்­தி­ருந்­த­போதும் அந்தப் பேச்­சு­வார்த்­தையில் அர­சாங்கத் தரப்­பினர் பங்­கேற்­க­வில்லை. இத­னை­ய­டுத்து இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டை­யி­லான பேச்­சுக்கள் முறி­வ­டைந்­தன.

இத­னை­ய­டுத்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் அர­சாங்கம் நேர­டி­யான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வில்லை என்றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியே கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது என்றும் அர­சாங்கத் தரப்பில் அறி­விக்­கப்­பட்­டது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­விட்டு தனி­யொரு கட்­சியே பேச்­சு­ந­டத்­தி­ய­தாக அர­சாங்கம் அறி­வித்த விட­ய­மா­னது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­மைக்கு பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

இதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழு­வொன்­றினை அமைத்த அன்­றைய அர­சாங்­க­மா­னது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் அங்கம் வகித்தால் மட்­டுமே பேச்­சு­வார்த்­தை­யினை முன்­னெ­டுக்க முடியும் என்று அறி­வித்­தது. ஆனால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்­தனோ, அர­சியல் தீர்வு தொடர்பில் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்டும். அந்தப் பேச்­சு­வார்த்­தையில் இணக்கம் காணப்­ப­டு­மானால் அதன் பின்னர் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவில் அங்கம் வகிப்­பது குறித்து பரி­சீ­லிக்க முடியும் என்று அறி­வித்­தி­ருந்தார்.

இரு­த­ரப்­பி­னரும் தமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்­த­மை­யினால் அர­சியல் தீர்­வுக்­கான பேச்­சு­வார்த்தை பின்னர் இடம்­பெற்­றி­ருக்­க­வில்லை. இதன்­பின்னர் அமைச்சர் திஸ்ஸ விதா­ரண தலை­மையில் சர்வ கட்­சிக்­குழு அமைக்­கப்­பட்­டது. இந்த குழுவும் நூற்­றுக்கும் மேற்­பட்ட தட­வைகள் ஒன்­று­கூடி அறிக்­கை­யொன்­றினை முன்­வைத்­தி­ருந்­தது. இந்த அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டாத நிலையில் குப்­பைக்குள் போடப்­பட்­டி­ருந்­தது.

இதன் பின்னர் அர­சியல் தீர்­வுக்­கான எத்­த­கைய முயற்­சி­களும் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அன்­றைய அர­சாங்­க­மா­னது நினைத்­தி­ருந்தால் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­புடன் பேச்­சு­வார்த்­தை­யினை நடத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வை கண்­டி­ருக்க முடியும். 2011 ஆம் ஆண்டு நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது தீர்­வுத்­திட்ட வரைபு ஒன்­றையும் அர­சாங்க குழு­விடம் சமர்ப்­பித்­தி­ருந்­தது. இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது சிறைச்­சா­லைகள், மற்றும் தடுப்பு முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளது பெயர் விப­ரங்­களை வெளி­யி­டு­வது என்றும் இணக்­கப்­பாடு காணப்­பட்­டி­ருந்­தது. ஆனால் அதற்­கான நட­வ­டிக்­கைகள் கூட ஒழுங்­கான முறையில் எடுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அர­சாங்­கத்­துடன் நேர­டி­யான பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தற்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது அன்று தயா­ராக இருந்­தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இருதரப்பிற்குமிடையில் பேச்சுக்கள் நடைபெற்றிருந்தன. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தனித்து சந்தித்தும் இந்த விடயங்கள் தொடர்பில் ஆலோசனை நடத்தியிருந்தார்.

இவ்வாறு அன்றைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வைக் காண கூட்டமைப்பு தயாராக இருந்தது. அதற்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கி வந்தது. ஆனால் அன்று கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய அன்றைய அரசாங்கத் தரப்பினர் இன்று தமக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க முடியும் என்று கூறுவது எந்தளவிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க கூற்று என்பது குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் தற்போது இடம்பெற்று வரும் அரசியல் தீர்வுக்கான முயற்சிக்காவது ஆதரவினை வழங்கவேண்டும். இதுவே இன்றைய அவசிய தேவையாக உள்ளது.

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.